Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜுன் 15 ம் திகதியுடன் வலிவடக்கு மக்களின் பூர்வீக மண்ணுடனான தொப்புள் கொடி அறுக்கப்பட்டு 24 வருடங்கள் கழிந்து விட்டன. இன்றுவரை அவர்கள் நிலமற்ற ஏதிலிகளாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் மீதில் யாரும் அக்கறை கொண்டு செயற்பாட்டுருவாக்கம் செய்வதாகத் தெரியவில்லை. ஒரு நிரந்தர மண்ணில் நிலையாக வாழ்ந்த பூர்வீகக் குடியானது அந்த நிலத்திலிருந்து பிரிக்கப்படும்போது அவர்களுடைய பண்பாடு, கலாசாரம், வாழ்க்கைமுறை, மன ஆத்மார்த்தம், கனவு, எதிர்பார்ப்பு இப்படிப் பல்வேறு முக்கிய அம்சங்களும் பிரித்தெறியப்படுகின்றது. அவர்கள் வேறு எங்கு எவ்வளவு ஆடம்பரமாக வாழ நேர்ந்தாலும்கூட வெறும் நடைபிணங்களாகவே தம்மை உணர்கின்றார்கள். இன்னும் நிலமற்று, வாழ வழியற்று அன்றாடக் கூலிகளாக தமது வாழ்க்கையை இயக்கிக் கொண்ட…

  2. எங்கிருந்தோ வந்த படையினருக்கு காணிகளை வழங்க சட்டத்தில் இடமில்லை! - என்கிறார் முதலமைச்சர். [Monday 2014-09-22 17:00] பொதுமக்களின் காணிகளை பொது மக்களின் நன்மை கருதி அல்லது தேவைகருதி மட்டுமே அரசாங்கத்திற்கு கையளிக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுன்னாகம், சபாபதிப்பிள்ளை முகாமில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு இன்று உதவிபொருட்கள் வழங்கிய பின்னர், கருத்து தெரிவிக்கும் போது, அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டேன் எந்த அடிப்படியில் பொதுமக்களின் காணிகளை அரசுக்கு கையளிக்கின்றீர்கள் என்று.அதற்கு அவர் சட்டத்தின் அடிப்படையில் என தெரிவித்தார…

  3. அன்று செப்டம்பர் முதலாம் திகதி. பாடசாலை மாணவர்களின் விடிவுக்காக தனது கடமையை ஆரம்பித்த ஆசிரியை சரஸ்வதி, சூரியன் அஸ்தமித்த பின்னரும் வீடு திரும்பவில்லை. கல்விக் கடவுளாம் சரஸ்வதியின் பெயரைக் கொண்ட இந்த ஆசிரியை வீடு திரும்பாதது அப்பிரதேச மக்களையே பதற்றமடையவைத்தது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றையும் இலட்சியமாகக் கொண்டு பணியாற்றிய இந்த ஆசிரியை இந்தப் பிரதேசத்திலேயே நன்மதிப்பைப் பெற்றவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்றில்லாமல் அத்தோட்ட மக்களின் விடிவுக்காகவும் பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்த இந்த இளம் பட்டதாரி ஆசிரியை இப்பிரதேச மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். இவ்வளவு அம்சங்களையும் தன்னகத்தே கொண்ட ஆசிரியை சரஸ்வதி, இப்பிரதேச மக்களின் இதயங்களில் அழியாத இடத்தை…

    • 2 replies
    • 1.1k views
  4. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை முழுமையாக உள்ளடக்கி பொதுத் தேவைக் கென அடையாளப்படுத்தி கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை மேற்படி பகுதியை அளவீடு செய்ய மாவட்ட நில அளவைத் திணைக்களம் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் நில உரிமையாளர்கள் குறித்த நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்கப்போவதாகவும் கூறினார். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்றிருந்தது. யுத்தம் நடைபெற்ற பகுதியை முழுமையாக உள்ளடக்கி ஏ-32 வீதிக்கு வலது பக்கமாகவுள்ள 617 ஏக்கர் மற்றும் 3றூட் 34பேர்ச் அளவுள்ள பொதுமக்களின் நிலத்தை பொதுத் தேவைக்காக சுவீகரிக்கப்போவதாக கடந்த ஜூன் மாதம் 17 ஆம் திகதி பிரிவு 2 பிரசுரம் ஒட்டப்…

  5. பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமான முறையில் அளவீடு செய்வதற்கு எதிராக நீதிமன்றத்தினூடாக தடையுத்தரவு பெறப்பட்டு நிலஅளவையாளர்களின் காணி அளவீட்டு நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார். சுன்னாகம், சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அரிசி பைகளை வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், 'காணி கையேற்பு சட்டத்தின் கீழ் பொதுமக்களின் காணிகள் பொது தேவைகளுக்காக மட்டுமே சுவீகரிக்க முடியும். மாறாக இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்க முடியாது. எங்கிருந்தோ வந்த இராணுவத்துக்கு வடக்க…

  6. நில சுவீகரிப்பிற்கு எதிரான மக்கள் போராட்டம் யாழிலிருந்து வன்னிக்கும் விஸ்தாரணம் பெற்றுள்ளது.அவ்வகையினில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்பிற்கு எதிராக, நாளை செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பரந்தன் (ஏ-35) வீதியில் வட்டுவாகன் பாலத்திற்கான வீதியிலிருந்து இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரையோர பகுதி உள்ளடங்கலான 614 ஏக்கர் காணி பொதுமக்களுக்கு சொந்தமாக இருக்கின்றது. காணி அமைச்சின் கட்டளைக்கு அமைவாக இந்த காணி முல்லைத்தீவு கடற்படைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலரால் துண்டுப்பிரசுரங்கள் இரண்டு மாதத்திற்கு முன்னர் ஒட்டப்பட்டிருந்தன.இது தொடர்பாக …

  7. சனல்- 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் கொழும்பில்! [Tuesday 2014-09-23 07:00] பிரித்தானியாவின் சனல்- 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் ஜோன் ஸ்டெவார்ட் பிரான்ஸிஸ் நேற்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக அரச புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர் வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகவும் விடுமுறையைக் கழிப்பதற்கு, அவரது மனைவியுடன் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவரது மனைவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த இவர் பாதுகாப்பு காரணங்களுக்காக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.http://ww…

  8. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான முறுகல் நிலையை தோற்றுவிக்க சிறிலங்காவின் சிங்கள பௌத்த கடும்போக்குவாதிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இராணுவத்தினர், பௌத்த விகாரைகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவான முஸ்லிம், தமிழ் இளைஞர்கள் போன்றோரை பயன்படுத்தி இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரே மாகாணமாக உருவாக்க வேண்டும் என்று அண்மையில் இலங்கை தமிழரசு கட்சி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருந்தது. இந்த தீர்மானத்தையும் இந்த முயற்சிக்கு சாதகமாக பயன்படுத்தி, தமிழ் மக்கள் முஸ்லிம்களை அடிமைகளாக்க முயற்சிப்பதாக சிங்கள அடிப்படைவாதிகள் கிழக்கு முஸ்ல…

  9. 13ம் திருத்தச் சட்டம் அமுலாக்கப்படுவதற்கு முன்னர் அரசாங்கத்துக்கும், தமிழ் தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. 13ம் திருத்தச் சட்டம் தங்களின் அபிலாசைகளை பூரணமாக நிறைவேற்றாவிட்டாலும், அதற்கான அடிப்படையாக அமையும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தரப்புகள் கருதுகின்றன. ஆனால் 13ம் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டால், அது நாட்டில் பிளவை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் உள்ளிட்ட சிங்கள இனவாதிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு தரப்புக்கும் இடையில் நம்பிக்கை ஒன்று ஏற்படும் பட்சத்திலேயே 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்க கூடியதாக இருக்…

  10. வன்னியின் புதுக்குடியிருப்பு பகுதியினில் இராணுவத்தேவைக்காக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் மக்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்ட போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் ஆரம்பித்த இவ்வார்ப்பாட்ட போராட்டம் பிரதேச சபை முன்றலில் முடிவடைந்திருந்தது. இராணுவமே வெளியேறு!, எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்!, எங்கள் வீடு எங்களுக்கு வேண்டும், அபிவிருத்திகள், இழப்பீடுகள் வேண்டாம் காணமால் போன உறவுகளுக்கு முதலில் பதில் சொல், ஐக்கிய நாடுகள் சபையே எங்களை நிம்மதியாக வாழ வழி செய் போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு மக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான வி…

  11. ஊவா மாகாணசபையில் சந்தித்த பின்னடைவை மூடிமறைப்பதற்கான முயற்சிகளை சிறிலங்காவின் ஜனாதிபதி மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஊவாவில் பெற்ற வெற்றியானது, போரில் பெற்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்ள உதவி இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் தங்களின் அபிவிருத்தி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க இந்த வெற்றி உறுதுணையாக அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், அரசாங்கத்துக்கு இந்த முறை ஊவா மாகாண சபையில் தோல்வியே ஏற்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/34028/57//d,article_full.aspx

  12. நியூ யோர்க்கில் ஐ. நா. முன்பாக செப்டம்பர் 24 அன்று நடைபெறும் இனப்படுகொலையாளன் மகிந்தவின் வருகைக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து அனைத்து தமிழ் அமைப்புக்களும் மற்றும் கனடா, அமெரிக்கா வாழ் அனைத்து தமிழ் அன்புறவுகளும் ஆதரவு நல்கி கலந்து கொண்டு எமது பொது எதிரிக்கு எதிரான போராட்டத்திற்கு வலிமை சேர்க்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை அனைத்து கனடிய அமெரிக்க தமிழ் சமூகத்திடமும் அன்போடு வேண்டிக் கொள்கின்றது. முள்ளிவாய்க்காலில் எங்கள் இனத்தை மிகக் கொடூரமாக அழித்த கொடிய இனப்படுகொலையாளர்கள் இன்று உலகில் சுதந்திரமாக பசுத்தோல் போர்த்து உலவுவதை உலகத் தமிழினம் ஒருபோதுமே அனுமதிக்க முடியாது. இன அழிப்பாளர்களின் போலியான முகத் திரைகளை உரித்து எங்கள் மண்ணில் தொடர்ச்சியான…

  13. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச நாளைய தினம் நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாளைய தினம் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட உள்ளதாகவும், கட்சியின் சிரேஸ்ட துணைத்தலைவராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட உள்ளார். கட்சியின் பொருளாளர் பதவிக்கு எரன் விக்ரமரட்ன நியமிக்கப்பட உள்ளார். நடைபெற்று முடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஹரீன் பெர்னாண்டோவிற்கு மிக முக்கியமான பதவியொன்று வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கட்சியின் முரண்பாடுகள் தொடர்ந்தும் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது…

  14. இராணுவத் தேவைக்காக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் புதுக்குடியிருப்பில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10 மணியளவில் புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் ஆரம்பித்த இப்போராட்டம் பிரதேச சபையில் முடிவடைந்தது. இராணுவமே வெளியேறு, எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும், எங்கள் வீடு எங்களுக்கு வேண்டும், அபிவிருத்திகள், இழப்பீடுகள் வேண்டாம் காணமல் போன உறவுகளுக்கு முதலில் பதில் சொல், இராணுவத்திற்கு வயல் எதற்கு எமது வயல் எமக்கு வேண்டும்.சந்தைக் காணி எமது சொத்து ஆக்கிரமிப்பை கைவிடு, அரச அதிகாரிகளே இராணுவ ஆக்கிரமிப்புக்கு துணைபோகாதீர், ஆக்கிரமிப்பை நிறுத்து இராணுவமே வெளியேறு,காணமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளை விடுதலை செய்,சிங்கள குடிய…

  15. புதுக்குடியிருப்பு படுகொலை நினைவு நாளில் அஞ்சலி செலுத்த பொலிஸ் தடை! – கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் முறுகல். [Monday 2014-09-22 07:00] மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு படுகொலையின் 24 வது ஆண்டு நினைவு நாளான நேற்று, உயிரிழந்தவர்களின் நினைவாக நிறுவப்பட்ட தூபியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் பிரதேச மக்களும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய போது, பொலிஸார் தடை விதித்ததால், குழுப்ப நிலை ஏற்பட்டது. இந்த இடத்தில் எவருக்கும் அஞ்சலி செலுத்த முடியாது, இதற்கான உத்தரவினை நீதிமன்றம் வழங்கியுள்ளது. எனவே அவ்விடத்தினை விட்டு உடனடியாக அகன்று செல்லுமாறு பொலிசார் கூறியுள்ளனர். இதன்போது, அங்கு நின்ற கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும், பொலிசாருக்கும் இடையில் சிறு குழ…

  16. முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளில் தோல்வி! – ஆளும்கட்சிக்குள் முரண்பாடுகள் தீவிரம். [Monday 2014-09-22 07:00] ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சி மயிரிழையில் வெற்றி பெற்றுள்ள போதிலும், கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் இரண்டு முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளில் ஆளும்கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. மூத்த அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவருமான நிமால் சிறிபால டி சில்வாவின் சொந்த தொகுதியான பதுளையில், 6098 வாக்குகளினால் தோல்வி ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேராவின் ஹலி – எல தேர்தல் தொகுதியிலும் 2796 வாக்குகளினால் ஆளும்கட்சி தோல்வியடைந்துள்ளது. அமைச்சர் நி…

  17. மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்! - அனுரகுமார திசநாயக்க கருத்து. [Monday 2014-09-22 07:00] மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை மாற்றுவதற்கு தாங்கள் தயார் என்பதை ஊவா மாகாணசபைத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என்று ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார். ஊவா தேர்தல் முடிவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ஊவா தேர்தலில் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சிறிய வித்தியாசத்திலேயே வெற்றியைப் பெற்றுள்ளது. பதுளையில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் எதிர்கட்சிகளுக்கு அதிகமானவை கிடைத்துள்ளன. அரசாங்கத்தின் வீழ்ச்சியின் ஆரம்பத்தை இவை காண்பிக்கின்றன. அரசாங்கத்தை மாற்றுவதற்கு தாங்கள் தயார் என்பதை மக்கள் இதன்மூலம் வெளிப்படுத்த…

  18. போர் வெற்றியே தேர்தல் வெற்றிக்குக் காரணம்! - என்கிறார் கோத்தபாய ராஜபக்ச [Monday 2014-09-22 07:00] விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றி கொள்ளப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டமையே ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சியின் வெற்றிக்கான காரணம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தல் வெற்றி குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தேர்தலுக்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் கண்ட அனைத்து கனவுக்களம் சிதைந்து போயுள்ளது. ஊவா தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு வழிகளைப் பயன்படுத்தியிருந்தார். எனினும் அந்த வழிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. நாட்…

  19. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பேரவையிலுள்ள தன் பதவியை இன்று (22) இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது இராஜினாமா கடித்தை தலைமைத்துவ சபையின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கருஜயசூரிய மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இவர், நீண்ட காலமாக கட்சியின் பொது செயலாளராக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்திருந்தார். தமது அரசியல் வாழ்வில், தொன்று தொட்டு ஐக்கிய தேசிய கட்சியோடு இருந்த பேரவை அங்கத்தவர்களின் எண்ணிக்கையை, இவருடைய இராஜினாமா குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள கபீர் ஹாஷிம் மற்றும் ருவான் விஜேவர்தனவ…

  20. காலிமுகத்திடலுக்கு அருகில் 233 ஏக்கர் கடற்பரப்பை நிரப்பி கொழும்பு துறைமுக நகரம் ஒன்று1337 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவுள்ளது.இந்த திட்டத்தினால் உயர் குடிமக்களும் அரசியல் செல்வாக்குள்ளவர்களும் பயனடைவர். இனப்பிரச்சினை தீர்வு என்பதை விட இனப்பிரச்சினையை வைத்துக் கொண்டு கட்சிஅரசியலையும் ஆட்சிஅதிகாரத்தையும் தக்க வைக்கின்ற செயற்பாடுகள் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் மாத்திரமல்ல இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் பதவியில் இருந்த அரசாங்கங்களிடம் இந்த பண்பை காணமுடியும். அபிவிருத்தி என்ற பெயர்ப் பலகையுடன் ஆட்சிக்கு வருகின்ற கட்சிகள் குறிப்பாக ஜனாதிபதிகள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பாக சிந்தித்ததாக இல்லை.மக்கள் அபிவிருத்தி எ…

  21. வேலணையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அடங்கிய பகுதி இன்று தோண்டப்படவுள்ளது. வேலணை பிரதேச சபை வளாகத்தில் தோண்டப்பட்ட குழிக்குள் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனையடுத்து குறித்த இடத்திற்கு வந்த ஊர்காவற்றுறை பதில் நீதவான் இ.சபேசன் குறித்த எச்சங்களை பரிசோதிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார். அத்துடன் குறித்த புதைகுழி மனிதப்புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பதில் நீதவான் முன்னிலையில் இன்று தோண்டப்படவுள்ளது.http://www.pathivu.com/news/34025/57//d,article_full.aspx

  22. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சயித் அல் ஹுசேன் - இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு எவ்விதத்திலும் இடமளிக்கப் போவதில்லையென இச்சந்திப்பின் போது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐ.நா. ஆணையாளருக்கு உறுதியாகக் கூறவுள்ளார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. காணமல்போனவர்கள் பற்றிய விசாரணைகளை நடத்த மக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவுக்கு அப்பால் விசாரணை நடத்த வெளியார் எவருக்கும் இடமளிக்கப் போவதில…

  23. சீன அதிபருடன் கொழும்பு வந்த நீர்மூழ்கி, போர்க்கப்பல்! – மகிந்தவிடம் வினவுவார் மோடி. [sunday 2014-09-21 07:00] சீன ஜனாதிபதி இலங்கை வர முன்னதாக கொழும்பு துறைமுகத்திற்கு அந்த நாட்டின் அதிநவீன நீர்மூழ்கியும், போர்க்கப்பலும் வந்தது, இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி- மகிந்த சந்திப்பின்போது இது குறித்தும் பேசப்படலாம் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா கூட்டத்தொடரின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய பிரதமருடன் பேச்சு நடத்துவது உறுதியாகி விட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து புதுடில்லி உறுதி செய்துவிட்டதாகவும் அவை தெரிவித்துள்ளன. இந்த சந…

  24. வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம் மற்றும் முத்திரை கைமாற்றல் நியதிச்சட்டம் ஆகியன வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் ஏற்றுக்கொள்ளப்பட்டமை எமக்கு கிடைத்த பெரு வெற்றியென வடமாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, வடமாகாண சபை தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி கொண்டு இன்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. இதுவரையில் எம்மால் மக்களுக்கு செய்ய முடிந்த விடயங்களை செய்துள்ளோம் என்ற ஆத்மதிருப்தி எமக்கு ஏற்பட்டுள்ளது. முழுமையாக செய்யக்கூடிய புறச்சூழல் அமையவில்லை. இன்னும் நிறையவே செய்திருக்கலாம் என்ற ஆதங்கமும் எம்மிடம் உள்ளது. வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நியதிச…

  25. ஆண்டு தோறும் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் , சமய விழாக்கள், நிகழ்வுகள், பொது அறிவு, தகவற் துளி போன்ற பல விடயங்களைத் தாங்கியவாறு தமிழ்த்தாய் நாட்காட்டி வெளிவந்து கொண்டிருக்கிறது. இந் நாட்காட்டியினை மேலும் சிறப்பாகவும், மக்கள் அறிய விரும்பும் விடயங்களையும் உள்ளடக்கியவாறும் என்றும் இல்லாத புதிய வடிவமைப்புடன் தமிழர்கள் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய முறையில் உங்களின் கைகளில் தர விரும்புகிறோம்.விசேடமாக இம்முறை ஒவ்வொரு நாளுக்கும் தேசியத் தலைவரின் சிந்தனைத் துளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது . அவ்வகையில் எதிர்காலத்தில் எமது தமிழ்த்தாய் நாட்காட்டியை மேலும் சிறப்பாகவும், எமது மக்களுக்கு தேவையான அனைத்து அதிகளவான தகவல்களையும் உள்ளடக்கவும் மக்களாகிய உங்களது கருத்துக்களையும் , …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.