ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய 5 பிரதேச செயலர் பிரிவுகளிலும் மக்களை மீள்குடியேற்றி சுமார் 3 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இப் பிரதேசங்களிலுள்ள கிராமங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெற்று வருவதால் தம் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படாத நிலையில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக இம்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது இப் பிரதேசங்கள் முழுமையாக அழிவடைந்துள்ள நிலையில் காணப்படுகின்ற போதும், அபிவிருத்தி என்பது தாமதமாகவே இடம்பெற்று வருவதாகவும் இம்…
-
- 0 replies
- 459 views
-
-
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இரவு,பகல் பாராது நாளாந்தம் மின் தடங்கள் ஏற்படுவதினால் மன்னார் மாவட்ட மக்களும்,மாணவர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கும்,இன்னல்களுக்கும் முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திடீர்,திடீர் என மின்சாரம் தடைப்பட்டு வருகின்றது.இதனால் மின் பாவனையாளர்களது விலையுயர்ந்த மின் உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாக மின் பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது முஸ்ஸிம்கள் புனித நோன்புக்காலத்தை அனுஸ்ரித்து வருகின்ற நிலையில் ஆதிகாலை நேரங்களில் மின் தடங்கள் ஏற்பட்படுகின்றமையினால் புனித நோன்புக்கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதே வேளை எத…
-
- 0 replies
- 501 views
-
-
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தினை கட்டுப்படுத்தாமல் பிள்ளையாரடிப் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் கல்லடி பொலிஸ் பயிற்சி நிலையத்தில் கடமையாற்றும் அமீர் என அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகி…
-
- 0 replies
- 413 views
-
-
யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் உள்ள டேவிட் வீதியில் வீடொன்றிலிருந்து தங்க நகைகளும் பணமும் நேற்று முன்தினம் திருடப்பட்டுள்ளன. இவ் வீட்டில் வசித்த குடும்பத்தினர் வெளியில் சென்றிருந்த சமயம் கதவு உடைக்கப்பட்டு பத்துப் பவுண் தங்க நகைகளும் 22 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். சம்பவ இடத்தை பார்வையிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை அரியாலையில் உள்ள பிறிதொரு வீட்டின்மீது தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இரண்டு குடும்பங்களுக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம்…
-
- 0 replies
- 397 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுமாறும், இதுவரை மீள்குடியேறாத மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற மீள்குடியேற்ற அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், புணானை பகுதியில் ஸ்தாபிக்கப்படும் இராணுவ முகாமை தடுத்து அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீள்குடியேற உதவுமாறும் கேட்டுக் கொண்டேன். கிரான் பிரதேசத்தின் புணானை…
-
- 0 replies
- 454 views
-
-
எமது அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தமிழ் மக்களே! சிறீலங்கா அரசும் அதனுடைய சர்வதேச ஆதரவு சக்திகளும் தமிழ் அரசியலின் தேசியவாத சிந்தனையை இல்லாது ஒழித்து 13ம் திருத்தத்திற்குள்ளும் மாகாணசபை முறைக்குள்ளும் முடக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பதான அறிவிப்பை இவ் அறிக்கை ஊடாக வெளிப்படுத்துகின்றது. 1987 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ற பெயரில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு எம்மீது திணிக்கப்பட்ட நாளில் இருந்து அதனை தமிழ் மக்கள் நிராகரித்து வந்துள்ளார்கள். காரணம் மாகாணசபைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை துளியேனும் திருப்திப்படுத்தாத…
-
- 0 replies
- 569 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் சயந்தனுக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக சென்றிருந்த வேளையில் தமது தாயாரிடம் இராணுவத்தினர் பெரும்பான்மை மொழியினால் உரையாடி அடையாள அட்டை இலக்கத்தை தருமாறு கோரியுள்ளனர். தாயார் தமக்கு சயந்தனின் அடையாள அட்டை இலக்கம் தெரியாது என பதிலளித்த வேளையில் இராணுவத்தினர் திரும்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் சயந்தன் கருத்து தெரிவிக்கையில் குரல் பதிவு – சயந்தன்-1 Play 00:00 00:00 Volume 00:00 00:33 saynthan goldtamil.com goldtamil.com இராணுவத்தினர் நேரடியாக உங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர் என செய்திகள் வெளியாகியது. ஆனால் தாயாரிடமே இராணுவத்தினர…
-
- 0 replies
- 839 views
-
-
நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவியை வழங்குவது தேர்தலின் பின்னரே என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கு அதிகபட்சமாக குறித்த மாவட்டத்தில் அதிகமான விருப்பு வாக்குகள் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன் அவர் அதிகபட்ச விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் அவரது சுய நிலைமையை பரிசீலனை செய்தே முதலமைச்சர் பதவி வழங்கப்படுமென மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று (30) ஊடகங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணைந்ததை அடுத்து வடமேல் மாகாணசபையின் முதலமைச்சர் யார் என ஊடகங்களின் பிரதானிகள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்க்க…
-
- 0 replies
- 798 views
-
-
எஸ்.கே.பிரசாத் இடபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்லில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவோரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன இந்த தேர்தலில் ஏனைய கட்சிகளை இணைத்துக்கொள்ளாமல் தனித்து போட்டியிட கட்சியின் தலைமைப்பீடம் தீர்மானித்ததாகவும் நாளைய தினம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமி நாதன் தெரிவித்தார். இதன்படி முதன்மை வேட்பாளராக தி.துவாரகேஸ்வரன் மற்றும் என்.சதானந்தன், பி.கனகரஞ்சிதன், எஸ்.பரமசிவம், எஸ்.தியாகேந்திரன், கே.தர்சன்சர்மா, சி.அகலாவியன், பு.காஜன், வி.தயாபரன், எ.இயஸ், வி.கணேசபிள்ளை, சி.கபிலராஜ், எ.சிவசங்கர், எஸ்.அச்சுதன், எஸ். சசிகுமார், பி.தேவசீலன், வை.துஸ்யந்தன், ஆர்.நாகேந்திரராஜ…
-
- 2 replies
- 657 views
-
-
சிம்மாசனத்துக்கு 3 ஆவது வாரிசான கேம்பிறிட்ச் இளவரசனின் பிறப்பையொட்டி அரச குடும்பத்தை பாராட்டியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேம்பிறிட்ச் இளவரசனின் பிறப்பு பொதுநலவாயத்துக்கு முக்கியமானது என கூறியுள்ளார். இங்கிலாந்து அரசி, மாட்சிமை தங்கிய அரசி 2 ஆவது எலிஸபெத்துக்கு எழுதிய கடிதத்தில், அவரது கொள்ளுப்பேரன் இளவரசன் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயியின் பிறப்பையொட்டி இலங்கை மக்களின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/77015-2013-07-30-13-31-22.html
-
- 1 reply
- 309 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் சயந்தனுக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக சென்றிருந்த வேளையில் தமது தாயாரிடம் இராணுவத்தினர் சிங்களத்தினால் உரையாடி அடையாள அட்டை இலக்கத்தை தருமாறு கோரியுள்ளனர். குரல் வடிவில், http://tamilworldtoday.com/?p=25243
-
- 0 replies
- 385 views
-
-
மாகாணசபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது முதல் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் அமுல்படுத்தப்பட இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என கருத முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் இலத்திரனியல் ஊடக நிறுவனத் தலைவர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காணி காவல்துறை அதிகாரங்கள் அமுல்படுத்தப்படவே இல்லை எனவே தற்போது இது குறித்து கூடுதலாக கவனம் செலுத்த வேண்டிய அவ…
-
- 2 replies
- 442 views
-
-
நாம் ஈட்டப் போகும் மகத்தான வெற்றியை அடுத்து அரசுடன் பேசுவோம்: - விக்னேஸ்வரன் [Tuesday, 2013-07-30 10:53:16] வடமாகாண சபைத் தேர்தல் மூலம் புதிய பயணமொன்றைத் தொடங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுவை நேற்று திங்கட்கிழமை நண்பகல் யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்த பின்னர் அங்கு கூடிநின்ற ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சி.வி.விக்னேஸ்வரன் அங்கு தொடர்ந்தும் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்.. 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் வட மாகாண சபைக்கான தேர்தல் கடந…
-
- 8 replies
- 821 views
-
-
நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் 25 முதல் 31ஆம் திகதி வரை இலங்கையின் பலபகுதிகளுக்கும் செல்வார்: [Tuesday, 2013-07-30 10:49:46] இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, புலிகளால் இரணைமடுவில் அமைக்கப்பட்ட ஓடுபாதை வழியாகவே வன்னிக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று தெரியவருகிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இலங்கையில் உண்மையைக் கண்டறியும் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அவரது பாதுகாப்பு மற்றும் பயண ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய, ஐ,நா மனித உரிமைகள் ஆணையாளரின் தலைமைப் பாதுகாப்பு ஆலோசகர் ஆப்ரஹாம் மதாய் தலைமையிலான குழுவொன்று கடந்த வாரம் இலங்கை வந்திருந்தது. நவநீதம்ப…
-
- 1 reply
- 383 views
-
-
மட்டக்களப்பில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்hனது சிங்கள மக்கள் மீதும் பேரினவாத அரசின் மீதும் தமிழ் மக்களுக்கு இருக்கும் சிறிய அளவு நம்பிக்கையையும் இல்லாது செய்வதுடன் இன ஐக்கியத்துக்கும் குந்தகம் விளைவிப்பதாக அமைவதாகத் தெரிவித்துள்ள பராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விகாராதிபதிக்கு எதிராக மக்கள் கிழர்ந்தெழ வேண்டிய காலம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் கற்றறிந்த பாடங்கள் நல்லினக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அவற்றை சட்ட ரீதியாக தீhப்பதற்கான வழிமுறைகளும் எனும் தலைப்பி; இடம்பெற்ற செயலமர்விற்கு குழப்பத்தை ஏற்…
-
- 1 reply
- 277 views
-
-
விடுதலைப் புலிகளை இருந்த இடம் தெரியாது அழித்தது ´அல்லா´ தான் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் பாராளுமன்றத்தில் கடந்த 26ஆம் திகதி ஆற்றி உரையை தான் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரு மக்கள் பிரதி நிதி ´அல்லா´வின் பெயரில் அரசியல் செய்வது படு பிற்போக்குத்தனமானது. மதவாத கருத்துக்களை முன் வைத்து முஸ்ஸிம் மக்களை திருப்திப்படுத்த நினைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் மக்களின் உணர்வுகளை இக்கருத்து எவ்வளவு தூரம் காயப்படுத்தும் என்பதை அறியாமல் இருப்பது வேதனையான விடையமாகும். விடுதலைப் புலிகளினதும…
-
- 2 replies
- 460 views
-
-
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பாப்பரசர் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் செய்வாராயின் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளும் மூன்றாவது பாப்பரசராக பிரான்ஸிஸ் கருதப்படுவார். நான்காவது போல் பாப்பரசர் இலங்கைக்கு 1977 ஆம் ஆண்டு முதன்முறையாக விஜயம் செய்தார். அதன் பின்னர் 1995 ஆம் ஆண்டு பாப்பரசர் இரண்டாம் ஜோன் போல் இலங்கைக்கு விஜயம் செய்தார் அவரது விஜயத்திற்கு பௌத்த பிக்குகள் தங்களுடைய கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியமையினால் குண்டு துளைக்காத வாகனத்திலேயே அவர் இலங்கையில…
-
- 1 reply
- 1.2k views
-
-
விஜித ரோஹண விஜிதமுனியை நீங்கள் மறந்திருக்கலாம். இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்காக இலங்கை சென்ற ராஜீவ்காந்தியை தாக்கிய கடற்படை வீரர். அந்த தாக்குதலுக்குப் பின் இருவேறு விதமாய் அவர் நினைவூகூரப்பட்டார். ஒரு பக்கம் அவரை கைது செய்து சிறையிலடைத்தார்கள். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=25172
-
- 5 replies
- 900 views
-
-
ஆங்கிலம், தமிழ், கொலைக்களம். நான் சில ஆண்டுகளாக கவனித்துவரும் விடையம் இது.. இணையத்தளங்களில் தமிழில் எழுதும் சில தமிழர்கள்,.. பிந்தங்கிய பகுதிகளில் வசித்துவருவதனாலும் , மற்றும் உலகமயமாக்கம் பற்றிய குழப்பம் காரணமாகவும், பாரிய தமிழ் கொலை நடந்துவருகின்றனர்.. இதை தடுக்கும் முகமாகவும் , இந்த பிந்தங்கிய தமிழர்களுக்கு அறிவூட்டும் முகமாகவும் இந்த திரியை ஆரம்பிக்கிறேன்.. என்னை பின்பற்றி நீங்களும் உங்களுக்கு தெரிந்த தமிழை கொலை செய்யும் சொற்களை இனையுங்கள்.. தமிழ் = Tamil ( Not Tamizh ) குழு = Kullu ( Not Kuzu ) mixer = மிக்க்ஷர் ( மிச்சர் இல்லை ) Israel = இஸ்ரைல் ( இஸ்ரவேல் இல்லை wtf! ) தயவுசெய்து இணைக்கவேண்டிய முறையை கவனிக்கவும்... …
-
- 6 replies
- 1k views
-
-
நகர மண்டப வளாகத்திலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையத்திற்கு அருகில் வைத்து எனது மகனை 12 பேர் சேர்ந்து கடத்துவதற்கு முயற்சித்துள்ளனர் என்று பொது மக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நான் வீட்டிலிருந்து போது என் மகனிடமிருந்து தொலைபேசி அழைபொன்று வந்தது. தன்னை தாக்குதவதாகவும் தெரிவித்தார். உடனடியாக நான் புறப்பட்டு ஸ்தலத்திற்கு விரைந்தேன். பொலிஸாருக்கும் அறிவித்துள்ளேன். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். என் மகனை 12 பேர் ஏன்? தாக்கவேண்டும்.அவன் ஒரு உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதனால் நான் சந்தோஷமாக இருக்கின்றேன். மகனுக்கு எவ்விதமான ஆபத்தான காயங்களும் இல்லை. என்னுடைய குடும்ப …
-
- 3 replies
- 609 views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிறுத்தப்படவுள்ளதாக நம்பிக்கையூட்டப்பட்டு கடைசி நேரத்தில், கைவிடப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறை முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தாம் சுயேட்சையாக போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். அரசதரப்பினால் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாக, கூறப்பட்ட தயா மாஸ்டரை கடைசி நேரத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி கழற்றி விட்டது. இதனால், அவர் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளார். தனது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறும் என்றே சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமை கடைசிநேரம் வரை தன்னிடம் கூறியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்படாதது குறித…
-
- 1 reply
- 417 views
-
-
அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக விரித்துள்ள வலையில் இலங்கை விழுந்து விடக் கூடாது, கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான சி. வி. விக்கினேஸ்வரன் றோவின் முக்கிய புள்ளியாவார். ஆகவே பிரிவினைவாத அதிகாரங்கள் ஓரம் கட்டப்படும்வரை வட மாகாண சபை தேர்தலை நடத்தக் கூடாது என வலியுறுத்தியும் மேலும் 17 கோரிக்கைகளை முன் வைத்தும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் இந்திய தூதரகம் முன்பாக நேற்று சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தியாவிற்கு அமெரிக்காவை விட இலங்கையின் நட்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை இந்திய பிரதமர் மன்மோகன்சிங் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்து பலனில்லை. எவ்வாறாயினும் இந்தியாவின் பிரிவினைவாத தேவைகளை இலங்கையில் நிறைவேற்ற ஒருபோதும்…
-
- 1 reply
- 626 views
-
-
‘வடக்கில் சுதந்திரமாக தேர்தல் நடைபெறவேண்டும் என்றால் சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு நியமிப்பதன் மூலம்தான் வடக்கில் மக்கள் சுதந்திரமாக ஜனநாயக ரீதியில் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும்’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக இரா சம்மந்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவகத்தில் நடைபெற்ற வேட்புமனுத்தாக்கல் தொடர்பான ஊடகவியலாளார்; சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘வடமாகாண சபைக்கென முதல் முதலாக தேர்தல் நடைபெறப் போகிறது. மாகாண சபைக்கு மக்கள் தங்கள் பிரதிநிதிகளை முதன் முறையாக அனுப்பப்போகிறார்கள். இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் உள்ள ஐ…
-
- 1 reply
- 375 views
-
-
வடக்கு மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் இந்தியாவினால் நிறுத்தப்பட்ட சூழ்ச்சிக்கமைய, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையகமாக மாற்றப்பட்டுள்ளதாக தேசிய சங்க சம்மேளனத்தின் செயலாளர் தெமடகொட சாரானந்த தேரர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=25154
-
- 1 reply
- 515 views
-
-
நாட்டின் எதிர்காலத்தை சிங்கள, தமிழ் ,முஸ்லிம் இளைஞர்களிடம் ஒப்படைக்கவேண்டும்! - சோமவன்ச அமரசிங்க [Tuesday, 2013-07-30 10:35:32] வவுனியா நகரம் ஐக்கியத்தின் குறியீடாக அமைந்துள்ளது என ஜே.வி.பி கட்சி குறிப்பிட்டுள்ளது. தேசிய ஐக்கியத்தின் குறியீடாக வவுனியா நகரம் காணப்படுகின்றது என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா நகரில் துண்டுப் பிரசூர விநியோக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வவுனியா நகரை ஏனைய பகுதி மக்கள் முன்னுதாரணமாகக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்கள, முஸ்லிம் தமிழ் மக்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் சுதந்திரமாக வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசி…
-
- 1 reply
- 223 views
-