Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதியை நீக்க வேண்டும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நீக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அண்மையில் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் மூலம் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகித்து வருகின்றார். இந்த பதவியை வகிக்க ஜனாதிபதிக்கு தகுதியில்லை எனவும் அவரை பணி நீக்குமாறு, அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மாவிடம் கோரியுள்ளார். 'மஹிந்த ராஜபக்ஷ கடாபி அல்ல' எனவே அவர் பொதுநலவாய நா…

  2. சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு பங்களாதேஷ் பிரஜைகள் இலங்கையை பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல எத்தனித்த 41 பங்களாதேஷ் பிரஜைகளை இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாரியளவிலான சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பங்களாதேஷ் பிரஜைகள் போலியான லிபிய வீசாக்களை கடவுச் சீட்டில் பொறித்து இலங்கை வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்துள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு ஒவ்வொரு பங்களாதேஷ் பிரஜையும் தலா 700,000 ரூபாவினை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்கள் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட…

  3. பழையவற்றை தோண்டுவதில் எவ்வித அர்த்தமும் கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த கால தவறுகளை நியாயப்படுத்துவதனை விட்டு விட்டு, மக்களின் எதிர்கால நலனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அபிவிருத்திக் கூட்டங்களில் கடந்த கால விடயங்களை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாறாக மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் முனைப்பு காட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். அபிவிருத்திக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleVie…

  4. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியிலுள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது போலியான இறப்பர் முத்திரை மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் அங்கிருந்த நால்வரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/107662-2014-04-22-01-18-33.html

  5. -சுமித்தி தங்கராசா பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கோப்பாய் பகுதியினைச் சேர்ந்த இராஜரட்ணம் சுதர்சன் (30) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை (18) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தனர். மானிப்பாய் வீதியில் கணினி வலைப்பின்னல் என்னும் நிலையத்தினை நடத்தி வந்த இவர், விடுதலைப்புலிகள் சார்பான துண்டுப் பிரசுரங்களை தனது கணினியில் தட்டச்சுச் செய்து அச்சிட்டு வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இவரது நிலையத்திலிருந்த கணினிகள் மற்றும் ஏனைய உபகரணங்களை முத்திரையிட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் கொழும்பு தகவல் திணைக்கள பிரிவினர் கொண்டு சென்றுள்…

  6. பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி இடைநிறுத்தப்படுவதான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் கனேடிய பிரதமர் ஸ்டீபன் காப்பருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேன்மைதங்கிய ஸ்ரீபன் காப்பர், கனடிய பிரதம அமைச்சர், ஒற்றாவா, கனடா. மேதகு பிரதம அமைச்சர் அவர்களே! பொதுநலவாய நிதிக்கு வழங்கப்படும் நன்கொடை இடைநிறுத்தம் பொதுநலவாய நாடுகளில் ஒன்றாகிய இலங்கையின் ஓர் மூத்த தமிழ்பிரஜை என்ற வகையில் பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு உங்கள் அரசால் வழங்கும் பணத்தை இடைநிறுத்துவதாக தங்கள் அரசு எடுத்த முடிவை மீள்பரிசீலிக்க…

    • 13 replies
    • 1.1k views
  7. ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்த தென்கொரியா, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்காக சிறப்புத் தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்பியுள்ளது. தென்கொரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் யு மியங், ஹ்வான் தென்கொரிய அரசின் சிறப்புத் தூதுவராக நேற்று கொழும்பு வந்துள்ளார். இவர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். முதலீடு , வர்த்தகம், சுற்றுலாத்துறைகளில் சிறிலங்காவுடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வது குறித்து அவர் கவனம் செலுத்தியுள்ளார். சிறிலங்காவில் தற்போது 116 கொரிய நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. அத்துடன், சிறிலங்காவுக்கு தென்கொரியா கணிசமான அபிவிருத்தித் திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. ஜெனிவாவில் கட…

  8. இந்தியாவுக்குள் போலி நாணயத்தாள்களை புழக்கத்தில் விடும் நடவடிக்கைகளில் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் முக்கிய பங்கை வகிப்பதாக, இந்தியாவின் மத்திய புலனாய்வு முகவரமைப்புகள் கண்டறிந்துள்ளன. பாகிஸ்தானில் உள்ள செயற்பாட்டாளர்கள், சீனா வழியாக, சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு இராஜதந்திரப் பொதிகள் மூலம் போலி இந்திய நாணயத்தாள்களை அனுப்பி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு டிஎச்எல் மற்றும் பெடெக்ஸ் ஆகிய இரண்டு பொதி அனுப்பும் முகவர் நிறுவனங்களும் உடந்தையாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில், நடைபெற்ற பொருளாதாரப் புலனாய்வுச் சபையின் கூட்டத்தில் இதுபற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலமாக …

  9. இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் ஒன்றை எட்ட வைப்பதற்கு தென்னாபிரிக்கா எடுத்து வரும் முயற்சிகளில் சிக்கல் தோன்றியுள்ளது. தென்னாபிரிக்கா பக்கச் சார்பாக நடக்க முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் அரசதரப்பினரிடம் திடீரென ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம் என்று கொழும்பில் தகவல் அறிந்த வட்டாரங்கள் உதயன் பத்திரிகைக்குத் தெரிவித்தன. அமைதி முயற்சிகளில் ஒரு மூன்றாம் தரப்பாக ஈடுபடுமாறு தென்னாபிரிக்காவுக்கு இலங்கை அரசே அழைப்பு விடுத்திருந்தது. கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு வந்திருந்த தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவைச் சந்தித்து இது பற்றிப் பே…

  10. புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களில் மீண்டும் இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் சந்தித்து நிலமைகளைக் கேட்டறிந்துள்ளார். இது தொடர்பில் உறுப்பினரிடம் கேட்ட போது, புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர் யுவதிகள் மீண்டும் இராணுவத்தினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இதனால் அப்பகுதிகளில் நிலவிய பதட்ட சூழ்நிலையில் அன்றைய தினம் தொலைபேசி மூலம் தகவல்களை அவ்வப்போது பெற்றுக்கொண்டிருந்தாலும் மறு நாளே அப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்து மேற்படி விடயம் தொடர்பிலும் ஏனைய குறைகள் தொட…

  11. (எம்.எப்.எம்.பஸீர்) வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தின் வெடிவைத்தகல் காட்டுப் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் விமானிகளில் ஒருவரும் அந்த அமைப்பை மீன்டும் இலங்கையில் உருவாக்க முன்னின்றவர் எனவும் பாதுகாப்பு தரப்பால் அடையாளப்படுத்தப்பட்ட தேவியன் பயன்படுத்தியதாக கூறப்படும் வேன் வண்டியை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ். நல்லூர் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வேனானது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட குறித்த வேனானது தற்போது கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிர…

  12. Started by ரஞ்சித்,

    இந்த ஒளிப்படம் இங்கு இணைக்கப்படக் கூடியதா என்று தெரியவில்லை. ஆனால் இதன் முக்கியத்துவம் கருதி இங்கே இணைக்கிறேன்/ கேட்கும்போதே எனக்குள் ஒரு உணர்வு வளர்வதை நான் உணர்ந்தேன். நீங்களும் கேளுங்கள்: தமிழனென்பதை உணருங்கள்.

  13. மூன்றாவது தடவை ஜனாதிபதியாகப் போட்டியிடும் உரிமை மகிந்தவுக்கு இல்லை! - என்கிறது கொழும்பு டெலிகிராப். [Tuesday, 2014-04-22 08:06:02] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக போட்டியிடுதற்கு உரிமை இல்லை என்று கொழும்பு டெலிகிராப் தெரிவித்துள்ளது. 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி முறைமையில் காணப்படுகின்ற இரண்டு தவணை என்ற வரைமுறையை நீக்கப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடவில்லை. அத்துடன் நிறைவேற்று அதிகாரத்தை முன்னைய ஜனாதிபதிகள் போல, கட்சிகளை தடை செய்யவும், அரசாங்கத்தை மாற்றவும் பயன்படுத்தப் போவதில்லை என்றும், இதனை மக்களை வழிப்படுத்தவே பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காகவே மக்கள் அவருக்கு…

  14. மூன்று மாதங்கள் அம்பாந்தோட்டைக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றம்? [Tuesday, 2014-04-22 07:41:27] கொழும்பு, கோட்டே, ஸ்ரீ ஜெயவர்த்தனபுரவில் உள்ள நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு சுமார் 25 ஆண்டு கழிந்துள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தைச் சீரமைக்கும் பணி விரைவில் ஆரம்பமாகவுள்ளது. அதற்காக நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியை மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலம் பாவனைக்கு இடமளிக்காமல் மூட வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தக் கால கட்டத்தில் அம்பாந்தோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது குறித்து அரச உயர் மட்டத்தில் ஆராயப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேசமயம், மாற்று ஏற்பாடாக கொழும்பு, பௌத்தலோக மாவத்தையில் உள்…

  15. புலிகள் குறித்த பிரசுரங்களை அச்சிட்டதாக மானிப்பாய் கணினி ஆசிரியர் கைது! [Tuesday, 2014-04-22 08:20:06] விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி தொடர்பான பிரசுரங்களை அச்சிட்டதாக கணினி ஆசிரியர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 19ம் திகதி கைது செய்யப்பட்ட இந்த ஆசிரியரிடம் இருந்து மடிக்கணினி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிளிநொச்சியில் போலி றப்பர் முத்திரைகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் …

    • 2 replies
    • 596 views
  16. http://www.youtube.com/watch?v=yVqafn1jQQg&feature=youtu.be

    • 0 replies
    • 449 views
  17. விக்னேஸ்வரனை அவசரமாக அழைக்கிறது புதுடெல்லி! - தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்த முயற்சி. [Tuesday, 2014-04-22 08:26:53] வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை இந்திய வெளிவிவகார அமைச்சும், காங்கிரஸ் கட்சியும் அவசரமாக புதுடெல்லிக்கு அழைத்துப் பேசும் முயற்சியில், தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையிலுள்ள தமிழர்கள் பற்றிய கரிசனை மற்றும், இந்தியாவினது மூலோபாய நலன்களுக்கு இடையில் ஒரு சமநிலையை உருவாக்குவதற்காக, வடக்கு மாகாண முதல்வரை கூடிய விரைவில் புதுடெல்லிக்கு அழைப்பதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு முயற்சித்து வருகிறது. கடந்த மாதம், ஐ.நாவில் சிறிலங்காவுக்கு எதிரான வாக்களிப்பில் இந்தியா பங்கேற்காமல் விட்ட பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்ச…

  18. தமிழ் சிங்களப் புத்தாண்டு கோடைகாலத் திருவிழாவின் கலை நிகழ்வுகள் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாட்களாகஅழகி போட்டி நடை பெற்றன இதில் சுமார் 30 அழகிகள் பங்குபற்றினார்கள். யாழில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது இப்பொழுது சகஜமாகி விட்டது எனினும் இவை மக்கள் மத்தியில் வேறுபட்ட இரு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. யாழின் கலாச்சாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதாக ஒரு தரப்பினரும் இப்படியான நிகழ்வுகளின் மூலம் எம் திறமைகள் வெளிக்கொண்டு வரப்படுவதாகவும் கூறிக் கொள்கின்றனர். எதுவாக இருப்பினும் நம் கலாச்சாரத்தில் கரிசனையுடன் இருப்பது முக்கியமானதொன்றாகும். அழகு போட்டி என்று மொடல் ஆடைகளில் இல்லாமல் எம் சமூக பண்பாட்டுடன் பட்டுப்புடவைகளில் பங்குபற்றியமை மகிழ்ச்சிக்குர…

    • 10 replies
    • 1.3k views
  19. பிரான்ஸ் சென்றிருந்த சிங்களவர் ஒருவர் இறந்த நிலையில் ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது இலங்கையின் கட்டுநேரிய பிரதேசத்தை 47 வயதான சுதேஷ் சந்தன பெரேரா என்ற நபரே என்ற சிங்களவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இத்தாலியில் இருந்து இவர் குடும்பத்தினருடன் பிரான்ஸ் லூர்த்து மாத ஆலயத்திற்கு யாத்திரை சென்றிருந்தார். இவருடன் மனைவி, உறவினர்கள் மற்றும் வேறு சில இலங்கையர்களுடன் அவர் பிரான்ஸ் சென்றிருந்தார். இவரின் மரணத்திற்கான காரணம் அறிய பிரான்ஸ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://www.sankathi24.com/news/40670/64//d,fullart.aspx

  20. ராஜபக்ஷக்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயார் – சரத் பொன்சேகா 22 ஏப்ரல் 2014 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிடகோட்டே பிரதேசத்தில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து பாதுகாப்புப் படையினரையும் பாதுகாக்கத் தயார் எனவும், ஜனாதிபதியின் குடும்பத்தை பாதுகாக்கத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக ச…

  21. இலங்கையில் நடக்கும் உலக இளைஞர் மாநாட்டில் பங்கேற்பதை 103 நாடுகளே உறுதிப்படுத்தின! [Tuesday, 2014-04-22 08:17:27] இலங்கையில் அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதாக இதுவரை 103க்கும் அதிகமான நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதில் 40 நாடுகளின் அமைச்சர்களும் அரசியல் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். 103 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதோடு, 350 ற்கும் அதிகமான இளைஞர்கள் பல்வேறுபட்ட சிவில் சமூக அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க சுமார் 190 நாடுகளுக்கு அரசாங்கம் அழைப்பு அனுப்பியிருந்தது. இம்முறை இலங்கையில் நடைபெறவிருக்கும் உலக இளைஞர்கள் மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச…

  22. நாடளாவிய ரீதியில் கடந்த 10 நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 100 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டிகை காலங்களில் மது போதையில் வாகனம் செலுத்தியே அதிகளவான விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதுடன் இதன் போது 1,761 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/articles/2014/04/21/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-10-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-100-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%A…

    • 4 replies
    • 740 views
  23. தேர்தல் பிரசாரங்களில் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கிறார் நரேந்திர மோடி! - கொழும்பு ஆங்கில வாரஇதழ் கூறுகிறது. [sunday, 2014-04-20 10:20:44] பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கடந்த சில நாட்களாக தமது பிரசாரத்தின் போது இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிரிஐ, த ஹிந்து போன்ற பத்திரிகைகளை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், நரேந்திர மோடி தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால், இலங்கைக்கு எதிராக கடும்போக்கை கடைப்பிடிப்பார் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் எதிர்வுகூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைந்தால் அயல்நாடுகளான இலங்கை, மலேசியா, பிஜி ஆ…

    • 10 replies
    • 1.1k views
  24. குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- இலங்கை இராணுவத்தின் தென்மராட்சியின் முக்கிய படைத்தளமாகவும், முன்னைய முன்னரங்க நிலையான முகமாலைக்கான விநியோக தளமாகவும் இருந்த வறணி படைத்தளத்திலிருந்த பாரிய மனித புதைகுழிகளது எச்சங்கள் இரவோடிரவாக அகற்றப்பட்டமை தொடர்பான முக்கிய தகவல் ஒன்று குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்துள்ளது. குறிப்பாக 1996ம் ஆண்டு யாழ்.குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்ட வேளையில் பருத்தித்துறை – கொடிகாமம் வீதியில் வறணியில் பெருமளவு நிலப்பரப்பினை ஆக்கிரமித்து 522 வது படைத்தளம் அமைக்கப்பட்டிருந்தது. அதற்காக பிரதான வீதியும் துண்டிக்கப்பட்டதுடன் அங்கிருந்த பெருமளவு பொதுமக்களது வீடுகளும் சுவீகரிக்கப்பட்டிருந்தன. யாழ்.குடாநாடு கைப்பற்றப்பட்டது முதல்…

  25. சந்தேகநபர் தொடர்பில் தகவல்களை திரட்டுவதற்காக மஹரகம நகரத்திற்கு சென்றிருந்த புலனாய்வு பிரிவைச்சேர்ந்த அதிகாரிகள் மூவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தொழில்நுட்பவியலாளர் மற்றும் வர்த்தக நிலையத்தின் ஊழியர் ஒருவரையே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த அதிகாரிகள் தங்களுடைய அடையாளத்தை உறுதிபடுத்தியதன் பின்னரே அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/107624-2014-04-21-10-15-01.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.