ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களுக்கும் பாப்பரசர் பிரான்சிஸுக்கும் இடையிலான சந்திப்பு வத்திக்கானில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறும் பாப்பரசருடனான சந்திப்பில் இம்முறை இலங்கையின் 11 மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்கள் கலந்துகொண்டதாக வத்திக்கான் வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. 'போர் முடிந்துவிட்ட போதிலும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் எல்லா மக்களின் மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கவும் இன்னும் தீர்க்கப்படாதுள்ள இனரீதியான குழப்பங்களை களையவும் இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது' என்று இலங்கை ஆயர்களுக்கான தனது செய்தியில் பாப்பரசர் கூறியுள்ளார். தனியொரு மத அடையாளத்தை மையப்படுத்தி-ப…
-
- 0 replies
- 597 views
-
-
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடைப்பட்டியலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குறித்த அமைப்புக்கள் மீது அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எனினும், இந்த தடையை தமது நாட்டில் அமுல்படுத்தப் போவதில்லை என பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தலமையிலான கனேடிய அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது. இதே நிலைப்பாட்டை தற்போது அமெரிக்காவும் வெளிப்படுத்தியுள்ளது. புலம்பெயர் அமைப்பு தடையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. புலம்…
-
- 0 replies
- 536 views
-
-
உணவு விஷமடைந்ததால் 95 பேர் வைத்திசாலையில் அனுமதி news அம்பாறை மத்திய முகாம் பகுதியில் உணவு விஷமடைந்ததன் காரணமாக திடீர் சுகயீனமுற்ற 95 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென சுகயீனமுற்ற நிலையில் நேற்றிரவு இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சுகயீனமுற்றவர்களில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மாத்திரம் 63 பேர் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய பொறுப்பதிகாரி டொக்டர் ஐ.எல்.ஜலால்டீன் தெரிவித்தார். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, மத்திய முகாம் வைத்தியசாலை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளில் இவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சுகயீனமுற்றவர்களில் 65 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக வி…
-
- 0 replies
- 339 views
-
-
கோபியின் மனைவி விடுதலை ஞாயிற்றுக்கிழமை, 04 மே 2014 07:33 பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வெள்ளியன்று விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். மற்றுமொருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இந்த நால்வரில் இருவர் பெண்கள். இருவர் ஆண்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. நெடுங்கேணி காட்டுப்பகுதியில் இராணுவ சுற்றிவளைப்பொன்றின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரில் ஒருவரான கோபி என்று இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்டிருந்த கஜீபன் என்பவரின் மனைவி சர்மிளா, கஜீபனின் தாயாருக்கு உதவியாக இருந்ததாகத் தெரிவிக்கப்படும் ப…
-
- 0 replies
- 468 views
-
-
இந்தியாவைப் புறந்தள்ளி எந்த ஒரு தீர்வும் வராது – சுமந்திரன் [ சனிக்கிழமை, 03 மே 2014, 02:14 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] இந்தியாவைப் புறந்தள்ளி எந்த ஒரு தீர்வும் வரப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “இந்தியாவைப் புறந்தள்ளி எந்த ஒரு தீர்வும் இந்த நாட்டில் வரப்போவதில்லை என்பது அடிப்படையான விடயம். அதற்காக இந்தியா சொல்வது எல்லாவற்றையும் செய்யப்போகின்றோம் என்பதும் எந்தக் காலத்திலும் நடைபெறப்போவதுமில்லை. எங்களுடைய கொள்கைகளின் அடிப்படையிலேயேதான் தீர்வு வரும். ஆனால் அதை இந்…
-
- 13 replies
- 1k views
-
-
மூன்றாம் தமிழ் அரசியல் சக்தியொன்றின் அவசியம் எழுந்துள்ளது – வரதராஜ பெருமாள் 03 மே 2014 மூன்றாம் தமிழ் அரசியல் சக்தியnhன்றின் அவசியம் எழுந்துள்ளதாக வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்க ஆதரவு தமிழ்க் கட்சிகளைத் தாண்டிய புதிய தமிழ் அரசியல் சக்தியொன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மூன்றாம் சக்தியொன்றின் ஊடாகவே ஜனநாயக ரீதியில் தமிழ் மக்களுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் தே…
-
- 4 replies
- 867 views
-
-
சர்வதேச ரீதியில் பத்திரிகை சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கையில் ஊடக சுதந்திரம் எவ்வாறு இருக்கிறது என்பதை மலையக அமைச்சர் ஒருவர் உலகத்துக்குக் காட்டியிருக்கிறார். ஆம்! மலையகத்தின் ஏகப் பிரதிநிதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்கின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் பொதுமேடையொன்றில் நடந்துகொண்ட விதம் இதனை எடுத்துக் காட்டுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் பண்டாரவளையில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ மேடைக்கு வருகை தந்தார். அந்த மேடையில் ஊடகவியலாளர் சிலர் தமது கடமைகளை செய்துகொண்டிருந்தார்கள். …
-
- 2 replies
- 949 views
-
-
உலகின் எந்தவொரு ஊடகமும் சுயாதீனமாக இயங்கவில்லை – அரசாங்கம் உலகின் எந்தவொரு ஊடகமும் சுயாதீனமாக இயங்கவில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசாங்கம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. பூரணமாக ஊடக சுதந்திரம் சமூகத்திற்கு பாதக விளைவுகளையே ஏற்படுத்தும் என அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் ஆரியரட்ன அத்துகல தெரிவித்துள்ளார். அநேகமாக ஊடகங்கள் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் சில கருத்துக்களை மக்கள் மீது திணிப்பதனால் மக்களினால் சரியானதை தீர்மானிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒப்பீட்டளவில் உலகின் ஏனைய நாடுகளை விடவும் இலங்கையில் ஊடக சுதந்திரம் காணப்படுவதாகத் தெர…
-
- 1 reply
- 593 views
-
-
இலங்கையில் நடக்கும் உலக இளைஞர் மாநாட்டில் 169 நாடுகள் பங்கேற்க ஒப்புதல்! [saturday, 2014-05-03 10:02:10] இலங்கையில் எதிர்வரும் 6ம் திகதி முதல் 10 ம் திகதி வரை நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இதுவரை 169 நாடுகள் உறுதி செய்துள்ளன. இளைஞர் விவகாரங்கள் தொடர்பான அமைச்சர்கள் 28 பேரும் அதிகாரிகள் மட்டத்தில் 62 பேரும் இலங்கை வருகின்றனர் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். உலக நாடுகளிலிருந்து சுமார் 6500 விண்ணப்பங்களும், இலங்கையிலிருந்து 3200 விண்ணப்பங்களும் கிடைத்தன. எனினும் 350 பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விதத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த உலக இளைஞர் மாநாடு மட்டுமல்ல இலங்கையில் இளைஞர் சேவைகள் மன்றமும் அரசியல் கலக்காத, நிறம், மதம் கலக்காத ஒன்றா…
-
- 1 reply
- 355 views
-
-
தன்னைக் கொலை செய்ய வெள்ளை வானில் சிலர் துரத்துகின்றனர் - வட்டரக்கே விஜித தேரர் தன்னைக் கொலை செய்ய வெள்ளை வான் ஒன்றில் சிலர் துரத்தி வருவதாக ஜாதிக பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வட்டரக்கே விஜித தேரர் தெரிவித்துள்ளார். நான் செல்லும் இடங்களை வெள்ளை வான் ஒன்று பின் தொடர்கின்றது. இது தொடர்பில் தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். தம்மை பின்தொடர்ந்த வாகனத்தின் இலக்கம் போலியானது என்பதனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்டு பிடித்துள்ளனர் என சிங்கள ஊடகமொன்றுக்கு விஜித தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகளை வட்டரக்கே விஜித தேரர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamiln…
-
- 1 reply
- 562 views
-
-
இத்தாலியில் உள்ள ''புத்தா பார்"ற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சிறீலங்கா கோரிக்கை! ஏப் 30, 2014 இத்தாலியில் உள்ள மதுபான சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சிறீலங்கா இத்தாலியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பில் இத்தாலியும் சிறீலங்காவும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இயங்கி வரும் மதுபான கடையொன்றுக்கு அந்நாட்டில் வாழ்ந்து வரும் சிங்களவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கௌதம புத்தரை இழிவுபடுத்தும் வகையில் இந்த மதுபானக் கடைக்கு பெயரிடப்பட்டுள்ளதாக சிங்களவர்கள் சிறீலங்கா தூதரகத்திடம் முறையிட்டுள்ளார்கள். சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சு குறித்த மதுபான சாலை தொடர்பில் விபரங்களை திரட்டிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . htt…
-
- 18 replies
- 1.2k views
-
-
எல்பிட்டியவில் இன்று காலை கைக்குண்டுத் தாக்குதல்! - 3 இராணுவத்தினர் உள்ளிட்ட 5 பேர் படுகாயம். [saturday, 2014-05-03 09:04:40] எல்பிட்டிய நவதகல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இராணுவச் சிப்பாய்கள் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் மூன்று பேர் இராணுவச் சிப்பாய்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.விடுமுறைக்காக வந்திருந்த குறித்த இராணுவச் சிப்பாய்கள் மேலும் இரண்டு நபர்களுடன் விருந்துபசாரமொன்றை நடத்திக் கொண்டிருந்த வேளையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் த…
-
- 1 reply
- 436 views
-
-
பாகிஸ்தான் உளவுப் பிரிவின் முகவர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பிராந்திய வலயமே கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்களுடனும், பாகிஸ்தான் அரச உளவுப் பிரிவுடனும் தொடர்புடைய இலங்கையர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக இந்தியா தகவல் வெளியிட்டிருந்தது. கண்டியைச் சேர்ந்த சாகீர் ஹூசெய்ன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். ஹூசெய்ன், இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுவதகாவும், இது ஒட்டு மொத்த பிராந்திய வலயத்திற்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா ஆப்கான…
-
- 2 replies
- 362 views
-
-
TNAஐ சந்தியுங்கள் அவர்கள் சொல்வதை செய்யுங்கள்: வடக்கின் இராணுவ வெளியேற்றத்திற்கு அதிமுக்கியத்துவம்.. 03 மே 2014 எவரேனும் த.தே.கூ வுடன் அரசியல் தொடர்புகள் வைத்திருந்தாலோ அன்றி அரசியல் காரணங்களுக்காக அவர்களை சந்தித்தாலோ, அவர்களின் வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சொல்வதை முன்னெடுக்க வேண்டும் எனவும் பொது மக்களிடம் பேசிப்பார்த்தபோது இது தான் அவர்களின் பார்வை எனவும் டெய்லி நியூஸ் இன்றய தனது முக்கிய செய்தியில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது, த.தே.கூ வின் அண்மைய திருகோணமலைக் கூட்டத்தில் திரு விக்னேஸ்வரன் அவர்கள் வடக்கிலிருந்தான இராணுவ வெளியேற்றத்திற்கு த.தே.கூ அதிமுக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஏனெனில் இராணுவப்பிரசன்னம் வடக்கிற்கும் இந்தியாவிற்கு…
-
- 0 replies
- 779 views
-
-
கூட்டாக ஒரு இனம் அழிக்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் வரையான மக்கள் வன்னியில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் இதனை தனிநபர் குற்றமாக எடுக்க முடியாது. மனித உரிமை மீறல் என்பதே தனி நபர் பிரச்சினை இங்கு போர் குற்றம், மனிதகுலத்தின் குற்றம், தமிழினப் படுகொலை ஆகிய மூன்றினையும் விசாரணை செய்ய வேண்டும் இதுவே எமது கோரிக்கையாகுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசும் இணைந்து நடாத்திய மேதினக்கூட்டம் கரவெட்டி சாமியன் அரசடியில் உள்ள ஞானவைரவர் கோவிலுக்கு முன்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
-
- 0 replies
- 295 views
-
-
'எமது சகல சமூகச் சீரழிவுகளுக்கும் பின்னால் வெளியார் உள்ளீடல்களே காரணமாக இருக்கின்றன. சுயநல காரணங்களுக்காக உள்ளூர்வாசிகளும் இவ்வாறான வெளியார் உள்ளீடல்களுக்குத் துணைபோகின்றனர்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபையின் 19.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கொக்குவில் சந்தைக் கட்டிடத் தொகுதித் திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'சில சபை நிறுவனங்கள் தம்மிடம் இருக்கும் பணத்தைப் பூட்டி வைத்து வட்டியை எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆக்கபூர்வமாக மக்கள் பணிகளில் இறங்க வேண்டும் என்ற கரிசனை அவர்களுக்கு இல்லா…
-
- 0 replies
- 710 views
-
-
சரத் பொன்சேகா:- நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலொன்று நடைபெறுமானால் தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டைவிட்டு தப்பியோட வேண்டிய நிலை வரும். பீரங்கிகளைத் தொட்டு சுட்டுப்பழகியவர்கள் நாம், விளையாட்டு துப்பாக்கிகளுக்கு அஞ்சப்போவதில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை புத்ததாஸ மைதானத்தில் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது மேதினக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயகக் கட்சித் தலைவருமான சரத் பொன்சேகாவே இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; ஜனாதிபதித் தேர்தலை மிக விரைவில் நடத்துவதற…
-
- 2 replies
- 636 views
-
-
-நா.நவரத்தினராசா இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அகில இலங்கை ரீதியில் நடத்தப்படும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுநர் கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி வீராங்கனை ஜே.அனித்தா சாதனை படைத்துள்ளார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மேற்படி போட்டியில் 18 வயதுப் பெண்கள் கோலூன்றிப் பாய்தலில் 3.00 மீற்றர் உயரம் பாய்ந்து அனித்தா இந்தச் சாதனையினை நிகழ்த்தியுள்ளார். முன்னர் இருந்த 2.95 மீற்றர் பாய்ந்து சாதனையினை இவர் முறியடித்துள்ளார். இதே வேளை ஆண்கள் பிரிவில் யாழ்.அளவெட்டி அருணோதயா கல்லூரியை சேர்நத மாணவனான கருணாகரன் நத்தலின் ஜோய்ஸன் 3.96 சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு - இந்திரரத்ன பாலசூரிய) http://tamil.dailymirr…
-
- 9 replies
- 832 views
-
-
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் வைத்தியர்களின் கவனக்குறைவால் அறுவை சிகிச்சையின் போது குடல் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த பரிதாப சம்பவம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இதில் வெஸ்மோலா தோட்டதைச் சேர்ந்த 32 வயதான தமிழ் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணிற்கு முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்துள்ளது. இரண்டாவது குழந்தை பேறுக்காக அவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையிலே மருத்துவர்களின் கவனக்குறைவான செயற்பாட்டால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குறித்த கர்ப்பிணி பெண்ணின் கணவர் தெரிவிக்கையில், குழந்தைப் பேறுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தையை அறு…
-
- 1 reply
- 450 views
-
-
மன்னார் சின்னபண்டிவிரிச்சானில் மினி சூறாவளி! மே 3, 2014 மன்னார் சின்னப்பண்டிவிரிச்சானில் மினி சூறாவளி. வீட்டுக்கூரைகள், வாழைத் தோட்டங்கள் சேதமடைந்துள்ளதைம கூட்டமைப்பினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்கள். மன்னார் சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் வீசிய மினி சூறாவளியால் அப்பகுதி வாழ் மக்களின் வீட்டுக்கூரைகள், வாழைத்தோட்டங்கள் என்பன சேதமடைந்துள்ளன. இந்தச் சேத விபரங்களை சம்பந்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளோ, அரச அதிகாரிகளோ வந்து பார்வையிடவில்லை என்று அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அறியத்தந்ததை அடுத்து கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அட…
-
- 0 replies
- 321 views
-
-
வடக்கிலிருந்து இராணுவத்துக்கு 1,000 தமிழர்கள் இணைப்பு - இராணுவப் பேச்சாளர் தகவல் 2007ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் ஆயிரத்தில் ஒரு பெண்ணே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவண் வணிகசூரிய இது இராணுவத்தினர் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் குறிப்பிடுகிறார். அதேவேளை இந்தக் காலப்பகுதியில் வட மத்திய மாகாணத்தில் ஆயிரத்தில் இரண்டு பேர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். அத்துடன் மேல் மாகாணத்தில் 0.7 வீதமான பெண்களே துஷ்பிரயோகத்திற்கு உள்ளனதாகவும் அவர் தெரிவித்தார். வடக்கில் ஆயிரத்தில் ஒர பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதன…
-
- 1 reply
- 414 views
-
-
யாழ், வண்ணர்பண்ணை ஆறுகால் மடம் பகுதி இளைஞர்களை முச்சக்கரவண்டியிலும் மோட்டார் சைக்கிளிலும் சென்ற இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இனந்தெரியாத நபர்கள் YQ-4134 என்ற இலக்க முச்சக்கரவண்டியிலும் MG-5553 மோட்டார் சைக்கிளிலும் வந்து உங்களுக்கு காலம் நெருங்கிவிட்டது போகப்போரியல் என்று அச்சுறுத்திவிட்டு சென்றுள்ளனர். அவ்வாறு வந்தவர்களில் ஒருவர் யாழ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸார் என்று தனிப்பட்ட பகை காரணமாக இவ்வாறு அச்சுருத்தியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேனவிடம் கேட்டபோது- குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் எவையும் பதிவு செய்யப்ப…
-
- 1 reply
- 659 views
-
-
- சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம் தட்டாதெரு பகுதியிலுள்ள வீடொன்றின் பகுதி இன்று வெள்ளிக்கிழமை(02) தீயினால் எரிந்து சேதமடைந்துள்ளது. தீ குறித்து அறிவித்தும் அவ்விடத்திற்கு மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் வருகை தரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த போது, வீட்டின் கூரை வழியே பெருமளவு புகை வருவதினை அவதானித்த அயலவர்கள் உடனடியாகச் சென்று தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர். இருந்தும் வீட்டிலிருந்த மின்சாதனப் பொருட்கள், தளபாடங்கள் மற்றும் ஆவணங்கள் என்பன தீயினால் முற்றாக அழிவடைந்துள்ளன. இத் தீவிபத்து குறித்து அறிவித்தும் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு வருகை தராமை குறித்து, தீயணைப்பு பகுதியின் பொறு…
-
- 0 replies
- 780 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - "அனந்தி சசிதரன் உரையாற்றும் போது கூட்டத்தில் நான் இல்லை" - சரவணபவன்- தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடும் தொனியிலான சரமாரியான விமர்சனங்களை முவைத்தார். பெருக்கெடுத்த கண்ணீரூடே தனது உரையினை இடைநிறுத்தினார் அனந்தி சசிதரன். இன்று காலை திருகோணமலைக்கூட்டம் தொடங்கியது முதல் சம்பந்தன் கட்சி தலைமையின் அனுமதியின்றி அனந்தி ஜெனீவா சென்றமை மற்றும் அங்கு அவர் ஆற்றிய உரைகள் தொடர்பில் திரும்ப திரும்ப பேசியவாறிருந்தார். இந்நிலையில் அவரது குற்றச்சாட்டுக்களிற்கு மதிய உணவு வேளையில் அறிக்கையொன்றினை தயார் செய்து கொண்ட அனந்தி பதிலளிக்கும் வகையில் பேசிய…
-
- 6 replies
- 1.2k views
-
-
மழை இல்லாத காரணத்தால் வடக்கில் கடந்த பெரும்போகத்தில் நெல் விதைப்பதற்கெனத் திட்டமிட்டிருந்த நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு பரப்பிலேயே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. முளைத்த நெற்பயிர்களும் தொடர் வரட்சி காரணமாகப் பாதியிலேயே கருகிப்போனதால் ஏறத்தாழ ஒன்றே முக்கால் இலட்சம் மெற்றிக் தொன்கள் நெல்லையே அறுவடை செய்ய முடிந்தது. இது வடக்கில் இம்முறை அறுவடையாகும் என எதிர்பார்த்த அளவில் பாதியையும் விடக்குறைவு என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வரட்சியான காலநிலையில் கடைப்பிடிக்கக்கூடிய பொருத்தமான விவசாயத் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்குதல் தொடர்பான பயிற்சிப் பட்டறை இன்று வெள்ளிக்கிழமை (02.05.2014) திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப…
-
- 0 replies
- 427 views
-