Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குருணாகல் நாரம்மலை கிரியுல்ல பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் ஆட்டோ நேருக்குநேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 இளைஞர்கள் உடல் நசுங்கிப் பலியானார்கள். இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். வெளிறாடு ஒன்றுக்குச் சென்று விட்டு ஊர் திரும்பிய சகோதரனை அனைத்துக்கொண்டு வரும் போதே இக்கோரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. மாத்தளை உக்குவெலை பகுதியைச் சேர்ந்த அப்துல் அசீஸ் மொகமட பவகார் (வயது 21) அப்துல் அஸீஸ் முகமட் அமீன் (வயது 20) கசீன் (வயது 23) அலீர்தீன் (வயது 23) ஆகியோரை உயிரிழந்தவர்களாவர். www.ethiri.com

  2. பிள்ளையான் விசாரிக்க வேண்டும் என்று மகனைப் பிடித்துச் சென்றனர்! - ஆணைக்குழு முன் தாய் சாட்சியம். [sunday, 2014-03-23 10:17:28] பிள்ளையானிடம் விளக்கம் இருப்பதாக கூறி, வெள்ளைவானில் வந்தோர் தனது நெஞ்சில் துப்பாக்கியை வைத்து தன்னை தள்ளிவிட்டு, மகனைக் கடத்திச் சென்றதாக தாயொருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியளித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் விசாரணைகளின் இறுதி நாள் விசாரணைகள் நேற்று மண்முனை வடக்கு - மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பராணகம, ஆணையாளர்களான திருமதி மனோ ராமநாதன், திருமதி சுரஞ்சனா வித்தியரத்ன ஆகிய…

  3. ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுவேட்பாளர் குறித்து தாய்லாந்தில் நடத்தப்பட்ட இரகசிய கலந்துரையாடல்! [sunday, 2014-03-23 18:50:58] அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்றுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், இலங்கையில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கொழும்பில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட சில வெளிநாட்டு தூதரங்களின் அரசியல் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இலங்கையின் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி சம்பந்தமாக இந்த பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்தாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படவுள்ள பொது வேட்பாளர் யார் என்பதே இதன் பிரதான கர…

  4. கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களுக்காக நலன்புரி நிலையமொன்றை நிர்மாணிக்க கொழும்பு மாநகரசபை தீர்மானித்துள்ளது. கொழும்பு நகரசபை வளாகத்தில் மாத்திரம் சுமார் 3000 நாய்கள் வீதிகளில் சுற்றித்திரிவதாக கொழும்பு மாநகரசபை ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்தார். இவ்வாறு வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நலன்புரி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது என்றும் ஆணையாளர் மேலும் கூறினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/104210-2014-03-23-09-44-04.html

  5. மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கு காத்திருக்கிறது பெரும் பின்னடைவு! – புலனாய்வுத் தகவலால் அரசாங்கம் அதிர்ச்சி. [sunday, 2014-03-23 09:54:01] வரும் சனிக்கிழமை நடக்கவுள்ள மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் கடும் பின்னடைவை சந்திக்கும் என புலனாய்வுப் பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளன. புலனாய்வுப் பிரிவின் இந்த அறிக்கை தொடர்பில் ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கியஸ்தர்கள் உட்பட சிலர் இணைந்து கடந்த 16 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.அடுத்த வாரத்தில் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய புதிய தேர்தல் பிரசார வழிமுறைகள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டுள்ளன. ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டால…

    • 2 replies
    • 327 views
  6. எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொள்ள..! - கொழும்பு அமெரிக்கத் தூதரகம் தயார்நிலையில்! [sunday, 2014-03-23 09:22:17] அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் இந்தவாரம் தீவிரமடையலாம் என்பதால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் இந்தவாரம் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதனால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகத்துக்கு முன்பாக, எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், இந்தவாரம் சிறப்புப் பாதுகாப்புக் கோரப்பட்டுள்ளதா என்று அமெரிக்கத் தூதரக ஊடக தகவல் அதிக…

  7. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வலியுறுத்துவோம் என்பது உட்பட மொத்தம் 46 வாக்குறுதிகளுடன் மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கையில் மொத்தம் 46 தலைப்புகளில் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் பெயரை இந்திய ஐக்கிய நாடுகள் என மாற்றம் செய்வது முதலாவது உறுதி மொழியாகவும் 7 ஆவது உறுதிமொழியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தடையை நீக்கக் கோருவோம் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து மதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவி…

  8. விடுதலைப் புலிகள் மீண்டும் அணிசேர முயற்சிக்கின்றார்கள் எனக் கூறி அரசு நாடகமாடுகிறது: ஐங்கரநேசன் குற்றச்சாட்டு [sunday, 2014-03-23 09:20:59] இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளாகின்ற நிலையில், இறுதி யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மீண்டும் அணிசேர முயற்சிக்கின்றார்கள் எனக் கூறி, யுத்தம் நடைபெற்ற வடபகுதியில் கிராமங்களை இராணுவத்தினர் சுற்றிவளைத்துத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் அண்மைய தினங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, சங்கரத்தை பகுதிகள் வெள்ளிக்கிழமை இரவு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சனிக்கிழமை…

  9. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் மற்றொரு மாற்றம்! [sunday, 2014-03-23 10:07:34] ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யோசனையில் இன்னும் ஒரு மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை மேற்கோள்காட்டி இந்த செய்தியை ஆங்கில செய்தித்தாள் ஒன்று பிரசுரித்துள்ளது. இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளுக்கு ஒரு காலவரையறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்த மாற்றமாக இருக்கும் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்று தாம் நினைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா யோ…

  10. இலங்கை மீது சர்­வ­தேச விசா­ர­ணை­ நடாத்­த இதுவே சரியான தருணம்: கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம். [sunday, 2014-03-23 09:09:56] இலங்­கையில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொலை தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­த­ப­ட­ வேண்டும். தற்­போது தமிழி­னத்தின் இருப்பை முழு­மை­யாக மாற்­றி­ய­மைப்­ப­தற்­காக கட்­ட­மை க்­கப்­பட்ட இன­வ­ழிப்­பொன்று இடம்­பெற்­று­வ­ரு­கின்­றது. இவற்றைத் தடை­செய்­வ­தற்கு இடை­கால நிர்­வாகம் ஒன்று ஏற்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும் தமி­ழர்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர தீர்­வாக சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தீர்­வொன்று வழங்­கப்­ட­வேண்டும் அத்­துடன் இலங்­கையில் இடம்­பெற்ற இன­வ­ழிப்பு தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­ப­டுத்­…

  11. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது இனந்தெரியாத கும்பல் தாக்குதல்! - ஒரு மாணவர் காயம். [sunday, 2014-03-23 10:12:05] யாழ்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். நேன்று மாலை வேளையில் நுண்கலை வளாகத்தில் நின்று கொண்டிருந்த நுண்கலைப்பீட மாணவர்களை மோட்டார் சைக்கிளில் வந்த 15 பேர் கொண்ட இனம் தெரியாத கும்பல் ஒன்று பல்கலைக்கழக காவலாளியை தள்ளிவிட்டு கடுமையாக கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது. தாக்குதல் சம்பவத்தின் போது கடுமையான காயங்களுக்கு உள்ளான மாணவர் ஒருவர் தற்போது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1ம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு தொடர்பாக நுண்கலை மாணவர்கள் நிகழ்ச்…

  12. அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் இந்தவாரம் தீவிரமடையலாம் என்பதால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் இந்தவாரம் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதனால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகத்துக்கு முன்பாக, எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், இந்தவாரம் சிறப்புப் பாதுகாப்புக் கோரப்பட்டுள்ளதா என்று அமெரிக்கத் தூதரக ஊடக தகவல் அதிகாரி ஜுலியானா ஸ்பவனிடம் கேட்ட போது, “பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பை உறுதிப்படுத…

  13. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் இரா.சம்பந்தன் தவிர ஏனையோர், ஜெனிவாவுக்குப் படையெடுத்துள்ளனர். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம், வரும் 26ம் நாள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் சிறிலங்கா தொடர்பான விவாதமும் நடக்க ஏற்பாடாகியுள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு பெரும்பாலும், 28ம் நாள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜெனிவாவுக்குப் படையெடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராசா, லண்டனில் இருந்து ஜெனிவா செல்கிறார். மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாத…

  14. அனந்தியின் ஜெனிவா உரை – அமைச்சரவையிலும் எதிரொலித்தது. [saturday, 2014-03-22 08:42:12] இலங்கையின் உண்மையான நிலைமைக்குப் புறம்பான தகவல்களை புலி உறுப்பினர் எழிலனின் மனைவியான அனந்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியிருப்பதாக, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளார்.அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்து விளக்கமளித்த அமைச்சர், புலிகளுக்கு சிறுவர் போராளிகளை இணைப்பதற்கு ஒத்துழைப்பாகவிருந்த அனந்தி, ஜெனீவா சென்று இலங்கையின் உண்மை நிலைக்குப் புறம்பான தகவல்களையும், வடமாகாணம் தொடர்பான பொய்யான தகவல்களையும் வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசாங்கம் மீது அவர் போ…

    • 7 replies
    • 783 views
  15. எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொள்ள..! - கொழும்பு அமெரிக்கத் தூதரகம் தயார்நிலையில்! [sunday, 2014-03-23 09:22:17] அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் இந்தவாரம் தீவிரமடையலாம் என்பதால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் இந்தவாரம் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதனால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகத்துக்கு முன்பாக, எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், இந்தவாரம் சிறப்புப் பாதுகாப்புக் கோரப்பட்டுள்ளதா என்று அமெரிக்கத் தூதரக ஊடக தகவல் அதிகாரி ஜுலியானா ஸ்பவனிடம் க…

  16. அமைச்சர் ரவூப் ஹக்கீம் கழுத்தில் கல்லை கட்டிக் கொண்டு கிணற்றில் குதிப்பதையே தற்போது நிலையில் மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் வாக்கு வங்கியை உறுதிப்படுத்த, பதவிகளையும் சிறப்புரிமைகளையும் பாதுகாத்து கொள்ளும் நோக்கில் அடிக்கடி அணி மாறும் ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் அவசியமில்லை. நாடு மற்றும் கட்சி பற்றி சிந்தித்து செயற்படும் நேர்மையான முஸ்லிம் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்றனர். இதனால் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என செயற்குழுவில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் அவர் …

  17. ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில், தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியுங் சே வை சந்தித்த போதே, நவநீதம்பிள்ளை இவ்வாறு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். தென்கொரிய குழுவுடனான சந்திப்பின் போது, நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின. இந்த உயர்நிலைக் கலந்தாய்வின் போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் கூட ஜெனிவாவில் தங்கியிருந்தார். வரும் வியாழக்கிழமை சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் விவாதத்துக்கு எடு…

  18. பொறுப்புக்கூறல் பற்றிய பான் கீ மூனின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! – உறுப்பு நாடுகளே தீர்மானிக்க வேண்டுமாம். [saturday, 2014-03-22 17:21:43] இலங்கையில் பொறுப்புக்கூறல் சம்பந்தமான வகாரத்தில், ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளதாக பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நேற்று நடந்த நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிடுகையில், இலங்கைக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து உறுப்பு நாடுகளே தீர்மானிக்க வேண்டும். இலங்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடாத்துவதா அல்லது வேறும் ஒர் பொறிமுறைமையை உருவாக்குவதா என்பதன…

  19. சீஷெல்ஸ் நாட்டின் தீவு ஒன்றையே விலைக்கு வாங்கினார் மகிந்த! [saturday, 2014-03-22 17:16:07] சீஷெல்ஸ் நாட்டிலுள்ள தீவு ஒன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விலைக்கு வாங்கியுள்ளதாக சிங்கள இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. சீஷெல்ஸ் நாட்டில் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படாத 100க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அவற்றை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு நபர்களுக்கு நிறுவனங்களுக்கும் வழங்க அந்நாடு தீர்மானித்துள்ளது. அவற்றில் ஒன்றையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த தீவு கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன.இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவுகள், ஆப்பிரிக்க கண்டத்திற்குரிய நாடாகும். …

  20. ஜெனிவா தீர்மானம்: ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்தினார் டேவிட் கமரூன்! [saturday, 2014-03-22 16:54:49] இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் – மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட இருக்கும் தீர்மானத்திற்கு அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினதும் ஆதரவைத் தாம் உறுதி செய்திருப்பதாகப் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியப் பேரவையில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்புக்களைத் தொடர்ந்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைத்திருக்கும் டேவிட் கமரூன், கடந்த காலங்களில் நிகழ்ந்தேறிய சம்பவங்களுக்கு சரியான தீர்வை எட்டும் வகையில் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என…

  21. கோபியின் தலைக்கு 10 இலட்சம் ரூபா விலை! – பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு. [saturday, 2014-03-22 17:12:12] விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படும் கஜீபன் பொன்னையா செல்லநாயகம் அல்லது கோபி அல்லது காசியன் என்ற பெயரால் அழைக்கப்படும் நபர் பற்றிய தகவல் வழங்குபவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 31 வயதான இந்நபர் 6 அடி உயரமானவர். குறித்த நபர் தொடர்பான சரியான தகவலை வழங்குபவர்களுக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் அதேவேளை தகவல் வழங்குபவர் குறித்து இரகசிய தன்மை பேணப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜீத் ரொஹண தெரிவித்தார். கடந்த வாரம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இந்நபரை கைது செய்யச் சென்றவேளை பொலிஸாரை …

  22. வவுனியா ஸ்ரீராமபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது 22 மார்ச் 2014 வவுனியா ஸ்ரீராபுரம் கிராமத்தில் வசித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட மாகணத்தில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களை தேடும் பணி என்ற நிலையில் பரவலாக சுற்றிவளைப்புகள் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று (21.3) இரவு 7 மணியளவில் வவுனியா நகர்ப்பகுதியில் வைத்து லோகநாதன் என்ற குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் புலனாய்வு பிரிவினரால் நேற்று இரவு ஸ்ரீராமபுரம் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது லோகநாதனின் மனைவியான லோ. மங்கலேஸ்வரி அவர்களது மகன்களான லோ. பாரதி கண்ண…

  23. தமிழர்கள் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்த்து கோர முடியாதபடி புதிய சட்டம்: [Friday, 2014-03-21 21:49:17] ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்த்து கோர முடியாதவாறு, சிறீலங்காவில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்படவுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான சட்ட மூலம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்கின்ற ஈழத் தமிழர்கள் அந்த நாடுகளிலேயே அரசியல் தஞ்சத்தை கோருகின்றனர். இதற்காக அவர்கள் போலியான தகவல்களை வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர்கள் போ…

  24. ஒரு முடியாத போர் admin | March 22, 2014 | 0 Comments நேற்றைய தினம் (21.03.2014) அன்று பிரித்தானியா கனடிய உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற ‘ஒரு முடியாத போர்” இலங்கையில் சித்திரவதையும் பாலியல் வன்முறையும் என்ற நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. இந்ந நூலை யஸ்மின் சூகா ( The Bar Human Rights Committe,England & Wales,The International Truth and Justice Project-Srilanka) அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்நூலில் போருக்குப் பின்னர் நடைபெற்ற பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான விடயங்களின் உண்மைகள் தொகுக்கப்பட்டுள்ளது. நூலை வாசிக்க கீழ் வரும் இணைப்பில் அழுத்தி வாசியுங்கள் :- http://www.stop-torture.com/ போருக்கு…

    • 0 replies
    • 666 views
  25. நெதர்லாந்தில், கல்வியில் அதிக புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த ஈழத்துச் சிறுவன்! [Tuesday, 2014-02-25 22:10:39] நெதர்லாந்தில் ஒவ்வொரு பாடசாலைகளிலிருந்தும் தரம் 8இல் அதிக புள்ளிகளை பெறும் இரு மாணவர்களுக்கிடையே உயர் பரீட்சைக்கு தேர்வாவது ஓர் வழமையான விடையம். அதனடிப்படையில், தரம் 8 இல் கல்வி பயிலும் ஈழத்துச் சிறுவனான ஜெரிக் ஜெஸ்லின் சந்திரகுமார் என்பவர் அனைத்துப் பாடங்களிலும் அதிக புள்ளிகளைப் பெற்று அந்த நாட்டின் உயர் பரீட்சைக்கு தேர்வாகியுள்ளார். தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்கள் கல்வியில் அதீக ஈடுபாடுள்ளவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ள ஈழத்துச் சிறுவனான ஜெரிக் அவரின் பெற்றொருக்கு மட்டுமன்றி தாய் நாட்டிற்கும், தமிழினத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.