ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
ஐ.நா. அறிக்கையை நிராகரிக்கும் இலங்கை – கடுமையான பதிலடி கொடுக்கவும் திட்டம் May 21, 2024 வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக் கூறலைக் வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதல் முடிவுக்கு வருவதற்கு முன்னதாக அறிக்கை வெளியிடப்பட்ட நேரம் குறித்தும் இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது. வெள்ளிக்கிழமை, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் “இலங்கையில் பலவந்தமாக காணாமல் போனவர்களுக்கான பொறுப்புக்கூறல்” என்ற தலைப்பில் 45 பக்க அறிக்கையை வெளியிட்டது. “இலங்கையில் தொடரும் பொறுப்புக்கூறல் பற்றாக்குறை” பற்றி…
-
-
- 3 replies
- 584 views
-
-
22 MAY, 2024 | 04:19 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை மாவட்ட நீதிமன்றினால் கோணேஸ்வர ஆலய வழக்கு தொடர்பாக முகநூலில் விமர்சனங்களை முன்வைத்த நபர் ஒருவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு 8ஆம் இலக்க நீதிமன்ற நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டத்தின்கீழ் சுந்தரலிங்கம் சிவசங்கரன் என்பவருக்கு எதிராகப் புதன்கிழமை (22) திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் சமர்ப்பணம் செய்திருந்தார். சிரேஷ்ட சட்…
-
- 1 reply
- 417 views
- 1 follower
-
-
ஜனாதிபதித் தேர்தலில் மீ்ண்டும் களமிறங்குகிறார் பொன்சேகா முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன் தற்போதைய தலைவர் ஜூன் மாதம் இது தொடர்பான முறையான அறிவிப்பை வெளியிடுவார் என்று பொன்சேகாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. பொன்சேகா எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டு சேராமல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார். எஸ்.ஜே.பி எம்.பி.க்கள் குழுவின் ஆதரவையும் பொன்சேகா பெற முடிந்துள்ளதாகவும், மற்ற அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பின்கதவு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் வட்டாரங்…
-
-
- 4 replies
- 505 views
-
-
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியநிபுணர் வைத்தியர் சரவணன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. இதன்போது சுகப்பிர…
-
-
- 2 replies
- 520 views
- 1 follower
-
-
குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் ஷாபி சிகாப்தீன் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய தாய்மார்கள் தற்போது தங்களை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சில தாய்மார்கள்; போது தாங்கள் எனக்கு எதிராக முறைப்பாடு செய்தவர்கள் எனவும் தங்களை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர் என தெரிவித்துள்ள அவர் சிசேரியன் சத்திரசிகிச்சையின் போதுஅவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர் என குறிப்பிட்டுள்ளார். தன்னை போதைப்பொருள்குற்றவாளி மாகந்துரே மதுசுடன் சிறையில் ஒன்றாக தடுத்துவைத்திருந்தனர் என வைத்தியர் ஷாபி சிகாப்தீன் தெரிவித்துள்ளார். நான் அவருடன் ஒன்…
-
- 0 replies
- 180 views
-
-
22 MAY, 2024 | 08:07 PM நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் (21.05.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நயினாதீவு ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா எதிர்வரும் 2024.06.07 தொடக்கம் 2024.06.22 வரை நடைபெறவுள்ளதோடு அனைத்து பக்தர்களும் சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீ நாக பூசணி அம்பாளை தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் திருவிழாக் காலங்களில் வழமைபோல் யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை …
-
- 0 replies
- 423 views
-
-
நீர் வற்றியுள்ள விக்டோரியா நீர்த்தேக்கம் Published By: VISHNU 22 MAY, 2024 | 07:34 PM நாடு முழுவதும் கடும் மழைபெய்வதன் காரணமாக நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிந்தாலும், நீர் மின் உற்பத்திக்கு அதிக அளவில் நீர் வழங்கும் மிகப் பெரிய நீர்த்தேக்கமான விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வற்றிய நிலையின் காணப்படுகிறது. 22 ம் திகதி புதன்கிழமை பிற்பகல் எடுக்கப்பட்ட இப் படங்கள் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் எவ்வாறு வற்றியுள்ளது என்பத்தை காட்டியது. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வற்றியுள்ளதன் காரணமாகப் பழைய தெல்தெனிய நகரின் சில பழைய பகுதிகளைக் காட்டுகிறது. க…
-
- 0 replies
- 348 views
-
-
பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை பணிக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் .சுசந்த கஹவத்த இதனைத் தெரிவித்தார். அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அத்துடன், தற்போது கடலுக்கு சென்றுள்ள பல நாள் மீன்பிடி படகுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஊடாக செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/302226
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்ற நிலையில் புதன் கிழமையான இன்று தீர்த்த உற்சவம் இடம்பெறவுள்ளது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து நேற்று மாலை உற்சவ மூர்த்திகளின் உள் வீதி ,வெளி வீதி உலா இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் தேரில் ஆரோகணித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க பஞ்சரத பவனி இடம் பெற்றது. https://thinakkural.lk/article/302196
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
Published By: VISHNU 21 MAY, 2024 | 11:55 PM இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரச பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற தமது உறவினர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதி வழங்கப்பட வேண்டுமென யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளனர். மே 18, 2009 இல் போர் முடிவுக்கு வந்த தினத்தில் இருந்து, தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்ட 15ஆவது வருடத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலமார்டிடம் (Agnes Callamard), நினைவேந்தல் த…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜானதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கு தொடங்கியது. இதன்படி, ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு நாட்டை விட்டுச் செல்லவுள்ளார். ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் இந்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களும் ஈரான் தூதரகத்தில் தமது இரங்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அமைச்சர் அலி சப்ரி ஈரான் செல்கிறார் | Virakesari.lk
-
- 2 replies
- 266 views
-
-
மின்சார நெருக்கடிக்கு நிவாரணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சோலார் பேனல்களை வழங்கியுள்ள போதிலும் அவற்றை இன்னும் நிறுவ முடியவில்லை - பிரதமர் தினேஷ் குணவர்தன Published By: VISHNU 22 MAY, 2024 | 01:43 AM (செங்கடகல நிருபர் எம்.ஏ.அமீனுல்லா) இலங்கையின் விகாரைகளில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு நிவாரணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சோலார் பேனல்களை வழங்கியுள்ள போதிலும், அவற்றை இன்னும் நிறுவ முடியவில்லை எனவும், ஒரு நாடு என்ற வகையில் எமது தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கம் மற்றும் அதிகாரத்துவ நடைமுறைகளில் நிலவும் பலவீனங்களினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவு…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
பொதுவேட்பாளர்: இழுத்தடிக்கும் போக்கில் தமிழரசு! நேற்றைய மத்தியகுழுக் கூட்டத்திலும் முடிவில்லை (ஆதவன்) எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இழுத்தடிக்கும் போக்கையே இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்கின்றது. அந்தக் கட்சியின் மத்திய குழுவில் இந்த விடயம் நேற்று ஆராயப்பட்ட போதும் முடிவு எதையும் எடுக்காமல் ஒத்திவைத்துள்ளது. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் பொதுவெளியில் தெரிவித்திருந்தனர். குறிப்பாக கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தியிருந்…
-
- 1 reply
- 382 views
-
-
வீடு புகுந்து அடித்த குற்றச்சாட்டில் கனடாவாசிகள் யாழில் கைது! (புதியவன்) சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை அத்துமீறி நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். வீட்டார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் கனடாவிலிருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ளனர். கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.(ஞ) வீடு புகுந்து அடித்த குற்றச்சாட்டில் கனடாவாசிகள் யாழில் கைது!…
-
- 2 replies
- 563 views
-
-
அமெரிக்கா, பிரிட்டன், ரஸ்யா, சீனா போன்ற நாடுகளே சர்வதேச ஒழுங்குமுறை வீழ்ச்சியடைவதற்கான காரணம், ஆனாலும் மக்கள் இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை - சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Published By: RAJEEBAN 21 MAY, 2024 | 11:43 AM அமெரிக்கா, பிரிட்டன், ரஸ்யா, சீனா போன்ற நாடுகளே விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட சர்வதேச ஒழுங்குமுறை வீழ்ச்சியடைவதற்கான காரணமாக உள்ளன என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றம் சென்றமையும் சர்வதேச அளவில் இடம்பெறும் காசா தொடர்பான ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச சட்டங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என கருதும் மக்கள் உள்ளனர் என்பதை வெளிப்படுத்து…
-
- 3 replies
- 346 views
- 1 follower
-
-
இலங்கையில் நாளை துக்க தினம்! இலங்கையில் நாளை (செவ்வாய்கிழமை)யை துக்கத் தினமாக இலங்கை அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது இதேவேளை ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு கூறும் வகையில் துக்கத் தினத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1383227
-
-
- 11 replies
- 884 views
-
-
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு நம்பிக்கையில்லை : ஆய்வில் தகவல்! இலங்கையின் பொருளாதார நிலைமையானது தவறான வழியில் செல்வதாக நாட்டு மக்கள் கருதுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுகாதாரக் கொள்கைக்கான மற்றும் சுயாதீனமான ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் போர் ஹெல்த் பொலிசி (Institute for Health Policy) நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் இலங்கை தவறான திசையில் செல்வதாக 75 சதவீத இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் ஏனைய நாட்டு மக்களின் நிலைப்பாடுகளை விட இலங்கை மக்களின் நிலைப்பாடு பாரிய அதிகரித்த போக்கை காட்டுவதாகவும் தெரியவந்த…
-
- 0 replies
- 208 views
-
-
Published By: RAJEEBAN 21 MAY, 2024 | 01:17 PM இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் இரட்டைநிலைப்பாட்டினை பின்பற்றுவதாக இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கை மீது வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் இராஜதந்திரிகள் மனித உரிமை அமைப்புகள் அதிகளவு அழுத்தங்களை கொடுப்பதையும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதையும் அவதானித்துள்ளதாக ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலே குறிப்பிட்ட ஆளுமைகள் மற்றும் அமைப்புகள் அவர்களின் இரட்டை நிலைப்பாட்டு கொள்கைகளிற்கு நன்கு அறியப்பட்டவர்கள் என தெரிவித்துள்ள ரஸ்ய தூதரகம் இந்த நீதியின் தூதுவர்கள் இந்த விடயத்தை பார்க்கும் விதம் குறித்த தனது குழப்பமான நிலையை மீண்டும் வெளியிட …
-
-
- 4 replies
- 453 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 20 MAY, 2024 | 11:28 AM யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் பால் எடுத்து சென்ற வேளை, புத்தூர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்திக்கு அருகில் இராணுவ வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த யுவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை யுவதி உயிரிழந்துள்ளார். யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த யுவதியின் பிறந்ததினம் இன்றைய தினம் என…
-
-
- 7 replies
- 566 views
- 1 follower
-
-
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/91 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/33 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு அங்கத்தவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. ஜே/26 கிராம சேவகர் பிரிவிலும் ஜே/21 கிராம சேவகர் பிரிவிலும் அடிப்படை கட்டமைப்பு ஒவ்வொன்று சேத…
-
- 0 replies
- 353 views
-
-
Published By: DIGITAL DESK 7 21 MAY, 2024 | 11:19 AM பொது மன்னிப்பு காலத்தின் முடிவில் விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத 15667 இராணுவவீரர்கள் சட்ட ரீதியாக வெளியேற்றப்படவுள்ளதாக இலங்கை இராணுவ தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 அம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வரை சட்ட ரீதியாக சேவையை விட்டு வெளியேறுவதற்காக ஒரு மாத கால பொது மன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதனடிப்படையி…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 21 MAY, 2024 | 09:33 AM முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவு இயந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (20) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வுக்கு உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர் குழுவே இந்த விபத்தினை சந்தித்துள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உழவியந்திரம் ஒன்றில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை வேகமாக சென்ற உழவு இ…
-
- 1 reply
- 380 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 21 MAY, 2024 | 08:41 AM (நா.தனுஜா) வட, கிழக்கில் தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் அம்மாகாணங்களைச் சேர்ந்த பலரிடம் கேட்டறிந்ததாகவும், அவை தனக்குப் பெரிதும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார். யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதுடன், சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்த…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
20 MAY, 2024 | 05:56 PM மன்னார் - நானாட்டான் நகர பகுதிக்குள் எந்தவொரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என அறிவுறுத்தி திங்கட்கிழமை (20) மத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நானாட்டான் விவசாய அமைப்பு பிரதிநிதிகள், மகளிர் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து நானாட்டான் சுற்றுவட்டத்தில் இருந்து நானாட்டான் பிரதேச செயலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வருகைதந்து இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். நானாட்டானில் இந்து மற்றும் கத்தோலிக்க பாடசாலைகள் அமைந்துள்ள இடங்களில் மென் மதுபான விற்பனை நிலையம் இயங்கிவருகிறது.…
-
-
- 1 reply
- 285 views
- 1 follower
-
-
த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1991ஆம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தத் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அரசின் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தடை குறித்த அறிவிப்பில், 'விடுதலைப் புலிகள் இன்னும் இந்தியாவின் ஒ…
-
-
- 16 replies
- 1.4k views
- 2 followers
-