ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
கடலூரில், வெடிகுண்டு சோதனை நடத்திய வழக்கில், தேடப்பட்டு வந்த, விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவர், சென்னையில், கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிவனேசன் மற்றும் மகேஸ்வரன் என்ற கோபி. முள்ளிவாய்க்கால் சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இவர்கள் இருவரும், தமிழகத்திற்கு தப்பி வந்தனர். இவர்கள், கடலூர் மாவட்டத்தின் முந்திரிக் காட்டில், மேலும் நால்வருடன் சேர்ந்து, வெடிகுண்டு சோதனை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டனர்.. போலீசார் விரைந்து சென்று உடன் இருந்த, நால்வரை கைது செய்ததாக அறிவித்தது. சிவனேசன், கோபி இருவரும் தப்பியதாகவும் இருவரையும் தேடிவந்த நிலையில், அவர்கள் சென்னையில் உள்ளனர் என்ற இரகசிய தகவல் அடிப்படையில் கைது ச…
-
- 2 replies
- 411 views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு சற்றுமுன் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நவநீதம்பிள்ளையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக சந்திக்க மாட்டாரென்றும் தொலைபேசியிலேயே உரையாடுவார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அலரிமாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்நிலையிர் இவ்விருவருக்கு இடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து வெளியிடப்படவில்லை. http://www.virakesari.lk/article/local.php?vid=6766
-
- 5 replies
- 607 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்துவரும் ஐ நா மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை அவர்களைச் சந்தித்து, கள நிலவரம் குறித்து எடுத்துக் கூறிய சிலர் மிரட்டப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது. நவி பிள்ளை அருட்தந்தை பிரபாகரன் மாற்று மீடியா வடிவில் இயக்க ஐ நா மனித உரிமை ஆணையர் நவி பிள்ளையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு இன்று கொழும்பில் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பின் போது, திருகோணமலையில் நவி பிள்ளையை சந்தித்த இரு பாதிரிமார்கள் சிலர் விசாரிக்கப்பட்டதாக தாம் நவி பிள்ளையின் கவனத்துக்கு கொண்டு வந்ததாக இந்த சந்திப்பில் கலந்து கொண்ட சுரேஷ் பிரேமசந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார். சர்வதேச விசாரணை தொடர்புடைய விடயங்கள் போ…
-
- 1 reply
- 399 views
-
-
விடுதலைப்புலிகள் தனது தாய் மற்றும் தந்தையை பட்டபகலில் படுகொலை செய்த போது இலங்கை மீது போர் குற்றம் சுமத்தும் தரப்பினர் அமைதியாக இருந்தனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு காராசாரமாக இருந்தாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சாம் தம்பிமுத்து மற்றும் அவரது மனைவி ஆகியோர் புலிகளினால் கொலை செய்யப்பட்டனர். அன்று தமது பெற்றோரை கொலை செய்த புலிகள் சிறுவனாக இருந்த தன்னையும் கடத்திச் சென்றதாக அருண் தம்பிமுத்து, மனித உரிமை ஆணையாளரிடம் கூறியுள்ளார். இன்று மனித உரிமைகள் குறித்து கு…
-
- 3 replies
- 775 views
-
-
உலகத்தின் மிகப் பெரிய சபையாகிய ஐக்கிய நாடுகள் சபையையே மகிந்தவும் சிங்களப் படையினரும் ஏமாற்றிக்கொண்டிருப்பதாக வன்னிப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஐ.நாவின் மனித உரிமைக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவில் நிற்கின்ற போதே ஐ.நாவிற்கு எதிரான செயற்பாடுகளில் மகிந்தவும் படையினரும் ஈடுபட்டுள்ளனர் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர். வன்னியில் இருந்த படையினரின் சில காவலரண்கள் நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு அகற்றப்பட்டிருந்தன. அந்த காவலரண்கள் நவநீதம்பிள்ளை வன்னியை விட்டு அகன்றவுடன் மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே வன்னி மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு வன்னியிலிருந்து அகற்றப்பட்ட காவலரண்கள் ம…
-
- 1 reply
- 780 views
-
-
குளோபல் தமிழ்ச்செய்திகளின் விசேட செய்தியாளர் : கொழும்பில் உள்ள ஐக்கியநாடுகள் சபை அலுவலகத்தில் பணியாற்றும் சிங்கள அதிகாரிகள் கடுமையாக செயற்படுவதாக இன்றைய சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் குளோபல் தமிழ்ச்செய்திகளுக்கு கூறினார். ஏழு ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளை இன்று பிற்பகல் 4 மணிக்கு சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அமைப்புகளில் இருந்தும் ஏழு பிரதிநிதிகள் அலுவலகத்துக்கு சென்றபோது ஐந்து பேருக்கு மாத்திரமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் குழப்பமடைந்த ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கு நின்ற சிங்கள பெண் அதிகாரியுடன் தர்க்கப்பட்டனர். ஆனாலும் அவர் இணங்கவில்லை. இதனால் ஏனைய மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகளும் வெளி…
-
- 2 replies
- 494 views
-
-
காணொளி : 'இலங்கை வேறு, ராஜபக்ஷே அரசு வேறு. ராஜபக்ஷே அரசுதான் நமது எதிரி. இலங்கை அல்ல" - ஞானதேசிகன் http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=8906:------------q-&catid=332:2012-09-04-07-30-59&Itemid=548
-
- 6 replies
- 566 views
-
-
வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுகந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் செவ்வேளின் அலுவலகத்தின் மீது இனந்தெரியாத மர்மநபர்கள் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிகாலை ஒரு மணியளவில் இவ் அலுவலகத்திலில் வாகனத்தில் சென்ற ஆயுததாரிகள் செவ்வேளின் அலுவலகத்திற்குள் அத்துமீறி உள்நழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இவருடைய வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் தாரிகள் செவ்வேளின் புகைப்படங்கள் மீதும் கறுப்பு மைபூசி சேதப்படுத்தியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது தேர்தல் திணைக்களத்திலும் முறையிடப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பாக வேட்பாளர் செவ்வேளிடம் கேட்ட…
-
- 1 reply
- 328 views
-
-
பயங்கரவாதத்தடைச்சட்டம் கடந்த 30 வருடங்களாக இலங்கையில் அமுலில் இருக்கின்றது. அதன் திருத்தச்சட்டமூலம் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. அந்த பயங்கரவாதத்தடைச்சட்டத்தை துர்ப்பிரயோகம் செய்யமாட்டோம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்க்கும் இடையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கம்பஹா, ரத்துபஸ்வலவைச்சேர்ந்த மக்கள் சுத்தமான தண்ணீர் கேட்டு வெலிவேரியவில் நடத்திப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்…
-
- 2 replies
- 432 views
-
-
வெலிவேரிய ரத்துபஸ்வல கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து சித்தம்ம தேரர், பிரதேசத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தொழிற்சாலைக்கு எதிராக மீண்டும் நேற்று சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். பிரதேசத்தில் அந்த சர்ச்சைக்குரிய தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்குவதை எதிர்த்தே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலை இயங்குவது சட்டவிரோதமானது என குற்றம் சுமத்தியுள்ள சித்தம்ம தேரர், நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மீறி இந்த தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்கி வருவதாகவும் கூறியுள்ளார். சுத்தமான குடிநீர் கேட்டு மக்கள் நடத்திய போராட்டத்தினையடுத்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால்,குறித்த தொழிற்சாலை அங்கிருந்து அகற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த நி…
-
- 0 replies
- 216 views
-
-
பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட 100 கோடி ரூபா பெறுமதியான, 100 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இதுவரை கைப்பற்றப்பட்ட அதிகமான ஹெரோயின் தொகை இதுவெனக் கருதப்படுகிறது. கொழும்பு, ஒருகொடவத்த சுங்கப் பிரதேசத்தில் வைத்து இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து 40 அடி நீளமான கொள்கலனில் இந்தப் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கலனில் 250 கிராம் அடங்கிய 17,500 ரின் கீறிஸ் இருந்ததாகவும், இவற்றில் 5000 ரின்களில் போதைப்பொருள் இருந்ததாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிறிஸ் ரின்களின் பொதிகளுக்கே மேலே, ''இவை பாகிஸ்தான் போதைத் தடுப்புப் பொலிஸாரினால் பரிசோதனை செய்யப்ப…
-
- 0 replies
- 471 views
-
-
கொழும்பு, மட்டக்குளி கெமுனுபுர பகுதியில் சுமார் 30 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. வீடொன்றில் இருந்த குப்பி விளக்கொன்று கீழே விழுந்து தீ பரவியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது இராணுவத்தினரை தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலதிகமான தகவல்களை எதிர்பார்க்கவும். http://www.sankathi24.com/news/32678/64/30/d,fullart.aspx
-
- 1 reply
- 516 views
-
-
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. இலங்கையின் தென்பகுதியில் 1970-1980 ஆண்டுக்களில் பலர் காணாமல் போயினர். இதனை தவிர போர் காலத்தின் போது அதிகமானோர் காணாமல் போயியுள்ளனர். இந்தநிலையில் குறித்த பிரச்சினையை ஆராய அண்மையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தக்குழு உரியமுறையில் நீதியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. இதுவே நாட்டை முன்னேற்ற வழியில் இட்டுசெல்ல வழிவகுக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. http://www.sankathi24.com/news/32677/64//d,fullart.aspx
-
- 0 replies
- 418 views
-
-
சிறிலங்காவில் மனித உரிமைகள் பேணப்பட்டு வருகின்ற விதம் குறித்து எதிர்வரும் செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். அத்துடன் முழுமையான அறிக்கையை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டதொடரில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் எஸ் நவநீதம் பிள்ளைக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, சிறிலங்காவில் காணாமல் போனவர்கள் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச …
-
- 0 replies
- 396 views
-
-
யுத்த காலத்திலும், யுத்தத்தின் பின்னரும் இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈராக்கிற்கு அடுத்தபடியாக, இலங்கையில், 1980 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 12ஆயிரம் பேர் வரை காணாமல் போயுள்ளனர். எனினும், காணாமல் போனோரின் எண்ணிக்கை 30 ஆயிரமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் உரிய விசாரணைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை இது குறித்து, பொய்யான வாக்குறுதிகளே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபையின் சிறீலங்காவுக்கான நிபுணர் யொலன்டா…
-
- 0 replies
- 452 views
-
-
வெலிவேரிய ரத்துபஸ்வல கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து சித்தம்ம தேரர், பிரதேசத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தொழிற்சாலைக்கு எதிராக மீண்டும் இன்று சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். பிரதேசத்தில் அந்த சர்ச்சைக்குரிய தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்குவதை எதிர்த்தே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலை இயங்குவது சட்டவிரோதமானது என குற்றம் சுமத்தியுள்ள சித்தம்ம தேரர், நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மீறி இந்த தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்கி வருவதாகவும் கூறியுள்ளார். சுத்தமான குடிநீர் கேட்டு மக்கள் நடத்திய போராட்டத்தினையடுத்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால்,குறித்த தொழிற்சாலை அங்கிருந்து அகற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. …
-
- 1 reply
- 388 views
-
-
நடைபெற இருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட் டில் இலங்கை அரசாங்கத்தை குற்றவாளியாக நிரூபிக்கும் செயற்பாட்டிலேயே நவநீதம்பிள்ளை மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எனவே நவநீதம் பிள்ளையின் அறிக்கை அரசிற்கு மட்டும் பிரச்சினையல்ல.முழு இலங்கைக்கும் பிரச்சினையை ஏற்படுத்துமென்று தேசப்பற்றுள்ள தேசியஇயக்கம் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவு இலங்கைக்கு கிடைப்பதனை நவநீதம்பிள்ளையின் மூலமாக தடுத்து விடுதலைப்புலிகளின் செயற்பாட்டினை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவரவே ஐ.நா.முயல்கின்றது எனவும் தேசப்பற்றுள்ள தேசியஇயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர குற்றம்சுமத்தியுள்ளார். நவநீதம் பிள்ளையின் அறிக்கை சுயாதீனமானத…
-
- 3 replies
- 577 views
-
-
மலையகத்தில் கடந்த மூன்று மாதங்களாக பெய்த கடும் மழை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு இருந்ததோடு கடந்த இரண்டு வாரங்களாக வெயில் காலநிலை காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்று (29) பிற்பகல் டிக்கோயா சமர்வில் தோட்டத்தின் கீழ் பிரிவில் வீசிய மினி சூறாவளி காரணமாக 11 வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகளின் கூரைகள் காற்றில் பிடுங்கி எறியப்பட்டுள்ளதுடன் வீடுகளினுள் காணப்பட்ட பாடசாலை உபகரணங்கள் உட்பட அனைத்து பொருட்களும் மழையில் நனைந்துள்ளன. இந்த வீடுகளில் இருந்தவர்கள் நேற்று இரவு தற்காலிகமாக அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். நேற்று இரவு உணவை தோட்ட முகாமை வழங்கியுள்ளதுடன் இன்று (30) அவர்களுக்கான உதவிகளை அம்பகமுவை பிரதேச செயலகம் ஊடாக செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளத…
-
- 0 replies
- 216 views
-
-
வவுனியா, சுந்தரபுர பிரதேசத்திலுள்ள பாடசாலை வளாகத்தில் இருந்து இளைஞனொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சுந்தரபுரத்தை சேர்ந்த 31 வயதுடைய சாந்தகுமார் சதீஸ்வரன் என்ற இளைஞனே இவ்வாறு இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மத்தியகிழக்கு நாடொன்றில் இருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் நாடு திரும்பியிருந்தார். இவர் நேற்று (29) மாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்றிருந்த சமயம் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை அவரை உறவினர்கள் தேடியபோதே பாடசாலை வளாகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக அக்கிராமத்தின் கிராம சேவகர் தெரிவித்தார். இவரது சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்து மது போத்தல்கள் காணப்பட்டதாகவும் தெர…
-
- 0 replies
- 402 views
-
-
விசா இல்லாமல் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரும் எவரும் அங்கு குடியமர முடியாது என ‘அவுஸ்திரேலியா அரசாங்கம் விடுக்கும் செய்தி’ என்ற துண்டுப் பிரசுரங்கள் மூலம் வீடு வீடாக மக்களை அறிவுறுத்தும் செயற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த யூலை 19ம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய சட்டத்திற்கமைய விசா இல்லாமல் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தரும் சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் பப்புவா நியூகினிக்கு அனுப்பி வைக்கப்படுவர். நீங்கள் அகதிகளாக அடையாளம் காணப்பட்டாலும் இப்போது பப்புவா-நியூகினியிலேயே குடியமர்த்தப்படுவீர்கள். அகதிகள் அல்லாத குடியேற்றக்காரர்கள் தமது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். ஆட்கடத்தல் காரர்களின் …
-
- 0 replies
- 441 views
-
-
இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 41 பேரின் விளக்கமறியல் மன்னார் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. இருவேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டிருந்த இந்த மீனவர்கள் மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இன்று ஆஜர்செய்யப்பட்டனர். இதன்போது இந்த மீனவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 22ஆம் திகதி இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 மீனவர்களும், வவுன…
-
- 1 reply
- 364 views
-
-
இலங்கையில் மனித உரிமைகள் பேணப்பட்டு வருகின்ற விதம் குறித்து எதிர்வரும் செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதோடு, முழுமையான அறிக்கையை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டதொடரில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் எஸ் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் எஸ் நவநீதம் பிள்ளைக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கையில் காணாமல் போனவர்கள் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகள் தொடர்பில் வலியுறுத்தப்பட்ட…
-
- 1 reply
- 534 views
-
-
வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஐங்கரநேசன் வீட்டின் மீது இனம்தெரியாதவர்களால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டு வீட்டு வாசலில் பூசணிக்காய் வெட்டி வைக்கப்பட்டுள்ளது. யாழ். திருநெல்வேலி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டு மதில் மற்றும் வாசல் கதவு என்பவற்றுக்கு நேற்று (29) நள்ளிரவு இனம் தெரியாத நபர்களினால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டு உள்ளதுடன் பூசணிக்காய் ஒன்றும் வாசலில் வெட்டி வைக்கப்படுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஐங்கரநேசன் ஊடகவியலாளா்களிடம் தெரிவித்துள்ளார். அதேவேளை நேற்று முன்தினம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான செவ்வேளின் அலுவலகத்தின் மீது கல்லெறி தாக்குதல் நடைபெற்றதுடன்…
-
- 1 reply
- 475 views
-
-
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் குழுவுக்கும் இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் ஒரு மணி நேர முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. காலை 8.15க்கு இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வட மாகாணசபைத் தேர்தலின் த.தே.கூ முதலமைச்சர் வேட்பாளரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பல்…
-
- 1 reply
- 657 views
-
-
சிறையில் கொல்லப்பட்ட நிமலரூபனின் தாயை அரவணைத்தார் நவநீதம்பிள்ளை - 27 ஆகஸ்ட் 2013 குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் சிறையில் கொல்லப்பட்ட நிமலரூபனின் தாயை அரவணைத்தார் நவநீதம்பிள்ளை - வவுனியா விளக்க மறியல் சிறைச்சாலையில் வைத்து கொலை செய்யப்பட்ட நிமலரூபனின் தாயார் கதறியதைக் கண்ட நவநிதம்பிள்ளை அவரை அரவணைத்து ஆறுதல் படுத்தியுள்ளார். புலிச் சந்தேகநபர் என்று கருதப்பட்டு கணேசன் நிமலரூபன் கைது செய்யப்பட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கைதிகளுக்கும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது திட்டமிட்டு தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நிமலரூபனின் தாயார் இன்றைய தினம் யாழில் நடந்த காணாமல் பொன உறவுகளின…
-
- 26 replies
- 1.9k views
-