Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல்வாதிகள், அதிகாரிகள், மற்றும் அரசியல் கையாட்கள் சிலர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் இருந்து விசா பெற்றுள்ளதாகவும் சிலர் விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த அரசாங்கங்களின் போது தமது அரசியல் பலத்தை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி எண்ணற்ற பணம் சம்பாதித்த அரசியல்வாதிகள் இலங்கையில் (Sri Lanka) உள்ள தமது சொத்துக்களை இரகசியமாக விற்பனை செய்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கூட்டுத் தொழில் குறிப்பாக, கூட்டு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வந்த இவ…

  2. 25 AUG, 2024 | 06:38 PM கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான குளங்களை பாதுகாக்கும் பொருட்டு அவற்றிற்கு எல்லை கற்கல் இட்டு அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எல்லை கற்கள் கொள்வனவு செய்யப்பட்டு தயாராக உள்ளபோதும் அவற்றினை கொண்டு குளங்களுக்கு எல்லையிடுவதற்கு நீர்ப்பாசனத் திணைக்களம் தயாராக இல்லாதிருப்பது கவலையளிக்கிறது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் சில குளங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதில் கிளிநொச்சி குளம் அதன் பின்பகுதியில் பெருமளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டு மதில்கள் அமைக்கப்பட்டு கட்டடங்களும் கட்டப்பட்டுவிட்டன. கனகாம்பிகைகுளம் அதன் பின்பகுதியில் ஒட்டுசுட்டான…

  3. 25 AUG, 2024 | 06:09 PM சதாரணமான கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தராத ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வினை தரப்போகின்றார்களா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் கலந்துரையாடல் மட்டக்களப்பு செட்டிபாளையத்தி அமைந்துள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை(24) மாலை நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, உள்ளுராட்சி…

  4. 25 AUG, 2024 | 06:02 PM கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட பெரியகுளம் கனகராயனாற்றுப் பகுதியில் உள்ள பல ஏக்கர் காணிகளில் பொலிஸாரின் முழுமையான ஒத்துழைப்போடு சட்டவிரோத மணல் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனகராயன் ஆற்றினை அண்டிய பெரிய குளம் பகுதியிலும் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் சுமார் 25 அடி ஆழத்துக்கும் மேலாக அதிகளவில் கனரக வாகனங்கள் மூலம் மணல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்தில் தொடர்ந்து மணல் அகழ்வுப் பணிகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் பல்வேறு முறைப்பாடுகளை அளித்து வருகின்றனர். இந்த பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட…

  5. மூன்று பிரதான வேட்பாளர்களையும் சமதூரத்தில் வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் Posted on August 25, 2024 by தென்னவள் 6 0 பாராளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும் என கூற முடியாது தற்போது ஜனாதிபதி தேர்தல் வருகின்றது. இதில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை (24) மாலை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை வரவேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பலர் என்னிடம் வினவும் ஒ…

    • 0 replies
    • 315 views
  6. 25 AUG, 2024 | 11:41 AM நாமல் ராஜபக்ஷவின் மலினமான பேச்சுக்களுக்கு விக்னேஸ்வரனும் முழுப்பொறுப்பினை ஏற்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சனிக்கிழமை (24) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு தெளிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், 75 வருடங்களாக தமிழருக்கு உரிமை வழங்க மாட்டோம் என்று பேரினவாதிகள் கூறி வருகின்றார்கள். குறிப்பாக ப…

  7. 25 AUG, 2024 | 04:07 PM பெண்ணொருவரிடம் சுமார் 22 இலட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணிடம் சுமார் 22 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று ஏறாவூர் பகுதியை சேர்ந்த நபர் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஏறாவூர் பகுதியை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/191941

  8. வன்னியில் 306,081 பேர் வாக்களிக்க தகுதி! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சரத்சந்திர தெரிவித்தார். தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 128,585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86,889 வாக்காளர்களும் மன்னார் 90,607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்த…

    • 0 replies
    • 235 views
  9. ஜனாதிபதி தேர்தலில் முதல் மலையத் தமிழன்! 38 பேர் போட்டியிடுகின்ற ஜனாதிபதி தேர்தலில் முதல் மலையகத் தமிழனாக நானும் நிற்பேன் எங்கள் மக்களுக்கும் அந்த தகுதி உள்ளது என சொல்லவருவதே எனது முதலாவது வெற்றி என ஜனாதிபதி வேட்பாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார். நேற்று (24) சனிக்கிழமை பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த மயில்வாகனம் திலகராஜா, மலையகத்தில் இந்து வந்தால் ஆயிரம் ரூபாய் அல்லது 1,700 ரூபாவை கோருவார்கள் அல்லது 1,350 ரூபாய்க்கு கீழ் இற…

    • 1 reply
    • 353 views
  10. ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவது ஏன்? இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களை கட்டியுள்ளது. இதில், சுயேச்சை வேட்பாளர்கள் அல்லது பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது வேட்பாளர்கள் பலர் களம் காண்கின்றனர். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த 40 ஆண்டுளாக தாம் பிரதிநிதித்துவப்படுத்திய யானை சின்னத்தை கைவிட்டு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இலங்கையின் பழமையான, பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடாமல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவது ஏன்? அது அவருக்கு பலன் தருமா? ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள போதிலும் உண்மையில் அவர் சுயேச்சை வேட்பாளர் அல்ல என அரசியல் ஆய்வாளர் கலாநித…

  11. 24 AUG, 2024 | 11:08 PM (நா.தனுஜா) இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை பரந்துபட்ட விடயங்களை உள்ளடக்கியிருப்பதாகத் திருப்தி வெளியிட்டிருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள 57 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் வலுவானதொரு புதிய தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பின்னணியில், இலங்கையின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தில் மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சமகாலப் போக்குகள் உள்…

  12. 24 AUG, 2024 | 09:14 PM (நா.தனுஜா) எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தனக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுவேட்பாளரைக் களமிறக்கவேண்டாம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தமிழ் அரசியல் கட்சிப்பிரதிநிதிகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தமிழ் பொதுக்கட்டமைப்பினால் தமிழ் மக்கள் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கின்றார். தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகளுக்கான குறியீடாகவே இப்பொதுவேட்…

  13. மன்னார் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு. மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 26 வயதுடைய எஸ்.சுதன் என்பவரே வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மன்னார் வைத்தியசாலையில் இளம் பட்டதாரி பெண் சிந்துஜா, குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில…

  14. இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கியிருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது- அரியநேத்திரன். நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கியிருந்தால் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருக்காது என தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிகண்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார செயற்பாடுகளின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடன் பெற்றே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியுள்ளதாகவும் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார் https://athavannews.com/2024/1396968

  15. 24 AUG, 2024 | 04:38 PM மன்னாரில் இதுவரை 228 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அங்கு டெங்கு நோய் அபாயம் அதிகரித்திருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் எனவும் மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வைத்திய அதிகாரி கதிர்காமநாதர் சுதாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் இதுவரை 228 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இத்தொகை கடந்த 2023ஆம் ஆண்டை விடவும் இந்த ஆண்டு சிறிதளவு அதிகரித்துள்ளது. வழமையாக ஒக்டோபர் மாதத் தொடக்கத்திலேயே மன்னாரில் டெங்கு அபாயம் ஏற்படும். ஆனால், இவ்வருடத்தில…

  16. சீன(china) கடற்படைக்கு சொந்தமான போலன் என்ற கப்பல் இம்மாதம் இறுதி வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை(sri lanka), வியட்நாம்(vietnam), இந்தோனேசியா(indonesia) ஆகிய நாடுகளுடன் கடற்படை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த கப்பலின் வருகை அமையவுள்ளது. சீனாவின் வடகிழக்கில் உள்ள டேலியன் மாகாணத்தில் இருந்து தனது பயணத்தை குறித்த கப்பல் ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வசதி 85 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் 18நொட்ஸ் வேகத்தில் பயணிக்கக் கூடியது. 50 கடற்படை கேடட்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வசதியும் உள்ளது. கடற்படை அதிகாரிகளிடைய…

  17. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 400 வருடங்கள் பழமையான சிவன் ஆலயம் மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கபப்ட்டுள்ளது. அழிவடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் பணி, யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முன்னோர்களின் வழிப்பாட்டுத் தலம் கல்வெட்டில் இருந்த தகவலின் படி ஆலயத்தின் எஞ்சிய பாகங்களையும் அத்திவாரங்களையும் அழிபாடுகளையும் கொண்டு இவ்வாலயமானது கற்பகிரகம், அந்தராளம், முன்மண்டபம், துணைக்கோவில்கள், சுற்றுமதில், மடங்கள், கேணி என்பவற்றை கொண்டிருந்தது என்பதனை உறுதிப்படுத்த முடிகின்றது. இவ்வாலயத்தின் கற்பக்கிரகத்தின் பின்புறத்தில் பொறிக்கப்பட்ட கிரக ச…

  18. 24 AUG, 2024 | 12:06 PM யாழ். சுன்னாகம் - சூளானை பகுதியில் உள்ள ஆலயமொன்றில் பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட நபர், வீடொன்றில் மின் மோட்டார் திருத்தச் சென்றபோது மர்மமான முறையில் உயரிழந்துள்ளார். நேற்று (23) உயிரிழந்த நபரின் சடலம் இன்று சனிக்கிழமை (24) உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் - சூளானை பகுதியைச் சேர்ந்த 53 வயது நபரே உயிரிழந்தவர் ஆவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், திருவிழா நடைபெற்று வரும் இந்த ஆலயத்தின் அருகில் உள்ள வீடொன்றில் மின் மோட்டார் இயங்காத காரணத்தால் ஆலயத்தில் பிரசாதம் தயாரித்துக்கொண்டிருந்த நபரை வீட்டின் உரிமையாள…

  19. 24 AUG, 2024 | 11:33 AM கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று குறித்த பகுதியில் பயணிகளை ஏற்றி சென்றபோது வீதியால் சென்ற ஒருவர் திடீரென பஸ்ஸை வழிமறித்து ஏற முற்பட்ட வேளை பஸ் சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்…

  20. தமிழர்கள் சிலின்டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் -இன்பராசா. தமிழர்கள் சிலின்டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தவைலர் இன்பராசா தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வவுனியாவில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தாங்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தற்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்த போது தமது கோரிக்களை ஆழ்மனதுடன் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி நிச்சயமாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்தன் பிரகாரம் தாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ,வடக்க…

  21. 100 புத்தகங்களின் உலக சாதனை விழா இலங்கையில். கவிமலர்கள் பைந்தமிழ்ச்சங்கம் நடாத்தும் இலங்கை கிளையின் உலகசாதனை புத்தக வெளியீட்டு நிகழ்வு இம்மாதம் 25.08.2024 ஆம் திகதி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை வெகு விமர்சையாக இடம்பெற இருக்கின்றது. இதன்போது இலங்கை இந்தியா உட்பட நாடுகள் பூராகவும் உள்ள நூற்றுக்கும் அதிகமான படைப்பாளிகளின் படைப்புக்கள் வெளிவர இருக்கின்றன. இதில் உலக சாதனைக்காக புதிய வெளியீடாக 100 புத்தகங்கள் வெளிவர இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு தொகுப்பு நூல் ஒன்றும் வெளியீடு செய்து வைக்கப்படுவதுடன் பங்குபற்றும் அனைத்து படைப்பாளிகளுக்கும் உலக சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் கொடுத்து கௌரவிக்கப்பட…

  22. யாழ்ப்பாணத் தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (23.08.2024) ஆரம்பமான இந்த கண்காட்சி நாளை (24) மற்றும் நாளை மறுதினம் 25ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளது. அனுமதி இலவசம் இக் கண்காட்சியினை முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும். இன்றைய நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணைதூதரக அதிகாரி ராஜேஷ் பேனகார், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்.பிரணவன், நிகழ்வின் ஊடக இணைப்பாளர் ஜெயரஞ்சன் யோகராஜ் ஆகியோர் அதிதியாக கலந்து கொண்ட. இந்நிலையில், இரண்டாம் ந…

  23. 23 AUG, 2024 | 07:46 PM (நா.தனுஜா) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும், தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதித்தேர்தல் நிலைவரம் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பரந்துபட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் ரி.கலையரசன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை ( 22 ) மட்டக்களப்பில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது நாட்டின் சமகால அரசியல் நிலைவரம், ஜனாதிபதித்தேர்தல், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட ப…

  24. வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் உடல் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது - சட்டத்தரணி திருவருள் 23 AUG, 2024 | 06:12 PM வவுனியா வைத்தியசாலையில் இறந்த சிசுவின் உடல் மருத்துவ பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிரேஸ்ட சட்டத்தரணி தி. திருவருள் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வவுனியா வைத்தியசாலையில் மரணமடைந்த சிசுவின் உடலை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்வதற்கு ஏற்பட்ட இழுபறி நிலைமை தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலமாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிசுவின் சா…

  25. சுமந்திரன் உள்ளிட்டவா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பாா்கள் – சுரேஸ்! சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலா் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பொது வேட்பாளரை எதிர்ப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவர் மேலும் தெரிக்கையில், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழரசுக்கட்சியில் மிகப் பெரும்பாலானவர்கள் ஆதரவாக இருக்கின்றாரகள். சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற ஒரு சிலரைத் தவிர கட்சியின் ஏனைய மேல் மட்டங்களும் சரி, ஏனைய கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களும் சரி பொத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.