ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
கிழக்கில் இராணுவப் பயிற்சியை முடித்த 36 தமிழ் யுவதிகள் வெளியேறினர்! [saturday 2014-08-23 17:00] கிழக்கு மாகாணத்தில் மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்த 36 தமிழ் யுவதிகள் இன்று வெளியேறினர். இப் பயிற்சிநெறியின் நிறைவு விழா, திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகமான பிளான்ரன் பொயின்ற் முகாமில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில், பிரிகேடியர் சண்முகநாதன், பிரதம அதிதியாக கலந்துகொண்டு இராணுவ வீராங்கணைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இப்பயிற்சிநெறியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மண்டூரைச் சேர்ந்த தெய்வேந்திரன் ரஞ்சிதா என்ற யுவதி கௌரவிக்கப்பட்டார். கிழக்கு மாகாணத்தில், திருகோணமலையில் 16 பேரும், மட்டக்களப்பில் 15 பேரும், அம்பா…
-
- 0 replies
- 249 views
-
-
சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் இலங்கையின் முஸ்லிம் குழுக்கள் சில, தொடர்புகளைப் பேணி வருகின்றன. இது தொடர்பில் எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கண்காணித்து வருகின்றோம் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சிக்கல்களுக்கான நடவடிக்கை மையத்துக்கு, கோட்டாபய ராஜபக்ஷவஜனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்நோக்கியுள்ள இந்த அச்சுறுத்தல் தொடர்பில் இந்த மையம், கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் கோரியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இனகவாதக் குழுக்களிடையே மதவாதம் தலைதூக்குவதே யுத்தத்தி…
-
- 16 replies
- 1k views
-
-
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் புலிகளின் கேணல்! [Friday 2014-08-22 18:00] வடமத்திய மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29 பேரை குண்டுத்தாக்குதலில் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கேணல் நிலையில் இருந்த உறுப்பினர், இன்று தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இந்நிலையில், இவருக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி வழங்கப்படும் என்று வடமேல் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி நுனந்த குமார ரத்நாயக்க கூறினார். புலிகள் இயக்கத்தில் கேணல் பதவிநிலை வகித்தவரும் செங்கலடியைச் சேர்ந்தவருமான சண்முகநாதன் சுதாகரன் என்பவரே குற்றத்தை ஒப்புக் கொண்டுள்…
-
- 2 replies
- 436 views
-
-
கிளிநொச்சியில் வெளிநாட்டு இராணுவ உயரதிகாரிகள்! [saturday 2014-08-23 07:00] கொழும்பில்,நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு இராணுவ உயரதிகாரிகள் நேற்று கிளிநொச்சிக்குப் பயணம் மேற்கொண்டனர். நேற்று மாலை 4 மணியளவில் கிளிநொச்சிக்குச் சென்ற இவர்கள் இராணுவ முகாம்களுக்குச் சென்றதுடன் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள ஒத்துழைப்பு மத்திய நிலையத்தையும் பார்வையிட்டனர். அத்துடன் கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=115476&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 410 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்படும் என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் மாதம் ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்.இலங்கை அரசாங்கத்தை தடை செய்யுமாறு ருத்ரகுமாரன், ஐக்கிய நாடுகள் அமைப்பிச் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் கோரியிருந்தார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைக் காரியாலத்திற்கு எதிரில் இலங்கைக்கு எதிராக எதிர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் விசாரண…
-
- 0 replies
- 313 views
-
-
மேல் மாகாணசபை உறுப்பினர் மல்ஷா குமாரதுங்கவின் சவாலை ஏற்று ஐஸ் நீரில் குளித்த மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, மேலும் மூவருக்கு ஐஸ் நீரில் குளிக்கும் சவாலை விடுத்தார். ஊவா மாகாணசபையின் ஐ.தே.க முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ, ஜே.வி.பி உறுப்பினர் லால்காந்த மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் செனால் வெல்கம ஆகியோருக்கே ஹிருணிகா இந்த சவாலை விடுத்தார். http://www.jvpnews.com/srilanka/80102.html
-
- 1 reply
- 669 views
-
-
பிரதமர் மோடியுடன் இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு! Saturday, August 23, 2014, 11:00 [iST] டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் இன்று சந்தித்து பேசினர். மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் பின்னர் இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையையே மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இதனால் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டைத்தான் ஈழப் பிரச்சனையில் பாஜக அரசும் கடைபிடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் ஈழத் தமிழர் தரப்பாகிய இலங்கை தமிழ்த் தேசிய…
-
- 4 replies
- 656 views
-
-
ஐ.நா விசாரணைக்குத் தகவல் வழங்க இந்தியா, சீனா, பாகிஸ்தான் மறுப்பு! [saturday 2014-08-23 07:00] இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு தகவல்களை வழங்க மறுத்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பல்வேறு வழிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. இதுகுறித்த தகவல்களை வழங்க இந்த நாடுகள் மறுத்துள்ளமை ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. விசாரணைக் குழுவின் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சிங்களப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.http://www.seithy.com/breif…
-
- 3 replies
- 534 views
-
-
சனி, ஆகஸ்ட் 23, 2014 - 10:17 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் சாட்சியமளிக்கும் பொதுமக்களை ஜ.நா பாதுகாப்பற்ற வேண்டும்! செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை!! ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரினால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு முழமையான ஆதரவை வழங்குவதற்கு தயாராகவே இருப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அதே வேளை இந்த விசாரணைகளின் போது சாட்சியமளிப்பவர்களின் பாதுகாப்பை ஆணையாளரே உறுதிப்படுத்தவேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்துள்ளது. விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென துணிந்து நின்று செயற்பட்ட மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மாற்றம் பெறவுள்ள நிலையில் அடுத்து வருகின்ற ஆணையாளரும் அவரைப் போன்றே செயற்படுவாரெனநம்புவதாகவும் கூட்டமைப்பின் வன்னிமாவட்டப் பாராளுமன்ற உறுப…
-
- 0 replies
- 277 views
-
-
இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும்! - சுஷ்மாவிடம் கூட்டமைப்பு வேண்டுகோள். [saturday 2014-08-23 07:00] வடக்கு, கிழக்கில் தமிழரின் பூர்வீக நிலங்கள் இன்னும் 5 வருடங்களில் இலங்கை அரசால் முற்றாகச் சிதைக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை இந்தியா உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் நேற்று வலியுறுத்தினர். வடக்கு, கிழக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புகளையும், அதனால் அங்குள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவலங்களையும் நேரில் பார்வையிட இந்திய அரசின் உயர்மட்டக் குழுவொன்று அவசரமாக இலங்கை வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியப் பிரதமர் ந…
-
- 0 replies
- 437 views
-
-
காணாமற்போனோர் குறித்து விசாரிக்க தனி விசாரணைக்குழு! - ஆணைக்குழுத் தலைவர் தெரிவிப்பு [saturday 2014-08-23 07:00] காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு விசாரணை குழுவொன்றை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார். காணாமல் போனோர் தொடர்பான ஆணைக் குழுவுக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் ஆணைக் குழுவினூடாக விசாரணைகளை முன்னெடுப்பதா அல்லது தனியான விசாரணை குழுவினூடாக முன்னெடுப்பதா என ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். ஆணைக் குழுவுக்கு இதுவரை சுமார் 20 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு அடுத்த சாட்சி விசாரணை எங்கு நடத்துவத…
-
- 0 replies
- 374 views
-
-
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை – பிரசாத் காரியவசம்:- 23 ஆகஸ்ட் 2014 அமெரிக்கா இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை என அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலேயே இலங்கை குறித்து கருத்து வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் சிறந்த உறவுகள் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இலங்கை ராஜதந்திரிகள் அமெரிக்க அதிகாரிகளுடன் அடிக்கடி சந்திப்புக்களை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் அமெரிக்க புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தமிழக அரசியல்வாதிகள் தொடர்ச்சிய…
-
- 0 replies
- 352 views
-
-
நாலரைக் கோடி ரூபா வருமானம் ஈட்டும் மத்தல விமான நிலைய ஊழியர்களுக்கு 38 கோடி ரூபா சம்பளம்! [Friday 2014-08-22 18:00] மத்தல மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் வருடாந்த வருமானம் 4 கோடி 32 லட்சத்து 89 ஆயிரத்து 400 ரூபா எனவும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் மாத சம்பளத்திற்கான செலவு 38 கோடி 64 லட்சத்து 6 ஆயிரத்து 900 ரூபா எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன வழங்கிய பதிலில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. மத்தல விமான நிலையத்திற்கு 5 விமான நிறுவனங்களின் விமானங்கள் வந்து சென்றுள்ளன. ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், மிஹின் லங்கா, பிளைய் துபாய், ரொட்டானா ஜெட் உட…
-
- 1 reply
- 477 views
-
-
வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் சையத் அக்பருடின்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- இலங்கையிலுள்ள தமிழாகளின் அபிலாஷைகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றை விரும்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் சையத் அக்பருடின் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமநிலை,கௌரவம், நீதி போன்றவற்றை வழங்க கூடிய தீர்வு தேவை என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் கூட்டமைப்பிற்கும் வெளிவிவகார அமைச்சரிற்குமிடையிலான இன்றைய சந்திப்பு அந்த நாட்டில் நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகள் இடம்பெறுகின்ற சூழலில் சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுடனும் பேச்சுக்களை மேற்கொள்கின்ற நடவடிக்கையின் ஒரு பகுதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்…
-
- 0 replies
- 396 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மதரசா மாதிரியிலான பாடசாலைகளை நடத்தி வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இவ்வாறான பாடசாலைகள் இயங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். தமிழச்;சோலை என இந்த பாடசாலைகளுக்கு பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை பெருமைப்படுத்தும் வகையில் இந்த பாடசாலை இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இளம் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மத்தியில் புலிகளின் கொள்கைகளை பிரச்சாரம் செய்வதே இந்தப் பாடசாலைகளின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ்ச்சோலையில் கல்வி பயிலும் இளம் தலைமுறையினர் பலவந்தமாக பிரச்சார நடவடிக்கைகள…
-
- 0 replies
- 465 views
-
-
இந்தியா சென்றுள்ள இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு சற்று முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவரஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் இடம்பெற்ற இச் சந்திப்பில் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டதாகவும் அப்போது இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுகையில்:- இலங்கை தமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுஷ்மா சுவராஜிடம் முறையிட்டதாக தெரிவித்தார். சந்திப்பு குறித்து கர…
-
- 0 replies
- 340 views
-
-
இனியாவது புலிகளை வைத்துப் பிழைப்பு நடத்தாமல் இருங்கள்! - அரசாங்கத்திடம் ஐதேக எம்.பி வேலாயுதம் வேண்டுகோள். [Friday 2014-08-22 18:00] புலிகளையும் புலம்பெயர் தமிழர்களையும் வைத்து தமது ஆட்சியையும் வாழ்க்கையையும் அரசாங்கம் நடத்திக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.வேலாயுதம் நேற்று பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இலத்தினியல் அடையாள அட்டை என்பது நடைமுறையில் இல்லாத ஒன்றாகும். அத்துடன் சட்டத்திலும் இதற்கான ஏற்பாடுகள் இல்லை. அந்த வகையில் இவ்வாறானதொரு திட்டத்தை அறிமுகப்படுத்…
-
- 0 replies
- 291 views
-
-
ஏழு மாத வறட்சிக்குப் பின்னர் இன்று வடக்கில் கொட்டுகிறது மழை! [Friday 2014-08-22 18:00] வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான 7 மாத காலமாக நிலவிய வறட்சிக்குப் பின்னர் இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று மாலை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வீதிகளில் வெள்ளம் தேங்கும் அளவிற்கு கனமழை பெய்துள்ளதுடன், தொடர்ச்சியாக கனமழை பெய்வதற்கான காலநிலை நீடித்து வருகின்றது. கடந்த ஆண்டில் பெரும்போக நெற்செய்கை பாதிக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு பருவமழையினை ஆவலோடு எதிர்பார்த்திருந்த விவசாய மக்களும் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போதுள்ள காலநிலை தொடர்ந்து நீடிக்கும் எனவும், இடியுடன் கூடிய மழை தொடர்ச்சியாக…
-
- 0 replies
- 269 views
-
-
கொழும்பில் மிதக்கும் வர்த்தக நிலையங்கள்! - இன்று மாலை திறப்பு. [Friday 2014-08-22 07:00] கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் வர்த்தக நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்படவுள்ளன. கொழும்பு பஸ்தியன் மாவத்தையை அண்மித்த பகுதியில் பேரை வாவியின் மேலாக இந்த மிதக்கும் வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பை அழகுபடுத்தும் கோத்தபாயவின் திட்டத்துக்கமைவாக இந்த வர்த்தகத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.சுமார் 150 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் வர்த்தகத் தொகுதி நிர்மாணப் பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர்.இதில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம், உணவு விடுதிகள் என்பனவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த மிதக்கும் வர்த்தகத் தொகுதியை இன்று மாலை சுகாதார அமைச்சர் மைத்திரிபால …
-
- 7 replies
- 750 views
-
-
இலங்கையின் அதிகாரமிக்க அமைச்சுப் பதவி வகிக்கும் பெண் அரசியல்வாதியொருவரின் வழிகாட்டலில் பாலியல் தொழில் மையங்கள் நடத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான தகவல்களை அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு நெருக்கமான சிங்கள இணையத்தளம் வெளியிட்டுள்ளது. குறித்த பெண் அமைச்சரின் மாதிவெல உத்தியோகபூர்வ இ்ல்ல முகவரிக்கு எழுதப்பட்ட குத்தகை (லீஸ்) ஆவணத்தைக் கொண்டு, பாலியல் மையங்கள் செயற்படுவதாகவும் அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது. கொழும்பில் மட்டுமன்றி கேகாலை, அளவ்வ போன்ற பிரதேசங்களிலும் இவரின் வழிகாட்டலின் கீழான பாலியல் மையங்கள் தொழிற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் இந்த அமைச்சரின் பாலியல் தொழில் நிலையம் ஒன்றைச் சோதனையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கிர…
-
- 0 replies
- 489 views
-
-
இலங்கை இராணுவத்தினர் காணிகளை அபகரிப்பதற்காக கூறி வந்த பொய்கள் அம்பலமாகி இருக்கின்றன. பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்தவிருப்பதாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இராணுவத்தினர் பொது மக்களின் காணிகளை சுவீகரித்தனர். எனினும் இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளில் பெரும்பாலானவை அவர்கள் கூறிய காரணத்துக்காக பயன்படுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இலங்கையின் சமாதானத்துக்கும், நீதிக்குமான இயக்கம் விடுத்திருந்த வேண்டுகோளின் அடிப்படையில், அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப இயக்கத்தின் மனித உரிமைகள் வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு செய்மதிப் புகைப்படங்களை ஆராய்ந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கைப்பற்றப்பட்ட காணிகளில் 30 சதவீதமான காணிகளிலே பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள…
-
- 0 replies
- 381 views
-
-
இலங்கையில் தமிழர்களின் நலனை பேணிக்காப்பதற்கு தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வலியுறுத்தியதாக இரா.சம்பந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் தெரிவித்துள்ளனர். புதுடில்லி வந்துள்ள கூட்டமைப்பின் குழுவினர் இன்று காலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்தார்கள். தொடர்புடைய விடயங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பாஜக, நரேந்திர மோடி, சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், போர், போர்க் குற்றங்கள், மனித உரிமை, மீள்குடியேற்றம் இந்தச் சந்திப்பின் போது, தமிழர்களின் முக்கிய பிரச்சனைகள் குறித்து வ…
-
- 0 replies
- 375 views
-
-
வடக்கு மாகாண சபையின் 14 வது அமர்வு இன்று காலை ஆரம்பமாகியுள்ள நிலையல், இந்த அமர்வில் பங்கேற்க, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சைக்கிளில் வந்தார். தான் கோரிக்கை விடுத்தும் தனக்காக பாதுகாப்பு மற்றும் வாகன வசதி என்பன இதுவரை ஏற்படுத்தித் தரவில்லையென்பதால், மாகாண சபையின் கவனத்தை ஈர்பதற்காகவே அவர் இன்று சைக்கிளில் வந்தார் என்று தெரிய வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=115360&category=TamilNews&language=tamil
-
- 7 replies
- 651 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தமது விசாரணைக்கான ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இவ்விசாரணக்கு சரியான ஆதாரங்களை சரியான முறையில் சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதன் மூலம், எமது மக்களின் விடுதலைக்கான பாதையைத் திறப்போம். அன்பான கனடியத் தமிழ் உறவுகளே! ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்றுக் கொண்டு இருப்பது தமிழினப் படுகொலை தான் என்பதை நிரூபிப்பதற்கு எமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு இது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை சப யினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தமது விசாரணைக்கான ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இவ்விசாரணக்கு சரியான ஆதாரங்களை சரியான முறையில் சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதன் மூலம்இ எமது மக்களின் விடுதலை…
-
- 2 replies
- 327 views
-
-
கொழும்பு தெமட்டக்கொட விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுகின்றது. ஆனால் அதனை தடுக்க சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் முற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்புச் செய்தியாளரிடம் தெரிவித்தார். தெமட்டக்கொட விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதாக கடந்த யூலை மாதம் கொழும்பில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகளின் கூட்டத்தில் முறையிடப்பட்டுள்ளது. அதனையடுத்து அந்த வித்தியாலயத்திற்குச் செல்லும் சில அதிகாரிகள் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை நிறுத்த வேண்டும் என கூறிவருவதாக அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்ற…
-
- 0 replies
- 314 views
-