ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் இலங்கை தொடர்பிலான அறிக்கைக்கு தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் உதவியளித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறு பேரைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு குழுவொன்று நவநீதம்பிள்ளையின் அறிக்கை தயாரிப்பிற்கு பங்களிப்பினை வழங்கியுள்ளனர். சனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கலம் மக்ரே, தாருஸ்மன் குழுவின் யாஸ்மீன் சூகா, பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன், முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரி கோர்டன் வைஸ், சார்ள்ஸ் பெட்ரீ ஆகியோர் இவ்வாறு ஆதரவளித்துள்ளனர். எனவே இந்தக் குழுவினர் நவநீதம்பிள்ளைக்கு போலியான தகவல்களை வழங்கியுள்ளனர். போரின் போது 40,ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 47,ஆயிரம் வரையிலான தமிழர்கள் …
-
- 1 reply
- 511 views
-
-
அவுஸ்ரேலியப் பாராளுமன்றத்தில் பசுமைக்கட்சியின் தலைவர் Christine Milne அவர்கள் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆற்றிய உரை. http://www.akkinikkunchu.com/2014/02/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3/
-
- 0 replies
- 244 views
-
-
சிறிலங்கா அதிபரின் சிறப்புத் தூதுவராக சீனா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சீன உதவி அதிபர் லி யுவான்சாவோவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு சீனாவின் ஆதரவைப் பெறுவதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சீனா சென்றுள்ளார். அவர் நேற்று பெய்ஜிங்கில் சீன உதவி அதிபரைச் சந்தித்து, சிறிலங்கா அதிபரின் சார்பில் இதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளார். இதன்போது, இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கும், மூலோபாய ஒத்துழைப்பு பங்காளர் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இருதரப்பும் இணங்கியுள்ளன. இருதரப்பு உறவுகள் உறுதியாக வளர்ச்சி பெற்று வருவது குறித்த…
-
- 1 reply
- 188 views
-
-
சிறிலங்காவில் நம்பகமான, சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது. பிரசெல்சில் நேற்றுமுன்தினம் நடந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார சபைக் கூட்டத்தில், சிறிலங்காவின் தற்போதைய மனிதஉரிமைகள் நிலைமைக்கு பதிலளிக்கும் வகையிலும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கும் காத்திரமான ஆதரவை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலக அளவில், மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மற்றும், ஐ.நா அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் முடிவில் உறுதியாக இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் மீளவும் வலிறுத்தியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வு ஆரம்பமாகவதற்கு முன்னதாக, ஐரோப்பிய …
-
- 0 replies
- 162 views
-
-
சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடத்துமாறுகோரி நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா.தலைமைச் செயலகம் முன்பாக இன்று புதன்கிழமை முற்றுகைப் போர் இடம்பெறவுள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத் தொடர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது இலங்கைக்கு எதிராகக் கடுமையான பிரேரணையயான்றைக் கொண்டுவரும் செயற்பாடுகளில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் அமெரிக்கா ஆராய்ந்து வருகின்றது. இவ்வாறானதொரு நிலையிலேயே மே 17 இயக்கம் அமெரிக்காவின் பிரேரணையை வலுவூட்டும் விதத்தில் இன்று முற்றுகைப் போரை நடத்தவுள்ளது. ஈழத்தில் போர் முடிவடைந்து 4 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இறுதிக்கட்டப் போரி…
-
- 1 reply
- 219 views
-
-
சிறிலங்காவை விமர்சிப்பதற்காகவே, தான் அங்கு பயணம் செய்யவிருந்ததாக, சிலர் எண்ணுவதாகவும், ஆனால், தனது நோக்கம் அதுவல்ல என்றும் தெரிவித்துள்ளார், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பெண்கள் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவர் கத்தரின் ருசெல். சிறிலங்காவினால், நுழைவிசைவு மறுக்கப்பட்ட, கத்தரின் ருசெல் அம்மையார், நேற்று கொழும்பிலுள்ள அமெரிக்கன் நிலையத்தில், உள்ளூர் பெண்கள் உரிமை மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். இதன்போது அவர், சிறிலங்காவுக்கு உதவுவதில் அமெரிக்கா இன்னமும் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் பெண்களின் நலவாழ்வுக்காக, 40 மில்லியன் டொலர் சிறிலங்கா அரசாங்கத்திடம் வழங்கப்பட்டு, அதுதொடர்பான த…
-
- 3 replies
- 484 views
-
-
போரில் பயங்கரவாதிகள் மீதே விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது – குறி தப்பவில்லை என்கிறார் விமானப்படைத் தளபதி. [Tuesday, 2014-02-11 17:38:02] போரில் விமானப்படையினர் பயங்கரவாதிகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியமைக்கான சாட்சியங்கள் இருப்பதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ச அபேவிக்ரம தெரிவித்துள்ளார். விமானப் படையினரின் தாக்குதல் தொடர்பாக எவரும் குற்றம்சுமத்த முடியாது. தேவையானால் வேண்டிய சந்தர்ப்பத்தில் சரியான தகவல்களை முன்வைக்க தயாராக இருக்கின்றோம்.இலங்கை விமானப்படையின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உட்பட வானில் மேற்கொண்ட பணிகள் தொடர்பான எழுதப்பட்ட புத்தகம் ஒன்று அடுத்த சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது.பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து ஒழிக்க விமானப் பட…
-
- 3 replies
- 574 views
-
-
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், மீன்பிடி மற்றும் விவசாயம் என்பவற்றில் மக்களின் உரிமைகளை உறுதிசெய்ய ஒன்றிணைந்து போராடுவோம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி 1990ஆம் ஆண்டிலிருந்து இடம்பெயர்ந்து இன்னும் மீள்குடியேறாத மக்களை விரைவில் மீள்குடியேற்ற கோரியும், காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்குவதனை நிறுத்தி உண்மைநிலையினை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இந்திய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்த வேண்டும் , விவசாயிகளின் உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதார மேம்பாடு போன்ற கோரிக்கைகள…
-
- 0 replies
- 164 views
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். புதுக்குடியிருப்பு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த 25 வயதுடைய தயானந்தன் விஜியசாதனா மற்றும் 3 வயதுடைய தாயானந்தன் யர்சிகா ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்பிவிட்டு திரும்பிய போது எதிரே வந்த வடி என அழைக்கப்படும் வாகனத்துடன் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.on…
-
- 5 replies
- 492 views
-
-
இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்கப்படாத பட்சத்தில் இலங்கை மீது சர்வதேச விசாரணையொன்று கோரப்படும் என்று பிரித்தானியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரெங்கின் கொழும்பின் தொலைக்காட்சியொன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய செவ்வியொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரச்சினை தொடர்பில் நட்பு ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆனாலும், தேசியப் பொறிமுறையொன்றை உரிய வகையில் முன்னெடுக்காது, விசாரணைகளை செய்யாத பட்சத்தில் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணையொன்றைக் கோருவதற்…
-
- 1 reply
- 576 views
-
-
யாழ்.மாவட்டம் புகைத்தலில் முதலாம் இடத்தில் இருப்பதாக அண்மையில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார். இலங்கை தேசிய போதைப்பொருள் புகைத்தலுக்கு எதிரான அமைப்பினால் மேற் கொள்ளப்பட்ட கணக்கெடுப்பைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முதலாம் இடத்தில் யாழ் மாவட்டமும் இரண்டாம் இடத்தில் கொழும்பு மாவட்டமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 43 வீதமானவர்களும் கொழும்பு மாவட்டத்தில் 39 வீதமானவர்களும் புகைத்தலில் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். http://www.e-jaffna.com/arch…
-
- 9 replies
- 683 views
-
-
பொதுநலவாய மாநாட்டில் சார்ள்ஸ் இளவரசருடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொள்வதற்கு ரூபா 1500 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதனால் நாட்டுக்கு கிடைத்த நன்மை என்ன? என்று கேள்வியெழுப்பியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக, மக்களின் கையிருப்பிலுள்ள பணத்தை பறித்தெடுத்து அதனை தமது சட்டை பையில் போட்டுக்கொள்ளும் வரவு செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைத்துள்ளதாகவும் இன்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே ரவி கருணாநாயக இதனைத் தெரிவித்தார். பொதுநலவாய மாநாட்டுக்கு கொண்டு வரப்பட்ட கார்களை எதிர்காலத்தில் பயன்படுத்தப்போவது யார்?, பல கோடி ரூபாய்களை செலவழித்து 81 …
-
- 0 replies
- 648 views
-
-
பிரபாகரனுக்கு 500 மில்லியனைக் கொடுத்து தமிழ் மக்களை வாக்களிக்காமல் செய்துவிட்டு வெற்றியடைந்த ஒருவர் தம்மை துரோகி என்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்தார். சரத் பொன்சேக்கா தலைமையில் நேற்று அலுத்கம – தர்கா நகரில் கூட்டம் ஒன்று ஒன்று இடம்பெற்றது. கூட்டத்தில் தலமை தாங்கிப் பேசியபோதோ அவர் இவ்வாறு தெரிவித்தார். “நாங்கள் பிரபாகரனின் ஆவியெனவும் தேசத் துரோகிகள் என்றும் கூறுகின்றனர். 2005 ஆம் ஆண்டில் பிரபாகரனுக்கு 500 மில்லியன் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்டு பிரபாகரன் தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தார். இதனூடாக, ஒருவர் வெற்றி பெற்றார் என்று சரத் பொன்சேகா தெரிவித்தார். அத்துடன் இந்த 500 மில்லியனைக் கொண்டு பிரபாகரன்…
-
- 3 replies
- 581 views
-
-
நாடாளுமன்றத்தில் இருப்பவர்களில் அதிகளவானவர்கள் திருட்டுக் கூட்டத்தினர் என ஜே.வி.பியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். நாடு கெட்டு சீரழிந்துள்ள நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும். தற்பொழுது நாட்டில் உள்ள போதைப் பொருள் வியாபாரிகள் அவற்றை மொத்தமாக கொண்டு வருகின்றனர். போதைப் பொருள் தேவை என்றால் பிரதமரின் அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தை எடுத்துக்கொண்டால் 105 அமைச்சர்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் இருப்பவர்களில் அதிகளவானவர்கள் திருட்டுக் கூட்டத்தினர் என அவர் சுட்டிக்காடியுள்ளதுடன், இந்த திருடர்களை அரசியல் வட்டத்தில் இருந்து விரட்ட வேண்டிய காலம் வந்துள்ளது. ஆளும் கட்சியின் கொழும்பு மாவட்ட முதன்மை …
-
- 1 reply
- 342 views
-
-
தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விரும்பு இலக்கம் வழங்கும் நாளான இன்று செவ்வாய்க்கிழமை இதுவரையிலும் எவ்விதமான தேர்தல் வன்முறைகளும் இடம்பெறாமல் அமைதியான நிலைமை தோன்றியதாக தேர்தல்கள் வன்முறைகளை கண்காணிக்கும் கபே அமைத்து தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுகின்றவர்களில் சில வேட்பாளர்கள் தங்களுடைய பெயர், விருப்பு இலக்க பட்டியலில் முதலில் இருக்கவேண்டும் என்பதற்காக '1 ஆம் இலக்கத்தை பெறுவதற்கு' தங்களுடைய பிறப்புச்சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை மாற்றிகொண்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளது என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. 'அஅஅஅ' என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டவர் கொழும்பு மாவ…
-
- 0 replies
- 543 views
-
-
இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் சர்வதேச விசாரணையைக் கோருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கை அரசு உள்ளக விசாரணையை நடத்தாத பட்சத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் றெங்கின் தெரிவித்தார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தப் பிரச்சினை தொடர்பில் முதலில் தெளிவாகவும் நட்பு ரீதியாகவும் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை முன்னெடுக்க வேண்டும். வட அயர்லாந்தின் அனுபவங்களை எடுத்துக்கொண்டால் ருவாண்டா மற்றும் சியேராலியோன் போன்ற நாடுகளில் சுயாதீன விசாரணைகள் இடம்பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நீண்டகால நல்லிணக்கம் மற்றும் உறுதியான ஸ்த…
-
- 0 replies
- 356 views
-
-
V.I.P நிகழ்வுகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள் கலந்து கொள்வது ஒன்றும் புதிய விடயமோ அல்லது வழக்திட்குமாரானதுமோ அல்ல. எனினும் இங்கே (மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு) கலந்து கொண்டவர்கள் அனைவரும் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள். கூடவே இவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் நெருங்கிய உறவினர்கள். இலங்கை திடீர் கோடீஸ்வரர் குடும்ப திருமண விழாவில் கலந்து கொண்ட ராஜபக்ஷ (Pvt) Limited அனைத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் பட்டியல். மணமகன் மனோஜ் ராஜபக்ஷ - கோத்தபாய ராஜபக்ஷவின் மகன். இதோ அந்த விழாவில் சமூகம் தந்தவர்களின் பட்டியல். 1. கோத்தபாய ராஜபக்ஷ - (தந்தை, பாதுகாப்பு செயலாளர், "மிக் ஒப்பந்த" ராஜா, இன்னும் எண்ணில் அடங்கா அரசிய…
-
- 10 replies
- 1.5k views
-
-
பேராதனை பல்கலைக்கழக வளாக காட்டுப் பகுதிக்குள் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் பேராதனை பல்கலைக்கழகத்தில் 2011 ஆம் ஆண்டு இடம் பெற்ற பகிடிவதை சம்பவத்தின் பிரதான சாட்சியாக இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு க.பொ.த உ. த பரீட்சையில் தோற்றி 2011 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்துக்கு நுழைந்த குறித்த மாணவன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் பாலியில் துன்புறுத்தல் என்பவை தொடர்பில் கண்டி மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கின் பிரதான சாட்சியாக இவர் இருந்துள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=4196#sthash.LMjMJ1RA.dpuf
-
- 0 replies
- 346 views
-
-
இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என சீன வெளிவிவகார அமைச்சர் வேங் யீ (றுயபெ லுi) தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய சுதந்திரம், இறைமை மற்றும் பௌதீக ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்கும் இலங்கை அரசாங்கத்தின் முனைப்புக்களுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சீனாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் தங்களது உள்…
-
- 0 replies
- 356 views
-
-
இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் சர்வதேச விசாரணையைக் கோருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கை அரசு உள்ளக விசாரணையை நடத்தாத பட்சத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் றெங்கின் தெரிவித்தார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தப் பிரச்சினை தொடர்பில் முதலில் தெளிவாகவும் நட்பு ரீதியாகவும் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை முன்னெடுக்க வேண்டும். வட அயர்லாந்தின் அனுபவங்களை எடுத்துக்கொண்டால் ருவாண்டா மற்றும் சியேராலியோன் போன்ற நாடுகளில் சுயாதீன விசாரணைகள் இடம்பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நீண்டகால நல்லிணக்கம் மற்றும் உறுதியான ஸ்திரத்தன்மை ப…
-
- 0 replies
- 370 views
-
-
(சிவா ஸ்ரீதரராவ்) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவில் பதினைந்து வருடங்களாக புனித தந்த தாதுவை தாங்கி சென்ற வேவலதெனிய ராஜா யானை நேற்று இரவு 9.45 மணியளவில் உயிரிழந்துள்ளது. கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவுக்கு மிகப்பெரிய சேவை செய்த வேவலதெனிய மஹிந்தோதய விகாரைக்கு சொந்தமான ராஜா யானை இறக்கும் போது அதற்கு வயது 55 ஆகும். இது குறித்து மேற்படி விகாரையின் நிர்வாக குழு தலைவரான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் கருத்து தெரிவிக்கையில், உயிரிழந்த ராஜா யானை தென் மாகாணத்தின் அகுனுகொலபெலஸ் பிரதேசத்தில் பிடிக்கப்பட்டு 1976ஆம் ஆண்டு அப்போதைய உல்லாசப் பிரயாணத்துறை அமைச்சராக இருந்த பீ.பீ.ஜீ.களுகல்லவின் ஊடாக வேவலதெனிய விகாரைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. மேற்படி ராஜா…
-
- 10 replies
- 728 views
-
-
மனிதக் கழிவு பொருள்களிலிருந்து பசளை தயாரிக்கும் திட்டம் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்திலேயே முதன் முதலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 67 மில்லியன் ரூபா செலவில் இதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. மனிதக் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் இயந்திரத் தொகுதி குறித்த செயற்பாட்டுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. உலர்வலய நகர் நீர் மற்றும் சுகாதார செயற்திட்டத்துக்கு அமைவாக நடைபெற்று வரும் குறித்த வேலைகளுக்கான நிதியை இலங்கை அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இணைந்து வழங்கி வருகின்றன. இதற்கென 67 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. கடந்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அபிவிருத்திப் பணிகள் எதிர் வரும் ஜூலை மாத…
-
- 8 replies
- 709 views
-
-
தமிழ், சிங்கள மக்கள் திட்ட மிடப்பட்ட வகையில் இனவாதம் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் பழிவாங்கப்பட்டு வருகின்றனர். கல்முனை வாழ் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தீர்வு பெற்றுக்கொடுக்க முன் வர வேண்டும் என கல்முனை ஸ்ரீ சுபத்திர ராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார். கல்முனை பிரதேச தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் மக்கள் சந்திப்பு கல்முனை சிங்கள மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் கல்முனைப் பிரதேசத்தில் மூவின மக்கள் வாழ்கின்ற போதிலும் இங்குள்ள தமிழ் சிங்கள மக்கள் வசிக்கும் பகுதிகளில் அபிவிருத்தித்திட்…
-
- 2 replies
- 419 views
-
-
எமது நிபந்தனைகளை மதிக்காவிட்டால் பேச்சுக்களுக்கு இடமில்லை! – பசிலுக்கு சுமந்திரன் பதிலடி. [Tuesday, 2014-02-11 10:02:55] அரசாங்கமும், ஜனாதிபதியும் எமது நிபந்தனைகளை மதிக்காத வரையில் பேச்சுகளுக்கு இடமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை காலமும் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்க முடியாத எமக்கான கோரிக்கைகளை இனிமேலும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளின் மூலம் வென்றெடுக்க முடியாது. சர்வதேசத்தின் உதவியே எமக்கான வழிமுறையென்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்- அரசாங்கத்தின் வார்த்தைகளில் எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. 2011ஆம் ஆண்டு அர…
-
- 0 replies
- 376 views
-
-
கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! [Tuesday, 2014-02-11 17:20:46] கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த தகவலை அடுத்து சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். ஜெயக்குமார் முனீஸ்வரகுமார் என்ற குறித்த நபர் கனடாவில் புலிகள் அமைப்புக்கு புலம்பெயர் தமிழர்களிடம் நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். சந்தேகநபர் தடுத்து வ…
-
- 0 replies
- 479 views
-