Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொதுநலவாய மாநாட்டுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு! இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர்ப்பதாக கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் பொதுநலவாயத்தின் நியமங்களை மீறியுள்ளது. அதனால்தான் நாம் இதை எதிர்க்கின்றோம். பொதுநலவாயத்தின் அடிப்படை கோட்பாடுகளை அரசாங்கம் மீறியதற்கு பிரதம நீதியரசரை பதவி நீக்கியமை ஒரு நல்ல உதாரணமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவதில்லை என கனடா எடுத்துள்ள முடிவை பாராட்டிய அவர் இந்திய அரசாங்கமும் இந்த முன்மாதிரியை பின்பற்ற…

  2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண உறுப்பினர்கள் ஒன்பது பேர் முல்லைத்தீவில் நாளை திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவிருந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் எனவும், புறக்கணித்த கட்சிகளிடம் ஆயர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், இந்த ஒன்பது உறுப்பினர்களும் வட மாகாண சபையின் முதலாவது அமர்வின்போது முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், http://tamilworldtoday.…

  3. 'பயங்கரவாதத்தை அடக்குவது அடிப்படை உரிமை மீறலாகாது' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 அக்டோபர், 2013 - 12:07 ஜிஎம்டி தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் வவுனியா சிறைச்சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலையடுத்து தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ்க் கைதி நிமலரூபனின் பெற்றோர் தாக்கல்செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினை இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இன்று திங்கட்கிழமை மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நிமலரூபனின் மரணத்திற்கான காரணங்களை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ், சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரமொன்றை அடக்கும் போது இவ்வாறான மரணங்கள் ஏற்ப…

  4. தோழர் தியாகுவின் உடல் நிலை கவலைக்கிடம் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர் தியாகு அவர்கள் சென்னையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இன்று 14 ஆவது நாளாகவும் தோழர் தியாகு உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றார். சாகும் வரையான உண்ணாவிரதத்தை கைவிட திரு.தியாகு அவர்கள் மறுத்து வருகின்றார். இனியும் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடர்ந்தால் அவருடைய உறுப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்படுவதுடன் இனி எந்த நொடியிலும் அவருக்கு திடீர் மரணம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இனியும் பொறுமையுடன் இருந்தால் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரையும் இழந்துவிட வேண்…

  5. தோல்வியை ஒப்புக் கொண்ட நிலையில், அரசாங்கம் ஏன் இன்னும் முரண்டுபிடிக்கிறது - எரிக்சொல்ஹேய்ம் இறுதி போரின் போது, உலகின் மிகப்பெரிய அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையே தமது தோல்வியை ஒப்புக் கொண்ட நிலையில், அரசாங்கம் ஏன் இன்னும் முரண்டுபிடிக்கிறது என்று, இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹேய்ம் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் நிறைடைந்த யுத்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாக கட்டமைப்பு முறையாக செயற்படவில்லை என்பதை, அதன் உள்ளக அறிக்கை நிரூபித்துள்ளது. இந்த நிலையில் அதனை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் ஒப்பு கொண்டுள்ளார். ஆனால் இலங்கை அரசாங்கத்தின் மீதான மனித உரிமை மீறல்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் ஏன் இன்னும் தங…

  6. தமிழர்களின் சுயாட்சியை வென்றெடுக்கும் ஆளுமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது என்கிறார் சிதம்பரம் தமிழர்களின் சுய ஆட்சியை வென்றெடுக்கும் ஆளுமை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிதி அமைச்சர் பி.சிதம்பரம் இதனை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 25 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி பெற்றது. இது வரலாற்று சாதனையாகவே கருதப்பட வேண்டும். இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வழங்குகின்ற ஆதரவின் அடிப்படையில், தமிழர்களுக்கும், ஏனைய சிறுபான்மையினருக்குமான சுயஆட்சி, சுயகௌரவம், சமஉரிமை மற்றும் அதிகார பகிர்வு போன்ற விடயங்களை தமிழ் …

  7. புளொட்டின் வட மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்- 14 அக்டோபர் 2013 தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உயர்பீடம் இன்று முற்பகல் யாழ் கந்தரோடையில் சந்தித்து கலந்துரையாடியது. இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் மற்றும் இது தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதுடன், இந்த வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்தவகையில் புளொட்டின் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் கட்சியின் செயலாளர் சு.சதானந்தம் (ஜே.பி.) அவர்களின் முன்னிலையில் இன்று வட மாகாணசபை உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்து…

  8. இலங்கை விவகாரம் குறித்த மீளாய்வு அறிக்கைப் பரிந்துரைகள் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கை இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற போது ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுமக்கள் பாதுகப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அமைப்பின் மனிதாபிமான மீட்புப் பணிகள் தொடர்பில் மீளாய்வு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தவிர்க்கப்பட வேண்டியவை குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை விவகாரங்களின் போது எதிர்காலத்தில் இந்த அறிக்கையை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.…

  9. திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 அதிரடிப்படையினரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி திருகோணமலை கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த பல்லைக்கழக மாணவர் உட்பட 5 தமிழ் மாணவர்கள்இ அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில்இ இப்படுகொலைச் சம்பவம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் 12 விசேட அதிரடிப்படையினர் கடந்த ஜுலை 5ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் பிணை மனு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது 12 சந்தேக நபர்களையும் தலா 50 00…

  10. மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்து வருவது பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கும் என நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இறுதிப்போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என்று இலங்கையின் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் எரிக் சொல்ஹெய்ம் கருத்து வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனே, ஐக்கிய நாடுகள் சபை தோல்வி கண்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில், இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=94950&category=TamilNews&language=tamil

  11. வடமாகாண அமைச்சர்கள் மூவர் இன்று பதவியேற்றனர் வடமாகாண சபையின் மூன்று அமைச்சர்கள் இன்று காலை தமது கடமைகளை யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகங்களில் பொறுப்பேற்றனர். விவசாயமும், கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீரப்பாசனம், சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், புரூடி வீதியிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அதன் பின்னர் பத்தாயிரம் பனை மரக்கன்றுகள் நடும் திட்டத்தை புங்குடுதீவில் சம்பிரதாய பூர்வமாக அவர் ஆரம்பித்து வைத்தார். கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராஜா, செம்மணி வீதியிலுள்ள அமைச்சின் இன்று காலை 10.30 மணிக்கு அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சுகாதா…

  12. Thirumurugan Gandhi தனது இளமை வயதுமுதல் சமூகத்திற்காக உழைப்பவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான் தாக்குதலுக்கு பதிலடியாக தனது சொந்த சாதியினை மறுத்து பதிலடி செய்து அழித்தொழிப்பு பணியை செய்து நக்சல்பாரி வாழ்க்கை வாழ்ந்தவர். வன்முறையை காட்டியவர்களிடம் வன்முறைமூலம் பதிலடி கொடுத்து அதனால்மிக இளம் வயதில் தூக்குதண்டனைப் பெற்றவர். சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உரிமைக்காக போராடிய பொதுவுடமைவாதி. சமரசமில்லா தோழர். நீண்ட நெடிய உண்ணாநிலைப் போராட்டத்தினை சிறையில் இருந்த பொழுதே கட்டிஎழுப்பி அரசினை அச்சுறுத்திய தோழர் அவர். தூக்குத்தண்டனையிலிருந்து குறைப்பு பெற்று ஆயுள்தண்டனையை அனுபவித்து தனது இளமைக் காலம் முழுவதும் இழந்த பின்னரும், சமூகத்திற்காய் தொடர்ச்சியாக செயல்பட்டவர…

  13. கோடியக்கரைக்கு தென் கிழக்கே சென்று கொண்டிருந்த தமிழக கடற்தொழிலாளர்களை சிங்கள மீனவாகள் வழிமறித்து கட்டையால் தாக்கியுள்ளார்கள். தமிழக மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படை அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக வேதாரண்யம் நாகை ராமேஸ்வரம் மீனவர்கள் சிறீலங்கா கடற்படை தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் தமிழக மீனவர்களை சிறை பிடித்து செல்லும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. தற்போது சிங்கள மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.கடந்த 11–ந்தேதி இரவு வேதாரண்யத்தை சேர்ந்த மீனவரை அரிவாளால் வெட்டி மீன்கள் வலைகளை பறித்து சென்றனர். இந்த சம்பவம் அடங்குவதற்குள் மேலும் ஒரு தாக்குதல் நடைபெற்றுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளத்தை சேர்ந்…

  14. வெலி­வே­ரிய மற்றும் மல்­வத்­து­கி­ரி­பிட்­டிய ஆகிய காவல்துறை பிரி­வுக்­குட்­பட்ட பிர­தே­சங்­களில் எதிர்­வரும் 20ஆம் திக­தி­வ­ரையில் வாகனப் பேரணி, பொது­மக்கள் ஆர்ப்­பாட்டம் மற்றும் ஐந்து பேருக்கு மேற்­பட்­­டோரின் ஒன்­று­கூ­டல்கள் ஆகி­ய­வற்­றுக்கு காவல்துறையினரின் அனு­மதி கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ள­துடன் அவ்­வாறு பொலிஸ் அனு­ம­தி­யின்றி நடை­பெறும் ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கும் ஒன்­று­கூ­டல்­க­ளுக்கும் நீதி­மன்றம் தடை விதித்­துள்­ளது. நேற்று கம்­பஹா மாவட்ட நீதிவான் நீதி­மன்றில் பதில் நீதிவான் சம­ராணி முத­லிகே இந்த தடை உத்­த­ரவை பிறப்­பித்தார். பிர­தே­சத்தில் சமா­தா­னத்தை பாது­காப்­பதில் ஆர்ப்­பாட்­டங்­களும், பேர­ணி­களும் சவா­லினை ஏற்­ப­டுத்­து­வ­தாக கூறி அவற்­றுக்கு தடை விதிக…

  15. பிரித்­தா­னிய ‘சனல் 4’ தொலைக்­காட்சி சேவை ஊட­க­வி­ய­லா­ள­ரொ­ருவர் சிறீலங்காவில் தங்­கி­யி­ருப்­ப­தாகக் கிடைக்கப் பெற்­றுள்ள தக­வலை அடுத்து கடந்த வாரம் பாது­காப்பு அதி­கா­ரிகள் உஷார்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். கொழும்பில் அமைந்­துள்ள விடு­தி­யொன்றில் தங்­கி­யுள்­ள­தாக நம்­பப்­படும் குறித்த ஊட­க­வி­ய­லா­ள­ரையும் அவ­ரது மனை­வி­யையும் தேடிக் கண்­டு­பி­டிக்­கு­மாறு பயங்­க­ர­வாத புல­னாய்வு முகவர் அமைப்­புகள் பயங்­க­ர­வாத புல­னாய்வுத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளுக்கு முன்­னெச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தன. இது குறித்து காவல்துறை புல­னாய்வு வட்­டா­ரங்கள் தெரி­விக்­கையில், குறித்த ‘சனல் 4’ ஊட­க­வி­யலாளர் கொழும்பில் தொடர்­மாடி மனை­யொன்றை வைத்­தி­ருக்கும் அதேவேளை அவர் ஹில்டன் ஹோட்­ட­ல…

  16. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் ஒரு பங்காளிகளாகவும் ஒரு சமத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை உணர்வதன் மூலம் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பும் மிகப் பெரியளவிலே இருக்க முடியும். இதுதான் முக்கியமே தவிர இந்த அமைச்சுப்பதவி என்பன முக்கியமான விடயமாக எனக்குத் தெரியவில்லை வடமாகாண சபை உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் சித்தார்த்தன் தெரிவித்திருப்பதாவது: ‘தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையை வலுப்படுத்தல், உணர்வுகளை வெளிப்படுத்தல் ஆகியவற்றிற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்ற பின்னர் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் கொள்கை …

    • 10 replies
    • 981 views
  17. 25ம் திகதி முதலாவது கூட்டத்தொடர்! கைதடியினிலேயே கூட்டமாம்!! வடமாகாணசபையினது முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 25ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.கைதடியினில் கட்டப்பட்டு வரும் வடமாகாணசபை தலைமை காரியாலத்தினில் இக்கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதாக தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இதனிடையே அன்றைய தினம் இதுவரை சத்தியப்பிரமாணம் செய்திராத ஏனைய அங்கத்தவர்கள் தமது சத்தியப்பிரமாணத்தை செய்து கொள்வதுடன் கூட்டத்தொடரினிலும் கலந்து கொள்ளுவரென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே முல்லைத்தீவில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த வட மாகாண சபையின் ஒன்பது உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளதை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ…

  18. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடாத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறவுள்ளது. எனினும், இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை நடாத்துவதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகளை மீறிச் செயற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பிரதம நீதியரசரை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைக்கு விரோதமான முறையில் பணி நீக்கம் செய்ததாகத் தெரிவித்துள்ளார். அமர்வுகளை புறக்கணிப்பதாக கனடா விடுத்துள்ள அறிவிப…

  19. பிரித்தானிய பிரதமர் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் - இங்கிலாந்து எம்.பி க்கள் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க வேண்டுமென்ற பிரித்தானியத் தமிழர் பேரவையினரின் போரட்டத்தின் தொடர்ச்சியாக, Ilford வடக்குக்கான பாராளுமன்ற உறுப்பினர் Lee Scott (Conservative) மற்றும் Southall & Ealing தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Virendra Sharma (Labour) ஆகியோருடனான சந்திப்புகள் அண்மையில் நடைபெற்றன. திரு. சர்மாவுடனான சந்திப்பின் போது, இம்மாநாட்டை பிரதமர் கமரூன் புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல், இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்தே அகற்றுவதை முன்மொழிய வேண்டுமென்று வலியுறுத்தினார். ஆளும் மிதவாத கட்சியைச் சேர்ந்த Lee Scott உடனான கலந்துரையா…

  20. கள்ளத்தனங்களின் ஊடே தன்னை மாத்திரமின்றி தான் சார்ந்த அரசையும் காப்பாற்ற முனையும் கருணாகரன் கடந்த மாத உயிர்மையில் எழுதிய மறுப்புக்கு இம்மாத உயிர்மையில் எழுதிய பதில்!

  21. இந்திய மீனவர்கள் கடல் எல்லை தெரியாமலே எமது கடற் பிரதேசங்களுக்குள் வருகின்றார்களே தவிர அவர்கள் எமது வளங்களை அழிப்பதற்காக வரவில்லை. ஆகவே அவர்களை எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் என வடமாகாண மீன் பிடி போக்குவரத்து கைத்தொழில் வர்த்தகம் வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினரை நேற்று ஞாயிற்றக்கிழமை(13-10-2013) சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 'நடைபெற்று முடிந்த வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களில் எங்கள் எல்லோரின் பேச்சுப் பொருளாக முல்லைத்தீவின் முள்ளிவாய்கால் இருந்திருக்கின்றது. யுத்தத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமான முல…

  22. பழப்பயிர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. விவசாய விரிவாக்கல் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட குறித்த நிகழ்ச்சித்திட்டத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாதுளை கன்றுகள் வினியோகிக்கப்பட்டது.முதற்கட்டமாக மன்னார் நானாட்டான் மடு மாந்தை மேற்கு ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளுக்குற்பட்ட கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 35 பயணாளிகளுக்கு முதற்கட்டமாக மாதுளை கன்று வழங்கப்பட்டது. -இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.தேசப்பிரிய மன்னார் பிரதி விரிவாக்கல் விவசாய பணிப்பாளர் பி.அற்புதச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு பழக்கன்றுகளை வழ…

  23. 'சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளினால் மாற்றங்களை செய்ய முற்பட்ட பிரபாகரனும், ரணிலும் தோல்வியைத் தழுவினர்' நிரந்தரமாக பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பதற்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முயற்சிப்பதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார் என தெற்கின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 13ம் திருத்தச் சட்டத்திற்கு மேலதிகமான அதிகாரங்களை பெற்றுக் கொடுக்குமாறு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் ஹக்கீம் கோரியதாக ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதேவிதமான கொள்கைகளை பின்பற்றி வருவதாகவும் கூட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. தமிழ்த்…

  24. மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என அரசாங்கம் மறுப்பதில் பயனில்லை – எரிக் சொல்ஹெய்ம் 14 அக்டோபர் 2013 மனித உரிம மீறல்களில் ஈடுபடவில்லை என கண் மூடித்தனமாக மறுப்பதில் எவ்வித பயனும் கிடையாது என நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/ar…

  25. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உள்ளிட்ட 09 பேரைக் கைதுசெய்யுமாறு மாத்தறை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 05ஆம் திகதி மாத்தறையில் ஏற்பட்ட மோதல் குறித்து பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதேவேளை, குறித்த சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்ட மேலும் 33 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சி காலத்தில் இவர் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றியிருந்ததுடன், 2006ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்திலிருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamilworldtoday.com/home

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.