ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
காணிகளை துப்புரவு செய்து நாமாகவே குடியேறுவோம்; கீரிமலை மக்கள் படையினரிடம் நேற்று உறுதியாகத் தெரிவித்தனர் news கடற்படைத் தேவைக்காக சுவீகரிப்புச் செய்யப்படவுள்ள தமது காணிகளை துப்புரவுசெய்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு தாம் குடியமரப் போகின்றோம் என்று காணி உரிமையாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர். அத்துடன் காணி உரிமையாளர்கள் தமது காணிகளை துப்புரவு செய்து குடியமர்வதற்கு, வலி.வடக்குப் பிரதேச சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார். கடற்படையினரின் தேவைக்காக நகுலேஸ்வரத்தில் பொது மக்க ளின் 183 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவற்றை சுவீகரிப்பதற்கு முன்னோடியாக காணிகளை அளவீடு செய்…
-
- 0 replies
- 472 views
-
-
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு பஜகவிடம் கருணாநிதி கோரிக்கை 15 ஜூலை 2014 இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியிடம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி கோரியுள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கை, பாரதீய ஜனதா கட்சி பின்பற்றக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழர் இனச் சுத்திகரி;ப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு காங்கிரஸ் அரசாங்கம் ஆதரவளிக்கத் தவறியதாகத் தெரிவித்துள்ளார். உலகமெங்கிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள், பாரதீய ஜனதா கட்சி தமிழ் மக்கள் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வை…
-
- 0 replies
- 246 views
-
-
புலிகளின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினரின் குற்றஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றம் நிராகரிப்பு! [Tuesday 2014-07-15 09:00] விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் ஒரு இளைஞருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில், அந்த இளைஞர் தனது கைப்பட எழுதிக் கொடுத்ததாகத் தெரிவித்து சமர்ப்பிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு எதிரான சாட்சியமாக ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பான தனது தீர்மானத்தை வவுனியா மேல் நீதிமன்றத்தின் விசேட அமர்வு நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் நேற்று வழங்கினார். வவுனியாவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கணேசரத்தினம் சாந்ததேவன் என்பவருக்கு…
-
- 0 replies
- 334 views
-
-
ஜனாதிபதியின் நடவடிக்கை கேவலமானது என்கிறார் சம்பந்தன்! “வடக்கு மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்காமல், மக்களின் அமோக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு முதலமைச்சரிடம் நேரில் அளித்த வாக்குறுதியை உதாசீனம் செய்து மீண்டும் ஆளுநராக முன்னாள் இராணுவத் தளபதி சந்திரசிறியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். ஜனாதிபதியின் இந்தத் தான்தோன்றித்தனமான நடவடிக்கை கேவலமானது, அசிங்கமானது.” இவ்வாறு கடும் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். “மக்களின் இறைமையையும், மக்களின் பிரதிநிதிக்கு அளித்த வாக்குறுதியையும் அசிங்கப்படுத்திய ஜனாதிபதியையும், அவரால் நியமிக்கப்பட்ட புதிய ஆளுநரையும் இனிமேல் நாம் எப்படி மதிப்பது” என்று…
-
- 0 replies
- 480 views
-
-
மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு இன்று (12) காலை நிறைவு பெற்றது. கடந்த ஜூன் 28ஆம் திகதி கும்பம் வைத்தலுடன் ஆரம்பமான ஆலய நிகழ்வுகள் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற்று தீர்த்தம் ஆடுதல், திருக்குளிர்த்தி பாடுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வுடன் முடிவுற்றது. இதன்போது பிரதேசத்தில் உள்ள பக்க அடியார்கள் அம்பாளின் அருளையும் ஆசியையும் பெற்றதுடன் இசை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர். கோயில்களில் வழிபடச் சென்ற பிள்ளையான் பக்தி பரவசமாகி சாமிக்கு சாட்டையடித்து பாவம் கழுவும் அவலம் சாமி பாவம் http://www.jvpnews.com/srilanka/76193.html
-
- 1 reply
- 2.5k views
-
-
ஆஸி.சென்ற சர்ச்சைக்குரிய படகின் படம் வெளியாகியது (இணைப்பு) இந்தியாவில் இருந்து, 153 இலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றிக் கொண்டு அவுஸ்ரேலியா சென்ற படகின் ஒளிப்படம் முதல்முறையாக வெளியாகியுள்ளது. அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று இந்த ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளது. குறித்த படகு, கடந்த ஜூன் மாதம் அவுஸ்ரேலியப் பயணத்தை ஆரம்பிக்க முன்னர், துறைமுகத்தில் தரித்து நின்ற போது இந்த ஒளிப்படம் எடுக்கப்பட்டதாக, அவுஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும், அந்தப் படத்தில் உள்ளது தான், தடுத்து வைக்கப்பட்டுள்ள படகு என்று உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது. எனினும், குறித்த படகில் உள்ளவர்களின் உறவினர்களே இந்தப் படகு தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளது என்று அவுஸ்ரேலிய சட்டவாளர்களிடம் கூறி…
-
- 0 replies
- 449 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவற்றை கிளிநொச்சியில்அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்க முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலும் கைச்சாத்திடப்பட்டது. இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹாஉயர்கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த உடன்படிக்கையின் கீழ் இந்திய அரசாங்கம் இரண்டு பீடங்களுக்குமான செயன்முறை உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்துக் கொடுக்கும். இதில் விர்pவுரை மண்டபம் கணினி ஆய்வுக்கூடம் வாசிகசாலை நிர்வாக அலுவலகம் மாநாட்டு மண்டபம் போன்றவை உள்ளடங்கவுள்ளன. இதற்காக இந்திய அரசாங்கம் 600 மில்லியன…
-
- 2 replies
- 425 views
-
-
மயிலிட்டி மருதடி சித்தி விநாயகரைக் காணவில்லை! - ஆலய நிர்வாகசபை அதிர்ச்சி [saturday 2014-07-12 09:00] உயர்பாதுகாப்பு வலயமான மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த மருதடி சித்தி விநாயகர் ஆலயத்தைக் காணவில்லையென ஆலய நிர்வாக சபையின் உபதலைவர் தெரிவித்தார். சென்ற வருடம் ஆலயத்திற்குச் செல்ல இராணுவத்தினரால் அனுமதியளிக்கப்பட்ட போது, மருதடி சித்தி விநாயகர் ஆலயத்திற்கு தானும், தனது மனைவி பிள்ளைகளும் சென்று பொங்கல் செய்து வழிபட்டதாகக் கூறினார். இந்நிலையில், நேற்று) மயிலிட்டிக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டு சென்று பார்த்த போது, மருதடிச் சித்தி விநாயகர் ஆலயம் முழுமையாக அழிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். ஆலயம் இருந்த இடத்தினை அருகில் நின்றிருந்த வேப்பமரம் ஒன்றினை வைத்தே அடையாளப்படுத்தியதா…
-
- 15 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவும், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் புலிகளுக்கு ஆதரவளித்து வருவதாக மின்வலு எரிசக்தி அமைச்சர் பவித்தராதேவி வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பிரித்தானிய பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதியும் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற வகையில் ஒபாமாவும், கமரூனும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளின் சில அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலி வாக்குகளினால் தெரிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 3…
-
- 1 reply
- 436 views
-
-
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களிற்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் முதல் செயற்பாடாக கொரியாவில் தொழில் செய்யும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய முறையொன்றை தயாரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை சமூக பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் கொரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சுமனா ஆரியதாஸ குறிப்பிட்டார். இந்த நிலையில் கொரியா மாத்திரமின்றி, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் இலங்கைப் பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் முறையொன்று தயாரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார். http://www.onlineuthayan.com/News_More.p…
-
- 0 replies
- 315 views
-
-
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஐந்து புகலிடக் கோரிக்கையாளர்களின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அவுஸ்திரேலிய அதிகாரிகளினால், கடல் மார்க்கமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 41 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களில் ஐந்து பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். குறித்த சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு காலி நீதவான் உத்தரவி;ட்டுள்ளார். இந்த ஐந்து புகலிடக் கோரிக்கையாளர்களும் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதேவேளை, சர்வதேச கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக இலங்கை…
-
- 0 replies
- 313 views
-
-
குளோபல்தமிழ்;ச்செய்தியாளர் தேசிய மீனவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்று தடைவிதித்துள்ளது. நாளை காலை பத்து அம்சக்கோரிக்கைகளினை முன்வைத்து யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கவுள்ளதாக தேசிய மீனவர் இயக்கம் அறிவித்திருந்தது. இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவிக்க நூற்றுக்குமதிகமான பெரும்பான்மையின பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக இன்று யாழ்.நகரில் அவ்வமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையிலேயே காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் அடிப்படையினில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ் அரசியல் கட்சிகள், சர்வ ம…
-
- 0 replies
- 239 views
-
-
கொமன்வெல்த் நாடுகளின் தலைவர் கொடுங்கோலன் ராஜபக்ச ஸ்கொட்லான்ட கிளாஸ்கோவிற்கு வரவுள்ளான். உலகத்தில் பலர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர் என்ற போர்வையில் அதுவும் யூலைக் கலவரத்தின் அன்று வருகின்றான். அதை மானம் உள்ள தமிழன் ஒவ்வொருவரும் அவனின் வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும். தற்போது இருக்கும் வாய்ப்பு ராஜபக்சவுக்கு எதிராக போர்க் குரல் எழுப்ப வேண்டும். சர்வதேசத்தவர் எமக்கான குரல் கொடுப்பார்கள் அந்த வாய்ப்பை நாம் இழந்துவிடக்கூடாது. தமிழா எமக்கென்று ஒரு கைபிடி மண்கூட இப்போது இல்லை. தமிழா நீ போராடதுவிட்டால் உனக்கு நாடு இல்லாமல் போய்விடும் என கூறியுள்ளார் தமிழீழ உணர்வாளரும் ஓவியருமான சந்தானம் அவர்கள். http://www.pathivu.com/news/32427/57//d,article_full.…
-
- 0 replies
- 361 views
-
-
பொது இடங்கள் மற்றும் மக்கள் கூடும் மிக்க வெற்றிலை எச்சிலை உமிழ்ந்து சூழலை மாசுப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் றோஹண இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். இனிவரும் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்படுபவர்களுக்கு எதிராக கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். http://www.onlineuthayan.com/News_More.php?id=290683223814376824
-
- 5 replies
- 493 views
-
-
2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் பாதாள உலகக் கோஷ்டியினரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் பாதுகாப்பு தரப்பு அதீத அக்கறை எடுத்தது. அதனாலோ என்னவோ தலை நகரில் தலைவிரித்தாடிய பாதாள உலகக் குழுக்களின் நடமாட்டமானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. போதைப் பொருள் கடத்தல், ஒப்பந்த கொலைகளை செய்தல், மிரட்டுதல் போன்றவையே பாதாள உலகக் குழுக்களின் முக்கிய வருமான மார்க்கமாக இருந்தது. இந் நிலையில் பல முக்கிய பாதாள உலகத்தலைவர்கள் என இனம் காணப்பட்ட பலரும் பொலிஸாருடன் சட்ட அமுலாக்கலின் போது முரண்பட்டு உயிர் துறந்ததுடன் மேலும் சிலர் வெளி நாடுகளுக்கு தப்பிச் சென்றனர். எனினும் நாட்டில் இடம்பெற்றுவந்த போதைப் பொருள் வர்த்…
-
- 1 reply
- 632 views
-
-
ஜனாதிபதியின் 'சால்வையை' 'கழுத்துப்பட்டி' என நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதி திங்கட்கிழமை, 14 ஜூலை 2014 09:33 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார். தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு கடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை விஜயம் செய்தனர். அக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் அன்று மாலையே சந்தித்து கலந்துரையாடினர். அந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி ரமபோச இருவரும் இணைந்து இருக்கும் படம் எடுக்கப்பட்டது. அந்த படத்தை, தென்னாபிரிக்கக் குழ…
-
- 1 reply
- 3.4k views
-
-
இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிடப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதனை ஆதரிக்கவில்லை என இந்தியா அறிவித்துள்ளது. அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸிடம், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என கொழும்பு ஊடகமொன்று கேள்வி எழுப்பியிருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்…
-
- 1 reply
- 381 views
-
-
மக்கள் எதிர்ப்பையும் மீறி பொலிஸாரின் துணையுடன் யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதியில் கடற்படையினரால் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 127 ஏக்கர் காணி அளவிடப்படுகிறது. சுமார் 127 ஏக்கர் காணியை கடற்படையினர் தமது தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில் அந்த காணிகளை நிலஅளவைத் திணைக்களத்தினரின் உதவியுடன் காணிகளை அளக்க ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மீண்டும் காணிகளை அளப்பதற்கான முயற்சியை நில அளவைத் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது என்ற தகவல் அறிந்து அந்தப் பகுதி மக்கள் கீரிமலை சோதனைச் சாவடியில் கூடியுள்ளனர். எனினும் மக்களின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு படையினர், நில அளவை அதிகாரிகளை காங்கேசன்துறை வீதியூடாக உள்ளே …
-
- 0 replies
- 1.3k views
-
-
அனந்தியின் ஆதரவாளர்கள் இருவர் வட்டுக்கோட்டையில் கைது! [Monday 2014-07-14 09:00] வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஆதரவாளர்கள் இருவரை வட்டுக்கோட்டைப் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். அண்மையில் திறக்கப்பட்ட அனந்தி சசிதரனின் கட்சி அலுவலகத்தில் நின்றிருந்த வேளையிலேயே அவர்கள் கைதாகியுள்ளனர். திருச்செல்வம் சம்பந்தமூர்த்தி (வயது 25) மற்றும் செல்வரத்தினம் தவச்செல்வம் (வயது 28) ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். தனது அரசியல் பணிகளை முடக்கும் சதி முயற்சியின் ஓர் அங்கமாகவே இந்த கைதும் இடம்பெற்றிருப்பதாக அனந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் அனந்தியினது வதிவிடத்திற்கு அருகாக சந்தேகத்திற்கிடமாக இரவு வேளையில் வாகனமொன்று நடமாடியமை தொடர்பில…
-
- 0 replies
- 328 views
-
-
தேசிய மீனவர்களின் செயற்பாட்டில் தலையிடுவதற்கும் அவர்களின் சார்பில் அறிக்கை வெளியிடுவதற்கும் ஈ.பி.டி.பியினருக்கு யார் அதிகாரம் வழங்கியது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் யாழில் இருந்து வெளியாகும் அரச சார்பு பத்திரிகையில் வெளியான அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் :- எமது மக்களை அரசாங்கம் அடக்குகிறது, இராணுவம் அடக்குகிறது இன்னமும் ஈ.பி.டி.பியினர் அடக்க வேண்டுமென நினைத்தால் அக்கட்சியினர் படுதோல்வியை மட்டுமல்லாது பல ஆப…
-
- 0 replies
- 417 views
-
-
தேசிய மீனவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை காலை 10 .00 மணியளவில் யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகள், சர்வ மதத் தலைவர்கள், மக்கள் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், வடகிழக்கு மற்றும் தென்பகுதி பொதுமக்கள் இணைந்து முன்னெடுக்கும் இப்போராட்டம் பேரூந்து நிலையத்தில் ஆரம்பித்து யாழ் மாவட்ட செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்று மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது. இடம் பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் குடியேற்ற வேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் காணிக் கொள்ளையை நிறுத்த வேண்டும். இலங்கை, இந்திய மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும். வடகிழக்கில் சிவில் பாதுக…
-
- 0 replies
- 285 views
-
-
-யொஹான் பெரேரா நாட்டின் அரசியலில் பாரிய மாற்றத்தை கொண்டுவரும் நோக்கில் அமையவுள்ள ஜே.வி.பி தலைமையிலான கூட்டமைப்பை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐ.தே.க மற்றும் வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுடன் ஜே.வி.பி தலைமையிலான அரசியல் கூட்டை உருவாக்குவதற்காக ஆரம்பக்கட்ட பேச்சுகள் நடைபெறுவதாக ஊடகவியளாலர் சந்திப்பின் போது ஹேரத் தெரிவித்தார். இது சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் பிரதான எதிர்கட்சியான ஐ.தே.க என்பவற்றுக்கு மாற்றாக அமையும் என அவர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் …
-
- 0 replies
- 280 views
-
-
-நா.நவரத்தினராசா யாழ்ப்பாணம், கசூரினாக் கடலில் நண்பனை நீரில் அமிழ்த்தி கொலை செய்ய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்ததாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கடலினுள் அமிழ்த்தப்பட்ட நபர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்ட மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் அடங்கிய நண்பர் குழுவொன்று, கசூரினாக் கடற்கரையில் மது அருந்தியுள்ளனர். இதன்போதே, இவர்களில் நால்வர் இணைந்து, மற்றைய நபரைத் தூக்கிச் சென்று கடலினுள் அமிழ்த்திக் கொலை செய்ய முயற்சி செய்த…
-
- 0 replies
- 377 views
-
-
-கெலும் பண்டார அரசசார்பற்ற நிறுவனங்களுக்கென புதிய சட்டமூலமொன்றை தயாரித்து இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் இயங்கும் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் தாமாகவே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். அரசசார்பற்ற நிறுவனங்கள் 1412, இச்செயலகத்தில் ஏற்கெனவே பதிவுகளை மேற்கொண்டுள்ளன. இச்செயலகத்தினால் அனுமதி அளிக்கப்பட்டால் மாத்திரமே வருடாந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்களுடைய நோக்கங்களுக்கு அப்பால் செல்வதாகவும் அந்த நிறுவனங்களினால் ஊடகவியலாளர் மாநாடுகளையோ அல்லது கருத்தரங்குகளை…
-
- 0 replies
- 235 views
-
-
மட்டக்ளப்பின் புணானை மேற்கு விவசாயப் பிரிவின் நீர்ப்பாசனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பான கூட்டம் கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் 12 விவசாயப் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்குபற்றியிருந்தனர். இதன்போது தங்களது வயல் நிலங்களுக்கு மாதூறு ஓயா ஆற்று நீர்பாசனம் போதியளவு கிடைப்பதில்லை என்றும் இதனால் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்ததாக கல்குடா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விவசாய சம்மேளனத் தலைவர் ஜ.எல்.எம்.முஸ்தபா கூறினார். நிலவரங்களை கேட்டறிந்து கொண்ட இராணுவ தளபதி தற்போதைய தேவைக்காக 3 நாட்களுக்கு…
-
- 0 replies
- 339 views
-