ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142801 topics in this forum
-
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தயோகபூர்வ இல்லத்தில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த அறிவிப்பினை ஊடகங்கள் முன்பாக வெளியிட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பசில் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக…
-
-
- 24 replies
- 1.4k views
- 2 followers
-
-
பன்னாட்டுச் சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் எதிர்வரும் 30ஆம் நாளன்று நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நிலத்திலும் புலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள அமைப்புக்களும் பிரதிநிதிகளும், மக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போராட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசேட ஊடக அறிக்கையும் வெளியிடப்பட்டது. அந்த ஊடக அறிக்கையில்; வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இனவழிப்புக்கு சர்வதேச விசாரணை வழியாகவே நீதி வழங்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றோம். 2700 நா…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
வவுனியா, நெளுக்குளம், பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பாெலிசார் தெரிவித்தனர். வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும், வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியரான கிருஷன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டவராவார். சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் குறித்த ஆசிரியரின் துவிச்சக்கர வண்டி, பாதணி, குடை என்பனவும் பாெலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/ar…
-
-
- 2 replies
- 414 views
- 1 follower
-
-
காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் 34 வருடங்களுக்கு முன், இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது, புலிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் இன்று 03-08-2024 நினைவு கூறப்பட்டுள்ளது. 1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும்ஆ பள்ளிவாசலில், இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது, நடத்தப்டப்ட இந்த தாக்குதலில் முதியவர்கள், சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140க்கும் மேற்பட்டோர் காயப்பட்டிருந்தார்கள். அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்ளட்டும். அவர்களுக்காக பிரார்த்திப்போம். https://www.jaffnamuslim.com/2024/08/34.html கிழக்கு முஸ்லிம்களின…
-
-
- 8 replies
- 794 views
-
-
2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்கை இன்னாருக்கு அளியுங்கள் என நான் ஒருபோதும் கூறமாட்டேன் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதித்தேர்தலில் நிறுத்தும்போது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே தமது வாக்குகளை அளிக்கவேண்டும். விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயமாகும். அந்த வாக்கினை இன்னாருக்கு அளியுங்கள் என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் 2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்குகளை யாருக்கு அளிக்கவேண்டும் என்பது குறித்துத் தனது நிலைப்பாட்டைத…
-
-
- 4 replies
- 576 views
-
-
திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம்; குகதாசனுடன் மக்களை சந்தித்த ஜனாதிபதி திருக்கோணமலை மக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றது. குறித்த சந்திப்பு திருகோணமலை நகராட்சி மன்ற பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றது. இதன் போது வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம், மக்களுடைய காணிகள் விடுவிப்பு, மக்கெய்சர் விளையாட்டு அரங்கு தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. அத்துடன் இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் அரசியல் பிரமுகர்…
-
- 0 replies
- 254 views
-
-
05 AUG, 2024 | 03:57 PM எமது நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது தானாக இடம்பெற்ற ஒன்றல்ல. இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் பிறப்பித்த ஒன்றாகும். அதைப்போலவே இந்த நாட்டில் இருக்கின்ற பதினாறு இலட்சம் வலதுகுறைந்தவர்களில் எவருமே இந்த வங்குரோத்துநிலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களல்ல என சமூக ஆர்வலர் சுகத் வசந்த த சில்வா தெரிவித்தார். கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கடந்த 03 ஆம் திகதி சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகள் பற்றிய தேசிய மக்கள் சக்தியின் தேசிய கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வெளியிடுதல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே சமூக ஆர்வலர் சுகத் வசந்த த சில்வா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 05 AUG, 2024 | 05:23 PM யாழில் குற்றச்செயலினை மேற்கொள்வதற்காக பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த 3 வாள்கள், காலணிகள், முகமூடிகள் மற்றும் மேல் அங்கிகள் என்பன இன்று திங்கட்கிழமை (05) மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஏழாலை மேற்கு , ஏழாலை, புளியங்கிணற்றடி என்ற இடத்தில் உள்ள பற்றைக்குள் இருந்தே மேற்குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/19034…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
Published By: VISHNU 05 AUG, 2024 | 05:55 PM நான் ஜனாதிபதியுடன் ரகசியமான சந்திப்பில் ஈடுபடவில்லை. பரகசியமான சந்திப்பிலேயே ஈடுபட்டேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமான ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (4) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் என்ற வகையில் கடந்த மாதம் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்து இருந்தேன். வடக்கு கிழக்கு மக்கள் தொடர்பான அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை நான் கேட்டுக் கொண்டேன். அதேபோல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களையும் நான் ச…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்! இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்கும் முறை தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்படும் என எதிர்பார்ப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு E-விசா சேவையை வழங்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் சமீபத்தில் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதற்கமைய ஆகஸ்ட் 2 ஆம் திகதி இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இணைய முறையின் ஊடாக விசா வழங்குவதை …
-
- 0 replies
- 378 views
-
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்! ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளர் யார் என்பது குறித்து இன்று வவுனியாவில் தீர்மானிக்கப்படவுள்ளது. இந்நிலையில், பொதுவேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு சந்திரகாந்தன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே.வி.தவராசா மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவு என்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் 7 பிரதிநிதிகளும் 7 அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள…
-
-
- 26 replies
- 1.7k views
- 1 follower
-
-
விருப்பு வாக்கினைப் பயன்படுத்துவது தமிழா்களின் ஜனநாயக உரிமை – சி.வி.விக்னேஸ்வரன்! விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை என்பதால் குறித்த ஒரு நபருக்கே வாக்களிக்குமாறு தான் எந்தத் தருணத்திலும் கூறவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளாா். தமிழ் பொது வேட்பாளா் குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா். அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பில் தான் தெரிவித்திருந்த கருத்துக்கள் பற்றி தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளாா். மேலும் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒர…
-
- 2 replies
- 299 views
- 1 follower
-
-
ஜனாதிபதித் தேர்தல் – இதுவரையில் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தினா்! ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் இருவர் சுயாதீன வேட்பாளர்களாக இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் இதன்படி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார் தம்மிக்க ரத்நாயக்கவினால் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் கட்டுப்பணம்…
-
- 1 reply
- 203 views
-
-
ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன எந்த வகையிலும் ஆதரவளிக்காது – உதயங்க வீரதுங்க! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த வகையிலும் ஆதரவளிக்காது என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், “பொதுஜன பெரமுனவில் இருந்து யார் வெளியேறினாலும் எமக்கு சவாலாக அமையாது.வரலாற்றில் ரணில் விக்ரமசிங்க தவறான தீர்மானங்களையே மேற்கொண்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவடைந்தமை ஐக்கிய தேசியக் கட்சி இன்று முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள…
-
- 0 replies
- 106 views
-
-
Published By: DIGITAL DESK 7 05 AUG, 2024 | 10:22 AM முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகளையும் கோவிலையும் உடைத்துத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடைகள், ஆலய உண்டியல் உடைத்து திருடப்பட்ட சம்பவங்கள் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு கடை, வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள ஒரு கடை , மந்துவில்லில் உள்ள ஒரு கடை, காமன்ஸ் அருகே ஒரு கடை, செம்மண்குன்றில் ஒரு கடை என ஐந்து கடைகளும் புதுக்குடியிருப்பு ந…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
பிரதமர் பதவிக்கு கையேந்தியது எமது நாட்டில் மட்டுமே – ஜனாதிபதி ரணில்! நாட்டில் நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் திருகோணமலை இந்து கலாச்சார நிலையத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், இந்த நாட்டின் அப்போதைய நிலையை நான் நினைவுகூரத் தேவையில்லை. சிலரது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. ஊருக்கு வரக்கூடாது என அச்சுறுத்தினர். ஆனால் 2022 ஜூலை மாதத்தில் நாட்டின் மீட்சிக்காக நாம் அனைவரும்…
-
- 0 replies
- 383 views
-
-
Published By: VISHNU 04 AUG, 2024 | 08:09 PM எதிர்க்கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகள் அரசியல் மேடைக்கு ஏற்றதாக இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அதனால் இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை அனைவரும் அங்கீகரித்து, வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டில் அரசியல் செய்வதற்கு நல்ல பொருளாதாரம் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலவச சப்பாத்துகளை வழங்…
-
- 0 replies
- 329 views
- 1 follower
-
-
Published By: VISHNU 04 AUG, 2024 | 06:35 PM நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த மற்றொரு சட்டவிரோத கொடுக்கல் வாங்கலுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வி.எப்.எஸ் நிறுவனத்திற்கு விலைமனு கோரல் இல்லாமல், இணைய வீசா சேவை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சேவையைப் பெற மேற்கொண்ட நடவடிக்கையால் 1.2 பில்லியன் டொலர்களை இழந்துள்ளோம். இந்தத் திருட்டை நிறுத்தி இந்த பணத் தொகையை பயன்படுத்தி பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை வழங்கியிருக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். VFS கொடுக்கல் வாங்கள் மூலம் தமது சொந்த நலனையே இந்த திருடர்கள் முன்னெடுத்தனர். ரவூப் ஹக்கீம், சுமந்திரன், சம்பிக்க ர…
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
04 AUG, 2024 | 05:25 PM நான் ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கிறேன். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் பங்கமேற்பட இடமளிக்கமாட்டோம். எமது நாடு பாரிய சீர்குலைவினை எதிர்நோக்கியதால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது நீங்கள்தான். நாடு எவ்வளவுதான் சீர்குலைவிற்கு இலக்காகியிருப்பினும் அது தொடர்பில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இங்கு குழுமியுள்ள உங்கள் மீது முன்வைக்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று சனிக்கிழமை (03) ஆம் திகதி இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள் பற்றிய தேசிய மக்கள் சக்தியின் தேசிய கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வெளியிடுதல் நிக…
-
- 0 replies
- 363 views
- 1 follower
-
-
04 AUG, 2024 | 05:18 PM வவுனியா மகாறம்பைக்குளம் தாஸ்நகர் பகுதியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட 26 வயதுடைய இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது சடலத்தை உடற்கூற்றாய்வு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வவுனியா நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (02) மாலை தாஸ்நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொண்ட நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டிருந்தார். உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். …
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது! யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தை படுமோசமாகச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தொியவந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தொிவித்துள்ளனா். குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், உட்கூற்று பரிசோதனை இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்தமை, தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை, காதிலும் மெல்லிய கம்பியினால் துளையிட்ட அடையாளங்கள் உள்ளிட்டவற்றுடன், உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதனையடுத்து குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிச…
-
-
- 15 replies
- 1.3k views
- 2 followers
-
-
நிபந்தனைகளின் அடிப்படையில் சஜித்திற்கு ஆதரவு – முஸ்லிம் காங்கிரஸ்! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பாக நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடா்பாக கருத்துத் தொிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் உயர்பீட கூட்டம் இன்று இடம்பெற்றது. எதிர்வரு…
-
- 0 replies
- 194 views
-
-
04 AUG, 2024 | 09:28 AM வவுனியா வடக்கு, கற்குளம், பட்டறை பிரிந்தகுளம் பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பாெலிஸார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு கற்குளம் பட்டறை பிரிந்தகுளம் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாமையால் சகிக்கிழமை (03) இரவு மகனை தேடி கிராம வீதியூடாக சென்ற பாேது வீதியில் நின்ற யானை தாக்கியதில் அவர் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் பட்டறை பிரிந்தகுளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடையவராவார். இது தாெடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பாெலிஸார் மேற்காெண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
04 AUG, 2024 | 09:56 AM யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் குழந்தையொன்று சந்தேகத்துக்கிடமான முறையில் சனிக்கிழமை (03) உயிரிழந்துள்ளது. பிறந்து 45 நாட்களேயான குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டப்பட்டு, சில மணிநேரங்களுக்குப் பின்னர் குழந்தை மயக்கமுற்றுள்ளது. உடனே குழந்தையை அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் சேர்த்து, மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் உடல் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில், மரண விசாரணையை வலிகாமம் கிழக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். கு…
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
எமது ஆட்சியின் கீழ் திருட்டுக்கு இடமில்லை – எதிர்கட்சி தலைவர். எமது அரசாங்கத்தின் கீழ் திருட்டுக்கு இடமில்லை எனவும் அவ்வாறானவர்களை மன்னிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று (03) நடைபெற்ற ரணவிரு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு போர்வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், திருட்டு, மோசடி, பொய், நிதிப் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றும் வேலைத்திட்டத்தின் முன்னோடிகளாக மாறுமாறு கூறினார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், திருடர்களைப் பிடிக்கவும், திருடர்களை விரட்டவும், திருடப்பட்ட பொருட்களை நாட்டுக்குத் திருப்பியனுப்பும் பாரிய மனிதாபிமானப…
-
- 1 reply
- 260 views
-