ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவநீதம் பிள்ளையை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைத்தமையானது ஒரு முட்டாள்தனமான செயல் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயத்தை எமது அமைப்பு முற்றாக எதிர்க்கிறது. நவநீதம் பிள்ளை என்று கூறப்படுபவர் யார், அவரின் வரலாறு எப்படிப்பட்டது என்பது தொடாரிபல் நாம் அறிந்து வைத்துள்ளோம். http://www.virakesari.lk/article/local.php?vid=6633
-
- 0 replies
- 392 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று இலங்கை செல்லும் நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு, கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸ் நோக்கி இன்று புறப்பட்டுச் செல்கிறார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது இந்த விஜயத்தின் போது, பெலாரஸ் ஜனாதிபதி அலக்ஸ்சாண்டர் லுகஷேன்கோ, பிரதமர் மிஹாயில் மியஸ்னிகோவ், சபாநாயகர் ஹெனடோலி ருப்நேவ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அந்த நாட்டு பிரதமருடன் வர்த்தக சமூகத்தையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதியுடன் இலங்கையின் வர்தத்கர்களும் இந்த பயணத்தில் இணைந்…
-
- 0 replies
- 295 views
-
-
பொட்டம்மானின் சகோதரன் மாரடைப்பால் மரணம்! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானின் சகோதரர் சண்முகலிங்கம் ஞானகுமார் – வயது 52 மாரடைப்பால் இறந்து உள்ளார். போருக்கு பிந்திய யாழ்ப்பாண சூழலை அனுபவிக்கின்றமைக்காக இரு மாதங்களுக்கு முன்னர் ஜேர்மனில் இருந்து வந்து அரியாலையில் நாயன்மார்கட்டில் குடியேறினார். இந்நிலையில் இராணுவ புலனாய்வாளர்களின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்து உள்ளார். வீட்டில் இருந்து வெளியேறிய பின் திரும்பி வந்த இவர் நெஞ்சு வலியால் அவதி அடைந்து காணப்பட்டார் என்றும் அயல் வீட்டுக்காரர்களிடம் இருந்து தண்ணீர், வெந்நீர் பெற்று குடித்தபோதிலும் குணமாகவில்லை என்றும் இதனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்து …
-
- 24 replies
- 2.8k views
-
-
நவனீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு போர்த் தடயங்களை அவசர அவசரமாக அழிக்கிறது இலங்கை அரசு! இறுதிப்போர் இடம்பெற்று ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் போரின் வடுக்கள் இவ்வளவு என்றால் அந்தபோரின் தாக்கம் எப்படியானதாக இருந்திருக்கும்? என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை எண்ணத்தோன்றாத வண்ணம் போர்த் தடயங்களை அவசர அவசரமாக அழிக்கின்றது இலங்கை அரசு . இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களாகக் கிடந்த வாகனங்கள் மற்றும் பொருள்கள் கடந்த சில நாள்களாக வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன என்று வன்னிப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் வருகைக்கு முன்பாக இவை அகற்றப்படுகின்றனவா என்ற அச்சத்தையும் அவர…
-
- 1 reply
- 756 views
-
-
-சுமித்தி தங்கராசா,எஸ்.கே.பிரசாத் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடமாகாணத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலயங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி அனந்திக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணத்தில் முன்னாள் போராளிகளின் உறவினர்கள் மற்றும் சமூகத்துடன் இணைக்கப்பட்ட போராளிகளின் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து புன…
-
- 25 replies
- 2k views
-
-
கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா என்று இன்னமும் உறுதிப்படுத்தவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. கொமன்வெல்த் மாநாட்டுக்கான, சிறிலங்கா அதிபரின் சிறப்பு அழைப்பு, இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கடந்த திங்கட்கிழமை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசினால் கையளிக்கப்பட்டது. ஆனால் இந்த அழைப்புக் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் எத்தகைய கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்தநிலையில், இதுகுறித்து கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, சஜின்வாஸ் குணவர்த்தன, “கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டு…
-
- 8 replies
- 596 views
-
-
சட்டம் ஒழுங்கு அமைச்சு என்ற பெயரில் புதிதாக அமைச்சு ஒன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கும் பொலிஸ் துறை புதிய அமைச்சின் கீழ் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய, போருக்குப் பின்னர் சிவிலியன் விவகாரங்களை கையாளும் பொலிஸ் பிரிவை, அரச படைகளை கையாளும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து பிரித்து தனியாக இந்த புதிய அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இலங்கை நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் இந்த அமைச்சின் செயலராக பணியாற்றுவார். முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு சிவில் நிர்வாக சேவையில் பதவி வழங்கப்படுகின்றமை ஆ…
-
- 1 reply
- 786 views
-
-
யாழ். நகரில் வைத்து தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் முறையிட்டும், சம்பந்தப்பட்டோர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை வேட்பாளர், உரிய நடவடிக்கை கோரி, யாழ். பொலிஸ் நிலையம் முன்பாக நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இங்கு பொலிஸார் நேர்மையாக செயற்படவில்லை, பக்க சார்பாகவே நடந்து கொள்கிறார்கள் எனவும், குற்றஞ்சாட்டியுள்ள வேட்பாளர் தம்பிராசா, பொலிஸரின் இத்தகைய செயற்பாடுகளுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார். அத்தோடு சாவகச்சேரியில் அரச கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் தாக்கப்பட்டவுடன், விரைந்து சென்று தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைது செ…
-
- 1 reply
- 491 views
-
-
வெலிவேரிய தாக்குதல் தொடர்பிலான இராணுவ அறிக்கை வெளியிடப்படுமாம்! வெலிவேரிய, ரதுபஸ்வலவில் பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டு தாக்குதல் தொடர்பாக விசாரித்த, இராணுவ நீதிமன்றத்தின் முடிவுகள், வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையிலான இராணுவ நீதிமன்றம், வெலிவேரிய சம்பவம் தொடர்பான அறிக்கையை, கடந்த புதன்கிழமை சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் கையளித்திருந்தது. இராணுவ நீதிமன்ற விசாரணையில் கண்டறியப்பட்ட முடிவுகள், இராணுவப் பேச்சாளர் மூலம் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கையை, இராணுவ சட்டப்பிரிவிடம், சிறிலங…
-
- 0 replies
- 226 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்திக்க நவநீதம் பிள்ளையே அழைப்பு விடுத்தார் என்கிறது கொழும்பு ஊடகம் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 800 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 30 திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரியவருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, எம். சுமந்திரன், வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் நவநீதம்பிள்ளையை சந்திக்க உள்ளனர். தன்னை சந்திக்குமாறு நவநீதம்பிள்ளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தாக தெரியவருகிறது. இவர்களை தவி…
-
- 0 replies
- 495 views
-
-
சண்டேலீடர் ஊடகவியலாளர் மண்டனா ஸ்மாயிலிற்கான கொலைமிரட்டல் கொள்ளை முயற்சியாகி இருவர் பலி குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் - 2ஆம் இணைப்பு – இன்று அதிகாலை பம்பலப்பிட்டியவில் இடம்பெற்ற கொள்ளை முயற்சி என வெளியாகிய சம்பவம் இடம்பெற்றது பிரபல ஊடகவியலாளர் மண்டனா ஸ்மாயில் அபயவிக்கிரமவின் வீடு என கொழும்பில் உள்ள குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். சண்டே லீடர் ஆங்கிலப்பத்திரிகையின் ஊடகவியலாளரும், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினரும், ஊடக தொழிலாளர் சம்மேளனத்தின்(FLIT) தலைவருமான மண்டனா ஸ்மாயில் அண்மையில் அமரிக்க தூதரக அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்பற்றியும் முக்கிய கருத்துரைகளை வழங்கியவர் எனத…
-
- 0 replies
- 420 views
-
-
எஸ்.கே.பிரசாத் 'இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா மனித உரிமைக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டுமே தவிர மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது' என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) சுன்னாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், "யுத்தம் நடைபெற்ற காலத்தில் முள்ளிவாய்கால் பகுதியில் எமது மக்கள் துன்பப்படும்போது அவர்களை நவநீதம்பிள்ளையோ சர்வதேச நாடுகளோ பாதுகாக்கவில்லை. எமத…
-
- 0 replies
- 275 views
-
-
எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்ப, காத்தான்குடியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சட்ட விரோதமான 36000 சிகரெட்டுக்களை காத்தான்குடி பொலிஸார் இன்று கைப்பற்றியதுடன் அவற்றினை வைத்திருந்த ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னாவின் உத்தரவின் பேரில் சென்ற காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் இந்த சிகரெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர். காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.எதிரிசூரிய தலைமையில் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களான பி.எஸ்.திலகரட்ன, எம்.லக்மல், எஸ்.கே.பி.டி.எம்.தெண்ணக்கோன், டி.எம்.என்.மதுசங்கர் ஆகியோர் இந்த ச…
-
- 0 replies
- 193 views
-
-
வடக்கில் மக்கள் இராணுவத்தின் பயமுறுத்தலால் பேசுவதற்கே அஞ்சுகின்றனர். இவ்வாறு கூறியுளார் வடமாகாண வேட்பாளர் திரு.விக்னேஸ்வரன். வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரங்கள் இடம் பெற்று வருகின்றன. நேற்று சாவகச்சேரி பகுதியில் நாம் பிரசாரத்தில் ஈடுபட்டோம். சாவகச்சேரி நவீன சந்தைப்பகுதியில் நாம் பிரசாரத்தில் ஈடுபட்டபோது எம்முடன் பேசுவதற்கு மக்கள் அச்சப்பட்டனர். ஏனென்றால் இராணுவத்தினரின் பிரசன்னமே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. என்னுடன் பேசிய பலரும் அங்குமிங்கும் பார்த்தவண்ணமே பேசினர். அங்கே இராணுவத்தினர் நிற்கின்றனர். மறுபக்கத்தில் அவர்களின் ஆட்கள் நிற்கின்றனர். என்று அவர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். இவ்வாறான நிலையே குடாநாட்டில் நிலவுகின்றது. தமிழ் தேசியக்கூட்…
-
- 2 replies
- 789 views
-
-
கிளிநொச்சி ஆகஸ்ட்-24: கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்த., சகலரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென, இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடுமையான யுத்தப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையிலும், பெற்றோரை இழந்த நிலையிலும், உறவினர்களின் பராமரிப்பில் இருந்து வருகின்ற சிறுவர்களும், பாதுகாவலர்களின் பராமரிப்பில் இருந்துவருகின்ற சிறுவர்களுமே அதிகமாகத் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அண்மை நாட்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இவ்வாறே இடம்பெற்றுள்ளன. பரந்தன் பகுதில் சிறுமி ஒருவர் தீயினால் சுடப்பட்டமை, ஜெயந்தி நகர் பகுதியில் இடம்பெற்ற துஷ்பிரயோகச் சம்பவம், பரந்தன் சிவபுரம் பகுதியில் இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் போன்றன உறவினர்கள…
-
- 0 replies
- 420 views
-
-
சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிர்ச்சியில் ;லண்டன் சென்ற விரிவுரையாளர்கள் 12 பேராம் லண்டனில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட, மாநாட்டில் பங்கேற்க 12 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சென்றுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது என உயர்கல்வி அமைச்சின் செயலர் கலாநிதி சுனில் ஜெயந்த நவரத்ன தெரிவித்துள்ளார். முன்னதாக, லண்டன் மாநாட்டில் பங்கேற்க, ஊவா, யாழ்ப்பாணம், பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நால்வர் சென்றுள்ளதாக அரச புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளதாகவும், இவர்கள் நாடு திரும்பியதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்திருந்தார். இந்தநிலையில், சிறிலங்கா உயர்கல்வி அமைச்சும…
-
- 0 replies
- 975 views
-
-
காவல் துறையினரின் உதவியுடன் தேர்தல் சட்டங்கள் மீறப்படுகிறது: ட்ரான்ஸ்பரன்சீ இன்டர்நசனல் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் சட்டங்களை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என ட்ரான்ஸ்பரன்சீ இன்டர்நசனல் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது சட்ட விதிகள் மீறப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இந்த சட்ட மீறல்களுக்கு எதிராக காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகமாக அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இவ்வாறு வாகனங்களை சட்டவிரோதமா…
-
- 0 replies
- 416 views
-
-
மாத்தளை பாரிய மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த மனித எச்சங்கள் எந்தக் காலத்திற்கு உரியவை என்று அறிந்து கொள்வதற்காக சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழக விஞ்ஞான பீடாத்திற்கு இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் பாரியளவில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.இவை 1988-89கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி உறுப்பினர்களது சடலங்கள் என அந்தக் கட்சி குற்றம் சுமத்தி வருகின்றது. உண்மையில் இந்த எச்சங்கள் எந்தக் காலத்திற்குரியவை என்று துல்லியமாக கண்டறியும் நோக்கில் மனித எச்சங்கள் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர், குறித்த மனித எச்சங்கள் 88-89ம…
-
- 1 reply
- 235 views
-
-
தேர்தல் முடியும்வரை அரியாலை படைமுகாமில் தங்க வைப்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாவட்டத்தில்; வடக்கு மாகணசபை தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள ஆளும் தரப்பினை சேர்ந்தவர்களை வெற்றி பெறச்செய்ய கிழக்கிலிருந்து ஒரு தொகுதி போராளிகள் தருவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரியாலையிலுள்ள இராணுவ முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களே அண்மையில் கூட்டமைப்பு வேட்பாளர் அனந்திக்கெதிரான ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடுத்தப்பட்டுமிருந்தனர். இதனிடையே ஆளும் தரப்பை சேர்ந்தவர்களை வெற்றியடையச் செய்வதற்கான சகல முயற்சிகளையும் இராணுவமும் முன்னெடுத்துவருகின்றது. வடக்கு தேர்தலில் றெமீடியஸ், சீராஸ், உள்ளிட்ட நான்கு வேட்பாளர்களை யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலமையகம் தெர…
-
- 2 replies
- 504 views
-
-
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பெலாரஸுக்கு பயணமாகிறார். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி ராஜபக்ஷ, பெலாரஸ் ஜனாதிபதி எலெக்ஸாண்டர் லுகஷென்கோ, பிரதமர் பேராசிரியர் மிகைல; மியாஸ்னிகோவிச் டெலாரஸ் தேசிய பேரவையின் குடியரசு கவுன்சிலின் தலைவர் எனடொலி ருபினோவ் மற்றும் பெலாரஸ் தேசிய பேரவை பிரதிநிதிகள் இல்லத்தலைவர் விலாடிமிர் அணட்ரெய்ரென்கோ ஆகியோர்களைச் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். வர்த்தக தூதுக்குழு ஒன்றுடன் பயணமாகும் ஜனாதிபதி,அங்கு நடைபெறவுள்ள வர்த்தக மன்றத்தில் கலந்து கொள்ளவுள்ளதுடன் அம்மன்றத்தில் அந்நாட்டு பிரதமர் மியாஸ்னிகோவிச் உடன் விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார். அரசியல் ரீதியான சந்…
-
- 1 reply
- 277 views
-
-
திறந்த மனதுடன் முதன் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றேன் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் ரொயிட்டர் செய்தி கருத்து தெரிவிக்கையிலேயே நவநீதம்பிள்ளை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் எதனையும் முன்கூட்டியே நான் மதிப்பிடவில்லை. திறந்த மனதுடனேயே நான் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றேன். ஏன்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவிய முப்பது வருடகால யுத்தம் 2009 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையிலேயே அவர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஐந்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்…
-
- 2 replies
- 609 views
-
-
கிளிநொச்சி அக்கராயன் குளத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை இளம் பெண்ணொருவரின் சடலத்தை தாம் மீட்டதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர். அக்கராயன் பகுதி கரைச்சி கிராம வாசியான 33 வயதான வேலு தங்கா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை கோயிலுக்குச் செல்வதற்காக நீராடுவதற்குச் சென்ற இப்பெண் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. தேடிச் சென்ற பொழுது அவர் குளத்தில் வீழ்ந்து மரணமாகிக் கிடப்பது தெரிய வந்ததாக உறவினர்கள் கூறினர். இதுபற்றி அக்கராயன் பொலிஸ் சாவடியிலுள்ள பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கடற்படையினர் சகிதம் ஸ்தலத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டனர். குளத்தில் விழுந்து இறந்த குறித்த பெண் அடிக்கடி வலிப்பு நோயால் அவஸ்தைப்படுபவர் …
-
- 0 replies
- 262 views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு இவர் சில தினங்களுக்கு முன்னர் இராணுவபுலனாய்வாளர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று அரியாலையில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இது இராணுவபுலனாய்வாளர்களின் திட்டமிட்டசதி என்று அஞ்சப்படுகிறது. மேலதிக விபரம் விரைவில் அறியத்தரப்படும் http://ttnnews.com/othernews/1445-2013-08-21-21-19-02
-
- 39 replies
- 4.2k views
-
-
யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒருவார காலப்பகுதிக்குள் 144 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது. எதிர்வரும் மாதம் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சந்கேத்திற்கு இடமான முறையில் நடமாடித்திரிந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இன்று காலை யாழ்.காவல்துறை நிலையத்தில் நடைபெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்படித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படித் புள்ளிவிபரங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவது. யாழ்.காவல்துறைப் பகுதியில் 71 பேரும், கே.கே.எஸ் காவல்துறைப் பகுதியில் 73 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் முன்னிலைப்டுத்தப்பட்…
-
- 1 reply
- 263 views
-
-
சுதந்திரக்கட்சி ஆள்பிடிக்கும் அரசின் முயற்சியின் எதிரொலியாக ஈ.பி.டி.பி.யின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இதனால், கட்சியின் அச்சுவேலி இணை இணைப்பாளரும் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினருமான லிங்கேஸ் என்று அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை செல்வராசா மற்றும் ஆசைப்பிள்ளை சுசீந்திரன் ஆகிய இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களுமே நீக்கப்பட்டுள்ளனர். இதனை ஈ.பி.டி.பியின யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி மகிலேந்திரன் உறுதிப்படுத்தினார். கட்சியின் ஒழுங்கு விதிகளுக்கு மீறி இந்த இரண்டு உறுப்பினர்களும் செயற்பட்டமையினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போது வடக்கு மாகாண தேர்தலில் சு…
-
- 0 replies
- 373 views
-