Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர் முடிவடைந்த போதும் வடக்கில் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. சொந்த வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் மக்கள் இப்போதும் உள்ளார்கள். இவ்வாறு தெரிவித்தார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே.சிசன். நாகர்கோவிலில் நேற்று இடம்பெற்ற மீனவர்களுக்கு இயந்திரப் படகுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மீள்குடியேறிய நாகர்கோவில் கிழக்கு, மேற்குக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 40 இயந்திரப் படகுகள் 80 மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் யு.எஸ். எயிட் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் வழங்கும் திட்டத்தை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று ஆரம்பித்து வைத்தார். நாகர்கோவில் பொது மண்ட…

  2. அதிகாரங்களை எப்பொழுது தனிப்பட்டவர்கள் அல்லது குடும்பங்கள் அல்லது கட்சிகள் அல்லது இராணுவம் தம்வசப்படுத்த எத்தனிக்கின்றனவோ அது ஈற்றில் கவலையையே அவர்களுக்கு உண்டாக்கும். அண்மைக் காலத்தில் அவ்வாறு சர்வாதிகாரிகளாக மாறிய பலர் இறுதியில் தமது தவறுகளை உணர்ந்து திருந்திய வரலாறுகளும் உள்ளன. தமிழ் மக்களை இன ரீதியாக படுகொலைக்கு ஆளாக்கிய அரசு என்று அகில உலகமும் கூறும் போது ஜனாதிபதி கடும் போக்கைக் கடைப்பிடிப்பது தவறானது ஆகும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்குமாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வலி.தெற்குப் பிரதேச சபையின் உள்ளூராட்சி வார பரிசளிப்பு நிகழ்வு நேற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட முதலமைச்சர் உரையாற்றும் …

  3. ஐ.நா.மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு கடுமையான தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் என எதிர்வு கூறல்கள் சொல்லப்படுகையில், வலிகாமம் வடக்கில் இராணுவத்தினருக்காக அரசு பறிக்க முற்பட்ட நிலப்பகுதியில் சிலவற்றை அது விரைவில் விடுவிக்க உள்ளதாக "உதயன்' அறிகிறான். இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் விரைவு படுத்தப்படவுள்ளதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் "உதயன்' பத்திரிகையிடம் உறுதிப்படுத்தினர். முதற்கட்டமாக, வலிவடக்கில் மீளக்குடியமரவெனத் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டவர்களின் விவரங்கள் அனைத்தையும் இராணுவம் பெற்றுக் கொண்டுள்ளது. அவற்றின் உண்மைத் தன்மை பற்றிக் கடந்த சில தினங்களாக இராணுவத்தினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். வலி.வ…

  4. நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் க.கமலேந்திரனை எதிர்வரும் மாகாணசபை அமர்வுகளில் கலந்த கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இன்று நீதவான் லெனின்குமார் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போதே சந்தேக நபரினால் வடமாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கான அனுமதி மன்றில் கோரப்பட்டது. அதனடிப்படையில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் குறித்த சந்தேகநபரை சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் போது தாம் பாதுகாப்பு வழங்குவதாகவும் அதற்கான ஆட்சேபம் இல்லை என்றும் சிறைச…

  5. யாழ்ப்பாணத்தில் 2005ஆம் ஆண்டிற்குப் பின்னர் மக்களை பெரும் அச்ச நிலமைக்குத் தள்ளி அப்பகுதியை அபாயப் பிராந்தியமாக்கிய யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் இருந்த இராணுவமுகாம் அகற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். ஏதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரை முன்னிட்டுவடபகுதியில் உள்ள சில இராணுவமுகாங்கள் அகற்றப்பட்டு பெரும் இராணுவமுகாங்களுடன் இணைப்பட்டு வருகின்றது. இந்த இராணுவம் முகாம் இப்பகுதி மக்களை கண்காணிக்க அமைக்கப்பட்டது. இதனால் குறிப்பாக இளைஞர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். இந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை கடந்த எழுவருடங்களாக பாதித்தன. தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில்இந்த முகாம் அமைக்கப்பட்டது. புல …

  6. மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி இன்று வியாழக்கிழமை (23-1-2014) மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் 12 ஆவது தடவையாக தோண்டப்பட்ட போது மேலும் ஒரு மனித எச்சம் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை மன்னார் நீதவான் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண ஆகியோர் முன்னிலையில் குறித்த புதை குழி தோண்டப்பட்டது. மேலும் குறித்த மனித புதை குழியில் உள்ள மனித எச்சங்கள் சில அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண மற்றும் அவரது குழுவினரால் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு கொண்டு செல்வதற்காக பொதி செய்யப்பட்டுள்ளது. நேற்று புதன் கிழமை (22-01-2014) பரிசோதனைகளுக்காக குறித்த புதை குழியில் இரு…

  7. 'நமக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம். வெளிநாட்டுக்கு சென்று தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது. நமது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்துக்கு யாராவது குந்தகம் செய்வதற்கு முனைந்தால் அது தாய் நாட்டுக்கு செய்யும் பெரிய துரோகமாகும்' என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 'தமிழீழ விடுதலைப்புலிகள் போரிட்ட காலத்தில் சில குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறு வழங்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மீள பெறப்பட்டுவிட்டன' இப்போ இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் தவிர்ந்த ஏனைய குழுக்களிடம் ஆயுதங்கள் இல்லை எனவும் மட்டக்களப்பு, ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இன்று (23.01.14) நடைபெற்ற சந்திப்பொன்றில் பா…

  8. நாட்டின் சிறு­பான்­மை­யி­னத்­த­வரை அடக்கி ஆள்­வ­தா­னது விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனைப் போன்று பலரை புதி­தாக உரு­வாக்­கு­வ­தற்கு சம­மா­னது என வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு மற்றும் சமூக நலன்­புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்துள்ளார். இலங்கையில் 30 வருட கால­மாக யுத்தம் நடை­பெற்று வந்­தது. இதனால் நமது நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு பெரு­ம­ளவில் பாதிப்பு ஏற்­பட்­டது. வட­கி­ழக்கு பகு­தி­களில் மாண­வர்­களின் கல்வி நிலை பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டது. அத்­துடன் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்கம் வட கிழக்கில் வாழும் சிறு­வர்­க­ளுக்கு பாட­சாலை புத்­தகப் பைகளை வழங்­கு­வ­தற்கு பதி­லாக துப்­பாக்­கி­களை வழங்­கி­யது. இதனால் தனது சிறு­வ­யதில் புத்­தகம் ஏந்த …

  9. முஸ்­லிம்கள் அன்று பிர­பா­க­ரனின் எல்.ரீ.ரீ.ஈ உடன் ஒன்று சேர்திருந்தால் இந்த இலங்கை பௌத்த நாடு என்று சொல்­வ­தற்கும் எங்­களால் முடிந்தி­ருக்காது. அன்று இந்த நாட்டின் பிரி­வி­னைக்கு எதி­ராக முஸ்­­லிம்­கள் செயல்­பட்­ட ­தா­லேயே அவர்கள் இர­வோடு இர­வாக வடக்கில் இருந்து துரத்­தப்­பட்­டா ர்கள். இன்றும் அகதி முகாம்­க­ளில் வாழ்ந்து வரு­கின்­றார்கள் என பௌத்த மத­குரு பேரா­சி­ரியர் கம்­பு­ரு­க­முவ வஜிரதேரர் தெரி­வித்தார். முன்னாள் சபா­நா­யகர் எம்.எச்.முஹ ம்மத், பௌத்த மத­குரு பேரா­சி­ரியர் கம்­பு­ரு­க­முவ வஜிரதேரர் ஆகிய இரு­வ­ரையும் தலை­வர்­களாகக் கொண்ட பௌத்த முஸ்லிம் இன ஐக்கிய அமைப்பின் கூட்டம் இஸ்­லா­மிய நிலை­யத்தில் நடை­பெற்­றது. இக் கூட்­டத்­திற்கு மௌலவி தாசீம், ஹஸ்­புல்லாஹ் ம…

  10. கடந்த பல வருடங்களாக, யாழ் போதனா வைத்தியசாலையில், குழந்தைகள் பராமரிப்பு பிரிவானது, ஒரு சிறிய இடத்திலேயே, இடவசதிக் குறைவுடன் இயங்கி வந்த்து. கடந்த வருடங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் பலனாக, பல்வேறு உபகரணங்கள் பெறப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவாக இயங்குவற்கு வாய்ப்பு உண்டாது. எனினும் இடவசதிப் பற்றாக்குறையினால் அதன் முழுப் பலனையும் அடைய முடியவில்லை. அண்மையில் யாழ் போதனாவைத்திய சாலையின் முன்னைய மகப்பேற்று ஆறுவைச் சிகிச்சை கூடப் பகுதியானது புணரமைக்கப்பட்டு 16.01.2014 அன்று Dr. முருகையா தம்பதிகளால் திறந்து வைக்கப்பட்டது. அதற்கான நிதியுதவியை அமெரிக்காவில் வசித்து வரும் யாழ்ப்பாணத் தமிழர்களான Dr.வீரவாகு முருகையாவும் தமது காலஞ்சென்ற புதல்வி சிவரூபினி முருகையா ஞாபகார்த்தமாக …

  11. பாப்பரசர் பிரான்சிசை இந்த ஆண்டு சிறிலங்காவுக்கு வரவழைக்கும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் மார்ச் மாதம் பாப்பரசரை கொழும்பு அழைக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பாப்பரசருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், சிறிலங்கா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. இதையடுத்து கடந்த நொவம்பரில் வத்திக்கானுக்கு, சிறிலங்கா அதிபரின் தூதுவராகச் சென்று பாப்பரசரை சந்தித்த சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்காவுக்கு வருமாறு நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார். இந்தநிலையில், வத்திக்கான் பேச்சாளர் நேற்று தகவல் வெளியிடுகையில், சிறிலங்கா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கான பயணத்…

  12. சமயங்களிடையேயான நல்லுறவை வளர்ப்பதற்கான அரங்கத்தின் கூட்டத்தில் பங்குபற்றுமாறு மூன்று பீடங்களினதும் மகாநாயக்கர்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு பீடங்களும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பி வைக்குமாறும் கோரி உள்ளார். இவ்வாறே, கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லிம் சமயங்களின் உயர் பீடங்களும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து, எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறும் கூட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி பி.ப 4 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்…

  13. வடக்கில் இனச்சுத்திகரிப்பினை மேற்கொள்ள அமெரிக்கா அனுசரணை வழங்கி வருவதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் மாவட்டக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதனை தவிர்ப்பதற்கு அமெரிக்கா, இலங்கைக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்றி இனச் சுத்திகரிப்பினை மேற்கொள்ளும் முனைப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் வடக்கிலிருந்து சிங்கள மக்கள் வெ…

  14. மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் மற்றும் யாழ் ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆகியோருக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் மேற்கொண்ட முறைப்பாடுகள் தொடர்பில் எவ்வித கவனத்தையும் செலுத்தாது, பிரதமர் அலுவலகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமது அமைப்பின் உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தமையை கண்டிப்பதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது. மேற்படி கத்தோலிக்க ஆயர்கள் நாட்டுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதமைக்கு என்ன காரணம் என அந்த அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆயர்களின் பொய்யான கருத்துக்கள் தொடர்பில் நாட்டுக்கும், உலகத்திற்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டியது அ…

  15. புனர்வாழ்வு பெற்ற எமது உறவுகளுக்கு நாம் உதவி செய்ய கட்டுப்பாடுகளைப் போடுவது மிகவும் மோசமான செயற்பாடாகும் என வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 12ஆம் திகதி அழிந்து செல்லும் எமது கலைகளை கட்டிக்காக்கும் நோக்கில் முள்ளியவளை முதலாம் வட்டாரத்தில் கலை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியிருந்தேன். இந்த கலை நிகழ்வில் புனர்வாழ்வு பெற்றவர்களும் சிறுவர்களும் பங்குபற்றினர். புனர்வாழ்வு பெற்றவர்களில் இரண்டு கண்களையும் இழந்த ஒருவரும் இரண்டு கால்களை இழந்த மற்றுமொருவரும் தங்களுடைய நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். அப்போது அங்கு வந்த இராணுவத்தினரும் பொலிசாரும் எனது வீடியோ ஒலிநாடாவைப…

  16. போர் முடிந்த பிறகும் இலங்கையில் இனப்படுகொலை: இத்தாலி மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக இத்தாலியில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பு தனது விசாரணை அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில், 1956ல் சிங்கள மொழியை முன்னிலைப்படுத்தியது தொடங்கி இலங்கையில் இனப்படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், போர் முடிந்த பிறகும் தமிழர்களுக்கெதிரான அத்துமீறல்கள் தொடர்வதாகவும், இலங்கை ராணுவம் தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உடந்தையாக இருந்துள்ளன. இந்தியாவுக்கு எதிரான மற்ற குற்ற…

  17. வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்பது உட்பட ஆறு அம்ச கோரிக்கையை முன் வைத்து அனைத்து அடக்கு முறைகளுக்கும் எதிரான அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா கடந்த 16ஆம் திகதி முதல் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. யாழ். மாவட்ட செயலகம் முன்பதாக இடம்பெற்ற இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களுமான சிவாஜிலிங்கம் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் இணைந்து மென்பானம் வழங்கி முடித்து வைத்தனர். மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபருடன் நடாத்திய பேச்சுக்களை அடுத்து அதற்கான கால அவகாசமொன்றினை மேலதிக…

  18. யுத்த கால வீடியோக்கள் 30,000 அமெரிக்க டொலர்கள் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க ஊடகங்களே சர்வதேச சமூகத்திற்கு இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான வீடியோ காட்சிகளை விநியோகம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். குறிப்பாக அரசாங்க ஊடகவியலாளர்களே இவ்வாறு இறுதிக் கட்ட யுத்தம் பற்றிய வீடியோ காட்சிகளை விற்பனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். சில வீடியோக்கள் 30,000 அமெரிக்க டொலர்கள் வரையில் விற்பனை செய்யப்பட்டதாகவும், அரசாங்க ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவரின் லாப்டாப்பில் இவ்வாறான வீடியோ காட்சிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் மேலதி…

  19. வடக்கில் இனச் சுத்திகரிப்பினை மேற்கொள்ள அமெரிக்கா அனுசரணை வழங்கி வருவதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். ஜே.என்.பி.யின் மாவட்டக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதனை தவிர்ப்பதற்கு அமெரிக்கா, இலங்கைக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்றி இனச் சுத்திகரிப்பினை மேற்கொள்ளும் முனைப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் வடக்கிலிருந்து சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டு, இனச் …

  20. ந்தியா இலங்கைக்கு ரோந்து கப்பல்களையே வழங்கவுள்ளதாகவும் அது போர்க்கப்பல் இல்லை எனவும் இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் வெளியுறவு அமைச்சின் உதவி செயலாளர் ஜோசி சத்திய கடதாசியை சென்னை மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த கப்பல்கள் வழங்கப்பட்ட பின்னர் அவற்றை இந்திய கடற்பகுதிக்குள் ஒரு போதும் செலுத்தமாட்டோம் என்று இலங்கை கடற்படையும் உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டார். இதன் போது இந்திய கடற்படையினரும் இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்காக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவர் என்று ஜோசி சுட்டிக்காட்டியுள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=807392592222602506#sthash.hbPbBj8m.dpuf

  21. சர்வாதிகாரி ஹிட்லரின் இறுதிப் பயணம் எவ்வாறு அமைந்ததோ அவ்வாறானதொரு பயணத்தையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, இன்று அதனை முற்றாக நாசம் செய்து விட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதுவே ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் இறுதிப் பயணத்தின் ஆரம்பமாகவும் இருந்தது. மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முப்படைகளையும் பொலிஸாரையும் கொண்டு அடக்கி ஒடுக்கி வருகிறார். அரசுக்கு எதிராகச் செயற்படுவோர்கள் அடக்கப்படுகிறார்கள், அழிக்கப்படுகிறார்கள். நாட்டில் காட்டுச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு காட்டுத் தர்பார் நடத்தப்ப…

  22. சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கெதிராக சிறீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளபட்ட இன அழிப்பு தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நாமறிவோம். கடந்த கார்த்திகை மாதம் இலங்கை சென்ற பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமருன், சர்வதேச சுயாதீன விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தினார். எதிர் வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடக்கவிருக்கும் ஐ.நா மனித உரிமைக்குழுவின் கூட்டத் தொடரில் பிரித்தானியாவும் பங்குபற்றும் நிலையில், அதன் முழு ஆதரவை பெற பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் செயற்படவேண்டும். கீழ்க்காணும் படிவத்தை பூர்த்தி செய்து, அழிக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கு மறுக்கப்பட்ட நீதியை, பெற முயலும் பிரித்தானியத் தமிழர் பேரவையினரின் தொடர் முயற்சிக்கு ஆதரவுக் கரம் நீட்டுமாறு உரிமையுடன் கேட…

  23. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளிற்கு, இலங்கையின் வடகடற்பரப்பினை, உயர்மட்ட செல்வாக்கு பெற்ற குழு ஒன்று பயன்படுத தொடங்கியுள்ளமை தொடர்பில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவிலிருந்து; மன்னார் கடற்பரப்பினூடாகவே கடந்த காலங்கிளில் இத்தகைய கடத்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் அந்நடவடிக்கைகள் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாகி உள்ளதையடுத்து இப்போ ஓரளவுமட்டுப்பட்டுள்ளது. இதனையடுத்தே தற்போது வடமராட்சியின் கடற்கரையினை உள்ளடக்கி கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. குறிப்பாக இப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீன்பிடியினைப் பயன்படுத்தியே மீனவர்கள் போன்…

  24. சமயங்களிடையேயான நல்லுறவை வளர்ப்பதற்கான அரங்கத்தின் கூட்டத்தில் பங்குபற்றுமாறு மூன்று பீடங்களினதும் மாநாயக்கர்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க நேரில் சென்று அழைர்ர் விடுத்துள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு பீடங்களும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பி வைக்குமாறும் கோரி உள்ளார். இவ்வாறே, கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லிம் சமயங்களின் உயர் பீடங்களும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து, எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறும் கூட்டத்திற்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி பி.ப 4 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி சந…

  25. காணாமற்போனவர்களை அவர்களின் விருப்பத்துக்கு மாறாகக் கடத்தியவர்கள்தான் குற்றவாளிகள். அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்குச் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆணைக்குழு பரிந்துரைக்கும் என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக் குழுவினர் நேற்றுத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது பிள்ளைகளை விடுதலைப் புலிகள் கட்டாயப்படுத்திக் கொண்டு சென்றதாகவும் அதன் பின்னர் அவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனதாகவும் பெற்றோர் சிலர் விசாரணையில் தெரிவித்தனர். ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம ஆணையாளர்களான மனோ ராமநாதன், சுரஞ்சனி விஜயவர்த்தன ஆகியோர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்றுச் சாட்சியங்களைப் பதிவு செய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.