ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக் குழுவில் கலந்து கொள்ள வேண்டுமென விடுக்கப்படும் அழைப்பு போலியானதென அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக கூட்டமைப்பு தெரிவுக் குழுவில் பங்குபற்ற வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்திருந்த அழைப்பு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில் ; போர் நடைபெற்றபோது இதே அமைச்சர் போர் நிறைவடைந்தால் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறினார். ஆனால் போர் நிறைவடைந்து 5 வருடங்களாகி…
-
- 3 replies
- 480 views
-
-
பாப்பரசர் புனித பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பௌத்த அமைப்புகளான பொதுபல சேனாவும், ராவணா சக்தி அமைப்பும் இலங்கையில் மத நல்லிணக்கம் இல்லையென பாப்பரசர் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவிக்கையில், பாப்பரசர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மத நல்லிணக்கம் இலங்கையில் இல்லையெனத் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டும். அதன் பின்னர்தான் இங்கு வரவேண்டும். எமது நாட்டில் மதங்களுக்கிடையே மோதல்கள் கிடையாது. பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் இங்கு நல்லிணக்கத்துடனேயே வாழ்கின்றனர். மதங்களிடையே மோத…
-
- 1 reply
- 2.4k views
-
-
மற்றொரு இணையத்தளத்துக்கு இலங்கையில் இன்று முதல் தடை! 13 மே 2014 மற்றொரு செய்தி இணையத்தளத்துக்கும் இலங்கையில் இன்று முதல் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. 'Sri Lanka Mirror' என்ற இணையத்தளமே இணையச் சேவை வழங்குனர்களால் இலங்கையில் பார்க்க முடியாதவாறு இன்று முதல் தடுக்கப்பட்டிருக்கின்றது. தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின் பேரிலேயே குறிப்பிட்ட இணையத்தளம் தடுக்கப்பட்டிருப்பதாக இணையத்தள சேவை வழங்குனர்கள் தெரிவித்தார்கள். இது தொடர்பாக ஓழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளருடன் குறிப்பிட்ட இணையத்தள பொறுப்பாளர்கள் தொடர்புகொள்ள முற்பட்ட போதிலும், அவர் நாட்டில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டமையால் அவருடன் பேச முடியவில்லை. இதனையடுத்து தமது …
-
- 1 reply
- 461 views
-
-
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையில், மீண்டும் ஒரு யத்த நிலைமை ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது என முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் திங்களன்று யுத்த வெற்றிச் சின்னத்திற்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண ஆளுனர் சந்திரசிறி அவர்கள் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடமாகாண ஆளுனர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இதனையடுத்து அங்கு உரையாற்றிய வடமாகாண ஆளுனர் சந்திரசிறி, "யுத்தத்தினால் பொருளாதார சேதம் ஏற்பட்டது. உயிரிழப்புக்கள் நேர்ந்தன. உடைமைகள் நாசமாகின. அதற்கும் மேலாக பலரும் மனவேதனைக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். எமது தாய்நாட்டில் அத்தகையதொரு நிலைமை மீண்டும் உருவ…
-
- 1 reply
- 415 views
-
-
சிறிலங்காவில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு எதிராக், வெற்றி அல்லது வீரமரணம் என்ற முழக்கத்துடன தோழர் தியாகு அவர்கள் தமிழகத்தில் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சுதந்திர தமிழீழத்தினை தாகமாக கொண்டு விடுதலைப்பசிக்கு தன்னுயிரை கொடுத்த தியாகி திலீபனை தமிழினம் நினைவேந்திய நாட்களில், தோழர் தியாகு அவர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாநிலைப் போராட்டமானது தமிழீழத்துக்கான போராட்ட தடத்தில் தமிழகத்தின் வகிபாகத்தினை மீண்டும் உணர்த்தி நிற்கின்றது. தமிழகத்தின் சமூக…
-
- 31 replies
- 2.4k views
-
-
யுத்தம் நிறைவடைந்து எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூர்ந்தும் அந்த யுத்தத்தில் பலியான இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இராணுவ நினைவு தூபிக்கு முன்பாக இன்று நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையிலேயே இந்த வைபவம் நடைபெற்றது. (படங்கள்: வன்னி ரொமேஷ் மதுசங்க) tamilmirror
-
- 6 replies
- 742 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடியது அநீதியான செயற்பாடாகும். விடுதலைப்புலிகள் அமைப்பை முதன்மைப்படுத்தாது தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்தவர்கள் எனக் கூறும் உரிமை தமிழ் மக்களுக்கு உள்ளது என்று அரசின் பங்காளிக்கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். வட மாகாண ஆளுநராக மீண்டும் படைத்தரப்பைச் சார்ந்தவரை நியமிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை எதிர்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில், நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன…
-
- 0 replies
- 366 views
-
-
"எமக்கு உதவி வேண்டாம்: சொந்த நிலங்களே வேண்டும்" என்கின்றனர் சம்பூர் மக்கள் எமது கஸ்ரங்களுக்கு உதவி வேண்டாம். எம்மை சொந்த நிலத்திற்கு செல்ல விடுங்கள் என சம்பூர் மக்கள் கூட்டமைப்பினரிடம் கோரிக்கை விட்டுள்ளனர். சம்பூர் பகுதிக்கு சனிக்கிழமை கிழமை விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட குழுவினர் அவர்கள் தங்கியிருந்த மணல்சேனை, பட்டிக்குடியிருப்பு ஆகிய முகாங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்தஅ போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், சம்பூர் மக்கள்…
-
- 0 replies
- 408 views
-
-
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு அனுமதி மறுப்பது காண்டுமிராண்டித்தனமானது – சுரேஷ்! இலங்கையில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. இது மிகவும் மோசமான ஒரு மனித உரிமை மீறல் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, காண்டுமிராண்டித்தனமானது என்றும் அவர் கூறினார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகும் வேளையில், அவர்களை நினைவுகூர்ந்து பொது நிகழ்ச்சிகள் ஏதும் நடத்துவதற்கு இலங்கை அரசு தடை விதித…
-
- 2 replies
- 429 views
-
-
"இலங்கை தீவில் தமிழ் பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட வன்முறை பற்றிய மாநாடு " 13 மே 2014 பிரித்தானிய தமிழர் பேரவையும் , தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து 13 May 2014 இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை பிரித்தானிய பாராளுமன்றத்தில் இம் மாநாட்டை நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இலங்கை இனவாத அரசுகளினால் கட்டமைக்கப்பட்ட ரீதியான பாலியல் வன்முறைகள் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தினரால் தமிழர் தாயகப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 2009ம் ஆண்டு மே மாத இறுதி யுத்த காலப்பகுதியில் பல தமிழ் பெண்கள் கொடுரமான பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டும் , 80,000க்கு மேற்பட்ட இளம் தமிழ் பெண்கள் …
-
- 0 replies
- 331 views
-
-
மே-18 போர் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுத்தார் கோத்தபாய! [Tuesday, 2014-05-13 09:09:04] வரும் 18ம் திகதி மாத்தறையில் நடக்கவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இத்தகவலைத் தெரிவித்தார். தமிழ் உறவுகளைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுவிட்டு அரசு நடத்தும் இந்த யுத்த வெற்றிவிழாக் கொண்டாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கமாட்டார்கள் என்றும் ஆவேசமாகக் கூறினார். கூட்டமைப்பினருக்கு கோத்தபாய ராஜபக்ஷவினால் நேற்று அனுப்பப்பட்டுள்ள…
-
- 0 replies
- 495 views
-
-
உண்மையை சொல்லுங்கள்: புதிய தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை செவ்வாய்க்கிழமை, 13 மே 2014 02:24 இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் பல பாகங்களுக்கு விஜயம் செய்து, இங்குள்ள உண்மையான நிலைமைகளை உங்களின் நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு புதிய தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆறு நாடுகளின் தூதுவர்கள் தங்களுடைய நியமனக்கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று திங்கட்கிழமை அலரிமாளிகையில் வைத்து கையளித்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கைகக்கான தூதுவர்கள், இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தவும் இலங்கை மக்கள் தொடர்பிலான நற்செய்திகளையும் அடிமட்ட நிலைமைகளையு…
-
- 0 replies
- 264 views
-
-
மத்தள விமான நிலையம் சர்வதேச தர நிர்ணயங்களுக்கு புறம்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளது – யோகராஜன் 13 மே 2014 மத்தள விமான நிலையம் சர்வதேச தர நிர்ணயங்களுக்கு புறம்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஒன்று அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும், இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட இடம் உசிதமானதல்ல என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.சர்வதேச தர நிர்ணயங்களுக்கு புறம்பான வகையில் மத்தளையில் விமான நிலையம் அமைக்கப்பட்டு;ள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரதான விமான நிலையம் அமைந்துள்ள வலயத்தில், காலநிலை சீர்கேடுகள் ஏற்படு…
-
- 0 replies
- 230 views
-
-
அமெரிக்காவில் உள்ள கோத்தபாயவின் வீட்டில் அதிகாரிகள் விசாரணை! [sunday, 2014-05-11 09:33:06] அமெரிக்காவிலுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வீட்டில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோத்தபாய ராஜபக்ச 1992ம் ஆண்டு அமெரிக்காவில் வதிவிடஉரிமை பெற்றிருந்தார். இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள இவர், 2005ல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானதும், பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை அச்சுறுத்தல்கள் காரணமாக கோத்தபாய ராஜபக்ச தற்போது அமெரிக்கா செல்வதையே தவிர்த்து வருகிறார். எனினும் அவர் அமெரிக்காவில் ஆடம்பரமான பங்களா ஒன்றை அண்மையி…
-
- 20 replies
- 1.3k views
-
-
சிறீலங்கா அரச அதிகாரிகளுக்கும் இராணுவத்துக்கும் எதிராக யேர்மன் அரசு சாட்சிகள் சேகரிப்பு மே 12, 2014 சிறீலங்கா அரச அதிகாரிகளுக்கும் இராணுவத்துக்கும் எதிராக யேர்மன் நாட்டு அரச வழக்கறிஞர்கள் சாட்சிகள் சேகரிக்கத் தொடங்கியுள்ளார்கள். ஈழத்தமிழர்கள் மீது முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின்போது சர்வதேசப் போர்ச் சட்ட விதிமுறைகளை மீறி, மானிடத்துக்கு எதிரான பாரிய குற்றங்களை சிறீலங்கா பேரினவாத அரசு இழைத்திருந்தது. இந்த மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா அரச உயர்மட்ட அதிகாரிகள், இராணுவத்தினர் ஆகியவற்றுக்கு எதிராக சாட்சிகளைப் பதிவுசெய்வதற்காக தற்போது யேர்மன் அரசாங்கம் தனது அரசதரப்பு சட்டத்தரணிகள் மற்றும் மனிதவுரிமை அமைப்புகள் ஆகியவற்றின் ஊடாகப் போரின் …
-
- 3 replies
- 541 views
-
-
24 ஆண்டுகளுக்குப் பின்னர் அடுத்த மாதம் யாழ்.நகர் வருகிறது யாழ்தேவி! [Friday, 2014-05-09 17:27:24] யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது, கொழும்பில் இருந்து பளை வரையும் ரயில் சேவைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணி சாவகச்சேரி பகுதி வரை முடிவடைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் பளையிலிருந்து சாவகச்சேரி வரை பரீட்சார்த்த ரயில் சேவை இடம்பெறவுள்ளது. அதேவேளை, தற்போது நாவற்குழி, யாழ்ப்பாணம் பகுதி வரையான வேலைத்திட்டங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் யூன் மாதத்தில் பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் சேவை நீடிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெ…
-
- 67 replies
- 2.8k views
-
-
குருநகரில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று இரண்டாவது தடவையாக யாழ்.நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது வழக்கில் சந்தேக நபர்கள் எனக் கருதப்படும் இரண்டு பாதிரிமாரும் மன்றில் முன்னிலையாகிச் சாட்சியமளித்தனர். “எமக்கும் உயிரிழந்த யுவதிக்கும் தனிப்பட்ட வகையில் எந்த தொடர்பும் இருக்கவில்லை. அவர் மறைக்கல்வி ஆசிரியராக இருந்ததன் காரணமாக அது தொடர்பான தொடர்பே இருந்தது. இதுதவிர இந்தப் பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளவுமில்லை. குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) அனுப்பவுமில்லை” என்று மன்றில் சாட்சியமளித்தனர் இரண்டு பாதிரியார்களும். வழக்கை விசாரித்த நீதிவான் பொ.சிவகுமார் மீண்டும் அடுத்தமாதம் 6ஆம் திகதிக்கு அதனை ஒத்திவ…
-
- 3 replies
- 657 views
-
-
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறவிருக்கும் சுதந்திரக்கட்சி பாராளுமன்றக் குழுக்கூட்டம் வழமையானதொன்றே எனவும் , புதுமைக்குரியதல்லவெனவும் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல , பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் இருகட்டங்களிலும் மாதமிருமுறை இக்குழுக்கூட்டம் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். எந்தத் தேர்தலையும் தீர்மானிப்பதற்காகவோ , தேர்தலை இலக்காகக் கொண்டோ இன்றைய கூட்டம் கூட்டப்படவில்லை. 2016 ஆம் ஆண்டு வரை தேர்தலுக்குரிய காலமிருக்கின்றது. அடுத்த வருடத்தில் தேர்தலை நடத்துவது குறித்து ஆளும் தரப்புக்குள் எதுவுமே பேசப்படவில்லை. உரிய காலத்துக்கு முன்பதாக தேர்தலை நடத்துவதற்குரிய அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அதற்கு எம்மிடம் அனுமதி கேட்கவே…
-
- 37 replies
- 1.6k views
-
-
வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அடைகின்ற பாரிய வெற்றியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக வெளிவரும் தகவல்கள் மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திப்பதற்கு அமைச்சர் பஷில் ராஜபக்ஷ முயற்சிககளை மேற்கொண்டுவருதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து மேலும் குறிப்…
-
- 1 reply
- 551 views
-
-
முள்ளிவாய்க்கால் மே 18ஐ நினைவு தினத்தினை நினைவுகூர வருமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஞாயிற்றுக்கிழமை(11) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'அன்பான எம் உறவுகளே. மே மாதம் என்றதும் எமது உறவுகள் கொத்துக் கொத்தாக தமது உயிர்களைக் காவு கொடுத்த அந்தக் காட்சிகளே எமது மனதின் முன் தோன்றும். பலர் எம் கண் முன்னாலும் இன்னும் பலர் எவ்வாறு என்று தெரியாமலும் தமது உயிர்களைக் காவு கொடுத்தனர். இக்கொடூரக் காட்சிகளை இதயமுள்ள எவருமே மறக்கமாட்டார்கள். இலங்கையில் இவ்வாறு பல தடவைகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குச் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள் என்ற வேறுபாடு காட்டப்படவில்லை. ஆனால் 2009 மே மா…
-
- 2 replies
- 562 views
-
-
சென்னையில் தமிழக முதல்வரின் ஆதரவுடன் நடைபெற்று வருகின்ற இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையிலான பேச்சு வார்த்தையில் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்த மீனவர்களால் தெரிவுசெய்யப்பட்ட மீனவ அமைப்புத் தலைவர்கள் இம்முறை ஒரங்கட்டப்பட்டு வடபகுதியில் அரசஆதரவுபெற்ற மீன் மற்றும் கடலுணவு ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்ற வியாபாரிகளே மீன்பிடி அமைச்சினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பங்குபற்றும் வர்த்தகர்களில் ஒருவர் மன்னார் நகரசபைத் தேர்தலிலும், இன்னொருவர் யாழ்ப்பாணம் மாகாணசபைத் தேர்தலிலும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்தவர்கள் என்பதுடன் வடபகுதியின் அமைச்சர்கள் இருவரின் தீவிர விசுவாசிகளுமாவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்த்தேசிய…
-
- 1 reply
- 371 views
-
-
போர்க்குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணை தவிர ஏனைய அனைத்துப் பரிந்துரைகளையும் அரசாங்கம் நிறைவேற்றத் தயார் என்பது உண்மையாயின், இம்மாத இறுதிக்குள் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். வாக்குறுதி கொடுப்பதைவிட செயலில் காட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிதளவேனும் அமுல்படுத்தவில்லை. இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் பகிரங்க விவாதத்திற்கு நான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச விசாரணையினை தவிர அனை த்து பரிந்துரைகளையும் நிறைவேற்றத் தயார் என்ற ஜனாதிபதியின் கருத்து தொட ர்பில் வினவியபோதே அவர் மேற…
-
- 1 reply
- 499 views
-
-
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்க்கா பெர்ணான்டோ தலைமையிலான சிவில் அமைப்புக்களுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைத்த மிழரசுக்கட்சியின் யாழ்.தலைமையகத்தில் நேற்று 11ம் திகதி இடம்பெற்ற இச்சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஐா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோருடன் வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இச் சந்திப்பு தொடர்பில் மாவை சேனாதிராஐா ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மதகுரு சிவில் சமூகப்பிரதிநிதிகள் என 15பேர் அடங்கிய குழுவினர் நேற்று மாலையில் எம்மைச்சந்தித்து உரையாடியுள்ளனர். இதில் …
-
- 0 replies
- 400 views
-
-
(இவர் இன்னுமே மகிந்தவ நம்புறாரா? இல்ல நல்லா நடிக்கிறாரா?) அட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அரசாங்கத்தை விட்டு விலகுவன் எண்டு வெருட்டி இருக்கிறார். இது உலக அதிசயம் எண்டு சில பேர் சொல்லுயினம். ஏணெடால் மனுசன் அரசாங்கத்தோட எப்பிடி ஒட்டிக் கொண்டு இருக்கிறார் எண்டு இந்த அகிலமும் அறியும். பிறகு எப்பிடி? இப்ப கொஞ்ச நாளாய் மகிந்த வளக்கிற நாய்க்குட்டியள் அவரைப் பாத்தே குலைச்சுக் கொண்டு நிக்குதுகள். விமல் வீரவன்சவும் சம்பிக்கவும் அரசாங்கத்த விட்டு எப்ப விலகுறது எண்டு கணக்கு போடுதாய் கதை அடிபடுது. சம்பிக்க மகிந்தவ எச்சரித்துக் கொண்டிருந்தார். இப்ப விமலும் தொடங்கிட்டார். கொலை, கொள்ளை எண்டு எல்லா அக்கிரமங்களுக்கும் மகிந்தவுக்கு முண்டு குடுத்தவையளுக்கு இப்ப என்ன பிரச்சினை எ…
-
- 0 replies
- 648 views
-
-
போப் பிரான்ஸிஸ் எதிர்வரும் வருடம் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் வத்திகானுக்கான விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஆயர்கள் குழு இது தொடர்பில் போப் பிரான்ஸுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தியதை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள போப் பிரான்ஸில் மன்னார் மடு தேவலாயத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன் அரசியல் தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதேவேளை, கொழும்பில் மிகப்பெரிய பிரார்த்தணை கூட்டமொன்றும் இடம்பெறவுள்ளது' என இவரது விஜயம் தொடர்பில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோஸப் ஆண்டகை கத்தோலிக்க இணையத்தளமொன்றுக்கு தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 320 views
-