ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
கொழும்பு லிபர்ட்டி எலைட் திரையரங்கில் நேற்று (24) திரையிடப்பட்ட இலங்கை யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட "மெட்ராஸ் கபே" திரைப்படத்தில் ஆங்கில உபதலைப்பு இல்லாததை அடுத்து படத்தைப் பார்க்க வந்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக "ஸ்ரீலங்கா மிரர்" க்கு தெரியவந்துள்ளது. ஹிந்தி மொழியில் உள்ள இந்த படத்தை ஆங்கில உபதலைப்பு இல்லாமல் பார்க்க முடியாது எனவும் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறியவர்கள் இந்த படத்தைப் பார்ப்பதற்காக செலுத்திய 300 ரூபா கட்டணத்தையும் மீளப் பெற்றுக் கொண்டே சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. என்றபோதிலும் அவர்கள் தங்களுடைய பணத்தை மீள வழங்கும் போது திரையரங்கின் நிர்வாகி, இந்தப் படத்த…
-
- 7 replies
- 750 views
-
-
சீன பெருஞ்சுவர் இலங்கையை சுற்றி அமைக்கப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்துராகாரே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். எதிர்காலத்தில் சீன மொழியை அறியாமல் எதனை செய்ய முடியாத நிலைமை உருவாகும். நாட்டில் உள்ள நாம் சிங்களம், தமிழ், ஆங்கலம் ஆகிய மொழிகளை கற்றுக்கொண்டாலும் எதிர்காலத்தில் சீன மொழியை கற்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். யாழ்ப்பாணம், திருகோணமலை, புத்தளம், நுரைச்சோலை, அக்கரைபற்று, அம்பாந்தோட்டை பிரதேசங்களில் சீனர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். அத்துடன் நாட்டின் அனைத்து இடங்களிலும் சீனர்கள் உள்ளனர். இன்னும் இரண்டு தசாப்தங்களில் இலங்கை முற்றாக மாறிவிட…
-
- 1 reply
- 430 views
-
-
சிறிலங்காவில் உள்ள உறங்கும் உளவாளிகளால் (sleeper cells)தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக, தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவான கியூ பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா வழியாக இந்தியாவின் தென் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்காக, லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட எச்சரிக்கை குறித்து, கியூ பிரிவு அதிகாரிகள் ரைம்ஸ் ஒவ் இந்தியாவிடம் கருத்து வெளியிட்டுள்ளனர். “உள்ள உறங்கும் உளவாளிகளால் தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு நிச்சயமாக அச்சுறுத்தல் உள்ளது. ஆனால் சிறிலங்காவில் உள்ள நிலைமை எமக்குத் தெரியவில்லை. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்ன…
-
- 2 replies
- 434 views
-
-
[அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட The Global Mail என்னும் ஊடகம் 'HOW NOT TO WIN A WAR' என்னும் கட்டுரைத் தொடர் ஒன்றை வெளியிட்டு வருகின்றது. இதுவரை மூன்று பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. ERIC ELLIS எழுதியுள்ள அக்கட்டுரைத் தொடரின் முதல் பகுதி இது. இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி] சிறிலங்காத் தீவில் தமிழ்ப் புலிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட 26 ஆண்டுகால நீண்ட உள்நாட்டு யுத்தமானது நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டுகளின் பின்னர், தற்போது சிறிலங்கா அரசாங்கமானது இத்தீவில் சமாதானமும் ஒற்றுமையும் நிலைநாட்டப்பட்டுள்ளதாக உலகை நம்பவைக்க வேண்டிய நிலையிலுள்ளது. பாங்கொங்கிலிருந்து புறப்பட்ட சிறிலங்கா எயர்லைன்ஸ் 423 விமானத்தின் விமானி சிறிலங்காத் தீவில் தற்போது அ…
-
- 2 replies
- 389 views
-
-
நாணயக்கார - விக்னேஸ்வரன் போன்ற சம்பந்திகள் போல் ஆயிரக்கணக்கில் உருவாக வேண்டும்: குசலஞான தேரர் ‘‘இலங்கையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் போன்ற சம்பந்திகள் போல் ஆயிரக்கணக்கில் உருவாக வேண்டும். அப்போது தான் இன மத தீவிரவாதம் தகர்த்தெறியப்படும் நல்லுறவு நிலவும். இவ்வாறு கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் சனியன்று இடம்பெற்ற சர்வமத தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய நுவரெலியா மாவட்டம் சார்பில் பேசிய வண. குசலஞான தேரர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், நாம் எல்லோரும் மனிதர்கள் பிறந்த வகையில் நாம் இன மதம் கொண்டு பிரிக்கப்பட்டிருக்கிறோம். இது தற்காலிகமானது. அதை மறந்து இனங்களுக்குள்ளே திருமணம் செய்யும் போது பல விபரீத …
-
- 2 replies
- 550 views
-
-
யுத்த காலத்தில் வடக்கு கிழக்கில் பல ஆயிரம் சிங்களவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளே காரணம் என்றும் இது குறித்து திருகோணமலைக்கு வரும் நவநீதம்பிள்ளையிடம் முறையிடப் போவதாகவும் வடக்கு, கிழக்கு சிங்கள அமைப்பின் செயலாளர் ஆர்.எம்.ஏ. பண்டார தெரிவித்துள்ளார். மேலும் புலிகளால் கொலை செய்யப்பட்ட 262 சிங்களவர்களின் பெயர் பட்டியல்கள் அடங்கிய மகஜரையும் நவநீதம்பிள்ளையிடம் கையளிக்க உள்ளதாகவும் பண்டார தெரிவித்துள்ளார். http://tamilworldtoday.com/?p=29490
-
- 3 replies
- 569 views
-
-
சண்டே லீடர் இணை ஆசிரியர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்கிரம வீட்டினுள் நுழைந்து, அச்சுறுத்தியவர்களில் இருவர் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் இராணுவத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளவர்கள் என்றும், இந்தச் சம்பவத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் சிறிலங்கா இராணுவம் மறுத்துள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலையில் பம்பலப்பிட்டியில் உள்ள சண்டே லீடர் இணை ஆசிரியர் மந்தன இஸ்மாயில் அபேவிக்கிரமவின் வீட்டுக்கள் 5 பேர் புகுந்து அவரை கத்திமுனையில் மிரட்டியதுடன், தேடுதல் நடத்தினர். இரண்டரை மணிநேரமாக வீட்டுக்குள் அவர்கள் தேடுதல் நடத்திக் கொண்டிருந்த போது, ஊடகவியலாளரான அவரது கணவர் ரமேஸ் அபேவிக்கிரம கடமை முடிந்து வீடு திரும்பியிருந்தார். வீட…
-
- 3 replies
- 431 views
-
-
வெலிவேரலிய, ரத்தபஸ்வல மக்களின் எளிமையான கோரிக்கையான அடிப்படை கட்டணம் இன்றி குழாய் நீரை கட்டமைப்பை வழங்குவதற்கு அதிகாரிகள் உடனடியாக செல்பட வேண்டும் என கல்ஒலுவ சம்முத்தி ஜயந்தி விகாரையின் தெரிபெஹ சிறிதம்ம தேரர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ''எமது மக்களின் எளிமையான கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த விவகாரத்தின் ஊடாக மூன்று உயிர்களைப் பறித்துக்கொண்டனர். இன்னும் ஏராளமானோர் காயமடைந்தனர். அந்த அனைவரையும் நாம் ஆசீர்வதிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பயணத்தில் வெற்றிபெற வேண்டும். அடிப்படை கட்டணம் இன்றி குழாய் நீர் கட்டமைப்பை செய்துதருமாறே நாங்கள் தற்போது கோருகின்றோம். குடிநீர் கட்டணத்தைச் செலுத்துவதில்லை எமக்கு ச…
-
- 2 replies
- 408 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் வரும் ஒக்ரோபர் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், ஜி.எல்.பீரிஸ், கொழும்பு வருமாறு, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதன்போது, வரும் ஒக்ரோபர் மாதம் நிச்சயம் கொழும்பு வருவதாக சல்மான் குர்ஷித் உறுதியளித்துள்ளார். வரும் செப்ரெம்பர் 21ம் நாள் நடக்கவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இந்தத் தேர்தல் முடிந்த பின்னர், சிறிலங்கா சென்று அது தொடர்பாக ஆராய்வதற்கு சல்மான் குர்ஷித் திட்டமிட்டுள்ளார். வரும் நொவம்பர் மாதம், கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதா இல்லையா என்பத…
-
- 1 reply
- 391 views
-
-
ஈழத்துச் சிறுவனான அபிநாவ் சந்திரமோன் (9 வயது) லண்டனில் இடம்பெற்ற கணிதப் போட்டியில் "ஏ" தரத்தில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த அபிநாவின் குடும்பம் ஜேர்மனியில் இருந்து 2006ம் ஆண்டில் லண்டனுக்குச் சென்றுள்ளனர். லண்டன் லூடொன் மாநிலத்தில் வசிக்கும் அபிநாவ், தனது 7வயதில் GCSE பாடத்தில் உயர் மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து அபிநாவின் அம்மா வாணி சந்திரமோகன் கருத்து வெளியிடுகையில், நான் நிலவில் இருப்பது போல் உள்ளது. மகன் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தான் எனக்கு கணிதப் பரீட்சையில் "ஏ" தரம் கிடைக்குமென்று. மிகவும் நம்பிக்கையாக இருந்தான். விளையாட்டைப் போலவே இந்தப் பரீட்சையையும் விரும்பினான். உண்மையில் பரீட்சை…
-
- 41 replies
- 2.2k views
-
-
தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், சிறிலங்காவுடனான உறவு பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித். தமிழ்நாட்டு மீனவர்கள், சிறிலங்கா கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவது தொடர்பாக, இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட கவனயீர்ப்புத் தீர்மானம் மீதான விவாதத்துக்கு, பதிலளிக்கும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் அவர், “சிறிலங்கா சிறைகளில் தற்போது 106 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பிரச்சினையை சிறிலங்கா அரசு மனிதாபிமான அடிப்படையில் கையாண்டு, அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இந்திய மீனவர்களின் பிரச்சினை உணர்ச்சிபூர்வமானது.…
-
- 5 replies
- 633 views
-
-
இலங்கை சர்வதேச ரீதியான சவால்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு குறித்த பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். ரத்மலானை கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்த வெற்றியின் பின் இந்நிலை ஏற்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின் உள்நாட்டு விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ள அவர், சர்வதேச விவகாரங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகள் வலுவானதாக இல்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் உள்நாட்டில்…
-
- 5 replies
- 739 views
-
-
இலங்கையிலிருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: நாட்டின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் இடம ளிக்கப் போவதில்லை. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த விருப்பவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இப்படியான ஆபத்து ஏதும் அங்கு இல்லை. பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை படையினர் எடுப்பர். யாழ்ப்பாணத்தில் 99 வீதம் தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர். அங்கு படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவ…
-
- 0 replies
- 636 views
-
-
ஒருவார கால விஜயமாக இலங்கை சென்றுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை, காணாமல்போனவர்களின் உறவினர்களை எதிர்வரும் 29ம் திகதியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை 30ம் திகதியும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இறுதிப் போரின்போது காணாமல் போனவர்களும் சரணடைந்தவர்களில் பலரும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் தமக்கு முறையிட்டிருப்பதாக காணாமல்போனவர்களை தேடியறியும் குழுவினர் சுட்டிக்காட்டினர். பல ஆண்டுகளாக காணாமல்போயிருந்த பலர் முகாம்களிலிருந்து விடுதலையாகி வந்துள்ளதாகவும் காணாமல்போன பலர் இவ்வாறு இரகசிய முகாம்களில் இருப்பதாக உறவினர்கள் முன்வைக்கும் முறைப்பாட்டை ஐநாவின் மனித உரிமைகள் ஆணையரிடம் சுட்டிக்காட்ட இருப்பதாகவும் காணாமல்போன…
-
- 0 replies
- 637 views
-
-
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்களிடம் இருந்து அதி நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய 12 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சர்வதேச மட்டத்தில் உள்ள புலிகளின் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களிடம் பேசுவதற்காக இந்த தொலைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக சிறைச்சாலை பேச்சாளர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்ததுடன் அவருடன் இந்த தொலைபேசிகளை பயன்படுத்தி தொடர்பு கொள்ளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. நவநீதம்பிள்ளை வெலிகடை மற்றும் யாழ்ப்பாணம் சிறைகளில் உள்ள புலிகளின் சந்தேக நபர்களை சந்திக்கும் திட…
-
- 1 reply
- 423 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையை கண்டித்து 'ராவணா சக்தி' எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது. கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகி;ன்றது. இதனால் பௌத்தாலோக மாவத்தை மற்றும் தும்முள்ள சந்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/80283-2013-08-26-07-07-57.html ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் வருகையை கண்டித்து ராவணா சக்தி அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது. கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (படங்கள்:பிரதீப் …
-
- 1 reply
- 388 views
-
-
கடத்தப்பட்டு காணாமல் போனோர் மற்றும் போரின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போனோர் சார்பில் பரந்தனில் நாளைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி செல்லும் வேளையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பரந்தன் சந்திக்கு அண்மையில் இடம்பெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அன்னையர் முன்னணி மற்றும் காணாமல் போனோர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டத்தில் உறவுகளை பறி கொடுத்தவர்கள், காணாமல் போனவர்கள் உரிய ஆவணங்…
-
- 0 replies
- 326 views
-
-
தமிழகத்துக்குள் 32 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக இலங்கையில் இருந்து தூத்துக்குடி, மணியாச்சி ரயில் நிலையத்துக்கு கிடைத்த மர்ம தொலைபேசி தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மணியாச்சி ரயில் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தியுள்ள நபரொருவர் தான் இலங்கையிலிருந்து பேசுவதாகவும் தமிழகத்துக்குள் மொத்தம் 32 தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கின்றனர் என்று எச்சரித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். நேற்று முன்தினம் விடுக்கப்பட்ட அந்த தொலைபேசி அழைப்பு இலங்கையில் எங்கிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தொடர்பில் கண்டறிவதற்காக இலங்கை பொலிஸாரின் உதவியை தமிழக பொலிஸார் நாடியுள்ளனர். ஏற்கெனவே இரண்டு முறை இந்திய மத்திய உளவுத்துறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. …
-
- 0 replies
- 334 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பெலாரஸிற்கு சென்றுள்ளார். பெலாராஸ் நாட்டை சென்ற ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்படுவதை படங்களில் காணலாம். http://tamil.dailymirror.lk/--main/80221-2013-08-25-13-51-00.html
-
- 1 reply
- 324 views
-
-
இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்துள்ள நான், யாரையும் எதனையும் விமர்சிக்க வருகைதரவில்லை ஆனால், மனித உரிமைகளில் கவனம் செலுத்துவேன் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சபையின் கொழும்பு அலுவலக பிரதிநிதிகளை கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் சந்தித்ததன் பின்னர் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் ஒருவார காலத்திற்கு மட்டுமே நான் தங்கியிருப்பேன். அக்காலப்பகுதியில் வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்யவிருப்பதுடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக பிரதிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவ…
-
- 2 replies
- 457 views
-
-
யாழ்.மாவட்ட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் அடியாட்கள் கொடிகாமம் மீசாலைப் பகுதியில் பொது மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சம்பவத்தினால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் மீசாலைப் பகுதியிலுள்ள பஸ்தரிப்பு நிலையம் ஒன்றை பொது மக்கள் தமது சொந்தப் பணத்தினைச் செலவு செய்து புனரமைப்பு செய்து வைத்திருந்தனர். இந்த பஸ் தரிப்பு நிலையத்தில் அங்கஜனின் குண்டர்கள் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை ஒட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது புனரமைப்பிற்கான பணத்தினை வழங்கிய அன்பர் ஒருவர் அதனை தடுக்க முயன்றுள்ளார். இதன்போது குண்டர்கள் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட வேளை பொது மக்கள் அவரை காப்ப…
-
- 1 reply
- 669 views
-
-
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்று வரும் ஈழத்தவர் திரைப்படங்களின் சங்கமமாக பரிஸ் தமிழ் திரைவிழாவும், கனடா மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் பங்கெடுத்துள்ள A Gun and Ring திரைப்படமும், புகலிட ஈழத்தவர் திரைத்துறையில் நம்பிக்கை தரும் முயற்சிகளென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அமைச்சின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட என்னுள் என்ன மாற்றமோ எனும் திரைப்படம் உட்பட கனடா, சுவிஸ், அவுஸ்றேலியா ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்ட ஈழத்தவர் படைப்புக்களின் மூன்று நாள் நிகழ்வாக பரிஸ் தமிழ்திரைவிழா இடம்பெற்று வருகின்றது. சமவேளை சீனாவின் சங்காய் திரைவிழாவில் பங்கெடுத்து உலகத் தமிழர்களின் கவனத்தினைப் பெற்றிருந்த கனேடிய மண்ணில் உருவ…
-
- 1 reply
- 332 views
-
-
எஸ்.கே.பிரசாத் யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த வீடுகள் மற்றும் காணிகள் நேற்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளன. யாழ்.சுழிபுரம், உடுவில், சுன்னாகம், அளவெட்டி, மருதனார்மடம், மனிப்பாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள 39 வீடுகளும் 2 காணிகளுமே இவ்வாறு நேற்று கையளிக்கப்பட்டுள்ளன. http://tamil.dailymirror.lk/--main/80075-2013-08-24-06-53-26.html
-
- 2 replies
- 503 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். ஒரு வார கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட பல பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். (படங்கள்:குஷான் பத்திராஜ) http://tamil.dailymirror.lk/--main/80153-2013-08-25-06-20-03.html
-
- 10 replies
- 808 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது இலங்கை விஜயத்தின் போது, பக்கச்சார்பற்ற அறிக்கை ஒன்றை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கண்டியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, நவநீதம்பிள்ளையிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த அழைப்பிதழ்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே அவருக்கு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், தற்சமயமே சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், இலங்கை வரவுள்ள அவர், மேம்பாட்டு நடவடிக்கைகளை நேரில் அவதானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். எனவே, இதனையடுத்து …
-
- 0 replies
- 232 views
-