ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
இந்திய முறையிலான வேட்பாளருக்கு ஆதரவளிக்குக!! (யோகி) இந்திய முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க ஒன்றாக வேண்டும் எனவும், அதற்காக எந்த தரப்புடனும் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்குக்கு வந்து 13ம் திருத்தம் தீர்வு என கூறும் போது, தெற்கில் இலங்கை எரியும் என்கிறார்கள். 13ம் திருத்தம், கூட்டாட்சி எனக் கூறுவதால் தெற்கில் எதிர்ப்புக்கள் அதிகரிக்கும் என்பதை அறியாத அரசியல் தலைவர்களாக உள்ளனர். …
-
- 0 replies
- 162 views
-
-
வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த இடங்கள் எதிர்கால அரசியல் நோக்கத்தில் இனவாத அடிப்படையில் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் இது தொடர்பில் அமைச்சரவையில் ஏதாவது தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளனவா என்று சுயாதீன எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை(19) பௌத்த சாசன அமைச்சு மற்றும் வன பாதுகாப்பு, வனஜீவராசிகள் அமைச்சிடமே இவ்வாறு கேள்வியெழுப்பிய ரதன தேரர் மேலும் கூறுகையில், தற்போது வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த இடங்கள் வர்த்தகர்களுக்கு இனவாத அடிப்படையில் எதிர்கால அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்படவுள்ளதாக அங்குள்ள தேரர்கள் மற்றும் மக்கள் எங்களுக்கு அறிவித்துள்…
-
- 1 reply
- 382 views
-
-
Published By: VISHNU 20 JUN, 2024 | 07:06 PM வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 தமிழ் அரசியல் தலைவர்கள் ஒருமித்து சந்தித்து கலந்துரையாடினார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர். இச் சந்திப்பில் சாணக்கியன், எம்.ஏ. சுமந்திரன், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். சந்திப்பில் ஈடுபட்ட தலைவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்களை ஒரு…
-
- 3 replies
- 396 views
-
-
20 JUN, 2024 | 11:51 AM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்த வேளை, 200 லீட்டர் கோடா மற்றும் 06 லீட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். அத்துடன் , குறித்த வீட்டில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட அளவெட்டி பகுதியை சேர்ந்த 31 வயதான நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள…
-
- 0 replies
- 244 views
-
-
20 JUN, 2024 | 01:25 PM இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணைஅனுசரணை வழங்கிய நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 56 அமர்வில் கனடா மலாவி மொன்டிநீக்ரோ வடமசடோனியா ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமை தூதுவர் ரிட்டா பிரென்ஞ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் மிக நீண்டகாலமாக காணப்படுவதை வெளிப்படுத்திய இலங்கையின் பலவந்தமாக காணாமல்போதல் கு…
-
- 0 replies
- 354 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்புக்களை இந்தியாவுக்கு வழங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் விஜயத்தின் உண்மை நோக்கமென்ன என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளார். மணித்தியால அளவில் இந்த விஜயம் ஏன் அமைய வேண்டும். ஆட்பதி…
-
- 1 reply
- 400 views
-
-
யாழ்ப்பாணத்தில் மனைவியை தீ மூட்டி எரித்து படுகொலை செய்த கணவனுக்கு யாழ். மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி மானிப்பாய் காக்கை தீவு பகுதியில் குடும்ப பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் கணவனை கைது செய்து யாழ். நீதாவன் நீதிமன்றில் முற்படுத்தினர். நீதவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, 2019ஆம் ஆண்டு யாழ். மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. விசாரணைகள் முடிவடைந்த நிலையி…
-
- 0 replies
- 457 views
-
-
20 JUN, 2024 | 06:22 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் விஜயத்தால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மண் அகழ்வு குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அரசியல் நலன் சார்ந்தே இந்த விஜயம் அமைந்துள்ளது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (20) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய பிரதமரின் இலங்கை வருகையை ஒட்டி தனது அரசியல் இ ருப்பை நிலைநிறுத்திக்கொள்ளும் விவகாரத்துக்காக மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். …
-
- 1 reply
- 407 views
-
-
குருந்தூர்மலை பகுதியில் விஷேட பாதுகாப்புடன் பாதயாத்திரை! முல்லைத்தீவு, குருந்தூர்மலை பகுதியில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார், விஷேட அதிரடிபடையினரின் விஷேட பாதுகாப்புடன் பிக்குகள் உள்ளிட்ட பௌத்தர்கள் இன்று பாதயாத்திரை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு, குருந்தூர்மலை நோக்கி பாதயாத்திரை சென்ற தேரர்கள் குழு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் பாதுகாப்பும் பலம் முல்லைத்தீவு, குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்றத்தின் அனுமதியை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பிக்குகள் உள்ளிட்ட பௌத்தர்கள் குழுவினர் இன்று பொலிஸார், விஷேட அதிரடிபடையினரின் பாதுகாப்புடன் பாதயாத்திரை ஒன்றினை மேற்கொண்டனர். பொசோன் பௌர்னமி தினத்தை முன்னிட்ட…
-
- 0 replies
- 192 views
-
-
மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை இலங்கை அரசு செயற்படுத்த வேண்டும்! ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் இலங்கைத் தொடர்பான இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளினால் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், இலங்கை அரசாங்கம் தாம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என விசேடமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதலால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் அனைத்து சமூகங்கள் மீதான அதன் தாக்கத்தையும் நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளைச் செயற்…
-
- 0 replies
- 147 views
-
-
Published By: RAJEEBAN 20 JUN, 2024 | 11:29 AM எல்ஜிபிடிகியு சமூகத்தினரையும்; பால்புதுமையினரின் உரிமைகளையும் ஊக்குவிக்கும் சட்ட மூலத்தினால் உள்ளுர் கலாச்சாரத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என அகில இலங்கை பௌத்தகாங்கிரஸ் எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பெண்களை வலுப்படுத்தும் சட்டமூலத்தையும் பாலின சமத்துவ சட்டமூலத்தையும் கடுமையாக விமர்சித்துள்ள அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் இந்த சட்டமூலம் எல்ஜிபிடிகியு சமூகத்தினரையும்; பால்புதுமையினரின் உரிமைகளையும் ஊக்குவிக்கும் உள்நாட்டு கலாச்சாரம் நெறிமுறைகள் விழுமியங்களை சமரசம் செய்யும் என தெரிவித்துள்ளது. மேற்குலகில் கூட பிள்ளைகள் பால் மாற்றத்தில் ஈடுபடுவதை பெற…
-
-
- 3 replies
- 254 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 20 JUN, 2024 | 09:13 AM வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய மன்னார் மாவட்டம் விடத்தல் தீவு இயற்கை சரணாலயம் என குறிப்பிடப்பட்ட பகுதி நிறைவுக்கு வருவதாக கடந்த மே மாதம் 6 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இவ்வாறு விடத்தல் தீவு பகுதியில் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் கடல்சார் பூங்கா/கடல் வேளண்மைக்கு விடுவிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக,…
-
- 0 replies
- 454 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 20 JUN, 2024 | 08:47 AM யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இன்று வியாழக்கிழமை (20) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது, குறித்த சம்பவத்தை தொடர்ந்து இரு குழுக்களுக்கு இடையே இன்றையதினம் அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் நெடுந்தீவு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தின் போது, 23 வயதுடைய அன்ரன் ஜீவராஜ் அமல்ராஜ் எ…
-
- 2 replies
- 325 views
- 1 follower
-
-
சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க சுமந்திரன் முடிவெடுத்துவிட்டாா் – சிறீகாந்தா தெரிவிப்பு June 20, 2024 “தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் அதனை முற்றாக எதிர்ப்பதாகவும் அதை நிச்சயம் தோற்கடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். அதற்குக் காரணம் அவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதற்கு ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார். இந்த விடயத்தில் சம்பந்தன் ஒரு செல்லாக்காசு” என்று கூறியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறீகாந்தா. தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடா்பில் மேலும் கருத்துத் தெரிவித்த சிறீகாந்தா, “பொது வேட்பாளர் வி…
-
- 0 replies
- 195 views
-
-
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்பிப்பு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மலாவி, மொன்டனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56வது கூட்டத்தொடருடன் இணைந்து நேற்று (19) இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பொறுப்புக்கூறல் அறிக்கைக்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மனித உரிமைக…
-
- 0 replies
- 222 views
-
-
19 JUN, 2024 | 04:37 PM புதிய மகசீன் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (18) காலை நேரில் சந்தித்து உரையாடினார். குறிப்பாக, புதிய மகசீன் சிறைச்சாலைக்குச் சென்று 15 வருடங்களாக அரசியல் கைதியாக கொடுஞ்சிறையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுருக்கும் கிருபாகரனுடன் (மொறிஸ்) தமிழ் அரசியல் கைதிகள் முகங்கொடுத்து வருகின்ற நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடி இருந்தார். அதன்பின்னர் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் முகங்கொடுக்கும் நெருக்கடிகள் தொடர்…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்கவும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் நீடிக்கப்பட்டது. https://thinakkural.lk/article…
-
- 1 reply
- 293 views
- 1 follower
-
-
44 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் இருக்கும் பாதுகாப்பு படையின் தலைமையகங்களில் இரண்டு முக்கிய தலைமையகங்கள் அகற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒரு பகுதி வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கும் மற்றொன்று யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளன. மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கரா என்பவர் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாகவும், மேஜர் ஜெனரல் விக்ரமசிங்கே யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதியாகவும் உள்ளனர். போர்ச்சூழல் காரணமாக 40 வருடங்களுக்கும் மேலாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி…
-
-
- 9 replies
- 1.4k views
- 2 followers
-
-
19 JUN, 2024 | 06:44 PM பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப்பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், 20ஆம் திகதி வியாழக்கிழமை அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கையின் பெருங்கற்கால பண்பாடுகள் நிறைந்ததாகக் கருதப்படும் ஆனைக்கோட்டையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு பகுதியில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர்களான இரகுபதி மற்றும் இந்திரபாலா ஆகியோர் 1980ஆம் ஆண்டுகளில் முன்னெடுத்த அகழ்வாய்வு மற்றும் மேலாய்வுகளில் இது பெருங்கற்கால பண்பாடு என உறுதிப்படுத்தும் வகையில் சான்றுப் பொருட்கள் கிடைக்கப்பெற்ற…
-
-
- 2 replies
- 402 views
-
-
இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்கும் பொருளாதார கட்டுப்பாடுகளின் பாதகமான விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கருத்து தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் பூகோள ரீதியிலான நிலைமை அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அதனுடன் தொடர்புடைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் ஏழ்மையான மற்றும் வறுமை கோட்டிலுள்ள மக்களை அதிகம் பாதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் 2021 மற்றும் 2023க்கு இடையில் வறுமை விகிதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25.9 சதவீதம் வரை இரட்டிப்பாகியுள்ளது. மேலும் இவ்வாறான நிலை அடுத்த சில ஆண்டுகளுக்கு இதே மட்டங்களில் தொடரும் என எதிர்…
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 19 JUN, 2024 | 04:17 PM இந்த தேர்தலில் எங்களிற்கு இருக்கின்ற ஒரு வழியாக மிக முக்கியமான வழியாக எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத சிங்கள தலைவர்களை அவர்கள் கொண்டுவருகின்ற இந்த தேர்தலில் புறக்கணிக்கவேண்டும் என்ற சிந்தனை காணப்படுகின்றது என சமூக அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். மக்கள் போராட்ட முன்னணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறித்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. மக்கள் போராட்ட முன்னணிக்கு வடகிழக்கு மக்கள் போராட்ட ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆதரவை நான் தெரிவித்துக்கொள்கின்றேன். ம…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 19 JUN, 2024 | 02:29 PM யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்ட சென்ற போது, புடையன் பாம்பு தீண்டியுள்ளது. அதனை அடுத்து யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/186459
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 19 JUN, 2024 | 12:45 PM எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக அரகலய போராட்ட குழுவினர் மக்கள் போராட்ட முன்னணி என்ற புதிய அரசியல் இயக்கத்தினை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் மாணவ செயற்பாட்டாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரகலய செயற்பாட்டாளர் லகிரு வீரசேகர அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியங்களிற்கு இடையிலான முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே முன்னணி சோசலிச கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சட்டத்தரணி நுவான்போபகே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் இ…
-
- 1 reply
- 405 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 19 JUN, 2024 | 01:47 PM யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கிய தண்ணீர் பவுசரை பொலிஸார் தடுத்து வைத்திருப்பதனால், காரைநகர் பகுதி மக்கள் குடிநீருக்கு அல்லல்பட்டு வருகின்றனர். காரைநகர் பிரதேச சபைக்கு சொந்தமான தண்ணீர் பவுசர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, கல்லுண்டாய் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் விபத்துக்குள்ளானது. விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் விபத்துக்குள்ளான வாகனங்கள் இரண்டையும் பொலிஸ் நிலையம் எடுத…
-
- 0 replies
- 305 views
- 1 follower
-
-
ஜப்பான் முழுவதும் தற்போது பரவிவரும் “சதை உண்ணும் பக்டீரியா“ நோய் தொடர்பாக இலங்கை மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை சுகாதார அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். ஜப்பான் நாட்டை பொறுத்தவரை இந்த நோயால் சுமார் 1000 மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சமிதாகினிகே, இந்த நோய் கடுமையாக பாதிப்புக்களை ஏற்படுத்தினாலும் இது ஒரு அசாதாரணமான நிலை அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வைத்தியர், பல்வேறு வகையான பக்டீரியாக்கள் அடிக்கடி பொதுமக்கள் மத்தியில் பரவுகின்ற போதிலும் அதில் சில வகையான பக்டீரியாக்கள் சிகிச்சையளிக்க கூடிய…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-