ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143499 topics in this forum
-
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு கடந்த வாரம் வரலாறு காணாத வகையில் சரிவடைந்ததை தொடர்ந்து, இந்த நிலை தொடர்ந்தும் நிலவும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மதிப்பிறக்கம் இலங்கையில் மட்டும் நிலவும் ஒரு விடயமல்ல எனவும், ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தின் பலம் பொருந்திய பொருளாதார சூழ்நிலைகள் நிலவும் நாடுகளிலும் சம காலத்தில் காணப்படும் விடயமாக அமைந்துள்ளதென அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இந்த மதிப்பிறக்கத்துக்கு காரணம், அமெரிக்காவின் வட்டி வீதங்கள் எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளமையாகும் என அறிவிக்கப்படுகிறது. இந்த மதிப்பிறக்கத்தை தவிர்க்கக்கூடிய வகையில் இலங்கை மத்திய வங்கி நாணய மாற்று பெறுமதிகளில் தலையீட்டை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும், நீண…
-
- 1 reply
- 619 views
-
-
குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள கால்நடை வைத்தியர் சுகந்த ஜயவர்தன தெரிவித்தார். மந்திகள் குறைவடைதல், சுற்றாடல் அழிதல் மற்றும் தங்களுடைய வாழ்விடங்கள் மாற்றமடைதல் போன்ற காரணங்களினால் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நுகேகொடை, மாத்தறை மற்றும் வெலிகம ஆகிய பிரதேசங்களில் குழப்பங்களை விளைவித்தது மட்டுமன்றி மனிதர்களை கடித்து குதறிய குரங்குகளில் நான்கு குரங்குகளை பிடித்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே மேற்கண்ட விடயங்கள் தெரியவந்துள்ளன. பத்தரமுல்லை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு கொண்டுவந்தே இந்த குரங்குகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான இன்னும் இரண்டு குரங்குகள் …
-
- 1 reply
- 482 views
-
-
வட மாகாண விவசாய கண்காட்சி இன்று திங்கட்கிழமை வட்டக்கச்சியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டிலான இந்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி, மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் முகமட் ஆர்டின் மற்றும் மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில், வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பயிற் செய்கை முறைகள், கால்நடை வளர்ப்பு, பனை உற்பத்தி போன்ற பல்வேறு விடயங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. (படங்கள்: எஸ்.கே.பிரசாத்) http://tamil.dailymirror.lk/--main/81091-2013-09-02-10-12-47.html
-
- 1 reply
- 321 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்காவிற்கு தகுதியில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகின் பல பகுதியில் அமெரிக்கப் படையினர் உலகின் பல பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இரண்டு தடவைகள் அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறான குற்றச்சாட்டுக்களை நவனீதம்பிள்ளை சுமத்தினாலும், நாட்டின் மெய்யான நிலைமைகளை அறிந்து கொள்வதற்கு இந்த விஜயம் ஏதுவாக அமைந்தது என ஆவர் சுட்டிக…
-
- 0 replies
- 295 views
-
-
இணையத்தளத்தில் தேர்தல் நடத்தினால் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பெறும் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். குருணாகல் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்; ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் இன்று அரசியல் பற்றி பேசுவதில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் ஜனாதிபதி வரை இந்த கட்சிகள் சேறு பூசும் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதுடன் கதைகளை புனைந்து கதைகளை எழுதி கொண்டிருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் இலங்கையில் உள்ள கிராமங்களுடன் இல்லை. அந்த கட்சியின் அரசியல் சர்வதேசத்துடன் மட்டுமே உள்ளது…
-
- 0 replies
- 290 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரான 14ம் இலக்கத்தில் போட்டியிடும் சி.சுகிர்தனை ஆதரித்து, வடமராட்சி கிழக்கின் கிராமங்களுக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், குறித்த கிராமங்களில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு இத்தேர்தலின் முக்கியத்துவம் பற்றி மக்களிடம் எடுத்தியம்பியுள்ளார். குறிப்பாக வடமராட்சி கிழக்கின் வளங்கொழிக்கும் கிராமங்களான மாமுனை, செம்பியன்பற்று, தாளையடி, மருதங்கேணி, உடுத்துறை, வத்திராயன், தாளையடி, மருதங்கேணி கொருக்கிளாய், ஆழியவளை, வெற்றிலைக் கேணி, கட்டைக்காடு போன்ற கிராமங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மக்கள் இவர்களை அன்பாக வரவேற்று தமது ஆதரவை வெளிப்படுத்தினார்கள். இப்ப…
-
- 0 replies
- 257 views
-
-
யாழ்ப்பாணத்தில் மரணமான விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானின், மூத்த சகோதரரின் சடலம், ஜேர்மனி தூதரகத்தின் தலையீட்டின் பேரிலேயே, சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டு, ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக, ஜேர்மனியில் வாழ்ந்து வந்த பொட்டு அம்மானின் மூத்த சகோதரர், சண்முகலிங்கம் சிவஞானகுமார், இரண்டு மாதங்களுக்கு முன்னர் இரகசியமாக யாழ்ப்பாணம் திரும்பியிருந்தார். நல்லூர் கந்தசுமாமி கோவிலுக்கு அண்மையில் கடந்த ஓகஸ்ட் 21ம் நாள், அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போதே அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானதாக, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, சிறிலங்கா காவல்துறையினர் நீதிமன்…
-
- 8 replies
- 1.8k views
-
-
ஐ. நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை எதிர்வரும் காலங்களில் கூடுதல் பங்களிப்பு வழங்கும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய ஐயாயிரம் படையினரை அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தொழில்சார் இராணுவம் என்ற ரீதியில் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணுவம் கூடுதல் பங்களிப்பு வழங்க உத்தேசித்துள்ளது. அதன்படி அதிகளவான படையினரை அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவகின்றது. ஏற்கனவே இலங்கையைச் சேர்ந்த 900 படையினர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் ஹெய்ட்டி மற்றும் லெபனான் ஆகிய…
-
- 9 replies
- 669 views
-
-
இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டு வரையில், தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி, அவர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்த விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 28ம் ஆண்டு நினைவுதினம் இன்று திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது. 28வது நினைவுதின நிகழ்வுகள், யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில், மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதன்போது மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், அமரர் வி.தர்மலிங்கத்தின் புதல்வரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான சிவகுமார்…
-
- 0 replies
- 451 views
-
-
யாழில் துக்கில் தொங்கி உயிரிழந்த இரு மாணவர்களுடைய சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்.கொக்குவிலைச் சேர்ந்த ஒரு மாணவனும், இளவாலைப் பகுதியினைச் சேர்ந்த மற்றுமொரு மாணவியுமே மேற்படிச் சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஆவர். இச் சம்பவங்கள் தொடர்பாக மேலும் தெரியவருவது. யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியல் கல்வி பயிலும் 15 வயதுடைய சூ.டிலக்சன் என்பவர் அவருடைய வீட்டின் அறையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அதே வேளை இளவாலைப் பகுதியினைச் சேர்ந்த வி.உரோமிலா என்னும் 19 வயதுடைய மாணவியும் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் நேற்று இரவு வேளையே தூக்கில் தொங்கிய உயிரிழந்துள்ளனர். இருவர…
-
- 1 reply
- 587 views
-
-
[ சனிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2013, 04:17 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் கற்றுக்கொண்ட படிப்பினைகள் மீது வடக்கு தேர்தலில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள் கவனம் செலுத்துவது அவசியமானது. வடக்குத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவல்ல, பெறக்கூடிய வெற்றியை மேலும் உச்சப்படுத்துவதற்காக - சி.தண்டாயுதபாணி. [இக்கட்டுரையாளர் சி.தண்டாயுதபாணி, எதிர்க்கட்சித் தலைவர், கிழக்கு மாகாண சபை, திருக்கோணமலை] மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண சபைத்தேர்தல் செப்டெம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ளது. அரசாங்கத் தரப்பினர் எதனைத்தான் சொன்னாலும் அனைத்துலக அழுத்தத்தின் காரணமாகவே இத்தேர்தலை நடாத்த வேண்டிய ஒரு கட்டாய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 504 views
-
-
நந்திக்கடலில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்த நவநீதம்பிள்ளைக்கு வடக்கிலுள்ள இராணுவம் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு எவ்வித அதிகாரமுமில்லை என்று தெரிவித்துள்ளது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம். இது குறித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமர சேகர தெரிவித்ததாவது: "வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை முன்வைப்பதற்கு நவநீதம் பிள்ளைக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. தேசிய பாதுகாப்புத் தொடர்பில் ஆட்சியிலிருக்கும் தரப்பே முடிவெடுக்க வேண்டும். வன்னி பயணத்தின் போது நந்திக்கடலில் பிரபாகரனுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்கு நவநீதம்பிள்ளை முயற்சித்துள்ளார். எனினும், அதற்கு அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டதால்…
-
- 1 reply
- 476 views
-
-
மலைநாட்டின் பிற்போக்கு தலைமைகள் தோற்கடிக்கப்பட்டு, புதிய படித்த இளைஞர்களின் கரங்களுக்கு மலையகத்தின் தலைமை மாறவேண்டும். இந்த மலையக மறுமலர்ச்சி மாற்றத்தை, மலையகத்தில் நின்று வாழும் இளைஞர்களுடன் கரங்கோர்த்து தலைநகர் வாழ் மலையக இளைஞர்கள் இனவுணர்வுடன் முன்னிருந்து உறுதி செய்ய வேண்டும். இதை தவிர மலையக விடிவிற்கு வேறு வழியே கிடையாது என ஜனநாயக இளைஞர் இணையம் நடத்திய கலந்துரைக்கூடலில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு பிரைட்டன் மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜனநாயக இளைஞர் இணைய நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது, மலையகத்துக்கு விடிவு வேண்டும். ஆனால் இந்த விடிவு வானத்தில் இருந்து விழாது என்ப…
-
- 0 replies
- 443 views
-
-
வடமாகாண சபைத்தேர்தலில் யாழ்.குடாநாட்டில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தவிர, சிறிலங்கா படையினரின் சிபார்சின் பேரிலும் நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றும் இவர்களால் பெரும் ஆபத்துக்கள் ஏற்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். சிறிலங்காப் படையினரால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நிறுத்தப்பட்டவர்களை மக்கள் இனங்கண்டுள்ளதாகவும் மாவை. எம்.பி கூறினார்.இது சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சபைத்தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் சிபார்சின் பேரில் நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. சிறீலங்கா சுதந்திரக்க…
-
- 0 replies
- 272 views
-
-
வடக்கில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களை அரசாங்கம் வர்த்தமானியின் மூலம் பட்டியலிட்டுள்ளது. வட மாகாணத்தில் 80க்கும் மேற்பட்ட தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை அரசாங்கம் வர்த்தமானியின் மூலம் பட்டியலிட்டுள்ளது. தேசிய மரபுரிமைகள் அமைச்சு 170 வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை வர்த்தமானியில் பட்டியலிட்டுள்ளது. இவற்றில் 83 இடங்கள் வடக்கு மாகாணத்தில் பட்டியிலிடப்பட்டுள்ளது. பௌத்த தாகபைகள் மற்றும் ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன. கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இன்னமும் ஆய்வு நடத்தப்பட உள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் நாயகம் டொக்டர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/ta…
-
- 0 replies
- 345 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. அண்மையில் இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய போது நவனீதம்பிள்ளை சில கருத்துக்களை வெளியிட்டியிருந்தார். இந்த விடயங்கள் குறித்து பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து நவனீதம்பிள்ளை கருத்து வெளியிட்டிருந்தார். நவனீதம்பிள்ளை சட்டம் ஒழுங்கு, தனிமனித சுதந்திரம், ஊடக சுதந்திரம், மாற்றுச் சிந்தனையாளர் ஒடுக்கு முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியுயிருநதார். இந்த அனைத்து விடயங்கள் குறித்து…
-
- 0 replies
- 694 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்காவிற்கு தகுதியில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகின் பல பகுதியில் அமெரிக்கப் படையினர் உலகின் பல பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இரண்டு தடவைகள் அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறான குற்றச்சாட்டுக்களை நவனீதம்பிள்ளை சுமத்தினாலும், நாட்டின் மெய்யான நிலைமைகளை அறிந்து கொள்வதற்கு இந்த விஜயம் ஏதுவாக அமைந்தது என ஆவர் சுட்ட…
-
- 0 replies
- 387 views
-
-
"பௌத்த பேரினவாத செயற்பாடுகளால் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து TNA நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டு வந்தது" அம்பாறைமாவட்ட முஸ்லிம்கள் நலன் பேணும் அமைப்பு நாட்டில் பௌத்த பேரினவாத செயற்பாடுகளால் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்குக் கொண்டு வந்தமைக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் நலன் பேணும் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கையறு நிலையிலிருந்த முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொண்டு செயற்பட்டமைக்கு இந்த நன்றியையும், பாராட்டுதலையும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலு…
-
- 0 replies
- 334 views
-
-
நாட்டில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவே வாழ்கின்றோம். இதை சர்வதேச நாடுகள் குழப்ப நினைத்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ’ கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார். நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டாலும் அதில் இலங்கைக்கு எவ்வித தாக்கமும் ஏற்படப் போவதில்லை. 2300 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட எம் நாட்டிற்கு நவநீதம்பிள்ளை பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசம் கருத்தில் கொள்ளவில்லை. இலங்கை இராணுவத்தினர் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றியதே சர்வதேசத…
-
- 0 replies
- 360 views
-
-
இலங்கைக்கான தனது விஜயத்தின்போது தன்னைச் சந்தித்திருந்த பொது மக்கள் சிலர் அச்சுறுத்தப்பட்டிருந்ததாக மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையால் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அராங்கம் தயாராக இருப்பதா அரசாங்க பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேற்படி விசாரணையை உரியவாறு நடத்தும் பொருட்டு குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான சான்றுகளை நவி பிள்ளையின் காரியாலயம் வழங்க வேண்டுமெனக் கூறினார். நவநீதம்பிள்ளையுடன் கதைத் தோரை அச்சுறுத்தியோ அல்லது அத்தகைய பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியோ சில குழுக்கள் அரசுக்கு அபகீர்த்தியை உண்டு பண்ண முயற்சிக்கலாமெனவும் அவர் தெரிவித்தார். நேற்று மு…
-
- 0 replies
- 225 views
-
-
‘ எனது இந்திய, தமிழ் பாரம்பரியத்தின் அடிப்படையில் இலங்கையிலுள்ள ஊடகங்கள், அமைச்சர்கள், வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு வழிகளிலும் பிரச்சாரம் செய்வோர் பலவருடங்களாக என்னை தமிழீழ விடுதலைப்புலிகளின் கையாள் என கூறினர். நான் புலிகளிடமிருந்து சம்பளம் பெறுவதாகவும் அவர்கள் கூறினார். ஐ.நாவிலுள்ள பெண் புலி என்றனர். இது தவறானது மட்டுமன்றி மனதை நோக்கடிப்பதாகும்.’என அவர் கூறினார். இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று சனிக்கிழமை நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், இந்த மூன்று அமைச்சர்களின் கூற்றுக்காக ஜனாதிபதி தன்னிடம் தனிப்பட்ட முறையில் ம…
-
- 29 replies
- 2.4k views
-
-
இராணுவத்தின் 631வது படையணிப்பிரிவும் கண்டி பௌத்த நிறுவனமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. கண்டியிலிருந்து 55 பஸ்களில் 2500 சிங்களவர்கள் அங்கு வந்திருந்தனர்.அம்பாறை மாவட்டத்திலிருந்தும் சுமார் 1100 பேரளவில் கலந்துகொண்டனர். இராணுவத்தின் அம்பாறை மாவட்ட கட்டளையிடும் தளபதி பிரிகேடியர் ஹரேன் பெரேரா 631வது படையணிப்பிரிவின் கட்டளைத்தளபதி கேர்ணல் பியந்த கமகே மற்றும் பௌத்த பிக்குகள் கலந்துகொண்டனர். ஏராளமான பௌத்த பிக்குகள் கலந்துகொண்டதோடு இராணுவத்தினரும் கலந்துகொண்டனர். வெண்ணிறஉடை தரித்த பௌத்த மக்கள் தீகவாபி வளாகம் பூராக சாது சாது என கோசமிட்டவாறு தரித்திருந்தனர். முதலில் நீண்ட ஊர்வலம் இடம்பெற்றது. பின்னர் வளாகத்தில் சமய ஆராதனைகள் இடம்பெற்றன. தீகவாவி புத்த பிக்குகளால் ஆக்கிர…
-
- 5 replies
- 731 views
-
-
இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதன்பிள்ளை, பயங்கரவாதிகளின் மனைவிமாரைச் சந்தித்து பேச்சு நடத்தியதாகவும், பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்ட சிலர் இம்முறை வடக்குத் தேர்தலில் தமிழக் கூட்டமைப்பு சார்பாக களமிறக்கப்பட்டுள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டிற்குள் இயங்கிவரும் சில சக்திகள் குறித்து மாத்திரம் கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமெரிக்காவிற்கு அஞ்சத் தேவையில்லை எனத் தெரிவித்துளு;ளார். நவநீதன்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் பின்னர் இலங்கை …
-
- 0 replies
- 578 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை கடமை தவறி செயற்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச அமைப்பு ஒன்றின் உயர் அதிகாரி என்ற ரீதியில் தமது அதிகாரங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அரசியல் ரீதியான கருத்துக்களை நவனீதம்பிள்ளை வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை எதேச்சாதிகாரத்தை நோக்கி நகர்வதாக நவனீதம்பிள்ளை வெளியிட்டுள்ள கருத்து அரசியல் பின்னணியைக் கொண்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிச்சக்திகள் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என தெரிவித்துள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial…
-
- 2 replies
- 815 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு அகற்றப்பட்ட காவலரண்கள் மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டுள்ளமையானது அரசு சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு அரங்கேற்றிய கபட நாடகமாகும் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்தார். இவர் வருகையை முன்னிட்டு ஆணையிறவு மற்றும் யாழ். குடாநாட்டிலிருந்த இராணுவ காவலரண்கள் அகற்றப்பட்டதுடன் இராணுவத்தினரின் ரோந்து சேவையும் இடை நிறுத்தப்பட்டிருந்தது. வீதிகளிலும் இராணுவத்தினரைக் காண முடியாது அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்தது. …
-
- 3 replies
- 502 views
-