ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் அரசின் நடவடிக்கைகள் குறித்து இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்க மளிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் சில நாட்களில் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்த கட்சியின் தலைமைத்துவச் சபை தீர்மானித்துள்ளது. வெளிநாட்டுத் தூதுவர்களுடனானஇந்தச் சந்திப்பில் ஐ.தே. கவின் தலைமைத்துவச் சபைத் தலைவர் கரு ஜயசூரிய, கட்சியின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பானவரான லக்ஷ்மன் கிரியயல்ல, ரவி கருணா நாயக்க, மங்கள சமரவீர முதலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பங்கேற்கவுள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர்கள் மீது அம்பாந்தோட் டையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து, அ…
-
- 0 replies
- 278 views
-
-
தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கிறிஸ்தவ மதகுருமாரும் ஆயர்களும் வெளிக்கொண்டு வருகின்றமையினால் கிறிஸ்தவ சகோதரவர்கள் மீதான பேரினவாதகளின் சக்தி அதிகரித்துள்ளது. இதனால் போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் அனாதைப் பிள்ளைகளுக்கும் உதவுகின்ற அருட்தந்தையர்களை நோக்கி பாலியல் விபச்சாரக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அது மட்டுமன்றி புனிதமான இந்து மதத்தின் பெயரால் கிறிஸ்தவ மதப்பெரியார்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களும் ஒட்டப்படுகின்றன. எனவே தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையோடு நெருங்கியிருந்து நீதிக்காக குரல் கொடுத்துவரும் கிறிஸ்தவ மதப…
-
- 0 replies
- 220 views
-
-
ஜனாதிபதிக்கு பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கை! Posted By Thara On April 27th, 2014 03:36 AM கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்தாவிட்டால் பாரியளவில் பொருளாதார பாதக விளைவுகளை எதிர்நோக்க நேரிடலாம் என பொருளியல் நிபுணர்கள் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நான்கு பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். பரிந்துரைகளை அமுல்படுத்துவது இன்னமும் காலம் தாமதிக்கப்பட்டால், முதலீட்டாளர்களின் வருகை வரையறுக்கப்படலாம். சில மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இலங்கைக் கிளைகளை மூடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றன. இந்த நேரத்தில் புத்திகூர்மையுடன் தீர்மானங்கள் எடுக்க …
-
- 1 reply
- 522 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 19-04-2014 சனிக்கிழமை மாலை பொது மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட புதிய மண்முனைப் பால நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மீள் குடியேற்ற பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் பதாதை ஒன்று இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. இப் பதாதையில் சரித்திர நாயகனே , சமாதான கர்த்தாவே ,தொடரட்டும் உன் அரசியல் பணி … என குறிப்பிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கைலாகு கொடுக்கும் புகைப்படத்தோடு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது ஆனால் தற்போது இதில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ம…
-
- 2 replies
- 446 views
-
-
எஸ்.சசிக்குமார் இராச பல்லிகளை 12 ஐ முச்சக்கர வண்டியொன்றில் எடுத்துசென்ற போது திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிலுள்ள தானியகம என்னும் இடத்தில் வைத்து சனிக்கிழமை கைது செயய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த மூவரையும் திருகோணமலை பதில் நீதவான் திருச்செந்தில்நாதன் முன்னிலையில் சனிக்கிழமை மாலை ஆஜர்செய்தபோதே அந்த மூவரையுமு; 50,000 ரூபா சரீர பிணையில் நீதவான் விடுதலை செய்தார். இந்த மூவரையும் கைது செய்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை மே மாதம் 5 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி ஜே.எம்.லாகீர ஆஜராகி இருந்தார். கைப்பற்றப்பட்…
-
- 0 replies
- 359 views
-
-
(M.Z. Shajahan) நீர்கொழும்பு சுற்றலாத்துறை பிரதேசத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த ஜேர்மன் நாட்டு இளம்பெண்ணொருவருக்கு தனது நிர்வாணத்தை காட்டியதாக கூறப்படும் விமானப்படை வீரரின் சார்பாக விடுக்கப்பட்ட பிணை கோரிக்கையினை நிராகரித்த நீர்கொழும்பு மேலதிக நீதிவான் திலக்கரத்ன பண்டார சந்தேக நபரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 29 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். மீரிகமயில் கடமையாற்றும் விமானப்படை வீரரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார். சந்தேக நபரை நீர்கொழும்பு பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் கைது செய்து மன்றில் ஆஜர் செய்தனர். வழக்கின் முறைப்பாட்டாளரான ஜேர்மன் பிரஜை 25 வயதுடைய திருமணமான பெண்ணாவார். இவர் தனது கணவருடன் இலங்கைக்கு சுற…
-
- 6 replies
- 875 views
-
-
- சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் கரைச்சி வடக்கு விவசாயிகள் தனியார் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட விதை நெல் சுத்திகரிப்பு நிலையத்தை கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன்; வெள்ளிக்கிழமை (25) திறந்து வைத்தார். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதியுதவியில் கட்டப்பட்ட இந்த விதை நெல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 20 இலட்சம் பெறுமதியான நெல் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையத்தின் மூலம் கிளிநொச்சி விவசாயிகள் தரமான விதை நெல்லைப் பெற்றுக்கொள்ள வழியேற்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் தெரிவித்தார். இந்நிகழ்வில் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். http://tamil.dailymir…
-
- 3 replies
- 607 views
-
-
நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த ஆயத்தமாகிறது அரசாங்கம்! [sunday, 2014-04-27 08:33:58] ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கு தேவையான பின்னணி உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2010ம் ஆண்டு நடத்தப்பட்டிருந்தது. இதன்படி, எதிர்வரும் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தற்போதைய நாடாளுமன்றின் பதவிக் காலம் பூர்த்தியாகிறது. எனினும், நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டு ஓராண்டின் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றைக் கலைத்து பொதுத்தேர்தல…
-
- 0 replies
- 370 views
-
-
புலம்பெயர்ந்தோர் தொடர்பான ஐ.நா பிரதிநிதி அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம்! [sunday, 2014-04-27 09:15:33] புலம்பெயர்தோர் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கான ஐ.நா நிபுணர் பிரான்ஸிஸ் கீரிபியூ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அடுத்தமாதம் 19ம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.எனினும் அவருடைய சந்திப்பு அட்டவணை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.இதேவேளை ஐக்கிய நாடுகளின் நிபுணர் தமது இலங்கை விஜயத்தின்போது புலம்பெயர்ந்தோர் தொடர்பில் நிலைமைகளை ஆராய்வார் என தெரிவிக்கப்படுகிறது.பின்னர் பயண இறுதியில் அறிக்கை ஒன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=108180&category=Tamil…
-
- 0 replies
- 372 views
-
-
இலங்கையை நான்கு ஆண்டுகள் கண்காணிக்கும் நவநீதம்பிள்ளையின் செயற்திட்டம்! [sunday, 2014-04-27 09:17:38] ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை உட்பட்ட நாடுகள் தொடர்பில் சமர்ப்பித்துள்ள நான்கு வருட திட்டம், 2017ம் ஆண்டு வரைக்கும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப் பகுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை உட்பட்ட நாடுகள் தொடர்பில் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் காலப் பகுதியில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மீறல் விடயங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு சர்வதேசத்துடன் செயற்படும். இலங்கையைப் பொறுத்தவரை, மனித உரிமைகள் பேரவை, கண்காணிப்பு, ஆலோசனை சேவைகள் மற்றும் அழுத்தங்கள், …
-
- 0 replies
- 523 views
-
-
-
கருத் தரங்கு ஒன்றில் பரந்த அனுபவம் மிக்க ஒரு சிங்கள துறைசார் நிபுணர் கேட்டார், 'தமிழர்களுக்குள்ள பிரச்சினைகள் என்ன? அவர்கள் எம்மோடு ஒரே பஸ்ஸில் பிரயாணிக்கிறார்கள், ஒரே தேநீர் கோப்பையைத்தானே உப யோகிக்கின்றோம்.' -என்றார். ஷஷஅதுதான் பிரச்சினையே! தேநீர்க் கோப்பை யைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும் நீங்கள் அரச அதிகாரத்தைப் பகிரத் தயாராக இல்லை|| என நான் பதிலளித்தேன். அதற்கு மறுபேச்சு எழவில்லை என்று கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண, ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத்தலைவரும் தமிழ் இனத்தின் தேசிய தலைவர் என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் என்ற நாமத்தை கொண்ட தந்தை செல்வாவின் 37 ஆவது சிரார்த்த தினம் பல்பலப்பிட்டி புதிய கதிரேஷன் மண்டபத்தில் இன்று மாலை …
-
- 0 replies
- 549 views
-
-
வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பினை தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சி வலிகாமம் பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.அவ்வகையில்; நாளை ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரியில் படைத்தரப்பிற்கான ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா படைகளின் யாழ்.மாவட்ட கட்டளைத் தலைமையகம் மேற்கொண்டுள்ளது. இது ஆயுதம் தாங்கிய படைக்கான ஆட்சேர்ப்பு அல்ல எனவும் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாகவும் படையினர் ஒலிபெருக்கிகள் வாயிலாக அறிவித்து வருகின்றனர். இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு பலாலியில் மூன்று மாத பயிற்சி இடம்பெறுமென்றும் அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலேயே தொழ…
-
- 0 replies
- 393 views
-
-
கோபி நாடகம் முடிவுக்கு வந்துள்ளதா? முத்துக்குமார் ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானம் விவாதிக்கப்பட இருந்த நிலையில் ஜெயக்குமாரியின் கைதுடன் கோபி நாடகம் மேடையேற்றப்பட்டது. ஜெயக்குமாரி வீட்டிலிருந்து கோபி தப்பி ஓடினார் எனக் கூறப்பட்டது. சுற்றிவர அவ்வளவு படையினர் நிற்கும்போது தனி ஒரு நபர் எவ்வாறு தப்பி ஓட முடியும். வீட்டிற்கு வெளியே பெரும் வெட்டைவெளியான இடம் இருந்த போது அவரைச் சுட்டிருக்க முடியாதா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தபோது படையினரால் சரியான பதிலைக் கூறமுடியவில்லை. வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தானே அவ்வாறான கேள்வியைக் கேட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். தொடர்ந்து இந்த நாடகத்தை மேடையேற்றுவதற்காக ஆண்கள் பெண்கள் உட்பட 50 இற்கும் மேற்பட்டவர்கள்வரை கைது ச…
-
- 4 replies
- 883 views
-
-
இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இயங்க ஆரம்பிக்கும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அவர்களின் உத்தரவுக்கமைய பொலிஸ் மா அதிபரினால் நிறுவப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் எட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கொண்டதாக இலக்கம் 135 தர்மபால மாவத்தையில மைந்துள்ள புத்தசாசன அமைச்சு அலுவலகத்தில் இயங்க ஆரம்பிக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். பிரதேச ரீதியில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அந்தந்த பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு…
-
- 0 replies
- 308 views
-
-
உலக வங்கியினால் அனர்த்தங்களின் போது வழங்கப்படுகின்ற அவசர கடன் திட்டத்தை பெற்றுகொள்ளும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. ஆழிப்பேரலை, சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக இந்த கடன்களை வழங்கும் திட்டத்தை உலக வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி இலங்கைக்கு 102 மில்லியன் டொலர்களை வழங்க அங்கிகரிக்கப்பட்டுள்ளது. அனர்த்த ஏற்படும் போது வறியமற்றும் நடுத்தர மக்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் உடனடியாக அவர்களுக்கு உதவும் வகையில் இந்த கடன் நிதி வழங்கப்படுவதாக உலக வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=589512925427749277
-
- 0 replies
- 373 views
-
-
'ஒன்றுபட்ட இலங்கை' என்ற கட்டமைப்புக்குள்ளேயே தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுவிடுவதற்காகவே, மிகவும் கடினமான ஒரு பாதை வழியாக - தமிழ் பேசும் மக்களும் அவர்களது அரசியல் தலைமைத்துவமும் பயணித்து வருகின்றார்கள் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத்தலைவரும் தமிழ் இனத்தின் தேசிய தலைவர் என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் என்ற நாமத்தை கொண்ட தந்தை செல்வாவின் 37 ஆவது சிரார்த்த தினம் பல்பலப்பிட்டி புதிய கதிரேஷன் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து…
-
- 0 replies
- 410 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் குறித்து அறிக்கை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட தந்திரோபாய அபிவிருத்தி சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசேட அறிக்கையொன்று தயாரிக்கப்பட உள்ளது. இந்த அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வாக்களிப்பில் பங்கேற்காதவர்கள், எதிராக வாக்களித்தவர்கள், பாராளுமன்றில் பிரசன்னமாகியிருக்காதவர்கள் ஆகியோர் தொடர்பிலும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இந்த அறிக்கை தயாரிக்…
-
- 0 replies
- 343 views
-
-
சிங்கள முஸ்லிம் போராட்டமொன்றை மேற்குலக நாடுகள் விரும்புகின்றன இலங்கையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் போராட்டம் வெடிக்க வேண்டுமென்று மேற்குலக நாடுகள் விரும்புவதாக ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். முஸ்லிம் சிங்கள முரண்பாடு வெடிப்பதனை மேற்குலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான மோதல்கள் இடம்பெற்றால் தமிழ் கடும்போக்குவாதிகளும் முஸ்லிம்களுக்கு ஆதரவளித்து, மற்றுமொரு யுத்தத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லக் கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் சிங்கள முரண்பாடுகள் வெடித்தால் மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவினையும் இழக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளா…
-
- 0 replies
- 319 views
-
-
தீர்வைக் கண்டுவிடுவதற்காகவே பயணிக்கின்றோம்: சம்பந்தன் 'ஒன்றுபட்ட இலங்கை' என்ற கட்டமைப்புக்குள்ளேயே தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுவிடுவதற்காகவே, மிகவும் கடினமான ஒரு பாதை வழியாக - தமிழ் பேசும் மக்களும் அவர்களது அரசியல் தலைமைத்துவமும் பயணித்து வருகின்றார்கள் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத்தலைவரும் தமிழ் இனத்தின் தேசிய தலைவர் என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் என்ற நாமத்தை கொண்ட தந்தை செல்வாவின் 37 ஆவது சிரார்த்த தினம் பல்பலப்பிட்டி புதிய கதிரேஷன் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் …
-
- 0 replies
- 290 views
-
-
"அவர்களுக்கு இதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது. நாம் நடத்தையால் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று "உதயனுக்கு' காட்டமாக தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கே வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக். இதுகுறித்து இரா.சம்பந்தனிடம் கருத்துக் கேட்டபோதே இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார். தென்னாபிரிக்க அனுசரணையுடன் இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவதற்குத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதையடுத்து அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையான பேச்சுக்கள் விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்ப…
-
- 5 replies
- 483 views
-
-
தொற்றா நோய் காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 600 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைகாரணமாகவே 70 வீதமான உயிரிழப்புகள் இடம்பெறுவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். புகைத்தலினால் மாத்திரம் நாட்டில் வருடத்திற்கு 21 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை காரணமாக வருடத்திற்கு இரண்டு இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=172052924326118370
-
- 2 replies
- 262 views
-
-
கசினோ சூதாட்ட சட்டத்தின் மூலம் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகி அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதுகெலும்பு இல்லாது போய் விட்டது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் இன்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற செயல் நுனுக்க அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சுமந்திரன் எம்.பி இங்கு மேலும் கூறுகையில், அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேற்படி கட்டளையான கசினோ சூதாட்டத்தை கொண்டதான நிகழ்ச்சி நிரல் இல்லை என்று இங்கு அமைச்சர்களால் கூறப்படுகின்…
-
- 2 replies
- 287 views
-
-
மோதல் சூழலில் பாலியல் வன்முறைகள் இடம்பெறும் நாடுகளின் ஐ.நா பொதுச்செயலரின் பட்டியலில், சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்டதற்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. நேற்று ஐ.நா பாதுகாப்புச் சபையில் “பெண்கள் மற்றும் அமைதி மற்றும் பாதுகாப்பு” என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட திறந்த விவாதத்தில் உரையாற்றிய சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.. நேற்றுமுன்தினம், ஐநா பொதுச்செயலர் வெளியிட்ட அறிக்கையில் சிறிலங்கா உள்ளிட்ட 21 நாடுகளில் பாலியல் வல்லுறவுகள் தொடர்வதாக கூறப்பட்டிருந்தது. எனினும், இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்…
-
- 1 reply
- 648 views
-
-
இலங்கைக்குள் நுழைய தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா! - அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகிறார். [saturday, 2014-04-26 09:44:56] இலங்கைக்குள் நுழைய அமெரிக்கா தருணம் பார்த்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜனசெவன பத்திரிகையின் 3 வது வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.சகல இனங்களையும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் முன் எடுத்துச் செல்லக்கூடியதொரு ஊடகம்தான் தற்காலத்தில் தேவைப்படுகின்றது. நாட்டில் உள்ள சகல ஊடகங்களில் நாளாந்தம் வெளிவருகின்ற செய்திகளும் படங்களும் காட்சிகளும் இனங்களுக் கிடையே குரோத மனப்பான்மையை தோற்றுவிக்கின்றன. இலங்கைய…
-
- 2 replies
- 607 views
-