Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இலங்கை மகிழ்ச்சி - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு 27 செப்டம்பர் 2014 பதவி பற்போவதனால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் என்கிறார் ராஜித- தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டு கால சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையின் மூலம் தமிழக அரசில்வாதி எவ்வளவு ஊழல் மோடிகளில் ஈடுபட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். …

  2. வல்வெட்டித்துறை பகுதியினைச் சேர்ந்த பதின்மூன்று வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 22 வயதுடைய சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். குருநகர் பெண்கள் சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கருப்பையா ஜீவராணி நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். கடந்த 24ஆம் திகதி தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் இழுத்துச் சென்று குடத்தனை பகுதியில் உள்ள பற்றை ஒன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருந்தனர். அவர்களிடமிருந்து தப்பித்து வந்த வந்த சிறுமியை வல்வெட்டித்துறை பொலிஸார் நாகர் கோயில் பகுதியில் வைத்து மீட்டனர். இந்நிலையில் வி…

  3. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்குமிடையில் இன்னு சனிக்கிழமை மாலை கல்முனையில் நடைபெறவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பு இரு தரப்பினருக்குமிடையில் சந்திப்பு நடைபெற்றுவந்தாலும் 2012ம் ஆண்டுக்குக்கு பின்பு அப்படி நடைபெறவில்லை. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அழைப்பின் பேரில் ஏற்கனவே இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள அக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவிருந்தது. பின்னர் அது கல்முனைக்கு மாற்றப்பட்டு, சந்திப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வருகை தராத காரணத்தினாலே சந்திப்பு பிறிதொரு தினத்திற்கு பின் போடப்…

  4. மாசுபட்ட சூழலையும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் முற்றாகப் புரிந்து செயல்படாதிருப்பது மனவருத்தத்தைத் தருகின்றது என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சனிக்கிழமை (27) தெரிவித்தார். வடமாகாண சுற்றுலா துறை ஒன்றியம், வடமாகாண சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில், 'வடமாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல்'; என்னும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுற்றுலா என்பது கூரிய ஒரு கத்தியின் நுனியைப் போன்றது. முறையாகப் பாவித்தால் அது மக்களுக்குப் பலவித நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும். பிழையாகப் பாவித்தால் கொலைக்குக் கூட கருவியாகி விடும். சுற்றுலாவை உள்ளூ10ர் மக்களின் நன்மைக்காகப் பாவிக்க வேண்டும். த…

  5. -வடிவேல்-சக்திவேல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழம்பிப் போயிருக்கிறார் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சின் புதிய தலைவர் மாவை. சேனாதிராசா, மற்றும் செயலாளர் கி.துரைராசசிங்கம் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள துளசி மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (27) இடம்பெற்றது. இலங்கைத் தழிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாடில் அதன் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பொருளாதார சமூக கலாசார உரிமைகள் சம்மந்த…

  6. வடமாகாணத்தில் பயன்தரு மரங்களையும் அலங்காரத் தாவரங்களையும் உற்பத்தி செய்பவர்களையும் அவற்றை விற்பனை செய்பவர்களையும், வண்ணமீன் மற்றும் செல்லப்பிராணிகள் விற்பனையாளர்களையும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்தக் கலந்துரையாடல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு 295, கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள விவசாய அமைச்சரின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. உற்பத்தி செய்வதிலும் விற்பனை செய்வதிலும் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், விற்பனைக் கண்காட்சி, பிற மாகாணங்களில் இருந்து வரும் அலங்காரச் செடி விற்பனையாளர்களால் ஏற்படும் சவால்கள் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட உள்ளதால் சகல பண்ணையாளர்களையும் இந்…

  7. அடுத்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வை பெற முயற்சிக்க வேண்டும்! - இரா.சம்பந்தன் [saturday 2014-09-27 08:00] மாவை சேனாதிராஜா தலைமையில் அடுத்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வை பெற முயற்சிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டதைப் பாராட்டும் முகமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் மாலை பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய இரா.சம்பந்தன், எமது பலம் எமது மக்கள். எமது உரிமைப்போராட்டம் ஆரம்பித்த க…

  8. யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறை வீழ்ச்சிக்குக் காரணம் இராணுவமே! - சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் தலைவர் குற்றச்சாட்டு. [saturday 2014-09-27 08:00] யாழ்ப்பாணத்தின் சுற்றுலாத்துறையின் வீழ்ச்சிக்கு அங்கு நிலைகொண்டுள்ள இராணுவமே ஒரு காரணமாக உள்ளது என்று வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் தலைவர் ரி.திலகராஜா குற்றம்சுமத்தியுள்ளார். 'வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் என்னும் தொனிப் பொருளில் வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று யாழ். ரில்கோ ஹோட்டலில் நடைபெற்றது. மேற்படிச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார். வலி.வடக்கில் இரா…

  9. படையினர் பிடித்துச் சென்ற மருமகனை இன்றுவரை காணவில்லை! – முழங்காவில் அமர்வில் சாட்சியம் [saturday 2014-09-27 19:00] நள்ளிரவில் வீட்டுக்கு வந்த இராணுவத்தினர் எனது மருமகனைப் பிடித்து பவள் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர், இன்றுவரை தகவல் எதுவும் தெரியாது என முழங்காவில் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு முன்னால் தாயொருவர் சாட்சியமளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2008.09.14 ஆம் திகதி வவுனியாவில் உள்ள மகள் வீட்டில் வைத்து இரவு 12 மணியளவில் வந்த இராணுவ சீருடையணிந்தவர்கள் 10 பேர் வரை வீட்டிற்குள் நுழைந்து மருமகனை நித்திரையில் வைத்து எழுப்பி பிடித்து சென்றுள்ளனர். வீட்டிற்கு வெளியிலும் 8 பேர் வரை நின்றிருந்தனர். வீட்ட…

  10. அளவுக்கதிகமான இராணுவப் பிரசன்னத்தால் வடக்கு மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை! – விக்னேஸ்வரன் விசனம். [saturday 2014-09-27 19:00] வடக்கில் அளவுக்திகமான இராணுவ பிரசன்னம் காணப்படுவதால் பெண்கள் அச்சத்துடனே அன்றாட வாழ்வைக் கழிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என வடமாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வன் தெரிவித்தார். இன்று வடமாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இடம்பெயர் மக்கள் தமது பாரம்பரிய வதிவிடங்களில் குடியேற்றப்படவில்லை. 1983 தொடக்கம் தென்னிந்திய முகாம்களில் வாழும் எம் மக்களைத் திருப்பிக் கொண்டு வந்து தமது இடங்களில் குடியமர்த்த முடியவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில்…

  11. யாழ்.நகரில் கோரவிபத்து - இளம் மருத்துவர் தலைசிதறிப் பலி! [saturday 2014-09-27 19:00] யாழ். நகரில் மிட்டாஸ் கடைச் சந்திக்கு அருகில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில், மருத்துவர் ஒருவர் தலைசிதறி மரணமானார். அதிவேகமாக வந்த டிப்பர் வாகனம், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை பந்தாடியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவரான கோபிநாத் (வயது-30) தலை நசுக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இவர் உரும்பிராயைத் சேர்ந்தவர் எனவும் மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமணம் ஆனவர் எனவும் கூறப்படுகிறது. சடலம் யாழ்.போதனா வைத்தியச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மோதித் தள்ளிய டிப்பர் சாரதி தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவரை தேடிவர…

  12. கொழும்பு விகாரை வழிபாடுகளில் தமிழ் இராணுவத்தினர்! [Thursday 2014-09-25 07:00] இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்டுள்ள தமிழ் இளைஞர்கள் கொழும்பிலுள்ள பௌத்த விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் சிலர் இராணுவத்தில் இணைந்து பயிற்சிகளை முடித்து அண்மையில் வெளியேறியிருந்தனர். இவர்களுக்கு சிங்கள மக்களுடனான உறவுகளைக் கட்டியெழுப்புதல் தொடர்பான பயிற்சியின் ஒரு கட்டமாக இராணுவத்தின் ஏற்பாட்டில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பில் நாடாளுமன்றத் தொகுதி, அருங்காட்சியகம், இராணுவ மருத்துவமனை, துறைமுகம் என்பவற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் சிங்கள அதிகாரிகள் தமிழ் இராணுவத்தி…

  13. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் ஒத்துழைப்பதாக பீரிஸ் வாக்குறுதி! [saturday 2014-09-27 08:00] ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துடன் தொடர்ந்தும் ஒத்துழைத்துச் செயற்பட இலங்கை தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 69 வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹூசைனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.இ தன் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புகள் குறித்து அமைச்சர் பீரிஸ், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு விளக்கியதாக த…

  14. நியூயோர்க்கில் இன்று மோடியைச் சந்திக்கிறார் மகிந்த! [saturday 2014-09-27 08:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நியுயோர்க்கில்இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இரு நாடுகளின் தலைவர்களும் நியூயோர்க்கிற்கு சென்றுள்ளனர். இந்தச் சந்திப்பில், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஜனதிபதி மஹிந்த ராஜபக்ச, நரேந்திர மோடிக்கு விளக்கம் அளிக்கவுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம், 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் மற்றும் மீனவர் பிரச்சினைகள் குறித்து இதன்போது பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதியை சந்திக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவா…

  15. கூட்டமைப்புடன் இலங்கை அரசு பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும்! – பாஜக வலியுறுத்தல். [saturday 2014-09-27 08:00] இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களான முரளிதரராவ் மற்றும் விஜய் ஜொலி ஆகியோர் தமது இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் முன்னர்கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதன்போது கருத்துரைத்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் இலங்கையின் அரசியல் அமைப்புக்குள் இருந்து கொண்டே இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண …

  16. பொது பல சேனாவுடனும் பாஜக பிரதிநிதிகள் இரகசிய சந்திப்பு! [saturday 2014-09-27 08:00] இலங்கை வந்திருந்த பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் பொதுபல சேனாவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பா.ஜ.க.சார்பில் அதன் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், விஜய் ஜோலி ஆகியோரும் பொதுபல சேனா சார்பில் திலந்த விதானகே, ஞானசார தேரர் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 23ம் திகதி நடைபெற்ற இந்தச் சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு எதுவித தகவல்களும் வழங்கப்படவில்லை. சந்தித்துக் கொண்ட இரு தரப்பினரும் அது குறித்து தகவல்களை வெளிப்படுத்தவில்லை. http://www.seithy.com/breifNews.php?newsID=117572&category=TamilNews&language=tamil

  17. காணாமற்போனோர் குறித்த ஆணைக்குழுவின் அமர்வு கிளிநொச்சியில் இன்று ஆரம்பம்! [saturday 2014-09-27 08:00] காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடக்கம் 30ம் திகதி வரை இந்த ஆணைக்குழுவினர் தங்களது விசாரணைகளை கிளிநொச்சி மற்றும் பூநகரியில் மேற்கொள்ளவுள்ளனர். இன்றும் நாளையும் கிளிநொச்சியிலும், 29,30 திகதிகளில் பூநகரியிலும் ஆணைக்குழுவின் விசாரணை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=117571&category=TamilNews&language=tamil

  18. வடமாகாணத் தலைநகராகுமா மாங்குளம்? [saturday 2014-09-27 08:00] மாங்குளத்தில் வடக்கு மாகாணசபையின் நிர்வாகத் தலைநகரை அமைப்பதற்கான சாத்திய ஆய்வு மேற்கொள்ளும் பணி, தென்கொரிய ஆய்வாளர்களிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்றும் அது கிடைத்த பின்னரே அது குறித்து பதிலளிக்கப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 16 ஆவது மாதாந்தக் கூட்டம் நேற்றுமுன்தினம் கைதடியில் உள்ள வடக்கு மாகாணசபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் லிங்கநாதனால் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட வாய்மொழி மூலமான வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணசபையினை மாங்குளத்தி…

  19. அடுத்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு 28502 கோடி ரூபா ஒதுக்கீடு! – வடமாகாண சபைக்கு 2041 கோடி மட்டும் தான். [saturday 2014-09-27 08:00] 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தை பிரதமர் டி.எம். ஜயரட்ன நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கிணங்க 2015 ஆம் ஆண்டுக்கான செலவினமாக ஒரு இலட்சத்து 81229 கோடி 87 இலட்சத்து 18000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கான செலவினமாக ஒரு இலட்சத்து 59825 கோடி இருபத்தைந்து இலட்சத்து 18000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததாயினும் 2015 ஆம் ஆண்டிற்கான செலவினமாக 21404 கோடி 62 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான செலவினம் 2015 ஆம் ஆண்டுக்காக 28502 கோடி இருபது இலட்சம் ர…

  20. விபரங்களைத் தொடர்ந்து எதிர்பாருங்கள்.... http://www.intertam.net/2014/09/blog-post_27.html

  21. சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்பதாக சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் உறுதியளித்துள்ளார். வடபகுதிக்கு பயணம் மேற்கொண்டிருந்த சட்டமா அதிபர் வடக்கு முதல்வருடன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நல்லெண்ணச் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இத்தருணத்தில் சிறைச்சாலையில் நீண்டகாலமாக விசாரணையின்றி வாடும் தமிழரசியல் கைதிகளின் துன்பநிலை குறித்து வடக்கு முதல்வர் சட்டமா அதிபருடன் கலந்துரையாடியுள்ளார். யுத்தத்தில் அதிகளவுக்கு சம்பந்தப்பட்டிருந்தவர்கள் அமைச்சர் பதவி உட்பட உயர் பதவிகளை வகித்துவரும் நிலையில் சிறிய அளவில் சம்பந்தப்பட்டவர்கள்…

  22. மனித உரிமைகள் உயர்ந்த நன்னெறிக் கோட்பாடுகளாகத்தான் தாங்கள் மதிக்கிறவையளாம்... ஆனால் சில நாடுகளும் ஐ.நாவும் அதை இலங்கையை அமத்துற கருவியா பாவிக்கிறினாம்... இப்பிடி ஆர் சொல்லியிருப்பார் எண்டு உங்களுக்குத் தெரியும். வேற ஆர்... மகிந்ததான்.. அவருக்குத்தானே மனித உரிமையள் பற்றி வகுப்பெடுக்க தகுதி இருக்குது... சாத்தன் வேதம் ஓதுறது ஒண்டும் புதிசில்லையே? ஈழத்தில கொத்துக் கொத்தாய் எங்கட மக்கள கொல்லேக்குள்ளயும் ஐ.நாவுக்குப் போய் தமிழில பேசிக் கொண்டே இஞ்ச செல்லுகளையும் குண்டுகளையும் போட்டவர்தானே மகிந்த. வேதம் ஓதி ஓதியே இந்த சாத்தான் எங்கட நாட்டயும் சனத்தையும் அழிச்சது எண்டுறதுதான் உண்மை... உவர் உலகத்தில உள்ள ஆக்களுக்கு எல்லாம் மனித உரிமையள காப்பாற்றுறதப் பற்றி வகுப்பெடுக்கிறார்..…

  23. சர்வதேச விசாரணைகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று கூறி, ஐநா மனித உரிமை ஆணைக்குழுவை கடுமையாக விமர்சித்து உரையாற்றியதன் மூலம் இலங்கை ஜனாதிபதி, எதிர்வரும் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை நியூயோர்க்கில் ஆரம்பித்து வைத்து விட்டார் என்றே கூறவேண்டும். இந்த பிரச்சாரத்தின் அடுத்த கட்டம் அரச ஆசீர்வாதங்களுடன் மியன்மாரின் சர்ச்சைக்குரிய பௌத்த மதகுரு விராது அவர்களை அழைத்து வந்து, பொதுபல சேனா கொழும்பில் நடத்தும் மாநாட்டின் மூலம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இந்த இரண்டு கருத்தோட்ட முன்னெடுப்புகளின் மூலம் அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரம் முழுக்கவும் சிங்கள பெளத்த அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட போகின்றது என்று தோன்றுகிறது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கட…

  24. பலஸ்தீன ஜனாதிபதியிடம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொடுத்தார் ஜனாதிபதி மகிந்த! [Friday 2014-09-26 16:00] ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், அங்கு வருகை தந்திருந்த பலஸ்தீன் நாட்டு ஜனாதிபதி மொஹமட் அப்பாஸை சந்தித்து கலந்துரையாடினர். பலஸ்தீனுக்கு வழங்குவதாக ஜனாதிபதியினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை, இந்த சந்திப்பின் போது பலஸ்தீன் ஜனாதிபதியிடம் இலங்கை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=117542&category=TamilNews&language=tamil

  25. கிளிநொச்சியில் மற்றொரு பாடசாலையின் அவலநிலை! [sunday 2014-09-21 17:00] கிளிநொச்சி வலயத்திலுள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தின் வகுப்பறையின் அவலநிலை பார்ப்போர் மனங்களைப் பதைபதைக்க வைக்கிறது. ஏ9 வீதியிலிருந்து 150மீற்றர் தொலைவிலே இக்கல்விக்கூடம் அமைந்துள்ளது. பாடசாலை பெயர்ப்பலகையை குண்டுகள் துளைத்த தடயங்கள் இன்றுமுள்ளன. இங்கு க.பொ.த.உயர்தரம் கலை வர்த்தகப் பிரிவு வரை சுமார் 700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் போதுமான வகுப்பறைக் கட்டடங்கள் இல்லை. ஆதலால் மாணவர்கள் ஆபத்தான வசதி குறைந்த கொட்டிலில் இருந்து படிக்க வேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 08 வகுப்பறைகள் இவ்விதம் காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல தென்னையோலையால் வேயப்பட்ட அக்கொ…

    • 15 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.