ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
மாவீரர் நாள் எதிர்வரும் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ்.குடாநாட்டில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு பகல் என்றில்லாது முக்கிய வீதிகள், கோயில்கள், பல்கலைக்கழகம், பாடசாலைகள் போன்ற இடங்களில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலை கொண்டும் உள்ளனர். இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகளால் அச்சத்துடன் நடமாடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் யாழ்.பல்கலைக்கழக வாளாக சூழலில் நவம்பர் முதாலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே இராணுவத்தின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலைகொண்டும் உள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்திற்கு சென்று வரும் மாணவர்கள் மத்தியில் அச்ச நிலையினை உருவாக்கியுள்ளது. அத்துடன் யபழ்.பல்கலையில் கல்வி கற்ற…
-
- 0 replies
- 267 views
-
-
இந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் எந்தவொரு விசாரணைக்கும் தாம் தயார். எனினும் ஏன் இந்தப்பிரச்சினை தற்போது எழுந்துள்ளது என்று ஹரிஹரன் கேள்வி எழுப்பியுள்ளார். கருணா அம்மான் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு தளபதியாக இருந்தபோதே 300 முல்லிம்கள் காத்தான்குடியிலும், ஏறாவூரிலும் கொல்லப்பட்டனர். 600 பொதுமக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்டமைக்கும் கருணாவே தலைமை தாங்கினார். எனவே அது தொடர்பான விசாரணைகளுக்கு கருணா ஒத்துழைப்பு வழங்குவார் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாக ஹரிஹரன் குறிப்பிட்டுள்ளார். கருணா தற்போது கூறியுள்ள இந்தக்குற்றச்சாட்டு பெரும்பாலும் அரசியலுடன் தொடர்புடையது என்றே தாம் கருதுவதாக ஹரிஹரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கருண…
-
- 2 replies
- 546 views
-
-
சிறீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் குரல் கொடுத்து வந்த இன்னர் சிட்டி பிரஸ் ஊடகத்தை தடை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கியநாடுகளின் தணிக்கைப் பிரிவின் தலைவர் ஜியம்போலா பியோலி இதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கியம்போலா பியோலிக்கும், சிறிலங்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதி பாலித்த கோஹன்னவுக்கும் இடையில் நிதி சார்ந்த உறவுகள் இருப்பதாக முன்பிருந்தே தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறிலங்காவின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்திருந்த காணொளியை ஐக்கிய நாடுகள் சபையின் ஊடக மையத்தில் காட்சிபடுத்து, பியோலி அனுமதி வழங்க மறுத்திருந்தார். எனினும…
-
- 0 replies
- 260 views
-
-
-எஸ்.தியாகு 'தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மலையகத்துக்கு தீன்டத்தகாதவர்கள் அல்ல. எமக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அது மீண்டும் கட்டியெழுப்பப்படுகின்றதென்றால் அதனை நாம் வரவேற்க வேண்டும்' என தாவரவியல் பூங்காக்கள் பொது பொழுதுபோக்கு அலுவல்கள் பிரதி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவிததார். 'வெறுமனே எல்லாவிடயங்களையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. மலையகத்தில் வந்து அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. இது ஒரு ஜனநாயக நாடு. அவர்களின் வருகையால் இங்கு நல்லது நடக்கும் என்றால் அதனை நான் வரவேற்கின்றேன்' என்றும் அவர் தெரிவித்தார். மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லந்தை மீரியபெத்தை பகுதிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்ப…
-
- 0 replies
- 228 views
-
-
-
- 0 replies
- 568 views
-
-
தொண்டைமானை இந்தியாவுக்கு அனுப்புங்கள்!!!இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் குறித்து மலையக தமிழன் ஒருவனின் குரல் http://www.youtube.com/watch?v=vpOd_EfU8A4#t=94
-
- 0 replies
- 382 views
-
-
நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் போது நித்திரை கொள்ள வேண்டாம் என உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2015-ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்த போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நித்திரை கொண்டார் என சபையில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா பத்திரிகை செய்தி ஒன்றின் புகைப்படத்தினை காண்பித்து குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன்போது கருத்து தெரிவித்த உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, ஒருவரை சுட்டிக்காட்டி இவ்வாறான குற்றச்சாட்டினை முன்வைப்பது தவறான செயற்பாடு என தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட அஜித் பி பெரேரா, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய அமர்வுகளின் போது நித்திரை செய்வதாக…
-
- 0 replies
- 1k views
-
-
ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் திகதி இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் பயணத்துக்கு வழிசமைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாப்பரசர் ஜனவரி 13ம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்கிறார். எனவே தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் போது பாப்பரசரின் விஜயம் சாத்தியமாகாது என்ற அடிப்படையிலேயே தேர்தல் திகதி முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ராசியான நாளாக கருதப்பட்ட ஜனவரி 8ம் திகதியே ஜனாதிபதி தேர்தலை நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. அதுவும் ஜனவரி 23ம் திகதி வரை ஜனாதிபதிக்கு ராசியான நாட்கள் என்று சோதிடர்கள் கூறியதன் பின்னர் அந்த திகதி ஆலோசிக்கப்பட்…
-
- 0 replies
- 278 views
-
-
-எஸ்.குகன் தமிழ் மக்களின் உரிமைக்காவும் நலன்களுக்காகவும் தனது இறுதி மூச்சு வரை, அரசியல் ரீதியில் போராடியவர் அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் குருநகரில் அமைந்துள்ள அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் உருவச்சிலை நினைவிடத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற, அவரது 113 ஆவது பிறந்ததின நிகழ்வில் கலந்துகொண்டு, மலர் மாலை அணிவித்து உரை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நலன்களுக்காகவும் இறுதிவரை உழைத்த மாபெரும் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 113 ஆவது பிறந்த தினத்தில் அவரை நினைவு கூறுவது எம் அனைவரதும் கடமையாகும். த…
-
- 0 replies
- 360 views
-
-
இலங்கையில் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற கணினிப் போட்டிகளில் முதன் முறையாக யாழ். மாவட்டத்தின் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை முதல் பத்து இடங்களில் இடம்பிடித்ததோடு, வேம்படி உயர்தர பாடசாலை மாணவிகளின் கணினித் தீர்வுகளும் முக்கிய இடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கடும் போட்டிகளுக்கு மத்தியில் ஹெக்கதோன் போட்டித் தொடரில் மூன்று பாடசாலைகள் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவாகின. சர்வதேச சிறுவர் உரிமை மாநாட்டின் 25ஆவது வருடத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சிறுவர்களுக்கான நிதியம் (UNICEF) 2014ஆம் ஆண்டை சர்வதேச சிறுவர் ஞாபகார்த்த வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதனை அனுஷ்டிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சிறுவர்களுக்கான நிதியம் இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் பங்குபற…
-
- 0 replies
- 488 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்குமிடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்றாம் திகதி இரவு மொரட்டுவை பகுதியில் வைத்து இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும் அந்த சந்திப்பின்போது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் தற்போதுள்ள அமைச்சுக்களில் சிலவற்றை மாற்றியமைத்தல் மற்றும் மங்களவின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து பேசப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. அத்தகவல்கள் மூலம் மேலும் தெரிய வருவதாவது, ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்து…
-
- 2 replies
- 533 views
-
-
-யோ.வித்தியா -யோ.வித்தியா கிளிநொச்சி மாவட்டத்தில் கடற்பாசி உற்பத்தி திட்டம் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வருவதாக கிளிநொச்சி மாவட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் அதிகாரி எஸ்.சலீபன் ஞாயிற்றுக்கிழமை (09) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்இ கிளிநொச்சி மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் ஆரம்பமாகியது. தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கடற்பாசி வர்த்தக ரீதியான ஏற்றுமதி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கடற்பாசி உற்பத்தியை 100 குடும்பங்கள் தங்கள் வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வருகின்றன. இந்த கடற்பாசி வளர்க்கும் தொழில் நடவடிக்கையில் 300 குடும்பஙங்களை இணைக்க வேண்டும் என்பதே எமது இலக்காக உள்ளது. இந்த தொழிலை மீனவர்களே அதிகளவி…
-
- 1 reply
- 498 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் பேச்சுவார்த்தை நடத்தினால் அதை பூதாகரமாக்கி ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேசினாலோ அல்லது எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசினாலோ ஊடகங்கள் இந்தளவு முக்கியத்துவம் வழங்குவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு ஆதங்கப்பட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸுக்குமிடையில் கடந்த வாரம் கொழும்பிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப் பேச்சுவார்த்தையின்போது இரா. சம்பந்தன் எம்.பி. மேற்கண்ட விடயம் குறித்து மிக ஆக்ரோஷமாக பேசியதாகவும் தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 369 views
-
-
அரச நிறுவனங்களில் தமிழ்மொழி மூலம் சேவையாற்றுவதற்கான ஊழியர்களின் தொகை போது மானதாக இல்லை. அதில் பாரிய வீழ்ச்சி காணப்படுகிறது என இன்று சபையில் சுட்டிக்காட்டிய ஜனநாயக தேசிய முன்னணி எம்.பி. சுனில் ஹந்துன் நெத்தி இனங்களிடையே தேசிய நல்லிணக்கம் தொடர்பாக மார்தட்டும் அரசு தமிழ் மொழி மூலம் அரச சேவைக்கு உரிய இடம் வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே ஹந்துன் நெத்தி எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இனங்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த திட்டங்களை முன்னெடுப்பதாக கூறும் அரசு தமிழ் மொழிக…
-
- 0 replies
- 472 views
-
-
நிலச்சரிவால் நிலைகுலைந்திருக்கும் இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் அமைச்சர் செந்தில் தொண்டமான் பேட்டி இலங்கையின் ஊவா மாகாணத்தில் பதுளை அருகே கொஸ்லந்த, நீரியபத்த பகுதியில் கடந்த 29-ம் தேதி ஏற்பட்ட கடும் மண்சரிவு, மலையகத் தமிழர்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்துவிட்டிருக்கிறது. 10 நாட்கள் ஆகியும் இதுவரை மீட்புப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இந்தச் சூழலில், கள நிலவரங்களை ‘தி இந்து’வுடன் பகிர்ந்து கொள்கிறார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் அமைச்சருமான எம். செந்தில் தொண்டமான். மலையகத்தில் ஏற்பட்ட மண் சரிவு எப்படிப்பட்டது? முழுக்க முழுக்க இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழும் கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஒன்றரை கிலோ மீ…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா பாதுகாக்கத் தவறியுள்ளது 09 நவம்பர் 2014 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா பாதுகாக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை அமைப்புக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. புகலிடம் வழங்கப்படக் கூடிய நியாயமான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைக் கூட அவுஸ்திரேலியா பாதுகாக்கத் தவறியுள்ளது என தெரிவித்துள்ளன. அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை பாதுகாக்கத் தவறியுள்ளமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 77 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த அறிக்கையை பகுதி …
-
- 0 replies
- 475 views
-
-
அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 113வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று யாழ்.குருநகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து,மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இன்று முற்பகல் 10மணியளவில் இடம்பெற்ற இந்தநிகழ்வில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் இராயப்பு எட்வேட் ஆனந்தராஜா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உதவிச் செயலாளர் கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார்,தென்மராட்சி அமைப்பாளர் கந்தர் ஆறுமுகம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்க…
-
- 10 replies
- 793 views
-
-
பரிசுத்த பாப்பரசரின் விஜயத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தேர்தலை ஜனவரி 2 ம்திகதி நடத்த தீா்மானம் : 09 நவம்பர் 2014 பரிசுத்த பாப்பரசரின் விஜயத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தேர்தலை ஜனவரி 2 ம்திகதி நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாப்பரசரின் விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்க்கு வசதியாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,அது வத்திக்கானை திருப்திப்படுத்தும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரியவருகின்றது. ஜோதிடர்களின் ஆலோசனையை தொடர்ந்து முன்னர் ஜனவரி 8 ம்திகதி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113360/la…
-
- 1 reply
- 374 views
-
-
தமிழ் மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பு ஈ.பி.டி.பி நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணத்தில் இருப்பதுடன் தமிழ் மக்களை பின்னடையச் செய்வதற்கான வழிவகைகளையும் அவர்கள் செய்கின்றனர்.ஜனாதிபதி மகிந்தவுக்கும், அரசாங்கத்திற்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாதமே ஈ.பி.டி.பியினர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். இன்று பி.ப 3மணியளவில் மூளாய் இந்து இளைஞர் மன்றத்தினால் மூளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரசாத் அரங்கில் 2014ஆம் ஆண்டிற்கான வாணிவிழா நிகழ்வு இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், வடக்கு,கிழக்கு போர்ச் சூழ்நிலையில் பின்தள்ளப்பட்டுள்ளது.இ…
-
- 8 replies
- 929 views
-
-
கரு ஜெயசூரியவை எதிர்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க யூஎன்பி, ஜேவிபி, சோபித தேரோ ஆகியோர் இணங்கியுள்ளதாயும் ரணில் போட்டியிடப் போவதில்லை எனவும் ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுளது. http://www.dailymirror.lk/56057/karu-to-be-common-candidate
-
- 8 replies
- 878 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரியவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி ஊடாக ஜனாதிபதி இந்த வாழ்த்தினை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கரு ஜயசூரிய பொது வேட்பாளராக போட்டியிட உள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, ஜனாதிபதி இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தெரிவானமைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இதுவரையில் பொது வேட்பாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து தீர்மானிக்கவில்லை என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர் தெரிவு நீண்ட செயன்முறைகளைக் கொண்டது எனவும், இன்னமும் யார் பொது வேட்பாளர் என்பது முடிவாகவில்லை என அ…
-
- 0 replies
- 430 views
-
-
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாங்களில் தங்கியுள்ள குடும்பங்களை அங்கேயே நிரந்தரமாக குடியமர்த்துவதற்கு இராணுவத்தினரும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரும் கூட்டிணைந்து பல முயட்சிகளை முன்னெடுத்து வருகின்றமை அம்பலமாகியுள்ளது. இடம்பெயர்ந்த மக்களிற்கு ஆக்கிரமிப்பு காணிகளிற்கு வெளியே வேறு காணிகளை வழங்குவதாகவும் அதற்கென புதிய பதிவுகளை மேற்கொள்ளும் அவர்கள், அம்மக்களை குழப்பமடையச்செய்யும் வகையினில் அநாமதேய துண்டுப்பிரசுரங்களையும் வெளியுடுவதாகவும் வலி.வடக்கு மீள்குடியேற்றக்குழுவின் தலைவர் ச.சஜீவன் குற்றம் சுமத்தியுள்ளார். வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமில் வாழும் மக்களுக்கு மாற்றுக்காணிகள், மற்றும் அவர் தற்போது வசித்து வரும் முகாமில் உள்ள கா…
-
- 0 replies
- 471 views
-
-
இலங்கையில் ராஜபக்ச தலைமையிலான ஆட்சியை அகற்றிவிட்டு தமிழர் நலனில் அக்கறை கொண்ட ஆட்சியை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகக் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இளங்கோவன் கருத்து வெளியிட்டுள்ளார். இன்று சனிக்கிழமை சென்னையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் வைத்து செய்தியாளர்களுக்குக் கூறியுள்ளார் இளங்கோவன். மக்கள் விரோத ஆட்சியை நீக்கும் கடமை இந்தியா போன்ற வல்லரசுக்கு இருக்கிறது. ராஜபக்ச அரசை அகற்றுவது எப்படி என்று மோடிக்கு நிச்சயமாக தெரியும். ராஜபக்ச அரசை அகற்றுவது எப்படி என்பது எனக்கு தெரியாது. அது மோடிக்கு தெரியும். மோடிக்கும் தெரியாவிட்டால் அவர் அமெரிக்காவின் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை …
-
- 0 replies
- 733 views
-
-
சென்னை விமான நிலையத்தை வந்திறங்கிய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அங்கிருந்து நேராக புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் செய்தியாளர்களையும் அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகும் இந்தியச்செய்தி தெரிவிக்கின்றது. மக்கள் சிவில் உரிமை கழகதலைவராக இருந்து மறைந்தவர் சட்டத்தரணி கே.ஜி.கண்ணபிரான். இவரது நினைவு சொற்பொழிவு சென்னை தியாகராயநகர் வித்யோதயா பள்ளியில் 9 ஆம் திகதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு, 'பாதுகாப்பையும் இறையாண்மையும் காத்தல்' என்ற தலைப்பில் நினைவு சொற்பொழிவாற்றுகிறார். 'கண்ணபிரான் மற்றும் கண்ணபிரானுக்கு அப்பால்' என்ற தலைப்பில் தென் ஆப்பிரிக்காவின் அரசமைப்பு நீதிபதியாக பணியாற்றிய சக்கா…
-
- 10 replies
- 1.4k views
-
-
6 மாதங்களுக்கு அதிகமாக வெளிநாட்டில் தங்கியிருப்பதற்காகச் செல்லும் இலங்கையர்கள், தங்களது தேசிய அடையாள அட்டையை ஆட்பதிவுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் விநியோகிக்கப்படவுள்ள புதிய அடையாள அட்டை, வெளிநாட்டில் 6 மாதங்களுக்கு அதிகமாக வைத்திருந்தால் அது செல்லுபடியற்றதாகிவிடும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சரத் குமார தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/132324-2014-11-07-07-48-50.html
-
- 7 replies
- 567 views
-