ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
பணத்திற்காக உடலுறுப்புகளை கடத்தி விற்க்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறிவருகிறது:- 18 ஆகஸ்ட் 2014 பணத்திற்காக உடலுறுப்புகளை கடத்தி விற்க்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறிவருவதாக அமெரிக்க செய்தித்தாளோன்று தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கிலிருந்து சிறுநீரகத்தை பெறுவதற்காக பலர் இலங்கை செல்வது தனது விசாரணைகளின் போது தெரியவந்ததாக அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது. உடலுறுப்புகளை கடத்தி விற்கும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என சந்தேகிக்கப்படும் முன்னாள் காப்புறுதி முகவரான அவிகட் சன்டௌர் என்பவரின் ஆலோசனைக்கு ஏற்ப இஸ்ரேலை சேர்ந்த ஓப்ரா டொரின் என்பவர் சிறுநீரகங்களை பெறுவதற்காக இலங்கை சென்றார். சன்டௌர் தான் இவ்வாறு சிறுநீரகங்களை பெறுவதற்காக பலரை …
-
- 1 reply
- 647 views
-
-
யாழில், வாள்வெட்டு போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தததாக கூறப்படும் கிருஸ்ணா என்ற குழுவைச் சேர்ந்த 4 பேரை கைதுசெய்ததாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. தொடர்பில் அவர் மேலும் தெரியவருகையில், யாழ்.மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சமூக விரோதச் செயல்களில் கிருஷ்ணாக் குழு ஈடுபட்டு வருவதாகவும் அந்தக் குழு மானிப்பாய் பகுதியை மையமாக வைத்து இயங்கி வருவதாகவும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இந்நிலையில், வியாழக்கிழமை (14) அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸார், மானிப்பாய் சந்தைக்கருகில், சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களில் வாள்களுடன் 8 பேர் நிற்பதை அவதானித்தனர். மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிகப் பொலிஸார் …
-
- 15 replies
- 941 views
-
-
சிகிச்சை பெறுவதாயின் தேசிய அடையாள அட்டை கட்டாயம் news இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாயின் இனி தேசிய அடையாள அட்டை சமர்பிக்கவேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளது. சார்க் பிராந்திய வலய நாடுகளில் வாழும் மக்களின் ஒரே விதமான தோற்றத்தைக் கொண்டுள்ளமையால் இலங்கை வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றதுடன் வைத்தியசாலை நலன்களை சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். எனவே வெளிநபர்கள் உள்நாட்டு மருத்துவ சேவையின் நன்மைகள் அனுபவிப்பதனை தடுக்கும் நோக்கில் எதிர்காலத்தில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அனைவரும் தங்களது தேசிய அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. என அவர…
-
- 0 replies
- 524 views
-
-
மலையக மக்களிடம் இருந்து கோதுமை ரொட்டியைப் பிரிக்க அரசாங்கம் முயற்சி! [Monday 2014-08-18 07:00] மலையக மக்களால் அன்றாடம் உண்ணப்படும், கோதுமை ரொட்டிக்குப் பதிலாக, அரிசியைப் பயன்படுத்தப் பழக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மலையகத் தோட்டப்புறங்களில் மக்களின் அன்றாட உணவுப் பழக்கத்தில் கோதுமை மா முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த உணவுப் பழக்கத்தை மாற்றியமைப்பதற்கான புதிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை தோட்டங்கள் தோறும் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கோதுமை மாவுக்குப் பதிலாக அரிசி மாவை ஊக்குவிக்கும் திட்டம் பற்றி விவசாயத்துறை அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தமிழோசையிடம் விளக்கமளிக்கையில், எமது தோட்டத்தொழிலாளர்கள் கோதுமை மா…
-
- 0 replies
- 557 views
-
-
விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வடக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஐ.நாவிடம் கோரிக்கை:- 18 ஆகஸ்ட் 2014 விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வடக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஐ.நாவிடம் கோரிக்கை விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வடக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமைமீறல்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் பின்னணியில், இதனை விடவும் விரிவான வகையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள், ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவையின்…
-
- 0 replies
- 283 views
-
-
இந்த ஆண்டு இறுதிக்குள் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டைச் செய்து விடுவோம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வர்த்தகர்கள் மத்தியில் உறுதியளித்துள்ளார். கொழும்பில், கப்பல் முகவர்களின் சங்கத்தில் உரையாற்றிய அவர், சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்த சாத்திய ஆய்வுகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. உடன்பாடு கையெழுத்திடுவது மட்டும் தான் எஞ்சியுள்ளது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு இறுதிக்குள் அது கையெழுத்திடப்பட்டு விடும் என்று உறுதியளித்துள்ளார்.http://www.pathivu.com/news/33242/57//d,article_full.aspx
-
- 0 replies
- 284 views
-
-
இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடுமென ஐரோப்பிய நிறுவனங்கள் ஊகம்:- 17 ஆகஸ்ட் 2014 இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடுமென ஐரோப்பிய நிறுவனங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன. இலங்கையுடனான உடன்படிக்கைகளின் போது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படல் என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டு உடன்படிக்கைகள் தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய நிறுவனங்களின் இந்த நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஏற்றுமதி கடன் முகவர் நிறுவனங்கள் இவ்வாறு புதிய நிபந்தனைச் சரத்துக்களை உடன்படிக்கைகளில் உள்ளடக்கியுள்ளன. ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் அப்போது சில ஏற்பாடுகள் செய்யப்படும் …
-
- 1 reply
- 454 views
-
-
வரட்சியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட அநேகமான பகுதிகளில் மழை பெய்துவருகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் நேற்றுமுதல் மழை பெய்து வருகின்றது. இதேவேளை, மாலை வேளையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.http://www.pathivu.com/news/33240/57//d,article_full.aspx
-
- 0 replies
- 343 views
-
-
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை சிறார் போராளியாக சித்தரிக்கும் புலிப்பார்வை திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எதிர்ப்பு முழக்கம் எழுப்பியதற்காக மாணவர்கள் மீது கொடுந் தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து இன்று காலை 10 மணியளவில் பொள்ளாச்சி காந்தி சிலை முன்பாக தமிழ்நாடு மாணவர் மன்றம் சார்பாக "உருவபொம்மை எரிப்பு போராட்டம்" நடை பெற்றது . இதில் கலந்து கொண்ட மாணவர்கள் மாணவர்களை தாக்கிய 'சிங்கள கைக்கூலி 'எஸ்.ஆர்.எம்.பச்சைமுத்துவை கைது செய் என்ற கோசங்களை எழுப்பினர். உருவப்பொம்மை எரிப்பதற்கு முன்னர் மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துவிட்டனர். http://www.pathivu.com/news/33235/57//d,article_full.aspx
-
- 0 replies
- 324 views
-
-
விஜய் - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள கத்தி படத்துக்கு தன் அமோக ஆதரவைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சீமான். மேலும் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமா உலகில் இது பெரிய ஆச்சர்யமான விஷயமாகப் பார்க்கப்பட வில்லை. ஆனால் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் மத்தியில் இது பெருத்த அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. Read more at: http://tamil.oneindia.in/movies/news/seeman-supports-kaththi-sings-lycca-s-next-208046.html கத்தி படத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள சீமான், அந்தப் பட நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், லைகா நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையு…
-
- 177 replies
- 14.6k views
-
-
கின்னஸ் சாதனைக்காக திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா அவர்கள் தொடர்ந்து 12 மணித்தியாலங்கள் எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளார். 'பண நோட்டு இல்லாத உலகம்' என்ற தலைப்பின் கீழ் தொடர்ந்து 12 மணித்தியாலங்கள் எழுத்தி கின்னஸ் சானை ஒன்றினை நிலை நாட்டவுள்ளார். இம்மாதம்; 30 ஆம் திகதி திருகோணமலை சூசையப்பர் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. கிழக்கிலங்கை தமிழ் ஊடகவியலாளர் அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் நடைபெறவுள்ள கின்னஸ் சாதனை நிகழ்வுக்கு, பேராதனைப பல்கலைக் கழகம், கிழக்குப் பல்கலைக் கழகம், யாழ் பல்கலைக் கழகம், போன்றவற்றிலிருந்து பேராசிரியர்களும், ஓய்வு நிலை பேராசிரியர்களும் கலந்து கலந்து கொண்டு இதனை மேற்பார்வை செய்யவுள்ளதாகவும் அனிஸ்டஸ் - ஜெயராஜா மேலும் தெரிவிததார். தி…
-
- 1 reply
- 495 views
-
-
அரசாங்கத்திற்கு எதிரான அமைச்சர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகளை விமர்சனம் செய்து வரும் அமைச்சர்கள் தொடர்பில் அறிக்கை தயாரிக்குமாறு கோரியுள்ளார். விரைவில் தேசிய ரீதியான தேர்தல் ஒன்று குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால் ஜனாதிபதி இவ்வாறான ஓர் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில அமைச்சர்கள் பகிரங்கமாகவே அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, சில அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சியி…
-
- 0 replies
- 305 views
-
-
தென்னிந்தியாவில்; குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கையர் குறித்து ஆதாரங்களை வழங்குமாறு இந்தியா மலேசிய அதிகாரிகளை கோரியுள்ளது. இலங்கையரான முகமது சுலைமான் என்ற நபர் தொடர்பாக இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு மலேசியாவிடம் விபரங்களை கோரியுள்ளதாக தெரிவி;க்கப்டுகிறது. குறிப்பிட்ட புலனாய்வு பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரிகள் சமீபத்தில் மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்தியாவில் உள்ள தூதரகங்களை தாக்குவதற்கு இலங்கையில் திட்டமிடப்பட்டதாக மலேசியா அளித்த புலனாய்வு தகவல்களின் பின்னரே இந்திய அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட சதித்திட்டம் குறித்து தெரிய வந்ததாகவும் குறிப்பிட்ட நபர் கைதுசெய்து செய…
-
- 0 replies
- 485 views
-
-
முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறையையும், தமிழ் மக்கள் மீது இனவாதத்தையும் பொதுபல சோனா போன்ற அமைப்புக்கள் ஏவி வருகின்ற நிலையில் சகல மதங்களையும் மேன்மையாக மதிக்கும் என்னைக் கைது செய்யக் கோருவது எந்த வகையில் நியாயமாக அமையும்? என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசப் கேள்வி எழுப்பியுள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப்பை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கூறியிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாட்டையும் படையினரையும் நான் யாருக்கு காட்டிக் கொடுத்தேன் என்பதை மேற்படி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இன்று முஸ்லிம் ம…
-
- 0 replies
- 320 views
-
-
-ஏ.எம்.ஏ.அப்துல் பரீத் கிண்ணியா திருமலை வெள்ளைமணல் கரிமலையூற்று பள்ளிவாயல், நேற்று சனிக்கிழமை (16) இரவு முற்றாக உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் அதனை பார்வையிடுவதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (17) குறித்த இடத்திற்கு சென்ற போது, இராணுவத்தினர் தம்மை செல்லவிடாது தடுத்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு குறித்த பிரதேசத்தில் கடும் மழை பெய்ததாகவும் இந்த நேரத்தில் பள்ளிவாயல் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் கூறுகின்றனர். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு குறித்த பள்ளிவாயலின் கோபுரம் வழமையாக தென்படும் நிலையில், நேற்று இரவு முதல் கோபுரம் தெரியவில்லை என பொதுமக்களிடம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து குறித்த இடத்திற்கு பொதுமக்களும் பி…
-
- 0 replies
- 384 views
-
-
கொலன்னாவை, சிங்கபுர பிரதேசத்தில், கடைக்கு சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுவனொருவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர். நீல நிற வாகனத்தில் வந்த சிலரே, இந்த சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும், காயமடைந்த சிறுவனுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/122608-16-----.html
-
- 0 replies
- 343 views
-
-
சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இராகவேந்திரா மடத்திலேயே இன்று காலை மழை வேண்டி யாகம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாணத்தில் சீரான மழை பெய்யாத காரணத்தினால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் கால்நடைகளும் குடிதண்ணீருக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே சைவ மகா சபையின் ஏற்பாட்டில் மழை வேண்டிய இன்று காலை 7.30 மணிமுதல் நல்லூர் புண்ணிய பூமியில் யாகம் நடத்தப்படவுள்ளது. சிவத்தமிழ் அர்ச்சகர்கள் செந்தமிழ் திருமறையில் இந்த யாகத்தை நடத்துவார்கள். இந்த யாகத்தில் விரும்பிய அடியார்கள் கலந்து கொள்ள முடியுமென்று சைவ…
-
- 5 replies
- 517 views
-
-
அதிகாரப் பகிர்வின் ஊடாகவே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அர்த்தமுள்ள ஓர் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமானது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா தெரிவித்துள்ளார். யுத்த நிறைவின் பின்னரான சூழ்நிலைகளை சரியான முறையில் பயன்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளினதும் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி இலங்கைத் தமிழகர்களின் உரிமைகளை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளா…
-
- 5 replies
- 436 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்துக்கான பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்புச் சேவைகள் இன்று சனிக்கிழமையுடன் பிரதம செயலாளர் விஜயலட்சுமி றமேஸினால் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கடந்த 11ஆம் திகதி வடக்கு மாகாண பிரதம செயலாளர் முதலமைச்சர் அலுவலகத்துக்கு தொலை நகல் ஒன்றை அனுப்பிவைத்திருந்தார். அதில் குறித்த சேவைகளை இரத்து செய்வது பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டு இருந்தது. நேற்று 15ஆம் திகதியுடன் இச்சேவைகள் தொடர்பான உடன்பாடு முடிவடைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு குறித்த நான்கு நாள் கால அவகாசம் போதாது என்றும் செப்ரெம்பம் 30ஆம் திகதி வரை தொடர்ந்தும் குறித்த சேவைகளை வழங்கி உதவுமாறும் பிரதம செயலாளருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்த…
-
- 2 replies
- 395 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு- விடுதலைப் புலிகள் தமது சர்வதேச கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு ஜரோப்பிய நாடுகள் உதவுவதாக அமைச்சர் அனுரபிரிய தர்ஷன யாப்பா குற்றம்சாட்டியுள்ளார். ஜரோப்பிய நாடுகள் எப்போதும் ஆசியா நாடுகளை அழித்து உலகில தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கிலேயே செயற்பட்டுவருகின்றன. இந்த நாடுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொடர்ந்தும் தாக்குவதிலும்-- நாட்டின் அபிவிருத்திக்கு தடைகளை விதிப்பதிலுமே அக்கறையாகவுள்ளன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது அமெரிக்கா போன்று அந்த நாடுகளுக்கும் விருப்பமில்லாத விடயம்- தற்போது தமது இலக்கை அடைவதற்காக ஐ.நா ஊடாக இவை அழுத்தத்தை கொடுக்கின்றன என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/G…
-
- 1 reply
- 367 views
-
-
குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் ஜே.வி.பியும் போட்டியிடுமென அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் லால் காந்த தெரிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் கட்சியின் உறுப்பினரில்லாத வெளியால் ஒருவரும் நிறுத்தப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால் அவர் மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பார் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது, ரணில் போட்டியிட்டால் இந்த வாய்ப்புகள் இல்லாமல் போகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110651/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 258 views
-
-
-
இனவாதத்தைப் பொலிஸாரே தூண்டி வருகின்றனர் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பொலிஸ் பேச்சாளர், பல்கலைக்கழக மாணவன் தன்னைத் தானே தாக்கிக் கொண்டார் என்று அறிக்கை கொடுத்ததையும் சாடியுள்ளது. 'சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரான சந்திரகுமார் சுதர்சன் பல்கலைக்கழக வளாகத்தினுள் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவேளையில், பயங்கரவாதக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர். அத்துடன் அவரை ஒரு பயங்கர வாதியாகச் சித்திரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது கவலையளிப்பதுடன் கண்டனத்துக்குரியது' என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச் சந்திரன் தெரிவித்துள்ளார். இது …
-
- 0 replies
- 224 views
-
-
எல் நினோ கால நிலை மாற்றத்தினால் சுனாமியை விடப் பேரழிவு ஏற்படும்! - இலங்கைக்கு எச்சரிக்கை [sunday 2014-08-17 09:00] தற்போதைய கால நிலை மாற்றத்தினால்,2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விடவும் மோசமான அழிவுகள் ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இறுதியில் இவ்வாறு பாரிய இயற்கைப் பேரழிவு ஒன்று இடம்பெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக உலக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எல் நினோ என்ற இந்த கால நிலை மாற்றம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளை பாதிக்கும். இதனால் ஆசிய கண்டத்தின் இலங்கை, இந்தோனேசியா, இந்தியா போன்ற நாடுகளின் வெப்பநிலை உயர்ந்து பாரியளவில் வரட்சி ஏற்படக் கூடும். தென் அமெரிக்க நாடுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும். காலந…
-
- 0 replies
- 476 views
-
-
தம்புள்ளை விபத்தில் 28 பேர் படுகாயம் ஞாயிற்றுக்கிழமை, 17 ஓகஸ்ட் 2014 09:29 தம்புள்ளை, இத்தாமுலுவே எனுமிடத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற பெற்ற விபத்தில் இராணுவத்தினர் மூவர் உட்பட 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். இராணுவ டிரக்வண்டியும் தனியார் பஸ்ஸொன்றுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/122496--28-.html
-
- 0 replies
- 293 views
-