Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழ ஏதிலிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவரான சந்திரகாசன் தலைமையில் சென்னை மைலாப்பூரில் நடைபெற்று வரும் இரகசிய கலந்துரையாடலிற்கு சென்ற தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினைச் சேர்ந்த மாணவர்களை விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். இது குறித்து மாணவர் தரப்பில் இருந்து அறிந்த போது... தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாம்களைச் சேர்ந்தவர்களுக்கான கலந்துரையாடல் மைலாப்பூரில் நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்று என்ன நடக்கின்றது என்பதை அறிவதற்கு உள்ளே சென்றோம். அப்போது அங்கு காவல்துறை பாதுகாப்புடன் இரகசிய கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எங்களை கண்டதும் அங்கிருந்தவர்களது முகங்கள் இறுக்கமானதை அவதானிக்க முடிந்தது. எங்கள் பிரச்சினை குறித்து எங்களது …

  2. யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வளாகத்திற்குள் இந்தமுறை திருவிழாவின் போது இரண்டாவது தடவையாகவும் சட்டம் வளைந்து கொடுத்துள்ளது. ஆலயத்திற்கு வருபவர்களிற்கான பொது நடைமுறை என ஆலய நிர்வாகமும், மாநகரசபையும் இணைந்து கடைப்பிடித்து வரும் நடைமுறை இரண்டாவது தடவையாகவும் நேற்று மீறப்பட்டது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலய வளாகத்திற்குள் ஏற்கனவே மேர்வின் சில்வா வாகனத்தில் பிரவேசித்ததைப் போல, நேற்று வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வாகனத்தில் பிரவேசித்தார். நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள எப்.எம்மின் கலைகத்தை திறந்து வைக்க வந்த விக்னேஸ்வரன், ஆலயத்திருவிழாவிற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்புத்தடை பகுதியில் வாகனத்தை நிறுத்தாமல் உள்ளே பிரவேசித்தார். துவிச்சக்கர வண்டிகள் கூட…

  3. ஈரோடு அருகில் உள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்.SSM கல்லூரியில் நடைபெறும் மகளிருக்கான தொழில் முனைவோர் மாநாடு 22-08-2014அன்று நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கையைச் சேர்ந்த சிங்களப் பெண்தொழிலதிபர்கள் mrs.P.Rajini sulochana segara mrs.Vudarai fernando mrs.Hirandhi n karunadhi lake mrs.Pihipha mallika sammarakodige mrs.Ramya weerakoone mrs.Nilam samsudeen்ஆகியோர் இலங்கை பண்டாரநாயகா விமானநிலையத்தில் புறப்பட்டு Mahin langa என்ற விமானம் மூலம் மதுரைக்கு 21-08-2014 அன்று வந்திறங்கி பின்னர் தரைவழியாக குமாரபாளையம் வருகின்றனர். இலங்கையின் மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும் என தமிழகம் சட்டசபைத்தீர்மானத்தை உதாசீனப்படுத்தும் வகையில் இங்குள்ள தொழிலதிபர்களை இலங்…

    • 0 replies
    • 547 views
  4. மூன்று ஆலயங்களில் ஒரே நேரத்தில் திருட்டு; சுதுமலையில் சம்பவம் சுதுமலை முருகமூர்த்தி ஆலயம், சிவன் கோயில்களில் , பிட்டி வைரவர் ஆலயம் ஆகியன உடைக்கப்பட்டு பெறுமதியாக பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஆலய பூசகர் தெரிவிக்கையில், முருக மூர்த்தி ஆலயம் மற்றும் அயலில் உள்ள சிவன் ஆலயம் ஆகியன நேற்று மாலை 6 மணி பூஜை முடிந்தவுடன் பூட்டி விட்டு சென்று விட்டோம். இன்று காலை 5 மணிக்கு ஆலயத்திற்கு வந்த அடியார்கள் கோயில் உடைத்திருக்கும் தகவலை எம்மிடம் தெரிவித்தனர். உடனடியாக நாங்கள் வந்து பார்த்த போது மூலஸ்தான கதவுகளை உடைத்துக் கொண்டு உள்சென்றிருக்கிறார்கள் . முருகமூர்த…

  5. புங்குடுதீவு வைத்தியசாலைக்கு மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவி (Scanning Machine) கருணையுள்ளம் கொண்டவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக அவசியத் தேவையாகவிருந்த மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவியைப் பெற்றுத் தருமாறு புங்குடுதீவு வைத்தியசாலையின் வைத்தியர் திரு.சரவணபவனின் வேண்டுகோளுக்கிணங்க புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த திரு.திருமதி கனகரத்தினம் கனகம்மா குடும்பத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருமதி உஷா ரகுநாதன், உயிரியல் வைத்தியப் பொறியியலாளர் திருமதி சாந்தி, மருத்துவவியல் நிபுணர் டாக்டர் சரவணபவன், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் குணதாசன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். - See more at: http://onlineuthaya…

  6. (பெரியபோரதீவு,காங்கேயனோடை நிருபர்கள்) 18 வருடங்களுக்கு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ இனரால் மட்டக்களப்பு சித்தாண்டிப் பகுதியில் வைத்துக் கடத்தப்பட்ட ஹையேஸ் வேன் கொழும்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சமயம் ஏறாவூர் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எஸ்பி. பிரேமதிலக்க தெரிவித்தார். கம்பஹா - வெலிவேரியா பகுதியில் பாதையோரத்தில் வாகன விற்பனைச் சந்தையில் விற்பனைக்கிடப்பட்டிருந்த சமயம் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. வாகனத்தை விற்பனைக்கு வைத்திருந்தவர், வாகனப் பதிவுப் பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தவர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, வாகனத்தை விற்றதாகக் கூறப்படும் நபரை பொலிஸார்…

  7. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கத்தி' படத்துக்கான எதிர்ப்பு தொடர்பாக, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: " 'கத்தி' படத்தை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. லைக்கா நிறுவனத்தை எதிர்க்கிறார்களா அல்லது படத்தை எதிர்க்கிறார்களா? டெரரிஸ்ட், மல்லி, இனம் ஆகிய மூன்று படங்களை எடுத்திருக்கிறார் சந்தோஷ் சிவன். மூன்றையும் நாங்கள் எதிர்த்து இருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிகச் சிறந்த இயக்குநரோடு ஒளிப்பதிவாளராக பணியாற்றி கொண்டே இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்த படங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. சந்தோஷ் சிவன் என்ற ஒளிப்பதிவு கலைஞனோடு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால், அவரது…

  8. புலிப்பார்வை பட விழாவில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எங்களுக்குத் தெரியாமல் நடந்துவிட்டது. அதற்காக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் மதன் தெரிவித்துள்ளார். புலிப்பார்வைக்கு எதிராக மாணவர் அமைப்புகளும், தமிழ் ஈழ ஆதரவுக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்தப் படத்தில் ஏகப்பட்ட மாறுதல்களைச் செய்யப் போவதாக படத்தின் இயக்குநர் பிரவீண் காந்தி அறிக்கை விட்டுள்ளார். தெரியாம நடந்துடுச்சி.. அடிபட்ட மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்! - வேந்தர் மூவீஸ் மதன் இன்னொரு பக்கம், படத்தின் இயக்குநரும், பிரபாகரன் வேடத்தில் நடித்துள்ளவருமான எஸ் மதன் செய்தியாளர்களைச் சந்தித்து, படத்தில் ஆட்சேபணைக்குரிய ஒரு காட்சி கூட இருக்கா…

  9. கொழும்பில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற சுப்பிரமணியசுவாமி இலங்கையின் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பலரை சந்தித்து பேசியதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் கூறுகிறார். பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசங்களை பார்வையிடுவதுடன் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தையும் அவர் பார்வையிடவுள்ளதாக கொழும்பின் உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான எற்பாடுகள் இரகசியமாக மேற் கொள்ளப்படுவதாகவும், பொதுபலசேனவின் பொதுச் செயலாளர் அத்தே ஞானசார தேரரையும் சுப்பிரமணிய சுவாமி சந்திக்கவுள்ளதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிற…

  10. இலங்கையும் சீனாவும் தமக்கிடையே வலுவான உறவைப்பேணி வருகின்றமை தொடர்பில் பா.ஜ.க. தலைமையிலான இந்திய அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கொழும்பில் நடைபெறும் பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்டு சீன பிரதிநிதிகள் குழு எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு ஒரு நாடு குறித்து மாத்திரமே கவலையுள்ளது. அந்த நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழ்நாடு ஊடாக இந்தியாவுக்குள் ஊருடுவ இலங்கையைத் தளமாக பயன்படுத்துகின்றனர். இந்தியா இதுகுறித்து இலங்கைக்குத் தெரியப்படுத்தியுள்ளது. இலங்கை சீனாவுடன் கொண்டுள்ள வலுவான உறவுகள் குறித்தோ பொருளாதார வர்த்தக துறைகளில் அந்த நாடு இலங்கை…

    • 0 replies
    • 407 views
  11. சுப்பிரமணியம் சுவாமி இந்திய அரசியலின் கோமாளி. அவர் சொல்வதை கேட்கவேண்டிய அவசியம் எமக்கில்லை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்,பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பாக சுவாமி தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும், இலங்கை அரசு என்ன செய்யவேண்டும் என்பதை சுப்பிரமணிய சுவாமி தீர்மானிக்க முடியாது. அவர் ஒரு வெளியாள். அவர் இந்திய அரசியலில் ஒரு கோமாளி. இதனால் அவர் சொல்வதையெல்லாம் முக்கியமாகக் கருத வேண்டிய அவசியமில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநித…

  12. -பொ.சோபிகா வசாவிளான் மேற்கு பகுதி தொடக்கம் அச்சுவேலி வரையான பிரதேசங்களில், சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உபகரணங்கள் மூலம் இராணுவத்தினரால் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுத் தலைவர் எஸ்.சஜீவன் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வலி.வடக்கு மக்களை வளலாயில் குடியேற்ற இராணுவத்தினர் முன்னெடுக்கும் நடவடிக்கையை வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு வன்மையாக கண்டிக்கின்றது. வளலாய் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களே, இன்னும் சொந்தக் காணிகளில் குடியேற்றப்படவில்லை. அவ்வாறு இருக்கும் நிலையில், வலி வடக்கு மக்களை எவ்வாறு வளலாய்ப் பகுதியில் குடியேற்ற முடியும். உயர் …

  13. தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் குடும்பத்தில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்களை சட்ட விரோதமானவையாகக் கணிக்கத் தவறியமையால் இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் 20 சதவீதத்தால் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த11 வயதுச் சிறுமி இலங்கைக் கடற்படையைச் சேர்ந்தவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் பற்றிய கவனத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையின் புள்ளிவிபரங்களின் படி பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளன. அதாவது கடந்த இரண்டு வருடங்களில் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் சம்பந்தமான வழக்குகள் 4,393 ஆகவும் 2010-2012 காலப்பகுதியில் பாலியல் …

  14. யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னாள் இன்று புதன் கிழமை பகல் 10.15 மணியளவில் முற்போக்க தமிழ் தேசிய கட்சயின் ஏற்பாட்டில் இலங்கை சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடை பெற்றது. பலவேறு சுலோகங்களையும் தாங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணப்பட்டார்கள். முற்போக்க தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எஸ் விஜயகாந் தலைமையில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஐம்பது பேர் வரையில் கலந்துகொண்டாhகள். ஆர்ப்பாட்ட முடிவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் ஜனாதிஜபதிக்க முகவரியிட்ட மகஜர் ஒன்றும் செயலாளர் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களினால் கையளிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்…

  15. சுப்ரமணியன் சுவாமி என்ற ஒரு கோமாளியை இங்கே அழைத்து வந்து, அவரை இந்திய அரசின் பிரதிநிதி என்று, அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் உருவகப்படுத்தி காட்ட, இலங்கை அரசாங்கத்தால் முடியுமானால், இந்திய அரசின் கதாநாயகனான நரேந்திர மோடியை சந்தித்து, 13ம் திருத்தம் தொடர்பாகவும், அதை மென்மேலும் விரிவாக்குவது தொடர்பாகவும் உரையாட தமிழ் தேசிய கூட்டமைப்பால் முடியும். இந்தியாவில் ஒரு நகரசபை உறுப்பினராக கூட மக்களின் வாக்குகளை பெறாத, பெற முடியாத சுப்பிரமணிய சுவாமிக்கும், இங்கே அவரை அழைத்து வந்து,ஊதிப்பெருப்பித்து காட்டி நாடகமாடியவர்களுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய பயணம் நல்ல ஒரு சாட்டையடி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இ…

  16. சுப்ரமணியன் சுவாமி என்ற ஒரு கோமாளியை இங்கே அழைத்து வந்து, அவரை இந்திய அரசின் பிரதிநிதி என்று, அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் உருவகப்படுத்தி காட்ட, இலங்கை அரசாங்கத்தால் முடியுமானால், இந்திய அரசின் கதாநாயகனான நரேந்திர மோடியை சந்தித்து, 13ம் திருத்தம் தொடர்பாகவும், அதை மென்மேலும் விரிவாக்குவது தொடர்பாகவும் உரையாட தமிழ் தேசிய கூட்டமைப்பால் முடியும். இந்தியாவில் ஒரு நகரசபை உறுப்பினராக கூட மக்களின் வாக்குகளை பெறாத, பெற முடியாத சுப்பிரமணிய சுவாமிக்கும், இங்கே அவரை அழைத்து வந்து, ஊதிப்பெருப்பித்து காட்டி நாடகமாடியவர்களுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய பயணம் நல்ல ஒரு சாட்டையடி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் …

    • 0 replies
    • 329 views
  17. அனுராதபுரம் நகரில் சுற்றுலாப் பயணிகளிடம் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டவர்களின் பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச்செல்வதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர் வெளிநாட்டு பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.http://www.pathivu.com/news/33303/57//d,article_full.aspx

    • 0 replies
    • 298 views
  18. புலம்பெயர் தமிழர்களாலேயே புலிகள் மீளெழும் அபாயம்; யாழ். கட்டளைத் தளபதி news புலம்பெயர் தமிழர்களிடம் தமிழீழம் தொடர்பான சிந்தனைக்கோட்பாடு இன்னமும் அழியாமல் இருப்பதால் அவர்கள் மூலமாக விடுதலைப்புலிகள் இயக்கம் மீளெழுச்சி பெறலாம் என்ற அச்சநிலை உள்ளது என யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்று வரும் பாதுகாப்புக் கருத்தரங்கின் இரண்டாம் நாள் அமர்வான நேற்று மேற்கண்டவாறு தெரிவித்தார். தீவக நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதிலும் முன்னெடுத்துச் செல்வதிலும் ஏற்படக்கூடிய புதிய சவால்களை சந்திப்பதற்கான தரைப்படையொன்றின் வழிமுறைகள் என்ற தலைப்பில் மேஜர் ஜெனரல் உதய பெரேரா உரையாற்றினார். இதன்போது கருத்தரங்கில் பங்கேற்ற பாகிஸ்தானிய முன்னாள…

  19. முஸ்லிம் தீவிரவாதம் குறித்து கண்காணிக்கப்படும் - கோதபாய - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 20 ஆகஸ்ட் 2014 முஸ்லிம் தீவிரவாதம் குறித்து கண்காணிக்கப்படும் - கோதபாய - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- முஸ்லிம் தீவிரவாதம் குறித்து கண்காணிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் சில குழுக்கள் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் அவை குறித்து கண்காணிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சிங்கள தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கி…

  20. இலங்கை விசாவழங்க மறுத்தாலும் யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை நடைபெறும்: நவநீதம்பிள்ளை:- 20 ஆகஸ்ட் 2014 இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்தாலும் யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை நடைபெறும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விசா மறுப்பு அறிவிப்பு குறித்து பிபிசியிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ள அவர் ஸ்கைப், செய்மதிபுகைப்படங்கள், இணைய தொலைபேசிகள் போன்ற நவீன வசதிகளை பயன்படுத்தி தனது குழுவால் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். சுpரியாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும் தனது குழுவினர் நம்பகத்தன்மை வாய்ந்த அறிக்கையொன்றை முன்வைத்துள்ள…

  21. சர்ச்சைக்குள்ளாகியுள்ள கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தீபாவளிக்கு கத்தி மற்றும் புலிப்பார்வை படங்கள் வெளியாகின்றன. இவற்றில் தமிழர் கலாசாரம், தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடந்த போர் பற்றி நிலவும் உணர்வுகளை மோசமாக சித்தரித்துள்ளனர். கத்தி படத்தை ஐங்கரன் இன்டர்நெஷனல் சார்பில் கருணாமூர்த்தி, லைகா தயாரிப்பாளர் கரண் தயாரிக்கின்றனர், இதில் இலங்கையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள், கணவர்களுடன் அமைதியாக வாழ்கின்றனர். தமிழர், சிங்களவர் …

    • 0 replies
    • 369 views
  22. இந்தியாவால் இலங்கையின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட ஒரு தீவாகிவிட்டது கச்சத்தீவு. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு அனுகூலமாகவும் இலங்கை இனப்பிரச்சினையில் தமிழர்களின் பிடி தளரவும் கச்சத்தீவும் முக்கிய காரணமாக இருக்கிறது. தமிழகத்தின் ஒருபகுதியாக இருந்த கச்சத்தீவை எப்படியாவது மீண்டும் மீட்டுவிட வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அது கேலிக்குரியதாகவே மத்திய ஆட்சியாளர்களால் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நீர் அறிவியல் நோக்கில் கச்சத்தீவைச் சுற்றி நிகழ்ந்துவரும் மாற்றங்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது, உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களுக்கு முக்கியமான ஒன்று. கைவிட்டுப்போய் 40 ஆண்டுகள் வரலாற்று ஆவணங்களின் படி, கச்சத்தீவு, ராமநாத…

  23. அன்புள்ள அண்ணன் 'செந்தமிழன்' சீமான் அவர்களுக்கு வணக்கம். "லட்சம் பிரச்சினையோட போராடிகிட்டிருக்கேன், நீ வந்துட்ட கத்தி சுத்தின்னு." என்று சினத்தோடு நீங்கள் சீறிக் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் தவிர்க்க இயலாத சூழலில் சில கேள்விகளை "கோடானுகோடி தம்பி"களில் ஒருவரனாய் எழுப்ப வேண்டியது இருக்கிறது.. "நீ யார் என்னை கேள்வி கேட்கிற.. நான் மட்டும்தான் கிடைத்தேனா?" என்று இதற்கும் நீங்கள் சீறிவிட வேண்டாம்...ஏனெனில் நிகழ்வுகள் உங்களைச் சுற்றியதானது.. உங்களுடன் தொடர்புடையது மட்டுமே என்பதால் இக்கேள்விகள்.. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை புலிச் சீருடையிலும் கையில் துப்பாக்கியுமாக புலிப்பார்வை திரைப்படம் சித்தரிப்பதை நீங்கள் அப்படியே ம…

    • 0 replies
    • 570 views
  24. இந்தியா சென்று திரும்பிய பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாகவும் இவர் எபோலா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்டியைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்ததாகவும், இவருக்கு எபோலா வைரஸ் தொற்றியிருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதால் பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துளு;ளனர். குறித்த பெண்ணின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவரது சவப்பெட்டி சீல் வைக்கப்பட்டு, எட்டு அடி ஆழ்குழியில் புதைக்கப்பட்டுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.