Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கல்முனை மாநகர சபை பிரிவுக்குட்பட்ட தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கல்முனை மாநகர சபை மண்டபத்தில் தற்பொழுது உயர்மட்டப் பேச்சு நடைபெற்று வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. கல்முனை பிராந்தியத்தில் வளர்ந்து வரும் தமிழ், முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. குறிப்பாக, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இக்கூட்டத்தில் முதன்மை விடயங்களாக ஆராயப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு தமிழ்க் கூட்டமைப்ப…

  2. ஜனாதிபதித் தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டது?! அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு முன்னர் உத்தேசிக்கபட்டிருந்த ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே இந்த நவம்பரிலேயே நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரச உயர்வட்டாரங்களை மேற்கோள்காட்டி ‘சிலோன் ருடே’ ஆங்கில நாளிதழ் இன்று தலைப்புச் செய்தி வெளியிட்டிருக்கின்றது. அதன்படி புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசு ஓகஸ்ட் மாதத்தில் வெளியிட்டதும் அத் தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணையாளர் விடுப்பார். தற்போதைய அரசமைப்பின்படி, ஜனாதிபதி ஒருவர் தமது ஆறாண்டு பதவிக் காலத்தில் முதல் நான்கு ஆண்டுகள் முடிந்த பின்னர் எந்தச் சமயத்திலும் முற்கூட்டித் தேர்தலுக்கு உத்தரவிட முடியும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் 2010 ஆம் ஆ…

  3. கிராண்ட்பாஸில் மீண்டும் பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்ய முனைந்தால் பௌத்தர்களின் பொறுமை எல்லை தாண்டி விடும் என எச்சரிக்கை விடுக்கும் ஜாதிக ஹெல உறுமய இப்பகுதியில் மீண்டும் குழப்பகரமான சூழல் தோன்றி இனமத மோதல்கள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அமைச்சர் பைசர் முஸ்தபாவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அனுர சேனாநாயக்கவுமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தெரிவித்தது. பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க,கிராண்ட்பாஸ் மோலவத்த பகுதியில் களஞ்சியசாலையாக பயன்படுத்த…

    • 0 replies
    • 455 views
  4. -எஸ்.ரவீந்திரன் கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்துதல் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. தொடர்ந்து நாளை சனிக்கிழமையும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் எண்ணெய்க்காப்பு சாத்துதல் நடைபெறும். நேற்று வியாழக்கிழமை கும்பாபிஷேகம் ஆரம்பமாகியது. பின்னர், விசேட பூஜைகளுடன் பிள்ளையார் வீதி உலா வந்து மீண்டும் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன. மேலும், 41 நாட்கள் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று மே மாதம் 16ஆம் திகதி சங்காபிண்ஷகத்துடன் கும்பாஷேகம் நிறைவுறும். tamilmirror

    • 0 replies
    • 492 views
  5. சம்பூர் அனல் மின் நிலையத்தை திறந்துவைப்பாராம் மோடி!? இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திரமோடி விரைவில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை – சம்பூரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அனல்மின்னுற்பத்தி நிலையத்தை திறந்து வைப்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளலாம் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய் கிழமை நரேந்திரமோடியை சந்தித்த ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நரேந்திரமோடி தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஜனாதிபதி மகிந்தராஜபக்ச, சம்பூர் அனல்மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு வலிய…

  6. ஊடகவியலாளர் சுயமாக செய்தி சேகரிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என வடக்கு முதல்வரிடம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரிப்பதற்கு தமது அலுவலகத்துக்கு வரத் தேவையில்லை எனவும், செய்திகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருக்கின்றமைஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதை கட்டுப்படுத்தும் ஒரு செயற்பாடு என இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் கே.ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் குறிப்பிட்ட அறிக்கை தொடர்பில் கவனத்தைச் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர…

    • 0 replies
    • 468 views
  7. வவுனியா பாரதிபுரம் பகுதியில் இருந்து மக்களை வெளியேறுமாறு றிச்சாட் உத்தரவு! மே 30, 2014 வவுனியா பாரதிபுரம் பகுதியில் வறுமைகோட்டின் கீழ் உள்ள 50 குடும்பங்களையும் உடனடியாக வெளியேறுமாறு சிறீலங்காவின் அமைச்சர் றிச்சாட்ட பதியூதீன் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் நீண்டகாலமாக வறுமைகோட்டின் கீழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் இவ்வாறு வாழ்ந்துவந்த இடத்தில் தொழில்சாலை ஒன்றினை கட்டவுள்ளதாகவும் இதனை தொடர்ந்து இந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு றிச்சாட் அறிவித்துள்ளார்.http://www.sankathi24.com/news/42016/64//d,fullart.aspx

  8. புதிய மகாவம்சத்தில் மன்னராக மகிந்த, தளபதியாக கோத்தபாய! - சரத் பொன்சேகாவுக்கு இடமில்லை. [Friday, 2014-05-30 09:38:40] சிங்கள வரலாற்றை கூறும் மஹாவம்சம் நூலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் மன்னராகவும், கோத்தபாய ராஜபக்ஷ தளபதியாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான அத்தியாயங்கள் தற்போது எழுதப்பட்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இறுதி யுத்தத்தின் போது பொது மக்களின் ஒருவரேனும் உயிரிழக்காமல் போரை வெற்றி கொண்ட மன்னராக மகிந்த ராஜபக்ஷ சித்தரிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த யுத்தத்துடன் தொடர்புடைய சரத் பொன்சேகா, லக்ஸ்மன் ஹுலுகல்ல போன்ற அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் பெயர்கள் எவையும் அதில் உள்ளடக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விடுதலைப் பு…

  9. அளுத்கம கடலில் மீட்கப்பட்டது விமானத்தின் பாகம் அல்ல! - விமானப்படை அறிவிப்பு. [Friday, 2014-05-30 09:50:39] அளுத்கம கடல் பகுதியில் நேற்று கண்டெடுக்கப்பட்ட சில்லு போன்ற பொருள் விமானத்தின் பாகங்கள் அல்லவென இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த பொருள் கண்டெடுக்கப்பட்ட பின்னர் அது கடந்த மாதத்தில் காணாமல் போன மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து கொழும்பில் இருந்து விமானப்படை குழு ஒன்று சம்பவ இடத்துக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டது. இதன்போது இந்த சில்லு வேறு ஒரு வாகனத்தின் அல்லது இயந்திரத்தின் உடையது என்பது தெரியவந்ததாக விமானப்படை அறிவித்துள்ளது.http://www.seithy.com/breifNews.php?newsID=110339&category=TamilNews&langua…

  10. ஐ.நாவின் செயற்பாடு தொடர்பில் இலங்கை அரசு கடும் அதிருப்தி; புலி உறுப்பினர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குகிறதாம் news ஐ.நாவின் செயற்பாடு தொடர்பில் இலங்கை அரசு கடும் அதிருப்தி; புலி உறுப்பினர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குகிறதாம் ஐக்கிய நாடுகள் அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குகின்றது என்று குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை அரசு, ஐ.நா.அமைப்பின் அந்த நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்துமுள்ளது. அண்மையில் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மூன்று விடுதலைப்புலி இயக்க உறுப்பினர்கள், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையாளரின் மலேசிய அலுவலகத்தில் அகதிகள் அந்தஸ்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என்று இலங்கை பாதுகாப்பு அ…

  11. மருதானை விபசார விடுதி சுற்றிவளைப்பு! - வவுனியா தமிழ் யுவதிகளும் சிக்கினர். [Friday, 2014-05-30 10:01:31] மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்று பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதுடன் 7 பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.மட்டக்களப்பைச் சேர்ந்த செல்வந்தருக்கு சொந்தமான கட்டிடமொன்றிலேயே இந்த விபசார விடுதி இயங்கி வந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விடுதி சுற்றி வளைப்பின் போது இரத்மலானை, லுணுகல, வவுனியா தெஹிவளை, படால்கும்பு மற்றும் மாத்தளை பகுதிகளைச் சேர்ந்த தமிழ் சிங்களப் பெண்களை கைது செய்ததாகவும் இவர்களில் ஒருவர் 17 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=110342&categor…

  12. இலங்கை அரசின் செயற்பாடுகளால் சிறுபான்மையினர் தனிமைப்படுத்தப்படும் ஆபத்து! - அமெரிக்கா எச்சரிக்கை. [Friday, 2014-05-30 10:06:40] இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் மத்தியமய அபிவிருத்தி மற்றும் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக இன மற்றும் மதரீதியில் சிறுபான்மையினங்கள் தனிமைப்படுத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் சமவுரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் என்பனவும் உள்ளடங்கும் என்று அமெரிக்க அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. 26 வருட காலப்போர் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கழிந்துள்ள போதிலும் கடந்த காலங்களை விட தற்போது சவால்கள் எதிர்நோக்கப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு மாகாண தேர்தல் ந…

  13. யாழ்ப்பாணத்தின் நான்கில் ஒரு பங்கு நிலம் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளது! - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு. [Friday, 2014-05-30 09:56:24] யாழ்ப்பாணத்தின் நான்கில் ஒரு பங்கு நிலப்பரப்பில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது அமைப்பும் பயன்படுத்திய காணிகளை விடுவிக்கக் கோரியே கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், காணிகளுக்கு சொந்தக்காரர்…

  14. வீரவன்சவுக்கு முதுகெலும்பு இருந்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் - விக்கிரமபாகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசிற்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச மற்றும் ஜே.வி.பி.யினர் போன்ற இனவாத சக்தியினர் மீளவும் ஒன்றிணையவுள்ளனர். அதன் பிரகாரம் நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக விமல் வீரவன்சவை களமிறக்கும் வாய்ப்புள்ளது என்று நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை - கல்கிசை நகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு முதுகெலும்பு இருக்குமேயானால் அரசிலிருந்து வெளியேறி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு சவால் விடுக்கிறேன் என்றும் அவர் க…

    • 0 replies
    • 291 views
  15. இலங்கையில் வாகனங்களில் ஒலியை எழுப்புவதில் புதிய கட்டுப்பாடு வாகன ஹோர்ன் களின் மூலம் எழுப்பப் படும் ஒலியை கட்டுப் படுத்த பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். ஹொர்ன்களை பயன்படுத்துவது, விபத்துகளை தவிர்ப்பதற்காகவும், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது தேவையான இடத்தை பெற்றுக் கொள்வதற்காகவுமே பயன்படுத்த வேண்டும். எனினும் அடுத்த பஸ் வண்டி சாரதிக்கு வணக்கம் சொல்லவும். நலம் விசாரிக்கவும், தரிப்பிடங்களில் பயணிகளை ஏற்றவும் மற்றைய வாகனத்தை விட தன்னிடம் ஒலி எழுப்பக் கூடிய ஹோர்ன் உள்ளது என்பதை காட்டுவதற்காகவே ஹோர்ன்களை பயன்படுத்துகிறார்கள். பல்வேறு விதமான ஒலியை எழுப்பக்கூடிய, விதம் விதமான ஹோர்ன்களை பயன்படுத்துகிறார்கள். இனி அவ்வாறில்லாமல் அங்கீகர…

  16. இனப்பிரச்சினை தீர்வுக்கான இலங்கையின் நிலைப்பாடும் தெளிவாக எடுத்துரைப்பு - பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகள் மிகவும் வலுவடைந்துடன், இரு நாட்டு உறவுகளிலும் புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இந்தியப் பிரதமருடனான சந்திப்பின் போது அரசியல், கலை, கலாசார, வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபத…

    • 0 replies
    • 222 views
  17. வலி வடக்கிலயும் பலாலியிலயும் பிரபாகரன் உரையாற்றினவர் எண்டு சொன்னாலும் சொல்லும் உந்த மனுசன் - யாழ்ப்பாணத் தம்பி- கிளிநொச்சியில சனம் தங்கட காணியள விடவேணும் எண்டு ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினதுதானே. பாவம் அதுகள் எவ்வளவு நாளாப் போச்சுது. தெருத் தெருவாய் அந்தரிச்சு திரியுதுகள். அந்த ஆர்ப்பாட்டத்தப் பற்றி ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளரிட்ட கேள்வி கேட்டா மனுசன் என்ன பதில் சொல்லுது தெரியுமே? 42பேர்தான் ஆர்ப்பாட்டதில நிண்டவையாம். அடக்கோதாரி இதால இராணுவப் பேச்சாளர் நிறைய விசயங்கள அவரி;ட வாயால சொல்ல வாறார். ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்த அப்பாவிய புடிச்சு அடைச்சு வைச்சிருக்கினம். அதுக்குப் பிறகும் 42பேர் வந்திருக்கினம் எண்டால் உங்கட இராணுவ அட்டகாசம் எப்பிடி இருக்கு…

    • 0 replies
    • 220 views
  18. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விவகாரத்தில் வேகமாக காலடி எடுத்து வைக்கத் தொடங்கி விட்டார் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பாக மன்மோகன்சிங் மெதுவாகவே காலடி எடுத்து வைத்தார். ஆனால், நரேந்திர மோடி வேகமாக காலடி எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார். தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் அழுத்தம் இல்லாமல் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கமாட்டார். சிறிலங்கா அரசாங்கம் போட்ட கணக்கு பிழைத்து விட்டது. உடனடியாக புதிய அரசியலமைப்பை உருவாக்கி, 13 வது திருத்தச் சட்டத்துக்கு அரசாங்கம் சாவு மணி அடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிங்கள பௌத்த மக்களின் ஆதரவை இழக்க வேண்…

    • 16 replies
    • 1.5k views
  19. திக்கத்தில் 31 குடும்பங்களின் 8 ஏக்கர் காணியை அபகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியது இராணுவம்! - பொதுமக்கள் அதிர்ச்சி [Thursday, 2014-05-29 09:50:24] பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி யாழ்.மாவட்டத்தில் புதிய படைமுகாம்களை நிறுவுவதற்கென ஏக்கர் கணக்கில் காணிகளை சுவீகரிப்பதில் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.வடமராட்சி அல்வாய் திக்கம் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 8 ஏக்கர் காணியை இராணுவத்தினர் சுவீகரிக்கும் நோக்கில் நேற்றுக் காலை நில அளவையாளர் மூலம் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவிக்கையில், ஜே -400 கிராம அலுவலர் பிரிவிற்குள் அமைந்துள்ள 31 குடும்பங்களுக்குச் சொந்தமான மேற்படி காணிகளை இராணுவ முகா…

  20. யாழ்ப்பாணத்தில் வாழைப்பழத்தின் விலை வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளதென யாழ். மாவட்ட விவசாய திணைக்கள பிரதி மாகாண பணிப்பாளர் கிருஷ்ணன் சிறிபாலசுந்தரம் தெரிவித்தார். யாழ்ப்பாண சந்தைகளில் இதரை வாழைப்பழம் 1 கிலோ 35 ரூபா தொடக்கம் 40 ரூபா வரையும், கதலி வாழைப்பழம் 1 கிலோ 15 ரூபா தொடக்கம் 20 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றதாகத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் 900 தொடக்கம் 1000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் வாழைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தொடர்ந்து தற்போது யுத்தம் முடிவடைந்த பின் வாழைப் பயிர்ச்செய்கை ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் வன்னிப் பிரதேசத்திலும் வாழைச் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டு இப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பாண்டியன்குளம், முத்தைய…

  21. யாழ்.மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்குவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா கடிதம் அனுப்பியுள்ளார். அதனை,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று வியாழக்கிழமை (29) உறுதிப்படுத்தினார். கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டே இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் இரண்டு முறை தோற்கடிப்பதற்கு காரணமாக இருந்தமை, பிரதேச சபைத் தவிசாளர் பதவி விலகக் காரணமாக இருந்தமை மற்றும் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் நடவடிக்கைகளை பிரதேச சபைக்குள் கொண்டு வந்தமை உள்ளிட்ட விடயங்களைக் காரணம் காட்டி இவர்…

    • 1 reply
    • 641 views
  22. கிளிநொச்சியில் நேற்று (28.05.14) முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சாவகச்சேரியிலிருந்து மக்கள் அழைத்து செல்லப்பட்டார்களா இல்லையென்பதற்கு அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்களே சாட்சி. அவர்களே போராட்டத்தில் பங்கெடுத்திருந்த கிளிநொச்சி மக்களை செவ்வி கண்டிருந்தனரென தமிழ் தேசிய மக்கள முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இன்று யாழ்.ஊடக அமையத்தினில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் ஒரு மக்கள் போராட்டத்திற்கு இராணுவப்பேச்சாளர் பதில் அளிப்பதன் மூலம் வட-கிழக்கில் நடப்பது இராணுவ ஆட்சியே என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதாகவும் கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சியில் …

  23. ஏறாவூர் - புன்னைக்குடா வீதி, மஜீத் மாவத்தையில் மீள்குடியேறிய தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 89 வீடுகள் கிடைத்துள்ளதாக கிராம முன்னேற்றச் சங்கத் தலைவர் அப்துல் றவூப் தெரிவித்தார். மீள்குடியேறிய மக்களில் 345பேர் இந்திய வீடமைப்புத்திட்ட வீடுகளுக்காக விண்ணப்பித்திருந்த போதிலும் பல கட்டங்களாக இடம்பெற்ற பரிசீலனையின் பின்னர் 89 குடும்பங்களுக்கே சிபார்சு கிடைத்துள்ளது. இந்த 89 வீடுகளுக்கும் சிபார்சு செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஆட்சேபனைகள் ஏதுமிருப்பின் பொதுமக்கள் அவ்வாறான ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அயராத மு…

    • 0 replies
    • 336 views
  24. கடந்த ஒரு வாரமாகவிருந்து மாவில் ஆற்றிலுள்ள வெருகல் கங்கைக் கதவு மூடப்பட்டுள்ளதால், வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பல கிராமங்களில்; குடிநீர் மற்றும் பயிர்ச் செய்கைக்கான நீரின்றி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபருடன் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெறுவதாக வெருகல் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன் தெரிவித்தார். வெருகல் கங்கைக் கதவு மூடப்பட்டுள்ளதால், கடல் நீர் வெருகல் கங்கைக்குள் ஊடுருவி உவர் நீராக மாறியுள்ளது. மேலும் வெருகல் கங்கை நீரை நம்பியுள்ள வெருகல், பூநகர், வட்டவன், மாவடிச்சேனை, சேனையூர், முத்துச்சேனை, வெருகல் முகத்துவாரம், சூரநகர், ஆனைத்தீவு போன்ற கங்கைக் கரை…

    • 0 replies
    • 557 views
  25. எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு, மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய கிழக்கு மாகாணம் தழுவிய வாகன பவணி வியாழக்கிழமை(29) காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்லூரியின் பழைய மாணவர்களினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது, மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த்த மத்திய கல்லூரியின் ஸ்த்தாபகர் அருட்தந்தை வில்லியம் ஓள்ட்டின் உருவச்சிலைக்கு பாடசாலையின் தற்போதைய அதிபர் மற்றும் முன்னாள் அதிபர்கள் மலர் மாலை அணிவித்தனர். கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்ட…

    • 0 replies
    • 362 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.