Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஆபிரிக்க நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு, தென்னாபிரிக்காவின் காலில் விழுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அடுத்தமாதம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ள நிலையில், இந்த தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு சிறிலங்காவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருகட்டமாக, ஆபிரிக்க பிராந்திய குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளை மடக்குவதற்கு, தென்னாபிரிக்காவைப் பயன்படுத்திக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆபிரிக்க வலயத்தில், அல்ஜீரியா, பெனின், பொட்ஸ்வானா, புர்கினா பாசோ, கொங்கோ, ஐவரிகோஸ்ட், எதியோப்பியா, காபோன், கென்யா, மொரோக்கோ, நமீபியா,…

  2. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசு மீது கொண்டுவரப்பட உள்ள பிரேரணைக்கான முன்னோடி வரைவு அமெரிக்க செனட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகம் இணைந்து சுயாதீனமான சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அந்தத் தீர்மான வரைவு வலியுறுத்தி உள்ளது. வடகரோலினா மாநிலத்துக்கான செனட்டர் ரிச்சர்ட் புர், இலங்கை தொடர்பான தீர்மா னத்தின் வரைவை அமெரிக்க செனட்டில் கடந்த 6ஆம் திகதி சமர்ப்பித்தார். "நீடித்த சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான - இலங்கைக்குள் இனநல்லிணக்கம், மீள்குடியமர்வு, உள்ளக ரீதியில் மீளக்கட்டியெழுப்புதல் என்பவற்றுக்க…

  3. ஜெனீவா தீர்மானத்தை தோற்கடிக்கக் கூடிய சாத்தியம் இலங்கைக்கு காணப்படுகின்றது – தயான் ஜயதிலக்க ஜெனீவா தீர்மானத்தை தோற்கடிக்கக் கூடிய சாத்தியம் இலங்கைக்கு காணப்படுவதாக முன்னாள் இலங்கையின் சிரேஸ்ட ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீhமானம் நிறைவேற்ற உள்ளன. மூன்றாம் தடவையாக நிறைவேற்றப்பட உள்ள இந்தத் தீர்மானத்திற்கு பாரியளவில் ஆதரவு கிடையாது எனத் தெரிவித்துள்ளார். இலங்கை ஆதரவு நாடுகளை விடவும் சொற்ப அளவிலான நாடுகளே தீர்மானத்திற்கு ஆதரவாக காணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, சீனா, ரஸ்யா, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்தால் தீ…

    • 3 replies
    • 819 views
  4. இலங்கைக்கு ஒன் அரைவல் வீசா வசதி மறுக்கப்பட்டது ஏன்? – இந்தியாவிடம் கேள்வி எழுப்புகிறது அரசாங்கம். [sunday, 2014-02-09 18:11:21] இலங்கைக்கு ஒன் அரைவல் வீசா வழங்காமை குறித்து, இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் அண்மையில் இந்தியா 180 நாடுகளின் பிரஜைகளுக்கு ஒன் அரைவல் வீசா வழங்கியிருந்தது.இந்த பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை. இலங்கை, பாகிஸ்தான், சூடான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு ஒன் அரைவல் வீசா வழங்கப்படவில்லை. என்ன காரணத்திற்காக இலங்கை பிரஜைகளுக்கு ஒன் அரைவல் வீசா வசதி வழங்கப்படவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது…

  5. இலங்கை செல்வதற்கு கடவுள் வழிவிடுவார் என்கிறார் பாப்பரசர்! [sunday, 2014-02-09 08:56:55] தாம் இலங்கைக்கு செல்வதற்கு கடவுள் வழியேற்படுத்துவார் என்று பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். இத்தாலியில் உள்ள இலங்கையர்களை நேற்று சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கைக்கு வருமாறு தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தாம் வரவேற்பதாகவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் தலைமையிலான குழுவே பாப்பரசரை சந்தித்தது. அங்கு மேலும் கருத்து வெளியிட்ட பாப்பரசர், இந்து சமுத்திரத்தின் முத்து என்று கூறப்படும் இலங்கையில் கடந்த காலங்களில் பாரிய பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டன. இதன் காரணமாக இந்து சமுத்திரத்தின் முத்துவில் இருந்து கண்ணீர் சொரியப்பட்டது…

  6. புனானையில் வெளிமாவட்ட சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுகிறது இராணுவம்! – பிள்ளையாருக்கு அருகே புத்தரும் குடிவந்தார். [Monday, 2014-02-10 07:18:48] மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு எல்லையான புணானையில் மீள்குடியேற்றத்திற்கு புறம்பாக வெளி மாவட்ட சிங்கள குடும்பங்களும் திட்டமிட்டு குடியேற்றப்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அங்குள்ள இராணுவமும் பௌத்த பிக்குவும் வெளி மாவட்டத்தை சேர்ந்த சிங்கள குடும்பங்களின் குடியேற்றத்திற்கு பின்புலமாக இருப்பதாக அங்கு சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவிக்கிறார். சில நாட்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் அந்த பகுதிக்கு நேரில் சென்று மீள்குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்.அங்…

  7. இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணையை ஏற்றுக்கொள்கிறேன்: மாதுலுவாவே சோபித தேரர் (இலங்கை என்பது சர்வதேசத்திற்குள் தான் இருக்கிறது.) இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணையை ஏற்றுக்கொள்வதாக கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாங்களே செய்து கொண்ட பிழை தான் ஜெனீவா. இலங்கை அரசாங்கம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறைவேற்ற வேண்டுமென்பதே சர்வதேச நாடுகளின் வேண்டுகோளாக இருக்கிறது. இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச பிரதிநிதிகளிடம் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்.…

  8. இலங்கை அகதிகள் வருகை குறைந்து விட்டது! – அவுஸ்ரேலியப் பிரதமர் மகிழ்ச்சி. [sunday, 2014-02-09 07:55:52] இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு அகதிகள் வருவது கணிசமாக குறைந்து விட்டதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபட் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். கடந்த 50 நாட்களில் அகதிகளுடன் எந்த ஒரு படகும் அவுஸ்திரேலியா நோக்கி வரவில்லை. இது அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் புதிய அகதிக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி. படகு மூலம் வந்தவர்களில், வழக்குகளில் வெற்றிபெறத் தவறியவர்களையும், அவுஸ்ரேலிய சட்டத்தை மீறி செயல்பட்டவர்களையும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கணிக்கப்பட்டவர்களையும் தான், தமது அரசாங்கம் திருப்பி அனுப்பியுள்ளதாகவும் பிரதமர் டோனி அபட் தெரிவித்துள்ளார். http://www.seithy.com…

  9. The US Congress has called on the United States and the international community to establish an independent international accountability mechanism to evaluate reports of war crimes, crimes against humanity, and other human rights violations committed by both sides during and after the war in Sri Lanka. A resolution on Sri Lanka has been presented by Senator Richard Burr to the US Congress on February 6th The resolution introduced to the Congress has been forwarded to the Committee on Foreign Relations. The resolution expressing support for the internal rebuilding, resettlement, and reconciliation within Sri Lanka that are necessary to ensure a lasting peace has also ca…

  10. வெங்காயம் உரிக்கும்போது கண்ணீர் வரலாம். ஆனால், வடக்கின் விவசாயிகளை வெங்காயம் ஒருபோதும் கண்ணீர்விட வைக்காது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை (08.02.2014) கைதடியில் விதைவெங்காயச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் வயல் விழா நடைபெற்றது. யாழ-;மாவட்ட பிரிதி விவசாயப் பணிப்பாளர் கி.சிறீபாதசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தனது உரையில், வெங்காயச் செய்கையில் ஈடுபட்டவர்கள் கடந்த காலத்தில் பொருளாதார ரீதியாக மிக உயர்வான நிலையில் இருந்துள்ளார்கள். வெங்காய வருவாயில் வீடுகட்டிய விவசாயிகளையும் வாகனங்கள் வாங்கிய விவசாயிகளையும் எனக்குத் தெரியும். அந்த அள…

  11. வடக்கு கிழக்கில் 89,000 ஆதரவற்ற பெண்கள் மிகுந்த நெருக்கடிகளை எதர்நோக்கியுள்ளனர்: - அனந்தி சசிதரன் [sunday, 2014-02-09 22:07:30] வடக்கு, கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 89 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் வாழ்வாதாரம் இன்றி வறுமையாலும் பல்வேறு பிரச்சினைகளினாலும் மிகுந்த நெருக்கடிகளை எதர்நோக்கியுள்ளனர். அத்துடன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் தற்கொலை முயற்சிக்கு போகுமளவுக்கு விரக்தி அடைந்து காணப்படுகிறார்கள். அதுவுமின்றி சமூக நெருக்கடிகளையும் சுய பாதுகாப்பு நெருக்கடிகளையும் தினந்தோறும் அனுபவித்து வருகிறார்கள். ஆனால் அரசாங்கமோ இவர்களுக்கான வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து விட்டோமென உலகத்துக்கு பொய் கூறி வருகிறது. ஜெனிவாவிலிருந்து…

  12. வரும் மார்ச் மாதத்தில் வரும் ஐநா மனித உரிமை மன்றத்தில் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைதான் வேண்டும் ஏன்?.. போர்க்குற்றவிசாரணை என்பதை ஏன் நாம் எதிர்க்கவேண்டும்..?... போர்குற்றத்திற்க்கான விசாரணையா அல்லது இனப்படுகொலைக்கான விசாரணையா என்பது இங்கு அவரவர் விருப்பம் சார்ந்தது பேசப்படுகிறது. அனால் நாம் என்ன கோரிக்கையை வைத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அது தீர்வை நோக்கி நகர்த்தும் என்பதை ஐநாவின் நடைமுறை விதியை வைத்தே முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக 1994ஆம் ஆண்டில் ருவாண்டாவில் துட்சி மக்கள் மீது அங்குள்ள இன்னொரு இனக்குழுவான ஊட்டு மக்கள் நடத்திய இனப்படுகொலைக்காக ஐநா அவையில் ஒரு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது.அந்த தீர்ப்பாயத்திற்க்கு கொடுக்கப்பட்ட வேலையென்னவென்றால் மிகத்தெளிவா…

  13. படிக்காதவர்கள் கூட அரசியலில் ஈடுபடும்போது, நடிகர்கள் தேர்தலில் போட்டியிட்டால் என்ன? – அனார்க்கலி கேள்வி. [sunday, 2014-02-09 08:27:01] சட்டத்தரணிகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள் எனக் கல்விமான்களுக்கு மட்டும்தானா அரசியல் சொந்தமானது? வர்த்தகர்கள், தொழில் எதுவுமே இல்லாதவர்கள், எட்டாம் வகுப்பு சித்தியடையாதவர்கள் என எத்தனையோ பேர் இன்று உலகில் அரசியலில் உள்ளார்கள். அவ்வாறிருக்க நடிகர்கள், நடிகைகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது எனும் சட்டம் உள்ளதா? என தென்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான அனார்க்கலி கேள்வியெழுப்பியுள்ளார். நடிகர், நடிகைகளாலும் அரசியலில் சாதித்துக் காட்ட முடியும் என்பதை கடந்த தென்மாகாண சபையில் நிரூபித்துக் காட்டியவள் நான். ந…

  14. ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள கடுமையான பிரேரணை விவகாரத்தில் எத்தகைய நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்தியா தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகின்றது என்று டில்லி இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அதேவேளை, காங்கிரஸ் அரசு, இந்த விடயம் சம்பந்தமாக அமைச்சரவை மட்டத்திலும் கருத்துகளைக் கேட்டறிந்து வருகின்றது.இந்திய அரசியல் பிரமுகர் ஒருவர் நேற்று மாலை இந்தத் தகவலை "உதயனி'டம் உறுதிப்படுத்தினார். இதற்கு முன்னர் இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த இரண்டு தீர்மானங்களையும் இந்தியா ஆதரித்திருந்தது. எனினும், "மதில் மேல் …

    • 10 replies
    • 558 views
  15. இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகள், இந்திய மத்திய அரசின் பேச்சைக் கேட்பதில்லை. அவ்வாறான நிலைக்குக் காரணம் மத்தியிலுள்ள பலவீனமான அரசுதான். அதனால் தான் தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப் பட்டிருக்கின்றார்கள் என்று சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்தார். சென்னை அருகே உள்ள வண்டலூரில் பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று இரவு இடம் பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நரேந்திர மோடி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: மத்திய அரசுக்கு, ஏழைமக்களின் மீது அக்கறை இருக்குமானால், தமிழக மீனவர் பிரச்சினை நடந்திருக்காது. தமிழக மீனவர்கள் இந்தப் பிரச் சினையைச்…

  16. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் 25வது அமர்வின், துவக்க நாளன்று பிரித்தானிய, மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர்கள், பங்கேற்று உரையாற்றவுள்ளனர். அடுத்தமாதம், 3ம் நாள், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வு ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் ஆரம்ப அறிக்கையை அடுத்து, முதல்நாளன்று, உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரைகள் இடம்பெறும். இதில் பங்கேற்று உரையாற்றும் உயர்மட்டப் பிரதிநிதிகளின் அட்டவணை கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காலை அமர்வில், காபோன், கம்போடியா, ரஸ்யா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் உரையை அடுத்து, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹகியூ உரையாற்றுவார். பிற்பகல் அமர்வில், கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார…

  17. அம்பாந்தோட்டையில் நின்று அமெரிக்காவுக்கு அம்பு விடுகிறார் பீரிஸ்! – லிபியா, ஈராக்கை போல ஊடுருவ முயற்சியாம். [sunday, 2014-02-09 08:18:33] லிபியா, ஈராக் போன்று இலங்கையிலும் ஊடுருவுவதற்கு சில தீய சக்திகள் முயற்சித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார். அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர், சில சர்வதேச சக்திகள் இலங்கைக்குள் செய்ய முடியாதவற்றை வெளிநாடுகளில் இருந்து கொண்டே மனிதஉரிமையைக் கருவியாகப் பயன்படுத்தி, செய்ய முயற்சிக்கின்றனர். லிபியாவில் அந்நாட்டு அதிபர் முஹம்மர் கடாபி ஓர் நாயைப் போன்று கொலை செய்யப்பட்டார். ஈராக்கில் அந்நாட்டு ஜனாதிபதி பலவந்தமாக பதவி விலக்கப்பட்டார். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு…

  18. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் துணைவியான சிராந்தி ராஜபக்ச, நேற்றும் இன்றும் திருப்பதியில் வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார். திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில், தரிசனம் செய்வதற்காக சிராந்தி ராஜபக்ச நேற்று மாலை 4 மணிக்கு திருமலைக்கு சென்றிருந்தார். திருமலையில் ஸ்ரீ கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் மாலை 5 மணியளவில்,திருமலையில் உள்ள ஆந்திர மாநில கைவினைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை மையமான லேப்பாக்சிக்கு சென்று இந்திய புடவைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினார். இதனால் அங்கு பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சிராந்தி ராஜபக்ச, பொருட்களைக் கொள்வனவு செய்து வெளியேறும் வரை, கடைக்குள் வேறு எவரும் நுழைய அனுமதிக்கப்படவில…

  19. இலங்கையில் போர்க்குற்றங்கள் மீண்டமட் தலைதூக்கியுள்ள என அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அல்ஜசீரா வெளிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியாக 2009 மார்ச் மாதம் வடக்கில் தன்னார்வ தொண்டு நிறுவனம் இலவசமாக வழங்கிய கஞ்சியைப் பெற்றுக் கொள்வதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர். அந்த நேரத்தில் குண்டு வெடிப்புக்கள் மற்றும் செல் தாக்குதல்கள் இடம்பெற்றன. உணவுக்காக அப்பாவித் தமிழ்மக்கள் வரிசையில் நிற்கும்போது, செல் தாக்குதல் இடம்பெற்றது. அதன்போது, வரிசையில் நின்ற பொதுமக்கள் அநேகமானோர் உயிரிழந்தனர். குழந்தைகளின் உடலும் முதியவர்களின் உடலும் நிலத்தில் விழுந்து கிடந்ததை நான் பார்த்தேன் என்று அந்…

  20. அர­சியல் பிரச்­சி­னை­களால் எமது மக்கள் பெரு­வா­ரி­யாக பிற­நா­டு­களில் தஞ்சம் புகுந்­துள்­ளனர். இதனால் இங்கு வசிக்­கின்­ற­வர்­க­ளிடம் திடீ­ரெனப் பணப்­பு­ழக்கம் அதி­க­ரித்­துள்­ளது. எமது மக்­க­ளிடம் புதிய கலா­சாரம் புகுந்­துள்­ளது. இதனால் எமது மக்­க­ளி­டையே இருந்து வந்த கடின உழைப்பு முறையும் சிக்­கன மற்றும் பண்­பாட்டு முறை­களும் ஆட்டம் கண்­டுள்­ளன என வடக்கு மாகாண சபையின் முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். தென்­ம­ராட்சி பிர­தே­சத்­தி­லுள்ள வரணி மத்­திய கல்­லூ­ரியின் அறு­ப­தா­வது ஆண்டு விழா பூர்த்தி நிகழ்வும் பரி­ச­ளிப்பு விழாவும் இக் கல்­லூரி மண்­ட­பத்தில் நேற்­றுக்­காலை 9 மணிக்கு நடை­பெற்­ற­பொ­ழுது நிகழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்டு உரை­ய…

  21. தற்போது ஆட்சியில் உள்ளவர் குடும்பத்திற்குள் அதிகாரத்தை தக்கவைக்க முயற்சி- தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றே தொடர்ந்தும் வலியுறுத்தினேன் - சந்திரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டமென்றே தொடர்ந்தும் வலியுறுத்தினேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் தாம் திட சங்கற்பம் பூண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பங்களுர் வாழும் கலை பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகளிர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்த வலயத்தில் அபிவிருத்தித் திட்டங்களையும், சமாதான பேச்சு…

  22. வடக்கு மாகாணசபை மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தயாராகிறது அரசாங்கம்! – ஆளுனர் சந்திரசிறியின் அறிக்கைக்காக காத்திருக்கிறதாம். [sunday, 2014-02-09 08:42:18] வடக்கு மாகாணசபை மீது இலங்கை அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சிங்களப் பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண சபை அரசியலமைப்புச் சட்டத்தை மீறிச் செயற்பட்டது, தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளிநாடுகளுக்குப் பகிர்ந்து கொள்வது, வெளிநாட்டு இராணுவத்துடன் சேர்ந்து திட்டங்களை முன்னெடுப்பது போன்றவற்றால், மத்திய அரசு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வடமாகாண ஆளுநர் ச…

  23. நேற்று மாலை கொழும்பு வந்தார் ஐ.நா உதவிசெயலாளர் நாயகம் ஹோலியங் சூ! [sunday, 2014-02-09 08:10:56] ஐ.நா உதவி செயலாளர் நாயகம் ஹோலியங் சூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று மாலை இலங்கை வந்துள்ளார். எதிர்வரும் 12 ம் திகதி புதன்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஹோலியங் சூ அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். ஹோலியங் சூ, ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றுகின்றார். எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக 3வது தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில் ஐநா உதவிச் செயலாளரின் வருகை முக்கியம…

  24. ஐக்கிய நாடுகள் உதவிச் செயலாளர் நாயகம் சிவில் அமைப்புகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் சந்திப்பதன் மூலமே உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும். அவரை சந்திப்பதற்கு தாங்கள் காத்துக்கொண்டிருப்பதாக வட மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை ஐ.நா. சபையின் உதவி செயலாளர் நாயகம் ஹோலியங் சூ இலங்கை வருகிறார். அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள சிவில் அமைப்புகளின் பிரதி நிதிகளையும் சந்தித்து உரையாட இருப்பதுடன் வாழ்வாதாரம் அளிக்கப்பட்ட வேலைத் திட்டங்களையும் பார்வையிடுவார் என்ற தகவலின் அடிப்படையிலேயே அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு கூறினார். அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 89 …

  25. ஈராக்கிலும், லிபியாவிலும், என்ன நடந்ததோ, அதுபோன்று சிறிலங்காவிலும் ஊடுருவ முயற்சிகள் நடப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி, சிறிலங்காவுக்குள் தம்மால் செய்ய முடியாததை, மனிதஉரிமைகள் என்ற கருவியைப் பயன்படுத்தி வெளியில் இருந்து செய்ய முயற்சிக்கிறது. ஒரு நாயைப் போன்று லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டார். ஈராக்கில், அந்த நாட்டின் தலைவர் பலவந்தமாக பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அந்த தலைவர்கள் தமது நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையாற்றுபவர்களாக இருந்தனர். அந்த நாடுகளில் உள்ள வளங்களை கைப்பற்றுவதற்காக, வெளிநாடுகள் தலையிட்டு, பிரச்சினைகளைத் தோற்றுவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.