Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை, மனிதஉரிமைகள் தொடர்பான கவலைகள் குறித்து சிறிலங்காவுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளப் போவதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் சமூகங்கள், உள்ளூராட்சி, வெளிவிவகார, கொமன்வெல்த் விவகாரப் பணியகத்துக்கான மூத்த அமைச்சர் பரோனெஸ் சயீடா வர்சி, “பிரதமர் டேவிட் கமரொனும், வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கும், களநிலவரத்தை கவனத்தில் கொண்டு வரும் நொவம்பரில் கொமன்வெல்த் உச்சி மாநாட்டை, சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வர்.” என்று தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரபுக…

    • 1 reply
    • 332 views
  2. பள்ளிவாயல் உடைப்புக்கு காத்தான்குடி நகரசபையில் கண்டன தீர்மானம் (எம்.எஸ்.நூர்) முஸ்லிம்களின் புனித பள்ளிவாயல்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் பௌத்த தீவிர வாதிகள் நடாத்திவரும் தாக்குதலை காத்தான்குடி நகர சபை வன்மையாக கண்டித்துள்ளது. காத்தான்குடி நகர சபைக் கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸபர் தலைமையில் நடைபெற்ற போது இந்த கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கன்டனத் தீர்மானத்தை நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் சபையில் மும்மொழிந்தார் இத்தீர்மானத்தை காத்தான்குடி நகர சபை ஏகமனதாக அங்கீகரித்தது. முஸ்லிம்களின் புனித பள்ளிவாயல்கள் மீது பௌத்த தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதலை நடாத்திவருகின்றனர். இந்த புனிதமான றமழான் மாதத்திலும் கூட மஹியங்கனை ப…

  3. அம்பாந்தோட்டையில் சுமார் 500 மில்லியன் டொலர் செலவில் சீனா அமைத்துக் கொடுத்த, மாகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுகத்துக்கு, 2011-12 காலப்பகுதியில் 24 கப்பல்கள் மட்டுமே வந்துள்ளதாக, பொதுநிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) ஆண்டறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. சீனாவின் நிதியுதவியுடன் மாகம்புர துறைமுகத்தின் முதலாவது கட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, கடந்த 2010 நொவம்பரில் திறந்து வைக்கப்பட்டது. இந்திய, சிங்கப்பூர் துறைமுகங்களுக்கு சவாலானது என்று கூறப்பட்ட இந்தத் துறைமுகத்துக்கு 2011ம் ஆண்டில் 6 கப்பல்கள் மட்டும் வந்துள்ளன. 2012ம் ஆண்டில் 18 கப்பல்கள் தான் வந்துள்ளன. இதனால், கப்பல்கள் வருவதை நிர்ப்பந்திப்பதற்காக, கனரக வாகனங்கள் அல்லாத மோட்டார் வாகனங்களை ஏற்றிய கப்பல்கள…

  4. காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாக ஜனாதிபதிய்ன பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=24546

    • 0 replies
    • 440 views
  5. இலங்கைச் சிங்கள இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட மாதகல் மேற்குப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மனித மண்டையோடுகள், எலும்புக் கூடுகள் என்பன மீட்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் புதன்கிழமை இரண்டு மனித மண்டையோடுகள் மற்றும் பல் தாடைகள், எலும்புகள் என்பன இந்தப் பகுதியில் உள்ள மலசல கூட குழி ஒன்றை மீள்நிர்மாணம் செய்ய முற்பட்ட போது மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரால் யாழ். குடாநாடு கைப்பற்றப்பட்ட பின்னர் மாதகல் மேற்குப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு கடந்த வருடமே விடுவிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரும், அண்மையிலும் இதே போன்று மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டப்பட்ட போது அந்தக் குழியிலிருந்து மண்டைய…

  6. கறுப்பு யூலை – ஆறாத வடுக்களாக தமிழர் உள்ளங்களில் பதிந்த நெருப்பு நினைவுகள் யாவும் ஆழமாகப் பதித்து நிற்கின்றன. யூலை 1983 இலங்கைத் தீவில் தென்னிலங்கைத் தமிழர் மீதும் சிறைச்சாலைகளில் இருந்த தமிழ்க் கைதிகள் மீதும் இனவாத சிறிலங்கா அரச பின்னணியோடு சிங்களக் காடையர்கள் கட்டவிழ்த்த கொடிய இன அழிப்பு நடைபெற்று30 ஆண்டுகள் கடந்து நிற்கின்ற நிலையிலும் இன்றும் தொடர்கின்றன. சிறிலங்கா இனவாத அரசாலும் சிங்கள இன வெறியர்களாலும் தமிழ் மக்கள் மீதான கொடிய இன அழிப்பு நடவடிக்கைகளால் முடிவிலா துயரங்களில் மூழ்கிக் கிடக்கும் எம் தாயகத் தமிழினத்தை காத்து எம் மண்ணின் விடுதலையையும் எம் மக்களின் மறுவாழ்வையும் உறுதி செய்வது புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் கடனாகும். மறுக்கப்பட்ட எமக்கான நீதியை வென்றெ…

    • 0 replies
    • 312 views
  7. தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அவரது பெயரை குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்குறுதியளிக்கவில்லையென அரசாங்கத்திற்குள் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று முன்தினம் பிற்பகல் அலரிமாளிகைக்கு சமூகமளித்த வேளையில், 'ஆ, இவரது பழைய கடிதத்தை புதுப்பித்துக் கொடுங்கள்" எனக் கூறி ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமைக் கடிதத்தையே அவரிடம் கையளித்தார். மேலும், http://tamilworldtoday.com/?p=24541

    • 0 replies
    • 483 views
  8. பாலியல் வலுறவுக்கு பின்னான கொலையா? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு வாதரவத்தைப் பகுதியில் பெண் ஒருவருடையதென நம்பப்படும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதி எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மனித மண்டையோடு மற்றும் எலும்புக்கூட்டு எச்சங்களிலிருந்து அது இளம் வயது யுவதி ஒருவருடையதாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. அவர் இறுதியாக அணிந்திருந்த பாதணி தோடு மற்றும் அணிந்திருந்த ஆடைகளது பகுதிகள் பரவலாக அப்பகுதிகளிலெங்கும் பரவி கிடந்த நிலையினில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி சுமார் ஒரு மாத காலப்பகுதியினுள் படுகொலை செய்து வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்த வண்டில் பாதையோரமாகவுள்ள பற்றைப்…

  9. அண்மைக் காலமாக கிண்ணியாவின் கலாச்சார விடயங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் ஜம்இய்யதுல் உலமா அண்மையில் நகர சபை, வர்த்தக சங்கம் மற்றும் இஸ்லாமிய தஃவா அமைப்புக்களின் உறுப்பினர்களோடு மேற் கொண்ட கலந்துரையாடலின் போது கிண்ணியாவில் கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தும் முகமாக சில தீர்மானங்களை எடுத்ததுள்ளது அதில் முதற்கட்டமாக தொழுகை நேரங்களில் கடைகளை மூடி பள்ளிக்கு சமூகமளிக்க வேண்டும் என்ற விடயத்தை முன்னெடுத்து வருகின்றது. ஜம்இய்யதுல் உலமாவினால் தொழுகைக்காக மூடப்பட்டுள்ளது என்ற பதாதைகள் மும்மொழிகளிலும் எழுதப்பட்டு கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தொழுகை நேரங்களில் கடைகள் மூடும் நிகழ்வுகள் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. http://kinniya.com/2011-11-08-16-59-46/2011-11-08-17-…

    • 1 reply
    • 262 views
  10. சிறிலங்காவில் கடந்த 30 ஆண்டுகளில் காணாமற்போனவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று விரைவில் நியமிக்கப்படவுள்ளது. இந்த ஆணைக்குழுவை நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, மகிந்த ராஜபக்ச, தனது செயலர் லலித் வீரதுங்கவுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம், அதன் பணி எல்லை குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி தனது அரசியல் வாழ்வின் ஆரம்ப காலத்தில், காணாமற்போனவர்களைக் கண்டுபிடிப்பது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி வந்தவர் என்றும், மனிதஉரிமைகளை பாதுகாக்கும் தனது பொறுப்பை நிறைவேற்றும் வகையிலேயே இந்த …

    • 0 replies
    • 332 views
  11. சனல் 4 இல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சிறிலங்கா கொலைக்களங்களின் சாட்சியத் தொகுப்பு விவரணப் படங்களின் இயக்குனரும் உலகின் பார்வையை இலங்கையின் சிறுபான்மைத் தமிழர் மீது திருப்ப உதவியவரும், அங்கு தமிழர் மீது நடத்தப்பட்ட மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை உலகின் கண்களுக்கு முதன் முதலாக சட்சியங்களின் அடிப்படையில் முனவைத்தவருமான திரு கலம் மக்ரே அவர்களின் மூன்றாவது விவரணப் படமான " போர் தவிப்பு வலயம் - சிறிலங்காவின் கொலைக் களங்கள்", " NO FIRE ZONE - SRILANKA KILLING FIELDS" இன்று மாலை சிட்னியில் பொதுமக்கள் பார்வைக்காக திரையிடப்பட்டது. அரங்கு நிரம்பியதும் ஈழப் போராட்டத்தில் இதுவரை சிங்கள அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட பொதுமக்கள், நாட்டுக்காக உயிர்நீத்த போராளிகள் மற்றும…

  12. விவசாயிகளுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயம்:ஒருவர் கைது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விவசாய சங்க கூட்டத்தில் விவசாயிகளுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் இருவர் காயமடைந்துள்ளதுடன் இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வந்தாறுமூலையில் நேற்று வியாழக்கிழமை மாலை வந்தாறுமூலை பிரதேச விவசாய சங்க நிர்வாகத் தெரிவு கூட்டம் இடம்பெற்றபோது விவசாயிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் வந்தாறுமூலையைச் சேர்ந்த (வயது 52) சுப்பிரமணியம் சின்னமணி என்பவரே செங்கலடி பிரதேச வைத…

  13. தன்னார்வ தொண்டு நிறுவனமான யு.எஸ்.எயிட் அமைப்பின் நிதிஉதவியுடன் பாம் பவுன்டேசன் அமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் மலசலக்கூட வசதிகளை ஏற்படுத்தி வருகின்றது இதற்கமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் எருவில், மாவிலங்குத்துறை, கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி, மண்முனை, வந்தாறுமூலை போன்ற பிரதேசங்களில் நீர் வசதிகள், மலசலகூட வசதிகள் அமைத்துகொடுத்து வருகின்றன. இப்பிரதேசங்களில் முன்னெடுக்கபட்டுவரும் மேற்படி அபிவிருத்தி திட்டங்களை அரசசார்பற்ற நிறுவனங்களின் வேலைத் திட்டங்களை மேற்பார்வை செய்பவரும் அரசசார்பற்ற நிறுவனங்களின்; இணைப்பாளருமான யூ.ஏஸ்.எம் றிஸ்வி நேற்று பார்வையிட்டார். இதன்போது அவர், செயற்திட்டம் அமைக்கும்போது கட்டடங்களின் அமைப்பு தன்மை, நிதிவழங்கல் செ…

  14. ஓடக்கரை பருத்தித்துறையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மேற்படி முகவரியைச் சேர்ந்த மகேந்திரன் – கிரிதரன் (வயது-32) என்பவரே அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2ம் இணைப்பு வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் பத்மயோகா (வயது 17) என்ற மாணவி தனது வீட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர், இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,கிணற்றுக்குள் குதித்தமையால் நீரில் முழ்கி இம்மரணம் இடம்…

  15. வடமாகாண சபைத் தேர்தல் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸிடம் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நேரடியாக சந்தித்து உரையாடிய அமெரிக்கத் தூதுவர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார் போன்ற இடங்களில் படையினர் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்தது என்றும் அமைச்சர் பீரிஸிடம் கூறியதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பு தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் ஊடகங்களுக்கு எதுவும் கூறவில்லை. இலங்கை வெளியுறவு அமைச்சும் எதுவும் தெரிவிக்கவில்லை. அதேவேளை வடமாகாணத்தக்கு சென்று மக்களை சுதந்திரமாக சந்திப்பதற்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண…

  16. பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் சமன்சிறி பீரிஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆறு உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். ஜனக்க திலக்சிறிஇ நிமல் தயானந்தஇ ஹேமந்த பல்லேவந்தஇ தர்ஷன சம்பத் சூரசிங்ஹஇ மனோ குமாரசிங்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைவதற்கு தீர்மானித்துள்ளனர். அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்கள் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகச் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பண்டுவஸ்நுவர பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் 8 உறுப்பினர்களில் ஆறு பேரே இவ்வாறு அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். http://www.sankathi24.com/news/31795/64//d,fullart.aspx

  17. நாட்டில் ஏனைய அனைத்து மாகாண சபை தேர்­தல்­க­ளையும் நடத்­து­வதில் அதிக அக்­கறை காட்டும் அர­சாங்கம் வட மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு சிந்­திக்­கின்­றது. அர­சாங்­கத்தின் அடி­யாட்­களை ஏவி தேர்­தலை தடுப்­ப­தற்கு பல நட­வ­டிக்­கைகள் எடுத்த போதிலும் இன்று அரசின் முயற்­சிகள் பிழைத்துப் போய்விட்டன என்று ஊவா மாகாண சபை உறுப்­பினர் கே. வேலா­யுதம் தெரி­வித்தார். தோட்டத் தொழி­லாளர் பெண்கள் குடி­போ­தைக்கு அடி­மை­யா­ன­வர்கள், மலை­யகப் பெண்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ள சாராயம் மட்டும் போது­மா­னது என்று அர­சாங்­கத்தில் இருக்கும் சிலர் கருத்துக் கூறி­ய­மைக்கு மலை­யக சமூகம் பதி­லடி கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரி­வித்தார். இரா­ஜ­கி­ரி­யவில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஏற்­பா…

  18. வவுனியாவில் இருந்து திருகோணமலை சென்ற பேருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா டிப்போக்கு சொந்தமான சிறீலங்கா போக்குவரத்து சபையின் பேருந்தே இவ்வாறு மோதியுள்ளது. நேற்று முற்பகல் கெப்பட்டிகொல்லாவ பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி மீது போருந்து மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில்காயமடைந்த பெண் அனுராதபுரம் மருத்துவ மனையில் அனுமதிகப்பட்டுள்ளார். 48அகவையுடைய ஆண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/31789/64//d,fullart.aspx

  19. அவுஸ்ரேலியா செல்வதற்காக காத்திருந்த கிளிநொச்சி யாழ்ப்பாணத்தினை சேர்ந்த 12 இளைஞர்கள் அம்பாந்தோட்டை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். அம்பாந்தோட்டை பகுதியில் விடுதி ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த வேளை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் 24அகவைக்கு உட்பட்டவர்களே இவ்வாறு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/31788/64/12/d,fullart.aspx

  20. வட மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை, 13 தீர்வல்ல என்பன உள்ளிட்ட விடயங்கள் முக்கியத்துவம் கொடுத்துச் சேர்க்கப்பட வேண்டுமென கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை.சேனாதிராசா, முதலமைச்சர் வேட்பாளர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஆகியோரிடம் கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சிக் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது. வட மாகாண சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலான தமது முன்மொழிவுகளை தமிழரசுக்கட்சி கிளிநொச்சி கிளை வலியுறுத்தியுள்ளது. அவையாவன, இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் தொடர்பான முழுமையான சர்வதேச விசாரணையைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர். வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுகின்ற…

  21. முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து தாக்குதல்களையோ போராட்டங்களையோ நடத்தப் போவதில்லை என பொதுபல சேனா அமைப்பு உறுதியளித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சமய விவகார ஆலோசகர் அப்துல் காதர் மசூர் மௌலானாவிடம், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். பொதுபலசேனா தலைமையகத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் எதிர் நடவடிக்கைகளுடன் தமக்கு தொடர்பில்லை என பொதுபல சேனா அறிவித்துள்ளது. சில குறுகிய நோக்கங்களைக் கொண்ட தரப்பினர் தமது பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகத் கலபொடத்தே ஞானசார …

    • 1 reply
    • 252 views
  22. தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் பொ.கனகசபாபதி மற்றும் குலநாயகம் ஆகியோர் தமிழரசுக் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து விலகுலதாக கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளனர். மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமையால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே கட்சியிலிருந்து ஒதுங்கும் முடிவை இவர்கள் எடுத்துள்ளதாக தெரியவருகிறது. பொ.கனகசபாபதி தற்போது வகித்து வரும் பிரதேசபை உறுப்பினர் பதவியையும் ராஜிணாமா செய்யுவும் அவர் முடிவு செய்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுக்கு இடையேயான பங்கீடு முடிவுக்கு வந்துவிட்ட போதும், வேட்பாளர்களை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் உட்கட்சி இழுபறி தொடர்ந்துவரும் நிலையில் இவர்களது ராஜிணா…

    • 1 reply
    • 372 views
  23. அண்மையில் இந்தோனேஷிய கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கைச் சிறுவனின் தந்தைக்கு, அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரொட் இரங்கல் தெரிவித்துள்ளார். மூன்று வயதான பர்மிதன் பாலமனாறன் என்ற சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த படகில் 150க்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளதாகவும், படகு விபத்தில் 13க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறுவனின் தந்தைக்கு பிரதமர் ரொட், தொலைபேசி மூலம் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார். பர்மிதனின் தந்தையான நாகராசா கடந்த சில ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனைவியும் பிள்ளையும் குடு;ம்ப வீசா கிடைக்காத காரணத்தினால் இலங்கையில் தங்கியிருந்தனர். நாகராசா…

  24. சிங்கள இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட மாதகல் மேற்குப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மனித மண்டையோடுகள், எலும்புக் கூடுகள் என்பன மீட்கப்பட்டு வருகின்றன. நேற்றுப் புதன்கிழமை இரண்டு மனித மண்டையோடுகள் மற்றும் பல் தாடைகள், எலும்புகள் என்பன இந்தப் பகுதியில் உள்ள மலசல கூட குழி ஒன்றை மீள்நிர்மாணம் செய்ய முற்பட்டபோது மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரால் யாழ். குடாநாடு கைப்பற்றப்பட்ட பின்னர் மாதகல் மேற்குப் பகுதி உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு கடந்த வருடமே விடுவிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு அண்மையிலும் இதேபோன்று மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டப்பட்ட போது அந்தக் குழியிலிருந்து மண்டையோடுகள் மற்றும் எலும்புக் கூடு…

    • 0 replies
    • 356 views
  25. 13 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முடிவை எதிர்வரும் வடமாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென்று ''மாகாண சபை முறைமைக்கு எதிரான தேசிய கூட்டமைப்பு'' கோரியுள்ளது. மேலும் .http://tamilworldtoday.com/?p=24531

    • 0 replies
    • 261 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.