Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பௌத்த, மத விவகார அமைச்சின் அனுமதியின்றி எந்த வழிபாட்டுத்தலத்தையும் அமைக்க முடியாது! - இலங்கையில் புதிய சட்டம் [Thursday, 2014-05-01 09:05:58] பௌத்த மற்றும் மத விவகாரங்கள் அமைச்சின் அனுமதியின்றி இனிமேல் நாட்டில் எந்த வழிப்பாட்டுத் தலங்களையும் அமைக்க முடியாது என அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் 20 ஆயிரம் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. அவற்றில் 10 ஆயிரம் வழிபாட்டுத் தலங்கள் பௌத்த வழிப்பாட்டுத் தலங்கள். புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படும் போது வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. சட்டத்திற்கு அப்பால் சென்று மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளினால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நாட்டு மக்கள் தாம் விரும்பியபடி தமது மதங்களை பின்பற்றும் உ…

  2. தடை ஏற்படுத்தப்பட்டு தற்போது பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள கங்குவேலி அகஸ்த்திய மா முனிவர் தியான மடத்தின் மீள்கட்டுமாணப் பணிகளை ஆரப்பிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார். திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் காரியாலயத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஆகியோரின் இணைத்தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'அகஸ்த்திய மா முனிவர் இந்துசமயத்தில் மிக முக்கியமானவர். அவர் …

    • 0 replies
    • 436 views
  3. வவுனியா ரயில் மீது மோதியது மாத்தறை ரயில்! - 68 பயணிகள் காயம், வடபகுதி ரயில் சேவை பாதிப்பு. [Wednesday, 2014-04-30 09:44:07] குருநாகல் பொதுஹெர என்ற இடத்தில் இன்று காலை இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில், 68 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு - வவுனியாவுக்கிடையிலான சேவையில் ஈடுபடும் இன்ரசிற்றி ரயிலும், வவுனியா - மாத்தறைக்கு இடையிலான சேவையில் ஈடுபடும் ரஜரட்ட ரயிலும் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்ரசிற்றி ரயிலிலேயே ரஜரட்ட ரயில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் 68 பேர் வரையில் காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜீத்…

    • 9 replies
    • 904 views
  4. உலகின் பாதுகாப்பான நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகிக்கின்றது – அரசாங்கம் உலகின் பாதுகாப்பான நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை பாதுகாப்பான நாடாக உருமாறியுள்ளது என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலைகள், மத்தளை விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சமாதானம் காரணமாகவே நாட்டில் இவ்வாறான அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்து எவ்வாறான அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்பதனை நேரடியா…

  5. கனகராசா சரவணன் அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்துக்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவர், பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அதேவேளை, அப்பாடசாலையின் அதிபரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவத்தார். குறித்த பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்றுவரும் 11 வயதுடைய அதேபிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து மாணவிகளே மேற்படி ஆசிரியரினால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கடந்த செவ்வாய்க்கிழமை (22) கைது செய்யப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.…

  6. தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க TNA உயர்மட்டக் குழுவை நியமித்துள்ளது குளோபல்தமிழ்ச்செய்தியாளர் தென்னாபிரிக்க சமாதான முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவிவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சனைகள் தொடர்பில் இறுதி நடவடிக்கை எடுக்கும் வகையில் கூட்டமைப்பின் எட்டுப் பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இந்தக்குழுவே அனைத்து விடயங்களையும் கையாளும் எனத்தெரிவித்துள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தக் குழுவானது ஒருமித்த கருத்துடன் இணைந்து செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் உயர்மட்டக்கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்…

    • 0 replies
    • 526 views
  7. http://www.youtube.com/watch?v=qsEaQQXLbQs&feature=youtu.be

    • 0 replies
    • 552 views
  8. [ புதன்கிழமை, 30 ஏப்ரல் 2014, 00:57 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கும், அதற்கான யாப்பைத் தயாரிப்பதற்கும், ஐந்து பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோருடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இந்தக் குழுவில் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை உள…

  9. ஒன்பது இலட்சம் சிங்களப் பெண்கள் தாய்மை அடையமுடியாத வகையில் கருத்தடை சிகிச்சை! - பொதுபல சேனாவின் புள்ளிவிபரம். [Wednesday, 2014-04-30 08:50:37] இலங்கைக்குள் செயற்பட்டு வரும் அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் கடந்த 10 வருட காலப்பகுதிக்குள் சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்த 8 லட்சத்து 90ஆயிரம் பெண்கள் குழந்தைப்பேறு அடைய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, பொது பல சேனா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. உலக சனத்தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கிய 1973ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த 'தங்கமான சிறிய குடும்பம்' என்ற வேலைத்திட்டத்தை மையமாகக் கொண்டே மேற்படி அரச சார்பற்ற நிறுவனத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் பொது பல சேனா குறிப்பிட்டது. இந்த காலப்பகுதிக்குள், கத்தோலிக்க மதத…

  10. வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர், பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித்திரிந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ஜெயபாலன் ஸ்டென்லி ரமேஸ் என்ற இந்த சந்தேகநபர், வவுனியா, குட்செட் பிரதேசத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை (28.04.14) கைது செய்யப்பட்டார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவலை அடுத்தே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் இவர் கைது செய்யப்படும் போது சிவப்பு நிற சுடிதார் அணிந்து பொய் முடியிட்டு தொப்பி அண…

  11. யாழ். சென்ற வானுடன் மோதியது இராணுவ வாகனம்! - 3 படை அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் படுகாயம். [Wednesday, 2014-04-30 09:53:28] புத்தளம் - அநுராதபுரம் வீதியில் 12ஆம் கட்டை பிரசேத்தில் இன்று அதிகாலை வான் ஒன்றும் இராணுவ கப் ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் படுகாயமடைந்த 07 பேர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 03 இராணுவ அதிகாரிகள் அடங்குவதாகவும் பொலிஸார் கூறினர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மேற்படி வானும் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இராணுவ கப் ரக வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானது. http://seithy.com/breifNews.php?…

  12. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 81 மனித எலும்புக்கூடுகளும் மனித எச்சங்களும் இன்று செவ்வாய்க்கிழமை (29) மேலதிக பரிசோதனைகளுக்காக அனுராதபுரம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என மன்னார் பொது வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி வரை குறித்த திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து 81 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக மேற்குறிப்பிட்ட எழும்புக்கூடுகள் 81 பெட்டிகளில…

  13. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - வவுனியா- மிதிவெடி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பாக கிளிநொச்சி பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு இன்று பாடமெடுத்து அனுப்பியுள்ளது இராணுவம். கிளிநொச்சி படை தலைமையகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வெடிபொருட்கள் என மிதி வெடிகள் மற்றும் கண்ணிவெடிகள் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டதுடன் அவை தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் பாடமெடுத்துள்ளனர். பல அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியுடன் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் மிதிவெடி அகற்றும் பிரிவே இச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106247/language/ta-IN/article.aspx …

    • 0 replies
    • 597 views
  14. கடலோர நகரங்களில் வெள்ளப்பிரச்சனை தீவிரமடையும் நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்கள் இதனால் கூடுதலாக பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஏற்கெனவே, சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் கடுமையான பாதிப்புக்கள் காரணமாக புவியானது வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதன் விளைவாக கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துவருவதால் சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் கடற்கரையோர பகுதிகள் படிப்படியாக கடலில் மூழ்கும் ஆபத்து அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறாரகள். இத்தகைய எச்சரிக்கைகளுக்கு மத்தியில், இது போ…

  15. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க தாம் தயார் என்று தென்னாபிரிக்கா அறிவித்துள்ளது. கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்ட போது, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தென்னாபிரிக்க ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்காவின் ஆளுங்கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் துணைத் தலைவரும் தென்னாபிரிக்காவின் விசேட சமாதானத் தூதுவருமான சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்காக இவ்வாறானதொரு ஒத்துழைப்பை நல்குவதற்கு எம்மைத் தேர்ந்தெடுத்தமை எமக்கு கிடைத்த கௌரவமாகும். அவர்களுக்கு சொல்வதற்காக எம்மிடம் சிறந்தவொரு கதை உள்ளது. அதை இலங்கையர்கள் மிகவிரைவில் அறிந்துகொள்வ…

  16. கொக்குவில் இந்துக்கல்லுரிக்கு செல்லும் வீதியை பாவனைக்கு விடாது மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலை மாணவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலைக்கும் கோவிலுக்கும் நடுவில் காணப்படும் வீதியினை கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் கோயில் நிர்வாகத்தினர் மூடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்தை தடைசெய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இன்று காலை தடைகளை தூக்கி ஏறிந்ததால் கோயில் நிர்வாகத்திற்கும் பாடசாலை சமூகத்திற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடேன் மாணவர்கள் எதிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்- நூற்றாண்டை கடந்த எமது பாடசாலையின் மாணவர்கள் பயன…

  17. உடைந்த நாற்காலியில் உட்காருவது எப்படி? - முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேள்வி. [Tuesday, 2014-04-29 08:58:42] உடைந்த நாற்காலியில் அமரச் சொல்லி அரசாங்கம் வலியுறுத்தி வருவதாக வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையில் நேற்று உரையாற்றிய அவர், உடைந்த நாற்காலியில் எவ்வாறு அமர்வது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். வட மாகாணசபைக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்பதனையே உடைந்த நாற்காலி என்ற குறியீட்டின் மூலம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கின் ஆளுனராக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டதாகவும், எதிர்வரும் ஜூலை மாதம் சிவிலியன் ஒருவர் ஆளுனராக நியமிக்கப்படும் வரையில் எதிர்பார்த்து காத்த…

    • 1 reply
    • 502 views
  18. கூட்டமைப்பினால், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை! - பிரதியமைச்சர் முரளிதரன் கூறுகிறார். [Monday, 2014-04-28 07:22:32] தமிழ் தேசிய கூட்டமைப்பினால், தமிழ் மக்களை உசுப்பேற்றிவிட்டு உணர்ச்சியாகப் பேச மட்டுமே முடியும், அவர்களினால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் முரளிதரன் - நாங்கள் கடந்த 30வருடகால யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட…

  19. புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை குறித்து கனேடிய வெளிவிவகார அமைச்சரைச் சந்திக்கிறது எதிர்க்கட்சி! [Tuesday, 2014-04-29 09:34:53] இலங்கையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து, கனேடிய எதிர்க்கட்சி, அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட்டை சந்திக்க உள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் தடை காரணமாக சில கனேடிய நிறுவனங்களினால் இலங்கை வாழ் தமிழர்களுக்கு உதவிகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக சில கனேடிய நிறுவனங்களினால் இலங்கைத் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணவோ அல்லது உதவிகளை வழங்க…

  20. நமது இனத்தின் பலத்தை எடுத்துக்காட்ட எம் மேதின நிகழ்வில் அணிதிரண்டு கலந்துகொள்ளுங்கள்: - மனோ கணேசன் அழைப்பு [Tuesday, 2014-04-29 11:15:26] நடந்து முடிந்த மேல்மாகாணசபை தேர்தலில் எம் சொந்த சின்னத்தில் நாம் தனித்துவமாக பெற்றுக்கொண்ட 51,000 வாக்கு சாதனைக்கு அணி சேர்க்கும் முகமாக, தலைநகர் தமிழர்களின் ஏக தலைமை பிரதிநிதிகளான உங்களது ஜனநாயக மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலத்திலும், கூட்டத்திலும் அணிதிரண்டு வந்து கலந்து கொண்டு, தலைநகரில் எங்கள் தமிழின ஜனநாயக அரசியல் பலத்தை எடுத்து காட்டுங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற ஏற்பாடாகியுள்ள கட்சியின் மேதின நிகழ்வுகள் தொடர்பாக விடுத்துள்ள அழைப்பில் மனோ கண…

  21. காவிக்கும் ஜிப்பாவுக்கும் ஒரே சட்டம் வேண்டும் என்கிறார் சம்பிக்க ரணவக்க! [Tuesday, 2014-04-29 09:30:04] மஞ்சள் காவியுடைக்கும் ஜிப்பாவுக்கும் பொருந்தும் வகையிலான ஒரே சட்டம் நாட்டில் அமுலில் இருக்க வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், சமய முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸ் பிரிவொன்றை உருவாக்கியுள்ளமையானது இந்தப் பிரச்சினைக்கு சிறந்தவொரு தீர்வாக அமையாது என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்த பொலிஸ் பிரிவினால் சமய முரண்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது என்றும் கூறினார். இந்த பொலிஸ் விச…

  22. இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் இரட்டை நிலைப்பாடு! - இந்திய ஊடகம் விசனம். [Tuesday, 2014-04-29 09:27:03] இந்தியா உடனடியாக தமது வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை மறுசீராக்கம் செய்ய வேண்டும் என்று த டிப்ளோமட் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை ஒரு சிறந்த நாட்டுக்கு இருக்க வேண்டிய காத்திரமான பண்புகளை கொண்டிருக்கவில்லை. இலங்கை விடயத்திலும் அது இரட்டை நிலைப்பாட்டில் காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற அமெரிக்க பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் ஒரு மாதிரியும், அதன் பின்னர் லோக்சபா தேர்தலின் நிமித்தம் வேறொரு மாதிரியும் இந்தியாவின் இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கை அமைந்திருக்கிறது.இந்த நிலையால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்ப…

  23. மூன்று ஒப்பந்தக் கொலையாளிகளும் இராணுவத்தில் இருந்து நீக்கம்! - ஒட்டுமொத்த இராணுவத்திற்கே களங்கம் என்கிறார் தளபதி. [Tuesday, 2014-04-29 09:21:21] குருநாகல், வெல்லாவ ஒப்பந்த கொலையுடன் தொடர்புடைய இராணுவச் சிப்பாய்கள் மூவரும் இராணுவத்தில் இருந்து பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவரின் மனைவியே 20 லட்ச ரூபா பணத்தை வழங்கி, கணவரை கொலை செய்யுமாறு இராணுவச் சிப்பாய்களிடம் கோரியுள்ளார். இது தொடர்பாக விசாரணைகளை உரிய முறையில் நடத்த சகல வழிகளிலும் ஒத்துழைப்ப வழங்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. பணம் வழங்கிய பெண் மற்றும் கொலையுடன் தொடர்புடைய மூன்று சிப்பாய்கள் தற்பொழுது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தின் கௌரவம் பற்றி தெர…

  24. மட்டக்களப்பில் அபிவிருத்தி மட்டுமல்ல, சமூகச் சீரழிவுகளும் அதிகரிப்பு! - அரசஅதிபர் கவலை. [Tuesday, 2014-04-29 09:18:03] மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சமூகச் சீரழிவுகளும் அதிகரித்து வருகின்றன என்று மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற இவ்வாண்டுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதிக்குரிய ஆவணம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த 02 வருடங்களினுள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல நகரங்களை ஒன்றிணைக்கும் 03 பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதில் படுவான்கர…

  25. கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்யும் விவகாரம் - இன்றைய கூட்டத்தில் சூடுபிடிக்கும். [Tuesday, 2014-04-29 09:11:21] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதா, இல்லையா என்பது உட்பட வடக்கு, கிழக்கின் சமகால நிலைமைகள் தொடர்பாக, இன்று நடக்கவுள்ள கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்றுமாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.