Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் இரு குழுக்களுக்கிடையே மோதல் : ஒருவர் படுகாயம்! யாழ்.பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை (16) மாலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தும்பளையைச் சேர்ந்த தெய்வேந்திரன் ஸ்ரீரங்கன் (வயது 22) என்பவரே படுகாயமடைந்துள்ளார். இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவரைக் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக தெரிவித்தனர். மேலும், இந்தக் கைகலப்புச் சம்பவத்தில் யாழ் - கொழும்பு தனியார் பஸ் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news…

    • 0 replies
    • 437 views
  2. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்திவிட்டார் என்று கடுமையாக அவர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ள இலங்கை அரசு, புதிய ஆணையாளர் மீது தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இலங்கை மீதான விசாரணை தொடர்பில் ரொய்ரர் செய்திச் சேவைக்கு நவநீதம்பிள்ளை கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் இலங்கைக்குச் செல்லாமலேயே விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்றும், போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு வெளியேதான் அதிகளவு சாட்சிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணைகள் அண்மையில் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஒரு விவகாரம் குறித்து நவநீதம்பிள்ளை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவது பக்கச்ச…

    • 6 replies
    • 786 views
  3. ஜெனிவாவில் வரும் ஒக்ரோபர் மாதம் கூடவுள்ள ஐ.நா மனித உரிமைகள் குழுவின் 112வது கூட்டத்தில், போரின் போது, பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக நடத்தப்படும் சிறிலங்கா இராணுவ நீதிமன்ற விசாரணையின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் கேள்விகள் எழுப்பப்படவுள்ளன. ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்தில், ஐ.நா மனித உரிமைகள் குழுவின் 112வது கூட்டம், வரும் ஒக்ரோபர் 7ம் நாள் தொடக்கம், 31ம் நாள் வரை நடக்கவுள்ளது. இந்த அமர்வில், சிறிலங்கா, புருண்டி, ஹெய்டி, மோல்டா, மோன்ரெனிக்ரோ, மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர்பான அறிக்கைகள் பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. சிறிலங்கா தொடர்பான வாதம், ஒக்ரோபர் 7ம், 8ம் நாள்களில் நடக்கவுள்ளது. சிவில் மற்ற…

    • 0 replies
    • 498 views
  4. வடமாகாணசபையினை வெறும் பெயரளவிலான அமைப்பாக வைத்திருக்கும் அரசினது நிகழ்ச்சி நிரல் வேகமாக அரங்கேறி வருகின்றது. அவ்வகையில் நியதிச்சட்டங்கள் உள்ளிட்ட நிதி விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் , அமைச்சு செயலாளர்களிற்கு நேற்று வடமாகாண முதலமைச்சரினால் நடத்த ஏற்பாடாகியிருந்த பயிற்சிப்பட்டறை ஆளுநரது சதியால் நின்று போயுள்ளது. அவசர அவசரமாக திருகோணமலையில் ஏற்பாடாகியிருந்த மற்றொரு பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ள ஆளுநர் பிரதம செயலாளர் மற்றும் அமைச்சு செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரிற்கும் பணிப்புரை விடுத்திருந்தார். இப்பயிற்சிப்பட்டறை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஏற்பாடாகி நேற்று மதியம் வரை நீடித்திருந்தது. ஆளுநரது பணிப்பினையடுத்து வியாழன் மாலையே பிரதம செயலாளர் மற்றும் …

    • 0 replies
    • 794 views
  5. பாப்பரசரின் மடுப் பயணத்தை குழப்பும் சதித்திட்டம் தான் மர்மவிமானம்! கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் போது, மடுத் திருத்தலத்துக்கும் பயணம் செய்வார் என்பது உறுதியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற மடுத்திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவில், திருப்பலி ஒப்புக்கொடுத்து உரையாற்றிய, கர்தினால் மல்கம் ரஞ்சித், பாப்பரசர் பிரான்சிஸ் மடுத் திருத்தலத்துக்கு வருவார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். வரும் வரும் ஜனவரி 13ம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும், பாப்பரசர், மறுநாள் காலையில், காலிமுகத்திடலில், ஆராதனை நடத்துவார். அதையடுத்து மடுத் திருத்தலத்துக்கு செல்வதற்கு ஏற்பாடாகியுள்ளது. ப…

    • 0 replies
    • 354 views
  6. "இங்கு நடந்தது இனப் படுகொலையே!" http://www.ctr24.com/archive/09082014-0225-அரசியல்-களம்-aug-08-2014-tna-mp-suresh-premachandran

    • 0 replies
    • 327 views
  7. இலங்கை இராணுவத்தினில் அண்மையினில் இணைந்திருந்து மரணமடைந்த தமிழ் யுவதியின் மரணம் தொடர்பினில் குடும்பத்தவர்களிடையே பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையினில் அவசர அவசரமாக படைத்தரப்பு பத்திரிகையாளர் மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடத்தியுள்ளது. ஓட்டுசுட்டான் செல்வபுரத்தில் பிறந்த பிரசாத் அஜந்தா (வயது 22) என்பவரே படையினில் இணைந்து பலாலியினில் ஆயதப்பயிற்சி நடவடிக்கையினில் ஈடுபட்டிருந்த வேளை நோய்வாய்ப்பட்டதாக கூறி யாழ்.போதனாவைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையினில் உயிரிழந்திருந்தார்.பின்னர் அவரது சடலம் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனிடையே அவரது மரணம் தொடர்பினில் பல கதைகள் பேசப்பட்டு வந்திருந்த நிலையினில் படையினில் வறுமை காரணமாக இணைந்து கொண்ட ய…

    • 8 replies
    • 1.1k views
  8. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியிலிருந்நு இராணுவத்தில் இணைந்த பெண் சுகயீனம் காரணமாக நேற்று இறந்ததாக அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரசாத் அஜந்தா என்ற பெயருடைய இந்த பெண் 1996 புரட்டாதி 9 ல் செல்வபுரத்தில் பிறந்த இவர் 22.05 2014 அன்று இராணுவத்தில் இணைந்துள்ளார். குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை சுகயீனம் காரணமாக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.ஆனால், படையில் இணையும் போது மிகுந்த சுகதேகியாக இருந்த இவர் உயிரிழந்தமையில் சந்தேகம் நிலவுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணிற்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையுள்ளம…

    • 16 replies
    • 1.7k views
  9. மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையை கைது செய்யுமாறு, பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். காணாமல் போதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியமளிக்கப் போவதில்லை என பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அண்மையில் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்தக் கருத்து நாட்டுக்கு எதிரானது நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையிலானது எனவும் ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். பேராயரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமை நாட்டுக்கு இழைக்கும் துரோகமாகும் என அவர் தெரிவித்துள்ளார். பேராயர் இராயப்பு ஜோசப் அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் எதிராக உள்நாட்டு ரீதியிலும், வெளிநாட்டு ரீதியிலும் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்…

  10. சுன்னாகம் நகரப் பகுதியை அழகு செய்யும் வகையில் மின்கம்பங்களுக்கு அருகில் வைக்கப்பட்ட பூச்சாடிகள் திருடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இவை திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பூச்சாடிகளைச் சுன்னாகம் பகுதி இராணுவத்தினர் சுன்னாகம் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து கடந்த புதன்கிழமை இரவு வைத்தனர். இவ்வாறு வைக்கப்பட்ட பூச்சாடிகளில் சிலவே திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். http://onlineuthayan.com/News_More.php?id=516813336516474581

  11. இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி இலங்கை வருகைதரவுள்ளார். சீன ஜனாதிபதியொருவர் முப்பது வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியல் பிரமுகர்களை அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது கட்டத்தையும் ஆரம்பித்துவைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/122400-2014-08-16-05-59-05.html

  12. இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, கொழும்பிலுள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தலைமையில் இந்த மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. (படப்பிடிப்பு - ஷண்) http://tamil.dailymirror.lk/--main/122362-2014-08-15-12-14-20.html

  13. மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் டைனமைற் வெடி பொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 500 கிலோ விள மீன்கள் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய மண்ணெண்ணெய் ஊற்றி அழிக்கப்பட்டது. (படங்கள்: எஸ்.றொசேரியன் லெம்பேட்) http://tamil.dailymirror.lk/--main/122484-500---.html

  14. நல்லூர் திருவிழாவை முன்னிட்டு ஆலய சூழலில் வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு கண்காட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளது. 'சூழலியல் விவசாயத்தை நோக்கி' என்னும் கருப்பொருளில் அமைந்த இந்தக் கண்காட்சியை நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலையின் விளையாட்டு மைதானத்தில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று சனிக்கிழமை நாடாவெட்டி ஆரம்பித்து வைத்தார். சேதனைப் பசளைகள், மண் இதமாக்கிகள், யாழ். மாவட்டத்தின் நீர்வளங்கள், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நீர்ப்பாசன முறைகள், விவசாயச்சூழலில் நீர் மாசடைவதைத் தடுக்கும் வழிகள், உயிரியல் முறையில் பீடைகளைக் கட்டுப்படுத்தும் முறைகள், தாவரப் பீடை நாசினிகளின் தயாரிப்பு, அருகிவரும் பாரம்பரிய நெல் இனங்க…

  15. வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, குருணாகல் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கதிரேசன் ஆலய பாற்குட பவனியில் இணைந்துகொண்டு பாற்குடம் தூக்கியுள்ளார். நாட்டுக்கு நலன் வேண்டி இந்த பாற்குட பவனி கடந்த வியாழக்கிழமை 14 ஆம் திகதி நடத்தப்பட்டது. இந்த பாற்குட பவனியில் 500 பெண்கள் கலந்து கொண்டனர். வேட்டி, வேஷ்டி கட்டி தலைபாகை அணிந்திருந்த வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாற்குடத்தை தலையில் சுமந்து ஆலயத்திற்கு சென்றுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/122442-2014-08-16-10-19-33.html

  16. கரவெட்டிப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 20 குளங்களை ஆழமாக்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில் கரணவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவில் - முதலைக்குளம், ஆண்டியப்புக்குளம், மத்தொனியில் - சண்டியகுளம், கரவெட்டி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் - மருதடிக்குளம் கட்டைவேலிப் பிரிவில் தில்லைக்குளம், - தல்லையப்புலம் மற்றும் கரண்டாதூகுளம் என்பனவும் - துன்னாலை கிழக்குப் பிரிவில் - கொடிக்கட்டுக்குளம், சம்பந்தர் வளவுக்குளம் மற்றும் குடவத்தைக்குளம் என்பனவும், அல்வாய் கிழக்கில் - மாயக்கைக்குளம், கப்புதூவில் - சினப்பிட்டிக்குளம், கரம்பன்குளம், அந்தணத் திடலில் - நெடுங்கிராய்க்குளம், இலந்தைத்தாழ்வுக்குளம் ஆகியனவுமே ஆழமாக்கப்படவுள்ளன என்று கரவெட்டிப் பிரதேச செயலர் எஸ்.சிவசிற…

  17. -ஏ.எச்.ஏ.ஹுஸைன் திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதியிலுள்ள சுமார் 1200 ஏக்கர் நிலத்தை, நீண்ட கால குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்குவது தொடர்பான விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கூடவிருக்கும் கிழக்கு மாகாண சபையின் இம்மாத அமர்வின் போது, இவ்விடயம் தொடர்பில் விவாதிப்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் கே. துரைராஜசிங்கம் தனி நபர் பிரேரணையொன்றை சபையில் முன் வைத்துள்ளார். இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் பதிலை எதிர்பார்த்து அவர் முன்னறிவித்தல் கொடுத்துள்ள தனி நபர் பிரேரணையில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது, திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 1200 ஏக்கர…

  18. - செல்வநாயகம் கபிலன் யாழ். மிருசுவில் உசன் பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு 'லேகியம்' எனப்படும் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த 27 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உசன் பகுதியில் பாடசாலை மாணவர்கள் லேகியம் (குழி) எனப்படும் போதைப் பொருளைப் பயன்படுத்துவதாக கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், மேற்படி போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்ட நிலையில், இதனை விற்பனை செய்தவர் அதேயிடத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மேற்படி சந்த…

  19. மன்னார் மடு திருத்தல ஆவணித் திருவிழாவின் போது நேற்று ஆலயத்தின் முற்பகுதியில் வானில் பறந்ததாக கூறப்படும் சிறியரக விமானம் இலங்கை விமானப் படைக்கு சொந்தமானது அல்ல என விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விமானப்படைத் தரப்பிற்கு எவ்விதமான தகவல்களும் பதிவாகவில்லை என இலங்கை விமானப்படை பேச்சாளர் அலுவலகத்தின் விங் கொமாண்டர் பத்மன் டி கொஸ்தா தெரிவித்துள்ளார். மடு திருத்தல ஆவணித் திருவிழாவின் திருப்பலி நேற்று காலை ஒப்புக்கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த சிறிய ரக விமானம் வானில் பறந்ததாக தகவல்கள் வெளியாகின. இரைச்சலுடன் வானில் பறந்துகொண்டிருந்த இந்த விமானத்தில் ஆட்கள் எவரும் இருக்கவில்லை எனவும் திருவிழா திருப்பலி நிறைவடைந்த பின்னர் விமானம் அந்த இடத்திலிருந்து நக…

  20. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுபல சேனா அமைப்பின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தாம் களமிறக்க உள்ளதாக அவ்வமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த மதத்தை அடிப்படையாக கொண்ட இந்த யோசனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வுக்கும் எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் அறிவிக்க உள்ளதாகவும் அவ்வாறு இந்த யோசனைக்கு அவர்கள் மறுப்பு தெரிவிப்பார்களாயின் தாம் தனியாக வேட்பாளரை களமிறக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2014/08/16/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%A…

  21. பாணந்துறை பிரதேசத்திலுள்ள நகைக்கடையொன்றில் தங்க நகைகளை கொள்வனவு செய்யும் தோரணையில் சென்று 1 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வளையல்கள் இரண்டினை திருடிச்சென்ற இரண்டு பெண்கள் உடபட மூவரை தேடும் தேடி வலைவரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நகைக்கடையில் இருந்த சீ.சீ.டிவி கமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் இந்த திருட்டுச்சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்க நகை கொள்வனவு செய்யும் பாவனையில் வந்த பெண், பின்னால் இருந்த பெண்ணிடம் தங்க வளையல்கள் இரண்டினை திருடி கொடுத்துள்ள காட்சிகள் கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/122440-2014-08-16-10-09-14.html

  22. "எனது சமூகப் பணிக்காக கௌரவ கலாநிதிப் பட்டம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு நான் 3,500 டொலர்களை (ரூபா 2.14 இலட்சம்) நான் செலுத்த வேண்டும் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்" இவ்வாறு THE NEW INDIAN EXPRESS ஊடகத்தின் செய்தியாளர் Bharath Joshi எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கடந்த வாரம் வாசுதேவ சர்மாவின் அலுவலகத்திற்கு வருகை தந்த இரண்டு பேர் கூறிய விடயம் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறிலங்காப் பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து வாசுதேவ சர்மா கௌரவ கலாநிதிப் பட்டம் [honorary doctorate] ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான விண்ணப்பப் படிவம் ஒன்றை அவர்கள் இருவரும் அவரது மேசையில் வைத்தார்கள். "எனது சமூகப்…

  23. -ஸ்.கீதபொன்கலன் நிலாவெளி, 8ம் கட்டை முகைதீன் பள்ளிவாசல் வீதியில் உள்ள வீடுகள் சிலவற்றுக்குள் இன்று சனிக்கிழமை (16) அதிகாலை மர்ம நபர்கள் நுழைந்ததையடுத்து பிரதேச மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள 5 வீடுகளுக்குள் இவ்வாறு இனந்தெரியாத நபர்கள் நுழைந்துள்ளனர். தாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, வீட்டின் யன்னல்களை கழற்றிவிட்டு, மர்ம நபர்கள் வீடுகளுக்குள் புகுந்ததாகவும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்தபோது, மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐந்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதுடன் தப்பியோடியவர்களை கண்டபோதும் இருட்டாக இருந்தமையினால் ஓடியவர்களை தம்மால் அ…

  24. இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி இலங்கை வருகைதரவுள்ளார். சீன ஜனாதிபதியொருவர் முப்பது வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியல் பிரமுகர்களை அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது கட்டத்தையும் ஆரம்பித்துவைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/122400-2014-08-16-05-59-05.html

  25. நல்லூர்க் கந்தனின் பெருந்திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. நல்லூர் பெருந்திருவிழாவைக் காண்பதற்காக நாலா திக்குமிருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் முருகப்பெருமான் மாலை வீதியுலாவரும் காட்சியை காண வரும் அடியவர்களில் சிறுவர்கள் இளைஞர்கள் என்ற பேதம் இன்றி ஆலய சூழலில் காணப்படும் மணல் பரப்பில் பக்திமயமான உருவங்களை உருவாக்கி தமது திறமைகளை வெளிப்படுத்தும் காட்சிகள் பிரம்மிக்கவைக்கின்றன. தினமும் பற்பல கைவண்ண கோலங்கள் மணலில் உருவாகின்றன. இவற்றில் சில வருமாறு. http://onlineuthayan.com/News_More.php?id=165893336316197092

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.