ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
என்கிறது திவயின விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பற்ற சுவீடன் இராணுவத்தை வன்னிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரிய சுவீடனை சேர்ந்த புலியான பேராசிரியர் பீட்டர் ஷோல்த் இலங்கையின் 4 பேராசிரியர்கள் கலந்து கொண்ட லண்டன் ஈழ மாநாட்டில் முன்னிலை வகித்ததாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது. இலங்கையை சேர்ந்த குறித்த 4 பேராசிரியர்கள் தொடர்பான தகவல்களை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் ஜகத் ஜயசூரிய முதலில் தகவல்களை வெளியிட்டிருந்தார். விடுதலைப்புலிகளின் கடும் ஆதரவாளரான சுவீடன் பேராசிரியர் போர் நிறுத்த காலத்தில் இலங்கைக்கு வந்து வன்னி சென்று புலிகளின் தலைவர்களை சந்தித்து விரிவுரைகளை நடத்தியிருந்தாகவும் திவயின கூறியுள்ளது. எது எப்படி இருந்த போதிலும் லண்…
-
- 0 replies
- 392 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகின்றனர். அத்துடன், நவநீதம் பிள்ளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வருவது தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிடுவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் செய்த குற்றங்களை அல்ல பயங்கரவாத அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை ஆராய்ந்து பார்க்கும் காலம் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு வந்துள்ளதாக அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.…
-
- 5 replies
- 493 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதன்பிள்ளை என்ற புலி ஆதரவாளர், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உதவிசெய்துவரும் பெண் என ''ராவணா பலய' என்ற சிங்கள கடும்போக்கு பௌத்த அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் தொடர்புடைய உலகின் ஏனைய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றால் அதுகுறித்து நவம்பிள்ளைக்கு பிரச்சினை இல்லை எனவும் ராவணா பலய தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் இலங்கை பயணிக்கவுள்ள நவநீதன்பிள்ளை, இலங்கை வருவது பாரிய சிக்கல்களை உருவாக்கும் என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தாகந்தே சந்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டுக்கு எதிராக செயற்படும் அவர், இலங்கையை துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தி கால்களில் மிதித்து நசுக்க முயற்சித…
-
- 2 replies
- 480 views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைய 'சட்டம் மற்றும் ஒழுங்கு' எனப்படும் ஒரு புதிய அமைச்சு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னர் பாதுகாப்பு படை அதிகாரிகளின் பிரதானியாகவும் இந்தோனேஷிய தூதுவராகவும் இருந்தவர் ஆவார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசம் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட 'சட்டம் மற்றும் ஒழுங்கு' எனப்படும் புதிய அமைச்சு உட்பட நான்கு அமைச்சுக்கள் இருக்கின்றன. அத்துடன் பிரதமர் வசம் ஒரு அமைச்சு இருக்கின்றது. இந்த அரசாங்கத்த…
-
- 0 replies
- 368 views
-
-
யாழ்ப்பாணம் கட்டுவன் மேற்குப் பகுதியில் இரு குழுக்கிடையில் இடம் பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை மற்றும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://tamilworldtoday.com/?p=29026
-
- 1 reply
- 648 views
-
-
ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு மேற்கொள்ளும் தனது விஜயத்தின் போது உண்மை நிலைமையை நேரில் கண்டறிவார் எனவும், அதன் பின்னர் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப் பட்டுள்ள பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என நம்புவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளைக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தி…
-
- 3 replies
- 561 views
-
-
எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா 'மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் என்னை அடிபணிய வைக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி எழிலன் தெரிவித்துள்ளார். யாழ்.நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்பாட்டம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'யாழ்.நகரில் ஆளும்தரப்பும் அதனது பங்காளிகளும் இணைந்து கண்டன ஊர்வலமெனும் நாடகமொன்றை அரங்கேற்றியிருக்கின்றனர். ஜெனீவாவில் இலங்கை விவகாரம் கையிலெடுக்கப்படுகின்ற வேளையிலெல்லாம் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் அதன் பின்னணிகள் பற்றி எமது மக்கள்; நன்கு அறிந்து வைத்த…
-
- 8 replies
- 909 views
-
-
தமிழருக்கு மனிதாபிமான ரீதியில் உதவ முன்னர் தனது கணவர் செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த தமிழர்களிடமும் குறிப்பாக தமிழ்ப் பெண்களிடமும் பகிரங்க பொது மன்னிப்பை அனந்தி எழிலன் கோரவேண்டும் என்று தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆர்.சிவராஜா தெரிவித்துள்ளார். தமிழர்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருடன் பேசவுள்ளதாக அனந்தி எழிலன் தெரிவித்திருப்பது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, புலிகளின் திருமலை அரசியல் பொறுப்பாளராக எழிலன் இருந்த போது தான் மாவிலாறு அணையை இழுத்து மூடி இறுதிப் போருக்கு பிள்ளையார் சுழி போட்டார். ந…
-
- 9 replies
- 1.3k views
-
-
ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அம்மையார் அவர்கள் இலங்கைத்தீவுக்கான பயணத்தினை மேற்கொள்ள இருக்கின்ற நிலையில் , அப்பயணத்தின் போது நிபுணர்களையும் அழைத்துச் சென்று முள்ளிவாய்க்கால் பகுதியினை ஆய்வு செய்வதோடு, சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த அரசியல் தலைவர் எழிலனையும் சந்திக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது. ஈழத்தமிழர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையின் ஒர் அங்கமாக தமிழர் தாயகப் பிரதேசங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பாளர்களை நிலை கொள்ள வைப்பதுடன், சிறிலங்கா படைகளினது பாலியல் அத்துமீறல்கள் அச்சுறுத்தல்கள் ஆகியனவற்றில் இருந்து போரினால் விதவைகளாக்கப்பட்ட 90,000க்கு மேலான தமிழ்ப் பெண்களையும், அவர்க…
-
- 0 replies
- 455 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்கள் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டமை மனிதாபிமானமற்றது என ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. 46 புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக தடுத்து வைக்க்பப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்துள்ளனர். அவுஸ்திரேலியா சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 புகலிடக் கோரிக்கையாளர்களில் 42 பேர் இலங்கைத் தமிழர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கோரிக்கையாளர்களை நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்கும் நடவடிக்கையானது …
-
- 0 replies
- 367 views
-
-
ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் தமிழினத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்துவதாகவும் தயாரிக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியீடு செய்து தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத வடுவை ஏற்படுத்த வேண்டாம் என்று யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கி உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்களின் எதிர்ப்புக்களை சம்பாதிக்க வேண்டாம் என்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்றும் தமிழக அரசிடம் மிகவும் விநயமாக நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் கபே திரைப்படத்தை இயக்கி ந…
-
- 2 replies
- 530 views
-
-
புறக்கனிப்போம் புறக்கனிப்போம் எமது தேசத்திற்காக தம் உயிர்களை ஈர்த்த தியாகிளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் மதராஸ் கபே திரைப்படத்தை புறக்கணிப்போம். எமது சுதந்திர போராட்டத்தை இழிவுபடுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை எதிர்த்து குரல் கொடுப்போம். எமது சுதந்திர போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்தும் எமது இனதிதின் மீதும் திட்டமிடப்பட்டு கட்டவிள்த்து நடாத்தப்பட்ட இனப்படுகொலையினை மறைத்தும் எமக்கு இளைக்கப்பட்டது இனப்படுகொலை இல்லை எனவும் கூறி இனவாத இலங்கை அரசு இந்திய மற்றைய வல்லரசுகளுடனும் சேர்ந்து எமது மக்களை கொன்று குவித்ததையும் நியாப்படுத்தி மதராஸ் கபே என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு யார் பணம் கொட்டியவர்கள் யார் ? இலங்கை அரசா ? சோனியாவா …
-
- 0 replies
- 604 views
-
-
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட காத்தான்குடி ஹக்குப்பிள்ளை லேனில் தச்சு வேலை செய்து கொண்டிருந்த ஆரையம் பதியைச் சேர்ந்த சின்னத்தம்பி யோகராஜா மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் 5.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதி இராசதுரைக் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி யோகராஜா(வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் மின் இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவரது சடலம் காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை குறித்த சடலம் நாளை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமெனவும் த…
-
- 0 replies
- 359 views
-
-
சட்டவிரோத குடியேற்றங்களை அதிகாரிகள் தடுக்கவில்லை என குற்றச்சாட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் மேற்கு எல்லை கிராமங்களிலுள்ள அரச காணிகளில் அத்துமீறி குடியேறியுள்ள வெளி மாவட்டத்தவர்களை வெளியேற்றக் கோரி இன்று புதன்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. அம்பாறை-- மஹாஒயா நெடுஞ்சாலையிலுள்ள கச்சைக்கொடி கிராம சேவை அலுவலர் பிரிவிலுள்ள கெவுலியாமடு மற்றும் புழுகனாவ ஆகிய இந்த கிராமங்களில் வெளி மாவட்ட சிங்களவர்களை குடியேற்றம் செய்வதற்காக பௌத்த பிக்கு ஒருவரால் முன்னெடுக்கப்படும் இந்த செயல்பாடுகளுக்கு சில அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது. குறித்த கிராம…
-
- 0 replies
- 342 views
-
-
ஆளும் கட்சி வேட்பாளர்கள் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வதாக இலங்கை ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அரச பணத்தைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. பிரச்சாரப் பணிகளுக்காக பொதுப் பணத்தை பயன்படுத்துவதுடன், வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ட்ரான்பெரன்சி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ். ராணுகே தெரிவித்துள்ளார். கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இம்முறை மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 99 வீதமானவர்கள் இன்னமும் சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை ஒப்படைக்கவில்லை எனத் தெர…
-
- 0 replies
- 409 views
-
-
வடக்கு மக்கள் பற்றி சிந்திக்காவிட்டாலும் தென் பகுதியை கருத்திற் கொண்டாவது இராணுவமயபடுத்தலுக்கு முடிவு காணுங்கள் : ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை கொழும்பில் சந்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 30ம் திகதி தமது கட்சிப் பிரதிநிதிகள் நவனீதம்பிள்ளையை சந்திப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள், இவ்வாறு நவனீதம்பிள்ளையை சந்திப்பார்கள் என தெரிவித்துள்ளார். கூட்டமைப்பினர் நவனீதம்பிள்ளையை சந்திப்பதற்கான நேரம் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் க…
-
- 0 replies
- 403 views
-
-
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பொருளாதார அரசியல் ஆலோசகரான மேகன் ஃபொஸ்ரர் அம்மையார் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைப் பணிமனையான 'அறிவகத்தில்' பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினருடன் இன்று ( 22.08.2013 வியாழக்கிழமை) சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்இ கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நா.வை குகராசாஇ வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண சபைக்கான கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் த.குருகுலராஜாஇ தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.சுரேன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச் சந்திப்பில் வட மாகாண சபைத் தேர்த…
-
- 0 replies
- 376 views
-
-
தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களையும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பையும், ஈழ மக்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள "மெட்ராஸ் கபே" படத்தை திரையிட தமிழகத்தில் திரையரங்குகளின் அதிபர்கள் மறுப்பு தொிவித்துள்ளனர். இந்தியில் தயாரான "மெட்ராஸ் கபே" படத்தை தமிழிலும் மொழி மாற்றம் செய்துள்ளனர். இந்த தமிழ்ப் பதிப்புக்கு தமிழகத்தின் தணிக்கை குழுவினர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. "மெட்ராஸ் கபே" படத்தில் விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி இருப்பதாக தமிழ் அமைப்பினர் எதிர்த்தனர். இதையடுத்து சில தினங்களுக்கு முன் பிரத்யேகமாக படத்தை அவர்களுக்கு திரையிட்டு காட்டினர். படம் பார்த்த செந்தமிழ் சீமான், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் முழுக்க தமிழ…
-
- 1 reply
- 477 views
-
-
விடுதலைப் புலிகளின் தமிழீழ கனவு இன்னும் உயிருடனேயே உள்ளது. தப்பிச்சென்ற புலிகள் சர்வதேச நாடுகளில் தஞ்சம் அடைந்து இலங்கைக்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளை செய்கின்றனர். அதில் ஒன்றுதான் பொதுநலவாய மாநாட்டிற்கு எதிரான செயற்பாடுகள் என்று பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். இலங்கை இராணுவத்திற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு பதிலளிப்போம். புலம்பெயர்ந்த தமிழர்களே இலங்கைக்கு எதிராகவும் இராணுவத்திற்கு எதிராகவும் போலியான பிரசாரங்கள் மேற்கொள்கின்றனர். இந்நடவடிக்கைகள் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் கு…
-
- 1 reply
- 328 views
-
-
வடக்கு மக்கள் முன்னரைவிட தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் இராணுவத்தினர் அங்கிருந்து செல்லவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அத்துடன் இலங்கை விடயத்தில் இந்தியாவோ தமிழகமோ தலையிடக்கூடாது என்றும் வடக்கு மக்கள் கேட்டனர் என்று இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் பாலா பாஸ்கர் தெரிவித்தார். இந்தியாவின் சிறிய எண்ணிக்கையான தமிழகத்தின் ஒரு பிரிவினர் இலங்கையை எதிர்க்கின்றனர் என்பதற்காக முழு இந்தியாவும் இலங்கையையோ அல்லது மக்களையோ எதிர்ப்பதாக கருதக்கூடாது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சிறந்த நெருக்கமான உறவு காணப்படுகின்றது. தமிழகத்தின் ஒரு சிறு எண்ணிக்கையான பிரிவினரே குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். அது இந்தியாவின் பிரதிபலிப்பு அல்ல என்றும் அவர் கூறினார். இலங்கைக்கு சுற்…
-
- 4 replies
- 717 views
-
-
புலி பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து விரடியடித்தது போல பொன்ரேறாவையும் புதைப்போம் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. பியகமவில் பொன்ரேறா நிறுவனத்திற்கு முன்பாக இன்று நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே அக்கட்டிசியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்தார். பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து விரட்டியடித்தது போல பொன்ரேறாவையும் விரட்டியடிப்போம். இது எமது நாட்டிற்கும் எமக்கும் எதி;ர்கால சந்ததியினருக்கும் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/79865-2013-08-22-09-02-19.html
-
- 1 reply
- 409 views
-
-
மெட்ராஸ் கபே படத்தைத் திரையிடக் கூடாது என்று வலியுறுத்தி சென்னையில் நேற்றையதினம் சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். படத்தைத் தடை செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். மெட்ராஸ் கபே படத்திற்கு தடை கோரும் போராட்டம் அனைத்து நாடுகளிலும் வலுவடைந்து வருகிற நிலையில் தமிழகத்தில் அது வலுவடையலாம் என தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் இன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் 200 பேர் உயர்நீதிமன்றம் அருகே சாலையில் மெட்ராஸ் கபே படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து பேரணியாக சென்றனர். பின்னர் திடீர் என சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதேபோல தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பின் சேலம் மாவட்ட அமைப்பாளர் சிவா தலைமையில்…
-
- 1 reply
- 317 views
-
-
இலங்கையில் காவல்துறையினர் சித்திரவதையை விசாரணைகளின் போது ஒரு வழிமுறைகாகப் பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. இலங்கையில் 1998 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்ட சுமார் 1500 பேர் தொடர்பான சம்பவங்களை ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தொகுத்துள்ளது. காவல்துறையினர் கடும் சித்திரவதைகளில் ஈடுபடுவதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையம் குற்றச்சாட்டு நாட்டில் காவல்துறை சீரமைப்பு குறித்து பொதுமக்களிடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று அந்த ஆணையத்தைச் சேர்ந்த பசில் ஃபெர்ணாண்டோ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.அதிலும் குறிப்பாக, மிகவும் அதிக சித்திரவதைக்கு ஆளான 400 பேர் எதிர்கொண்ட பிரச்…
-
- 1 reply
- 364 views
-
-
கனடா மாநாட்டில் நாடு கடந்தோர் இருந்தார்களா அல்லது நாடு கடக்காதோர் இருந்தனரா என்பது தெரியாது: சம்பந்தன் கனடாவில் நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை. கனடா டொரன்டோவில் தமிழ் தேசியக் கூட்மைப்பின் கிளை ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் நாம் பங்கேற்றிருந்தோம். அதில் 500 பேர் வரையில் கலந்துகொண்டிருந்தனர். நான் பேசி முடிந்ததும் அவர்கள் எழுந்துநின்ற எனது பேச்சுக்கு வரவேற்பளித்தனர். அந்தச் சந்திப்பில் நாடுகடந்தவர்கள் இருந்தார்களா அல்லது நாடு கடக்காதவர்கள் இருந்தார்களா என்பது குறித்து எமக்குத் தெரியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். கனடா சென்றுள்ள கூட்டமைப்பின் தலைவர்…
-
- 0 replies
- 699 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ளதாக சரளா ஜெயரட்னம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஜெயரட்னத்தின் மனைவியே இவ்வாறு முறைப்பாடு செய்ய உள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து சரளா ஜெயரட்னம், நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ளார். கொழும்பில் தமது கணவரை கடத்திய புலிகள் வன்னியில் வைத்து கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் தகவல்களை மூடிமறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ள ந…
-
- 10 replies
- 789 views
-