ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
நான் கண்ட சிறந்த தலைவர் மகிந்த ராஜபக்ச! - புகழ்கிறார் கோத்தபாய [Monday 2014-09-01 15:00] தனது வாழ்கையில் நான் கண்ட சிறந்த தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்றும் அவரின் தன்னம்பிக்கையும் தைரியமுமே அவரை தலைவராக மாற்றியுள்ளது என்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலமு தெரிவித்துள்ளதாவது, ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்ற எண்ணத்திலோ எமது தனிப்பட்ட ஆசைகளுக்காகவோ நாம் பயங்கரவாதிகளுடன் யுத்தம் செய்யவில்லை. இந்த நாட்டையும் மூவின மக்களையும் காப்பாற்றுவதே எமது ஒரே இலக்கு. இலங்கை இன்று பாரிய மாற்றங்களையும் நல்ல அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் அடைந்துள்ளது. முப்பது வருட கால இலங்கையில் இறுதி ஐந்து ஆண்டுகளில் இலங்கை வேறொரு பாதையினை…
-
- 1 reply
- 585 views
-
-
நவநீதம்பிள்ளை ஓய்வு சமூக நிறுவனங்கள் வருத்தம் 2014-09-01 11:01:17 ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் பொறுப்பில் இருந்து நவநீதம்பிள்ளை நேற்று ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம்பிள்ளை கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர் இலங்கையில் நடைபெற்ற போர் குற்றம் தொடர்பாக, அந்நாடு மீது சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிடக் காரணமாக இருந்தார். மேலும், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது நடந்த போர்க்குற்றங் களைக் குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் திகதி இலங்கை சென்று ஒருவார காலம் நவநீதம்பிள்ளை ஆய்வு செய்தார். இந்நிலையில், நவநீதம்பிள்ளை வகித்து வந்த, ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் பொறுப்பில் இருந்து நேற்று ஓய்வுபெற்றுள்ளார். இதையடுத்து,…
-
- 0 replies
- 377 views
-
-
பௌத்தர்கள் பயங்கரவாதிகள் அல்ல! - பான் கீ மூனுக்கு பதிலடி கொடுக்கிறது பொது பல சேனா [Monday 2014-09-01 15:00] பௌத்தர்கள் அஹிம்சையை கடைப்பிடிப்பவர்கள். பயங்கரவாதிகள் அல்ல என்பதை ஐ.நா. செயலாளர் புரிந்து கொள்ள வேண்டும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் பொறுப்பான பதவி வகிப்பவர். அவ்வாறானவர் பொறுப்பற்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடக்கூடாது. எதையாவது கூற வேண்டுமானால் சிந்தித்து புத்திக் கூர்மையுடன் தெரிவிக்க வேண்டும். உலகில் பௌத்த பயங்கரவாதம் தலைதூக்கி வருவதாகவும் இலங்கையில் இவ்வாறான பௌத்த பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதோடு சிறுபான்மை இன மதங்கள் ஒடுக்கப்படுவதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் தெரி…
-
- 1 reply
- 437 views
-
-
திருக்கேதீஸ்வரத்தானிடம் உறவுகள் மன்றாட்டம் 2014-09-01 10:56:49 காணாமற் போன உறவுகளை கண்டுபிடிக்கக் கோரி அவர்களின் உறவுகளினால் தீபங்கள் ஏற்றி தேங்காய் அடித்து விசேட பிரார்த்தனை நிகழ்வு மன்னார் திருக்கே தீஸ்வரம் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இளைஞர் வலையமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 300 இற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. மனிதவுரிமை மீறல்கள் காணிப் பிரச்சினைகள், காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள், பொருளாதார பிரச்சினை என பல பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படாது தொடர்ந்து கொண்டே…
-
- 0 replies
- 503 views
-
-
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நிபந்தனையுடன் பங்கேற்கத் தயார் கூட்டமைப்பு அறிவிப்பு 2014-09-01 10:51:31 இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவென நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நிபந்தனையுடன் பங்கேற்கத் தயார் என தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதி ராஜா, இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார். 2011ஆம் ஆண்டு அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், நா…
-
- 0 replies
- 397 views
-
-
13வது திருத்தச்சட்டத்தினால் நிரந்தரத் தீர்வைப் பெறமுடியாது! - முதல்வர் விக்னேஸ்வரன் [Monday 2014-09-01 07:00] 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ், எமது மக்களுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கலாம் என்ற மனநிலையில் நாம் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதோடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், நாங்கள் 13ஆவது திருத்தச் சட்டம் தந்த உரித்தின் கீழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கலாம் என்ற மனோநிலையுடன் தேர்தலில் இறங்கவில்லை. மாறாகப் 13ஆவது திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன எனப் பகிரங்கமாகவே மக்களுக்கு நாம் தெரியப்படுத்தியிருந்தோ…
-
- 1 reply
- 423 views
-
-
அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சந்திப்பு ! [Monday 2014-09-01 07:00] அவுஸ்றேலியாவின் வெளிவிவகார அமைச்சக மூத்த அதிகாரிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கன்பராவில் அமைந்துள்ள பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த இந்தச் சந்திப்பில், இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற சவால்கள், இனப்பிரச்சனைக்கான தீர்வு ,இனப்படுகொலை தொடர்பிலான விசாரணை மற்றும் அகதிகள் விவகாரம் என பல்வேறு விடயங்கள் கருத்துப்பரிமாறப்பட்டுள்ளன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் க.மாணிக்கவாசகர், புலம்பெயர் சமூக விவகாரங்கள…
-
- 0 replies
- 397 views
-
-
இவ் வருட இறுதியில் வடக்கிற்கு அதிவேக நெடுஞ்சாலை news கொழும்பு-கண்டி ஊடான வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மானப்பணிகள் இந்த ஆண்டு இறுதிப்பகுதியில் அரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு தலைநகரத்தை மையமாகக்கொண்டு நாடளாவிய ரீதியில் விரிவடையக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுகின்ற உயர்மட்டத்திலான வரையறுக்கப்பட்ட பாதை வலையமைப்பு திட்டத்தின் மூலம் நிர்மானிக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இத்திட்டத்தின்படி வடக்குக்கான அதிவேகப்பாதையை தெற்கு அதிவேகப்பாதையுடனும், கண்டி நகருடனும் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக என்டேரமுள்ளயிலிருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான பாதையை 130 பில்லியன் ரூபா செலவில் ந…
-
- 1 reply
- 678 views
-
-
இலங்கைத் தமிழர் கத்தியால் குத்திக் கொலை! - திருச்சியில் நேற்றிரவு பயங்கரம். [Monday 2014-09-01 05:00] தமிழகம், திருச்சியில் இலங்கைத் தமிழர் ஒருவர், நேற்றிரவு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருச்சி, கருமண்டபம் பகுதியில் நேற்றிரவு 10.30 மணியளவில் இந்தச சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வேந்திரா என்ற (55 வயது) மூன்று பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார். கருமண்டபம், செல்வநகர் பகுதியில், உள்ள வீட்டுக்கு முன்பாக கத்தியால் குத்தப்பட்ட இவர், பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மரணமானார். பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.http://www.seithy.com/breifNews.php?newsID=115962&category=TamilNews&langu…
-
- 0 replies
- 559 views
-
-
இராணுவத்துக்கும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் இடையிலான உறவை அம்பலப்படுத்திய நிகழ்வு! [Monday 2014-09-01 07:00] யாழ். பாதுகாப்புப் படைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒரு மாதகால தமிழ் மொழி கற்கும் பயிற்சி நெறியில் சித்தி பெற்ற 1633 இராணுவத்தினருக்கான சான்றிதழ்கள் காங்கேசன்துறையில் அமைந்துள்ள தல்சேவன விருந்தினர் விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கலந்து கொண்டுள்ளமை தழிம் சமூகத்தையும் கல்வி சமூகத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பல்கலை மாணவர்களையும் விரிவுரையாளர்களையும் அச்சுறுத்தும் பாணியில் படையினர் செயற்பட்டுவருவது தெரிந்ததே. ஆயினும் இதன் போதெ…
-
- 0 replies
- 545 views
-
-
"கடந்த காலங்களில் தொடர்ந்து துன்பங்களையும் - துயரங்களையும் சந்தித்து வந்த எமது மக்களுக்கு நாமும் அவற்றை வழங்கக்கூடாது. இந்த விடயத்தில் உள்ளூராட்சி மன்றங்களும் மாகாண சபையும் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும். அத்துடன் இயலுமானவரை மக்களுக்கு உதவ வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா. மானிப்பாய் தொகுதிக் கிளை நிர்வாகிகளை தெரிவுசெய்யும் கூட்டம் உடுவில் பிரதேச சபை மண்டபத்தில் பெ.கனகசபாபாதி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இதில் விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில்: இன்று எமது இளைஞர், யுவதிகள் வேண்டுமென்றே திட்டமிட்ட முறையில…
-
- 0 replies
- 481 views
-
-
ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே இலங்கை ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கை வருவார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வரும் அவர் பொருளாதார, வர்த்தக உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி, ஜப்பானியப் பிரதமரை இலங்கை வருமாறு கேட்டிருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று ஜப்பானியப் பிரதமர் இலங்கை வருகிறார் என்றும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் இந்த பயணத்தின்போது அவர் அரசதரப்பு பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுவார் என்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. http://malarum.com/article/tam/2014/09/01/5031/%E0%AE%…
-
- 0 replies
- 265 views
-
-
லண்டன் பொருளியல் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி ராஜேஷ் வேணுகோபால் கட்டுநாயக்கவில் கைது! [sunday 2014-08-31 08:00] லண்டன் பொருளியல் கல்லூரியில் சர்வதேச அபிவிருத்தி மற்றும் அவசர மனிதாபிமான நலன்புரி பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளரான கலாநிதி ராஜேஷ் வேணுகோபால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை முற்பகல் 11.35 அளவில் இலங்கைக்கு வந்தபோது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டமை தொடர்பாக எந்த விளக்கங்களையும் தெரிவிக்காத பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்றுமுன்தினம் இரவு 7 மணி வரை அவரிடம் விரிவாக விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து கலாநிதி வேணுகோபால் மிரிஹானவில் உள்ள குடிவரவு, குடியகல்வு ம…
-
- 1 reply
- 557 views
-
-
இலங்கை முஸ்லீம் பெண்களின் உடைபற்றி கவலைப்படும் விமல் வீரவன்சவின் வாரிசு முஸமில்.... இலங்கை முஸ்லீம்கள் அராபிய கலாச்சாரத்தை பின்பற்றி உடைஅணிவது நாட்டில் சமூகங்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தலாம் என தேசிய சுதந்திர முன்னணி எச்சரித்துள்ளது. இஸ்லாம் இலங்கைக்கு அராபியாவிலிருந்து வரவில்லை இந்தியாவிலிருந்தே வந்தது என அதன் பேச்சாளர் முகமட் முசாமில் தெரிவித்துள்ளார். வரலாற்றுரீதியாக இலங்கை முஸ்லீம் பெண்கள் அபயா அணியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்நோக்கத்துடன் சில முஸ்லீம் குழுக்கள் அராபிய ஆடைகளை பரப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈராக்கில் செய்ததை இலங்கையில் செய்ய நினைக்கும் மேற்குலகின் ஆதரவுடைய அந்த சக்திகளுக்கு பலியாக வேண்டாம் என்றும் அ…
-
- 5 replies
- 1.6k views
-
-
TNA வசமுள்ள நல்லூர் பிரதேச சபையில் கழிவகற்றும் நடவடிக்கையில் உள்ளக முரண்பாடு:- இராணுவத்தினர் பணியினை பொறுப்பேற்றனர்:- கூட்டமைப்பு வசமுள்ள நல்லூர் பிரதேச சபையினர் கழிவகற்றும் நடவடிக்கையை உள்ளக முரண்பாடுகளால் இடைநிறுத்தியுள்ளதால் இராணுவத்தினர் அப்பணியினை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். நல்லூர் பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டுவதற்கு இடம் இல்லை என கூறி கடந்த புதன்கிழமை தொடக்கம் கழிவகற்றும் பணியினை இடைநிறுத்தி உள்ளனர். அதனை அடுத்து திருநெல்வேலி இராணுவத்தினர் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்தையினை துப்பரவு செய்யும் பணியில் இன்று ஞாயிற்றுகிழமை ஈடுபட்டனர்.அதற்கு பிரதேச சபை வாகனங்களை அவர்கள் பயன்படுத்தினர். கூட்டமைப்பின் முன்னேற்பாடற்ற உள்ளக முரண்பாடு…
-
- 0 replies
- 445 views
-
-
வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்கு மரக்காட்டைப் பாதுகாக்கும் திட்டம் ஒன்றை வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை குடத்தனை சுடரொளி கிராம முன்னேற்றச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. 1976 ஆம் ஆண்டு பருத்தித்துறைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் க.துரைரத்தினத்தின் நிதி ஒதுக்கீட்டில் 5 ஏக்கர் அளவில் உருவாக்கப்பட்ட சவுக்கம் காடு, அதன் பின்னர் காலத்துக்கு காலம் விரிவுப்படுத்தப்பட்டு இன்று 8 கீலோமீற்றர் நீளத்தில் 1000 ஏக்கருக்கும்; அதிகமான பரப்பளவில் காணப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் பொரு…
-
- 2 replies
- 644 views
-
-
மேட்டூர்: ஆயுத புதையல் தேடும் பணிக்காக, விடுதலைப் புலிகள் தளபதி சமாதியை தோண்டாமல் இருக்க, அவரது ஆதரவாளர்கள் திடீரென போர்டு வைத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 300 பேர்...: மேட்டூர் தாலுகா, கும்பாரப்பட்டி கிராமம் பச்சபாலமலை அடிவாரத்தில், கடந்த, 1984 முதல், 1986ம் ஆண்டு வரை, விடுதலைப் புலிகள் முகாமிட்டு, ஆயுத பயிற்சி பெற்றனர். முகாமிற்கு, மூன்று மாதத்துக்கு ஒரு முறை, விடுதலைப் புலிகள், 300 பேர் வந்து ஆயுத பயிற்சி பெற்று, இலங்கைக்கு சென்றனர். அந்த சமயத்தில், இலங்கையில் நடந்த போரில், தன் குடும்பத்தினரை பறிகொடுத்து, படுகாயத்துடன் கும்பாரப்பட்டி முகாமிற்கு, விடுதலைப் புலிகளின் தளபதி ரோய், வந்து சேர்ந்தாக தெரிகிறது. ரோய், முகாமிலேயே தங்கி சிகிச்சை பெற்றதுடன், பயிற்சி பெ…
-
- 5 replies
- 1.1k views
-
-
இன்றுடன் ஓய்வு பெறுகிறார் நவநீதம்பிள்ளை! [sunday 2014-08-31 08:00] ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து நவநீதம்பிள்ளை இன்றுடன் ஓய்வுபெறவுள்ளார். இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக ஐ.நா மனித உரிமை ஆணையாளராகப் பணியாற்றி வந்தார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் நவநீதம்பிள்ளை, சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதானியாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நன்றி - செய்தியிணையம்
-
- 9 replies
- 828 views
-
-
ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற மாபெரும் இன அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா மனித உரிமை மன்றத்துக்கு முன்னர் உலகத்தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என தமிழர் முன்னேற்ற படை இயக்கதின் சார்பாக கி.வீரலட்சுமி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். http://www.pathivu.com/news/33536/57//d,article_full.aspx
-
- 0 replies
- 599 views
-
-
எழுவோம் தமிழா அறக்கட்டளையின் ஊடாக முல்லைத்தீவில் காணாமல் போனோரின் பிள்ளைகளின் கல்விவளர்ச்சிக்கான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன். நேற்று காலை ஏற்பாடுசெய்யப்பட்ட இந்நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட காணாமல் போனோரின் பிள்ளைகளுக்கு கல்வி சார் பொருட்களும் வழங்கப்பட்டன. இது தொடர்பில் மேலும் அறியவருகையில், 29/08/2014 அன்று காலை 9 மணியளவில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற பொருட்கள் வழங்கும் நிகழ்வில் 20 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு பொருட்கள் வழங்கப்பட்டன. எழுவோம் தமிழா அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த…
-
- 0 replies
- 322 views
-
-
நிபந்தனையுடன் அரசாங்கத்துடன் பேசத் தயார்! - மாவை சேனாதிராசா [sunday 2014-08-31 18:00] தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் நிபந்தனை அடிப்படையில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கத் தயார். அரசாங்கத்துடன் பேச்சு நடாத்திய பிரச்சினைகளுக்கு தீர்வு காண எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது. 2012ம் ஆண்டில் அரசாங்கமே பேச்சுக்களிலிருந்து இடையில் விலகிக்கொண்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து பேச்சு நடத்த வே…
-
- 0 replies
- 306 views
-
-
சந்திரிகா குமாரதுங்க மியன்மாரின் ஜனநாய போராட்டத் தலைவி சூ கீயை சந்தித்து உரையாடியுள்ளார்:- 31 ஆகஸ்ட் 2014 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மியன்மாரின் நோபல் பரிசு பெற்ற ஜனநாய போராட்டத்தலைவி அவுன் சாங் சூ கீயை சந்தித்து உரையாடியுள்ளார். மியன்மாருக்கான அவரது விஜயத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. யுங்கூனில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது அவுன் சாங் சூ கீயின் கட்சியின் முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டதாகவும், சமாதானம் மற்றும் தேர்தல் முறைகள்குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மியன்மார் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை பின்பற்றுவதற்hகன காலம் இன்னமும் உருவாகவில்லை என முன்னாள் ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார். ht…
-
- 1 reply
- 430 views
-
-
கண்டியப் பெண்ணை மருமகளாக்குகிறார் மகிந்த! - ரத்வத்தை குடும்பத்தில் சம்பந்தம் செய்கிறார். [sunday 2014-08-31 18:00] மலைநாட்டு கண்டிய சிங்களப் பெண்ணை மருகளாக்கிக் கொள்ள ஜனாதிபதி மகிந்தவும் அவரது மனைவியான ஷிரந்தி ராஜபக்சவும் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. கீழ் நாட்டு சிங்களவர்களான மெதமுலன ராஜபக்ச பரம்பரையினருக்கு கண்டிய சிங்களவர்களுடன் எந்த உறவு முறை தொடர்புகளும் இல்லை. இதனால், தமது மகன் யோஷித ராஜபக்சவுக்கு கண்டிய சிங்கள பெண்ணை மணமுடிக்க ஜனாதிபதியின் குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரான ஜெனரல் அனுருத்த ரத்வத்தவின் பேத்தியையே, ராஜபக்ச குடும்பத்தினர் மருமகளாக்கிக் கொள்ளப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுருத்த ரத்வத்தவின் புதல்வர் லொ…
-
- 0 replies
- 560 views
-
-
NGOக்களின் மீதான கண்காணிப்பை தொடர்ந்து மன்றங்களையும் (foundations) கண்காணிக்க கோத்தாபய உத்தரவு:- 31 ஆகஸ்ட் 2014 அரசசார்பற்ற அமைப்புகளின் மீதான கண்காணிப்பை தொடர்ந்து மன்றங்களையும் (கழரனெயவழைளெ) கண்காணிப்பிற்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு இதற்கான புதிய சட்டமூலமொன்றை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, இந்த சட்டமூலம் இலாபநோக்கமற்ற விதத்தில் செயற்படும் அமைப்புகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அரசாபற்ற அமைப்புகளுக்கான செயலகமே மன்றங்களை கண்காணிக்கும்,புதிய சட்டமூலங்களின் கீழ் இவ்வாறான அமைப்புக்கள் தங்களை செயலகத்தில் பதிவுசெய்ய வேண்டும், அவ்வாறுபதிவு செய்யாவிடில் இந்த அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து நி…
-
- 1 reply
- 363 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போது நாங்கள் உங்களுடன் நூறு வீதமிருக்கிறோம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார் என கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடான சந்திப்பின் போது வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கடிதமொன்றை சம்பந்தன் மோடியிடம் கையளித்தார். விக்கினேஸ்வரனையும் தன்னைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளார் எனவும் மோடி தெரிவித்தார் என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது புதுடில்லியின் நன்கு அறியப்பட்ட 7 ரேஸ்கோர்ஸ் வீதி என்ற முகவரிக்கு முன்னால் கூட்டமைப்பினர் சென்ற அந்த மூன்று வாகனத் தொடரணியை பாதுகா…
-
- 6 replies
- 648 views
-