Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவதில் தமக்குள்ள இடர்பாடுகளை மேலோட்டமாகக் கோடிகாட்டியிருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். இவ்விடயம் தொடர்பாக முதலமைச்சரின் சார்பில் அவரது பிரத்தியேகச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அதன் முழு விவரம் வருமாறு: அண்மைக்காலத்தில் வடமாகாண சபையை விமர்ச்சிக்கும் வகையில் தேசிய வானொலியில் விளம்பர வடிவில் சில செய்திகள் ஒலிபரப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. அதனைச் செய்பவர் யாரென்று வெளிப்படுத்த திராணியில்லாது - உரிமை கோராமல் - வெளியிடப்படும் இத்தகைய விஷமத்தனமான பிரச்சாரங்களால் நாம் தளர்ந்துவிடப் போவதில்லை என்ற போதிலும் எமது மக்களுக்கு யதார்த்தத்தை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எம்மைச்…

    • 0 replies
    • 363 views
  2. மாலம்பே சீலரட்ன தேரர் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் பௌத்த மதத்தையே இழிவுபடுத்தி வருகின்றார் என ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணியின் துணைத் தலைவர் மாலம்பே சீலரட்ன தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகள் குண்டர்களைப் போன்று செயற்பட மாட்டார்கள் எனவும், இவர் ஒட்டுமொத்த மத விழுமியங்களையும் அபகீர்த்தி படுத்தி வருவதாகவும் சீலரட்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். பௌத்த பிக்குகள் கருணையை போதிக்க வேண்டியவர்கள் எனவும் தற்போது ஒரு சில பௌத்த பிக்குகள் பொல்லுகளுடன் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகளை குண்டர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சமூகம் நோக்கும் அளவிற்கு மாற்றமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா…

  3. அவுஸ்திரேலியாவினால் இலங்கை கடற்படைக்கு ரோந்துப் படகுகளை நன்கொடையாக கையளிக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிஸனும் பங்கேற்றனர்.(படங்கள்:பிரதீப் பத்திரன) http://tamil.dailymirror.lk/--main/117372-2014-07-09-09-03-28.html

    • 37 replies
    • 1.9k views
  4. வடக்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து பெரும் மகிழ்வும் வியப்பும் தெரிவித்தார் இன்று மாலை யாழ்ப்பாணத்துக்கு குறுகிய நேர விஜயமாக வந்து திரும்பிய ஆஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு விவகார அமைச்சர் ஸ்கொட் மொரிஸன். கொழும்பில் இன்று காலை முதல் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையும் சந்தித்துப் பேசிய அவர், இன்று மாலை யாழ்ப்பாணத்துக்கு சுமார் அரை மணி நேர விஜயமாக வந்து திரும்பினார். வடக்கு மாகாண ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை அவர் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களுடன் குறுகிய நேரம் உரையாடிய சமயமே இங்கு ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து அவர் வியப்புத் தெரிவித்தார். அப்போது அவர் கூறியவை வருமாறு: …

  5. மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று இந்தியா சென்றடைந்துள்ளார். நேற்றுக்காலை கொழும்பில் இருந்து புறப்பட்டு, ஹைதராபாத்தை சென்றடைந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், இன்று முழுவதும் அங்கேயே தங்கியிருப்பார். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரை இன்று அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். சிறிலங்காவுக்கும், இந்த மாநிலங்களுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவாக்குவது குறித்தே அவர் பேச்சுக்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இன்றிரவு 11 மணியளவில் புதுடெல்லியைச் சென்றடையும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், நாளை பிற்பகல் 1 மணியளவில், ஹைதராபாத் இல்லத்தில்,…

  6. வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ளது. இந்தநிலையில், புதிய ஆளுனராக யார் பொறுப்பேற்பார் என்ற அறிவிப்பு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்னமும் அறிவிக்கவில்லை. 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளின் ஆளுனர் ஒருவரின் பதவிக்காலம், அவரது நியமன நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள் என்று சிறிலங்கா அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, 2009ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் சிறிலங்கா அதிபர் முன்பாக பதவியேற்ற, வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தனது 5 ஆண்டுப் பதவிக்காலத்தை நாளை - ஜுலை 11ம் நாள் நிறைவு செய்கிறார். இந்தநிலையில், புதிய ஆளுனர் ஒருவர், நாளை மறுநாள் சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்…

  7. அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இரகசியமாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹெலிகொப்டர் மூலம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்கொட் மொரிசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, வட மாகாண ஆளுனர் சந்திரசிறியை மட்டுமே சந்தித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சார்ந்த எவரையும் மொரிசன் சந்திக்கவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனையும் மொரிசன் சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை வட மாகாண ஆளுநருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவி…

  8. தேசிய மீனவ ஒத்துழைப்பின் இயக்கத்தின் ஏற்பாட்டில் காணி சுவீகரிப்பு , மீள்குடியேற்றம், காணாமல் போனோர் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று எதிர்வரும் 15ஆம் திகதி யாழ். பேரூந்து நிலையத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. போராட்டம் தொடர்பில் தேசிய மீனவர் இயக்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே போராட்டம் தொடர்பில் அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் இருந்தும் மக்கள் கலந்து கொள்கின்றனர். அரசியல் கட்சிகள் , அரசியல் பிரமுகர்கள் மக்கள் அமைப்புக்கள் , மதபுருமார், பெண்கள் அமைப்புக்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ள…

  9. அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், சிங்கள பௌத்த மக்களை சர்வதேச ரீதியில் அவமானத்திற்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதான நபர் என ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது. அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான மோதல்கள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் வெளியிடப்பட்டுள்ளன என அக்கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். அவற்றில், நாட்டின் பெருபான்மை பௌத்த மக்களுக்கும், பௌத்த பிக்குகளுக்கும், பௌத்த அமைப்புகளுக்கும் எதிராக பாரிய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு உண்மை மூடி மறைக்கப்பட்டுள்ளது. இலங்கை வாழ் பௌத்த மக்கள் அசிங்கப்படுத்…

  10. கோண்டாவில் வாள் வெட்டு சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரில் ஒருவர் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோண்டாவில் பகுதியில் வாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சுகிர்தனின் சகோதர்களான செந்தூரன், சாரங்கன் ஆகிய இருவரும் தம்மைத் தாக்கினர் என உரும்பிராயை சேர்ந்தவர்களால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து இருவரும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கடந்த 4ஆம் திகதி வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் சிவகுமார் முன்னிலையில் வழக்கு இன்று எடுத்துகொள்ளப்பட்டது.…

  11. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கில், குற்றவாளிகளை விடுவிக்கும் உரிமை மாநில அரசுக்கு கிடையாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இன்று மனு மீது அரசியல் சாசன அமர்வு விசாரண நடத்தியது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதத்தை தொடங்கினார். அப்போது குற்றவாளிகள் தண்டனை குறைப்பு - விடுதலை என இருபலன்களை பெறுவதால் பாதிக்கப்பட்டவ…

  12. மட்டு., அம்பாறை மாவட்டங்களின் எல்லைப்புற கிராமங்களில் அதிகரித்துள்ள காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கிராமங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. தற்போது இங்கு நிலவும் கடும் வெப்பம் காரணமாக நீர் நிலைகளைத் தேடி காட்டு யானைகள் கிராமங்களுக்குள் படையெடுத்து வருகின்றன. முன்னர் இரவு வேளைகளில் மட்டும் வருகை தந்த காட்டு யானைகள் தற்போது பகல் நேரங்களிலும் கிராமங்களுக்குள் நுழைகின்றன. குறிப்பாக பாடசாலை நேரத்தில் பாடசாலை வளாகங்களுக்குள்ளும் கூட்டமாய் நுழைக…

    • 0 replies
    • 258 views
  13. தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கடுமையாக வாக்குவாதப்பட்ட ஆளும் தரப்பு மாகாண முதலமைச்சர் ஒருவரும், எதிர்க்கட்சி எம்.பி. ஒருவரும் அந்த விவாதத்துக்கு இடையே, அந்த நேரடி ஒளிபரப்பு விளம்பரங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த போது நேரடியாகக் கைகலப்பில் ஈடுபட்டு மோதிக் கொண்டனர். அதனால் அந்த விவாதம் அத்தோடு இடைநிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி ஒலிபரப்பு ஒன்றின் போது இடம்பெற்றது. வடமேற்கு மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜெயசேகராவும், ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட எம்.பியான ஹரீன் பெர்னாண்டோவுமே இப்படி மோதிக் கொண்டனர். இவர்களில் தயாசிறி சேனநாயக்கா இதுவரை ஐ.தே.கட்சியின் எம்.பியாக இருந்தவர். பின்னர் அந்தப் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு ஆளும் தரப்பின் சார்பில் மாகாண ச…

  14. ஆளும் கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படக் கூடிய அபாயம் உருவாகியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார். அடிக்கி வைக்கப்பட்ட சீட்டுக் கட்டு சரிவதனைப் போன்று ஆளும் கட்சிக்குள் சரிவு ஏற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் சிறியவை எனவும் அவற்றை திருத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ஒரு நபரின் ஆதிக்கம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையக் கூடிய அபாயத்தை …

    • 0 replies
    • 350 views
  15. யுத்­தத்­துக்கு பின்­ன­ரான நிலை­மையில் இலங்­கைக்கு எந்­த­வொரு வழி­யிலும் முடி­யு­மா­ன­வரை உத­வு­வ­தற்கு அவுஸ்­தி­ரே­லியா தயா­ராக இருப்­ப­தாக இலங்­கைக்கு வருகை தந்­துள்ள ஆஸி.யின் குடி­வ­ரவு மற்றும் எல்லைப் பாது­காப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விடம் உறு­தி­ய­ளித்­துள்ளார். இலங்­கைக்கு வருகை தந்­துள்ள ஆஸி.யின் குடி­வ­ரவு மற்றும் எல்லைப் பாது­காப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் நேற்று கொழும்பு துறை­மு­கத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார். அவுஸ்­தி­ரே­லி­யா­வினால் இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டுள்ள இரண்டு ரோந்து பட­கு­களின் செயற்­பா­டு­க­ளையும் இதன்­போது ஜனா­தி­பதி ஆரம்­பித்து வ…

    • 1 reply
    • 491 views
  16. அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் நடவடிக்கைகளக் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. மிகவும் இரகசியமான முறையில் யாழ்ப்பாணத்தி;ற்கு விஜயம் செய்திருந்மை கண்டிக்கப்பட வேண்டியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மொரிசன், வடமாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனை சந்தித்திருக்க வேண்டுமென அவர் சுட்க்காட்டியுள்ளார். மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி ஒருவரை சந்திக்காது, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட வட மாகாணசபையின் ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியை சந்தித்தமை ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார். ஸ்கொட் மொரிசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்…

    • 0 replies
    • 428 views
  17. புகலிடக் கோரிக்கையாளர் தாய்மாரை அவுஸ்திரேலிய அரசாங்கம் நடத்தும் விதம் குறித்து அந்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. தேவாலயங்களுடன் தொடர்படைய நலன்புரி அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் என்ற போதிலும் தாய்மாரையும் சிசுக்களையும் சிறையில் அடைத்து வைப்பது உசிதமாகாது என தெரிவித்துள்ளன. எனவே புகலிடக் கோரியுள்ள தாய்மார் மற்றும் சிசுக்களுக்கு பாதுகாப்பான அடைக்கலத்தை வழங்க தேவாலய நலன்புரி அமைப்புக்கள் விருப்பம் வெளியிட்டுள்ளன. சிறைக் கூடங்களில் தடுத்து வைக்கப்படுவதற்கு பதிலாக அவர்களை வீடுகளில் தங்க வைக்க உதவ முடியும் என தெரிவித்துள்ளன. அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சின் ஒத்துழைப்புடன் இ…

    • 0 replies
    • 412 views
  18. ஆஸி.அமைச்சரின் இலங்கைக்கான இரகசிய பயணம்; அம்பலப்படுத்திய ஆஸி.வானொலி! அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன், நேற்றுப் பிற்பகல் யாழ்ப்பாணத்துக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டதாக, அவுஸ்ரேலிய வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன், அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால், சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்ட இரண்டு ரோந்துப் படகுகளை கொழும்புத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்தார். இதையடுத்து. அவர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்களை அடுத்தே, ஸ்கொட் மொறிசன், யாழ்ப்பாணத்துக்கு இரகசியப் பயணத்தை மேற்கொண்டதாக அவுஸ்ரேலிய வானொலி த…

    • 0 replies
    • 423 views
  19. தென்னாபிரிக்க முயற்சிகள் தொடர்பில் இந்தியாவுக்கு தெரியப்படுத்தப்படும் – ரமபோசா! சிறிலங்காவில் தென்னாபிரிக்கா முன்னெடுக்கும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக, இந்தியாவுக்குத் தெரியப்படுத்தப்படும் என்று தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் அமைதி மற்றும் நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுப்பதற்காக, இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார் சிறில் ரமபோசா. இந்தப் பயணத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கொழும்பில் நடத்திய பேச்சுக்களின் போதே, இதுகுறித்து அவர் தகவல் வெளியிட்டுள்ளார். இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பிலும், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்திலும் நடந்த சந்திப்புகளின் போது, தென்னாபிரிக்காவின் இந்த முயற்சி குறித்து, இந்தியா…

    • 0 replies
    • 441 views
  20. 2016இல் சர்வஜன வாக்கெடுப்பு? வியாழக்கிழமை, 10 ஜூலை 2014 02:30 ஜனாதிபதி தேர்தலையா அல்லது நாடாளுமன்ற தேர்தலையா முதலில் நடத்துவது என்பதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில், 2016ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. பிரபல அமைச்சர்களே இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் பெரும்பான்மையை இன்னும் ஆறு வருடங்களுக்கு தக்கவைத்து கொள்வதற்காகவே இந்த வியூகம் வகுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏழாவது நாடாளுமன்றத்திற்கான பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இதற்காக 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 08ஆம் திகதி தேர்தல் நடத…

  21. அவுஸ்திரேலிய நிதி உதவியுடன் இலங்கையில் ஈ கடவுச்சீட்டு 10 ஜூலை 2014 அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் இலங்கையில் இலத்திரனியல் கடவுச் சீட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடவுச் சீட்டு மோசடிகளை தடுக்கும் நோக்கில் புதிய கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. பயோமெற்றிக் முறைமையிலான கடவுச்சீட்டுக்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, சட்டவிரோத குடியேறிகள் கடவுச்சீட்டுக்களை மோசடி செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்வதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 500 மில்லியன் ரூபாவினை இலங்கைக்கு வழங்க உள்ளது.இதற்கு மேலதிகமாக திறைசேரியிலிருந்து 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.பாதுகாப்பு அமைச்சு மற்று…

  22. 153 அகதிகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலியா முயற்சி! [Thursday 2014-07-10 09:00] அவுஸ்ரேலியாவில் படகுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள 153 அகதிகளையும் இந்திய அரசாங்கத்திடம் கையளிக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அகதிகள் படகு, பாண்டிச்சேரியில் இருந்தே புறப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அத்துடன் இந்தியாவின் அகதிமுகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகளே இதில் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே அவர்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் இதனை மறுத்துள்ள இந்தியாவின் அவுஸ்ரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் பிரைன் நந்தா, அவ்வாறான கோரிக்கை எவையும் விடுக்கப்படவில்லை என்று குறிப்பிட…

  23. மட்டக்களப்பில் பிரசித்திபெற்ற ஓந்தாச்சிமடம் ஸ்ரீ வடபத்திரகாளியம்பாள் அலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதிநாளான இன்று புதன்கிழமை (09) தீமிதிப்பு வைபவம் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான அடியவர்களுடன் தீமிதிப்பில் கலந்து கொண்டு தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றினர். இந்நிகழ்வில் அனுராதபுர பெமடுவ விகாரையில் உள்ள சுமணதிஸ்ச தேரோவும் தீமிதிப்பில் கலந்து கொண்டார். வருடாந்த மகோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை ( 01.07.2014) ஆரம்பமானது. உற்சவக் கிரியைகளை விஸ்வப்பிரம்மஸ்ரீ எஸ் சற்குணராஜாக் குருக்கள் தலைமையில் உதவிக் குருமார்கள் நடாத்தினர் http://www.naamthamilar.ca/?p=82369

  24. ஊனமுற்ற இராணுவத்தினரின் மாதாந்த கொடுப்பனவுகளை இராணுவ நிர்வாகம் நிறுத்திவைத்துள்லதால் தாம் மிகவும் கஷ்டப்படுவதாக ரஞ்சித் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் யுத்ததின்போது உடற்திறன் பாதிக்கப்பட்ட ராணுவத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்த கொடுப்பனவுகளை பெற்றுத்தருமாறு கோரி ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் தாக்கல் செய்த மனுவில், அரசாங்கம் பதிலளிக்க மேன்முறையீட்டு அரசாங்கம் கால அவகாசம் வழங்கியுள்ளது. உதவித் தொகைகளை பெற்றுத் தருமாறு கோரி ஊனமுற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் 292 பேர் சார்பில் ஊனமுற்ற ராணுவ உறுப்பினர்கள் சங்கம் மனுத் தாக்கல் செய்திருந்தது. ஊனமடைந்த காரணத்தினால் இராணுவத்தை விட்டு நீக்கப்படும் படையினர் 55 வயதில் ஓய்வூதிய தொகையை பெறும்வரை அவர்களுக்கு மாதாந்த சம்பளம…

  25. கிளிநொச்சியில் மின்சார விநியோகத்திற்காக பலநூற்றுக்கணக்கான பனைகள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன எனச் சுட்டிக்காட்டியுள்ள அப்பகுதி மக்கள், இதனால் இப் பிரதேசத்தின் இயற்கை வளம் அழிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருபவை வருமாறு:- கிளிநொச்சி மாவட்டத்தின் பன்னங்கண்டி, முரசுமோட்டை ஆகிய பகுதிகளில் தற்பொழுது மின்சார விநியோகத்திற்காக வீதிகளுக்கு அருகில் இருக்கின்ற பனைகள் வெட்டி அகற்றப்படுகின்றன. இதனால் பலநூற்றுக்கணக்கான பனைகள் அழிக்கப்பட்டு வருவகின்றன. பயன்தரும் நிலையிலுள்ள பனைகளே இவ்வாறு அழிக்கப்படுகின்றன என இப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதேவேளை இப்பகுதியின் இயற்கை வளமாகவும் இப்பிரதேச மக்களின் சொத்தாகவும் காணப்படுகின்ற பனை மரங்களை அழிக்…

    • 0 replies
    • 248 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.