ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
பதவியேற்பு விழாவில் பங்கேற்க நாளை புதுடெல்லி செல்கிறார் ஜனாதிபதி மகிந்த! [saturday, 2014-05-24 08:55:39] நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்வு நாளை மறுதினம் 26 ஆம் திகதி புது டில்லியில் நடை பெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு நரேந்திர மோடி விசேட அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை புதுடில்லி பயணமாகிறார். http://seithy.com/breifNews.php?newsID=109937&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 428 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் கைது : 23 மே 2014 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன. படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பரவிப்பாஞ்சான் கிராமத்தினை விடுவிக்க கோரி எதிர்வரும் 26ம் திகதி திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமொன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இக்கைது நடந்துள்ளது. அவரது வீட்டிற்கு இன்றிரவு வருகை தந்தவர்கள் தம்மை பயங்கரவாத தடுப்பு பிரிவை சேர்ந்தவர்களென அடையாளப்படுத்தி விசாரணைக்கு வருகை தருமாறு அழைத்ததாக ஜெகதீஸ்வரன் தமக்கு தகவல் அனுப்பியதாக கட்சிய…
-
- 0 replies
- 441 views
-
-
எங்களுடைய இறந்த மக்கள்இ இறந்த உயிர்கள் சார்பாக நாம் எமது மனோ நிலையை வெளிப்படுத்துகின்ற பொழுது அரசாங்கம் அரசியல் ரீதியாகப் பார்ப்பதையும் கொச்சைப்படுத்துவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதேவேளை நாம் வெளியில்ஒன்று கூடினால் அதற்கு அரசாங்கமும் இராணுவமும் தடை விதிக்கின்றது. இதனால் நாம் இக்கறுப்புப்பட்டிகளை அணிந்துள்ளோம் என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் ஒன்பதாவு அமர்வு நேற்று நடைபெற்றபோது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு கறுப்புப்பட்டி அணிந்து அஞ்சலி செலுத்திய பின் னர் அவைத் தலைவரின் அழைப்புக்கு அமைய இம்மக்களுக்கான அஞ்சலி உரையாற்றுகையில…
-
- 2 replies
- 712 views
-
-
எதிர்வரும் 26ஆம் திகதி இந்தியப் பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடி, விழாவிற்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விருந்தளிக்கவுள்ளார் என்று இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடியின் பதவியேற்பு விழாவிற்கு 8 நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தானை தவிர மற்ற 7 நாடுகளும் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்துவிட்டன. 26ஆம் திகதி பதவியேற்பு விழா முடிந்தவுடன் வெளிநாட்டு தலைவர்களுக்கு அன்றிரவு விருந்து அளிக்க மோடி முடிவு செய்துள்ளார். வெளிநாட்டுத் தலைவர்களின் டெல்லி வருகையை வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்புவிடுத்துள்ளது குறித்து இந்திய வெளி…
-
- 8 replies
- 746 views
-
-
நுவரெலியா விவசாயத்தை பாதுகாத்துக் கொள்ளும் முகமாக நுவரெலியா விவசாய சக்தி அபிவிருத்தி கழகத்தினால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று நுவரெலியாவில் நடைபெற்றது. இந்த கவனயீர்ப்பு போராட்ட ஊர்வலம் இன்று காலை 10.30 மணியளவில் நுவரெலியா தர்மபால சுற்று வட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள பொளத்த விகாரையில் ஆரம்பமானது.இந்த ஊர்வலத்தில் அனைத்து மதங்களையும் சார்ந்த மதத் தலைவர்கள் கலந்து கொண்டமை குறிப்படத்தக்கது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னிட்டு நுவரெலியா நகர வர்த்தக நிலையங்களும் பொருளாதார மத்திய நிலைய வர்த்தக நிலையங்களும் கந்தப்பளை நகர வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கந்தப்பளை,இராகலை,உடபுஸ்ஸல்லாவ,…
-
- 1 reply
- 460 views
-
-
ரொஷான் நாகலிங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவு தருமாறு வடக்கு மாகாண சபை சகல அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கை கடிதம் மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பான பிரேரணை வடமாகாண சபையில் கடந்த ஏப்ரல் 28 இல் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 10 ஆம் திகதி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணியென பதிவு செய்யப்பட்ட 22 அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். www.thinakkural.lk/article.php?local/xutqma5tzh9475b2df0a0d4122434cilnc16c55f81fd5aa1e…
-
- 0 replies
- 393 views
-
-
எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்தில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இன்றைய அரசியல் நிலவரம், எதிர்காலத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படும் தேர்தல்கள், இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உறவு ஆகிய பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த சந்திப்பின்போது, ஐதேக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, உத்தேச ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தங்கள் கட்சி செயற்குழு எடுத்துள்ள தீர்மானத்தை தெளிவுபட…
-
- 0 replies
- 1.1k views
-
-
-எஸ்.ரவீந்திரன் மட்டக்களப்பு, களுதாவளையைச் சேர்ந்த வளர்ந்துவரும் சிற்பக்கலைஞர் கிருபைரட்ணம் தனது புதல்வருடன் இணைந்து சிற்பக்கலையில் ஈடுபட்டு பல்வேறு வித்தியாசமான சிற்பங்களை உருவாக்கி வருகிறார். இந்திய கலைஞர்களைப் போன்று சிற்பக்கலையில் முன்னேற வேண்டுமென்று ஆவலுடன் செயற்பட்டு வரும் இவர் வளப்பற்றாக்குறை காரணமாக தமது முயற்சியை முன்னெடுக்கமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றார். அத்துடன் இவரது சிற்பக்கலை பற்றி கிழக்கு மாகாணத்தில் பேசப்பட்டாலும் இந்திய சிற்பக்கலைக்கு நிகராக தமது சிற்பத்தை உலகளாவிய ரீதியில் கொண்டுசெல்ல வேண்டுமெனபது அவரது குறிகோலாக உள்ளது. இதேவேளை தன்னுடைய முயற்சிக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை எதிர்பார்ப்பதாக கூறும் கிருபைரட்ணம் ஒரு ஓ…
-
- 0 replies
- 388 views
-
-
இலங்கைப் படையினர் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஐ நா சர்வதேசக் குழுவின் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்குமாறு, நரேந்திர மோடி மஹிந்த ராஜபக்ஷவிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷணல் கோரியுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்குபெற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லி வரும்போதே இந்தப் பரிந்துரை செய்யப்பட வேண்டும் என மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. விடுதலைப் புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்கள் போர் குற்றங்கள் மற்றும் இதர குற்றங்களை புரிந்தார்கள் எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி நடவடிக்கை எடுக்க இலங்கை தவறிவிட்டது என்றும் அவர் கூறுகிறார…
-
- 1 reply
- 495 views
-
-
நினைவு நடுகற்களை இடித்தழிப்பதன் மூலமோ, அல்லது நினைவு தினங்களைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிப்பதன் மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்று வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் ஒன்பதாவது அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோது முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு அஞ்சலி உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையில், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் நாள். இந்த நாள் என்பது ஈழத்தமிழ்மக்களோ, உலகத் தமிழ…
-
- 0 replies
- 314 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள தன்னுடன் வருமாறு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்திருப்பது நல்லதொரு நல்லெண்ண சமிக்ஞை என்றும், இந்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பதே ஆக்கப்பூர்வ இணக்க அரசியலுக்கு வித்திடும் செயலாகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'நாம் என்றுமே தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்து தொலைதூர நோக்கில் செயற்படுபவர்கள். அரசியல் தீர்க்க தரிசனங்களோடு நாம் ஆரம்பத்திலிருந்தே கூறி வரும் நடைமுறை யதார்த்த வழிமுறையை …
-
- 2 replies
- 623 views
-
-
புதிய விண்கல் பொழிவு ஒன்றை கண்டு களிக்கும் வாய்ப்பு நாளைய தினம் உலகவாசிகளுக்கு கிடைக்கும் என கொழும்பு பல்கலைக்கழக பூகோலவியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை நேரப்படி நாளை பகல் 1 மணிக்கு விண்கல் பொழிவு இடம்பெறவுள்ளதாகவும் அதனை இலங்கை வாழ் மக்கள் கண்டுகளிப்பது கடினம் என்ற போதும் அமெரிக்கா மற்றும் கனேடிய வாழ் மக்கள் நன்கு அவதானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். ´கெமலோபாடலிடிஸ்´ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் பொழிவு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார் - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=332173040323290930#sthash.9O0NDEs0.dpuf
-
- 0 replies
- 387 views
-
-
சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்குமாறு, நரேந்திர மோடி மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்குபெற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதுடில்லி வரும்போதே இந்தப் பரிந்துரை செய்யப்பட வேண்டும் என மனித உரிமைகள் அமைப்பான மன்னிப்புச் சபையின் இந்தியாவுக்கான இயக்குநர் சஷிகுமார் வேலத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஐந்து வருடங்கள் ஆனாலும், மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பானவர்கள் இதுவரை நீதியின் முன்னர் நிறுத்தப்படவில்லை, போர் குற்றங்கள் மற்றும் இதர குற்றங்களை புரிந்தார்கள் எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பவர்களை சட்டத்தின் மு…
-
- 0 replies
- 375 views
-
-
நினைவு அஞ்சலி நிகழ்வுகளை தடுக்க அரசாங்கத்திற்கோ அல்லது படையினருக்கு உரிமை கிடையாது – விக்கி:- வட மாகாணசபைக் கட்டடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளில் மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் மற்றும் முல்லைத்தீவில் உயிரிழந்தவர்களுக்காக இந்த விசேட நினைவு அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், ஆனந்தி சசிதரன் போன்றோரினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூரும் வகையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை எ…
-
- 0 replies
- 280 views
-
-
தேசிய சுதந்திர முன்னணிக்கும், ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று (23) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. தற்போதைய அரசியல் நிலைமை குறித்த இந்த பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் நடைபெறவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளுக்கு கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமை வகிப்பார் எனவும், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதிநிதிகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தலைமை வகிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு கட்சிகளினதும் சிரேஸ்ட தலைவர்கள் சிலரும் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 278 views
-
-
13200 பயின்ட் இரத்தத்தை வடக்கு மக்களுக்கு படையினர் தானம் செய்துள்ளனர்- 23 மே 2014 13200 பயின்ட் இரத்தத்தை வடக்கு மக்களுக்கு படையினர் தானம் செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். வேறும் எந்தவொரு நிறுவனமும் வழங்காத அளவிற்கு இரத்தம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வினை தடுத்து நிறுத்தியதாக ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் இவ்வாறு இரத்தத்தை தானம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் 10000 பயின்ட், கடற்படை 2000 பயின்ட் மற்றும் விமானப்படை 1200 பயின்ட் ஆகிய அளவுகளில் வடக்கு மக்களுக்கு இரத்தம் வழங்கியுள்…
-
- 6 replies
- 466 views
-
-
பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் மேலும் ஒரு மூதாட்டி பெண் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார். 64 வயதுடைய பத்மாவதி என்ற மூதாட்டியே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது பயங்கரவாதப் புலனாய்வு பிவிரினரால் வவுனியாவில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மீளிணைய முயற்சிக்கும் விடுதலைப் புலிகளின் எதிர்கால பயன்பாட்டிற்காக காணி ஒன்றை குறித்தப் பெண்ணின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாகவும் அக் காணிக்கான பணத்தை விடுதலைப் புலிகளே குறித்த பெண்ணுக்கு வழங்கியிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். http://virakesari.lk/articles/2014/05/22/%E0%AE%AA%E0%AE%AF%E0%…
-
- 3 replies
- 634 views
-
-
வெளிநாடுகளில் உள்ள 20 இலட்சம் இலங்கையருக்கு தேர்தல்களில் வாக்களிக்க வாய்ப்பு! [Friday, 2014-05-23 09:32:58] வெளிநாடுகளிலுள்ள 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வாக்களிப்புக்கான வசதிகளை எதிர்காலத்தில் ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். நாட்டில் மொத்தமாக 150 இலட்சம் வாக்காளர்கள் உள்ள போது 20 இலட்சத் துக்கு மேற்பட்டோர் வெளிநாடுகளில் வாக்களிக்க வாய்ப்பின்றி உள்ளனர். இது தொடர்பிலான சட்ட திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதில் தேர்தல் திணைக்களம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு அந்தந்த நாடுகளில்…
-
- 1 reply
- 336 views
-
-
வவுனியாவில் பயங்கரவாத புலனாய்வு துறையினரால் இளைஞன் கைது - 4ம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் : 23 மே 2014 வவுனியா தவசிகுளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுத் துறையினரால் புதன்கிழமை(21.5) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். புலிகளை மீள உருவாக்க முயற்சித்ததாக கூறி வவுனியா நெடுங்கேணி பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தேவிகன் அவர்களின் வாகன சாரதியாகவும் அவருடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறியே முத்துலிங்கம் கஜவர்மன் (வயது 22) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மேற்படி இளைஞன் மேலதிக விசாரணைக்காக கொழும்பு நான்காம் மாடிக்கு நேற்று வியாழக்கிழமை கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. http…
-
- 0 replies
- 386 views
-
-
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கக் கோரும் தீர்மானம்! - ஐரோப்பிய நாடாளுமன்றில் கொண்டுவரத் திட்டம். [Friday, 2014-05-23 09:29:30] இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய தொழிற்கட்சி இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. லண்டனில் உள்ள புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்கள், தொழிற்கட்சியின் உறுப்பினர்களான க்ளவுட் மொராயஸ் மற்றும் கராக் தோமஸ் ஆகியோரை இரகசியமாக சந்தித்துள்ளனர்.இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக புலம்பெயர் தமிழர்கள், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர். பொருளாதாரத் தடை விதிப்பது குறித்த யோசனை ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன…
-
- 1 reply
- 338 views
-
-
சேலம்: நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே வருவதை எதிர்த்து சேலத்தில் ஒரு வாலிபர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்துள்ளனர். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் இதை எதிர்த்துள்ளன, கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் பாஜகவோ இதில் தவறு இல்லை என்று கூறி விட்டது. ராஜபக்சே வரக் கூடாது.. சேலத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி இந்த நிலையில் சேலம் மாவட்ட கோர்ட் வளாகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கருப்பூரை சேர்ந்தவர் வெற்றிவேல் (31). இவர் இன்று காலை சேலம் அஸ்தம்பட்டி அருகில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டிடத்திற்கு வந்தார். அப்போது அ…
-
- 2 replies
- 576 views
-
-
உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தப் போவதாக இந்தியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி தெரிவித்துள்ள நிலையில், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ்உருவான 13 ஆவது திருத்தச் சட்டத் துக்கு அமைவாக வடக்கிற்கான அதிகாரத்தை முழுமையாக வழங்குவதற்கு அரசாங்கம் தவறுமேயானால் அது பாரிய விளைவு களையே ஏற்படுத்தும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. தமிழக முதலமைச்சர் ஜெயலலி தாவை நரேந்திர மோடி புறந்தள்ளிவிடப்போவதில்லை. அரச தலைவர்களை அழைத்து விருந்து படைப்பதால் நாட்டை கட்டியெழுப்பி விட முடியாது. மாறாக வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒரே ஆண்டில் ஊழல் தரவரிசைப் பட்டியலில் 12 இடங்கள் பின்தள்ளப்பட்டது இலங்கை! [Friday, 2014-05-23 08:57:41] கடந்த ஒரு ஆண்டில் இலங்கையில் ஊழல்கள் அதிகரித்துள்ளதன் விளைவாக - ஊழலின் அளவை வைத்து நாடுகளை வரிசைப்படுத்தும் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனலின் வருடாந்த பட்டியலில் இலங்கை 12 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் அரசாங்கத்தில் இருப்பவர்களின் அளவுக்கதிகமான அதிகாரம் மற்றும் செல்வாக்கு காரணமாக நேர்மை, தூய்மை போன்ற விழுமியங்கள் புரையோடி வருவதாக 2013 ஆம் ஆண்டுக்கான ஊழல் மதிப்பீட்டு சுற்றாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் நாற்பது புள்ளிகள் எடுத்து 79ஆவது இடத்திலிருந்த இலங்கை இந்த வருடம் 37 புள்ளிகளை மட்டும் எடுத்து 91ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகா…
-
- 1 reply
- 2.5k views
-
-
ஈழம் அமைத்து கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் நம்முடைய கையில் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் சார்க் நாடுகளின் அமைப்பின் தலைவர் என்ற முறையிலேயே நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜபக்சே மட்டுமின்றி சார்க் அமைப்பில் உள்ள பிற நாடுகளின் தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராஜபக்சேவை தனிப்பட்ட முறையில் பா.ஜ.க விருந்துக்காக அழைக்கவில்லை. ஒட்டு மொத்த சார்க் நாடுகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டதில் அதில் இடம்பெற்றுள்ள இலங்கைக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளத…
-
- 2 replies
- 1.2k views
-
-
நிர்மாணத்துறை, பொதுச்சேவைகள் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச வடமாகாண சபையை தடைசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். முடிந்தால் தடை செய்து பார்க்கட்டும்' என வடமாகாண சபையின் உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார். 'சிறுபான்மையினர் அனைவரும் இணைந்து ஒரு தலைமையின் கீழ் போராட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரைவச் செயலகத்தில் வியாழக்கிழமை(22) காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'ஐ.நா அறிக்கையின் படி முள்ளிவாய்க்காலில் 70,000 மக்கள் மாண்டு…
-
- 0 replies
- 481 views
-