ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
1970 கள் வரை கல்வியில் இலங்கையில் முன்னணி வகித்த வடக்கு மாகாணம் இன்று கடை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. யுத்தம் எம் உயிர்கள் உடைமைகளை மட்டும் காவு கொள்ளவில்லை. நமது சமூகத்தின் கல்வியிலும் மிகப் பெரும் அழிவையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன். மேலும் அவர் தெரிவிக்கையினில் யுத்த அழிவுகளில் இருந்து மீண்டெழுந்து எமது இலக்கு நோக்கி பயணிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். எம்மை மீளெழுப்புவதில் கல்வி மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. தனிப்பட்ட வாழ்வாயினும் சரி சமூக வாழ்வாயினும் சரி சவால்களை வெற்றிகரமாக சந்தித்து முன்னேற முக்கியமான ஆயுதம் கல்வியாகும். இவ்வகையில் ஏழ்மை காரணமாகவோ இயலாமை காரணமாகவோ யுத்த அனர்த்…
-
- 0 replies
- 387 views
-
-
இலங்கை இந்து பேரவையின் நிதியுதவியுடன் வன்னி குறோஸ் சுகாதார நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது. இதில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந. சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன், இலங்கை இந்து பேரவை வவுனியா மாவட்ட இணைப்பதிகாரி திரு. சுதாகரன் ஆகியோர் பங்குபற்றினர். இதில் வலிசுமந்த மாணவர்கள் 100 இற்கும் மேற்பட்டவர்களுக்கான பாடசாலை உபகரண தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டன. http://www.pathivu.com/news/33992/57//d,article_full.aspx
-
- 0 replies
- 349 views
-
-
தேவையான சந்தர்ப்பத்தில் சர்வதேச தலையீடு இடம்பெறுமாயின் இலங்கை போன்ற நாடுகளில் யுத்தம் இடம்பெற்ற வேளையில் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை, ருவன்டாவ, சிரியா உள்ளிட்ட நாடுகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் அவதானம் தாமதமாகவே செலுத்தப்பட்டதால் பல உயிர்கள் பறிக்கப்பட்டதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் போதே அமெரிக்க பிரதிநிதிகள் இவ்வாறு கூறியுள்ளனர். மேலும் மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளில் சர்வதேச சமூகத்தின் அவதானம் தாமதமாகவே செலுத்தப்பட்டதால் மனித உரிமை மீறல்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.http://www.pathivu.com/news/33990/57/…
-
- 0 replies
- 313 views
-
-
அம்பேபுஸ்ஸ சிங்ஹ படைப்பிரிவு தலைமையகத்தில் மண்வெட்டிக்கொண்டிருந்த படையினர் மீது மண்திட்டு சரிந்துவிழுந்ததில் நான்கு வீரர்கள் பலியாகியுள்ளனர். மண்திட்டு சரிந்து விழும் சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் 13 இராணுவத்தினர் இருந்ததாகவும் அதில் ஒருவர் காயமடைந்து, வறக்காபொலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதையுண்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவோரை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/127802--4-.html
-
- 0 replies
- 280 views
-
-
நாயாற்றுக்குப் படையெடுத்துள்ள 250 சிங்கள மீனவக் குடும்பங்கள்! – முல்லைத்தீவு மீனவர்கள் குமுறல். [saturday 2014-09-20 19:00] முல்லைத்தீவு, நாயாற்றுப் பகுதியில் பெருமளவிலான சிங்கள மீனவர்கள் தனியார் காணியில் வந்து தங்கியிருந்து தடைசெய்யப்பட்ட தொழில்களைச் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். முன்னைய காலத்தில் குறிப்பாக 1983 இற்கு முன்னர் அதிகார வர்க்கத்தின் ஆசியுடன் சுமார் 72 மீனவர்கள் வரை இங்கு தொழில் செய்து வந்தார்கள். ஆனால் இப்போது 250 இற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வந்து தொழில் செய்கிறார்கள். தனியார் காணியில் தங்கியும், கடலில் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்தியும் இவர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தாம் தொழி…
-
- 0 replies
- 413 views
-
-
மோடியின் பிறந்த தினத்தை மறந்து போனார் மகிந்த! – இரண்டுநாள் கழித்து அனுப்பினார் வாழ்த்து. [saturday 2014-09-20 07:00] இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17ம் திகதி தனது 64 வது பிறந்த தினத்தை மிகவும் எளிமையாக கொண்டாடியிருந்தார். அவருக்கு, சீனா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டு நாட்கள் தாமதமாக நேற்றே மோடிக்கு தனது பிறந்ததின வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். மோடிக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், “பிரதமர் மோடிக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களது பிறந்த நாள் ஒரு அற்புதமான தினமாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்,'' என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ள…
-
- 4 replies
- 514 views
-
-
ஸ்காட்லாந்து ஏற்பாடு இலங்கைக்கு பொருந்துமா? - அமைச்சர் தேவானந்தா கருத்து நாட்டுக்கு நாடு பிரச்சினைகள் வேறுபட்டிருக்கின்ற போதிலும், தற்போதைய நிலையில் பிரிவினைக்கான கோஷம் ஒன்று தொடர்பில் இலங்கையில் கருத்துக் கோரப்பட்டால் மக்கள் அதனை நிராகரித்து விடுவார்கள் என்றே தான் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். ஸ்காட்லாந்தில் ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடந்து முடிந்திருக்கும் நிலையில், அது போன்ற ஒரு ஏற்பாடு இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் பொருந்துமா என்று கேட்டதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வாறு கூறினார். ஸ்காட்லாந்தில் காலம்காலமாக அங்குள்ள மக்களுக்கு படிப்படியாக அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டு, அதன் இறுதியிலேயே இப்படியான …
-
- 6 replies
- 673 views
-
-
முல்லைத்தீவு நாயாறு பகுதியில் பெருமளவிலான சிங்கள மீனவர்கள் தனியார் காணியில் வந்து தங்கி தடைசெய்யப்பட்ட தொழில்களைச் செய்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் உறுதிப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களில் இருந்து, முன்னைய காலத்தில் தொழில் காலத்தின் போது ,அதிகார வர்க்கத்தின் ஆசியுடன் சுமார் 72 மீனவர்கள் வரை இங்கு வந்து தொழில் செய்து வந்தார்கள். ஆனால் இப்போது 250 இற்கும் மேற்பட்ட மீனவக்குடும்பங்கள் வந்து தொழில் செய்கிறார்கள். தனியார் காணியில் தங்கியும் , கடலில் தடை செய்யப்பட்ட தொழில்களையும் இவர்கள் செய்வது கடும் கண்டனத்திற்குரியவை. அனுமதியின்றி இவ்வாறு அத்து மீறும் மீனவர்…
-
- 2 replies
- 544 views
-
-
எல்லாப் பயங்கரவாதிகளும் மக்களை கொல்லும் நோக்குடனேயே செயற்படுவர்! ஆசிய அரசியல் கட்சி மாநாட்டில் மஹிந்த உலகிலுள்ள பயங்கரவாதிகள் அனைவரும் ஒரே விதமானவர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவத்துள்ளார். ஆசிய அரசியல் கட்சிகளின் 8ஆவது சர்வதேச மாநாடு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு தாமரைத் தடாகத்தின் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் ஆரம்பமானது. இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபேதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- அனைத்து பயங்கரவாதிகளும் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்யவே தயாராகின்றனர். பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பது தொடர்பிலான அனுபவங்களை இலங்கை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராகவே இருக்கிறது. நாடு பிரதானமாக எதிர்நோக்கி வரும் பிரச்ச…
-
- 8 replies
- 522 views
-
-
ஆயுதங்களுக்கு பதிலாக கைகளில் தும்புத்தடிகள்" தமிழில் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன்று நாட்டில் வீதிகளை கூட்டிச் சுத்தம் செய்யும் பணிகளைக் கூட இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர் எனஅவர் குறிப்பிட்டுள்ளார். தமது வீட்டுக்கு எதிரில் காணப்படும் கழிவுக் வாய்க்கால்களையும் இராணுவத்தினரே சுத்தம் செய்வதாகத் தெரிவித்துள்ளார். ஆயுதங்களுக்கு பதிலாக கைகளில் தும்புத்தடிகளை எடுத்துள்ள படையினர் நாட்டுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாக தாம் அஞ்சுவதாக…
-
- 1 reply
- 720 views
-
-
இலங்கையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள்! – ஜெனிவா உபமாநாட்டில் முக்கியத்துவம். [saturday 2014-09-20 07:00] மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட பல்வேறு விடயங்களில் இலங்கை அரசுக்கு சவால்மிகுந்த களமாகவுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையில், இலங்கைத்தீவில் மேலெழும் சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் விவாதப் பொருளாகியுள்ளது. தென்னாசிய வட்டகையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து இடம்பெற்றிருந்த உபமாநாடொன்றிலேயே இவ்விவகாரம் குறித்துப் பேசப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபையின் மதஉரிமைகளுக்கான சிறப்பாய்வறிஞர் ஹெய்னர் பிலேபெல்ட் தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த உபமாநாட்டில், இலங்கை, இந்தியா , வங்கதேசம் மற்று…
-
- 0 replies
- 465 views
-
-
இரண்டு வாரங்களுக்கு முன்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு வவுனியாவில் மூன்று நாட்கள் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியினரைப் பொறுத்தவரை வெற்றிகரமான மாநாடு என்றே கூறிக் கொள்கின்றனர். ஆனால், அம் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கொள்கைகள், ஆற்றப்பட்ட உரைகள், வேலைத் திட்டங்கள், தெரிவு செய்யப்பட்ட தலைமைப் பொறுப்புக்குரியவர்கள் உள்ளிட்ட சாராம்ச விடயங்களை வைத்தே அம்மாநாடு வெற்றியா தோல்வியா அல்லது இரண்டும் அல்லாத சம்பிராதய பூர்வமான சடங்கு நிலைப்பட்டதா என்பதை முடிவு செய்ய முடியும். மேலும் வடக்கு, கிழக்கில் இருந்து இம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் வாழ்நிலை அபிலாஷைகளும் நோக்கங்களும் எத்தகையவை என்பதும் அவர்கள் தமிழ் மக்களின் எந்த எந்தப் பிரிவினரான மக்களைப் பிர…
-
- 0 replies
- 388 views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விடவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ முக்கியமானவர் என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஸ பாரதீய ஜனதா கட்சியின் பங்குதாரர் அல்ல எனவும், வை.கோ பாரதீய ஜனதா கட்சியின் பங்குதாரர் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் முரளீதரர் ராவோ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழக அரசியல் கட்சிகள் கொண்டுள்ள நிலைப்பாட்டையே மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சியும்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழர் பிரச்சினைக்கு கௌரமான தீர்வுத் திட்டம் எட்டப்பட வேண்டுமென வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.…
-
- 0 replies
- 611 views
-
-
அதிகாரங்களை பகிர்ந்தால் பிரிவினையை தடுக்கலாம்: சம்பந்தன் சனிக்கிழமை, 20 செப்டெம்பர் 2014 06:48 தமது அரசியல் தலைவிதி என்ன என்பது குறித்த முடிவை ஸ்கொட்லாந்து மக்களே எடுக்கும் வகையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை ஒரு சிறந்த ஜனநாயக நடவடிக்கை என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஸ்கொட்லாந்து மக்கள் எடுத்த முடிவு எதுவாக இருந்த போதிலும் ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தினதும் தலைவர்களும், ஸ்கொட்லாந்துக்கு இன்னமும் மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பதையும் அவர் வரவேற்றிருக்கிறார். ஆகவே, ஒரு தனியான வாழ்விடத்தில் உள்ள, தனியான இன ம…
-
- 0 replies
- 537 views
-
-
எப்படியாவது வாழலாம் என்பது எமது குறிக்கோள் அல்ல. இப்படித்தான் வாழ்வோம் என்று அறவழி வரம்புகளை ஆழமாகப் பதித்து முன் செல்பவர்கள் எம் மக்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கோப்பாய் கோமகன் வன்னியசிங்கத்தின் 55வது நினைவு தினமும் இலங்கை தமிழரசு கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான வரவேற்பு விழாவும் நேற்று மாலை நீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றது. அந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஓரிரு தினங்களுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்னைத் தாக்கி ஒரு செய்தி விட்டிருக்கின்றார். எம்முடன் வடமாகாண முதலமைச்சர் முரண்படுகின்…
-
- 0 replies
- 420 views
-
-
இலங்கையில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்தார். ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 11-ஆவது மாநில மாநாடு நிறைவு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு முழு அரசியல் உரிமை, விடுதலை கிடைக்க வேண்டும் என்பது தான் தாய் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், பொதுமக்களின் எண்ணம். அதற்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால், தமிழர்களின் உணர்வுகளை மத்தியில் ஏற்கனவே ஆண்ட காங்கிரஸ் அரசும், இப்போதுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசும் தொடர்ந்து அவமதித்து வருகின்றன. இலங்கை…
-
- 0 replies
- 230 views
-
-
பஸிலுக்கும் கோட்டாவுக்கும் முதல்வர் விக்கி தகுந்த பதிலடி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் நல்ல பதிலடி கொடுத்திருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் ஸி.வி.விக்னேஸ்வரன். 'எங்கள் செயற்றிட்டங்களை எங்களைச் செய்யவிடுங்கள், நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்!' என்று கோட்டாபயவுக்குத் தெரிவித்த முதலமைச்சர், பஸில் அவர்களுக்கு 'உங்களை விட எங்களால் செயற்றிட்டங்களை ஊழல் இன்றி, ஊறு இன்றி, உண்மையாக நடைமுறைப்படுத்த முடியும். அதனால் அவற்றை எங்களிடம் விட்டுவிடுங்கள்" - என்று கூறியிருக்கின்றார் முதலமைச்சர். கோப்பாய்க் கோமகனின் நினைவு தினமும், தமிழரசுக்கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான வரவேற்பு விழாவும் இன்று மாலை நீர்…
-
- 2 replies
- 800 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையினால் சிறிலங்காவின் உள்நாட்டு பொறிமுறைக்கு வழங்கப்படவிருந்த உதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டெபன் டுஜாரிக் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் உள்நாட்டு மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகார பிரிவு தொழில்நுட்ப ஆலோசனை உதவிகளை வழங்க முன்வந்திருந்தது. இதற்கான குழு ஒன்றை சிறிலங்காவுக்கு அனுப்ப, பொது செயலாளர் பான் கீ மூன் திட்டமிட்டிருந்தார். எனினும் இதற்கு சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து முறையான கோரிக்கை முன்வைக்கப்படாத நிலையில், இந்த உதவிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.http://www.pathivu.com/news/33975/57//d,article_full.aspx
-
- 0 replies
- 459 views
-
-
தமிழ் நாட்டின் அழுத்தங்களை சமாளிப்பதற்காக, இறுதி நேரத்தில் தமிழ் நாட்டு மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றை சிறிலங்கா அரசாங்கத்துடன் பாரதீயே ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருக்கிறது. கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாரதீயே ஜனதா கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் சிறிலங்கா வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தமிழ் நாட்டுக்கு பொறுப்பாக இருக்கும் முரளிதர் ராவோ ஒருவர். இதற்கு எதிராக தமிழ் நாட்டில் தற்போது எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை சமாளிப்பதற்காக இறுதி நேரத்தில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சருக்கும், முரளிதரராவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி அதனை இந்தியாவில் பிரபல்யப்படுத்தி வருகிறது. …
-
- 0 replies
- 391 views
-
-
சிறிலங்காவில் இயங்கும் பௌத்த கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனாவுக்கு பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ நிதி வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் புலனாய்வு இணைத்தளம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. பொதுபல சேனாவின் செயற்பாடுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஐ.எஸ்.ஐ உளவு பிரிவு சிறிலங்காவில் கால்பதிக்க திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் தென்னிந்தியாவுக்கு எதிரான தங்களின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொள்ள ஐ.எஸ்.ஐ முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பொது பலசேனாவுக்கு நிதியை வழங்கி முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை தூண்டிவிட்டு, சிறிலங்காவில் முஸ்லிம்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம், முஸ்லிம் கடும்போக்கு சமூகம் ஒன்றை உருவாக்க …
-
- 0 replies
- 324 views
-
-
ஈபிடிபியின் ஆளுகைக்குட்பட்ட வேலணைப்பிரதேச சபை தலைமை காரியாலய வளவினுள் மனித புதை குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகத்திற்காக அப்பகுதியில் மின்மாற்றி நிறுவுவதற்காக வெட்டப்பட்ட குழிகளினில் மனித மண்டையோடுகள் உள்ளிட்ட வன்கூட்டுத்தொகுதி எச்சங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த பகுதியில் மின்மாற்றி நிறுவுவதற்காக கிடங்குகள் வெட்டப்பட்ட போது அலுவலக எல்லை மதிலோரமாக சில மனித வன்கூட்டுத்தொகுதிகள் வெளிக்கிளம்பியுள்ளன. சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அப்பகுதி அவர்களது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது. மின்னிணைப்பிற்காக அகழப்பட்ட 7 வரையான குழிகளில் பரவலாக மனித வன்கூட்டு எச்சங்கள் இருப்பதால் அப்பகுதியில் பாரிய மன…
-
- 0 replies
- 455 views
-
-
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் கடற்படையினரால் தமிழ் மக்களிற்கு சொந்தமான காணிகள் கடற்படை தள விஸ்தரிப்பிற்கென அபகரிக்கும் நடவடிக்கை இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்குத் துணையாக பெருமளவான இலங்கை காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்த போதும் அதனையும் பொருட்படுத்தாது மக்கள் திரண்டு போராடியதையடுத்து முயற்சி மீண்டும் கைவிடப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் அந்தப்பகுதியில் காணி அபகரிப்பு முயற்சி இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிறேமச்சந்திரன், சி.சிறிதரன் ஆகியோருடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு சென்று நி…
-
- 0 replies
- 324 views
-
-
ஜ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியங்களை அளிக்காதவாறு அனைத்துத் தரப்பினருக்கு கடும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.விசாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில் புலம் பெயர் மக்கள் மற்றும் தமிழகத்திலுள்ள தமிழீழ மக்கள் ஐ.நா விசாரணைக் குழுவிற்கான சாட்சியங்கள் திரட்டுவதற்கு முன்வர வேண்டும். இறுதி தருணம்வரைக் காத்திருக்காமல் பாதிக்கப்பட்ட அனைவரும் சாட்சியங்களைப் பதிவு செய்யது தேசியக் கடமையினை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று காலை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்த அவர், மேலும் கூறுகையில், இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை …
-
- 0 replies
- 285 views
-
-
தமிழ் மக்களுக்கான தீர்வை கூட்டமைப்பினரே கூறவேண்டும் தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினை என்ன என்பதனையும் அதற்கான தீர்வு எதுவென்பதையும் முதலில் இல்ஙகை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா கூறவேண்டும். பிரச்சினை என்னவென்று அவர்கள் கூறாவிடின் நாம் எவ்வாறு பதில் கூற முடியும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல கேள்வியெழுப்பினார். இலங்கையில் சமாதானமும் பாதுகாப்பும் அரசியல் ஸ்திரமும் காணப்படுகின்றமையினாலேயே இந்தியா சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் எமக்கு உதவி செய்கின்றன. இலங்கை சீனாவிடம் மட்டுமல்ல ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமும் உதவிகளைப் பெறுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த …
-
- 6 replies
- 732 views
-
-
- குணசேகரன் சுரேன் தேசிய பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கல் போட்டியில் 4 முதலிடங்கள் 7 இரண்டாமிடங்கள் மற்றும் 7 மூன்றாமிடங்கள் என வடமாகாண வீர, வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டியுள்ளதாக வடமாகாண பிரதி கல்விப்பணிப்பாளர் க.சத்தியபாலன் புதன்கிழமை (17) தெரிவித்தார். பளுதூக்கல் போட்டிகள் கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையில் அறநாயக்க டிபிற்றியா ராஜகிரி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றன, 17 வயதுப்பிரிவு 56 கிலோ எடை ஆண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வீரன் ரி.விதுசன், 17 வயதுப்பிரிவு 63 கிலோ எடை பெண்களுக்கான போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியை சேர்ந்த வி.அர்ஷpகா, 19 வயதுப்பிரிவு 84 கிலோ எடை ஆண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் அச்சு…
-
- 2 replies
- 698 views
-