ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி வழங்கிய நாடுகள் தொடர்பில் சுவிட்சர்லாந்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இலங்கையில் இருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த வருடம் சுவிட்சலாந்தின் விசேட புலனாய்வு குழு மேற்கொண்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்திருப்பதாக எசோசியேட்டட் பிரஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி வழங்கல்கள் தொடர்பில் 15 முக்கிய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவற்றில் அதிகமான சம்பவங்கள் சுவிட்சர்லாந்திலேயே இடம்பெற்றுள்ளன. விசாரணைகளையடுத்து இலங்கை, சைப்பரஸ் போன்ற நாடுகளில் இருந்தும் இவ்வாறு பயங்காரவாத இயக்கங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான நிதிகள் சுவிட்சர்லாந…
-
- 0 replies
- 611 views
-
-
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுடன் போதைவஸ்துக் குற்றச்சாட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் போதைவஸ்துக் குற்றச்சாட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள பெரும்பான்மையினக் கைதிகளை வேறு பிரிவுக்கு மாற்றுமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மகசின் சிறைச்சாலையில் ஜி.எச் பிரிவில் 51 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் 15 பெரும்பான்மையினக் கைதிகளும் இவர்களின் பிரிவுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பெரும்பான்மையினக் கைதிகளுடன் தம்மைத் தடுத்து வைக்க வேண்டாம…
-
- 0 replies
- 346 views
-
-
வடக்கு கிழக்கில் கரையோரப்பகுதிகளை தாக்கியிருந்த மகாசென் சூறாவளியுடன் மலையகத்தில் அடைமழை காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஹட்டனில் வௌ்ளத்தில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 1115 குடும்பங்களைச்சேர்ந்த 4 ஆயிரத்து எண்ணூறுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 700 க்கும் அதிகமானோர் கோவில்கள், பாடசாலைகள் மற்றும் பொதுத்தலங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ளனர். ஹட்டன் டிக்கோயாவைச்சேர்ந்த அம்ரித்தா (வயது 7), அவரது பாட்டியான சிவபாக்கியம் (வயது 65) லிந்துலை வலகாகொலனியைச்சேர்ந்த போல்ராஜ் ஷெரோ (வயது 4) ஆகியோரும் மாத்தறை மாவட்டத்தின் திகாகொட, பொலநறுவை திபுலகல மற்றும் கண்டி பஸ்பாகே பொரல ஆகிய பகுதியைச் சேர்ந்த …
-
- 0 replies
- 374 views
-
-
பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான யுத்தக் கப்பலொன்று திருகோணமலை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது. இக்கப்பல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் இலங்கையின் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருக்கும். இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் இராஜதந்திர- கலாசார மற்றும் இராணுவ உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இக்கப்பல் இலங்கை வந்துள்ளதாகக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். சகலவிதமான தாக்குதல்களையும் முறியடிக்கும் திறன் கொண்ட இக்கப்பல் 123 மீற்றர் நீளம் கொண்டது. 2010 ஆம் ஆண்டு சீனா சங்ஹாயில் வெள்ளோட்டம் விடப்பட்டது http://www.virakesari.lk/article/local.php?vid=4586
-
- 0 replies
- 1.2k views
-
-
வட மாகாணத் தேர்தலை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடத்தவிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் பல தடவைகள் கூறி வந்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாத்தல் தொடர்பில் அது முக்கிய விடயமாகும். தற்போது யுத்தம் முடிவிற்கு வந்து மூன்று வருடங்கள் பூர்த்தியாகும் தருணத்தை நெருங்கியுள்ளது. புலிகள் அமைப்பு வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகளை பலவந்தமாக அபகரித்துக்கொண்டு இருப்பதால், மீண்டும் அம் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தாம் மேற்கொள்ளுவதாக அப்போது அரசு அதன் யுத்த முன்னெடுப்புகளை நியாயப்படுத்த முன் வைத்த முக்கிய காரணமாக இருந்தது. ஆயினும் இன்றைக்கு நான்கு வருடங்களாக அரசாங்கத்தின் அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படாமலே இருந்து வருகின்றது. ஜனாதிபதி அவர்கள் வடமாக…
-
- 0 replies
- 234 views
-
-
காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களுடன் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், பிரபாகரன் மேற்கொண்ட பாதிப்புகளுக்கு மேலான பாதிப்புகள் ஏற்படும் எனவும் இதனை மத்திய அரசாங்கத்தினால் கூட தடுக்க முடியாது போகும் என இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இந்தியாவினால் பலவந்தமாக ஏற்படுத்தப்பட்டு, மக்களின் பணத்தை அழிக்கும் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை வடக்கில் மாத்திரமல்ல, எந்த மாகாணத்திலும் நடத்தக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். போருக்கு முன்னர், வடக்கில் வாழ்ந்த சிங்கள மக்களை அங்கு மீள்குடியேற்றாது தேர்தலை நடத்துவது சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்பதால் அதற்கு எதிராக தேசப்பற்றாளர்களை அணித்திரட்ட போவதாகவும் அவர்…
-
- 0 replies
- 288 views
-
-
தங்காலை பிரதேசத்தில் தமிழ் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கள்ளக்காதல் உறவு ஒன்று தொடர்பிலான சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்தத் தாக்கதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தங்காலைப் பிரதேசத்தில் 16 வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதில் பதினைந்து வீடுகள் தமிழ் வீடுகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. திருமணமான தமிழ் பெண் ஒருவருக்கும் பிரதேசத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவருக்கும் இடையில் காணப்பட்ட தகாத உறவே இந்த மோதல் சம்பவத்திற்குக் காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது. பெண் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் …
-
- 0 replies
- 323 views
-
-
பொது பல சேனாவுக்கும் விமல் வீரவன்சவுக்கும் வெடித்தது மோதல் [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 01:11 GMT ] [ தா.அருணாசலம் ] நோர்வேயின் நிதியுதவியுடன் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டதாக சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச கூறிய குற்றச்சாட்டை அடுத்து, பொது பல சேனாவுக்கும் அவருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. விமல் வீரவன்ச கூறியுள்ள குற்றச்சாட்டை நிராகரித்துள்ள பொது பல சேனா, நோர்வே அல்லது வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனத்திடம் இருந்து நிதியுதவி பெற்றதான குற்றச்சாட்டை நிரூபிக்கும்படி அவருக்கு சவால் விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பொது பல சேனாவின் பொதுச்செயலர் வண.கலகொடெத்தே ஞானசார தேரர், “நோர்வேயிடம் இருந்தோ வெளிநாட்…
-
- 2 replies
- 603 views
-
-
இலங்கை உயர் ஸ்தானிகராலயமொன்று உகண்டாவில் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் உகண்டா ஜனாதிபதி யூவேரி ககுடா முஸவேனி ஆகியோர் கலந்துகொண்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=82618&category=TamilNews&language=tamil
-
- 7 replies
- 569 views
-
-
செனல்4 வீடியோ தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது – அரசாங்கம் 15 மே 2013 செனல்4 ஊடகத்தின் வீடியோ தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உத்தியோகபூவமாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றிற்கான இலங்கைப் பிரதிநிதி பீ.எம். ஹம்ஸா இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் சில வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளதாகவும், இவை போலியானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறித்த ஆவணப்படத்தின் மூல ஆதாரங்களை தந்து உதவினால் விசாரணைகளை நடத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர் என்ற ர…
-
- 0 replies
- 528 views
-
-
செப்டம்பரில் வட மாகாணசபை தேர்தல் மாத்திரமே நடாத்தப்படும்! [Wednesday, 2013-05-15 08:25:48] வடக்கு, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கும் ஒரேநாளில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வடக்கு தேர்தலை மட்டும் செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர்களின் வேண்டுகோள்களின் அடிப்படையில் பதவிக்காலம் முடிவதற்கு ஒருவருடத்திற்கு முன்பதாகவே வடமேல் மற்றும் மத்திய ஆகிய இரு மாகாண சபைகளை கலைப்பதற்கு ஆளுநர்கள் நடவடிக்கைகளை எடுப்பர் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், மாகாணசபைத்தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் கட்டளைக்கு பின்ன…
-
- 0 replies
- 563 views
-
-
அழிவுகளை ஏற்படுத்தும் புயலுக்கு சிங்கள மன்னன் பெயரா? சிங்கள அமைப்பு எதிர்ப்பு Written by tharsan // May 14, 2013 // இலங்கையின் கிழக்கு கடலுக்கு அருகில் நிலை கொண்டுள்ள புயல் சின்னத்திற்கு மகாசேனன் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு ராவணா சக்தி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகாசேனன் மன்னரின் பெயரை அழிவுகளை ஏற்படுத்தும் புயலுக்கு பயன்படுத்தாது, பிசாசுகளின் பெயர்களை பயன்படுத்தியிருந்தால் மிகவும் நல்லது. இதனை விடுத்து எதற்காக இலங்கையை ஆட்சி செய்த மன்னரின் பெயரை சூட்டினர் எனவும் வரலாற்றை அறியாதவர்களின் வேலையாகவே தாம் இதனை கருதுவதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். http://news.tamilstar.com/archives/33840#more அப்போ …
-
- 1 reply
- 379 views
-
-
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து அதனை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய சட்டத் திருத்ததிற்கமைய அரசியல் கட்சியொன்றைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி மாதத்தில் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது தொடர்பில் தற்போது அந்தக் கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகளிடம் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது. வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் இதற்கு ஒரு சுமூகத் தீர்வொன்றை எட்ட வேண்டும் என தமிழர் தரப்பு கூறி வருகிறது. எனினும் தற்போது அதற்கு சட்டத்தில் இடமில்லை என தேர்தல் ஆணையாளர் அறிவ…
-
- 1 reply
- 655 views
-
-
மகசின் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுடன் போதை, கொலை சந்தேக நபர்கள்! கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுடன் போதைவஸ்துக் குற்றச்சாட்டு மற்றும் கொலைக்குற்றச்சாட்டு சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.போதைவஸ்துக் குற்றச்சாட்டு மற்றும் கொலைக்குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள பெரும்பான்மையின கைதிகளை வேறு பிரிவுக்கு மாற்றுமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மகசின் சிறைச்சாலையில் ஜிஎச் பிரிவில் 51 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் 15 பெரும்பான்மையின கைதிகளும் இவர்களது பிரிவுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பெரும்ப…
-
- 1 reply
- 604 views
-
-
இலங்கையின் இறுதியுத்த ஆவணப்படம் இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில்ü யுத்த சூனியப் பிரதேசம் என்ற தலைப்பில் சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தம் சம்பந்தமான ஆவணப்படத்தினை இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திரையிடவும் இது குறித்து விவாதமொன்றை மேற் கொள்ளவும் நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகளை மனித உரிமை கண்காணிப்பகம், சர்வசேத மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச நெருக்கடி குழு ஆகிய அமைப்புகள் மேற்கொண்டுள்ளன. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இவ் ஆவணத் திரைப்படம் திரையிட்டதன் பின்னர் இடம்பெறவுள்ள குழு விவாதத்தில் ஐரோப்பிய நிறுவனங்களின் அலுவலக பணிப்பாளர் நிக்கொலஸ் பெகர், சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கைக்கான திட்டப்பணிப்பாளர் அலன் கீனன், மனித…
-
- 0 replies
- 237 views
-
-
நேர்காணல்: ஆர்.ராம். 'புளொட்டினால் வெளியிடப்பட்ட 'வங்கம் தந்த பாடம்' என்ற நூல்இந்தியாவின் சொல்லை புளொட் கேட்டு நடக்காது என்பதையும் புளொட்டின் ஆயுதப்போராட்டம் தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக அமையுமே தவிர இந்தியாவின் நலன்களுக்காக அமையாது என்பதனை காட்டியிருந்தமையும் எமது பின்னடைவிற்கு ஒரு காரணமாக காணப்படுகின்றது.' கேள்வி:- தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைமை தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? பதில்:- தமிழ்தேசியக்கூட்டமைப்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவை ஊடகங்களில் கூட வெளிவந்திருக்கின்றன. அவை கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகள் அல்ல. அவை நடைமுறையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளாகவே காணப்படுகின்றன. எமது கட்சியைப்பொறுத்தவரையில் இர…
-
- 1 reply
- 698 views
-
-
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, அங்கு மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான செயல்நுட்ப உதவிகளை (Technical support) வழங்க காமன்வெல்த் செயலகம் முன்வந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றி தேசிய மட்டத்திலான விசாரணை நடத்துவது பற்றி காமன்வெல்த் செயகத்தின் ஊடாக பல நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் டாக்டர் பிரதீபா மஹநாம பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார். காமன்வெல்த் செயலாளர் கமலேஷ் ஷர்மா குழுவினருடன் அண்மையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், அடுத்த 6 மாத காலத்துக்குள் இந்த செயற…
-
- 2 replies
- 327 views
-
-
கனடாவில் வீதியொன்றுக்கு 'வன்னிவீதி' எனப் பெயர் சூட்டப்பட்டு தமிழ் மக்கள் கௌரவப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இலங்கையில் தமிழர்கள் கணிசமாக வாழும் தேசிய தலைநகரில் வீதியொன்றுக்கு சட்டவிதிகளின்படிகூட 'தமிழ்ச் சங்க வீதி' எனப் பெயரிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார். இவ்வாறானதோர் நிலையில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதென்பது ஒருபோதும் நடக்காத காரியமென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் திட்டமிடல் அபிவிருத்தி மற்றும் சட்டம் பொது விடயங்கள் தொடர்பான நிலையியற் குழுவின் தலைவர…
-
- 5 replies
- 581 views
-
-
யாழ். நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மாணவியும் இளைஞனும் பிடிபட்டனர் யாழ் நகரில் உள்ள தங்கு விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பாடசாலை மாணவி ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் யாழ். பிரதேச செயலக ஊழியர்கள் பிடித்துள்ளனர். இந்த இளைஞன் யாழ் நகரில் தங்க நகைக்கடை வைத்திருக்கும் ஒருவரின் மகனாகும். முhணவி சுன்னாகத்தை சேர்ந்தவர். இந்த இளைஞன் தனது காரில் பாடசாலை மாணவியை ஏற்றி வந்து யாழ்.நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள போட் என்ற விடுதியில் அறை ஒன்றை எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடுதியில் இவ்வாறு பலர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தில் கலாச்சர சீரழிவுகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச செயலக…
-
- 47 replies
- 3.8k views
-
-
புலம்பெயர் மக்கள் வாக்களிக்க இடமளிக்க முடியாது! - கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்தார் ஹக்கீம்!! வடமாகாண சபைத் தேர்தலில் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் வாக்களிப்பதற்குரிய ஒழுங்குகள் புதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிராகரித்துள்ளது. புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற இலங்கை மக்கள் தமது வாக்குரிமைகளைப் பயன்படுத்துவதற்கு புதிய சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தா…
-
- 15 replies
- 1.4k views
-
-
தாயகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன ஒடுக்குமுறைக்கெதிராகவும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும் நெதர்லாந்து நாட்டு மக்களுக்கானதும், நெதர்லாந்தைச்சேர்ந்த ஊடகங்களினதும், ஆதரவைத்தேடி இன்று(14-05-2013) மதியம் 12.45 மணியளவில் அம்ஸ்ரர்டாம் நகரை சேர்ந்த சூரி அவர்களால் நடைபயணம் ஒன்று அம்ஸ்ரர்டாம், டம்ரக் நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் நடைபயணம் இன்று மாலை ஹில்வர்சம் நகரை சென்றடையும். அதனைத் தொடர்ந்து நாளை ஹில்வர்சம் நகரிலிருந்து ஆரம்பிக்கப்படும். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20908:-18-------&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
-
- 0 replies
- 367 views
-
-
கச்சத்தீவு விவகாரம் குறித்து இந்தியா மீள் பரிசீலனை செய்யக் கூடுமென மத்திய அமைச்சர் நாரயணசுவாமி தெரிவித்துள்ளார். கச்சத்தீவை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமென தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார்.1974ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது. கச்சத்தீவை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாராயணசுவாமி தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91743/language/ta-IN/article.as…
-
- 1 reply
- 645 views
-
-
-றிப்தி அலி கொழும்பிலுள்ள முச்சந்தியொன்றில் இருக்கின்ற வீதி சமிக்ஞையில் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று நிற விளக்குகளும் ஒரேநேரத்தில் செயற்பட்டமையினால் சாரதிகள் குழப்பத்திற்குள்ளானார்கள். இது சமிக்ஞையா? இன்றேல் சரவிளக்கா? என்று சாரதிகள் மட்டுமல்ல வாகனத்திலிருந்தவர்களும் முணுமுணுத்துக் கொண்டனர். சமிஞ்சை விளக்குகள் மூன்றும் ஒரேநேரத்தில் ஒளிர்ந்தமையினால் அந்த சமிக்ஞையை அண்மித்த வீதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. மருதானை சந்தியிலுள்ள சமிக்ஞை விளக்கிலேயே மூன்று நிற விளக்குகளுமே இன்றிரவு 8.15 மணியளவில் ஒரே சந்தர்ப்பத்தில் செயற்பட்டது. எனினும் நிலைமையை புரிந்துக்கொண்ட சாரதிகள் ஒருவாறு தாங்கள் பயணிக்கவேண்டிய பாதையில் பயணித்தனர். இதேவே…
-
- 1 reply
- 683 views
-
-
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரைச் சூட்டுமாறு சிங்கள பௌத்த தேசியவாத அமைப்பான ராவய பலய பரிந்துரை செய்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு சிறிலங்காவை ஆட்சிசெய்த மகாசேன மன்னனின் பெயர் சூட்டப்பட்டதற்கு ராவய பலய கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ராவண பலய அமைப்பின் செயலர் வண. இத்தேகண்டே சத்ததிஸ்ஸ தேரர், மகாசேன மன்னனின் பெயரை புயலுக்குச் சூட்டியது முட்டாள்தனமான முடிவு என்று தெரிவித்துள்ளார். மூன்று பத்தாண்டுகளாக விடுதலைப் புலிகளுக்குத் தலைமை தாங்கிய, பிரபாகரனின் பெயரை இந்தப் புயலுக்குச் சூட்டுவதற்கு ரவண பலய அமைப்பு எதிர்ப்புத் தெரிவிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராவண பலய …
-
- 0 replies
- 653 views
-
-
ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள பேராறு கிராமத்தில் குடிதண்ணீர் தேடிமக்கள் அலைந்து திரிவதைக் காண முடிகின்றது. பேராறு கிராமத்தில் வசிக்கின்ற அநேகர் விவசாயத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நிலையைப் பொறுத்தவரையில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் வசிக்கின்ற காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படவில்லை. இங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த குழாய்க்கிணறுகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. இறுதியாக ஒரு குழாய்க்கிணறு மட்டுமே பாவனையில் இருந்தது. தற்போது அதுவும் பழுதடைந்து விட்டது. இதனால் குடிதண்ணீரைத் தேடி நீண்ட தூரம் அலைந்து திரிய வேண்டிய அவலநிலை இங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது கடும் வெப்பம் நி…
-
- 0 replies
- 502 views
-