Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. -கெலும் பண்டார கிளிநொச்சியிலிருந்து பளை வரை தற்போது விஸ்தரிக்கப்பட்டுள்ள வடக்கிற்கான ரயில் சேவைகள் இம்மாத இறுதிக்குள் சாவகச்சேரிவரை இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகளை விஸ்தரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், நாவற்குழி பாலத்தை புனரமைக்கும் பணிகள் காரணமாக தாமதமடைந்திருந்ததாகவும் விரைவில் பணிகள் பூர்த்தியடைந்து யாழிற்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் ஜி.ஏ.பி.;ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நாவற்குழி பாலத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது பூர்த்தியடையாமல் காணப்படுவதால், சாவகச்சேரிவரை ரயில் சேவைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த…

  2. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றுவதற்காக தமிழ் பேசும் வைத்தியர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுப்பி வைக்குமாறு, வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை நீக்க இந்தியாவில் இருந்து தமிழ் பேசும் மருத்துவர்களை 2 ஆண்டுகள் சேவை செய்ய அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் தனது வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்கள் பற்றாக்குறையை நீக்குவதற்காகவும் இந்தியாவில் தமிழ் பேசும் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களையும் 2 ஆண்டு…

  3. தேவ அச்சுதன் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேசத்தினை உலுக்கிய இரட்டைக்கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபர் தவிர்ந்த ஏனைய மூவர் மட்டக்களப்பு மேல்நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்தவருடம் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி செங்கலடி - பதுளை வீதியில் உள்ள வீட்டில் வைத்து வர்த்தகர்களான கணவன்-மனைவி இருவர் கோரமாக கொலைசெய்யப்பட்டிருந்தனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது குறித்த தம்பதியரின் மகள் உட்பட நான்கு பேர் ஏறாவூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பிலான வழங்குகள் ஏறாவூர் நீதிமன்றில் நடத்தப்பட்டுவந்த அதேவேளை பிணை கோரப்பட்ட வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றிலும் தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு …

  4. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து அதில் ஒரு வாரம் விளக்கேற்றும் நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது என்று வற்றாப்பளை அம்மன் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். முள்ளியவளை காட்டா விநாயகர் கோயிலிலிருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு பக்தர்கள் புடைசூழ தீர்த்தம் எடுப்பதற்காக புறப்படுவர். சிலாவத்தைக் கடலிலேயே தீர்த்தம் எடுக்கப்படும். இந்த ஆலயத்iதை அண்டிய பகுதிகளிலேயே முள்ளிவாய்க்கால் இறுதியுத்தம் நடந்தது. தமிழ்மக்களின் வரலாற்றுடன் பின்னிணிப் பிணைந்த இந்த ஆலயம் தமிழ்மக்களின் அவல வரலாற்றிலும் இரண்டக்கலந்துவிட்டது. பொங்கல் நடைபெறப் போகின்ற தென்பதை உபகரிப்புக்க…

  5. ஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் உல்லாசப் பயண விசாவில் இலங்கைக்கு வருவதானால் அவருக்கு அனுமதி வழங்கப்படும், ஆனால், போர் குற்றங்கள் பற்றிய விசாரணைக்காக அவர் வருவதானால் விசா வழங்குவது குறித்து வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மேற்கொள்ளவுள்ள விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் உதவப்போவதில்லை எனவும் தெரிவித்த அவர், இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் குறிப்பி;ட்டார். குறிப்பிட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருக்கும் நிலையில்,…

    • 1 reply
    • 516 views
  6. வடக்கிற்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதில் தவறில்லை என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். எனினும், ஏனைய மாகாணங்களுக்கு இவ்வாறு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதில் ஆபத்து காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஏனெனில் சில அரசியல்வாதிகளின் நடத்தை குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் இதனால் காவல்துறை அதிகாரங்களை சகல மாகாணங்களுக்கும் வழங்க முடியாது எனவும்; அவர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் காவல்துறை அதிகாரங்களுடன் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய காவல்துறை ஆணைக்குழு, காணி ஆணைக்குழு ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் அதிகாரங்களை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்களுக்கு காவல்துறை அதிக…

  7. இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டு விஜயம் இலங்கையாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து மோடி தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.அண்டை நாடுகளான பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு மோடி விஜயம் செய்ய உள்ளதாக பாதீய ஜனதா கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு விஜயமாக இலங்கைக்கு பயணம் செய்யக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேற தந்திரோபாய காரணிகளுக்காக இலங்கையுடன் மிக நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள புதிய அரசாங்கம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கு நரேந்திர …

  8. -ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரியினுள் அதிபரும் ஆசிரியர்களும் நுழையமுடியாதவாறு பூட்டுப் போட்டு பெற்றோரும் மாணவர்களும் திங்கட்கிழமை (02) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'தகுதி இல்லாத அதிபரையும் குறிப்பிட்ட ஆசிரியர்களையும் இடமாற்று' என்று கோஷம் எழுப்பியவாறு பெற்றோரும் மாணவர்களும் பாடசாலைக்கு முன்பாக நின்றிருந்தனர். மேற்படி பாடசாலையின் முன்னேற்றத்திற்கு அதிபர் தடையாக இருப்பதாகவும் தற்போதைய அதிபரின் நடவடிக்கையால் பாடசாலையின் கல்வி சீரழிந்து செல்வதாகவும் பாடசாலை எந்தவொரு முன்னேற்றத்தையும் காணவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் மட்டக்களப்பு …

  9. தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த சனிக்கிழமை இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்தியா ராமநாதபுரத்தைச் சேர்ந்த 29 மீனவர்களும் இன்று திங்கட்கிழமை(2) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த மீனவர்களை இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டார். இந்தியா ராமநாதபுரத்தைச் சேர்ந்த 29 மீனவர்களும் 6 படகுகளில் கடந்த சனிக்கிழமை இரவு இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தலைமன்னாh கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றதோடு குறித்த படகுகளையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். -…

  10. யாழ். மருதங்கேணி கட்டைக்காடு, நித்தியவட்டி காட்டுப்பகுதியில் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தை சேர்ந்த மரியதாஸ் மகேஸ்வரன் (28) என்பவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; உயிரிழந்த நபருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த வெள்ளிக்கிழமை(30) பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தினால் விவகாரத்து வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த நபர் நேற்று சனிக்கிழமை (31) தனது மனைவியிடமிருந்து குழந்தையினை பலவந்தமாக பறித்துச் சென்று, தனது வீட்டிலிருந்து 400 மீற்றர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியில் குழந்தையை கொலை செய்ததுடன், தானும் தற்கொலை செய்துள்…

  11. கல்முனையில் சிங்கள பிரதேச செயலர் - முஸ்லிம்கள் அதிர்ச்சி அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு (முஸ்லிம் பிரிவு ) பிரதேச செயலாளராக சிங்களவரொருவர் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அந்த பிரதேச முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன. கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தை பொறுத்தவரை, அது கல்முனை தொகுதியிலுள்ள அனைத்து முஸ்லிம் கிராமங்களையும் நிலத் தொடர்பற்ற முறையில் இணைத்து உருவான பிரதேசத்தின் சிவில் நிர்வாக மையமாகும். அந்தப் பிரதேசத்தில் 99 சத வீதம் முஸ்லிம்கள் வாழ்வதால் இந்தப் பிரதேச நிர்வாக மையம் முஸ்லிம் பிரதேசம் என்று அழைக்கப்படுகின்றது. தமிழர்களையும் முஸ்லிம்களையும் கொண்ட கல்முனை தொகுதியில் நிலத் தொடர்பற்ற முறையில் தமிழ் கிராமங்களை கொண்டதாக கல்முனை…

    • 3 replies
    • 605 views
  12. - எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன் யாழ்.அச்சுவேலி இராச வீதியில் இராணுவ முகாமிற்கு காணி சுவீகரிக்கும் நோக்கில் நிலஅளவை மேற்கொள்ள எடுத்த முயற்சி மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தினைச் சேர்ந்த 9 குடும்பங்களில் 53 ஏக்கர் தோட்டக் காணியினை இராணுவ முகாம் அமைப்பதற்கு சுவீகரிக்கப்படுவதாக ஏற்கனவே துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது. தொடர்ந்து, திங்கட்கிழமை (02) காலை நிலஅளவையாளர் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து குறித்த காணிகளை அளவீடு செய்ய முயன்றனர். அவ்வேளை அங்கு கூடிய, காணி உரிமையாளர்கள் மற்றும் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரந…

  13. வடக்கில் தமிழ் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி இருக்கின்ற நிலையிலும் வன்னியில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களிலுள்ள குழந்தைகள் புட்டிப்பாலுக்கு அழுகின்ற நிலையிலும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தியோபூர்வ இல்லத்திற்கும் அலுவலகத்திற்கும் மாதாந்தம் மூன்றரை இலட்சம் ரூபா வாடகை செலுத்தப்படுகின்றமை தொடர்பாக வடமாகாணத்திலுள்ள பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களுக்கான அரசு என்றிருக்கின் வடக்கு மாகாண சபையின் முதல்வர் இப்படி பெருந்தொகைப் பணத்தை வாடகையாகச் செலுத்துவதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பெரும் துரோகம் இழைக்கின்றது என்றும் வடக்கிலுள்ள புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து வடக்கு தனியே…

    • 3 replies
    • 584 views
  14. -வடமலை ராஜ்குமார் திருகோணமலை, அன்புவழிபுரம் பொது மயான சமாதிகளிலுள்ள தமிழ்ப் பெயர்களடங்கிய கல்வெட்டுக்கள் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த கல்வெட்டுக்களிலுள்ள பெயர்கள், விரங்கள், மற்றும் புகைப்படங்கள் என்பவையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினைத் தொடர்ந்து, திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராஜா மற்றும் உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் ஆகியோர் சனிக்கிழமையன்று (31) சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். tamilmirror

    • 0 replies
    • 359 views
  15. 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டுமென ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் துரித கதியில் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லதை கொடுத்தால் நல்லது கிடைக்கும் என்ற எண்கக்கருவின் அடிப்படையில் 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் கடந்த கால கசப்பான அனுபவங்கள் முறியடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியதென அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியானது இலங்கைத் தமிழர் பிரச்சினையால் கிடைக்கப்பெறவில்லை எனவும், திமுகவின் 2ஜீ ஸ்பெக்;ட்ரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் மோசடிகள் அம்பல…

    • 1 reply
    • 777 views
  16. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருவதற்கு முன்னார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவாராஜ் எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எ திர்கட்சியின் முன்னாள் தலைவியாக இருந்த போது வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு இவர் 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு நாடாளுமன்றத்துக்கு குழு ஒன்றுடன் வருகை தந்திருந்தார். அந்நேரத்தில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு சென்று யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களையும் உள்நாட்டு தலைவர்களையும் சந்தித்தார். அதே போன்று மலையத்தில் வாழும் இந்திய வம்சாவளியினருக்காக இந்திய நிதிதிட்டம் ஒன்றையும் ஏற்படுத்தியிருந்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/112520-2014-05-30-13…

  17. சிறிலங்காவின் எட்டாவது விமானப்படைத் தளபதி மரணம் [ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 01:12 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா விமானப்படையின் எட்டாவது தளபதியான எயர் சீவ் மார்சல் ரெறன்ஸ் குணவர்த்தன நேற்று காலமானார். இரண்டாம் ஈழப்போர் காலத்தில், இவரே, சிறிலங்கா விமானப்படைத் தளபதியாகப் பணியாற்றியிருந்தார். 1990 ஓகஸ்ட் 1ம் நாள் தொடக்கம், 1994 பெப்ரவரி 16ம் நாள் வரை இவர் சிறிலங்கா விமானப்படைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார். பெல் உலங்குவானூர்திகள் மற்றும் சியாமாசெற்றி குண்டுவீச்சு விமானங்களுடன் செயற்பட்ட சிறிலங்கா விமானப்படை, இவரது காலகட்டத்திலேயே, நவீன மயப்படுத்தப்பட்டது. புக்காரா குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் சீனாவின் எவ்-7 ஜெட் போர் விமானங்கள் என்பனவு…

  18. மலேசியாவில் உள்ள 6000 ஈழத்தமிழ் அகதிகளின் தற்போதைய அவல நிலை! [saturday, 2014-05-31 21:53:12] மலேசியாவில் உள்ள ஆறாயிரத்திற்கும் அதிகமான ஈழத்தமிழ் அகதிகள் எப்போதும் பல வளிகளில் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படலாம். அதன் போது கைது செய்யப்படுவோர் நாடுகடத்தப்படலாம் எனும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர் - இந் நிலைபற்றி எமது செய்தி தளத்திற்கு தமது தற்போதைய நிலையை விளக்கி ஒரு தமிழ் அகதி குடும்பஸ்தர் அனுப்பிவைத்துள்ள செய்தி ஒலிவடிவாக. மலேசியாவிலுள்ள ஈழத்தமிழ் ஆதரவு தமிழர் அமைப்புக்கள் இதை கவனமெடுப்பார்களா..? நன்றி - செய்தியிணையம்

    • 0 replies
    • 624 views
  19. ஈழம் குறித்து எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் ஈழத்தமிழர்களின் உணர்வுகளை காசாக்கும் முயற்சியாகவே இருந்துள்ளது. காசு பார்ப்பதுடன் ஈழத்தமிழர்களையும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் முயற்சியும் இதில் அடங்கும். ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் படங்களை குதூகலத்துடன் அனுமதிக்கும் சென்சார் ஈழத்தமிழர்களின் வேதனைகளைச் சொல்லும் படங்களை கறாராக தவிர்த்து விடுகிறது. சென்சாரின் கத்திரிக்கோலுக்கு தப்பித்து ஈழம் குறித்த நேர்மையான படத்தை எடுப்பது இன்றைய தேதியில் கடினம். இப்படியொரு சூழலில் ஈழம் குறித்த படங்களை எடுக்காமலிருப்பதே உத்தமம். அரைகுறை புரிதலுடன் எடுக்கப்பட்டு சென்சாரில் குதறப்பட்டு குறைபிரசவங்களாக வெளிவரும் அனைத்துப் படங்களும் ஏதோ ஒருவகையில் ஈழத்துக…

    • 0 replies
    • 514 views
  20. நரேந்திர மோடியின் வெளியுறவு ஆலோசகராக ஜெய்சங்கர்? - இலங்கை விவகாரத்தில் பரிச்சயமானவர். [sunday, 2014-06-01 07:49:38] இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகராக அமெரிக்காவுக்கான இந்திய தூதரான சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இவர் இந்திரா காந்தி காலத்தில் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக இருந்த ஜி. பார்த்தசாரதியின் கீழ் பணிபுரிந்தவர்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இலங்கை விவகாரங்களுக்கு என்று தனியே பார்த்தசாரதி என்ற அதிகாரி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அதைப் போல பிரதமர் நரேந்திர மோடியும் தமது சிறப்பு பிரதிநிதி ஒருவரை இலங்கை விவகாரங்களுக்கு என நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இ…

  21. இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு - சுஸ்மாவுடன் பேசினாராம் ஜோன் கெரி! [sunday, 2014-06-01 07:42:03] இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப் பிடியில் இருந்து சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக பதவி ஏற்றுள்ள சுஷ்மா சுவராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறிய போது அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இதனைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இலங்கையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளில் இந்தியா அவதானம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜோன் கெரி எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=110470&category=TamilNews&language=tam…

    • 1 reply
    • 983 views
  22. தமிழக கடற்தொழிலாளர்கள் 25 போ் சிறீலங்கா கடற்படையினரால் கைது! ஜூன் 1, 2014 தலைமன்னார் கடற்பரப்பில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 படகுகளும் 25 தமிழக கடற்தொழிலாளர்களையும் சிறீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள். 45 நாட்கள் மீன்பிடித் தடைக் காலம் முடிந்த பின்னர் ராமேஸ்வரம் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இராமேஸ்வரத்தில் இருந்து 6 படகுகளில் வந்த 25 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் 6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செயப்பட்ட 25 மீனவர்களையும் தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi24.com/news/42085/64/25/d,fullart.aspx

    • 1 reply
    • 469 views
  23. வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் காத்திரமான முறையில் தீர்வுத் திட்டங்களை முன்வைக்கவில்லை என சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் மெய்யான அபிலாஷைகளை புரிந்து கொண்டு அரசாங்கம் செயற்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் யதார்த்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் சகல அதிகாரங்களையும் வழங்க வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படிப்படியாக கிரமமான முறையில் ஒவ்வொரு விடயமாக வழங்கப்பட முடியும் எனவும், பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் அதிகாரத்தை பகிர்ந்தள…

    • 0 replies
    • 311 views
  24. இலங்கை குறித்த விசாரணைகளுக்குழு இன்னமும் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் விசாரணைக்குழு ஒன்றை நிறுவவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiவின் மார்ச் மாத அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தில் இலங்கை தொடர்பில் விசாரணைக்குழுவொன்றை நிறுவ வேண்டுமெனவும், அந்த அதிகாரத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருக்கு வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. விசாரணைக்குழுவில் அங்கம் வகிப்போர் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்ட போதிலும், இதுவரையில் உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. …

    • 0 replies
    • 526 views
  25. யாழ்ப்பாணம் சங்கானையில் புகைத்தலின் பாதிப்பைக் காட்டும் விளம்பரப் பதாகை இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வொன்று கூறுகின்றது. ஆனால், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் முன்னைய காலங்களைவிட புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் ஆய்வை நடத்திய அடிக் என்ற மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தொண்டுநிறுவனம் கூறுகின்றது. 2003 முதல் 2013-ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அடிக் நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடளாவிய ரீதியில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டுச் சபையின் பு…

    • 0 replies
    • 361 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.