Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் தமிழ் மக்­களின் பாது­காப்­புக்­கா­கவே படை­யினர் நிலை­கொண்­டுள்­ள­தாக அர­சாங்கம் கூறி­வரும் நிலையில், கடற்­படைச் சிப்பாய் ஒரு­வ­ரினால் 11வய­தே­யான சிறுமி ஒருவர் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் நடை­பெற்று இரண்டு நாட்கள் கடந்தும் கூட சம்­பந்­தப்­பட்ட கடற்­படைச் சிப்பாய் கைது­செய்­யப்­ப­ட­வில்லை. பொது­மக்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லா­கவும் இடை­யூ­றா­கவும் இருந்­து­வரும் படை­யி­னரை வடக்கில் இருந்து வெளி­யேற்றி மக்­களின் பாது­காப்பை அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. யாழ்.காரை­நகர் ஊரிப் பிர­தே­சத்தில் 11 வய­தான பாட­சாலை மாணவி ஒருவர் பாட­சா­லைக்குச் செல்லும் வழியில் கடற்­படைச் சிப…

  2. யாழ் பிரதேச செயலர் திருமதி சுகுணரதியின் உதவியாளர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு, கடன் பெற்று தருவதாகவும் அதற்கு முற் பணமாக சில தொகை செலுத்த வேண்டும் என தெரிவித்து 4 கோடி ரூபாயினை பெற்றுகொண்ட சுதர்சினி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.ஆரம்ப கட்ட விசாரணையில் தற்போது இவரது வங்கி கணக்கில் 89 இலச்சம் ரூபா வைப்பில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது, மேலும் சுதர்சினிக்கு உதவியதாக நீர்ப்பாசண திணைக்களக உத்தியோகத்தரின் மனைவி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளார், இப் பெண்ணே தொலைபேசியில் தான் பிரதேச செயலர் சுகுணரதி என்றும் சுதர்சினி உடைய வங்கி கணக்கிற்கு பணத்தினை வைப்பிலிட்டால் தான் கடன் உதவியினை செய்வதாகவும் கூறியுள்ளார். 22 வயதான சுதர்சினிக்கு 4 மாத குழந்தை ஒன்றும் உள்ளதனால் தற்போது சிறையில் வைத…

    • 0 replies
    • 528 views
  3. காரைநகர் ஊரிக் கிராமத்தில் கடற்படைச் சிப்பாயால் சிறுமிகள் இருவர் வல்வுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் ஊரிக்கிராம மக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், தமிழ்த் தேசியமக்கள் மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் என பெருந்தொகையானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். http://www.pathivu.com/news/32532/57//d,article_full.aspx

    • 0 replies
    • 562 views
  4. ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிச் சென்று கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 153 புகலிடக் கோரிக்கையாளர்களையும் திருப்பி அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என அந்நாட்டு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 7 ஆம் திகதி புகலிடத் தஞ்சம் கோரி 153 பேர் படகில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றனர். இவர்களின் நிலை என்னவென்று நீண்ட நாடகளாகத் தெரியாமல் இருந்த நிலையில் அவர்களை கைது செய்து தடுத்து கப்பலில் வைத்திருப்பதாக அந்நாட்டு அரசு நீதிமன்றில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவரகளை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து இருந்தது. ஆனால் அரசின் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்று இடைக்காலத் தடை விதித்திருந்தது. கப்பலில் தடுத்து வைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையா…

    • 0 replies
    • 296 views
  5. பொதுபல சேனா இயக்கமும் தாமும் அரசியல் ஈடுபடுவதாக அதன் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சி அரசியலில் தாம் ஈடுபடவில்லை எனவும், தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவா தெரிவித்துள்ளார். பௌத்த சாசனத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே அரசியல் செய்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி அரசியலில் ஈடுபடும் திட்டங்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர் விமலஜோதி தேரருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அழுத்தகம சம்பவங்கள் தொடர்பி;ல் பிழையான தகவல்களை வெளியிட்டதாகவும் அவர் கட்சியின் தலைமைப் பதவியை ரா…

  6. அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக அரசால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று மாலை கொழும்பு ரயில் நிலையம் முன்பாக அரசசார்பற்ற நிறுவனங்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் அரசசார்பற்ற நிறுவனங்கள் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் இயங்கும் நிறுவனங்களும் பங்குகொண்டிருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது “அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது கை வைக்காதே”, “புதிய சட்டமூலத்தை அமுல்படுத்தாதே”, “கோட்டாவின் அடக்குமுறைக்கு எதிராக அணிதிரள்வோம்”, “எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகள் எங்கே?”, “ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் சட்டமூலம் வேண்டாம்” போன்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்…

    • 0 replies
    • 577 views
  7. இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989 ம் ஆண்டு ஜூலை 13-ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது கொலையை அன்று கண்டித்திருந்தால் பலர் பாதிக்கப்படைந்திருக்கலாம் என்ற காரணத்தினாலேயே தமிழ் அரசியல் தரப்பில் அவரது இழப்பு குறித்து மௌனம் நிலவியிருக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆனால் 'அந்த மௌனத்திலிருந்து அமிர்லிங்கத்தின் பெறுமதியை தமிழ் மக்கள் அல்லது அவரின் அரசியல் சகோதரர்கள் உணர்ந்துகொள்ளவில்லை என்று கூறமுடியாது' என்றும் சம்பந்தன் பிபிசியிடம் தெரிவித்தார். அமிர்தலிங்கத்தின் மறைவு தமிழர்களுக்கும் தமிழர் போராட்டத்திற்கு பெரும் இழப்பு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை…

  8. முள்ளிவாய்க்காலுக்குச் செல்ல பாப்பரசருக்கு அனுமதி மறுப்பு! - மடு வரை செல்லவே அரசு அனுமதி [Thursday 2014-07-17 18:00] அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வரும் புனித பாப்பரசரை, இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அரசு மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் வடக்கு கிழக்கில் மடுத் திருத்தலம் வரை புனித திருத்தந்தை செல்லவும், அங்கு திருப்பலிப் பூசைகளில் ஈடுபடவும் மட்டும் இலங்கை அரசு சார்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது எனவும் அறியவருகின்றது. புனித பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்கும் இலங்கைக்கான வத்திக்கான் பிரதிநிதி பேராயர் பியூரி நக்யுஎன் வான் டாட் கடந்த 13…

  9. யாழ்.காரைநகர் ஊரிப் பகுதியினைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியை கடற்படைச் சிப்பாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் போராட்டம் நடத்தப் போவதாக வடமாகாண சபை அனந்தி சசிதரன் வியாழக்கிழமை (17) தெரிவித்தார். பாடசாலை செல்லும் இச்சிறுமியினை மேற்படி கடற்படைச் சிப்பாய், ஏலாலை கடற்படை முகாமிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிறுமியின் பெற்றோர்களினால் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (15) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை இச்சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படைச் சிப்பாய் இதுவரையில் கைது…

  10. மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை வடக்கு மாகாண முதலமைச்சரினால் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு கட்டப்பட்ட மண்டைதீவு வைத்தியசாலை தனது சேவையினை செய்து வந்தநிலையில் கடந்த கால யுத்தத்தினால் சேதமடைந்திருந்து. மீண்டும் 60 வருடங்களின் பின்னர் வடக்கு மாகாண சபையின் முயற்சியினால் புனரமைக்கப்பட்டு வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய இந்த நிகழ்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=429213233717200…

  11. யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபையை விமர்சித்து அநாமதேய துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் விமர்சனங்கள் கொண்ட அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருப்பதடன் அவை கிழிக்கப்பட்டும் உள்ளமை குங்கு குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=670003231717880880#sthash.h0jZZtTB.dpuf

  12. -யோ.வித்தியா, பொ.சோபிகா நாட்டில் ஏற்பட்டுள்ள தமிழ் மக்களின் சனத்தொகை வீழ்ச்சியால், தமிழ் மக்கள் அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்' என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கல்வி வாய்ப்புகளிலும், வளப்பகிர்வுகளிலும் தமிழ்ர்கள் பின் தள்ளப்பட்டு வருகின்றனர். பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த இடங்களில் இருந்தும் அவர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர்' என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். வடமாகாண கல்வி முறைமை மீளாய்வு அறிக்கை வெளியீடு, யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது, …

  13. -ரீ.கே.றஹ்மத்துல்லா பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.அப்துல் மஜீட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இவர் தமது இராஜினாமா கடிதத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன்அலிக்கு வியாழக்கிழமை (17) அனுப்பி வைத்தள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அதன் குறிக்கோள்களையும் யாப்பையும் மீறி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சமூகத்தின் மீது எவ்வித அக்கரையும் நலன்களையும் கருத்தில் கொள்ளாது தத்…

  14. -எஸ்.றொசேரியன் லெம்பேட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மன்னார் பிரதேச சபை தேர்தலில்; போட்டியிட்டு வெற்றியடைந்த தன்னை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஏ.எம்.எம்.றிஷாபி தெரிவித்தார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாகிய தன்னை, கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டமையானது உள்ளக அரசியல் பழிவாங்கல் என அவர் கூறினார். 'தனது உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளதோடு, வர்த்தமானி மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். மன்னார் பிரதேச சபையின் அங்கத்தவராக இதுவரையில் பணியாற்றி வந்த உறுப்பினர் ஏ.எம்.எம்.றிஷாபி, 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் திகதி தொடக்கம் உறுப்புரிமையில் இருந்து நீக்கப…

  15. சிறிலங்காவில் பாதுகாப்பு ஆபத்துகளின்றி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தினால். நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இதுபற்றிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில், பிரித்தானிய வர்த்தகங்கள் எதிர்கொள்ளக் கூடிய பாதுகாப்பு மற்றும், அரசியல் ஆபத்துக்களை சுட்டிக்காட்டி, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்காவில் பாதுகாப்பு சவால்களின்றி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. எனினும், அங்கு செயற்படும் பெருமளவு நிறுவனங்கள் பிரச்சினையின்றி ஏற்றுமதிகளை மேற்கொள்கின்றன. வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் அபிலாசைகளை சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு நிறைவேற்றும் என்பதைப் …

  16. ஐ.நா. விசாரணைக்குழு முன் புலம்பெயர் தமிழர்கள் அணிதிரண்டு சாட்சியமளிக்க வேண்டும்! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை [Thursday 2014-07-17 09:00] புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு எதிரான ஐ.நா. விசாரணைக்குழு முன் அணிதிரண்டு சாட்சியமளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களைக் கோரியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார். இலங்கை விவகாரம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணைக்குழு தனது விசாரணை நடவடிக்கைகளை ஒஸ்லோவில் ஆரம்பித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளது. …

  17. அடுத்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் செய்யவுள்ள பாப்பரசர் பிரான்சிஸ், போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை வடகிழக்கு தமிழ் சிவில் சமூக அமைப்பால் விடுக்கப்பட்டுள்ளதாக, மன்னார் ஆயர் வண. ராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். பாப்பரசர் பிரான்சிசின் பயணத்தின் போது, மடு மாதா தேவாலயத்தில் காலஞ்சென்ற கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைப் புனிதராக அறிவிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திக்க வேண்டும், இவை இரண்டும் இல்லையென்றால், அவரது வருகையானது காலத்துக்கு முதிர்ச்சி அடையாததாகத் தான் இருக்கும். பாப்பரசர் பிரான்சிஸ் எமது வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறோம். எமது கோரிக்கை பாப்பரசரின் பிரதிநிதி…

    • 1 reply
    • 217 views
  18. இலங்கை அகதிகளுக்கு நீண்டகால விஸா வழங்க மாநில அரசு பரிந்துரைக்கலாம்! - இந்திய அரசு அறிவிப்பு. [Thursday 2014-07-17 10:00] இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு, நீண்டகால விஸா வழங்குவதற்கு மாநில அரசு பரிந்துரை செய்ய முடியும் என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் அகதிகளாக ஆப்கானைச் சேர்ந்த 10 ஆயிரத்து 340 பேர், மியான்மரைச் சேர்ந்த 4 ஆயிரத்து 621 பேர், இலங்கையைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 பேர் வசிக்கின்றார், நாடு இல்லாதவர்களாக திபெத்தியர்…

  19. அரசியலில் தமக்கு நாட்டமில்லை எனவம், அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏதேனும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், தமது பெயர் அதற்காக பயன்படுத்துவது வழமையாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே மக்களுக்கு சேவையாயற்ற முடியும் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு தாம் சேவையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். தம்மை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத…

  20. தவறானவர்களுக்கு உதவியதால் தண்டனை அனுபவித்தது இந்தியா! - குத்திக்காட்டுகிறார் டக்ளஸ் [Thursday 2014-07-17 09:00] இந்தியா தவறானவர்களுக்கு உதவி செய்ததால், அதற்கான விலையைக் கொடுக்க நேரிட்டது. என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவின் பேச்சுவார்த்தை மத்தியஸ்தம், மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் சந்திரசிறியின் மீள்நியமனம் ஆகியவை வரவேற்கத்தக்கவை. தென்னாபிரிக்கா மத்தியஸ்தத்துக்கு வந்துள்ள போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்று பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். இந்தியா பிழையானவர்களுக்கு உதவ…

  21. -சுப்பிரமணியம் பாஸ்கரன், வி.தபேந்திரன் இன ஒருமைப்பாட்டு விடயத்தில் இலங்கை அரசாங்கம் தவறிழைப்பதை தான் ஏற்றுக்கொள்வதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் வடமாகாணத்திற்கான மத்திய அலுவலகம் கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்தினைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'சிங்கள பெருன்பான்மையின மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் சமூக ஒருமைப்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அரசாங…

  22. யாழில் கனடா பெண் குளித்ததை பார்தவருக்கு உறவினர்கள் அடி உதை! ஜூலை 16, 2014 சங்கானைப் பகுதியில் கனடாவில் இருந்து விடுமுறையில் வந்து தங்கி நின்ற குடும்பப் பெண் ஒருவர் வீட்டுக் கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது ஒரு நபர் அயல் பகுதிக் காணியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் இருந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அலறியுள்ளார். சங்கானைப் பகுதியில் பெண் யுவதி ஒருவர் குளிப்பதைப் பார்த்ததாகத் தெரிவித்து கள் இறக்கும் தொழிலாளி கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இவரது சைக்கிளும் அடித்து நொருக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வீட்டில் நின்ற உறவினர்கள் அந் நபரை கீழே இறக்கி கடுமையாகத் தாக்கி கட்டி வைத்திருந்துள்ளனர். தான் கள் இறக்கும் தொழிலாளி என்றும் தென்னை மரத்தில் ஏறி கள்…

  23. யாழ்ப்பாணம் மட்டுமல்ல நாட்டில் தற்போது தங்கத்தை விட அதிகமாக மதிக்கபடும் ஒரு பொருளாக பச்சை மிளகாய் பெருமை பெற்றுள்ளது. தனியே சாப்பிட்டால் கண்ணீா் வரும் அளவிற்கு காரத்தைக் கொடுக்கும் இந்தப் பச்சை மிளகாய் பற்றிய அருமை தற்போதுதான் விளங்குகின்றது. யாழ்ப்பாணத்தில் சில்லைறைக் கடைகளில் பச்சை மிளகாய் சற்றுப் பெரிதான ஒன்று 5 ரூபாய்கு விற்கப்படுகின்றது, ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாவிற்கு விலை போகின்றது. முட்டைப் பொரியலுக்கு அவசியமாக தேவைப்படும் இந்தப் பச்சை மிளகாப் பற்றாக்குறையால் முட்டைப் பொரியலை விரும்புகிறவா்கள் பொன் விலை கொடுத்தாவது இதை வாங்கிச் செல்கின்றார்கள். அந்தக் காலத்தில் பழஞ்சோறும் பச்சை மிளகாயும் கடித்துத்தான்டா நாங்கள் சாப்பிட்டு இப்படி உசாரா நிக்கிறம் என்ட…

  24. இலங்கைக்கு எதிரான ஐ.நா.விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் அந்த விசாரணைக்குழு முன் அணிதிரண்டு சாட்சியமளிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களைக் கோரியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார். இலங்கை விவகாரம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணைக்குழு தனது விசாரணை நடவடிக்கைகளை ஒஸ்லோவில் ஆரம்பித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளமை தெரிந்ததே. இந்த விசாரணைக்குழு இலங்கை வந்து தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது. அதனால் இங்க…

    • 0 replies
    • 387 views
  25. வடக்கு மாகாணசபைக்கு எதிராக யாழில் சுவரொட்டி! யாழ் நகர் முழுவதும் எழுத்து பிழைகளுடன் வடக்கு மாகாணசபைக்கு எதிராக யாழில் இனம் தெரியாதவர்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://www.pathivu.com/news/32501/57//d,article_full.aspx

    • 0 replies
    • 565 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.