ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
பௌத்த துறவிகளின் பதட்டமும் ஆராச்சியும் தொடர்கிறது - கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர். வடமாகாண சபைக்கு வெளிநாடுகள் நிதிகளை வழங்கும் முறைகள் ஏதுவும் இருக்கின்றதா என அறிவதற்காக பௌத்த பிக்குமார் குழு ஒன்று இலங்கை மத்திய வங்கியின் அதிகாகள் சிலரை சந்தித்து கலந்துரையாடி உள்ளது. என குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு செய்தியாளருக்கு தெரிய வந்துள்ளது. இந்தியாவும் வெளிநாடுகளும் வடமாகாண சபைக்கு நேரடியாக நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்றும் அது தெடா்பாக விளக்கமளிக்குமாறும் பௌத்த பிக்குகள் கேட்டதாக மத்திய வங்கி தகவல்கள் கூறுகின்றன. மாகாண சபைகளுக்கு மத்திய அரசே நிதி ஒருக்கீடுகள் செய்ய வேண்டும் என்றும் வெளிநாடுகள் நேரடியாக நிதியுவிகளை செய்…
-
- 1 reply
- 283 views
-
-
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காமல் விடலாம் என தெரிவிக்கப்படுகிறது. சில வேளைகளில் அமர்வுகளில் பங்கேற்காமல் இருக்கக் கூடுமென அமைச்சர் நாரயணசுவாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் கட்சிகள் பிரயோகித்து வரும் அழுத்தங்கள் காரணமாக பிரதமர் பங்கேற்காமல் விடக் கூடுமெனக் குறிப்பிட்டுள்ளார். அமர்வுகளில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து விரைவில் பிரதமர் இறுதித் தீர்மானத்தை அறிவிப்பார் என நாரயணசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96922/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 261 views
-
-
அடக்குமுறைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார். அடக்குமுறைகள் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மாகாணசபைத் தேர்தல்கள் நீதியான முறையில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேட்பாளர்கள் மீதான அடக்குமுறைகள், அரச சொத்து பயன்பாடு போன்ற குற்றச் சாட்டுக்கள் குறித்து நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்களின் மூலம் மக்களுக்கு தேவையான நல்லிணக்கத்தை ஏற்படுத…
-
- 1 reply
- 259 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பனர்களிடையேயான விசேட சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், ராகவன், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக சங்கையா ஆகியோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான இரண்டு போனஸ் ஆசனங்களை யார் யாருக்கு கொடுப்பது என்பது தொடர்பில் விரிவாக கலந்த…
-
- 0 replies
- 231 views
-
-
-நா.நவரத்தினராசா மல்லாகத்தில் இனந்தெரியாதோர் மேற்கொண்டு கைக்குண்டு வீச்சில் சனசமூக நிலையம் சேதமடைந்துள்ளது. இந்த கைக்குண்டு வீச்சு இன்றிரவு 10.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மல்லாகம் மத்தியில் உள்ள அம்பனாக்கடவை வீதியென அழைக்கப்படும் சேச் வீதியில் உள்ள சுவாமி ஞானப்பிரகாசர் சனசமூக நிலையம் மற்றும் நூலகக் கட்டிடத்தின் அருகாமையில் கைக்குண்டு வீழ்ந்து வெடித்துள்ளது. இதனால் சனசமூக நிலையத்தின் கட்டிடச்சுவர் மற்றும் அருகில் உள்ள வீட்டின் கதவு சுவர் என்பவற்றில் குண்டுச் சிதறல்கள் பட்;டுள்ளதனால்; சேதமும் ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்தவாகள் இந்த கைக்குண்டுத் தாக்குதலை மேற்க்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளார்கள். குறிப்பிட்ட சனசமூக நிலைய முன்றலில் இரவு வேளையில் இளைஞ…
-
- 1 reply
- 426 views
-
-
இலங்கையின் தலைநகர் கொழும்பில் நகரத்தின் முக்கிய பகுதியாக கொம்பெனித் தெரு அமைந்துள்ளது. அங்கே அரை நூற்றாண்டுக்கு மேல் வாழ்ந்த மக்களை அவர்களின் நிலங்களில் இருந்து வெளியேற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தரவிட்டது. அவ்வாறாயின் டாட்டா நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ள நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு ஈடான நியாயமான நஷ்டஈடு வழங்கும் புதிய திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என நாட்டின் பாதுகாப்புச் செயலரும், ஜனாதிபதியின் சகோதரரும், உச்ச அதிகாரம் படைத்தவருமான கோத்தாபய ராஜபக்சவின் பொறுப்பிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு இலங்கையின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கொம்பெனித் தெரு பகுதியிலுள்ள ஏழு ஏக்கர் நிலத்தை இந்தியாவின் டாட்டா நிறுவனத்துக்கு வழங்குவதற…
-
- 3 replies
- 593 views
-
-
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையுடன் சிறிலங்கா அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் பசாகி நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதுகுறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், “மூன்று மாகாணசபைகளுக்கு செப்ரெம்பர் 21ம் நாள் நடத்தப்பட்ட தேர்தல் வெற்றிகரமாக அமைந்ததற்கு சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு மாகாணசபைக்கு முதல் முறையாக நடந்துள்ள இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது மக்கள் தமது விருப்பங்களுக்கேற்ப, மாகாணசபைகளுக்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்…
-
- 0 replies
- 264 views
-
-
மாகாணசபைத் தேர்தலின் நிறைவில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகர் பிரதி சபாநாயகர் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரட்ன ஓய்வு பெற்றுக்கொள்ளக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. நடைபெற்று முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தலில் பிரதமரின் மகன் அனுராத ஜயரட்ன அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். இதன்படி, அனுராதவிற்கு மத்திய மாகாண முதலமைச்சர் பதவி வழங்கி, பிரதமரை ஓய்வு பெற வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, முதலமைச்சராக பதவி வகித்த சரத் ஏக்கநாயக்க, பிரதமர் பதவி விலகுவதன் மூலம் ஏற்படும் நாடாளுமன்ற தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு தெரிவு செ…
-
- 3 replies
- 455 views
-
-
-சுமித்தி தங்கராசா தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இலங்கை தமிழரசு கட்சி சார்பாக ப.அரியரட்ணம் 27,264 விருப்பு வாக்குகளையும் குருகுலராஜா 26,427 விருப்பு வாக்குகளையும் பசுபதிப்பிள்ளை 26,132 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக தவநாதன் 3,753 வாக்கு…
-
- 46 replies
- 3.8k views
-
-
ஐக்கிய நாடுகளின் பேரவையின் 68 ஆவது நிரந்தர கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரை நிகழ்த்துவார். 2005 இல் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பேரவையில் உரையாற்றுகின்ற 6 ஆது சந்தர்ப்பம் இதுவாகும். முதலாவதாக 2006 ஆம் ஆண்டு பேரவை அமர்வில் உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பேரவையில் உரை நிகழ்த்துவதற்கு மேலதிகமாக நியூயோர்க் நகரில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோருடனும் ஆசிய, ஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளின் அரச தலைவர்கள் சிலருடனும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடு…
-
- 1 reply
- 468 views
-
-
ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியிலுள்ள உலக நாச்சியாரின் சிலை நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு உடைக்கப்பட்டுள்ளது. (படங்கள்: தேவஅச்சுதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்) http://tamil.dailymirror.lk/--main/83598-2013-09-24-11-19-32.html
-
- 2 replies
- 285 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையிலிருந்து வெளியேறும் போது வெளியிட்ட கருத்துக்களை தான் ஏற்றுக்கொள்வதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதியும் கியூபா தூதுவருமான தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நவநீதம்பிள்ளை இலங்கையின் பௌதீக அபிவிருத்தி பற்றி அவதானிக்க வரவில்லை. நாட்டின் தேசிய பிரச்சினை தொடர்பில் பொறுப்புக் கூறும் செயற்பாடுகள் தொடர்பாக கண்காணிக்கவே வந்திருந்தார். எனினும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் எந்த வகையிலும் திருப்தியடைய முடியாது. மனித உரிமை ஆணையாளர் இலங்கை சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக வெளியிட்ட அபாய அற…
-
- 0 replies
- 352 views
-
-
கண்டி மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்ட நமது ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர் வேலு குமார் 18000 க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் பிரசார காலகட்டத்தின் போதும் தேர்தல் அன்றும் நிலவிய அசாதாரண அரசியல் வன்முறை சூழலின் மத்தியில் ஒரு எதிர்கட்சியான எமக்கு கண்டியில் கிடைத்துள்ள வெற்றி ஒரு பெரும் வெற்றியாகும். படித்த பட்டதாரி இளைஞரான நமது மத்திய மாகாணசபையின் புதிய உறுப்பினர் வேலு குமார் நமது கட்சியின் கொள்கைவழி பயணத்தை தூய சிந்தனையுடன் இனி வருங்காலத்தில் கண்டி மாவட்டத்தில் முன்னெடுப்பார். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து மாற்றுக்கட்சி நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர…
-
- 6 replies
- 759 views
-
-
இணுவில் மத்தியகல்லூரி கட்டடத்தின் முன் பகுதி இடிந்து வீழ்ந்ததில் அதிபர் உட்பட பாடசாலை மாணவர்கள் பலர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் பாடசாலையின் ஒரு கட்டடத்தின் முன் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கொங்கிறீட் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததாகவும் இதனால் ஒரு மாணவன் மிக ஆபத்தான நிலையிலும் அதிபர் உட்பட சில மாணவர்கள் படுகாயமடைந்த நிலையிலும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://irruppu.com/?p=36768
-
- 2 replies
- 502 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்படக் கூடிய ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது என தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்கத் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களும் நாட்டில் ஐக்கியமான சூழலை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும். எனவே அதற்கு தேவையான ஒத்துழைப்பையும் பின்புலத்தையும் வழங்குவதற்கும் இரு தரப்பும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் . வடக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய ஆளுநர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் அக…
-
- 2 replies
- 465 views
-
-
வடமாகாணசபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக வவுனியாவில் காத்திருக்கவேண்டிய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு திரும்பும் வழியிலேயே அவர் வவுனியாவில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு விக்னேஸ்வரன் கொழும்புக்கு திரும்பிக்கொண்டிருந்தார். கொழும்புக்கு திரும்பிகொண்டிருந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் வாகன சாரதி வவுனியாவிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையத்தில் வாகனத்தை எரிபொருள் ந…
-
- 6 replies
- 867 views
-
-
தமிழ் மக்களிடம் இருக்கும் போராட்ட குணத்தை யாராலும் முறியடித்துவிட முடியாது என்கிற செய்தியை மீண்டும் ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறது வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவுகள். அதற்காக, போராட்ட குணம் என்பது ஆயுத போராட்டத்துக்கான மீள் திருப்பம் என்றும் யாரும் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட வேண்டாம். அப்படியான செய்தியை வடக்கு மக்கள் இம்முறை சொல்லவும் இல்லை. விருப்பவும் இல்லை. போராட்ட குணம் என்று இங்கு சொல்லப்படுவது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான அவசியமான போராட்டம் பற்றியது. இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்து இன்று வரை தமது அரசியல் போராட்டத்தை தமிழ் மக்களும், தலைமைகளும் முன்னெடுத்திருக்கின்றன. ஒவ்வொரு போராட்ட வடிவமும் எதிர்வினைகளின் படியும், சர்வதேச சூழலுக்கு …
-
- 1 reply
- 427 views
-
-
மலேசியாவில் கனரக வாகனமொன்றில் பதுங்கிய நிலையில் பயணித்த 49 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகளை மலேசிய அதிகாரிகள் கைது செய்ய முனைவதாக கிடைத்த தகவலை அடுத்தே இவர்கள் கனரக வாகனமொன்றில் பதுங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சுமார் 4 மணித்தியால தேடுதலின் போது சுமார் 60 சட்டவிரோத குடியேறிகளான வெளிநாட்டவர்கள் கைதாகினர். இவர்களில் 49 பேர் இலங்கையர்களாவர்.வீசா நிறைவடைந்தும் மலேசியாவில் தங்கியிருந்தமை மற்றும் போலியான ஆவணங்களை கொண்டிருந்தமை போன்ற காரணங்களுக்காகவே இவர்களை கைதானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/33560/64/49/d,fullart.aspx
-
- 0 replies
- 294 views
-
-
அளவெட்டி பினாக்காய் வயல் வெளியில் இருந்து அடித்துடைக்கப்பட்ட நிலையில் அநாதரவான நிலையில் கைவிடப்பட்ட உந்துருளி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை வயல் வேலைக்குச் சென்றவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அநாதரவாகக் காணப்பட்ட குறித்த உந்துருளி, பாழடைந்த கிணற்றிக்கு அருகாமையில் காணப்பட்டதால், குறித்த உந்துருளியின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பெயரில் அப்பகுதி மக்கள் கிணற்று நீரை இறைத்து வெளியேற்றிய போதும் அத்தகைய சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றமைக்கான தடயங்கள் எவையும் காணப்படவில்லை. அடித்துடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட உந்துருளியின் இலக்கம் கறுப்பு நிறத்தில் அமைந்த NP- WV -3787 இலக்கத்தை கொண்டதாகும். இதனால் இந்தப் பகுதியில் பல்வேறு ஊக…
-
- 0 replies
- 296 views
-
-
இனியாவது மஹிந்த தமிழரை மதிக்கட்டும்! வடக்குத்தேர்தல் நல்ல பாடம் என்கிறார் மன்னார் ஆயர்! தமிழ் மக்களின் அபிலாஷைகள், விருப்பங்கள், உணர்வுகளை இனியாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மதித்து நடக்க வேண்டும்'' என்று மன்னார் ஆயர் அதிவண. இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். அரசின் சலுகைகளுக்குத் தமிழர்கள் அடிபணிந்தவர்கள் அல்லர் என்பதை வடமாகாண சபைத் தேர்தலில் எமது மக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். வடபகுதியை விரைவில் பௌத்த மயமாக்குவோம் என்று தென்னிலங் கையிலிருந்து கூக்குரலிட்ட சிங்கள இனவாதக் கட்சிகளுக்கும் வடக்குத் தேர்தலில் எமது தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு …
-
- 0 replies
- 337 views
-
-
அனுராதபுரம் நகரில் பிரத்தியேக வகுப்பிற்கு செல்லும் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையில் சூட்சுமமான முறையில் கமராவை பொறுத்தி மாணவிகளின் காட்சிகளை பதிவுசெய்த சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளிலும் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.அனுராதபுரம் நீதவான் தம்மிக்க ஹேமபால முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/33550/64//d,fullart.aspx
-
- 0 replies
- 269 views
-
-
இந்தியாவில் 24 சிறீலங்கா கடற்தொழிலாளர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள அதேவைளை சிறீலங்காவின் சிறைகளில் 150 தமிழக கடற்தொழிலாளர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். சிறீலங்கா கடற்தொழிலாளர்கள் 24 பேர் இதுவரையில் இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமையினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்யும் நோக்கில் இந்திய மத்திய அரசுடன் கலந்துரையாடி வருவதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் என்.டீ.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை இந்திய மீனவர்கள் 150 பேர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்ட…
-
- 0 replies
- 280 views
-
-
வட கிழக்கு உரிமை போராட்ட அரசியலுக்கு புள்ளடியால் வலுசேர்த்துள்ள வட மாகாண மக்களுக்கு மலையக சிவில் அமைப்புக்களான அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வு மையம் என்பன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன. வடக்கு மற்றும் மத்திய மாகாண தேர்தல் குறித்து அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வு மையம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகமே இன்று மனித உரிமை பற்றி குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் யுத்தத்தால் பல இழப்புக்களை எதிர்கொண்டு உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் வட மாகாண மக்களுக்கு கடந்த 21ம் திகதி தேர்தல் பரீட்சை நடத்தப்பட்டது. 25 வருடங்களுக்குப் பின்னர் வடக்கில் இடம்பெற்ற …
-
- 0 replies
- 397 views
-
-
விரிவான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வடக்கு மாகாணசபையில் ஆட்சியை அமைத்துள்ள புதிய கட்சியுடன் இணைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம், இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. மூன்று மாகாணங்களிலும் தேர்தல் நடைபெற்றமைக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளா ஜென் பாஸ்கீ தெரிவித்துள்ளார். மூன்று தசாப்த காலத்தின் பின்னர் வடக்கில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்கது என குறிப்பிட்டுள்ளார். வடக்கில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிவிலியன் நிர்வாகத்திற்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். http…
-
- 0 replies
- 275 views
-
-
முகமாலையில் உழவு இயந்திரமொன்று மிதி வெடியில் சிக்கியமையினால் ஒருவர் பலியாகி இருவர் காயமடைந்து உள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (24.09.13) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பளை பிரதேச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அல்லிப்பளையைச் சேர்ந்த 17 வயதான துரைசிங்கம் நிரோஜன் மற்றும் புலோப்பளை கிழக்கை சேர்ந்த 17 வயதான சி.குகராசா ஆகியோரே காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை பளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96915/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 216 views
-