Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு மற்றும் தமிழ் பொது வேட்பாளர் குறித்த சாதகத் தன்மைகள் குறித்தும், ஈழத்தமிழர்கள் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது, காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள தென்னாபிரிக்கா, ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப் படுகொலைக்கும் சர…

  2. ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து), அமெரிக்கா (அமெரிக்கா), கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சவூதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, உட்பட 35 நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்கு வீசா இன்றி பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தென் கொரியா, மற்றும் ஜப்பான். இந்த புதிய விசா இல்லாத கொள்கை அக்டோபர் 01, 2024 முதல் நடைமுறைக்கு வரும், மேலும் இது ஆறு மாத காலத்திற்கு அமலில் இருக்கும். List of countries to be offered visa-free access to Sri Lanka: 1. United Kingdom 2. Germany 3. Netherlands 4. Belgium 5. Spain 6. Australia 7. Denmark 8. Poland 9. Kazakhstan 10. Saudi Arabia 11. UAE 12. Nepal 13. China 14. India 15. Indonesia 16. Russia 17. Thaila…

  3. இலங்கை இராணுவம் புதிதாக காணிகளை கைவசப்படுத்துவதை நிறுத்தவேண்டும் - நிலங்களை விடுவிக்கவேண்டும் - ஐநா Published By: RAJEEBAN 22 AUG, 2024 | 02:50 PM இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்துதலை நிறுத்தவேண்டும் என என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் மனித உரிமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் இடம்பெற்;றுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் காணிகளை விடுவித்தல், வடக்குகிழக்கில் புதிதாக காணிகளை கைவசப்படுத்தலை ந…

  4. 22 AUG, 2024 | 03:15 PM (எம்.மனோசித்ரா) அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'USS Stockdale ' என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இன்று வியாழக்கிழமை (22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர். இக்கப்பல் 155.3 மீட்டர் நீளமுடையதாகும். லாரன் ஜான்சன் இதன் கட்டளை அதிகாரியாக செயற்படுகின்றார். விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், இக்கப்பல் நாளை வெள்ளிக்கிழமை (23) கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட உள்ளது. https://www.virakesari.lk/article/…

  5. 2023 மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும், நிதியமைச்சரும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பெஃப்ரல் அமைப்பு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பின் போதே, மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் …

  6. நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த கோணப்பிட்டிய, சீனாக்கொலை தோட்டத்தில் கொலைசெய்து புதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்தே குறித்த பெண்ணின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சிவலிங்கம் தர்ஷனி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றும் ஒருவர் பிரதேசத்தை விட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மந்தாரநுவர பொல…

  7. பொது வேட்பாளர் நோக்கத்துக்காக களத்திலும் புலத்திலும் கைகோர்ப்போம்! Hi ஆகஸ்ட் 22, 2024 “காக்காண்ணை”, என்று அறியப்பட்ட முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் மாவீரர் அறிவிழியின் தந்தை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் போட்டியிட வேண்டிய அவசியம் பற்றிப் போதுமானளவு விடயங்கள் மக்களிடம் முன்வைக்கப்பட்டாயிற்று. எனவே, மேற்கொண்டு ஆற்றவேண்டிய விடயங்கள் தொடர்பாக சிலவற்றை மக்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை இறுக்கமாகப் பற்றிக் கொண்டதால் மாவீரரான எமது செல்வங்களின் குடும்பத்தினரும், முன்னாள் போராளிகள் குடும்பத்தினரும், எப்போதும் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு உறுதுணையாக எமது மக்களும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.…

  8. 5ஆம் ஆண்டு மாணவிகளுக்கு தவறான படங்களை காண்பித்த அதிபர் கைது! Vhg ஆகஸ்ட் 22, 2024 மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கையடக்க தொலைபேசியில் தகாத படங்களை காட்டி வந்த குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 57 வயதுடைய பாடசாலை அதிபரையே நேற்று (21-08-2024) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் 3 மாணவிகள், 3 மாணவன்கள் உட்பட 6 பேர் கல்விகற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த மாணவர்கள் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலை…

  9. வவுனியா வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் PrashahiniAugust 22, 2024 வவுனியா வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மரணித்த சிசுவின் உறவினர்கள் மற்றும் பொது மக்களால் நேற்று (21) மாலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலையின் முன்பாக வீதியில் அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வவுனியா வைத்தியசாலை வைத்தியர்களின் அசமந்தத்தால் மரணித்த சிசுவிற்கு நீதி வேண்டும் எனவும், வைத்தியசாலையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை. சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண இது தொடர்பில் கவனம் செலுத்தி ஒரு விசாரணை குழுவை அமைத்து பாதிக்கப்பட்ட…

  10. 35 நாடுகளுக்கு இலவச விசா. 35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்குப் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு இந்த வாய்ப்பு குறித்த நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்குப் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், அவுஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஸகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, செக்குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ்,…

  11. Published By: VISHNU 22 AUG, 2024 | 02:59 AM தன்னையும் தனது குழுவில் உள்ளவர்களையும் வைன் ஸ்டோர்களையும், மதுபான சாலை அனுமதி பத்திரங்களையும், சலுகைகளையும் வரப்பிரசாதனங்களையும் காட்டி விலைக்கு வாங்க முடியாது. பணத்துக்கும் பதவிகளுக்கும் எனது சுய கௌரவத்தை காட்டி கொடுத்து ஏலத்தில் செல்வதும் இல்லை. தான் இந்த நாட்டை விற்கவோ, ஏலத்தில் விடவோ, இந்த மக்களை காட்டிக் கொடுக்கவோ ஒருபோதும் முற்படுவதில்லை. எனவே என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் எட்டாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கட…

  12. 21 AUG, 2024 | 06:53 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தல் செயற்திட்டத்திற்காக எதிர்வரும் வருடங்களில் அதிகளவு நிதியை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அதேவேளை, ஆரம்ப சுகாதார சேவைக்கு ஒதுக்கப்படும் நிதியை அடுத்த வருடத்தில் மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மேலாக நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும். பாராளுமன்றத்தில் வாய்மூல விடை க்கான வினாக்கள் வேளையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹிணி குமாரி கவிரத்ன எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு…

  13. Published By: DIGITAL DESK 7 21 AUG, 2024 | 06:38 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான் ) உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் மாத்திரம் 1680 பில்லியன் ரூபாவை திரட்டிக் கொண்டுள்ளன. மதுவரி திணைக்களம் பிரதான மதுபான நிறுவனங்களிடமிருந்து 7.9 பில்லியன் ரூபா வரியை இதுவரை அறவிடவில்லை என பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற அமர்வின் போது வழிவகைகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் அறிக்கையை சபைக்கு முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …

  14. Published By: VISHNU 22 AUG, 2024 | 02:29 AM (இராஜதுரை ஹஷான்) தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன். தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாப்பேன். மொழி உரிமையும் வழங்குவேன். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை ஒன்றிணைத்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது கன்னி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் புதன்கிழமை (21) அநுராதபுரம் நகரில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்த…

  15. எனது ஆட்சியில் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்! -அநுர திசாநாயக்க- “நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய வகையிலான புதிய அரசியலமைப்புச் சட்டமொன்று தமது அரசாங்கத்தில் உருவாக்கப்படுமென” தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அக்குறணையில் நேற்றிரவு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் கடந்த கால வரலாற்றில் ஒன்றுக்கொன்று எதிராக அரசாங்கங்களே மாறி மாறி ஆட்சி அமைத்திருந்தன. 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல் பிரசாங்களின் ப…

  16. 21 AUG, 2024 | 05:44 PM புத்தளத்தில் இரு வெவ்வேறு பகுதிகளில் இரு யானைகள் உயிரிழந்துள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எரந்த கமகே இன்று (21) தெரிவித்தார். அதன்படி, புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் 30 வயதுடைய யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதேவேளை, புத்தளம், வண்ணாத்தவில்லு பிரதேசத்தில் வீடொன்றிற்கு பின்புறத்தில் உள்ள காணியொன்றில் மின்சாரம் தாக்கி 30 வயதுடைய யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த காணியின் உரிமையாளர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக தனது காணியில் …

  17. 21 AUG, 2024 | 06:40 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த நாட்டில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. நாட்டுக்கு சுமையாக உள்ள நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமையை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும், அதற்கான சூழல் தோற்றம் பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (21) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ஊழலற்ற அரச நிர்வாகத்தை தோற்றுவிப்பதற்காகவே கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரச நிர்வாகத்தை தோற்ற…

  18. வட மாகாண வைத்தியசாலைகளுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர். வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள், அரச மருந்தகங்கள் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல் அடங்கிய பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாகாண சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், நோயாளர்களும், வைத்தியர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சேவையை பெற்றுக் கொள்வதில் தாமதம் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர…

  19. புளொட் – ஸ்ரீ ரெலோ முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ரணிலுடன் விசேட சந்திப்பு! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமான புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும் முன்னாள் வவுனியா நகர சபை தலைவராகவும் மாகாண சபை உறுப்பினராகவும் இருந்த ஜி.ரி.லிங்கநாதன் இன்று ஸ்ரீ டெலோ அணியினருடன் இணைந்து ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஸ்ரீ டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசா உட்பட முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் புளொட் முக்கியஸ்தருமான ஜி. ரி. லிங்கநாதன் உள்ளிட்ட பல முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1396668

    • 1 reply
    • 249 views
  20. மன்னாரில் இளம் தாய் மரணமடைந்த விவகாரம்: வைத்தியர் பணி இடை நீக்கம்! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனயீனத்தால் சிந்துஜா எனும் இளம்தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா எனும் இளம் தாய், அதிக இரத்தப்போக்கு காரணமாக கடந்த மாதம் 28 ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது, அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்குரிய முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வைத்தியர்களின் இந்த அசமந்த போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்…

  21. ரணிலுக்கு வாக்களிக்காததே நெருக்கடிக்கு காரணம் – விஜயகலா! 2005ல் ரணிலுக்கு வாக்களிக்காததால் இத்தனை இழப்புக்களையும் சந்தித்தோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தெரிவிக்கையில், கொரோனா மற்றும் பொருளாதாரத்தினால் வீழ்ச்சியைடைந்திருந்த இந்த நாட்டை கடந்த இரண்டு வருடங்களில் எவ்வாறு நாட்டை மீட்டார் என்பதை இந்த நாடும் உலகமும் அறிந்த பெருமைக்குரிய நல்ல தலைவராக ரணில் விக்ரமசிங்க உள்ளார். அது மாத்திரமல்ல, ஆசியாவிலேயே சிறந்த தலைவராக ரணில் விக்கிரமசிங்க விளங்குவதாக அமெரிக்க தூதுவ…

  22. Published By: VISHNU 21 AUG, 2024 | 01:57 AM வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் நிலை தேறி வருவதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரையண்டிய பிரபல பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் பாடசாலைக்கு முன்பாகவுள்ள கடை ஒன்றின் அருகிலிருந்த ஒதுக்கு புறமான இடம் ஒன்றிற்குச் சென்றுவிட்டு மீண்டும் பாடசாலைக்குள் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் குறித்த மாணவன் தொடர்ச்சியாக வாந்தி எடுத்தமையால் பெற்றோருக்கு தெரியப்படுத்தி அவர்கள் ஊடா…

  23. Published By: VISHNU 21 AUG, 2024 | 02:25 AM கெரவலப்பிட்டிய "சொபாதனவி" ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்திற்கு திரவ இயற்கை எரிவாயு சேமிப்பிற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், எல்என்ஜி எரிவாயுபரிமாற்றம் மற்றும் விநியோகம் தொடர்பில் இலங்கை எல்.டி.எல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கை எல்ரீஎல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நுஹுமான் மரிக்கார் மற்றும் இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஐி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் மு…

  24. Published By: DIGITAL DESK 3 21 AUG, 2024 | 09:04 AM மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (20) மாலை அவசர கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியசாலை பணிப்பாளர், அருட்தந்தையர்கள், வைத்திய நிபுணர்கள் ,சிவில் சமூக பிரதிநிதிகள், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் எதிர்க…

  25. தென்னிலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமிக்க நபராக காணப்பட்ட முன்னாள் இராணுவ தளபதியும், சமகால ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகாவின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்சேகாவின் குறித்த கூட்டத்திற்கு ஐந்து பேர் கூட வராதமை பெரும் ஏமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. பிரச்சார கூட்டம் மேடையில் பொன்சேகா உட்பட சுமார் 10 பேர் இருந்தனர். மேலும் மேடையின் முன் இருக்கைகளில் யாரும் அமரவில்லை. அத்துடன், பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.