Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கல்முனை, காத்தான்குடி வீதியில் 160 முஸ்லிம்களை கடத்திச் சென்று கொலை செய்ததாக, தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முறைபாடுகள் தொடர்பிலான விசாரணைகளை காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக அதன் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டு அவர்கள் புதைக்கப்பட்டதாக அவர்களது உறவினர்கள் மற்றும் மதத் தலைவர்களால் கூறப்படும் காத்தான்குடி – குருக்கள்மடம் பகுதியை ஆய்வு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தி, நீதி மன்றம் ஊடாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும்அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். http://www.onlineuthaya…

  2. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசொப் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரங்களில் இலங்கையை ஊக்கப்படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே அவுஸ்திரேலியாவின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இன்றி மெய்யான நல்லிணக்கத்தையோ அல்லது குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தலையோ அமுல்பட…

    • 5 replies
    • 826 views
  3. -சுமித்தி தங்கராசா வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உயிர் கொடுப்பதற்காக பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் கோபி என்ற நபரின் நண்பனிடம் இருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும் கோபி சம்பந்தப்பட்ட தகவல்கள் பெற்றுக் கொண்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (28) இடம்பெற்றது. இதன்போது, 'கடந்த வாரம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடத்தியதுடன், ஒரு இளைஞரை கைதுசெய்துள்ளனர். ஆனால், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவ்விடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் கைது தொடர்பாகக…

  4. இந்தியா ஏமாற்றிவிட்டது - அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிற்கு நன்றி – சம்பந்தன்:- இந்தியா ஏமாற்றிவிட்டது. அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன்மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிற்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிவடைந்த நிலையில் இந்திய தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில் பிரேரணை விரைவாக அமுல்படுத்தப்படும் என தாம் நம்புவதாகவும். அதற்கு சகல நாடுகளும் ஒத்துளைக்க …

    • 36 replies
    • 3.3k views
  5. ஜெனிவாவில் இலங்கை அரசிற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான சர்வதேசத்தின் கெடுபிடிகளுக்கு அரசாங்கமே மூல காரணமாகும். நாங்கள் பலதடவைகள் புத்தி சொல்லியும் அவற்றை கண்டு கொள்ளாததன் பயனாக இத்தகையதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது இனிமேலாவது சர்வதேசத்துடன் முரண்படாமல் புத்திசாலித்தனமாக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். ஜெனிவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதன் பிற்பாடு ஏழு பேரை கொண்டு குழு இலங்கைக்கு வருகை தந்து விசாரணையொன்றை மேற்கொள்ளும் இச்செயற்பாடானது மிகவும் பயங்கரமானது. அரசாங்கமானது உள்ளக விசாரணைகளை உரியவாறு மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது…

    • 0 replies
    • 797 views
  6. இது அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு:- ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்டுள்ள இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் . ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தன்னுடைய சொந்த கருத்து ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினால் அரசியல் ரீதியாக நல்ல முடிவை எடுக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். நேற்று எடுக்கப்பட்ட முடிவுகள் அதிகாரிகள் மத்தியில் எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். டில்லியில் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/…

  7. ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்து மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையினை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 25ஆவது ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இடம்பெற்ற, ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் அறிக்கை தொடர்பான விவாதத்தின் போது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பின்வருமாரு குறிப்பிட்டார். நாங்கள் இந்த அவைக்கு பல எழுத்து மூல அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கிறோம். இறுதியாக எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், 2013 ஆம் ஆண்டு நிரந்தர மக்கள் தீப்பாயத்தினால் கடந்த கால போரின் போதும், தற்போதும் இலங்கைத் தீவில் இன அழிப்பு நடைபெற்று வருகிறது என்று தீர்ப்பளிக்க…

  8. ஜெனீவா மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (28) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் சேருவில சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. சேருவில பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் புத்தசாசன அமைச்சருமான எம்.கே.டி.எஸ்.குணவர்தன, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சேருவில சந்தியிலிருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் தங்க நகர் வரை சென்று மீண்டும் சேருவில பிரதேச சபையை வந்தடைந்தது. இவ் எதிர்ப்பு ஊர்வலத்தில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். http://www.virakesari.lk/?q=node/362513

  9. அமைச்சர் டக்ளசின் உத்தரவின் பேரில் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் 12 பேர் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தை சட்டவிரோதமாக உடைத்து உள்நுழைந்தனர். அதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வலி.கிழக்குப் பிரதேச சபையின் மார்ச் மாத சபை அமர்வு உப தவிசாளர் தலைமையில் இன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த கூட்டத்தை நடத்தவேண்டாமென உள்ளுராட்சி செயலாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார். எனினும் வலி.கிழக்கு பிரதேச சபையைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் சபை அமர்வை நடாத்தக் கோரி இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வந்தார். குறித்த உறுப்பினர்களை கூட்டத்தை நடத்த அனுமதிக்குமாறு அவர…

  10. தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் நவநீதம்பிள்ளைக்கு விசாரணை நடத்த அதிகாரமில்லையாம்! – கோமின் தயாசிறி கூறுகிறார். [Friday, 2014-03-28 08:26:42] ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு விசாரணை நடாத்தும் அதிகாரம் கிடையாது என சிரேஸ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், விசாரணை நடத்தும் அதிகாரம் கிடையாது. நவனீதம்பிள்ளைக்கு இல்லாத அதிகாரமொன்றை அமெரிக்கா இந்த தீர்மானத்தின் ஊடாக வழங்க முயற்சித்துள்ளது. இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியங் கிடையாது.எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை கவிழ்க்கும் குறுகிய நோக்கத்திற்காக வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்…

  11. விபூசிகாவை ஏற்க யாரும் முன்வரவில்லை அதனாலேயே நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறுவர் நன்னடத்தை பிரிவில் சேர்க்கப்பட்டார் என யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு செய்தி தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தர்மபுரத்தை சேர்ந்த விஜயகுமாரி மற்றும் அவரது மகளான விபூசிகா ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் தாயார் பூசாவுக்கும் மகள் சிறுவர் நன்னடத்தைப் பிரிவிற்கு அனுப்பப்பட்டும் உள்ளனர். இது குறித்து யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேனமேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி விடயம் தொடர்பில் ஊடகங்களில் வெள…

  12. இலங்கை தொடர்பான தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என கனடா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என கனேடிய வெளிவிவகார அமைச்சின் மனித உரிமைச் செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார். பாரிய மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாமை போன்ற நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கம் காத்திரமான தீர்வுகளை வழங்க வேண்டும் என்ற கனடாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலான சம்பவங்கள் தொடர்பில் முழு அளவில் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற ஐக்க…

  13. சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கருத்து வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையில் இலங்கை தொடர்பிலான விசாரணைகளை நடாத்த அரசாங்கம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த கால காயங்களை ஆற்றுப்படுத்த சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட இலங்கைக்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலைப்பாடு திருப்தி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்…

  14. இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என ரஸ்யா அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் அலெக்சான்டர் கார்செவா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நல்லிணக்க முனைப்புக்களை மேற்கொள்ள இலங்கைக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.தசாப்தங்களாக நீடித்து வந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு மக்களின் வாழும் உரிமையை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/1…

  15. இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் இழைத்து வருகின்றது. இலங்கையின் மிரட்டலுக்கு அடிபணிந்தே இந்தியா வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டது என்று "உதயனுக்குத்' தெரிவித்தார் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன். ஐ.நா மனித உரிமைகள் சபையில் இந்தியா, அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் இந்தியா ஒதுங்கிக் கொண்டது. இது தொடர்பில் பழ.நெடுமாறனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இந்திய மத்திய காங்கிரஸ் அரசு நேற்று (நேற்று முன்தினம்) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இலங்கைப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் ஏனைய சர்வதேச நாடுகளுடன் இணைந்து விசாரணை நடத்த வழிசெய்ய…

  16. அதிருப்தியாளர்களை அழிப்பதை விட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்! – இலங்கை அரசைக் கோருகிறது சர்வதேச மன்னிப்புச்சபை. [Friday, 2014-03-28 09:39:08] இலங்கை அரசு தனது அதிருப்தியாளர்களை தேசிய மட்டத்தில் தேடி அழிப்பதை விடுத்து, ஐ.நா. புலன் விசாரணையாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியிருக்கின்றது இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்ட பின்னர் மன்னிப்புச் சபை இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது. "இலங்கையில் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஐ.நா. தீர்மானத்துக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கின்றது." - இப்படிக் கூறியி…

  17. தமிழின அழிப்புக்கு நீதிகோரும் போராட்டத்தில் றியூனியன் தீவு வாழ் தமிழர்களும் இணைந்தனர் ! [Friday, 2014-03-28 08:09:25] அனைத்துலக விசாரணையினை மையப்படுத்தி தமிழின அழிப்புக்கு நீதிகோரும் போராட்டத்தில் றியூனியன் தீவு வாழ் தமிழர்களும் இணைந்துள்ளனர். ஈழத் தமிழ் மக்களது நீதிக்கான போராட்டத்துக்கு தங்களது தோழமையினை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள றியூனியன் தமிழ் சங்கம், தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு அனைத்துலக விசாரணை கோருவதாக தெரிவித்துள்ளது. றியூனியன் வாழ் தமிழ் மக்கள் சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு தமிழ் சங்கம் அனுப்பியிருந்த கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://www.seithy.co…

  18. ஜெனிவா தீர்மானத்தை வரவேற்கிறது பிரித்தானிய தமிழர் பேரவை! [Friday, 2014-03-28 08:09:04] இலங்கை மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையர் விசாரிப்பார் என்று இலங்கைக்கு எதிரான ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தில், கூறப்பட்டுள்ள விடயம் வரவேற்கத்தக்கது என்று பிரித்தானிய தமிழர் பேரவை கூறியுள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜெனிவாவில் இருந்து அது குறித்து கருத்து தெரிவித்த பிரித்தானிய தமிழர் பேரவையின் பேச்சாளரான ராஜ் குமார், இறுதி நேரத்தில் பலவிதமான தடைகளைத் தாண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று கூறினார். இந்தியாவில் தற்போது தேர்தல் ஒன்று நடக்கும் நிலையில், அங்கு காபந்து அரசாங்கம் போன்ற ஒன்றே ஆட்சியில் இருப்பதால்தா…

  19. (Priya Rasa) யாழ்ப்பாணம் தாவடிப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுன்னாகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த வேனுடன் மோதி பின்னர் பிக்கப்புடன் மோதியதிலேயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/?q=node/362500

  20. முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்படடுள்ளார். உடையார் கட்டு பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை சிறிகாந்தன் என்பவரே நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியான இவர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்த இவர் உடையார் கட்டுப்பகுதியில் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன் இதே பகுதியில் வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றிய விசேட தேவையுடைய ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ரி.ஐ.டி யினரால் இதுவரை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். http://ww…

  21. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை மூலம் இலங்கை அரசுக்கு தெளிவான செய்தி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹெரியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ""நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது, இலங்கை அரசின் நல்லிணக்கம், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஜனநாயக ஆட்சி நடவடிக்கைகளுக்கான சர்வதேச சமூகத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்துகின்றது. இதன் காரணமாகவே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை தொடர்ந்தும் கண்காணிக்க வேண்ட…

  22. இலங்கைக்க மிகத் தெளிவான செய்தி சொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். நிலையான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் நிலைநாட்ட இதுவே தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் மனித உரிமை பேணல் ஆகியன தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு பூரண ஆதரவளிக்க தயார் என்பதே இந்த தீர்மானம் வலியுறுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை, இலங்கை மனித உரிமை நிலைமைகளை கண்காணிக்குமாறு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதா…

  23. இந்திய மீனவர்கள் சகலரையும் விடுவிக்கவும்: ஜனாதிபதி வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014 09:11 இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சகலரையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/104754-2014-03-28-03-41-29.html

    • 4 replies
    • 1.1k views
  24. ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் கலந்து கொண்ட சுமந்திரனுக்கு சிறீலங்காத் தூதரகம் சிறப்பு வரவேற்பை அளித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராக கருத்துக்களைச் சொல்ல வருபவர்களை சிறீலங்கா கடுமையாக அச்சுறுத்தியும் அவர்களின் பயணத்தைத் தடுத்து நிறுத்தியும் வரும் நிலையில், கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்டதாகக் கூறும் சுமந்திரனுக்கு சிறீலங்காத் தூதரகம் ஜெனீவாவில் வரவேற்பு அளித்துள்ளது. கடந்த வாரம் ஜெனீவாவிலுள்ள சிறீலங்காவின் தூதரகத்திற்கு சென்ற சுமந்திரனை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்காக சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் …

    • 5 replies
    • 794 views
  25. நாளை மாகாணசபைத் தேர்தல் - கொழும்பு மாவட்டத்தில் 2 அடி நீள வாக்குச் சீட்டு! [Friday, 2014-03-28 09:46:18] மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சுமார் 2 அடி நீளமான வாக்குச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாக, தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு மாகாண சபைகளிலும் அதி நீளமான வாக்குச் சீட்டு கொழும்பு மாவட்டத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் வரலாற்றில் கொழும்பு மாவட்டத்திலேயே கூடுதலான கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. அதேவேளை, மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் நாளை நடைபெறுவதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இரண்டு மாகாண சபைகளின் சா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.