ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
யாழ்.குடாநாட்டில் படையினரது நில சுவீகரிப்பிற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் அச்சுறுத்தல்களிற்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே உயர்பாதுகாப்பு வலயங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களிற்கு அப்பால் ஆயிரக்கணக்கான் ஏக்கர் நில பரப்பினை படையினர் மக்கள் குடியிருப்புக்களிற்கு மத்தியிலும் ஆக்கிரமித்துள்ளனர். இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலப்பரப்புக்களை விடுவிப்பதாக ஒருபுறம் சர்வதேச சமூகத்திற்கு பிரச்சாரம் செய்து கொண்டு அவற்றினை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு அரசு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. இதற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. அவ்வகையில் திக்கம் அச்சுவேலி மற்றும் தென்மராட்சி நுணாவில் பகுதிகளில் நில சுவீகரிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்…
-
- 0 replies
- 400 views
-
-
இம்மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையான ஒருவார காலப்பகுதியை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரமாகக் கடைப்பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- ஐக்கிய நாடுகள் சபை ஆண்டு தோறும் ஜூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக ஐக்கிய நாடுகள் சபை சிறு தீவுகளும் கடல் மட்ட உயர்வும் என்பதைத் தேர்வு செய்ததோடு ‘உங்கள் குரலை உயர்த்துங்கள், கடல் மட்டத்தை அல்ல’ என்பதை இத்தினத்துக்கான உத்தியோகபூர்வ சுல…
-
- 0 replies
- 369 views
-
-
-எஸ்.குகன் இணுவில் பொது நூலக சனசமூக நிலையத்தில் திருமதி அன்னலட்சுமி சின்னராசா ஞாபகார்த்தமாக 10 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 'படிப்பகம்' திங்கட்கிழமை(02) திறந்து வைக்கப்பட்டது. பொது நூலகத்தலைவர் ச.சிவசங்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்டிடத்தினை ஓய்வு பெற்ற ஆசிரியர் நா.சின்னராசா திறந்து வைத்ததுடன், பெயர்ப் பலகையினை பேராசிரியர் எஸ்.சத்தியசீலன் திரை நீக்கம் செய்துவைத்தார். தொடர்ந்து படிப்பகக் கட்டடத் திறப்பு விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. நூலினை அண்ணா தொழிலக அதிபர் க.பொ.நடராசா வெளியிட்டு வைக்க, இணுவில் பொதுநூலக மூதவை உறுப்பினர் து.சிவராசா முதற்பிரதியினைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபத…
-
- 0 replies
- 301 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணுவ சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையின் போதே இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதாக இராணுவ தலைமையகம் தெரிவித்தது. இந்த நேர்முகத் தேர்வில், குறித்த மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் 44 பேர் தோற்றிய போதிலும் அவர்களில் 37பேர் மாத்திரமே தெரிவானதாக இராணுவம் குறிப்பிட்டது. இவ்வாறு இணைக்கப்பட்டவர்கள், இராணுவத்தின் பொதுச் சேவையணி, இராணுவ பொறியியற் பிரிவு மற்றும் பொறியியற்சேவை றெஜிமன் ஆகிய படையணிகளிலேயே சேவைக்கமர்த்தப்படவுள்ளனர் என்றும் இராணுவ தலைமையகம் மேலும் கூறியது. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 37 தமிழ் இளைஞர்கள் இராணு…
-
- 4 replies
- 507 views
-
-
இலங்கையை கண்காணிக்கிறது சீனா? – யாழில் உளவு விமானம் மீட்பு!? யாழ்.நகரிலுள்ள விடுதியொன்றின் கூரையிலிருந்து சிறியரக ஆளில்லா உளவுவிமானம் ஒன்றை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மீட்டுள்ளனர். தற்பொழுது யாழ்.பொலிஸாரின் வசமுள்ள இந்த உளவு விமானம் எந்த நாட்டின் வேவு விமானமென இதுவரை அடையாளம் காணப்படவில்லை. விடுதி நிர்வாகத்தினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே இது மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது. வேவு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட குறித்த ஆளில்லா வேவு விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே வீழ்ந்திருக்கலாமென நம்பப்படுகின்றது. இது குறித்து யாழ். பொலிஸார் எதுவித தகவல்களையும் வெளியிடவில்லை. இது தொடர்பாக விமானப்படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வந்து அதை ஆரா…
-
- 4 replies
- 3.1k views
-
-
மது போதையில் தனது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி தப்பியோடிய இராணுவ சிப்பாய் ஒருவரை மொனராகலை பகுதியின் தம்பகல்லை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தம்பகல்லை கங்கொடகம பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வயோதிபப் பெண் தனிமையில் இருந்தவேளையில் வீட்டிற்குள் நுழைந்த இராணுவ சிப்பாயான பேரன் அவர் மீது பாலியல் வல்லுறவினை மேற்கொண்டுள்ளான். அதனால் அதிர்ச்சியடைந்த பாட்டி கூக்குரலிடவே பேரன் தப்பியோடியுள்ளான். கூக்குரல் சத்தத்தைக் கேட்டு அங்கு கூடியவர்கள் தப்பியோடிய நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த நபர் விடுமுறையில் வீடு வந்தவரென்றும் தனது தாயின் தாயையே மதுவெறியில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளாரென்ற…
-
- 2 replies
- 655 views
-
-
மூன்று நாட்களில் 23 பேர் மரணம் மண்மேடு சரிந்து 14 பேர் உயிழப்பு 2014-06-03 19:57:42 (பிஸ்ரின் முஹம்மத்) நாட்டில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணத்தால் கடந்த மூன்று நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. எஹலியகொடை யாய வீதி என்ற பிரதேசத்தில் நேற்று காலை சுவர் ஒன்று உடைந்து விழுந்து அதில் சிக்குண்டு சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. எஹலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான மிதுன் குமார என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இந்தப் பிரதேசத்தில் பெய்த கடுமையான மழையால் உடைந்து வீழ்ந்திருந்த மா மரத்தை பார்க்கச் சென்ற போதே அதற்கு அருகில் இருந்த மதில் சிறுவன் மீது உடைந்து வ…
-
- 0 replies
- 398 views
-
-
சம்பந்தன் ஜெயலலிதா அவர்களுக்கு எழுதிய கடிதற்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கண்டனம்! திரு சம்பந்தன் அவர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு எழுதிய கடிதற்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தமது மாறுபட்ட கருத்தினை எழுதியுள்ளார்கள். அன்பான தமிழ் மக்களுக்கு, அண்மையில் திரு சம்பந்தன் அவர்கள் எம்மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு கடிதத்தினை அனுப்பி இருந்தார். அதில் தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் மட்டுமே வாழவே விரும்புகின்றனர். எனவே அப்படியான தீர்வை பெற்று தருவதற்கு ஒத்துளைப்பு வழங்கும் வண்ணம் கேட்டிருந்தார். இக்கூற்று இங்கு பிரச்சனையான விடையமாக உள்ளது. இது திரு சம்மபந்தன் அவர்களின் தனிப்பட்ட கருத்தே அன்றி தமிழ்த்தே…
-
- 0 replies
- 665 views
-
-
இலங்கை ஜனாதிபதியுடனான முதலாவது சந்திப்பிலேயே இலங்கைத் தமிழரின் விவகாரம் தொடர்பில் மோடி பேசியிருப்பது இலங்கைத் தமிழ் மக்களுக்கு கிடைத்த நல்லதொரு சமிக்ஞையாக தோன்றும் அதேவேளை, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கக்கூடிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா, தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சக்தி என்பதை கடந்த தேர்தல் மூலம் நிரூபித்துள்ளதுடன், அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் கூடுதல் அக்கறை காட்டிவரும் சூழ்நிலையில், மோடியுடன் ஜெயலலிதா சந்திக்கும் வேளையில் இலங்கைத் தமிழரின் பிரச்சினை முக்கிய விடயமாக பேசப்படும் எனவும் இதுவே …
-
- 0 replies
- 404 views
-
-
கிளிநொச்சி நகரின் மத்தியில் உள்ள பரவிப்பாஞ்சான் பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த நான்கு வருடங்களாக தங்கள் சொந்த இடத்தை தங்களிடம் மீள கையளிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டன. ஆனால் இன்னமும் யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட நிறைய பிரதேசங்கள் இராணுவத்தினார் விடுவிக்கப்படவில்லை. மாறாக இன்னும் இன்னும் நிலங்களை இராணுவத்தினர் வசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்தபோது தான் முன்னெடுக்கும் நல்லிணக்கம், மீள் கட்டமைப்பு, அபிவிருத்தி தொடர்பில் மகிந்த ராஜபக்ச அவருக்கு விளக்கம் அளித்தாக இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. போருக்க…
-
- 0 replies
- 326 views
-
-
- ஒரு நாட்டில் பிரச்சினைகளோ, சிக்கல்களோ, தலையீடுகளோ வேறெந்த குறைபாடுகளோ அற்ற துறையாக விளங்கவேண்டிய துறைகளில் ஒன்றாக கல்வித்துறையுள்ளது. கல்வித்துறையே நாட்டின் அத்திபாரமாகவுள்ளது. நமது நாட்டில் கல்வித்துறையின் முக்கியத்துவம் புரிந்து கொள்ளப்படாமலுள்ளது என்றே எண்ணவேண்டியுள்ளது. கவலைதரும் இந்நிலை நாட்டின் எதிர்காலத்திற்கு பல பாதகங்களை உருவாக்கிவிடும். நாட்டின் கல்விக் கொள்கை மிக உயரத்தில் உள்ளது. நடைமுறையில் அக்கொள்கை செயலிழந்தவொன்றாகவே காணப்படுகின்றது. அரசியலமைப்பில் தமிழ் மொழிக்கு அரசகரும மொழி மற்றும் நிர்வாக மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்த போதிலும் அவை நடைமுறையில் செயற்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ளமை போன்றே கல்வித் துறைசார் கொள்கை, கோட்பாடுகளும் உள்ளமையை நோக்க வேண்டிய…
-
- 0 replies
- 889 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருணாட்டுக்கேணி பகுதிகளிலுள்ள தமது சுமார் 7,500 ஏக்கர் வயல் மற்றும் தோட்டக் காணிகளை மீட்டுத்தருமாறு வட மாகாண முதலமைச்சரிடம் தமது உறுதிகள், அனுமதிப்பத்திரங்கள் சகிதம் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர். முல்லைத்தீவு பகுதி மக்களின் பிரச்சினை குறித்து அறிந்து கொள்ளுமுகமாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்தார். இதன் ஒரு கட்டமாக கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருணாட்டுக்கேணி பகுதி விவசாயிகளை கொக்குத்தொடுவாய் தெற்கு பொது நோக்கு மண்டபத்தில் காலை 10.15 மணியளவில் முதலமைச்சர் சந்தித்தபோதே தமது காணிகளை மீட்டுத்தருமாறு விவச…
-
- 0 replies
- 432 views
-
-
யாழ். மாவட்டத்தில் எள்ளுப் பயிர்ச் செய்கையில் ""உமா'' இனம் சிறந்த விளைச்சலை தருவதோடு யாழ். மாவட்டத்தின் காலநிலைக்கு ஏற்றதொன்றுமாகும். விவசாயிகள் ""உமா'' இனத்தை பயன்படுத்தி எள்ளுச் செய்கையை மேற்கொள்ளலாம். இந்த வருட சிறுபோக எள்ளுப் பயிர்ச் செய்கை உத்தேச இலக்கை எட்ட முடியவில்லை. கடும் வறட்சி நிலையால் எள்ளுப் பயிர்ச் செய்கையின் அளவு குறைவடைந்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார் யாழ். மாவட்ட விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் இ.சிறிபால சுந்தரம். இது தொடர்பாக பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவிக்கையில் ""எள்ளுப் பயிர்ச் செய்கையின் இந்த வருடத்துக்கான உத்தேச இலக்கு 950 ஹெக்ரெயர் என்று தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த இலக்கை எட்ட முடியவில்லை. குறைந்த அளவிலேயே செய்கை மேற்கொள்ளப்ப…
-
- 0 replies
- 446 views
-
-
அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம்!!! தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு – சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம் – தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு உட்பட்டு வாழும் மக்கள், அதற்கு எதிராக செயற்பட முன்வராமல் இசைவாக்கம் அடைந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. இதனைத்தான் இலங்கை அரசும் எதிர்பார்க்கின்றது. ஆகவே, புதிதாக சிந்தித்து, முற்போக்கான முறையில், பரந்துபட்ட அரசியலாக, தீர்வுகளை தரக்கூடிய வகையிலான சிந்தனைக்கொண்ட தலைமை (அனைவரையும் உள்வாங்கிய இயக்கம்) இன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியமாக இருக்க…
-
- 0 replies
- 353 views
-
-
இலங்கையில் இயல்புநிலையில்லை – பஞ்சாப் மாநில முன்னாள் காவல்துறை தலைவர்! சிறிலங்காவில் தீவிரவாதத்துக்கு இராணுவ வழிமுறைகளின் ஊடாக தீர்வு காணப்பட்டுள்ள போதும், அங்கு இயல்பு நிலை ஏற்பட்டு விடவில்லை என்று, இந்தியாவின் பஞ்சாப் மாநில முன்னாள் காவல்துறை தலைவர் ஜூலியோ றிபெய்ரோ தெரிவித்துள்ளார். 1980களில், பங்சாப்பில், காலிஸ்தான் பிரிவினைவாதப் போராட்டம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில், பஞ்சப் கால்துறை தலைவராக இருந்த இவர், இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாத பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளின் மூலம் தீர்வு காண முடியாது என்று வலியுறுத்தியுள்ள இவர், அதற்கு அயர்லாந்து மற்றும் ஸ்பெய்னின் பாஸ்க் ஆகியவற்றை உதாரணமாக எடுத்துக் கூறியுள்ள…
-
- 0 replies
- 836 views
-
-
இலங்கை அரசை ஆட்டிப்படைக்கப் போகும் ஐ.நாவின் பதின்மூவர் யாவர்?! சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நியமிக்கவுள்ள விசாரணைக் குழுவில் குறைந்தபட்சம் 13 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணைக் குழுவை இரண்டு நிபுணர்கள் மேற்பார்வை செய்யவுள்ளனர். அவர்களில் ஒருவர், அனைத்துலக அளவில், பிரபலமான உயர்மட்ட பிரமுகராக இருப்பார். இந்த விசாரணைக் குழுவில், டிஜிட்டல் சான்றுகளை ஆய்வு செய்வதற்கான தடயவியல் நிபுணர்களும் இடம்பெறவுள்ளனர். இவர்கள், அடுத்த எட்டு மாதங்களில் சாட்சிகளை சேகரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களைப் பெறவும், ஏனைய தகவல் மூலங்களைப் பெற…
-
- 0 replies
- 1k views
-
-
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 6 படகுகளும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-08-09-09-39-45/112822-2014-06-03-03-33-44.html
-
- 0 replies
- 428 views
-
-
-எம்.எம்.அனாம் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கதிர்காக கொடியேற்றத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமான்ஆறு பகுதியில் இருந்து நடைபாதையாக கடந்த 10 ஆம் திகதி புறப்பட்ட பக்த அடியார்கள் ஐம்பது (50) பேர் திங்கட்கிழமை(2) வாழைச்சேனையூடாக சித்தான்டி முருகன் கோவிலை சென்றடைந்துள்ளனர். சித்தாண்டியை வந்தடைவதற்கு தங்களுக்கு 24 நாட்கள் சென்றுள்ளதாகவும் எதிர்வரும் 18ஆம் திகதி உகந்தை முருகன் கோவிலை அடைவதே எங்களது நோக்கம் என்று அக் குழுவிற்கு பொறுப்பாக செல்லும் எஸ்.மகேந்திரன் என்பவர் தெரிவித்தார். நடைபாதையாக கதிர்காம கொடியேற்றத்திற்குச் செல்லும் பக்த அடியார்கள் கோவில்களில் தங்களது ஆகாரங்களை முடித்துக் கொள்வதாகவும் எஸ்.மகேந்திரன் தெரிவித்தார். tamilmirror
-
- 0 replies
- 425 views
-
-
- செல்வநாயகம் கபிலன் யாழ்.வேலணை மத்திய கல்லூரியில் மகிந்தோதய திட்டத்தில் அமைக்கப்பட்ட ஆய்வுகூடங்கள் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் திறந்து இன்று திங்கட்கிழமை (02) வைக்கப்பட்டன. கணிணி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டன. கல்லூரி அதிபர் சிவசாமி கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர். tamilmirror
-
- 3 replies
- 510 views
-
-
குசந்தன் அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளும் நாடு கடத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. இதில் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் இருந்த குசந்தன் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இவர்தான் சிலின் ரக விமானங்களை தாக்குதல் விமானங்களாக மாற்றியதாக கூறப்படுகின்றது. தென்மராட்சியின் மீசாலையை சேர்ந்த சுந்தரலிங்கம் குசந்தன் என்ற இவர் 1994இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் குசந்தன் மாஸ்ரர், முல்லைசசெல்வன் உள்ளிட்ட பெயர்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் சரத்பாபு 6 பயிற்சிமுகாமில் பயிற்சிபெற்று இம்ரான் பாண்டியன் படையணியில் இணைந்தபோ…
-
- 10 replies
- 3k views
-
-
(Lanka-e-News-26.May.2014, 8.30PM) A 20 years old deceitful business of ‘Link natural products Co.’ selling samahan by pulling the wool over the eyes of the people had been uncovered. An individual who knows the ins and outs of this fraud revealed to Lanka e news as follows : The product in the name of ‘Samahan’ which is advertised as an ayurveda cure providing instant relief for coughs contains the essence that is obtained from a toxic drug Iso propyl , and each 4 gram packet of ‘Samahan’ is made up of 0.5 grams essence of isopropyl and 3.5 grams of sugar. This means in each packet there is 87.5 % sugar. Though such a high percentage of sugar is contained in t…
-
- 2 replies
- 1.2k views
-
-
வல்லை இராணுவ முகாமைப் படைத்தளமாக விஸ்தரிக்கும் முயற்சியில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். போர் அனர்த்தம் இடம்பெற்ற காலத்தில் வல்லைச் சந்தியில் இராணுவச் சோதனை முகாமை அமைக்கப்பட்டு சோதனைகளும், வாகனப் பதிவுகளும் இடம்பெற்று வந்தன. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்துச் சோதனை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு இராணுவ முகாமும் சந்நிதி கோயில் வீதிப் பக்கமாகப் பின்னகர்த்தப்பட்டது. பின்னர் பருத்தித்துறைப் பிரதான வீதியின் பக்கமாக சிறிய முகாமாக அமைக்கப்பட்டிருந்த இந்த முகாமைத் தற்போது இராணுவத்தினர் புனரமைத்து பெரிதாக்கிவருகின்றனர். கனரக வாகனங்கள் மூலம் தினமும் கொண்டு வந்து இறக்கப்படும் உபகரணங்களைக் கொண்டு இப் புதிய படைமுகாம் விஸ்தரிக்கப்படுகின்றது. இப்புதிய படைமுகாமில…
-
- 0 replies
- 441 views
-
-
- 'கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் பிரதேச பாடசாலைக்குள் தமிழ் மொழியுடன் தொடர்புடைய நிகழ்வொன்றில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது அடிப்படை மனித உரிமையை மீறும் செயல்' என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 'களுதாவளை மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(1) நடைபெற்ற கிழக்கு மாகாண தமிழ் மொழி தின விழாவில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பில் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. சில அழுத்தங்கள் வழங்கப்பட்டு இந்த நடடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இலங்கை அரசியல் யாப்பில் சிங்கள மொழியும் தமிழ் மொழியும் தேசிய மொழியாக கொள்ளப்பட்…
-
- 0 replies
- 536 views
-
-
வடமாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு திங்களன்று முதற் தடவையாக விஜயம் செய்துள்ளார். ஒட்டுசுட்டான், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாகப் பார்த்து, மக்களைச் சந்தித்து குறை நிறைகளைக் கேட்டறிந்தார். ஒட்டுசுட்டான் பகுதியில் பாவட்டிமலை பகுதியில் மூன்று இடங்களில் பாரிய அளவில் கருங்கல் தோண்டுதலும், மணல் அகழ்தலும் இடம்பெற்று வருவதனால், இங்கு கற்களை உடைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற வெடிகளினால் ஏற்படும் நில அதிர்வு காரணமாக அயலில் உள்ள கிராமங்களின் வீட்டுச் சுவர்கள் வெடிப்பேற்பட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பு எற்பட்டிருப்பதாகப் பொதுமக்க…
-
- 0 replies
- 347 views
-
-
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் அரசியல் ஸ்திரத் தன்மைக்கு ஒரு அச்சுறுத்தல் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மோடியும் அவரது புதிய அரசாங்கமும் 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளதுடன் இந்தப் பிரச்சினை தொடர்பில் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொரளை எல்விட்டிகல தொடர்மாடியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். மோடி 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வை வழங்குமாறு கூறியுள்ளார். இதனால் அதனை அரசாங்கம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சியை விட்டு…
-
- 2 replies
- 765 views
-