Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கச் சென்ற மக்களை மிரட்டிய இராணுவ புலனாய்வாளரை ஆதாரத்துடன் பிடித்து பொலிசில் ஒப்படைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா. மேற்படி புலனாய்வு உறுப்பினர் தனது தலைமையகத்துடன் தொடர்புகொள்வதையும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவிப்பதையும் கீழ்வரும் காணொளி ஆதாரமாக காண்பிக்கின்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=93391&category=TamilNews&language=tamil

  2. முல்லைத்தீவு தபால் மூல வாக்களிப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி 646 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 146 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி 02 வாக்குகள் http://tamilworldtoday.com/home

  3. கொழும்பில் இருந்து ஹீத்ரோ நோக்கி பயணித்த இலங்கை ஏயார்லைன்ஸ் விமானத்தில் குண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்தே அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தங்களது பயணப்பொதியில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்த பிரித்தானிய பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையிலிருந்து 267 பயணிக்களை ஏற்றிச் சென்ற விமானமே இன்று அதிகாலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்ட பிரித்தானியாவைச்சேர்ந்த இருவர்களில் ஒருவரே தனது பயணப்பொதியில் குண்டு இருப்பதாக விமானப்பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே விமானம் கொழும்பில் (இலண்டனில்) தரையிறக்கப்பட்டு முழுமையான கோதனைக்கு பின்னர் மீண்டு ஹீத…

  4. இலங்கையின் வடக்கு தேர்தல் களத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைகள குறித்து கனடா தமது கவலையை வெளியிட்டுள்ளது.வடக்கிலும் ஏனைய மாகாணங்களிலுல் தேர்தல்கள் நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் தேர்தல்கள் இடம்பெற வேண்டும் என்று கனேடிய வெளியுறவு அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் தீபக் ஒப்ராய் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தேர்தல்கள் நடைபெறும் மூன்று மாகாணங்களிலும் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான அத்துமீறல்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை. அத்துடன் அவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுவோர் சட்டத்தின் முன் கொண்டு வரப்படவேண்டும் என்றும் தீபக் கோரியுள்ளார். இந்தநிலையில் வடக்கிலும் ஏனைய மாகாணங்களிலுல் தேர்தல்கள் நியாயமானதாக…

  5. மன்னார் பள்ளி முனையில் சிறீலங்கா அரச ஆதரவுக்கு கட்சி சார்பான சிலரால் மேற்கொள்ள இருந்த தேர்தல் முறை கேடு ஒன்று மக்களின் சாதுரியத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக எமது மன்னார் செய்தியாளர் தெரிவிக்கின்றார். மன்னார் பள்ளிமுனையில் இன்று மதியம் திடீரெ மூன்று பேருந்துகளில் வந்திறங்கிய நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பற்றிமுனையில் அமைந்திருந்த வாக்கெடுப்பு நிலையத்தில் தம்மை வாக்களிக்க விடும்படி கோரியிருந்தனர். தாம் மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது அனுராதபுரத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவித்த அவர்கள் இடம்பெர்ந்தோர்களின் வாக்கு அளிப்பு நிலையத்தில் வாககளிக்க அனுமதிக்க கோரி இருந்தனர். ஆனாலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இது பற்றி அறிந்து கொண்டதுடன் அதை உடனடியாக உரிய கண்கா…

  6. இலங்கையின் வடக்கு தேர்தலில் தமிழ் கட்சிகள் வெற்றிபெற வேண்டும் : நாச்சியப்பன் இலங்கையின் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் கட்சிகள் வெற்றிபெற வேண்டும் என இந்திய மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கே முடிவெடுப்பார் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். மேலும், இலங்கை மீனவர்கள் தொடர்பில் பேச்சு நடத்த மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்த நாச்சியப்பன், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை தடுக்க முக்கிய பேச்சுவார்த்தையொன்று நடத்த வேண்டும் என்றும் அவ…

  7. (2ஆம் இணைப்பு) நடந்துமுடிந்த வடக்கு, மத்திய, வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 70வீதமாக பதியப்பட்டுள்ளது. அதேபோல, யாழ் மாவட்டத்தில் 50 வீதமானவர்களே வாக்களித்துள்ளனர். இதனைத்தவிர ஆகக்கூடுதலான வாக்களிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. தகுதிபெற்ற வாக்காளர்களில் 63 வீதமானவர்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். வாக்களிப்புகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையி…

  8. வதைகளும் வலிகளும் தந்தவர்களை விடுத்து வாழ்வு வளம்பெற மக்கள் வாக்களிப்பார்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா… ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தினமுரசு பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி கேள்வி: மாகாண சபை உங்களது கனவு என்று கூறிவந்த நீங்கள் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கிக் கொண்டது ஏன்? பதில்: மக்களின் ஆணையை பெற்று மாகாணசபையை வெற்றி கொள்வதும், மாகாண சபை அதிகாரங்களை பாதுகாப்பதும், அதற்கான அதிகாரங்களை மேலும் பெற்று மாகாணசபையை வலுவுள்ளதாக வளர்ப்பதும், அதனூடாக எமது அரசியல் இலக்கு நோக்கி செல்வதும் எனது கனவு என்பதில் என்றும் மாற்றம் இல்லை. நான் தேர்தலில் போட்டியிடவில்லை …

  9. சாவகச்சேரி பிரதேச சபையின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பனர் தங்கராசா என்பவர் வரணியில் கைது செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சயந்தன் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும், அப்போது கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட தங்கராசா விடுதலை செய்யப்பட்டதாக அறிந்து, அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் சயந்தனின் வாகனத்தை நோக்கி அந்தப் பகுதியில் இருந்த இராணுவத்தினரால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் வேட்பாளர் சயந்தனோ அல்லது வேறு எவருமோ காயமடையவில்லை என்றும் மாவை சேனாதிராஜா கூறினார். இதேவேளை இந்தச் சம்பவம் பற்றி அறிந்து அவிடத்திற்குச் சென்று த…

  10. இந்த முறை மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி வாக்கு பெட்டிகள் அனைத்தும் இலக்க வரிகிரமத்தின் அடிப்படையில் இன்றி, எழுமாறாக வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். http://tamilleader.com/?p=20102

  11. வடக்குமாகாணசபைத் தேர்தல் வாக்களிப்புகள் யாவும் இன்று மாலை 4 மணியுடன் முடிவுற்றுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் இருந்த வாக்குப் பெட்டிகள் அனைத்தும் காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கென்னும் நிலையமான யாழ்.மத்திய கல்லூரிக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. பிரத்தியோகமாக ஒழுங்கு செய்யப்பட்ட பஸ் வண்டிகளிலேயே மேற்படி வாக்குப் பெட்டிகள் வந்து சேர்ந்துள்ளது. நெடுந்தீவு பகுதி பகுதியில் சேகரிக்கப்பட்ட வாக்குகளின் பெட்டிகள் மட்டும் அதிவேகப்படகில் குறிகட்டுவான் வரைக்கும் கொண்டுவரப்பட்டு பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு பிரத்தியோக வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நிலையமான யாழ்.மத்திய கல்லூரியினை வந்தடைந்தவுட…

  12. கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் பாதுகாப்பிற்காக பன்னாடுகளில் இருந்து 1000 காவல்துறையினர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 53நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுநலவாய மாநாட்டின் உச்சிமாநாடு சிறீலங்காவின் கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அந்தந்த நாட்டுதலைவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 53நாடுகளில் இருந்து 1000 பன்னாட்டு காவல்துறையினர் கொழும்பு செல்லவுள்ளார்கள் இன்னிலையில் தற்போது இந்தியா தனது புலனாய்வு அமைப்பினை கொழும்பிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/33452/64/1000/d,fullart.aspx

  13. வடக்கு மாகாண சபைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு பெரும் வன்முறைகளுடன் தொடங்கி வன்முறைகளுடனேயே நிறைவடைந்துள்ளது. இந்த வன்முறைகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பாளர்கள் கூட தாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தேர்தலில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் என்று வடக்கிலுள்ள மக்கள் சர்வதேசத்தை நோக்கி கேள்வியெழுப்பியிருக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டுகளிலிருந்து வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தன. ஆனால் இந்த தேர்தலை நடத்தினால் தன்னால் வெற்றிபெற முடியாது என்று உணர்ந்த சிறிலங்கா அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் பின்னடித்து வந்தது. ஆய…

  14. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இணைப்பு 2 வடமாகாண சபைத் தேர்தலில் இன்று மதியம் வரையிலான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் 22 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் 29 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வவுனியாவில் 24 சதவீதமும், மன்னாரில் 30 சதவீதமும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த உள்ளுராட்சி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்தத் தேர்தல் வாக்களிப்பு வீதம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் 70 வீதமானவர்கள் வரையில் வாக்களிக்காமல் முடங்கியிருப்பதால் தேர்தல் முடிவுகளில் தாக்கம் ஏற்படும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக வாக்களிப்பில் 60 வீதமானவர்கள் வாக்களித்தால் மட்டுமே கூட்டமைப்பு பெரும்பான…

  15. தென்மராட்சியின் வறனிப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களின் வாகனம் மீது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் எவரும் உயிரிழந்ததாகவோ காயம் அடைந்துள்ளதாகவோ தகவல் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொடிகாமம் பிரதேச சபையின் உபதலைவரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வாக்களிக்கச் சென்ற வேளை சிறைப்பிடித்து கட்டடம் ஒன்றில் மறைத்து வைத்து சித்திரவதை செய்செய்ததாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெற்றதை அறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் திரண்டு சென்று அவரை மீட்க முற்பட்ட வேளை அங்கிருந்த படைப் புலனாய்வாரள்கள் 55 படைப்பிரிவின் முகாமுக்குள் தப்பிச் சென்றனர். அப்படியிருந்த போதும் அவர…

  16. காணொளி : தற்போதைய வடக்குத் தேர்தல் நிலவரம் தொடர்பான காணொளி காணொளியைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9292:2013-09-21-12-12-40&catid=1:latest-news&Itemid=18

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளரான சி.வி. விக்னேஷ்வரனின் வேட்பாளர் இலக்கமான 10 என்பதற்குப் பதிலாக இலக்கம் 07 பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் இன்று யாழ்ப்பாணம் நகரில் ஒட்டப்பட்டிருந்ததாக அந்த பகுதியிலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். வாக்காளர்களை திசைதிருப்பும் நோக்கில் இராணுவத்தினரும் மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கிலுள்ள அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://tamilworldtoday.com/home

  18. வடக்கில் கூட்டமைப்பு கில்லி அடிப்பது உறுதி; கள நிலவரக் கணிப்பு உலகமே உற்று நோக்குகின்ற, டயஸ்பொராஸ் மக்களின் பார்வைகளைப் பதித்துள்ள இலங்கை அரசை கிலிகொள்ள வைத்துள்ள வடமாகாண சபைக்கான தேர்தல் இந்தவாரம் நடைபெறுகின்றது. சர்வதேசத்தின் அழுத்தம், இந்தியாவின் நெருக்குதல் இப்படியாக இலங்கைக்கு மீளமுடியாத நெருக்கு வரங்களால் வட மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்த வேண்டிய கட்டாயத் தேவையாக வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகின்றது. அரசு தானாக விரும்பி வடமாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை என்பது மட்டும் உண்மை. வட மாகாணத் தேர்தல் சம்பந்தமாக இந்த நாட்டின் ஒரு கோமாளித்தன மான நகைச்சுவையான சம்பவம் ஒன்றும் நடந்தது. தமிழ் கூட்…

  19. சிறிலங்கா அரசாங்கத்தின் சில மூத்த அதிகாரிகள் தன் மீதும், தனது பணியகத்தின் மீதும் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார். கடந்தமாதம் சிறிலங்காவுக்குத் தாம் மேற்கொண்ட பயணம் தொடர்பாக கருத்துகளை வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மற்றும் அதிகாரிகளை இலக்கு வைத்தே நவநீதம்பிள்ளை இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஐ.நா உறுப்பு நாடு ஒன்றின் மீது, ஐ.நா உயர்அதிகாரி ஒருவர் இவ்வாறு குற்றச்சாட்டை சுமத்துவது வழக்கத்துக்கு மாறானது. நவநீதம்பிள்ளையின் பயணத்தின் போது, மூன்று சிறிலங்கா அமைச்சர்கள் இணைந்து அவருக்கு எதிரான வியூகம் அமைத்து அவதூறுகளை மேற்கொண்டதாகவும் அது இன்னமும் தொடர்வதாகவும், நவநீதம்பிள்ளையின் ப…

  20. (இந்தப் பதிவை நேற்றே எழுதியிருந்தாலும் தேவை கருதி தாமதித்து இன்று பதிவிடுகிறேன்.) ஜனநாயக வழிமுறையிலான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு உறுதி செய்யப்படுவது அவசியம். ஆனாலும் இலங்கையில் நடைபெறும் எந்தத் தேர்தல்களிலும் குறிப்பாக நானறிந்த வரை 90 களுக்குப் பின் நடந்த தேர்தல்களை இரகசிய வாக்கெடுப்பு என்றே கூற முடியாது. இது தொடர்பில் இலங்கையில் அரச உத்தியோகத்தனாக வேலை செய்த காலங்களில் தேர்தல் கடமைகளுக்குச் சென்று அனுபவ வாயிலாக உணர்ந்த ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேர்தல்களில் வாக்குச் சீட்டுக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தொடர் எண் இருக்கும். இது பிரதான வாக்குச் சீட்டிலும் அந்தப் பிரதான வாக்குச் சீட்டை இணைத்திருக்கும் அடிக் கட்டையிலும் இந்த இலக்கங்கள்…

  21. தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் பேட்டி... காணொளியைப் பார்வையிட... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9291:2013-09-21-10-13-47&catid=1:latest-news&Itemid=18

  22. சிறிலங்காவின் வடக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான அனந்தி சசிதரன் ஒரு ஆசிரியராவார். இவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராகக் கடமையாற்றி 2009 இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமற் போன எழிலனின் மனைவியாவார். மூன்று பிள்ளைகளின் தாயாரான அனந்தி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளாராகப் போட்டியிடுகிறார். போர் இடம்பெற்ற வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இடம்பெறும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அனந்தி வேட்பாளாராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முன்னாள் புலிப் போராளிகளும், இனப்போரின் போது படுகொலை செய்யப்பட்ட புலிகளின் உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தமி…

  23. வட மாகாணசபைத் தேர்தல் மிகவும் முக்கியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்; செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் வடக்கில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அமைதியான முறையில் அனைத்து கட்சிகளும் தேர்தலில் பங்கேற்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். நீண்ட கால யுத்தத்தின் பின்னர் நடைபெறும் தேர்தலின் மூலம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் வழிகோலும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்த எடுத்தத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலின் பின்னர் அனைத்து தரப்பினரும…

  24. மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழர்களின் முழுமையாக கவனம் வடக்கு மாகாணத்தில் குவிந்துள்ளது. வடக்கின் இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்திலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துச் செல்வதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். இராணுவத்தினரோ அல்லது இராணுவ வாகனங்களுக்கோ எக்காரணத்திற்காகவும் வெளியில் வரக்கூடாது என உயர் தரப்பினர் உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எனினும், ஆங்காங்கே சிவில் உடையில் புலனாய்வுப் பிரிவினர் நடமாடுவதை அவதானிக்க முடிந்ததாகக் குறிப்பிட்டார். உள்ளுர், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸார் பாது…

  25. அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததார் என யாழில் உதயன் பத்திரிகை அச்சிட்டு இராணுவம் வினியோகம்! [saturday, 2013-09-21 08:01:29] News Service கூட்டமைப்பின் சார்பில் யாழில் பேட்டியிடும் அனந்தி அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக போலியான உதயன் பத்திரிகை அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அரசபடைகளதும் புலனாய்வளரகளதும் போக்கிலித் தனமான தேர்தல் முறைகேடுகள் கண்டு யாழ் குடாநாட்டு மக்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். இன்று காலை அரசாங்கத்தினாலும் அவர்களின் படையினராலும் அச்சிடப்பட்ட போலியான உதயன் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் முன்னளால் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் அனந்தி எழிலன் அரசாங்கத்துடன் இணைந்ததாக செய்தி வெளியிடப்பட்டு அனைவரது வீட்டு வாசலிலும் பத்திரிகை விநியோகிக்கப்பட்டு…

    • 4 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.