ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
இறுதிக்கட்டப்போர் குறித்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் வகையில், இறுதிப் போரின் போது வன்னிப் பிராந்திய மருத்துவ சேவைகளிற்கான தலைமை அதிகாரியாக இருந்த டாக்டர் வீரகத்திப்பிள்ளை சண்முகராஜாவின் சத்தியக்கடதாசியை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. வெள்ளமுள்ளிவாய்க்கால் வரை தங்களின் சேவையைத் தொடர்ந்தாகக் கூறும் இந்த வைத்திய அதிகாரியின் கூற்றுப்படி கடைசிப் போரில் 5,000 வரையானவர்களே பலியானதாகத் தெரிவித்துள்ளார். வன்னிக்கான அபாய மருத்துவ சேவைப் பிரிவினராகிய தாம் மக்கள் இடம்பெயர்ந்து செல்லுமிடமெல்லாம் சென்றதாகவும் தங்களது வைத்திய சேவைகளிற்காக தனது நிர்வாகத்தின் கீழே பத்து வைத்தியர்கள் மற்றும் 15க்கு மேற்பட்ட தாதியர்கள் பணியாற்றியதாகச் சொல்லும் மேற்படி வைத்திய அதிகாரி…
-
- 4 replies
- 782 views
-
-
அனந்திக்கு புனர்வாழ்வளிப்பதெனும் சதி முயற்சி பற்றி எச்சரித்துள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன்.அனந்தி சசிதரன் கைதுசெய்யப்பட்டாலோ, புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டாலோ இலங்கை அரசாங்கம் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், அனந்தி சசிதரன் தனிநபர் அல்ல, அவர் வடகிழக்கு மாகாணத்தில் மக்கள் பலம் மிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்,அதற்கு மேல் போரின் இறுதியில் தன்னுடைய கணவரை படையி…
-
- 3 replies
- 462 views
-
-
20 நாடுகளில் இருந்து 205 அமைப்புகள் தமிழ் மக்கள் விடுதலைக்கு ஒன்று சேர்ந்து விடுக்கும் செய்தி. [Wednesday, 2014-01-15 09:22:17] News Service உலகம் எங்கும் வாழும் தமிழர்களாகிய நாம் - தமிழ் மக்களுக்கு விடுதலை, நீதி, சுதந்திரம் கிடைக்கும் வரை தமிழர்களின் குரலாக நாம் இருப்போம் என்றும் அதே போல் விடுதலை தேடி நிற்கும் மக்களுக்கும் குரல் கொடுப்போம் என்றும், தமிழர் திருநாள் - திருவள்ளுவர் ஆண்டு 2045 யில் கூறிக்கொள்ள விரும்புகிறோம். தமிழர்களுக்கு தேசிய அடையாளத்தை வழங்குவதும், சாதி சமய பேதங்களை கடந்து தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தி நிற்பதுவும், உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதுமான தமிழ்ப் புத்தாண்டில், அனைவருடனும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்…
-
- 26 replies
- 2k views
-
-
காணாமற்போனோர் விடயத்தில் படையினரின் பங்கு குறித்தும் விசாரணைகளை ஆணைக்குழு முன்னெடுக்கும் என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். 'இறுதிக் கட்டத்தில் எமது உறவுகள் காணாமற்போனதற்குப் படையினர் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம். எங்கள் உறவுகள் இன்னமும் உயிருடன் இருக்கின்றார்கள். அவர்களை எப்படியாவது மீட்டுத்தாருங்கள்' என்று ஆணைக்குழுவின் முன்பாக உறவினர்கள் நேற்றுக் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பதிலளித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம மேற்கண்டவாறு தெரிவித்தார். காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆ…
-
- 2 replies
- 292 views
-
-
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையைத் திறப்பதற்கு வரும் ஜனாதிபதி, எங்கள் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை விடுவிப்பது எப்போது என்று கேள்வியெழுப்பியுள்ள வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக்குழு எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வலி.வடக்கு மக்களை முழுமையாக மீளக்குடியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தெல்லிப்பழையில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வினால் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ளவரும் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லைக்கு இ…
-
- 0 replies
- 244 views
-
-
தந்தை ஒருவர் தன்னுடைய இரு பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் அளவெட்டிப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தனது 13, 14 வயதுடைய இரு பிள்ளையையும் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலுக்கமைய தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இரு சிறுமிகளும் நீதிமன்றக் கட்டளைக்கமைய வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/?q=node/36074…
-
- 17 replies
- 1.1k views
-
-
நாட்டுக்காக ஜெனிவா செல்வாரா ஜோன் அமரதுங்க? நாட்டுக்காக ஜெனிவாவுக்கு சென்று மனித உரிமை ஆணைக்குழுவில் நாட்டின் சார்பில் பேசவும் தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். எந்த மாநாடாகவும் சர்வதேச அமைப்பாக இருந்தாலும் அங்கு சென்று நாட்டை காப்பாற்றுவதற்காக குரல் கொடுக்க நான் பின்நிற்க போவதில்லை. அரசியல் கட்சிகள் இடையில் கருத்து முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும் அதனை நாட்டுக்கு எதிரான சர்வதேச விவகாரங்களின் போது சம்பந்தப்படுத்தி கொள்ளக் கூடாது என்பதே எனது நிலைப்பாடும் நம்பிக்கையுமாகும். எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் ஜெனிவா மாநாட்டிலும் கலந்துகொள…
-
- 0 replies
- 408 views
-
-
மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் சேர்.பொன் இராமநாதன் அரங்கில் கல்லூரி அதிபர் கமலராணி கிருஷ;ணபிள்ளை தலைமையில் ஆரம்பமாகியது. தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது. இன்றைய நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவும், கல்லூரியின் பழைய மாணவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி ரங்கநாயகி பத்மநாதனும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் இராமநாதன் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு பெருமைகள் கூறும் நூற்றாண்டு மலரும் பிரதம விருந்தினரால் வெளியிடப்பட்டது. அத்துடன் …
-
- 0 replies
- 268 views
-
-
கிழக்கில் சூட்சுமமாக முஸ்லிம் அடிப்படைவாத சக்திகள் இயங்கி கொண்டிருப்பதோடு அதன் பின்னணியில் சர்வதேச முஸ்லிம் அடிப்படைவாதச் சக்திகளும் உள்ளன என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் முன் வைக்கவுள்ள பிரேரணைக்கும் இலங்கையில் இயங்கும் சர்வதேச வை.எம்.எம்.ஏ.அமைப்பு முன்வைக்கவுள்ள முறைப்பாட்டிற்கும் இடையே தொடர்புள்ளதோடு இதன் பின்னணியில் சர்வதேச முஸ்லிம் அடிப்படைவாதிகளும் உள்ளனர். வஹாப்பி வாதத்தினைப் பரப்பி இலங்கையை முஸ்லிம் காலனித்துவமாக்கும் சதித்திட்டத்தை முறியடிக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர் சுட்டிக…
-
- 2 replies
- 404 views
-
-
புதிய செயலா்களுடன் வடமாகாணசபை வடமாகாண சபையுடன் தொடர்பு கொள்ளவதற்கு...! கௌரவ க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் - வடமாகாண சபை தொலைபேசி இலக்கம் : 021-320 2465 தொலைநகல் இலக்கம் : 021-221 7227 மின்னஞ்சல்: cv.wigneswaran@gmail.com ************************************** கௌரவ கந்தையா சிவஞானம் பேரவைத்தலைவர் - வடமாகாண சபை தொலைபேசி இலக்கம் : 021-205 7084 ----------------------------------------------- திரு.கே.கிருஸ்ணமூர்த்தி செயலாளர் - பேரவைச் செயலகம் தொலைபேசி இலக்கம் : 021-205 7085 தொலைநகல் இலக்கம் : 021-205 7086 கைபேசி இலக்கம் : 0777750017 மின்னஞ்சல் : secretary1942@gmail.com ****************************************** கௌரவ தம்பிராசா குருகுலராசா கல்வி பண்…
-
- 0 replies
- 453 views
-
-
உரிமைப்போரின் பொழுது மக்களுக்காக தம்மை அற்பணித்தவர்கள் முடமாகியுள்ளனர்: அவர்களைப் பராமரிக்க வேண்டும்- முதலமைச்சர் விக்கி எமது மக்கள் எழுந்து நடக்கமுடியாமல் முனகிக் கொண்டிருக்கும் போது தூரத்தேதெரியும் அரசியல் இலக்குகளை அவர்களுக்கு எடுத்துரைப்பதால் பயன் ஏதும் இல்லை. அதற்காக அரசியல்த் தீர்வுகள் வேண்டாம் என்று கூறவில்லை. யதார்த்தத்தை உணர்ந்து எவற்றுக்கெல்லாம் முந்துரிமை வழங்கவேண்டும் என்பதை யூகித்தறிந்து எமது அரசியல் இலக்குகளையும் அடைய வேண்டும் என வடக்கின் முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். போரின் போழுது எமது மக்களுக்காக தமது வாழ்க்கையை அற்பணித்த பலஇளைஞர்கள் இன்று முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் அவஸ்தைப் படுகின்றனர். .வர்களைப் பராமரிப்பதும் எமத…
-
- 2 replies
- 394 views
-
-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின்படி மாகாண சபைகள் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியும். ஏற்கனவே வடமேல் மாகாண சபையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என பொருளாதார நிபுணரும் கொள்கை மற்றும் ஆய்வு நிலையத்தின் தலைவருமான சமந்த கெலேகம தெரிவித்தார். அந்தவகையில் பொருளாதார அபி்விருத்தி வேலைத்திட்டங்களில் கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களுக்கு முன்மாதிரியாக திகழும் என்றும் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்யுங்கள் என்ற சர்வதேச முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டின் ஆரம்ப வைவபத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். கிழக்கு மாகாண அமைச்சர் நஷீ…
-
- 0 replies
- 599 views
-
-
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2 வார காலப்பகுதியில் மட்டும் 30இலட்சத்து 33ஆயிரத்து 252 ஆயிரம் ரூபா காசோலை மோசடி இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்பாணம் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன. எனினும் அதிகளவிலான காசோலை தொடர்பிலான முறைப்பாடுகள் வியாபார நோக்கில் கொடுக்கல் வாங்கல் செய்வதாகவே அமைகின்றது. எனவே இவ்வாறு காசோலை மூலம் கொடுக்கல் வாங்கல்களைச் செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி கடந்த வாரம் தொழில் வாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா காசோலையினைப் ப…
-
- 0 replies
- 381 views
-
-
இதுவரை 40 எழும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - மன்னார்:- மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி 09 ஆவது தடவையாக இன்று சனிக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்ட போது மேலும் மூன்று மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் காலை 11 மணிவரை குறித்த மனித புதைகுழி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் தோண்டப்பட்டது. இதன் போது முதலில் இரண்டு மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டதோடு மேலும் ஒரு மனித எழும்புக்கூடு உள்…
-
- 0 replies
- 296 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கையைக் கொண்டு இலங்கை குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்ள முடியும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் திகதி ஆணைக்குழுவின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான சுயாதீன உள்ளக விசாரணைகள் நடத்தப்படாவிட்டால், சர்வதேச விசாரணைகளுக்காக பிரித்தானியா வலியுறுத்தும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயர் தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை விவகாரம் குறித்து சர்வதேச…
-
- 0 replies
- 313 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு, அடுத்த மாத முற்பகுதியில், புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வுக்கு முன்னதாக, இந்திய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்வம் காட்டி வருகிறது. அடுத்தமாதம் முதல் வாரம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக இரா.சம்பந்தன் தலைமையிலான குழு புதுடெல்லி செல்லும் என்று கூறப்படுகிறது. இதற்கென இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளிடம், சந்திப்புக்கான நேரம் ஒதுக்கித் தரும் படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லி செல்லும் குழுவில் வடக்கு ம…
-
- 1 reply
- 256 views
-
-
கிளிநொச்சியை போன்று யாழ். தமிழ் பெண்களும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார். வெற்றிலைக்கேணி உணவத்தை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று (17) நடைபெற்ற விஷேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் கேள்வி ஒன்றிக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் - யாழில் உயர் பாதுகாப்பு வலயம் என்று ஒன்று இல்லை பாதுகாப்புக்காகவே இராணுவம் இங்கு நிலைகொண்டுள்ளது அங்கு இராணுவத்திற்கு தேவையான காணிகள் எடுக்கப்பட்டு ஏனையவை மக்களிடம் விரைவில் கையளிக்கப்படும். யாழில் இருந்த மினி முகாம்கள் தற்போது கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு வருகின்றது. விரைவில் அனைத்து மினி முகாம்களும் அகற…
-
- 1 reply
- 386 views
-
-
அம்பாரை மாவட்டத்தில் மூவின மக்கள் தற்போது வாழ்ந்து வந்தாலும் கடந்த பல வருடங்களுக்கு முன்னால் இது தமிழர்களின் பாரம்பரியம் மிக்க மண் என்பதை மற்ற சமூகங்கள் மறந்துவிடக்க கூடாது என்பதுடன் கடந்தகால யுத்த சூழ்நிலைகளை மையமாக வைத்து தமிழர்களின் தாயகப் பூமியான இம் மாவட்டத்தில் உள்ள தமிழர்களுக்கு உரித்தான வளங்கள் அனைத்தையும் மற்ற இனங்களால் அபகரிக்கப்பட்டு வந்துள்ளது எனவே எஞ்சியிருக்கும் வளங்களையும் உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதற்கு அம்பாரை மாவட்ட தமிழர்வாழ் உரிமைகள் ஒன்றியம் ஒருபோதும் அனுமதிக்காது என அதன் தலைவர் எஸ். சசிக்குமார் தெரிவித்தார் திருக்கோவில் பிரதேசத்தில் மக்கள் பிரதிநிதகளை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெ…
-
- 1 reply
- 485 views
-
-
நீதிமன்றத்திற்கு முன்பாகவே ஆவா குழு ஆதரவாளர்களால் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றது. ஆவாகுழுவின் தொடர்பிலான இரண்டாவது வழக்கு விசாரணை நேற்றையதினம் யாழ் நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த செய்தியை சேகரிக்க சென்றுவிட்டு வெளியில் வந்தபோதே குறித்த கும்பலால் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த ஊடகவியலாளர்கள் ஐவருக்கு ஆவா குழுவை சேர்ந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். கோப்பாய் பொலிஸாருடன் சேர்ந்து ஊடகங்களே பிழையான முறையில் அவர்களை காட்ட முனைகின்றனர். உங்களை நன்றாக எங்களுக்கு தெரியும் உள்ளே இருப்பவர்கள் வெளியில் வரட்டும் உங்களை வெட்டிக் கொலை செய்வோம் என்று உதயன் நிறுவன ஊடகவ…
-
- 1 reply
- 384 views
-
-
மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று முழுமையான எலும்புக்கூடு ஒன்றும், துண்டாக்கப்பட்ட மண்டையோட்டின் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த புதைகுழியிலிருந்து பெண்கள் கையில் அணியும் வளையல்கள் சிலவும் உடைந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, பெண்கள் கழுத்தில் அணியும் முத்து மாலையின் குண்டு மணிகள் சிலவும் நேற்றுக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள விசேட நிபுணர் குழுவினர் தெரிவித்தனர். மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த மாதம் 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி நேற்று 8 ஆவது தடவையாக மன்னார் நீதிவான், விசேட நிபுணர் குழுவினர், மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகிய…
-
- 2 replies
- 655 views
-
-
அபிவிருத்திக்காக மட்டுமே அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து இனி கடன்களைப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் போன்று உணவுக்காகவும் கோதுமை மாவுக்காகவும் அரசாங்கம் கடன் பெறவில்லை என தெரிவித்த ஜனாதிபதி எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை விமர்சிப்பதே தற்போது எதிர்க்கட்சியின் அரசியலாகி விட்டது எனவும் தெரிவித்தார். வெயாங்கொடையில் புதிய மேம்பாலத்தை திறந்து வைத்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். இலங்கைக்கு கசினோவை அறிமுகப்படுத்தியவர் ரணசிங்க பிரேமதாசவே. அவற்றை மறந்து விட்டு நாட்டில் ஊழல் மோசடி நடப்பதாக விமர்சனம் செய்கிறது ஐக்கிய தேசியக் கட்சி. மக்களுக்காக பாதையில் இறங்கி மக…
-
- 0 replies
- 407 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையில் இந்த வாரம் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் வடக்கின் தற்போதைய நிலைமை, நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை, வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் என்பன குறித்து முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளது. இருதரப்பும் இந்த விவகாரங்கள் குறித்த தமது கருத்துகளை பகிர்ந்து கொள்ளவுள்ளன என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து இது தொடர்பான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. முன்னதாக, ஜெனிவா கூட்டத்தொடர் முடியும் வரை…
-
- 0 replies
- 237 views
-
-
அமெரிக்கப் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப்பிடம் கையளிக்கப்பட்ட ஆதாரங்களை முடிந்தால் சிங்களக் கடும் போக்கு அமைப்புக்கள் பொய்யென்று நிரூபிக்கட்டும் என்று சவால் விடுத்துள்ள மன்னார் ஆயர், அவ்வாறு செய்த பின்னர் எங்களைக் கைது செய்வது தொடர்பில் சிந்திக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். "நாங்கள் பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை' என்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மேலும் குறிப்பிட்டார். ஆதாரங்கள் கையளிப்பு யாழ்ப்பாணத்துக்கு கடந்த 8 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள விசேட போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப் வந்திருந்தார். இவருடன் யாழ் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோர் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர். இறுதிக் கட்டப் ப…
-
- 0 replies
- 281 views
-
-
இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு பயண எச்சரிக்கை? 18 ஜனவரி 2014 இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்க்பபட்டுள்ளது. இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் அவுஸ்திரேலியர்கள் மிகவும் நிதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீசா விதிமுறைகளை மீறி செயற்பட்டால் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட வேண்டிய நிலைமை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. வீசா நிபந்தனைகளுக்கு உட்பட்டவாறு இலங்கையில் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் சகல பாகங்களிலும் டெங்கு நோய் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளிகள் பதிவா…
-
- 0 replies
- 545 views
-
-
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் அமைப்பின் (யுஎஸ்எயிட்) ஊடாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு உதவும் வகையில் புதிய நிகழ்ச்சித் திட்டமொன்றை அறிவித்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பத்தம் கைச்சாத்திடப்பட்டதனூடாக சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்படும் ´சட்டத்தின் ஆட்சிக்கு ஆதரவளிப்பதற்கான சிவில் சமூக முன்முயற்சிகள்´ எனத் தலைப்பிடப்பட்ட திட்டத்திற்கு ´யுஎஸ்எயிட்´ அனுசரணை அளிக்கவுள்ளது. இந்த மூன்று வருடகால நிகழ்ச்சித்திட்டம், இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கங்களுக்கு இடையிலான உறவை மேலும் மேம்படுத்த வழிகோலும். இந்த நிகழ்ச்சித் திட்டமானது தொழில்சார் மட்டத்திலான சட்டக்கல்வி மற்றும் நீதித்து…
-
- 1 reply
- 261 views
-