ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
யாழ்ப்பாணம் மந்துவில் பகுதியில் உள்ள நபர் ஒருவர் கல்லுண்டாய் வெளியில் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த யூலை 12 ஆம் திகதி மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியை சேர்ந்த நாகராசா பார்த்தீபன் என்பவர் இனந்தெரியாத நபர்களால் அசிட் வீசியும், வெட்டியும் , சித்திரவதை செய்தும் கொலை செய்யப்பட்டு கல்லுண்டாய் வெளியில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த மானிப்பாய் பொலிஸார் மந்துவில் பகுதியை சேர்ந்த தாய், மகன், உட்பட மானிப்பாயை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனது கணவரை கொன்றவரது குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்குடன்…
-
- 0 replies
- 316 views
-
-
மூன்று மன்னர்களின் சிலைகள் யாழ்.நகரில் திறந்து வைப்பு! [sunday 2014-08-10 18:00] யாழ். நகரில், மணிக்கூட்டு வீதியில் நிறுவப்பட்ட மூன்று மன்னர்களின் சிலை இன்று மாலை திறந்த வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பிற்பகல் 4 மணிக்கு சிலைகளைத் திறந்துவைத்தார். யானை மீதேறிய எல்லாளன், குதிரைகள் மீது அமர்ந்த பண்டாரவன்னியன், பரராசசேகரன் ஆகிய மன்னர்களது சிலைகளே மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி மூன்று திசைகளிலும் நிறுவப்பட்டுள்ளன. இந்த சிலைகள் திறப்பு விழாவில், நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானதேசீக பரமாச்சாரிய சுவாமிகள், வடக்கு மாகாண சபை எதிர்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, யாழ்.மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா உட்பட பலர் கலந்து கொண்டு மன்னர்களின் சிலைக்கு மாலை …
-
- 13 replies
- 1.2k views
-
-
வடக்கு மக்களின் உண்மை நிலை தெற்கில் உள்ளவர்களுக்குத் தெரியாது எனவும் அந்த உண்மையை அறிந்துகொள்ள அவர்களுக்கு விருப்பம் இல்லை எனவும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் ஆயரைக் கைதுசெய்ய வேண்டும் என பொதுபல சேனா கூறியிருந்தமை குறித்து கேட்டபோதே மன்னார் ஆயர் இதனைத் தெரிவித்தார். மன்னார் ஆயர் மேலும் கூறும்போது (வீடியோ)
-
- 3 replies
- 504 views
-
-
வேலுப்பிள்ளை பிரபாகரனிற்கு இந்திய இராணுவம் உத்தரகாண்டின் சக்ரா பகுதியிலேயே பயிற்சி வழங்கியது:- 14 ஆகஸ்ட் 2014 மகிந்தவின் மனித உரிமை ஆலோசகர் அவ்டாஸ் கவுசல் கூறுகிறார் - இலங்கை இந்தியா தவிர்ந்த ஏனைய சார்க் நாடுகளுடன் தனது உறவை வலுப்படுத்திக்கொள்வது இந்தியாவிற்கு சாதகமான விடயமல்ல என காணமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் சர்வதேச குழுவில் இடம் பெற்றுள்ள அவ்டாஸ் கவுசல் தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் இலங்கை குறித்து தீவிர அக்கறை காட்டவில்லை , இதன் காரணமாக அந்த நாடு ஏனைய சார்க் நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தியது, இது இந்தியாவிற்…
-
- 2 replies
- 500 views
-
-
சிறீலங்காவில் வெளிநாட்டு உளவுப் பிரிவு ஆக 14, 2014 வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் இலங்கையில் செயற்பட்டு வருவதாக தேசிய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் இலங்கையில் இயங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளனர். அண்மையில் மருதானையில் நடைபெற்ற யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர்களுக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போதும் வெளிநாட்டு உளவுப் பிரிவினர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஊடகவயிலளார்கள் என்ற போர்வையில் வெளிநாட்டு ஊளவாளிகள் குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் பங்கேற்றவர்கள் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்…
-
- 3 replies
- 475 views
-
-
தமிழ் இனப் படுகொலை நடத்திய சிங்கள அரசு, கொழும்புவில் ஆகஸ்ட் 18 முதல் 20 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் இலங்கை இராணுவக் கருத்தரங்கு இலங்கையில் நடைபெற உள்ளது. இக்கருத்தங்கில் இந்திய இராணுவத் தளபதிகளும், அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள் என்றும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுப்பிரமணியசாமி உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொள்கிறார்கள். இந்த இராணுவக் கருத்தரங்கை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி சவப்பாடை ஊர்வலம் நடைபெற்றது. http://www.pathivu.com/news/33131/57//d,article_full.aspx
-
- 0 replies
- 481 views
-
-
பாலசந்திரனின் வாழ்க்கையை மையபடுத்தி எடுத்ததாக கூறப்படும் புலிப்பார்வை திரைப்படத்திற்கு பல தரப்புகளிடமிருந்தும் இருந்தும் மாணவர்களிடமும் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பி அது போராட்டமாக மாறியது. இதனை அடுத்து மாணவர்கள் புலிப்பார்வை திரைப்படத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி உள்ள நிலையில். நேற்று புலிப்பார்வை படம் போட்டு காண்பிக்க பட்டது. இவ் படம் பிரத்தியோகமாக திரையாடப்பட்டது மாணவர்கள் , அய்யா.நெடுமாறன் , சீமான் , சில முக்கிய மதிமுக உறுப்பினர்கள் இயக்குநர் கவுதமன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். படம் முழுக்க பாலச்சந்திரனோடு,பல குழந்தைகள் சிறார் போராளிகளாகவே காட்டப்பட்டுள்ளனர். உள்நாட்டுப் போர் எனும் அளவிலேயே,அதாவது தமிழர்களும் இறந்தனர்;சிங்களவர்களும் இறந்தனர்.…
-
- 0 replies
- 407 views
-
-
காணாமல் போனோர் தொடர்பாக உரிய முறையில் விசாரணை செய்யாமலும் சாட்சியமளிக்கவருவோரை அவமானப்படுத்தும் வகையிலும் நடந்து கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு காணாமல் போனோர் தொடர்பாக அளிக்கப்படும் சாட்சியங்களை எவ்வாறு மிகைப்படுத்தப்பட்டவையென்று கூற முடியும் இதை கூட்டமைப்பு கண்டித்துள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் பிரமுகரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்; பெற்றோர் தமது பிள்ளைகளையும் மனைவியர் தமது கணவன்மாரையும் உறவினர்கள் தமது சொந்தங்களையும் அடைக்கலமாக இராணுவத்தினரிடம் ஒப்படைத்தமைக்கான ஆயிரக்கணக்கான சான்றுகளும் சாட்சியங்களும் இருக்கின்ற போது காணாமல் போனோர் தொடர்பில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் பொய்யானவை மிகைப்படுத்தப்பட்டவையென காணாமல் போனோர் தொடர்பா…
-
- 0 replies
- 519 views
-
-
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டிருந்தால் பட்டியலிடப்படும் வியாழக்கிழமை, 14 ஓகஸ்ட் 2014 05:28 - ஜோசப் அன்டன் ஜோர்ஜ் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என ஒருவர் அடையாளம் காணப்பட்டால் உரிய ஆதாரங்களின் பிரதிகளும் அவரின் பெயர் விபரமும் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்படும் என்று இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பயங்கரவாத தடைப்பட்டியலில் இருந்து தம்முடைய பெயர்களை நீக்கிக்கொள்ள வேண்டுமாயின் அது தொடர்பில் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் தமது பெயர் நீக்குவதற்கான உரிய காரணத்தை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று…
-
- 1 reply
- 381 views
-
-
இலங்கைப் பணியாளர்கள் 800 பேர் குர்திஸ்தானில் நிர்க்கதி news வட ஈராக்கின, குர்திஸ்தானில் வேலை வாய்ப்பு பெற்றுச்சென்ற சுமார் 800 இலங்கைப் பணியாளர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இலங்கைப் பணியாளர்கள் நாடு திரும்ப முடியாமல் அவதியுறுவதாக அவர்களது உறவினர்களால் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு திரும்ப வேண்டுமென தெரிவித்த போதிலும் 50 க்கும் மேற்பட்ட இலங்கைப் பணியாளர்களை குர்திஸ்தான் இராணுவத்தினர் பலவந்தமாக தடுத்து வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 14 ஆகஸ்ட்டு 2014, வியாழன் 9:20 மு.ப - See more at: htt…
-
- 0 replies
- 265 views
-
-
வன்னி இனப்படுகொலையின் பின்புலத்தில் இந்தியப் பல்தேசிய நிறுவனங்கள் : இந்தியத் தூதர் ஒப்புதல் வன்னி இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியது இந்திய அதிகாரவர்க்கம் என்பதையும் இந்தியப் பல்தேசிய நிறுவனங்கள் என்பதையும் அந்த நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஒப்புக்கொண்டுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்தியத் தூதுவர் வை.கே சின்கா 2009 ஆம் ஆண்டு கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கையின் ‘அபிவிருத்திக்கும்’ நல்லிணக்கத்திற்கும் இந்தியா உதவிவருவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் திட்டங்களை நிறைவேற்ற இலங்கை ஒத்துழைப்பதற்கு நன்றி தெரிவித்தார். இலங்கை அமைதி நிறைந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது எனத் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 440 views
-
-
தெல்செவனவை விஸ்தரிக்க கடற்கரைகளும் சுவீகரிப்பு” சண்முகலிங்கம் சஜீவன வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் எங்களது மக்களை மீளக்குடியமர அனுமதிக்க மறுக்கும் அரசு மறுபுறம் தெல்செவன நட்சத்திரவிடுதியை விஸ்தரிக்க கடற்கரைகளையும் சுவீகரிப்பதாக வலி.வடக்கு பிரதேச சபையின் உபதவிசாளரும் மீள்குடியேற்ற குழு தலைவருமான சண்முகலிங்கம் சஜீவன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பௌத்தர்கள் தமது போயா தினங்களில் மதுபானம் விற்கத்தடை விதிக்கின்றார்கள். ஆனால் அதே தெல்செவனவில் எந்தவித தடையுமின்றி மதுபானம் விற்பனை செய்கின்றார்கள். அங்கிருந்து எவரும் கொள்வனவு செய்து எடுத்து வந்து வெளியே குடிக்கிறார்கள். அதே போன்று மக்கள் நடமாட தடை விதிக…
-
- 0 replies
- 365 views
-
-
உதய கார்த்திக் : இலங்கையில் நிலவிவரும் மிக மோசமான வறட்சியான காலநிலையால் 15 நாட்களில் 16 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நாளாந்தம் வெளியிடப்படும் அறிக்கையில் வறட்சியால் இதுவரை 4,68,329 குடும்பங்களும் 16, 20, 602 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது ; நாட்டில் நிலவிவரும் மோசமான வறட்சியால் தேசிய உணவு உற்பத்திக்கு பங்களிப்பளிக்கும் பிரதான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மோசமான வறட்சியால் பொதுமக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் நிலையும் காணப்படுகிறது. இந்நிலையில் மோசமான வறட்சியால் மொனராகலை …
-
- 2 replies
- 498 views
-
-
- குணசேகரன் சுரேன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் விற்பனை செய்யும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த இரண்டு புலிக்குட்டிகளை இன்று புதன்கிழமை (13) மீட்டு, அநுராதபுரம் கால்நடை வைத்தியதிகாரி சந்தனஜெயசிங்கவிடம் கையளித்ததாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். இது பற்றி அவர் தெரிவிக்கையில், மேற்படி பகுதியில் புலிக்குட்டிகள் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அதனைப் பார்வையிடச் சென்ற சமயம், புலிக்குட்டிகள் வைத்திருந்தவர் அவற்றினைக் கைவிட்டு ஓடிவிட்டார். இதனையடுத்து, இரண்டு குட்டிகளையும் மீட்டதுடன், இது தொடர்பில் அநுராதபுரம் மற்றும் கொழும்பிலுள்ள வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினோம். அதற்கமைய, யாழ்ப்பாணம் வருகை தந…
-
- 0 replies
- 349 views
-
-
துருக்கிஸ்தான் நாட்டில் கடமை புரியும் தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு மட்டக்களப்பைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட உறவினர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். பழுகாமம் கிராமத்தைச் சேர்ந்த 24 பேரும், காந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த 05 பேரும், மண்டூர் 39 ஆம் கிராமத்தைச் சேர்ந்த 3 பேரும் எனத் தமக்குத் தெரிந்தளவில் துருக்கிஸ்தானில் உள்ளனர் என்றும், இதனைவிட வெல்லாவெளி, தாந்தமலை போன்ற பல கிராமங்களைச் சேர்ந்தவர்களும் அங்குள்ளனர் என்றும், அவர்களுள் 39 பேர் துன்புறுத்தப்பட்டு காயங்களுக்குள்ளாக்கப்பட்ட நிலையில் அங்கு உள்ளனர் என்றும், துருக்கிஸ்தானுக்கு தொழிலுக்குச் சென்றவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2012, 2013 ஆம் ஆண்டுகளில் தொழில் வாய்ப்புக்காகச் சென்ற எமது உறவினர்கள்,…
-
- 0 replies
- 291 views
-
-
மருதங்கேணி - கட்டைக்காடுப் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தவறான நோக்கததிற்காக வீடு புகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து பளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அந்தச் சிப்பாயை பொலிஸார் இன்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தினர். சந்தேக நபரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். கட்டைக்காடுப் பகுதியில் அதிகாலை வேளை ஒருவர் வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார் இதனை அவதானித்த அந்தப் பெண்ணின் கணவர் அந்த நபரைப் பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பி ஓட முயற்சித்துள்ளார். வீட்டாரின் அலறலைக் கேட்டு அயலவர்கள் விழித்துக் கொண்டு ஒன்றுகூடி குறித்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர். இ…
-
- 0 replies
- 392 views
-
-
வீட்டில் இருந்த கணனியில் மூத்த சகோதரிக்குச் சொந்தமான பேஸ்புக் கணக்கை தங்கை பார்வையிட்டதால் ஏற்பட்ட மோதலில் மூத்த சகோதரி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடந்த வியாழக்கிழமை நல்லுார்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தற்கொலைக்கு முயன்ற யுவதி பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டு அரச திணைக்களம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் தெரியவருகின்றது. இவா் தனது பேஸ்புக்கை திறந்து வைத்துவிட்டு அவசர அலுவல் காரணமாக வீட்டுக்கு வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்த போது யுவதியின் தங்கை தனது முகப்புத்தகத்தைப் பார்வையிட்டு்க் கொண்டிருந்ததால் அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் போது தமக்கையின் முகப்புத்தகத்திற்கு தகவல்கள் அனுப்பியிருந்த சில ஆண் நண்பா்களின் பெயா்களைக் கூறி தாய்க்கு அந்த விபரங்களைத் தெர…
-
- 19 replies
- 1.1k views
-
-
தவ்ஹீத் ஜமாத் அமைப்பினால் மாளிகாவத்தையில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தற்போது பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் அமைதியான முறையில் அப் பகுதியில் எழுச்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. முதலாம் இணைப்பு தடையையும் மீறி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் இஸ்ரேலுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மாளிகாவத்தையிலிருந்து கோட்டையை நோக்கி ஊர்வலமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. புறக்கோட்டை ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மட்டுமே நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மாளிகாவத்தையிலிருந்து பஞ்சிக்காவத்தை சந்தி நோக்கி…
-
- 8 replies
- 693 views
-
-
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக சிறப்பு உத்தரவு ஒன்றை அவர் பிறப்பித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்திலும் இதை அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 93 மீனவர்கள் தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் கடந்த மே மாதத்திலிருந்து இதுவரை 225 இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளது. ஆனாலும் அடுத்தடுத்து கைதுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. அதாவது ஏதாவது காரணத்தைச் சொல்லி நல்லெண்ணம் என்று கூறி விடுவிப்பதும், காரணமே இல்லாமல் கைது செய்வதும் தொடர்ந்து வருகிறது. இந்த நில…
-
- 3 replies
- 367 views
-
-
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் செயற்பட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியும் செயற்படுவது நாட்டுக்கே ஆபத்தான விடயமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகபெரும தெரிவித்தார். கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குதற்காக டெஸ்மன்ட் டீ சில்வா தலைமையிலான மூன்று நிபுணர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் பிரிவின் முக்கியஸ்தர் ஒருவர் டெஸ்மன்ட் டீ சில்வா தொடர்பில் …
-
- 0 replies
- 232 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸின் விசாரணைகுழு மற்றும் உள்ளூர் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கப் போகிறார் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர விடுதலைப் புலிகளினது செயற்பாடுகள் குறித்தும் அவர்களுடைய சொத்துக்கள் தற்போது யாரிடமிருக்கின்றன என்பது குறித்தும் தெரிவிக்கப்போகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டினதும் படையினரினதும் கௌரவத்தைக் காப்பாற்றவே தான் சாட்சியமளிக்க உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் விரைவில் கே.பி குறித்தும் அவரது சொத்துக்கள் குறித்து பகிரங்கப்படுத்தப் போகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு யுத்தத்தில் காணாமற் போனோர் தொடர்பில் ஆராய்வதாக கூறி ராஜபக்ஷ அரசாங்கம் ஜனாதிபதிஆணைக்குழுவை நியமித்தமை அ…
-
- 0 replies
- 273 views
-
-
காலவரையறை இல்லாத இந்திய - இலங்கை ஒத்துழைப்பு எனும் புத்தக வெளியீட்டு விழா, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று புதன்கிழமை (13) காலை 11 மணியளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/122016-2014-08-13-12-33-50.html
-
- 0 replies
- 241 views
-
-
தமிழகம், அடையாறு வீதியில் வீசப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்கள் 7 பேரது கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. அடையாறு கஸ்தூரிபாய் தேஷ்முக் ரோட்டில் சத்யா ஸ்டூடியோ அருகில் நேற்று இரவு தனியார் நிறுவன ஊழியர் முகமது என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடு வீதியில் ஒரு பை கிடந்தது. அதை திறந்து பார்த்த போது அதில் கடவுச்சீட்டுகள் இருந்தன. அந்த பையை அடையாறு பொலிஸில் அவர் ஒப்படைத்தார். அதில் ஈழத் தமிழர்களின் 7 கடவுச்சீட்டுக்கள் இருந்தன. அவை ரவிச்சந்திரன், வடிவாம்பிகை, சாய் ஆர்.பி., கவுதமன், விசாகம், மற்றொரு வடிவாம்பிகை, ரவிச்சந்திரன் சண்முக ரத்தினசாமி என்ற பெயர்களில் இருந்தன. இந்த கடவுச்சீட்டுக்களை யாராவது மொத்தமாக வைத்திருந்து தொலைத்து இருக்கலாம் என சந்…
-
- 0 replies
- 432 views
-
-
வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் இலங்கையில் செயற்பட்டு வருவதாக தேசிய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் இலங்கையில் இயங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளனர். அண்மையில் மருதானையில் நடைபெற்ற யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர்களுக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போதும் வெளிநாட்டு உளவுப் பிரிவினர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஊடகவயிலளார்கள் என்ற போர்வையில் வெளிநாட்டு ஊளவாளிகள் குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் பங்கேற்றவர்கள் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினாகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த…
-
- 0 replies
- 411 views
-
-
போருக்குப் பின்னர் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நேரில் கண்டறிய வருமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரிக்கு, சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. மியான்மாரின் நே பி டோ நகரில் நடந்த ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசியுள்ளார். இதன்போதே, போர் முடிவுக்கு வந்த பின்னர், ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரில் வந்து கண்டறிவதற்கு, சிறிலங்காவுக்கு வருமாறு அவருக்குத் தாம் அழைப்பு விடுத்ததாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரிஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக அரசியல் அரங்கில், அமெரிக்க - சிறிலங்கா உறவுகள், அண்மைக்காலமாக பாதிக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 368 views
-