ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
05 JUL, 2024 | 06:55 PM யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார இன்று வெள்ளிக்கிழமை (05) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்ற நிகழ்வில் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொறுப்பேற்றுக்கொண்டார். இதில் யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். இதுவரை யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய ஜகத் விசாந்த பிரதி பொலிஸ் மா அதிபராக …
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
05 JUL, 2024 | 06:33 PM (நா.தனுஜா) பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததை அடுத்து சர்வதேச நாடுகளோ, அமைப்புக்களோ நிதியுதவி வழங்காததன் காரணமாக உள்நாட்டில் நெடுஞ்சாலை நிர்மாணம் உள்ளிட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுக்க இயலவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, ஜப்பானின் உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை தொடர்பில் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று வெள்ள…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
Published By: VISHNU 01 JUN, 2023 | 05:26 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் வருடத்துக்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுகின்றவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் தம்மை தேசிய வருமான திணைக்களத்தில் பதிவு செய்வது வியாழக்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள வைத்தியர்கள், இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் , முகாமைத்துவ கணக்க…
-
-
- 24 replies
- 1.2k views
- 1 follower
-
-
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்யாதவர்கள் அடுத்த வாரத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக நான்கு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://tamilwin.com/article/aswesuma-allowance-second-application-form-1720138450
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
விசேட சுற்றிவளைபில் கிளிநொச்சியில் பலர் கைது! கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள கல்லாறு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது இதில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிபடையினர் இணைந்து இதணை மேற்கொண்டுள்ளனர் இதன்போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஜஸ் போதைப்பொருள், மோட்டார் வண்டி உள்ளிட்டவை மீட்கப்பட்டதுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் அனைவரும் பொலிஸ் விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1391004
-
- 0 replies
- 356 views
-
-
Published By: DIGITAL DESK 7 04 JUL, 2024 | 02:45 PM ஜனாதிபதி தேர்தலையோ அல்லது வேறு எந்த தேர்தலையோ ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தேர்தலை சந்திக்க முதுகெலும்பில்லாத எதிர்க்கட்சிகள் தேர்தலை ஒத்திவைப்பது பற்றி பேசினாலும் அரசாங்கம் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தும் என அமைச்சர் வலியுறுத்தினார். கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (4) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியதாவது: ஜனாதிபதி ரணில…
-
- 2 replies
- 233 views
- 1 follower
-
-
04 JUL, 2024 | 12:57 PM மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்கலாக கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்ந்த போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு மிகக் குறைவான மட்டத்திலேயே காணப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் 42 வீத பங்களிப்பை வழங்கி வருகிறது. மீதமுள்ள 58 வீத பங்களிப்பை ஏனைய 8 மாகாணங்களும் வழங்கி வருகின்றன. கிழக்கு மாகாணம் 5 வீதத்துக்கும் குறைவான பங்களிப்பையே வழங்கி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். உலகில் பல நாடுகள் யுத்தம் முடிவடைந்து சர்வதேச நன்கொடையாளர் மாநாடுகளை நடத்திய போதிலும், எமது நாட்டில் யுத்தம் முடிவடைந்து இன்று வரைய…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
04 JUL, 2024 | 12:31 PM நாட்டில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். யுக்திய நடவடிக்கையின் ஆறு மாதகால முன்னேற்றம் மற்றும் இரண்டாம் கட்ட நடவடிக்கை குறித்து ஊடகவியலாளர்களுக்கு அறிவிப்பதற்காக இடம்பெற்ற கூட்டத்தின் போதே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்தார். பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு பிரதேசங்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிப்பதாகக் கூறப்படும் 5,979 பேரில் இதுவரை 5,449 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி சுமா…
-
- 0 replies
- 329 views
- 1 follower
-
-
Published By: VISHNU 04 JUL, 2024 | 02:02 AM 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பெண்ணொருவர் புதன்கிழமை (03) தெல்லிப்பளை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது செட்டிக்குறிச்சி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த குணசேகரம் வரதசுரோன்மணி (வயது 67) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்றையதினம் அவரது வீட்டுக்கு அருகேயுள்ள காணிக்குள் சென்று பனையோலை எடுத்தவேளை அதனுள் இருந்த கருங்குளவி அவர்மீது கொட்டியது. இந்நிலையில் அவர் சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எனவே உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும். அதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305195
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
03 JUL, 2024 | 03:43 PM பொதுத்தேர்தல் வாக்களிப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் காணப்படும் நோக்கங்கள் குறித்த புதிய ஆய்வினை மேற்கொண்டுள்ள ஐஎச்பி நிறுவனம் Institute for Health Policy’s மக்கள் மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தேசிய மக்கள் சக்திக்குமான ஆதரவு குறைவடையவில்லை என தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் 34 வீதமான மக்களின் ஆதரவு காணப்படுவதாக ஐஎச்பி அமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு 13 வீதமானவர்களும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆறு வீதம் இலங்கை தமிழரசுக்கட்சி நான்கு வீதமும் ஆதரவு காணப்படுவதாக ஐஎச்பி தெரிவித்துள்ளது. மே மாதம் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகள் மூலம் இது…
-
- 1 reply
- 199 views
- 1 follower
-
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலம் குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரபல வர்த்தகரான சி.டி லெவனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் உயர்நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைகால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு இந்த மனுவில் மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305181
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவரின் அலுவலகத்தில், பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி விவாகரத்துக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது, அவர் ஏற்கனவே விவாகரத்துப் பெற்றுள்ளார் என்று தரவுகள் வெளிக்காட்டியுள்ளன. அந்தப் பெண் அதுவரை விவாகரத்துக்கு விண்ணப்பிக்காத நிலையில், இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். நீதிமன்ற நடவடிக்கை இந்நிலையில், பொலிஸ் விசாரணைகளில், உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவர் கனிஷ்ட சட்டத்தரணிகள் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து, மேற்படி தம்பதியர்கள் விவாகரத்துப் பெற்றுக்கொள்வதாக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. இ…
-
- 3 replies
- 506 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 19 JUN, 2024 | 03:41 PM திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் சொத்துக்களை சம்பாதித்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கமைய நடிகையும், மொடல் அழகியுமான பியூமி ஹன்சமாலியின் 19 கணக்குகளின் பதிவுகளை பெறுவதற்கு மாளிகாகந்த நீதவான் மஞ்சுள திலகரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (சிஐடி) அனுமதி வழங்கியுள்ளார். பியூமி ஹன்சமாலியின் இந்த வங்கி கணக்குகள் எட்டு முன்னணி வங்கிகளில் உள்ளன. 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான ரேஞ்ச் ரோவர் ரக வாகனம் மற்றும் 140 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொழும்பில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் பியூமி ஹன்சமாலி பெற்று வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்…
-
- 1 reply
- 449 views
- 1 follower
-
-
03 JUL, 2024 | 03:10 PM 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 85 வீதமானோர் காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு மாபெரும் பொறுப்பு உள்ளது. எனவே சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சி எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187587
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 03 JUL, 2024 | 01:26 PM நாட்டில் பொருளாதார, அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகிய இருவரும் இந்த வாரம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள். அதன்படி, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்தித்துள்ளனர். இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் ஜூலி சங் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் பொருளாதார, அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை நானும் அமெரிக்க திறை…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
Published By: VISHNU 26 JUN, 2024 | 07:41 PM இலங்கை இன்று 26ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் பெரிஸ் நகரில் தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதுடன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி இணக்கப்பாட்டை எட்டியுள்ளது. மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பீஜிங்கில் இலங்கை இன்று இறுதி இணக்கப்பாட்டை எட்டியதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப்பட்டது. இந்த இணக்கப்பாடுகளுடன், இலங்கை தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கான கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளத…
-
- 2 replies
- 208 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 03 JUL, 2024 | 12:09 PM வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார். அவர் தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட சகோதரிக்கு வழங்கியிருந்தார். இந்த நிலையில், காணி உரிமையாளரின் சொந்தச் சகோதரி பிறிதொரு தேவையைக் காரணம்காட்டி ஒன்றுவிட்ட சகோதரியிடமிருந்து உறுதியைப் பெற்றுச்சென்று மோசடியாக உரிமை மாற்றம் செய்துள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசார…
-
- 0 replies
- 563 views
- 1 follower
-
-
யாழில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா யாழ் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மழைநீரை சேகரிக்கும் தாங்கிகளை நிர்மாணிக்க இந்தியா முன்வந்துள்ளது. இதற்கமைய 3000 நீர்த் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை கடந்த 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா (newuthayan.com)
-
- 6 replies
- 537 views
- 2 followers
-
-
Published By: VISHNU 03 JUL, 2024 | 02:45 AM (எம்.மனோசித்ரா) உத்தரவாத மின்சாரக் கொள்வனவு ஒப்பந்தத்தின் கீழ் மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்திக் கொள்வனவுக் கட்டணத்தைத் திருத்தம் செய்தற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழும் குறித்த சட்டத்தில் பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுக்கமைய, 10 மெகாவாற்று அல்லது அதற்குக் குறைவான கொள்ளளவு கொண்ட மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்திக் கருத்திட்டங்களுக்குரிய தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட, உத்தரவாதமளிக்கப்பட்ட சந்தை விலையை விடவும் உயர்ந்த விலைக் கட்டண முறையின் கீழ் உத்தரவாத மின்சாரக் கொள்வனவு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டி…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
இலங்கை மதுவரி திணைக்களம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 105 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபாய் அதிகரிப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/305123
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
02 JUL, 2024 | 01:28 PM யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (01) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குருநகர் 5மாடி குடியிருப்பினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய மீனவர் ஆவார். குறித்த மீனவர் குருநகர் கடற்பரப்பிலிருந்து நேற்று கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் மீனவரின் கழுத்து பகுதியில் முரல் மீன் தாக்கியுள்ளது. முரல்மீனின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ள மீனவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண…
-
-
- 10 replies
- 793 views
- 1 follower
-
-
03 JUL, 2024 | 10:14 AM யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு பொருட்கள் ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தார். புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திரலிங்கம் அருண் (42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். குறிகட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பொருட்கள் ஏற்றி இறக்கலில் ஈடுபட்ட படகொன்று நான்கு தொழிலாளர்களுடன் நேற்று (02) இரவு 7 மணியளவில் நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் பயணித்த நால்வரும் கடலில் வீழ்ந்தனர். அவர்கள் கரை நோக்கி நீந்தியவேளை, கிராம மக்களின் உதவியுடன் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
வெளிநாட்டு மதுபானம் என விசக்கரைசலை குடித்த இருவர் மரணம். தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார். தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட டெவோன் என்ற மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்களே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (28) இரவு கடலில் மிதந்து வந்த போத்தல்கள் சில இவர்களுக்கு கிடைத்துள்ள நிலையில், அதனை வெளிநாட்டு மதுபானம் என நினைத்து அருந்தியுள்ளனர். இதன்போது, குறித்த 06 மீனவ…
-
- 4 replies
- 535 views
- 1 follower
-
-
இலங்கையைச் சேர்ந்த இரு வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி. இலங்கையின் தருஷி கருணாரத்ன மற்றும் தில்ஹானி லேகம்கே ஆகிய வீரங்கனைகள் இவ்வாண்டு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். அந்தவகையில் இலங்கையின் இளம் வீராங்கனையான தருஷி கருணாரத்ன பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்ட போட்டியை பிரதிநிதித்துவப்படுத்தத் தகுதி பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் தில்ஹானி லேகம்கே பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்துத் தகுதி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1390764
-
- 0 replies
- 166 views
-