ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
சிறிலங்கா அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 30ம் நாள் நடத்தப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று ஊகம் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபரின் சோதிட ஆலோசகர், தேசபந்து சுமணதாச அபேகுணவர்த்தனவை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபரின் கிரகநிலைப்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் நாளுக்குப் பின்னரே, அவருக்கு நற்பலனையும், பலத்தையும் கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதேவேளை, வரும் செப்ரெம்பர் மாதம் ஊவா மாகாணசபைத் தேர்தலை நடத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. எனினும், 2016ம் ஆண்டு வரை அதிபர் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அண்மையில் சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார். எனினும், ஐ.நா விசாரணைகளை முன்வைத்து அரசியல் நல…
-
- 0 replies
- 321 views
-
-
கூரிய ஆயுதத்தினால் இனந் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த எல்பிட்டிய சரணங்கர விஹாரையின் விஹாராதிபதி வெத்தேவே பஞ்சகீர்த்தி தேரர் சிகிச்சை பயனின்றி இன்று காலமாகியுள்ளார். தேரர் மீது கடந்த மாதம் 15ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தேரர் பின்னதாக கராப்பிட்டய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு ஒரு மாதத்திற்கும் அதிக காலம் சிகிச்சை பெற்று வந்த தேரர் காலமாகியுள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=803622892920897174
-
- 1 reply
- 346 views
-
-
உலகில் மிகவும் மோசடியான அரசாங்கம் என்று மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆசியாவின் ஆச்சரியம் தென்பட ஆரம்பித்து விட்டது. மதுவுக்கு முற்றுப் புள்ளி வைப்பதாக கூறி 10 வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் உலகில் மது பாவனையில் உள்ள நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தை எட்டியுள்ளது. இருப்பினும் ஏனைய மூன்று நாடுகளும் குளிரான காலநிலையை கொண்ட நாடுகள். வெப்ப வலய நாடான இலங்கை மது பாவனையில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது என்பது ஆச்சரியப்பட வைப்பதாகத்தான் உள்ளது. இன்னும் கொஞ்ச நாட்களில் தரகுப்பணம் பெறுதல், கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவதிலும…
-
- 0 replies
- 194 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சி நிலைமையிலிருந்து பழப்பயிர்ச் செய்கைகளை விவசாயிகள் பாதுகாத்து கொள்ளவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அ.செல்வராசா வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார். விவசாய நிலைமைகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது நிலவுகின்ற வறட்சி காரணமாக சிறுபோகப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளமுடியாத நிலைமை காணப்படுகின்ற போதும், வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர்செய்கைகளை மேற்கொள்வதற்கு விவசாயிகள் முன்வரவேண்டும். குறிப்பாக தற்போதைய வறட்சியினால் பழப்பயிர்ச்செய்கை அழிவடைந்து வருகின்றது. இந்த நிலையில் பழப்பயிர்செய்கையில் ஈடுபடுகின்றகின்ற விவசாயிகள், மண்ணின் ஈரத்தன்மையை பேணும் வகையில் பழப்பயிர்களின் அடி…
-
- 1 reply
- 462 views
-
-
கடந்த 16.04.2014 அன்று வேணாவில், இரணைப்பாலை, சிவநகர், ஆனந்தபுரம், வலைஞர்மடம் பகுதிகளில் நடைபெற்ற மக்கள் குறைகேள் சந்திப்புகளின் போதே, வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனிடம் மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சி, தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியாமை, அதனால் ஏற்பட்டுள்ள உணவுத்தட்டுப்பாடு வறுமையால் தாம் பட்டினிச்சாவை எதிர் நோக்கியுள்ளதாக மக்கள் குமுறியுள்ளனர். குறித்த சந்திப்புகளின் போது மக்கள், காணி தொடர்பிலான முரண்பாடுகள், வீட்டுத்திட்டம் இழுபறிநிலை, வீதி மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள், மின்சாரம் மற்றும் நிவாரணம் வழங்கப்படாமை, குடிநீர் தட்டுப்பாடு, உணவு உற்பத்தி, சுயதொழில் மற்றும் தொழில் வாய்ப்புகள் இல்லாமை உள்ளிட்ட சமகால பிரச்சினைகள் பற்றி…
-
- 0 replies
- 552 views
-
-
சிவகங்கை: இலங்கையின் 13வது அரசியல் சாசன திருத்தம் மூலம் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். சிவகங்கை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து காரைக்குடியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசியதாவது: தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. என்ற இரு கட்சிகள் தான் ஆட்சி அமைக்க முடியும். மூன்றாவது கட்சி பற்றியோ, இது குறித்த அரசியல் சிந்தனையோ இது வரை இருந்தது இல்லை. தற்போது பாரதிய ஜனதா கட்சி அமைத்துள்ள கூட்டணி அலை மூலம் மத்தியில் ஆட்சியை பிடிப்பதோடு, 2016-ல் தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழ்நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்துள்ளன. ஆனால் தமிழ்நாடு எந்தளவுக்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
எம்.இஸட். ஷாஜஹான் நீர்கொழும்பில் 45 வருட காலமாக வர்த்தகம் செய்த தமக்கு தற்போதைய நிலை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை நகரில் அதிகரித்துள்ளது என்று நேற்று வியாழக்கிழமை இரவு ஆயுத முனையில் கொள்ளை அடிக்கப்பட்ட புஸ்பா ஜுவலரி உரிமையாளர் எம்.ஏகாம்பரம் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். மூன்று மோட்டார்; சைக்கிள்களில் ஜெக்கட் மற்றும் ஹெல்மட் அணிந்து வந்த ஆறு பேரை கொண்ட கொள்ளை கோஸ்டியினர் நகை கடை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் கொள்ளையிட்டதுடன் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர் இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் புஸ்பா ஜுவலரி உரிமையாளரின் நீர்கொழும்பு இல்லத்திற்கு சென்று விசாரித்தார்…
-
- 1 reply
- 603 views
-
-
தலைமன்னார் வைத்தியசாலையின் புதிய மகப்பேற்று விடுதியை வசிப்பிடமாக பயன்படுத்தி வரும் வைத்திய அதிகாரி: 19 ஏப்ரல் 2014 தலைமன்னார் வைத்தியசாலையின் புதிய மகப்பேற்று விடுதியை, அதன் தலைமன்னார் வைத்திய அதிகாரி தனது வசிப்பிடமாக 2009ம் ஆண்டு முதல் பாவித்து வருகின்றதாக தலைமன்னார் பியர் ஸ்ரேசன், கிராமம் ஆகிய கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,,, தலைமன்னார் வைத்தியசாலையில் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வைத்திய அதிகாரி கடமையாற்றி வருகின்றார். இவருடைய அட்டசாகசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தலைமன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதி உடைந்து விழுந்து கொண்டிருக்கும் நிலையிலும், மழைக்கு ஒழுகிக்கொண்டிருக்கு…
-
- 0 replies
- 480 views
-
-
சுயாட்சியைக் கொடுங்கள்; தேசிய சமாதானப் பேரவை அரசுக்கு அவசர வேண்டுகோள் news போர் முடிவுற்று ஐந்து ஆண்டுகள் முடிவுறும் நிலையில் இப்போது விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகின்றது என்று அரசு கூற ஆரம்பித்துள்ளது. பொலிஸார் ஒருவரின் காலில் சுட்டார்கள் என்று தெரிவித்து சந்தேகநபர்களான மூன்று பேரை படையினர் சுட்டுக் கொன்றிருப்பதை அடுத்து நிலைமை மோசமடைய ஆரம்பித்துள்ளது. தமிழர்களுக்குச் சுயாட்சி அளவுக்கான அதிகாரத்தைக் கொடுக்கக்கூடியதான அமைப்பு ஒன்றை உருவாக்குங்கள் என்று இலங்கை அரசிடமும் ஏனைய அரசியல் கட்சிகளிடமும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது தேசிய சமாதானப் பேரவை. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப் புடனான பேச்சுக்களை மீள வும் ஆரம்பிக்கும் படியும் அது கோரியுள்ளது. நாட்டில் அ…
-
- 0 replies
- 484 views
-
-
கிளிநொச்சியில் 64 வயதுடைய தாய் கைது ! ஏப் 19, 2014 திருமதி பத்மாவதி , 64 வயதுடைய தாய் இன்று காலை கிளிநொச்சியில் சிங்கள அரசின் குற்றப்புலனாய்வு ப்பிரிவினால் கைதுசெய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.சில வாரங்களாக இலங்கை அரசால் நடத்தப்பட்ட புலிகள் மீள் வருகை என்னும் நாடகத்தின் தொடர்ச்சியின் நடவெடிக்கையே திருமதி பத்மாவதி கைதின் காரணம் என அறிய முடிகின்றது . தற்பொழுது புலிகள் கதை கூறி அவர்களுடன் தொடர்ப்பு என்று பல அப்பாவி மக்களை தொடர்ச்சியாக கைது செய்து சிறையில் அடைக்க சிங்கள பேரினவாத அரசு பெரும் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றது . http://www.sankathi24.com/news/40587/64/64/d,fullart.aspx
-
- 0 replies
- 463 views
-
-
ஐ.நா பொதுச்சபை தலைவர் அடுத்த மாதம் வருகிறார் சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014 09:32 ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தலைவர் டொக்டர் ஜோன் வில்லியம் ஆசீ அடுத்த மாதம் 6 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். ஹம்பாந்தோட்டையில், மே மாதம் 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையிலும் நடைபெறவிருக்கின்ற 2014 ஆம் ஆண்டு உலக இளைஞர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/107328-2014-04-19-04-02-32.html
-
- 0 replies
- 292 views
-
-
தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்மானம் ஒன்றினை நாங்களும் சில புலம்பெயர் அமைப்புக்களும்கொண்டுவருதற்கு எடுத்த முயற்சியை முறியடித்த கூட்டமைப்பினர் மறுபுறத்தில் தமிழ் மக்களுடன் சம்பந்தப்படாத பிற சக்திகளின் நலன்களை பேணிக்கொள்வதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை கண்மூடித்தனமாக ஆதரித்திருந்தார்கள் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ! கேள்வி:-உங்களுடைய ஜெனிவா பயணம் வெற்றியளித்திருக்கின்றதா? பதில்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் என்ற வகையில் நானும் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகிய மூவரும் முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக ஜெனிவாவிற்குச் சென்றிருந்தோம். முதலா…
-
- 2 replies
- 486 views
-
-
யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரி அருகில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் யேரோன் ஜெயரோமி கொண்சலிட்டாவின் மரணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களை யாழ்.ஆயர் இல்லம் மறுதலித்துள்ளது. யாழ்.ஆயர் சார்பில் குருமுதல்வர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாhர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மதகுருமார் மீது சுமத்தப்பட்;ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மைகளை மறைக்காது விசாரணைகளிற்கு ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகையில் 'யாழ் பேராலயத்தில் நவம்பர் 2013 – பெப்ரவரி 2014 காலப் பகுதியில் மறையாசிரியராகக் கடமையாற்றிக் கடந்த 14-04-2014 அன்று மரணமடைந்த செல்வி ஜெறோமி கொன்சலிற்றா அவர்களுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் க…
-
- 17 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் ஆக்கபூர்வமாக அமைந்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற கருமங்கள் மற்றும் யுத்த காலத்திற்கு பின்னர் வடகிழக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவக் கெடுபிடிகள், இனவிகிதாசாரத்தை மாற்றும் செயற்பாடுகள் நல்லிணக்கம் தொடர்பிலான அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட முக்கிய பல விடயங்களை உயர் மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்புக்களின் போது நாம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். அத்துடன் தென்னாபிரிக்க அரசில் இலங்கை விவகாரங்களை கையாளும் விசேட பிரதிநிதி சிறில் ராமபோஷா உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர் வெகுவிரைவில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர் என தமி…
-
- 3 replies
- 465 views
-
-
நெல்லியடி மகா வித்தியாலையத்தில் வடமராட்சிக்கான இராணுவ ஆட்சேர்பு - விண்ணப்பப் படிவங்கள் விநியோகம்:- முதற் பதிவேற்றம்:- 16-04-2014 - 14:42 இலங்கை இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக வடமராட்சிப் பகுதிக்கான ஆட்சேர்ப்பு இன்று வியாழக்கிழமை (17.04.14) இடம்பெறவுள்ளது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று படையினரால் விநியோகிக்கப்பட்டுள்ளன. இலங்கை இராணுவத்திற்கான சாரதி மற்றும் மின்னியலாளர்கள் மற்றும் சங்கீத விரிவுரையாளர்கள் என ஆட்சேர்ப்பு நிகழவுள்ளதாக அவ் விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய ஆட்சேர்ப்பில் சந்தர்ப்பத்தினை தவறவிட்டவர்களிற்கான சந்தர்ப்பமும் நேர்முகத்தேர்வும்…
-
- 3 replies
- 539 views
-
-
புத்தபெருமானின் பஞ்சசீலக் கொள்கைகளை பின்பற்றும் நாடென பௌத்தர்கள் பெருமையடித்துக் கொள்ளும் எமது நாட்டில் விபசாரம், ஓரினச் சேர்க்கை, சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு, சூதாட்டம் என்ற பஞ்ச கொள்கைகளே பின்பற்றப்படுகின்ற தோற்றப்பாட்டைஅண்மைக்கால தரவுகள், நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. 2கோடி மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், கணக்கெடுப்பின்படி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலை மாதர்களும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களும், 30 முதல் 40 ஆயிரத்திற்கிடைப்பட்ட சிறுவர் பாலியல் தொழிலாளர்களும் இருக்கின்றார்கள் என்பதை அறியும்போது, இன்னும் சில வருடங்களில் எமது நாடு தாய்லாந்தின் இடத்தையெட்டி விடுமென்ற அச்சமே ஏற்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை விபசாரம் சட்டப்படி குற…
-
- 4 replies
- 1.6k views
-
-
இந்தியா, அமெரிக்கா, ஜேர்மனிக்கு புதிய தூதர்களை நியமித்தது இலங்கை அரசாங்கம்! [Friday, 2014-04-18 18:46:49] இந்தியா, அமெரிக்க, ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான புதிய தூதர்களை நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தியாவுக்கான இலங்கை தூதராக பேராசிரியர் சுதர்ஷன் செனவிரத்னவும், இந்தியாவுக்கான இலங்கை தூதராக இருந்த பிரசாத் காரியவசம் அமெரிக்காவுக்கான தூதராகவும், வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஜேர்மனிக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=107757&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 499 views
-
-
மாத்தளையில் மினி சூறாவளி: 50 வீடுகள் சேதம் வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014 21:00 மாத்தளை,ஹதுன்கமுவையிலுள்ள மாரகருதுன்னே கிராமத்தை ஊடறுத்து வீசிய மினி சூறாவளியினால் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வில்கமுவ பிரதேச செயலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/107320--50-.html
-
- 0 replies
- 644 views
-
-
ஐ.நா பொதுச்சபைத் தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்:- 18 ஏப்ரல் 2014 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் டொக்டர் ஜோன் வில்லியம் ஆசீ (John William Ashe) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். 2014ம் ஆண்டு உலக இளைஞர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐக்கிய நாடுகள் அமைப்பின் மிக முக்கியமான அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுச் சபையில் சகல உறுப்பு நாடுகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி அஹமட் அல்தவானி மற்றும் ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனங்களின் ஏனைய பல முக்கியஸ்தர்களும் மாநாட்டில் பங்கேற்ற உள்ளனர். ஹம்பாந்தோட்டை மாகம்புர சர்வதேச மாந…
-
- 0 replies
- 605 views
-
-
சிவா சிவானந்தன்:- முப்பது வருட யுத்தம் அது தந்துள்ள வலி என்பவற்றினை தாண்டி எமது மக்கள் உறுதியுடன் இருக்கிறார்கள். முப்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து நான் இங்கு வரும் போது சந்தேகத்துடனேயே வந்தேன். 'மக்களின் மனநிலை எவ்வாறிருக்கும்?', மனதளவில் அவர்கள் உடைந்திருபார்களா? என்று சிந்தித்துக் கொண்டே வந்தேன். ஆனால் இங்கே வந்து பார்த்தபோது என்னால் நம்பமுடியவில்லை. மக்கள் எம்மால் முடியும் என்ற வைராக்கியத்தோடு பேசுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றதென தெரிவித்துள்ளார் அமெரிக்கப் பேராசிரியரும் - அமெரிக்க அரசின் அதியுயர் விருது பெற்ற தமிழருமான சிவா சிவானந்தன். நேற்று கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும…
-
- 8 replies
- 751 views
-
-
மன்னார் கூராய்கிராமத்தில் தென்பகுதியை சேர்ந்த சிங்களவர் ஒருவர் அரசியல்வாதிகளின் செல்வாக்கை பயன்படுத்தி போலி அனுமதிப்பத்திரத்தை தயார் செய்து மண் அகழ்வில் ஈடுபட்டு வருகிறார் என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். குருணாகலை சேர்ந்த யூட் மாக்கஸ் பேனாண்டே என்ற சிங்களவரே என்பவரே சட்டவிரோதமாகவும் பலவந்தமாகவும் மண்அகழ்வில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. கூராய் கிராமத்தில் ம.சண்முகராசா, சி.புவனேஸ்வரன் ஆகியோருக்கு வயல் காணிகள் முறையே எல்.டி.ஓ 60, எல்.டி.ஓ 56 இலக்க வயல்காளுக்கான அனுமதிபத்தரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் தென்பகுதியை சேர்ந்த இந்த சிங்கள நபர் தன்னிச்சையாக அரசியல்வாதிகளின் செல்வாக்கினை பயன்படுத்தி கூராய் மக்களுக்கு சொந்தமான காணியில் வேறுஇடங்களில் அகழ்வு செய்யப்படும…
-
- 0 replies
- 339 views
-
-
கையில் துப்பாக்கி கற்களுடன் ஆளும் தரப்பு குண்டர்கள் - 2ஆம் இணைப்பு:- 2ஆம் இணைப்பு:- கையில் துப்பாக்கி கற்களுடன் ஆளம் தரப்பு குண்டர்கள் - ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது. தாக்குதல் சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். ஹம்பாந்தோட்ட துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை பார்வையிடச் சென்ற ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மீது நேற்று (17) தாக்குதல் நடத்தப்பட்டது. தெற்கு விமான நிலையம் துறைமுகம் பார்க்கச் சென்ற ஐதேகவினர்மீது காவற்துறையினர் பார்த்திருக்க தாக்கு…
-
- 1 reply
- 439 views
-
-
வடக்கில் இராணுவத்தை வைத்திருக்கவே “ புலிவருது” நாடகம் அரசால் அரங்கேற்றம்; சுமந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு ரொஷான் நாகலிங்கம் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை அரசு இனியும் தொடர்ந்தால் சர்வதேசத்தின் உதவியை இன்னும் அதிகமாக நாட வேண்டியேற்படுமென எச்சரித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைக்காதிருப்பதற்காக “புலிவருது” நாடகத்தை அரசு அரங்கேற்றி வருவதாக குற்றஞ்சாட்டியதுடன், அரசின் இந்த நாடகத்திற்கு அமைவாக தமிழ் இளைஞர்கள் நடந்து கொள்ளக் கூடாதெனவும் கேட்டுக்கொண்டார். அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்…
-
- 0 replies
- 358 views
-
-
ஒலுவில்லில் நடந்த ஆர்ப்பாட்டம் இலங்கையின் கிழக்கே அம்பாரை மாவட்டம் ஒலுவில் பிரதேச முஸ்லிம்கள் வியாழக்கிழமை இரவு கடற்படையினருக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது பகுதியில் இருக்கும் பாடசாலை கட்டிடமொன்றில் அமைந்துள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த ஆர்பாட்டத்தின் போது அவர்களால் முன் வைக்கப்பட்டிருந்தது. வியாழக்கிழமை இரவு அந்த பிரதேசத்தில் இடம் பெற்ற சம்பவமொன்றை அடுத்து பொது மக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் எதிரொலியாகவே வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி இந்த ஆர்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. வியாழனன்று இரவு வீடொன்றிற்குள் நுழைந்து பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படு…
-
- 1 reply
- 609 views
-
-
குளோபல் தமிழச் செய்திகளின் விசேட செய்தியாளர் - 2ஆம் இணைப்பு:- புகைப்படம்: கிளிநொச்சி சிவபுரம்:- 17-04-2014 - 19:14am கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டு திட்ட நடவடிக்கை பாதிக் கட்டத்தையும் தாண்டவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் இன்று நடந்த கலந்துரையாடலில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஏழாயிரம் வீடுகள் இந்திய வீட்டுத்திட்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டன. அவற்றில் இதுவரையில் மூவாயிரம் வீடுகளே கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அவற்றில் பல வீடுகள் இன்னமும் கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ள …
-
- 0 replies
- 342 views
-