Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் ஜி,ராமகிருஷ்ணனை சந்தித்தார். அப்போது மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந்திரராசன், பி.சம்பத், செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், க.கனகராஜ் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார், ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் உடனிருந்தனர். செப்டெம்பர் மாதம் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பிந்தைய நிலைமைகள் குறித்தும் இலங்கைத் தமிழ் மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினை…

  2. தெற்காசியாவில் பன்முகத் தன்மைக்கான சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வொன்று எதிர்வரும் 7 ஆம் திகதி பிற்பகல் 3-6 மணி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை தாங்கும் தெற்காசிய கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மத சகிப்புணர்வு, சமாதான சக இருப்பு, மதச் சார்பின்மை,பண்முகத்தன்மை,போன்ற விடயங்கள் தொடர்பாக இலங்கைப் பிரஜைகளுக்கு உணர்வூட்டுவதற்கான பரந்துபட்ட முன்முயற்சியாக இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் ரஜீவ்பார்கவா, இலங்கையின் பேராசிரியர் ராதிகா குமாரசுவாமி,ஆகியோர் தெற்காசியாவில் “மதமும் அரசியலும்” எனும் தலைப்பில் கலந்துரை…

  3. ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையின் இம்­முறை கூட்டத் தொடரில் உச்­ச­பட்ச அழுத்­தத்­தையும் கடி­ன­மான நிலை­மை­க­ளையும் எதிர்­பார்த்தே அதற்கு தயா­ரா­கி­வ­ரு­கின்றோம். ஜெனிவா சவால்­க­ளுக்கு முகம் கொடுக்க நாங்கள் தயா­ரா­கவே இருக்­கின்றோம் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித் தார். கனே­டிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ராதிகா சிற்­ச­பேசன் வீட்டுச் சிறையில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­வதில் எவ்­வி­த­மான உண்­மையும் இல்லை. அவர் என்ன நிகழ்ச்சி நிரலில் இங்கு வந்­துள்ளார் என்று எங்­க­ளுக்குத் தெரியும். ராதி­காவும் பிரிட்டன் பிர­தமர் கம­ரூனும் தங்கள் நாட்டில் இடம்­பெ­ற­வுள்ள அடுத்த தேர்­தல்­க­ளுக்­காக முத­லீ­ட…

  4. -எஸ்.கர்ணன் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து மீது இக்கிரிக்கொல்லாவையில் வைத்து நேற்றிரவும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சாரதியான அல்வாய் பகுதியினைச் சேர்ந்த எஸ்.யோகராஜா (45) காயமடைந்துள்ளார். கல்வீச்சுத் தாக்குதலினால் பேரூந்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து நொருங்கியுள்ளதுடன் சாரதிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சாரதி முதலுதவியினை செய்துவிட்டு, பயணிகளுடன் பருத்தித்துறையை இன்றுக்காலை சென்றடைந்தார். யாழ். – கொழும்பு பேரூந்துகள் மீது மதவாச்சி பிரதேசங்களில் வைத்து அண்மைகாலமாக பரவலாக கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வ…

  5. -சுமித்தி தங்கராசா www.gov.np.lk என்ற முகவரியூடான வடமாகாணத்திற்கான இணையத்தளம் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த 2 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த இணையத்தளத்தில் வடமாகாண சபை, வடமாகாண ஆளுநர் அலுவலகம், பிரதம செயலாளர் அலுவலகம், கல்வி, கலை பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகம், விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் அலுவலகம், மீன்பிடி, போக்குவரத்து மற்றும் வணிகத்துறை அமைச்சின் அலுவலகம், சுகாதார அமைச்சின் அலுவலம் ஆகியவற்றின் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் விஐயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண சபையின் பேரவைத்தலைவர் எஸ்.கிருஸ்ணமூ…

  6. வியாழன், ஜனவரி 2, 2014 - 20:37 மணி தமிழீழம் | யேசுதாசன், கொழும்பு ஐரோப்பாவால் மீண்டும் வழங்கப்பட்டது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை!! யுத்தக் குற்றங்கள் காரணமாக இலங்கையிடம் இருந்து ரத்து செய்யப்பட்ட ஐரோப்பாவின் ஜீ.எஸ்.பி. பிலஸ் வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கையை அதி குறைந்த வருமானத்தை பெறும் நாடு என்று அடையாளப்படுத்தி இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் றிசாட் பதியுதீன் இதனை இன்று அறிவித்தார். முன்னதாக இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருந்த நிபந்தனைகளுக்கு இலங்கை இணங்காத நிலையில், இந்த சலுகை ரத்து செய்யப்பட்டது. எனினும் இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் சீர் செய்யப்பட்ட ஜீ.எஸ்.பீ…

    • 7 replies
    • 1k views
  7. தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கெடுக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வடக்கு தமிழ் மக்களின் நலன்களில் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு கரிசனை கிடையாது என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்களை வழங்குமாறு இந்தியா, இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினைக்கு வடக்கு தமிழ் நிர்வாகமும், தமிழக நிர்வாகமும் கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்க வேண்டுமென அவர் …

    • 2 replies
    • 312 views
  8. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனின் கருத்துக்கள் சர்வதேச அரங்கில் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்தாகவே அமையும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நேற்று தெரிவித்துள்ளார். ராதிகா சிற்சபேசனின் இலங்கை விஜயம் குறித்து பிரதி வெளிவிவகார அமைச்சரிடம் கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் வாழ் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காகவே ராதிகா சிற்சபேசன் இங்கு வந்து நடிக்கிறார். இலங்கை பற்றி ஒரு அறிக்கையை இவர் பகிரங்கப்படுத்தினால் அது நிச்சயமாக நாட்டுக்கு எதிரானதாகவே அமையும் என்பதனால் அத்தகைய ஒருதலைப்பட்சமான கருத்துக்கள் சர்வதேச அர…

    • 3 replies
    • 673 views
  9. In October 2013 Kalyana Tissa Thero of the Seth Sevana Lama Nivasa of Attambagaskanda, Vavuniya was arrested for sexually abusing a 9 year old child. The Buddhist monk was kept in remand custody and medical evidence confirmed the sexual abuse of the child on 12.10.2013. Subsequently the custody of the remaining 22 children of the children’s home was taken by the National Child Protection Authority (NCPA) on 15.10.2013. Fearing that the remaining children may have also been sexually abused the Vavuniya magistrate requested the medical examination of the 22 children. Through the court order the suspect remained in custody. However on 31.12.2013 the suspected monk was grante…

    • 3 replies
    • 1.2k views
  10. (க.கிஷாந்தன்) சிவனொளிபாதமலைக்கு எதிர்வரும் 5ம் திகதி வரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களை செல்ல வேண்டாம் என நாயக்க தேரர் பெங்கமுவ தம்மதின்ன தெரிவித்துள்ளார். இன்று இரண்டாவது நாளாக சிவனொளிபாதமலைக்கு அதிக பனிமூட்டத்தின் மத்தியிலும் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. 20000 கிலோ பெறுமதி உள்ள பொருட்களில் இதுவரை 6000 கிலோ பெறுமதியான பொருட்கள் கொண்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மிகபெரிய பாரம் கொண்ட பொருட்கள் உச்சி மலைக்கு கொண்டு செல்லப்பட்டது இதுவே இங்கையில் முதல் தடவையாகும் என ஹெலி கொப்டரின் பிரதான பைலட் அதிகாரி எம்.ஏ.எஸ்.கே மஹிப்பால தெரிவித்தார். http://www.virakesari.lk/?q=node/360355

  11. சுற்றுலா நுழைவிசைவில் சிறிலங்கா வந்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை நாடுகடத்தும் நடவடிக்கைகள், சிறிலங்காவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். சுற்றுலா நுழைவிசைவில் சிறிலங்கா வந்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டதாகவும் கூறி, நியூசிலாந்தின் கிறீன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், அவுஸ்ரேலியாவை சேர்ந்த அனைத்துலக ஊடக அமைப்பு பிரதிநிதிகள், கவிஞர் ஜெயபாலன், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் போன்ற பலர் அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தநிலையில் கடந்த 28ம் நாள் சுற்றுலா நுழைவிசைவில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்…

  12. காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்படுமென்று சர்வதேசத்திற்கு இலங்கை அரசு கூறி வருவது மக்களை ஏமாற்றும் செயல் என்று வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை மாநாடு இடம்பெறவுள்ளது. இதற்கு இலங்கை அரசு விசாரணைக்குழு அமைப்பதாக கூறுகின்றது. இது கண்துடைப்பு வேலையாகவுள்ளது. இவ்வாறான பல விசாரணைக்குழுக்கள் முன்னர் அமைக்கப்பட்டு இது வரையில் எதுவித தீர்வுகளும் வழங்கப்படவில்லை' என்றார். 'ஆகையால் சர்வதேசம் இதில் நேரடியாகத் தலையிட வேண்டுமென்றும் அதன் மூலமும் மக்கள் அச்சமி…

    • 4 replies
    • 540 views
  13. அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், வரும் 10ம் நாள் கொழும்பு வரவுள்ளதால், சிறிலங்கா வெளிவிகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தமது மத்திய கிழக்கு சுற்றுப் பயணத்தை சுருக்கிக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நாளை, மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். முதலில், பலஸ்தீனம் செல்லும் அவர், அங்கிருந்து இஸ்ரேல், மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார். எனினும், இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 10ம் நாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாடு திரும்புவார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித…

  14. யாழ். வசாவிளான்,கோணாவளைப் பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்று நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த 6 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியிலுள்ள பிரார்த்தனை கூடத்திற்கு முன்னால் நின்று கதைத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீதே, மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்று வாள்களால் வெட்டிக் காயப்படுத்தியது. இதில் வசாவிளான் செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த திலப் துஷாந்தன் (18), வல்லிபுரம் ரூபவதனன் (28) குழந்தைவேல் கலியுகவரதன் (45), முத்துலிங்கம் ஜெகநாதன் (30), துஷாந்தன் குணசீலன் (18), திலீப் ஜெயரூபன் (21) ஆகியோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்திய மர்…

  15. (s.vinoth) மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இது வரை 11 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் குறித்த பகுதியில் உள்ள மனித புதைகுழி தோண்டப்பட்டது. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 8 மணிமுதல் மாலை 2.15 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டு மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டது. ஏற்கனவே 11 மனித எழும்புக்கூடுகள் முழுமையாகவும்இ சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 4 மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதே …

  16. நாடு திரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2013ம் ஆண்டில் வெளிநாடுகளில் புகலிடம் கோரி சென்றவர்களில் சொற்ப அளவிலானவர்களே இலங்கை திரும்பியுள்ளனர். அதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கை 51 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. 2011ம் ஆண்டு முதல் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2012ம் ஆண்டில் சுய விருப்பின் அடிப்படையில் 1480 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்பியுள்ளனர். எனினும், 2013ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 718ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 2013ம் ஆண்டு புள்ளி விபரத் தகவல்களி;ன் அடிப்படையில் உலகம் முழுவதிலும் 124…

  17. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் ஆலோசனைக்குழு ஒன்று இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் சாத்தியம் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரமளவில் இந்தக் குழு கொழும்புவரும் எனத் தெரிய வருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை பயணத்துக்குப் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து மார்ச் தொடரில் அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கிலேயே இந்தக் குழுவின் பயணம் அமையவுள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே தமது உயர்மட்ட ஆலோசனைக் குழுவை ஐ.நா.ஆணையர் நவநீதம்பிள்ளை கொழும்புக்கு அனுப்புகிறார் எனக் கூறப்பட்டாலும் இதை அவர் இ…

  18. சிறிலங்காவில் தாம் அரசியல் ரீதியான மிரட்டல்களுக்கு உள்ளாகியுள்ளதாக, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று கனேடிய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவேன் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தாம் பிறந்த நாட்டை அறிந்து கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ராதிகா சிற்சபேசனுடன் தொலைபேசியில் உரையாடிய அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் போல் டேவர், ராதிகாவை சிறிலங்கா அதிகாரிகள் பின்தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள், …

  19. ஈரானிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாது என இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. எவ்வாறெனினும், ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு சலுகை வழங்கியிருந்தது. எனினும், ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மசகு எண்ணெய் இறக்குமதி தொடர்பில் அமெரிக்காவுடன் இலங்கை பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கு உலகத் தலைவர்கள் அண்மையில் இணக்கம் வெளியிட்டிருந்தனர். எனினும், மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஈரானுக்…

  20. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஈ.பி.டி.பி.யின் கருத்தை காவல்துறையினர் நிராகரித்துள்ளனர். யாழ்ப்பாண குடாநாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும், சமூக விரோத செயல்கள் இடம்பெறுவதாகவும் ஈ.பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார். யாழ்ப்பாண குடாநாட்டின் காவல்துறைப் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். கேரள கஞ்சா போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை காவல்துறையினர் மறுத்துள்ளனர். ஈ.பி.டி.பி. கட்சி யாழ் குடாநாட்டின் நிலைமைகளை பிழையாக விளங்கிக. கொண்டுள்ளதா…

  21. தனியார் பஸ்களில் தொந்தரவுகளுக்கு முகம் கொடுக்கும் பயணிகள் முறையிடுவதற்கு விசேட தொலைபேசி இலக்கத்தையும் 'ஸ்கைப்' விலாசத்தையும் தனியார் போக்குவரத்து அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்பிரகாரம் தொந்தரவுகளுக்கு முகம்கொடுக்கும் பயணிகள் privatetrasportservices என்ற ஸ்கைப் விலாசத்துக்கு இன்றேல் 0716550000 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிடலாம். இதற்கென தனியார் போக்குவரத்து அமைச்சில் விசேட நடவடிக்கை நிலையமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சு அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/95384-2014-01-02-09-11-31.html

  22. வன்னியில் இயங்கும் சிறுவர் இல்லங்களின் சிறுவர்களுக்கான புதுவருட விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்வுகளும் நேற்று புதன்கிழமை (01.01.14) நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் முள்ளியவளை பாரதி இல்லம், முத்தையன்கட்டு அன்பு இல்லம், கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆகியவற்றின் சிறுவர்கள் பங்குபற்றியிருந்தனர். இவற்றில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், விருந்தினர்களாக நீடோ நிறுவனத் தலைவர் செல்வராசா பத்மநாதன் (கே.பி. - குமரன் பத்மநாதன்), முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ம.கணேசராஜா, ஒட்டுசுட்டான் பிரதேச சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் எஸ்.இந்திரகுமார், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆசிரியர் எஸ்.ரி.குமரன், மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆசிரியர்…

  23. முல்லையில் ரவிகரனுடன் சென்ற மக்கள் நில அபகரிப்பைத் தடுத்து நிறுத்தினர். கனரக இயந்திரத்தையும் கைவிட்டு சிங்களவர் தப்பி ஓட்டம். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் அரச ஆதரவுடன் இடம்பெற்ற அப்பட்டமான நில அபகரிப்பை , வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் சென்ற மக்கள் இடைநிறுத்தியுள்ளனர். இதே வேளை, நேற்றைய தினம் அங்கு சென்ற மக்களை திருப்பி அனுப்பிய சிங்களவர்கள் , இன்று மக்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனும் வருவதை அறிந்து கனரக இயந்திரத்தை காட்டுக்குள் மறைத்து வைத்து விட்டு தப்பி ஓடினர். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது ,முல்லைத் தீவு கொக்குத்தொடுவாயில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் 345 ஏக்கர் தமிழர் நிலம், அர…

  24. காணமாற்போன உறவுகள் தொடர்பாக இலங்கை அரசு விசாரணைக்குழு அமைக்கப்படுமொன்று சர்வதேசத்திற்கு கூறி வருவது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை மாநாடு இடம்பெறவுள்ளது. இதற்கு இலங்கை அரசு விசாரணைக்குழு அமைப்பதாக கூறுகின்றது. இது கண்துடைப்பு வேலையாகவுள்ளது. இவ்வாறான பல விசாரணைக்குழுக்கள் முன்னர் அமைக்கப்பட்டு இது வரையில் எதுவித தீர்வுகளும் வழங்கப்படவில்லை' என்றார். 'ஆகையால் சர்வதேசம் இதில் நேரடியாகத் தலையிட வேண்டுமென்றும் அதன் மூலமும் மக்கள் …

  25. நான் ஒரு தூயபௌத்தன். பௌத்த மதக்கோட்பாடுகளையும், புத்த பெருமானுடைய போதனைகளையும் முழுமையாக கடைப்பிடித்து வருபவன். பௌத்த மதக்கோட்பாடுகளுக்கமைய சகல இனமக்களையும் ஒன்றாகவே மதிக்கின்றேன். சகல மதங்களும் நல்லனவற்றையே போதிக்கின்றன. சரியான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளாமல் ஒரு மதத்தை நிந்திப்பதை நான் முழுமையாக எதிர்க்கின்றேன். புத்தபெருமான் உலகில் வாழும் அனைத்து மக்களையும் ஒன்றாகவே மதித்தார்கள். எந்தவொரு மனிதனுக்கோ, மதத்துக்கோ, வேறுபாடு காட்டக்கூடாது. அவ்வாறு காட்டுவது தான் ஹராம்...'' என ஹலாலுக்கு சார்பாக குரல் கொடுத்தமைக்காக பொது பலசேனாவினால் தாக்குதலுக்கு உட்பட்டவரும், மஹியங்கனை ரொட்டலிவள விகாரையின் தலைமை பிக்குவும், மஹியங்கனை உள்ளுராட்சி சபையின் உறுப்பினரும், ஸ்ரீலங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.