Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அருட்தந்தை பிரவீன், ருக்கியின் பாஸ்போட்கள் முடக்கம்! – ஊடகங்களுடன் பேசவும் தடைவிதிப்பு. [Friday, 2014-03-21 18:17:51] பயங்கரவாதத் தடுப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்ட இரண்டு மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் ஊடகங்களிடம் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருட்தந்தை பிரவீன் மகேசன் மற்றும் ருக்கி பெர்னாண்டோ ஆகிய இருவரின் பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களது விடுதலை நிபந்தனையற்றது என்று அவர்களிடம் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.பயங்கரவாதத் தடுப்புப் போலிசார், நீதிமன்றத்தை அணுகி இந்த ஆர்வலர்கள் ஊடகங்களுடன் பேசுவதற்குத் தடையை வாங்கியுள்ளனர்.அவர்களது கணினிகளைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகி…

  2. ஐநா மனித உரிமை பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடியதாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்: - TNPF [Friday, 2014-03-21 10:48:45] ஐநா மனித உரிமை பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடியதாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் . தீர்மானம் வலிமை பெற வேண்டும் .அனைத்துலக சுயாதீன விசாரணை அவசியம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் கஜேந்திரன் செல்வராசா வலியுறுத்துகின்றார் . http://www.seithy.com/breifNews.php?newsID=106146&category=TamilNews&language=tamil

  3. போர் நிலவரங்கள் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட புலிகள் நிர்ப்பந்திக்கவில்லை! - டாக்டர் வரதராஜா செவ்வி. [Friday, 2014-03-21 10:18:49] இறுதிக்கட்டப் போரின்போது வைத்தியசாலைகளின் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் பொதுக்கள் காயமடைந்தது தொடர்பாக தாம் பொய்யான அறிக்கையை வெளியிடவோ, விடுதலைப்புலிகள் தமக்கு எந்த அச்சுறுத்தலையும் விடுக்கவோ இல்லை என்று முல்லைத்தீவில் பணியாற்றிய வைத்தியர் டி.வரதராஜா தெரிவித்துள்ளார். பி.பி.சி. சிங்களசேவைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், சகோதர வைத்தியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு, பி.பி.சி.யுடனான நேர்காணலை டாக்டர் வரதராஜா நிராகரித்து விட்டார். …

  4. ஏவுகணைத் தாக்குதல் சான்றுப் பொருட்களை காணவில்லையாம்! – பிசுபிசுக்கிறது புலிகளுக்கு எதிரான வழக்கு. [Friday, 2014-03-21 09:49:43] விடுதலைப் புலிகளால் 37 படையினருடன் சென்ற விமானம் ஏவுகணையால் சுட்டுவீழ்த்தப்பட்டது தொடர்பான, வழக்கின் ஆவணங்களும், சான்றுப்பொருட்களும் காணாமல் போயுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தமக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டதாக, முறைப்பாட்டார்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். குறித்த வழக்குப் பொருட்கள் காணாமல் போனமையால் வழக்கை கொண்டு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரதிவாதி…

  5. மேற்கு சிட்னியில் அமைந்திருக்கும் தமிழர் செறிந்து வாழும் பென்டில் ஹில்லில் ஈழத்துத் தமிழரான ஈசன் வேலுப்பிள்ளை அவர்கள் இன்று காலை இனம்தெரியாத ஒருவரினால் இதயப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். 47 வயதான ஈசன் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், அண்மையில் தான் திருமணமாகியும் இருந்தார். தனது முதலாவது பிள்ளையை தம்பதியினர் இருவரும் எதிர்பார்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 7:45 மணியளவில் வழமை போல தனது காரியாலயத்துக்கு வந்து வேலைக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்த ஈசன், குப்பைகளைக் கொட்டுவதற்காக அருகிலிருந்த குப்பைத்தொட்டிக்குச் சென்றுகொண்டிருக்கும்பொழுதே வெள்ளையினத்தவர் என்று சந்தேகிக்கப்படும் 30 வயதுடைய நபர் ஒருவரினால் இத…

  6. மியான்மரில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை மேற்கொண்டு வரும் 969 இயக்கத்தின் தலைவரான, அஷ்வின் விராது தேரர், சிறிலங்காவுக்கு வரவுள்ளார். சிறிலங்காவில் உள்ள பௌத்த அடிப்படைவாத அமைப்பான, பொதுபல சேனாவின் அழைப்பின் பேரிலேயே விராது பிக்கு கொழும்பு வரவுள்ளார். 'பௌத்த தீவிரவாதத்தின் முகம்' என்று 'ரைம்' சஞ்சிகையால் வர்ணிக்கப்பட்டவரே விராது பிக்கு. அவரது ஒளிப்படம் தாங்கிய முகப்பு அட்டையுடன் வெளியான ரைம் சஞ்சிகையை சிறிலங்கா அரசாங்கம் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது. “நாம் அவரை அழைத்துள்ளோம். அவர் வரவுள்ளார். அவரை நாம் சந்திக்கவுள்ளோம். அவ்வளவு தான். அவர் இங்கு எவ்வளவு காலம் தங்கியிருப்பார் என்று ஊடகங்களுக்கு கூற வேண்டியதில்லை. நாம் பொருத்தமான நேரத்தில் அதனை வெளிப்ப…

  7. சிறிலங்காவில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து, அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு, அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் றொபேட் மெனென்டஸ் ஆதரவு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். “சிறிலங்காவில் ஜனநாயக நடைமுறைகளும், மனிதஉரிமைகளும், சீரழிந்துள்ள சூழல் குறித்து செனட் வெளிவிவகாரக் குழு கவலையடைந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம், நாட்டில் நீண்டகால உறுதித்தன்மையை ஏற்படுத்துவதற்கு உண்மையான நல்லிணக்கத்தில் ஈடுபடும் வரை, பொறுப்புக்கூறல், அரசியல் நல்லிணக்கம், மற்றும் மறுசீரமைப்புக்கான அனைத்துலக ம…

  8. வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புச் சோதனைகளை அதிகரிக்க சிறிலங்கா இராணுவம் முடிவு செய்திருப்பதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். “விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளஒருங்கிணைக்கும் முயற்சியில், ஈடுபட்டுள்ள கோபி எனப்படும், செல்வநாயகத்தை கைது செய்யும் நோக்கிலேயே பாதுகாப்புச் சோததனைகள அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் தொடக்கம் வடக்கு மாகாணத்துக்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் வடக்கிலிருந்து வெளியேறும் வாகனங்கள் அனைத்தும் சோதனையிடப்பட்டு வருகின்றன. அத்துடன் அடையாள அட்டைகளும் பரிசோதிக்கப்படுகின்றன. வடக்கு மாகாணத்தில் தங்கியுள்ளதாக கருதப்படும் சந்தேகநபரைக் கைது செய்யும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார…

  9. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசியான வெளிவிவகாரக் கொள்கை முடிவாக இருக்கலாம். ஜெனிவாவில் இந்த வாக்கெடுப்பு வரும் 28ம் நாள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க புதுடெல்லி முடிவெடுப்பது இது மூன்றாவது தடவையாகும். அரசியல் கருத்துகளை மனதில் கொண்டு இராஜதந்திர ரீதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவாவில் விநியோகிக்கப்பட்ட தீர்மான வரைவின் பெரும்பாலான மற்றும் கணிசமான பகுதிகளுடன் இந்தியா உடன்பட்டுள்ளது. வரைவின் 8வ…

  10. மகிந்தவுக்கு கழிவு ஓயில் வீச்சு! – சாவகச்சேரியில் சம்பவம். [Friday, 2014-03-21 09:55:17] யாழ்.சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உருவப் படத்துக்கு இனந்தெரியாத சிலர் நேற்றுமுன்தினமிரவு கழிவு ஒயில் வீசிச் சேதப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து நேற்றுக் காலை பொலிஸாரும் படையினரும் இணைந்து சேதமடைந்த படத்தை கழற்றி அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன் குறித்த படம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் சிலரை படையினர் விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் தெரியவருகிறது. எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை. http://seithy.com/breifNews.php?newsID=106140&category=TamilNews&language=tamil

    • 2 replies
    • 629 views
  11. யாழ். இந்திய துணைத்தூதுவராக கடமையாற்றி பதவி உயர்வு பெற்று செல்லும் வி.மகாலிங்கம் அவர்களுக்கு யாழ்.மாவட்ட பாதுகாப்பு பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு நேற்று முன்தினம் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேரா தலைமையில் பலாலியில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இந்திய அரசினால் யாழில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்திய துணைத்தூதுவர் வழங்கிய பங்களிப்புக்கு கட்டளைத் தளபதி பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்ததுடன் சினேகபூர்வ அடிப்படையில் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி , யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அரும…

    • 1 reply
    • 655 views
  12. ஆசிரியர் நிரூபனின் மர்மச் சாவைக் கண்டித்து பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் யாழ். நகர பஸ் நிலையம் முன்பாக இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். அரசே ஆசிரியர் நிருபனின் எலும்புக் கூட்டுக்கு பதில்என்ன?, நீதி கேட்பவர்களை கைது செய்து பழிவாங்காதே, ஆசிரியர் நிருபனை ஏன் கொன்றாய், ஆசிரியர்களை சுதந்திரமாக சேவை செய்ய அனுமதி போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு யாழ். பேருந்து நிலையத்திற்கு பேரணியாகச் சென்றனர். இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப்ஸ்ராலின், கோப்பாயைச் சேர்ந்த கார்த்திகேசு நிரூபன் வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். கடந்த மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பத…

  13. முகநூலில் இந்த கட்டுரையை வாசித்தேன். யாழ்கள வாசகர்களும் படிக்க இங்க இணைக்கிறேன். இக்கட்டுரையை எப்பிடி இங்கே இணைக்கலாம் என்றெல்லாம் ஒருவரும் அடிக்க வரப்படாது. வாசித்ததை பகிர்ந்துள்ளேன். பழ றிச்சர்ட் என்பவர் எழுதிய இக்கட்டுரையை உங்கள் வாசிப்புக்கு இங்கே பகிர்கிறேன். இராணுவத்தில் இணைந்த பெண்களை மானபங்கபடுத்தும் தமிழ் சமூகமும் ஊடகங்களும் ================================== பேருந்தில் தனியாக ஒரு பெண் சென்றாலே உரசி பார்க்கும் சமூகம் இது. இந்த சமூகத்தில், அதீதமான முறையில் ஆணாதிக்கமும் ஒடுக்கியாளும் மனனோபாவமும் நிலவும் இராணுவத்தில் பெண்கள் எதிர்நோக்கும் ஒடுக்குமுறையை சமானியர்களால் அத்தனை இலகுவாக கற்பனை செய்திட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இராணுவத்தில் பெண்க…

    • 7 replies
    • 2.1k views
  14. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் சபைக்குத் தலைமை தாங்கும் வகையில் அக்கிராசனத்தில் அமர்ந்தமைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பினை வெளியிட்டு ஆசனத்திலிருந்து இறங்கிச்செல்லுமாறு தொடர்ச்சியாக கோஷம் எழுப்பியதில் பாராளுமன்றம் பாரிய அமளிதுமளிக்குள்ளானது. அக்கிராசன வளாகத்தை சுற்றி நின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அஜித் பி.பெரேரா சுஜீவ சேனசிங்க அஜித் மன்னப்பெரும உள்ளிட்ட எம்.பி.க்கள் அஸ்வர் எம்.பி.யைப் பார்த்து இறங்கிச் செல்லுமாறு கோஷமெழுப்பி கூட சத்தமிட்டதையடுத்து இரு தரப்பு கூச்சலுக்கு மத்தியில் அஸ்வர் எம்.பி. அக்கிராசனத்திலிருந்து இறங்கிச் சென்றார். பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் சமல் ர…

  15. இலங்கை விட­யத்தில் சர்­வ­தேச விசா­ரணை தேவை­யாகும். ஐ.நா.மனித உரிமைப் பேர­வையின் அமெ­ரிக்கத் தீர்­மா­னத்தின் அதி­கா­ரங்கள் முழு­மை­யாக இலங்கை மீதான சர்­வ­தேச விசா­ர­ணையை ஏற்­ப­டுத்­த­வேண்டும் என்று சனல் 4 தொலைக்­காட்­சியின் ஊட­க­வி­யாளர் கெலும் மக்ரே தெரி­வித்­துள்ளார். ஐ.நா.சபையின் அமெ­ரிக்கத் தீர்­மா­னத்தில் சில திருத்­தங்கள் இருந்­தாலும் இது இலங்கை மீதான விசா­ரணை ஒன்­றினை ஏற்­ப­டுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஐ.நா.மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜெனிவா வந்துள்ள கெலும் மக்ரே ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியிருக்கின்றார். இதேவேளை இறுதியுத்தத்தில் மக்கள் பட்ட அவலங்கள் தொடர்பில் ஆதாரத்துடன் வைத்திய கலாநிதி துரைராஜா வர…

  16. ஆதவன் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்றிரவு குடும்பஸ்தர் ஒருவர் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ச.ஜெயரமேஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் நான்காவது மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வட மாகாண சபையின் உறுப்பினர் சோ.சுகிர்தன் மற்றும் கைதுசெய்யப்பட்ட நபரின் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/?q=node/362311

  17. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்திக்க விரும்புவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.மத நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த விரும்புவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். இந்த கோரிக்கைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.இரண்டாவது தடவையாக கோரியதன் பின்னரே ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது, http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104485/language/ta-IN/article.aspx

  18. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: முடிவெடுத்து விட்டது இந்தியா - இந்தியன் எக்ஸ்பிரஸ் [ வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014, 08:17 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசியான வெளிவிவகாரக் கொள்கை முடிவாக இருக்கலாம். ஜெனிவாவில் இந்த வாக்கெடுப்பு வரும் 28ம் நாள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க புதுடெல்லி முடிவெடுப்பது இது மூன்றாவது தடவையாகும். அரசியல் கருத்துகளை மனதில் கொண்டு இராஜதந்திர ரீதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக,…

  19. யாழ்.மனோகராச் சந்திக்கருகிலுள்ள தனியார் வகுப்பு நிலையத்திற்கு முன்னால் பாடசாலை மாணவர்களின் குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதுடன், அப்பகுதி மக்களினால் அந்த கைகலப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்துக்களின் போர் துடுப்பாட்டப் போட்டி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், யாழ். இந்து கல்லூரி பாடசாலை மாணவர்கள் பாண்ட் வாத்தியத்துடன் வீதியில் சென்றபோதே இக்கைலப்பு ஏற்பட்டுள்ளது. மூர்க்கத்தனமாக அடிப்பட்ட மேற்படி மாணவர்களை அங்கு கூடிய பொதுமக்கள் 'இன்னுமொரு கொலை செய்வதற்காகவா இவ்வாறு அடிபடுகின்றீர்கள்' எனக் கேட்டு கலைத்துவிட்டனர். இது தொடர்பாக குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினர்களுக்கும் பொதுமக்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-0…

  20. முல்லைத்தீவு கோபாபுலவு கிராம அபிவிருத்தி சங்க தலைவன் பரமேஸ்வரன் இராணுவத்திற்கு தமிழ் பெண்களை சேர்ப்பதில் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் முடிவடைந்து ஏறத்தாழ நான்கு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இந்த நான்கு வருடங்களும் பொது சமுக செயல்பாடுகளில் இராணுவ தலையீடுகளை எதிர்த்தும், இராணுவ மயப்படுத்தப்படும் சூழலை கண்டித்தும், வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசங்களில் பல்வேறு பொது சமுக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் போராடிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய போராட்டங்களின் தீவிரத்தை சகித்துக்கொள்ள முடியாத சிறீலங்கா அரசு, பொது சமுக அமைப்புகளை நலினப்படுத்தும் கைங்கரியத்துக்குள் ஆழமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு அங்கமாக வற்றாப்பளை, கேப்பாப்பிலவு பகுத…

    • 0 replies
    • 685 views
  21. ஐ.நாவுக்கு தகவல் கொடுப்போரைக் கண்டுபிடிக்க சிறீலங்காவின் விசேட கண்காணிப்பு பிரிவு: மன்னிப்பு சபை மார் 21, 2014 ஐநாவுக்கு தகவல் தருவோர் தொடர்பில் சிறீலங்கா விசேட கண்காணிப்பு பிரிவு ஒன்றை நிறுவவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இலண்டனை மையமாகக் கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபை, இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் சிறீலங்கா அரசாங்கம், மனித உரிமைகள் மற்றும் நீதியற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை தோற்கடிக்கும் வகையில் சிறீலங்கா அரசாங்கம் மோசமான சூழ்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே செய்…

  22. பான் கீ முனின் புதிய பேச்சாளரை விலைக்கு வாங்கியது இலங்கை? - கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவுகிறார். [Friday, 2014-03-21 09:44:58] ஐ.நா சபையின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னெப்போது இல்லாதளவுக்கு, தற்போது பக்கச்சார்பு நிலை அதிகரித்திருப்பதாக இன்னர்சிட்டி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் புதிய பேச்சாளராக ஸ்டீவன் டுஜாரிக் பதவி ஏற்று இரண்டு வாரங்களாகியுள்ள நிலையில், நேற்று முன்தினம் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளில் தெரிவு செய்த இரண்டு கேள்விகளுக்கு மாத்திரமே அவர் பதில் வழங்கியுள்ளார். இன்னர்சிட்டி பிரஸ் முன்வைத்த கேள்விகளுக்குப் பதில் வழங்கப்படவில்லை. அத்துடன் இன்னர்சிட்டி பிரஸ், சார்பில் இலங்கை தொடர்பாக எழுப்பப்படுகின்ற எந்த கேள்விகளு…

  23. இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் உடையார் கட்டுக்கு மேற்காக சுதந்திரபுரம், இருட்டுமடு, உடையார் கட்டு பிரதேசங்கள் முழுவதுமாக இராணுவம், பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் சுற்றி வளைக்கப்ட்டு கடுமையான சோதனைகள் இடம்பெறுவதுடன் பலர் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு பிரதேச மக்கள் தெரிவித்தனர். இன்று காலை 7.30 மணியிலிருந்து சுதந்திரபுரம் இருட்டுமடு பிரதேசம உள்ளிட்ட சுற்றி உள்ள பிரதேசங்கள் சுற்றி வளைக்கப்பட்டு இராணுவத்தினரும், பொலிஸாரும் வீடு வீடாக புகுந்து சோதனைகளை நடத்தி தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளை சுதந்திரபுரம் பொது மைதானத்துக்கு கொண்டு சென்றதாக அங்கிருந்து குளோபல் தமிழ்ச் செய்த…

  24. இன்று காலை படையினரால் முற்றுகையிடப்பட்டது சுதந்திரபுரம்! [Thursday, 2014-03-20 09:49:08] முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உடையார்கட்டு வடக்கில், சுதந்திரபுரத்தின் ஒரு பகுதி இன்று காலை முதல் படையினர் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தப் பிரதேசங்களில் வசிக்கின்ற குடும்பங்களைச் சேர்ந்த வயது வந்த ஆண்களை தனியாகக் கூட்டிச் சென்று விசாரிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. நேற்று இதுபோன்று கிளிநொச்சி நகர அண்டிய பகுதிகளில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?ne…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.