Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்த மண்ணில் பல ஆயிரக்கணக்கான மக்கள் மடியும்போது, கண்ணீரும் கம்பலையுமாகத் திரியும் போது பார்த்தவர்கள் நீங்கள், அனுபவித்தவர்கள் நீங்கள். அரசாங்கத்திற்குப் பின்னாற் செல்லுகின்ற பாரிய தவறை நீங்கள் விடலாமா?” கிழக்கு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கேள்வி. - : http://www.thinakkathir.com/?p=52527#sthash.ho2mJQAj.dpuf

  2. கண்டி, நுவரெலியா மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக தமது கண்டணத்தை தெரிவிக்கும் முகமாக யானை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அத்துடன் யானை சின்ன வேட்பாளர் பட்டியலிலே விருப்பு வாக்குகளை வழங்கும்போது அவற்றை தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையை எடுத்து காட்டும் முகமாக கவனமாக வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும், தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலியும் இன்று கண்டியிலே நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தனர். கண்டி பேராதனை வீதியில் அமைந்துள்ள அசாத் சாலியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்த அரசு ஒரு இனவாத, மதவாத அரசாங்கம் ஆகும்.…

  3. நாடுகடந்த அரசாங்கத்தை நான் தான் ஆரம்பித்தேன், அது ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது.:-கே.பி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்று கிளிநொச்சியில் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று கே.பி நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு பழைய மாணவர் சங்கத்தை போன்றது. விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தலைமையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இயங்கி வருகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நான் ஆரம்பித்தேன். அது வேறு ந…

  4. மத்திய மாகாணசபையில் அரசாங்கக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்க் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள மோதலும் ஏனைய எதிரணிக் கட்சிகளின் போட்டியும் மலையக தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன . இலங்கையில் கிட்டத்தட்ட 10 மாவட்டங்களில் தனிப்பெரும் தொழிலாளர் சமூகமாக சுமார் ஒரு மில்லியன் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் பெரும்பான்மைத் தமிழர்களின் வாக்குப்பலம் நுவரெலியா மாவட்டத்திலேயே உள்ளது. மத்திய மாகாணசபைக்காக தேர்ந்தெடுக்கப்படும் 56 உறுப்பினர்களில் 16 பேரை நுவரெலிய மாவட்ட மக்களே தீர்மானிக்கிறார்கள். இந்த 16 பேருக்கான பந்தயத்தில் பலமுனைகளிலிருந்தும் இந்த தேர்தலில் 437 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருக்க…

  5. திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை பகுதியில் காணிகளை கையகப்படுத்துவது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருக்கு உள்ளூர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. நில அபகரிப்புக்கு எதிராக போராடும் புல்மோடைப் பகுதி முஸ்லிம்கள். அந்தப் பகுதியில் சுமார் மூவாயிரம் ஏக்கர்கள் அளவுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் காணிகள், புனித பூமி என்று கூறப்பட்டு தொல்பொருள்துறை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உள்ளூர் மாகாண சபை உறுப்பினர்கள் கூறுகிறார்கள். அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரச்சினை நீதிமன்றத்துக்குச் சென்றது. இந்த வழக்கு புதனன்று விசாரணைக்கு வந்தபோது புனித பூமி, தொல்பொருள் என்கிற போர்வையில், காணிகளை அளவிடுவதற்கான கட்டளையை காவல்துறையினர் ந…

  6. சர்வதேச கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்கள் சுயாதீனமானதும், நீதியானதுமான முறையில் அமையும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தல் சுயாதீனமாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். பொதுநலவாய நாடுகள் தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை எதிர்பார்ப்பதாக கென்ய துணை ஜனாதிபதியும், பொதுநலவாய நாடுகள் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான ஸ்டீவன் கலனோசோ முஸ்யோகா தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளரின் அழைப்பின் பேரில் குறித்த கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/ta…

  7. நான் வெறுமனே விடுதலைப்புலிகளது திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த எழிலனின் மனைவி என்பதற்கப்பால் காணாமல் போயுள்ள ஆயிரமாயிரம் தமிழர்களது குடும்பங்களது அடையாளமாக இருக்கின்றேன் என்பதே உண்மையாகும். ஆனால் இலங்கை அரசோ காணாமல் போனோர்களது நிலைபற்றி வாய் திறக்க மறுக்கின்ற அதே வேளை அதற்காக குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தி வாய் மூட வைக்க முற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் அனந்தி சசிதரன் (எழிலன்). யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இக்குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். அதற்கும் அசராவிடின் எம்மை போன்ற செயற்பாட்டாளர்கள் மீது சேறு பூசுவதில் அரச இயந்திரம் முனைப்பு காட்டுவதாக தெரிவித்த அவர் அற்ப சொற்ப சலுகைகளிற்காக் சோ…

  8. வடக்கு மாகாணசபை தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் படைத்தரப்பு நேரடியாக தேர்தல் வன்முறைகளை கையிலெடுத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக கூட்டமைப்பின் இளம் வேட்பாளர்கள் பலரும் பகிரங்கமாகவே பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பு வளையத்தினுள் கொண்டுவரப்பட்டுள்ளனர். நேற்றிரவு அவ்வாறான வேட்பாளர்கள் பலரது வதிவிடங்களிலும் படையினரது பிரச்சன்னம் அதிகளவில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல வேட்பாளர்கள் வாக்களிப்பு தினம் வரை வதிவிடங்களை மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனிடையே நேற்று கனகராயன் குளம் பகுதியில் பிரச்சார கூட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்கள் மீது படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மோட்டார் சைக்கிள்கள் ஓட்டோக்களில்…

  9. மன்னார் மாவட்டத்தில் அடம்பன் பிரதேசத்தில் சொர்ணாபுரி என்ற கிராமம் முஸ்லீம் மக்கள் அதிகமாக வாழும் கிராமமாகும். இந்தக் கிராமத்தில் உள்ள சுமார் நாற்பது பெண்களுக்கு வாக்காளர் அடடைகள் வரவில்லை என்று தெரிவிக்கின்றனர். குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களுக்கு வாக்காளர் அட்டைகள் வந்தபொழுதும் அக் குடும்பத்தின் பெண்களுக்கு வாக்காளர் அட்டைகள் வரவில்லை. கடந்த காலத்தில் தொடர்ந்து வாக்களித்து வந்த தமக்கு ஏன் வாக்காளர் அட்டைகள் வரவில்லை என்ற குழப்பத்தில் இக்கிராமத்தின் பெண்கள் உள்ளனர். முதலில் ஒரு சிலர் தமக்கு வாக்காளர் அட்டைகள் வரவில்லை என்று தெரிவித்த பொழுதே அக் கிராமத்தைச் சேர்ந்த பல பெண்களுக்கு வாக்காளர் அட்டைகள் அனுப்பி வைக்கப்டாமை தெரியவந்தது. இது தொடர்பில் குளோபல் தமிழ்…

  10. யாழ் பெண்களை பாலியல் தொழிலுக்கு கடத்தும் டக்ளஸ்: விக்கிலீக்ஸ் அம்பலம்! புதன், 18 செப்டம்பர் 2013( 17:50 IST யாழில் உள்ள பெண்களை வேலை வாய்பை ஏற்படுத்தி தருவதாக டக்ளஸ் மலேஷியாவுக்கு அனுப்பி வருவதாகவும், அப்பாவி பெண்களை வைத்து மலேசியாவில் பாலியல் தொழில் நடப்பதாகவும், இதில் பல அப்பாவி ஆண்களும் அடிமைகளாக வேலைப் பார்ப்பதாகவும் wikileaks சில ரகசிய குறிப்புகளை The telegraph நாளிதழுக்கு வழங்கி அம்பலப்படுத்தியுள்ளது. விக்கிலீக்ஸ் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்கள் தமது தலைமைக்கு தாம் அறியும் ரகசியங்களை பாதுகாப்பாக அனுப்பிவைப்பது வழக்கம். இவ்வாறு பல இரகசியங்கள் கேபிள் மூலமாக அமெரிக்க தலைமைக்கு செல்லும். இத்தகவல்கள் அமெரிக்…

  11. ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர், 18வயதுப் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை லியோகன் நகரில் உள்ள வீதி வழியாகச் சென்று கொண்டிருந்த போது குறிப்பிட்ட பெண்ணை சிறிலங்கா படைச்சிப்பாய் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். வீதிச் சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படைச் சிப்பாய், குறித்த பெண்ணை அருகில் உள்ள யாருமற்ற கட்டடப் பகுதிக்குள் இழுத்துச் சென்று இந்தக் கொடூரத்தைப் புரிந்துள்ளார். சமாதான நீதிவானின் பணிப்பின் பேரில், பாதிக்கப்பட்ட பெண் அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை ஐ.நா உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன்ன…

  12. சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமெரிக்க வருகைக்கு எதிராக, அமெரிக்க மற்றும் கனேடியத் தமிழர்களை அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்அறைகூவல் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த மாநாட்டில் பங்கெடுப்பதற்காக சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச நியூயோர்க் செல்லவிருக்கின்றார். இந்நிலையில் நியூ யோர்க்கில் உள்ள ஐ.நாசபையின் முன்னால் அணிதிரண்டு, இனஅழிப்பாளி மகிந்த ராஜபக்சவின் இரத்தம் தோய்ந்த முகத்தினை அம்பலப்படுத்துவதோடு ,தமிழர்களுக்கான நீதியினை அனைத்துலகின் முன் பொங்குதமிழென முழங்குவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் 24ம் நாள் செவ்வாய்க்கிழமை, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நியூ யோர் ச…

  13. கடந்த 16-09-13 அன்று ஜெனீவாவில் நடைபெற்ற பேரணி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகளின்போது தமிழ் அமைப்புகளது பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு நிகழ்த்தியிருந்த உரைகளது காணொளிப்பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. ஜெனிவா பேரணி - பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் கவிஞர் கந்தையா ராஜமணோகரனின் உரை... ஜெனிவா பேரணியில் சுகிதரனின் எழுச்சிஉரை.. ஜெனிவா பேரணியில் சிவந்தனின் உரை.. ஜெனிவா பேரணியில் ஜேர்மன் இளையோர் நிகழ்வு.. http://www.seithy.com/breifNews.php?newsID=93145&category=TamilNews&language=tamil

  14. இலங்கையைத் தளமாகக் கொண்டு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இயங்கிவரும் ''ஸ்ரீலங்கா மிரர்'' என்ற செய்தி இணையத்தளத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி நேற்றிரவு (17) முதல் இணையத்தள செயல்பாடுகளை இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும் இதனையடுத்து இணையத்தளம் முற்றாக செயலிழந்துவிட்டதாகவும் இணையத்தள ஆசிரியர் குழாம் தெரிவித்துள்ளது. இணைத்தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலை அடுத்து அதனை வழமைக்குக் கொண்டுவருவதற்கு இணையத்தளத்தின் தொழில்நுட்ப குழுவினர் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் இணையத்தளம் விரைவில் வழமைக்குத் திரும்பும் எனவும் ஆசிரியர் குழாம் மேலும் தெரிவித்துள்ளது. மூன்று மாதகாலமாக நாள் ஒன்றுக்கு 50 தொடக்கம் 60 தடவைகளுக்கு மேல் ஸ்ரீலங்க…

    • 0 replies
    • 422 views
  15. சமகால பூகோள அரசியலின் செல்நெறியைத் தீர்மானிக்கும் வலுக்கொண்டதாகக் கருதப்படும் 'அமெரிக்கா' குறித்த இரண்டு முக்கிய செய்திகள் அண்மையில் வந்திருந்தன. அதில் ஒன்று அமெரிக்காவின் கடந்தகால நகர்வு தொடர்பானது. மற்றையது அதன் எதிர்கால நகர்வு தொடர்பானது. ஆயினும் இந்த இரண்டு செய்திகளின் மையப்பகுதியென்னவோ, இலங்கையை சார்ந்ததாகவே இருந்தது. முதலாவது செய்தியை பகிரங்கப்படுத்திய சிங்கள தேசத்தின் பாதுகாப்புச் செயலாளர், ஏறக்குறைய அனைவருக்குமே தெரிந்த அமெரிக்கா தொடர்பான நகர்வை அசைபோட்டிருந்தார். கங்காரு தேசத்தின் 'The Australian' பத்தியாளரான Greg Sheridan இற்கு இந்தப் பழைய விடயத்தை நினைப்பூட்டிய கோத்தா, விடுதலைப் புலிகளின் இலங்கைத்தீவு நோக்கிய ஆயுத விநியோகத்தை முறியடிக்க வொஷிங்டன் பெரும்பங்காற்…

    • 0 replies
    • 769 views
  16. இலங்கை உள்­ளிட்ட கணி­ச­மான அள­வி­லான நாடு­க­ளுக்­கான உயி­ரியல் இயல்பு சம்­பந்­தப்­பட்ட அடை­யாளத் தேவைப்­பா­டு­களை கனடா இந்த வருட இறுதி தொடக்கம் அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தாக கனே­டிய ஊட­க­மொன்று தெரி­வித்­துள்­ளது. இது­கு­றித்த புதிய முறை­மையின் கீழ் கனே­டிய சுற்­றுலா, மாண­வர் மற்றும் தொழில் சம்­பந்­த­மான விசா ஒன்­றுக்­கென விண்­ணப்­பிக்­கும்­போது பய­ணிகள் தங்­களின் கைவிரல் அடை­யா­ளங்­க­ளையும் நிழற்­ப­டங்­க­ளையும் சமர்ப்­பிக்க வேண்டும். அல்­பே­னியா, அல்­ஜீ­ரியா, கொங்கோ, ஜன­நா­யகக் குடி­ய­ரசு, எரித்­தி­ரியா, லிபியா, நைஜீ­ரியா, சவூதி அரே­பியா, சோமா­லியா, தென் சூடான், சூடான் மற்றும் டியு­னி­ஷியா ஆகிய நாடு­களைச் சேர்ந்த பய­ணிகள் தங்கள் உயி­ரியல் இயல்பு நிலைத் தக­வலை வழங்க…

  17. எழுதுமட்டுவாழ் மருதங்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருடைய வாகனம் சற்று முன்னர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்றைய தினம் காலையில் இருந்து தென்மராட்சிப் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை சீருடையினர் பின்தொடர்ந்துள்ளதுடன் அச்சுறுத்தியும் வந்துள்ளனர். எனினும் தற்போது எழுதுமட்டுவாழ் பகுதியில் பிரச்சாரதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளை மருதங்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் வைத்து சீருடையினர் ஆதரவாளர்களை மிரட்டியுள்ளனர். சம்பவத்தையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சஜந்தன் சம்…

  18. முப்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த வட மாகாணமே எமக்கு வேண்டும். பிரிவினை வாதத்தினை நாம் தோற்றுவிக்கவும் இல்லை பிரிவினைக்கு இடமளிக்கப்போவ­து­மில்லை என பொது­ப­ல­சேனா தெரி­வித்­துள்­ளது. மேலும் விக்கி­னேஸ்­வ­ரனின் திட்டம் ஒரு போதும் பலிக்கப் போவ­தில்லை. தமிழர், முஸ்­லிம்­களை ஆத­ரிக்கும் அமைப்­பாக நாம் செயற்­பட்டு நாட்டை ஒற்­று­மை­யாக வைத்­தி­ருப்போம் எனவும் அவ் அமைப்­பினர் தெரி­வித்­தனர். பொது­பல சேனா­வினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவ் அமைப்­பினர் மேற்­கண்­ட­வாறு கருத்துத் தெரி­வித்­தனர். இது தொடர்­பாக பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞானசார­தேரர் கருத்துத் தெரி­விக்­கையில், பிர­பா­கரன் வடக்கின் தீவி­ர­வா…

  19. சர்வதேச தேர்தல் கண்கானிப்பாளர்கள் இருவர் மன்னார் வருகை தந்த நிலையில் பலதரப்பட்டவர்களை சந்தித்து உரையாடியுள்ளார்கள். -நேபாளத்தைச் சேர்ந்த கபில் ஸ்ரெஸா மற்றும் இந்தனேசியாவைச் சேர்ந்த பிப்பிற் அப்ரானி ஆகிய இருவருமே சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்காளாக(பப்ரல்) மன்னார் வருகை தந்துள்ளனர். மன்னார் வருகை தந்த இவர்கள் ஊடகவியலாளர்கள் அரசியல் கட்சிகளின் தலைர்கள் வேட்பாளர்கள் உற்பட பலதரப்பட்டவர்களை சந்தித்து மன்னார் மாவட்டத்தின் தேர்தல் தொடர்பான நிலவரங்களை அறிந்து கொண்டுள்ளனர். http://www.sankathi24.com/news/33305/64//d,fullart.aspx

  20. எதிர் வரும் 21 ஆம் திகதி இடம் பெறவுள்ள வடமாகாண சபைத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 75 ஆயிரத்து 737 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளதாக மன்னார் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் வடமாகாண சபை தோத்தலுக்காக மன்னார் மாவட்டத்தில் 12 கட்சிகளும் 8 சுயேட்சைக்குளுக்களும் உள்ளடங்கலாக 20 கட்சிகள் போட்டியிடுகின்றது. மன்னார் மாவட்டத்தில் 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 20 கட்சிகளைச் சேர்ந்த 160 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com/news/33306/64/5-160/d,fullart.aspx

  21. ஆளும் தரப்பு அரசியல் அதிகாரங்களினூடாகப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தை குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் தவறவிடக் கூடாது. யானைக்கோ மரத்துக்கோ இம்மாவட்ட முஸ்லிம்கள் உங்களது வாக்குகளை அளிப்பதனால் எதையும் சாதித்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் அப்துல் சத்தாரை ஆதரித்து குருநாகல் மல்வப்பிட்டிய எனும் கிராமத்தில் முன்னால் பிரதேச சபையின் உறுப்பினர் அமான் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில…

  22. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி உட்பட்ட தேத்தாத்தீவில்நேற்று இரவு விபத்து இடம்பெற்றது. தேத்தாத்தீவைச் சேர்ந்த எஸ்.ரவிராஜ் (வயது 52) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எம்.மன்சூர் என்பவரின் வாகனமே குறித்த வயோதிபர் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வயோதிபர் வீதியைக் கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து சம்பவித்தது. குறித்த வயோதிபர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை குறித்த வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட…

  23. சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் வந்த பிரபல தொடரானசந்தனக்காடு தொடரில் வீரப்பனாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம் ஒகேனக்கல் காட்டுப் பகுகளில் மறைந்திருப்பதாக ஒரு காட்சி. அந்தக் காட்டுப் பகுதியைக் காட்டுவதாக சில கோப்புக் காட்சிகளைக் காட்டினார்கள். அதில் யானைகள், குரங்குகள், சிங்கங்கள் உலவுவதாகக் காட்டினார்கள். எனக்கோ ஒரே ஆச்சரியம் ஒகேனக்கல் காட்டில் சிங்கமா? மதிப்பிற்குரிய வீரப்பன்தான் தோலுக்காக சிங்கங்களை சுட்டு வீழ்த்தியிருப்பாரோ என்று தோன்றியது. தொடரை இயக்கிய கெளதமனின் காட்டுயிர் அறிவை எண்ணி வியந்தேன். அது இருக்கட்டும், சிங்கங்கள் நம் நாட்டுக்கு உரிய உயிரினங்களே இல்லை என்கிறார் பிரபல காட்டுயிர் ஆய்வறிஞர் வால்மீகி தாப்பர். சமீபத்தில் இந்தியாவின் முதன்மையான வரலா…

  24. வன்­னியில் இடம்­பெ­யர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான அப்­பாவித் தமிழ் மக்கள் கொல்­லப்­பட்டு தமிழ் இனம் சின்னாபின்­ன­மாகி நின்ற வேளை அதனை கருத்­திற்­கொள்­ளாது விடு­தலைப் புலி­களை அழித்து நாட்டை மீட்­டு­விட்­ட­தாக சிங்­கள மக்கள் மத்­தியில் பரப்­புரை செய்து தமிழ் மக்­களை புண்­ப­டுத்­திய சம்­ப­வத்தை எமது மக்கள் என்­றுமே மறந்­தி­ருக்­க­மாட்­டார்கள் என யாழ்.மாவ ட்ட வேட்­பா­ளரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.கே.சிவா­ஜி­லி ங்கம் தெரி­வித்தார். வல்­வெட்­டித்­து­றையில் உள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­களைச் சந்­தித்து உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, இந்நாட் டில் வாழ்­கின்ற சிங்­கள, …

  25. திரு.கி.சிவாஸ்கரனை முதன்மை வேட்பாளராகக் கொண்ட சுயேட்சைக்குழு இல.8, ஜம்புக்காய் சின்னத்தில் வடமாகாணசபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. தற்பொழுது எமதுகுழு போட்டியிலிருந்து விலக முடிவு செய்துள்ளது. வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெறுவது உறுதி என்பதை அரசாங்கம் உள்ளிட்ட சகலரும் உணர்ந்துள்ளமையை மக்கள் சந்திப்பினூடாகவும், ஊடக அறிக்கைகளின் மூலமும் அறிந்துகொண்டுள்ளோம். இந்நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் அரசியல் தீர்விற்கும் இடையூறாக இல்லாமல் கூட்டமைப்பின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் நாம் தேர்தலில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளோம். நடைபெறவுள்ள தேர்தல் உள்நாட்டிலும் சர்வதேசரீதியிலும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.