Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா விசாரணையை இலங்கை ஏற்க மறுத்ததால் தான் பயணத்தை கைவிட்டேன்! – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு. [Tuesday, 2014-04-15 09:10:19] ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைக்க இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்த காரணத்தால் தான், இலங்கைக்கான பயணத்தில் இருந்து தாம் விலக்கிக் கொண்டதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஷரோன் ஹட்க்சண் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனால் உருவாக்கப்பட்ட "நன்மைக்கான தளம்" என்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில் - அனைத்துச் செலவுகளும் அந்த நிறுவனத்தால் ஏற்கப்பட்ட- பயணம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் ஷரோன் ஹட்க்சண் மேற்கொள்ளவிருந்தார். அவரோடு பயணம் செய்யவிருந்த வேறும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பயணத்தை கடந்தவாரம் இரத்துச…

  2. சிறிலங்கா விவகாரம் குறித்து, அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலுடன், நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களில் ஏற்பாட்டாளராகப் பணியாற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வொசிங்டனில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, எரிக் சொல்ஹெய்ம், சிறிலங்காவில் எல்லா சமூகங்களுக்குமான உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை, எரிக் சொல்ஹெமுடனான சந்திப்புக் குறித்து திருப்தி வெளியிட்டுள்ள நிஷா பிஸ்வால், அவரது அறிவை விட…

  3. சிறிலங்காவில் வரட்சியால் தேயிலை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகளாவிய ரீதியாக தேயிலை விலை அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள வரட்சியால், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தேயிலை உற்பத்தி, முன்னைய ஆண்டை விடவும் பாதியாக குறைந்துள்ளது. இதனால், இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களின் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் நான்கு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காவில் உள்ள 206,104 ஹெக்ரெயர் தேயிலைத் தோட்டங்களில், 70 சதம் சிறுதேயிலை உற்பத்தியாளர்களுக்குச் சொந்தமானதாகும். 397,223 சிறுதேயிலை உறுபத்தியாளர்கள் கடந்த ஆண்டில், 1.5 பில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்திருந்தனர். கடந்த பெப்ரவர…

  4. ஈழத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இலங்கை நம் நட்பு நாடு என்று சொல்கிறது பாரதீய ஜனதா. இலங்கை நம் நட்பு நாடு. ராஜபக்ச நமது நண்பர் என்கிறது காங்கிரஸ் கட்சி. இலங்கை பகை நாடு என்று அறிவிக்க வேண்டும் என்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனவே அதற்காகவே அவரை நாம் ஆதரிக்கின்றோம். ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி. அவரையும் அவருடைய சகாக்களையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று நட்புறவை துண்டிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பவர் …

  5. இலங்கை ஜனநாயக குடியரசின் அதி மேதகு நிறைவேற்று அதிகாரம் கொண்ட கௌரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு …..? இலங்கை திரு நாட்டின் ஜனாதிபதியாக நீங்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு கொடூரமான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தபோது முஸ்லிம்கள் நாங்கள் மிகவும் சந்தோசப்பட்டோம் ஏனெனில் தொடர் யுத்தத்தினால் தமிழ் முஸ்லிம் சிங்களம் என்று மூன்று சமூகமும் உயிர் பொருள் என்று இழந்து சொல்லெனா துயரத்தை அனுபவித்தனர். உங்கள் ஆட்சியிலான யுத்த வெற்றியானது உங்களை இரண்டாம் துட்டகைமுனுவாகவே சிங்கள மக்களைப்போலவே பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களும் பார்த்தனர், அதனை நிறுவும் முகமாக நீங்களும் மேடைகளில் தமிழில் உரை நிகழ்த்தி எங்கள் மனங்களில் இடம்பிடித்தீர்கள் உங்கள் மேடைப்பேச்சில் தமிழர்களையும் முஸ்லிம்களை…

  6. சர்வதேச விசாரணைக்கான சாட்சியப்பதிவு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது:- வில்லியம் ஹேக்:- 15 ஏப்ரல் 2014 சர்வதேச விசாரணைக்கான சாட்சியப்பதிவு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது:- வில்லியம் ஹேக்:- ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கும் முகமான சாட்சியப்பதிவு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் என பிரித்தானிய வெளியுறவு அமைசசர் வில்லியம் ஹேக் அறிவித்துள்ளார். நவநீதம்பிள்ளையின் விசாரணையை பொறுத்தவரை, அதில், அனைத்து துறைசார்ந்தவர்களும் தகவல் மற்றும் சாட்சியப்பதிவு தொடர்பில் தெரிவுச்செய்யப்படுவர் என்று வில்லியம் ஹேக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர…

  7. இந்தோனேசியா சிறையிலிருந்து விடுதலை கோரி 9 ஈழத்தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!!! - வல்வை அகலினியன் 15 ஏப்ரல் 2014 கடந்தஒரு வருடங்களுக்கு மேலாக மிருகங்களை விட மிக மோசமாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி இந்தோனேசியா சிறையில் அடைத்து வைக்கப்படிருக்கும் 9 ஈழத்தமிழ் உறவுகள், தம்மை விடுதலை செய்து குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கையினை முன் வைத்து வருகின்ற 21-04-2014 அன்று திங்கட்கிழமை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். ◆ இந்தோனேசியாவிற்கு எவ்வாறு ஈழத்தமிழர்கள் சென்றார்கள்? குறிப்பிட்ட 9 ஈழத்தமிழர்களும் 09-03-2013 அன்று 124 பேருடன் இலங்கை இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்குப் பயந்து உயிர் தப்பி சுதந்திரக் காற்றினை சுவாசிப்பதற்காக அகதிகளா…

  8. அண்மையில் நாடகபாணியில் கொல்லப்பட்ட, அரசால் அறிவிக்கப்பட்ட "புலிகளின் புதிய தலைவர்" கோபி என்னும் தமிழ் இளைஞன், கிளிநொச்சி கொக்காவில் ராணுவ முகாமில் சமயலறையில் எடுபிடியாக வேலை பார்த்தவர் என்றும், அவருடன் சேர்ந்து கொல்லப்பட்ட தேவியன் மற்றும் அப்பன் ஆகியோர் அதே முகாமில் எடுபிடி வேலைகளுக்காக இராணுவத்தால் அமர்த்தப்பட்டவர்கள்: என்றும் அம்முகாமின் ராணூவ அதிகாரியொருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றிற்கு தெரிவித்திருக்கிறார். அந்த ராணுவ அதிகாரியின் தகவலின்படி கோத்தாபயவின் சதித்திட்டம் ஒன்றிற்கமைய இம்மூவரும் தேடப்படும் புலித்தலைவர்களாக அறிவிக்கப்பட்டு, பின்னர் பெரும் எடுப்பிலான இராணுவ தாக்குதல் ஒன்றின்மூலம் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தெரியவருகிறது. கொல்லப்பட்ட இந்த மூவர…

  9. இலங்கையில் பொதுபலசேனாவினால் மேற்கொள்ளப்படும் அராஜகங்கள் தொடர்பில் பல்வேறு தரப்புக்களின் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான டிலான் பெரோரா மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்கள் காலத்தின் தராசில் மிகவும் வளுவுள்ளதாக காணப்படுகின்றது. முஸ்லிம்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் குரல் கொடுத்தால் அல்லது அறிக்கைவிட்டால் அவர்களை இனவாதிகளாக காண்பித்து அதிலிருந்து தேவையற்ற விடயங்களை தொட்டுக் கொண்டும்,தொங்கிப் பிடித்துக் கொண்டும் பேசும் நபர்கள் ஏராளம். இந்த நிலையில் இலங்கையில் அண்மையக் காலமாக பொதுபலசேனா அமைப்பினரின் அத்துமீறிய அட்டகாசங்களும்,அறுவெறுப்பான பேச்சுக்களும் முஸ்லிம்களை மட்டுமல்லாது பௌத்தர்களையும் தலை குனியச் செய்த…

    • 0 replies
    • 454 views
  10. ஐ.நா சாட்சியங்களை அச்சுறுத்தவா செல்வதீபன் மீது தாக்குதல்!? சாட்சியம் இணைப்பு! ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த ஊடகவியலாளர் ஒருவர் கொலை முயற்சிக்கு உட்படுத்தப்பட்டு படுகாயம் அடைந்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘தினக்குரல்’ மற்றும் ‘வலம்புரி’ பத்திரிகைகளின் கரவெட்டிப் பகுதிச் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபன் கடந்த இரவு வழிமறித்துத் தாக்கப்பட்டுள்ளார். நெல்லியடிப் பகுதியிலிருந்து சிறுப்பிட்டியிலுள்ள தனது வீட்…

  11. சீனாவைத் தந்திரமாகப் பயன்படுத்துகிறார் மகிந்த ராஜபக்ஷ! – யுரோ ஏசியா ரிவியூ இணையத்தளம் கூறுகிறது. [Tuesday, 2014-04-15 08:45:05] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவை தந்திரமான முறையில் பயன்படுத்தி வருவதாக யுரோ ஏசியா ரிவியூ என்ற சர்வதேச அரசியல் ஆய்வு இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவின் அடுத்தக் கட்டம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கம் இலங்கையில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் இந்தியா இலங்கையில் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் அளவு மிகக்குறைவு.இந்த நிலையில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்றும், இந்தியாவுக்கு இது அச்சுறுத்தலாகவும் பார்க்…

  12. யாழ் கலட்டிப் பிள்ளையாா் கோவில் தோ் சரிந்து வீழ்ந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கலட்டி பிள்ளையார் ஆலயத்தின தேர் இன்று முற்பகல் ஆலய பின் வீதியில் சரிந்து விழுந்தது. இதில் ஆலய குருக்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவம் தொடர்பாக தெரியவருவது தேரின் பின் இரண்டு சில்லுகளை இணைக்கும் அச்சு சரியாக பொருந்தாமையினாலே இச் சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் பக்தர்கள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இன்று வருடப்பிறப்பு தினத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. http://www.e-jaffna.com/a…

    • 10 replies
    • 1.6k views
  13. http://www.youtube.com/watch?v=P7hyaf_n4cY நன்றி: தந்தி தொலைக்காட்சி.

  14. இலங்கை விவகாரம்; எரிக் சொல்ஹெய்ம் – நிஷா தேசாய் சந்திப்பு! சிறிலங்கா விவகாரம் குறித்து, அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலுடன், நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களில் ஏற்பாட்டாளராகப் பணியாற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வொசிங்டனில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, எரிக் சொல்ஹெய்ம், சிறிலங்காவில் எல்லா சமூகங்களுக்குமான உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை, எரிக் சொல்ஹெமுடனான சந்திப்புக் …

  15. மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் ஜனாதிபதிக்கு கடிதம் 15 ஏப்ரல் 2014 புதியவன் பத்திரிக்கையின் ஆசிரியர் அரசியல் வாதி ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டதோடு குறித்த அலுவலகத்தை சேதப்படுத்துவதாக அச்சுறுத்தியமை தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இது வரை மன்னார் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என அமன் ஆசிரியர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று(14) ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,, இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்றதா?ஊடக சுதந்திரத்தை நசுக்கும் ஆட்சியாளர்கள். ஊடக சுதந்திரத்தை நசுக்குவதும்,சட்ட நிர்வாகத்தின் …

  16. இணைய குற்றச் செயல்கள் தொடர்பிலான 500 சம்பவங்கள் விசாரணை? 15 ஏப்ரல் 2014 இணையக் குற்றச் செயல்கள் தொடர்பிலான 500 சம்பவங்கள் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.இணையக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் 5 வழக்குகள் ஏற்கனவே தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயர் நீதிமன்றில் ஐந்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.மாவட்ட நீதிமன்றங்களில் 30 குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.இணையத்தை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.குற…

  17. கோபியின் தாயார் விடுதலை செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014 09:44 வவுனியா நெடுங்கேணியில் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் தாயார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவருடனும் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்த 18 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனாலும், இந்த எண்ணிக்கையை அதிகாரபூர்வமாக உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை. கொழும்பு தெஹிவளையில் கைது செய்யப்பட்ட, பேக்கரி ஒன்றில் பணியாற்றியவர்கள் என சொல்லப்படுகின்ற 8 பேரும் விடுதலை செய்யப்பட்டவர்களில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.(பிபிசி) http://tamil.dailymirror.lk/2010-07-14-09-1…

  18. இலங்கை மனித உரிமை விவகாரம் காரணமாக பொதுநலவாய நாடுகளுக்கான கனேடிய உதவி ரத்து 15 ஏப்ரல் 2014 இலங்கை மனித உரிம விவகாரத்தை காரணம் காட்டி பொதுநலவாய நாடுகளுக்கான கனேடிய உதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கான நிதி உதவிகளை கனேடிய அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பினை இலங்கை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மனித உரிமை, அரசியல் நல்லிணக்கம் ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை காத்திரமான தீர்வுத் திட்டங்களை முன்வைத்துள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜொன் பெய…

  19. தீக்குளித்த தமிழ் இளைஞர் தற்போதைக்கு நாடு கடத்தப்படமாட்டாராம்! – அவுஸ்ரேலியா கூறுகிறது. [Tuesday, 2014-04-15 09:07:31] அவுஸ்ரேலியாவில் அண்மையில் தீக்குளித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் தற்போதைக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. புகலிடம் மறுக்கப்பட்ட காரணத்தினால் குறித்த இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டார். படுகாயமடைந்த குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தீக்குளித்த இலங்கையரின் உடல் தேறி வருவதாகவும், நீண்ட காலம் சிகிச்சை பெற்றுக்கொள்ள நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்…

  20. WAN யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கைகள் ஓய்ந்தபாடில்லை என மகளிர் செயற்பாட்டு வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. 2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது. எனினும், கடந்த சில வாரங்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய முயற்சிப்பதாகத் தெரிவித்து பெண்கள், சிறுமிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கைது செய்யப்பட்டனர். பெண்கள், சிறுமிகள் கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மகளிர் செயற்பாட்டு வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக செயற்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்ட க…

  21. வவுனியா படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்! – மாவை எம்.பி வலியுறுத்துகிறார். [sunday, 2014-04-13 05:24:27] புலிகள் மீளிணைகிறார்கள் எனச் சொல்லப்பட்ட தகவல், அதன் பின்னணியில் மூன்று தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, இலங்கை அரசும் இராணுவமும் கூறும் கதைகளில் எமக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராஜா இந்தப் படுகொலைச் சம்பவங்கள் குறித்து சர்வதேச, சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசு இந்த விடயங்கள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்றை நடத்தும் என்பதிலும் எமக்கு நம்பிக்…

  22. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க தான் இறக்கும் வரையில் ஜனாதிபதியாக இருக்குமாறு யாப்பை மாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளதானது மிகப் பெரிய பொய்யே என அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார். உடுநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி, இரண்டு முறைகளுக்கு மேலாக நான் ஒருபோதும் ஜனாதிபதியாக இருக்க மாட்டேன் எனச் சொல்லியிருந்தார். அது மிகப் பெரிய பொய்யாகும். நான் அவரை இலங்கைக்கு அழைத்துவந்த, அவரது கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர். அவர் இறக்கும்வரை ஜனாதிபதியாக இருப்பதற்கான யாப்பை அமைப்பதற்கு எவ்வளவோ முயன்றார். இறைவன் துணையால் அவருக்கு அது முடி…

  23. சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் வடக்கு, கிழக்குப் பகுதியில் அச்சமற்ற- இயல்பான சூழ்நிலை திரும்ப வேண்டும் என்று தென்னாபிரிக்கத் தரப்பிடம் தாம் வலியுறுத்தியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்கா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உயர்மட்டக்குழு நேற்று கொழும்பு திரும்பியுள்ள நிலையில், அந்தப் குழுவில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தமது பயணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். “தென்னாபிரிக்காவின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் அமைந்தது. ஆபிரிக்கத் தேசியக் காங்கிரசின் துணைத் தலைவர் சிறில் ராமபோசா தலைமைய…

  24. வடக்கு மாகாணசபையில் இருப்பவர்களை வைக்கோல் பட்டடை நாய்கள் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்! [saturday, 2014-04-12 19:21:37] வடக்கு மாகாணசபையில் இருப்பவர்கள் வைக்கோல் பட்டடை நாயைப் போன்றவர்கள் என்று அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில், அமைதியாக சூழல் இருக்கின்ற பொழுதுதான் எங்களுடைய கல்வியை, வாழ்வாதரம் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். அன்று ஒரு காலம் இருந்தது வன்முறையில் ஈடுபட வேண்டிய காலகட்டம் அது. அதனை நான் மறுக்கவில்லை. ஆரம்ப காலப் போராளியாக நானும…

    • 2 replies
    • 683 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.